You are on page 1of 17

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-18

காளியின் அர்ச்சகராக
-
கதாதரனைக் கண்டது முதலே மதுர்பாபு
அவரிடம் மிகவும் ஈர்க்கப் பட்டிருந்தார். கனிவான
பார்வை, மென்மையான இயல்பு, நற்பண்பு,
இளவயது இவையனைத்தும் இணைந்து கோவில்
கும்பாபிஷேகம் நடைபெற்ற சில வாரங்களிலேயே
மதுர்பாபுவின் இதயத்தில் கதாதரருக்கு ஒரு
தனியிடத்தை அளித்திருந்தார்.
நமது வாழ்நாள் முழுவதும் யாருடன் நெருங்கிய
தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று
இருக்கிறதோ, அவரைக்காணும் முதல்
சந்திப்பிலேயே இனம் புரியாத உணர்ச்சி ஒன்று
அவருடன் நமக்கு ஒரு பிணைப்பை உண்டாக்கி
விடுவதை நாம் அறிவோம். முற்பிறவி தொடர்பை
ஒட்டிய எண்ணங்களின் தொடர்ச்சியே
இத்தகைய கவர்ச்சிக்குக் காரணம் என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன. பின்னாளில்
குருதேவருக்கும் மதுர்பாபுவுக்கும் இடையே
நிலவிய ஆழ்ந்த அன்பின் பிணைப்பை நாம்
எண்ணும் போது, அவர்களிடையே ஏற்பட்டதும்
இத்தகைய கவர்ச்சி தான் என்பது தெரிகிறது.

கோயில் கும்பாபிஷேகம் நிறைவுற்று ஒரு மாதம்


ஆயிற்று. கதாதரரும் தமையனாரின்
விருப்பத்திற்கிணங்கி தட்சிணேசுவரத்தில்
எவ்வாறோ நாட்களைக் கழித்தார். அவர் பால்
ஈர்க்கப்பட்ட மதுர்பாபு அன்னை காளியின்
திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை
அவரிடம் ஒப்படைக்க எண்ணினார். இது
விஷயமாக ராம்குமாரிடமும் கலந்து
ஆலோசித்தார். இது நடக்கும் என்று
ராம்குமாருக்குத்தோன்றவில்லை. தம்பியைப்
பற்றித்தான் அவருக்கு நன்றாகத் தெரியுமே!
அவன் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று
கூறி அவனது மனநிலையை மதுர்பாபுவிடம்
விவரமாகக்கூறினார் ராம்குமார். மதுர்பாபு
எளிதில் அதனை விட்டுவிடவில்லை. உடனடியாக
முடியாமல் போனாலும் அதனை
நிறைவேற்றுவதற்கான தருணத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
கதாதரரின் எதிர்கால வாழ்க்கையுடன்
நெருங்கிய தொடர்பு கொள்ளப்போகின்ற
வேறொருவர் இந்தச் சமயத்தில்
தட்சிணேசுவரத்திற்கு வந்தார். அவர் ஹிருதய
ராம் முகோபாத்யாயர்

கதாதரரின் ஒன்று விட்ட சகோதரி


ஹேமாங்கினியின் மகனான ஹிருதய ராம்
வேலை தேடி பர்த்வானுக்கு வந்தார்.அவருக்கு
வயது பதினாறு. கிராமத்திலிருந்து பர்த்வான்
நகரில் குடியேறியிருந்த நண்பர் ஒருவர் வீட்டில்
சில காலம் தங்கியிருந்து வேலை முயற்சிகளைச்
செய்தார். ஆனால் எந்த வேலையும்
கிடைக்கவில்லை. அந்தவேளையில் தான் தாய்
மாமன் இருவர் ராணி ராசமணி கட்டிய கோயிலில்
நன்மதிப்புடன் வாழ்ந்து வருவதை
அறிந்தார்.அங்கு சென்றால் ஒரு வேளை தாம்
வேலை தேடிவந்த நோக்கம் நிறைவேறலாம் என்று
எண்ணி தட்சிணேசுவரத்திற்கு வந்தார்.

கதாதரரும் ஹிருதயரும் சம வயதினர்.


குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவரை ஒருவர்
நன்கு அறிந்தவர்கள். எனவே ஹிருதயர் அங்கே
மகிழ்ச்சியாக நாட்களைக் கழித்தார்.
கட்டான உடலும் பார்வைக்கு எடுப்பான
தோற்றமும் உடையவர் ஹிருதயர்.
உடலைப்போலவே உறுதியான மனமும் வாய்ந்த
அவர் அச்சமே அறியாதவர். கடின உழைப்பாளி.
எந்தச் சூழ்நிலையிலும் சிரமமின்றி வாழும்
பக்குவம் பெற்றவர். எத்தகைய கஷ்டங்களையும்
பாதகமான சூழ்நிலைகளையும்
சமாளிக்கக்கூடிய அறிவுக்கூர்மையும் திட
மனமும் கொண்டவர். குறிப்பாக கதாதரரிடம்
உள்ளார்ந்த அன்பு உடையவர். சின்ன மாமனின்
மகிழ்ச்சிக்காக எத்தனை இன்னல்களை
வேண்டுமானாலும் ஏற்கத் தயாராக இருப்பவர்.

எப்போதும் துருதுரு என்றிருந்த ஹிருதயரிடம்


சிந்திக்கும் திறன் மட்டும் மருந்துக்கும் இல்லை.
அதனால் சாதாரண லௌகீக மக்களைப்போல
எப்போதும் சுயநல முயற்சியிலேயே
ஈடுபட்டிருப்பார்.
அவரது பிற்கால வாழ்வில் நாம் காண்கின்ற ஏதோ
சிறிதளவு சுயநலமின்மையும் சிந்திக்கும் திறன்
போன்ற நற்பண்புகளும் , குருதேவருடன் அவர்
கொண்டிருந்த நீண்ட நாளைய தொடர்பினால்
தான் ஏற்பட்டது.
குருதேவரைப் பின்பற்றி நடப்பதற்காக
எடுத்துக்கொண்ட முயற்சிகளும்
ஹிருதயருக்குக் கைகொடுத்தன. உணவு, உடை
போன்ற தேவைகள் எதைப்பற்றியும்
கவலைப்படாமல் எப்போதும் தெய்வீக
சிந்தனைகளில் மூழ்கியிருந்த குருதேவருக்கும்
ஹிருதயரைப்போன்ற ஆழ்ந்த அன்பும்
நம்பிக்கையும் கொண்ட ஒருவரின் உதவி
தேவைப்பட்டது.
குருதேவரின் சாதனைக் காலத்தில்
ஹிருதயரைப்போன்ற ஒருவரைக்கொணர்ந்து ,
இருவருக்கும் இடையே பொருள் பொதிந்ததோர்
இணக்கத்தை அன்னை காளிஏற்படுத்தி
வைத்ததற்கு இது தான் காரணமாக
இருக்குமோ? யாருக்குத்தெரியும்? சாதனைக்
காலத்தில் ஹிருதயர் மட்டும் அங்கு
இல்லையெனில் தம் உடலைக்காப்பாற்ற
முடிந்திருக்காதுஎன்று குருதேவர் அடிக்கடி
கூறுவார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயர் உள்ளளவும்
ஹிருதயரின் பெயரும் அதனுடன் இதயபூர்வமாக
அஞ்சலிகள் என்றென்றும் உரியனவாகுக!
ஹிருதயர் தட்சிணேசுவரத்திற்கு வந்து சேர்ந்த
போது கதாதரருக்கு வயது இருபது முடிந்து சில
மாதங்கள் சென்றிருந்தன. ஹிருதயர் பல
வழிகளில் கதாதரருக்குத் துணையாக
இருந்தார். கதாதரரின் வாழ்க்கை இதனால் சற்று
எளிதாயிற்று என்பதை நாம் ஊகிக்கலாம்.
நடப்பது, படுப்பது , இருப்பது போன்ற அன்றாடச்
செயல்கள் அனைத்தையும் ஹிருதயரின்
உதவியுடனேயே கதாதரர் செய்தார்.
பாலகனைப்போன்ற இயல்புடைய கதாதரரின்
செயல்கள் சாதாரண மனிதனின் கண்களுக்குச்
சிறுபிள்ளைத்தனமாக, காரணம்
அற்றவையாகத்தோன்றின. ஆனால் ஹிருதயரோ
இந்தச் செயல்களை மனப்பூர்வமாக
ஏற்றுக்கொண்டு இதமாக நடந்து கொண்டார்.
இத ஹிருதயரை குருதேவரின் அன்புக்குரியவர்
ஆக்கியது.
ஹிருதயர் கூறினார். இனம் காண முடியாத ஈர்ப்பு
ஒன்று அந்த நாட்களில் எனக்கு குருதேவரிடம்
இருந்தது. நிழல்போல் எப்போதும் நான்
அவருடனே இருப்பேன்.
ஒரு நிமிடநேரம் அவரைப் பிரிந்திருப்பது கூட
எனக்கு வேதனை அளிப்பதாக இருந்தது.
அவருடனே நடந்தேன். அவருடனே உறங்கினேன்.
நண்பகல் உணவு வேளையில் மட்டும், அதுவும்
மிகச்சிறிது நேரம் மட்டுமே நாங்கள்
பிரிந்திருப்போம் .ஏனெனில் குருதேவர் கோயில்
பண்டக சாலையிலிருந்து பொருட்களைப் பெற்று
அவற்றைத் தம் கையாலேயே சமைத்து,
பஞ்சவடியில் அமர்ந்து உண்பார்.
நான் கோயில் பிரசாதம் உண்பேன்.குருதேவரின்
சமையலுக்கு வேண்டிய எல்லா
ஆயத்தங்களையும் செய்த பின்னரே நான்
அவரை விட்டுச் செல்வேன். அந்த நாட்களில்
உணவு விஷயத்தில் அவரது கட்டுபாடு மிகவும்
தீவிரமாக இருந்தது. தாமே சமைத்து உண்டபோது
கூட அவருக்குத் திருப்தி இல்லை. மதிய
உணவைத்தாமே சமைத்து உண்டாலும் இரவில்
எங்களைப்போலவே அன்னை காளிக்குப்
படைக்கப்பட்ட பூரி பிரசாதத்தை உட்கொள்வார்.
பல வேளைகளில் அந்தப் பூரி பிரசாதத்தை
உட்கொள்வார். பல வேளைகளில் அந்தப் பூரியை
உண்ணும் போது அவர் கண்கள் நீரால் நிரம்பும்,
அம்மா! ஒரு மீனவப்பெண்ணின் உணவை
உட்கொள்ளச் செய்து விட்டாயே என்று
வேதனையுடன் அன்னையிடம் முறையிடுவார்.
குருதேவரும் இதைப்பற்றிச் சிலவேளைகளில்
கூறியுள்ளார். ஒரு மீனவப் பெண்ணிடமிருந்து
உணவு கொள்ள வேண்டியிருக்கிறதே என்று
மனம் வருந்துவேன்.
ராணி கீழ்ஜாதியைச்சேர்ந்தவர் என்பதால்
ஏழைகள் கூட காளி கோயிலுக்கு உணவு கொள்ள
வருவதில்லை. அதனால் அன்னைக்கு நிவேதனம்
செய்யப்பட்ட உணவில் பெரும்பகுதியை
மாடுகளுக்குப்போட்டனர். அதிலும்
செலவழியாததை நதியில் எறிந்தனர்.குருதேவர்
அதிக நாள் இவ்வாறு தாமே சமைத்து
உண்ணவில்லை. இதனை அவரும்
கூறினார்.ஹிருதயரும் கூறினார். காளிகோயில்
அர்ச்சகர் பொறுப்பை ஏற்கும் வரை மட்டுமே,
அதாவது இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே
குருதேவர் தாமே சமைத்து உண்டிருக்க
வேண்டும். ஏனெனில் கோயில் கும்பாபிஷேகம்
முடிந்து இரண்டு மூன்று மாதங்களில் அவர்
அர்ச்சகர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
கதாதரர் தன்னை நேசிக்கிறார் என்பது
ஹிருதயருக்குத் தெரியும். ஆனால் கதாதரரின்
ஒரு செய்கையை மட்டும் அவரால் புரிந்து
கொள்ள முடியவில்லை. அது என்னவெனில்
திடீர்திடீரென கதாதரர் எங்கோ மறைந்து
விடுவது தான்.பெரிய மாமாவுக்கு உதவச்
செல்கின்றபோது. பகலுணவிற்குப்பின்
ஓய்வெடுக்கும்போது, மாலை தீபாராதனை
காணக்கோயிலுக்குச்செல்லும்போது என்று
சிறிது நேரம் ஹிருதயர் எங்காவது சென்றால் ,
கதாதரர் எங்கோ மறைந்து விடுவார்.
அவர் எங்கு செல்கிறார் என்பது தெரியாது.
தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. ஓரிரு மணி
நேரத்தில் வந்து விடுவார்.அப்போது அது
பற்றிக்கேட்டால் ஏன்? நான் இங்கு பக்கத்தில்
தானே இருந்தேன்” என்று ஏதேதோ கூறி மழுப்பி
விடுவார். சில வேளைகளில் தேடும்போது
பஞ்சவடிப் பகுதியிலிருந்து வந்து
கொண்டிருப்பார். ஒரு வேளை இயற்கைக்
கடன்களைக் கழிக்கச் சென்றிருப்பார் என்று
எண்ணி மேலும் எதுவும் கேட்காமல் இருந்து
விடுவார் ஹிருதயர்.
-
சாதக நிலையின் முதல் வெளிப்பாடு
-
ஒரு முறை நண்பர்களுடன் பூஜை
விளையாட்டிற்காக ஒரு தெய்வீகத் திருவுருவத்தை
கதாதரன் செய்தான். துணியில் ஓவியமாகவும்
வரைந்தான். அவற்றின் அழகைப் பார்த்த மக்கள்
அவை கைதேர்ந்த கலைஞர்களின் படைப்புகள்
என்றே கருதினர்.
ஒரு சமயம் கிராமத்தில் ராமர் அல்லது
கிருஷ்ணரைப் பற்றிய யாத்ரா நடைபெற்றது.
கதாதரனும் அதைப் பார்க்கச் சென்றிருந்தான்.
யாத்ராவைக்கண்டு களித்த அனைவரும் அதில்
வரும் பாடல்களையும், வசனங்களையும் உடனேயே
மறைத்துவிட்டுத் தங்கள் சொந்த அலுவல்களில்
ஈடுபட்டனர்.ஆனால் கதாதரனின் மனத்தில் அவை
தோற்றுவித்த ஆன்மீக உணர்ச்சி அலைகளுக்கு
எல்லையே இல்லை. அந்தப் பாடல்களையும்
காட்சிகளையும் அவன் மீண்டும் மீண்டும்
நினைவில் கொண்டு வந்து மகிழ்ந்தான்.
நண்பர்களை அருகிலிருந்த மாந்தோப்புக்கு
அழைத்துச் சென்று அவர்களின் முன்னிலையில்
அந்த யாத்ரா காட்சிகளை நடித்துக் காண்பித்தான்.
பல்வேறு பாத்திரங்களுக்கான வசனங்களை
நண்பர்களுக்குக் கற்று கொடுத்து முக்கிய
கதாபாத்திரத்தை த் தான் ஏற்றுக் கொண்டு அந்த
யாத்ராவை மீண்டும் அப்படியே நடித்துக்காட்டவும்
செய்தான்.
பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த
உழவர்கள் வேலை செய்த படியே
அந்தச்சிறவர்களின் யாத்ராவைக்
கண்டுகளித்தனர். ஒரே ஒரு தடவை கேட்ட
வசனங்களையும் பாடல்களையும் அவர்கள்
மனப்பாடம் செய்து நடித்த பாங்கினைக் கண்டு
அவர்கள் வியந்தனர். கதாதரனின் அற்புதமான
நினைவாற்றலுக்கு இது ஓர் உதாரணமாக
அமைகிறது.

உபநயனம் நடைபெற்றபோது குடும்ப வழக்கத்தையும்


சமூக கட்டுப்பட்டையும் மீறி, தனி என்ற தாழ்ந்த
குலப்பெண்ணிடமிருந்து முதல் பிச்சை ஏற்றது
கதாதரனின் மனவுறுதியைக் காட்டுகின்ற ஒரு
நிகழ்சச
் ியாகும். அது மட்டுமின்றி அவளது
அன்பினாலும் பக்தியினாலும் கவரப்பட்ட கதாதரன்
சமூகத்தின் விதிமுறைகளை மீறி, தனி சமைத்த
உணவைக்கூட ஏற்று உண்டான். இது தனிக்கு
அச்சத்தைக் கொடுத்தது. அவள் எவ்வளவோ
தடுத்தும் பயனில்லாமல் போயிற்று.
கிராமத்திலாகட்டும், நகரத்திலாகட்டும் சடைமுடி
தரித்து வெண்ணீறு பூசிச் செல்கின்ற சாதுக்கள்
என்றாலே சிறுவர்களின் அச்சத்தைப்பற்றிச் சொல்ல
வேண்டியதில்லை. அவர்கள் சிறுவர்களை
வசியப்படுத்தி தொலை தூரத்திலுள்ள
இடங்களுக்குக் கொண்டு சென்று விடுவார்கள்
என்ற பயம் வங்காளம் முழுவதும் பரவியிருந்தது.
காமார்புகூரின் தென்பகுதியில் புரி செல்லும்
சாலையில் இத்தகைய சன்னியாசிகளும்,
பைராகிகளும் நாள்தோறும் கூட்டம் கூட்டமாகச்
செல்வதுண்டு.அவர்கள் காமார்புகூரில்
ஓரிருநாட்கள் தங்கி, பிச்சையெடுத்து உண்டு,
ஓய்வெடுத்துக்கொண்டு பயணத்தைத்
தொடர்வார்கள்.
கதாதரனின் நண்பர்கள் இந்த சாதுக்களைக்
கண்டு நடுங்கினர். இதில் விதிவிலக்காக
இருந்தது கதாதரன் மட்டுமே.சிறிதும் அச்சமின்றி
அவர்களிடம் சென்று பணிவிடைகள் செய்வதும்
பேசுவதுமாக நெடுநேரம் தங்கியிருந்து அவர்களின்
நடத்தையை யும் பண்புகளையும் அறிந்து
கொண்டான்.
சிலவேளைகளில் அவர்கள் தரும் பிரசாதத்தை
உண்பான். வீடு திரும்பியதும் நடந்தவற்றை எல்லாம்
தாயிடம் சொல்வான். சாதுக்களின் வாழ்க்கையால்
கவரப்பட்டு, ஒரு நாள் அவர்களைப்போலத் தன் உடல்
முழுவதும் வெண்ணீறறை ் ப்பூசிக் கொண்டு தாயார்
கொடுத்திருந்த புதுத்துணியைக் கிழித்துக்
கோவணமாகக் கட்டிக் கொண்டு தாயின் முன்னே
சென்று விட்டான். பயம் என்பதுஅவன் அறியாத
ஒன்றாக இருந்தது.
கிராமத்திலிருந்த பாமரமக்களுக்குப் பொதுவாக
எழுதப்படிக்கத் தெரியாது. ராமாயணம், மகாபாரதம்
போன்ற நூல்களை அவர்கள் கேட்க விரும்பும்போது
ஒரு பிராமணரையோ, படித்த தங்கள்
ஜாதியினரையோ உதவிக்காக நாடுவது வழக்கம்.
அப்படி புண்ணிய நூல்கள் வாசிக்க வருபவரை
அந்தப் பாமரமக்கள் மிகவும் மரியாதையுடன்
நடத்துவார்கள். பாதங்களைக்கழுவிக்கொள்ளத்
தண்ணீர் கொடுத்து புகைப்பதற்கு ஹீக்கா
கொடுத்து, அமர்வதற்கு சிறந்த ஆசனமோ
புதுப்பாயோ கொடுத்து உபசரிப்பார்கள். படிக்க
வருபவர் பாமரமக்களின் பணிவான இந்த
உபசாரத்தால், தலைகால் புரியாமல் தத்தளித்து
விடுவார்.
கர்வம் பிடிபடாமல் அவர் செய்கின்ற டம்பங்களை
எல்லாம் கூர்ந்து கவனிப்பான் கதாதரன். அவர்
ஆசனத்தில் எவ்வாறு அமர்கிறார், பாடல்களைப்
பாடும்போது என்னென்ன உணர்ச்சிகளைக்
காட்டுகிறார், வினோதமானகுரலில் எவ்வாறு
விளக்கம் கொடுக்கிறார்,ஒவ்வொரு நிலையிலும்
எவ்வாறு தன்னை மிகவும் படித்தவனாக
மற்றவர்களை விட உயர்ந்தவனாகக்
காட்டிக்கொள்கிறார் என்பனவற்றை மனத்தில்
வாங்கிக்கொள்வான். பின்னர் அவற்றை அப்படியே
நடித்துக்காட்டி அனைவரையும் விழுந்து விழுந்து
சிரிக்கும் படிச் செய்வான். வேடிக்கை
வினோதங்களில் வல்லவன் அவன்.
..
தொடரும்..
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like