You are on page 1of 11

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-19

ஒரு சமயம் கதாதரர் தாம் வழிபடுவதற்காக சிவ


விக்கிரகம் ஒன்றைச் செய்ய எண்ணியதையும்
அதன்பின் நிகழ்ந்தவற்றைப் பற்றியும் ஹிருதயர்
கூறினார். குழந்தைப்பருவத்தில் காமார்புகூரில்
கதாதரர் விக்கிரகங்கள் செய்வதுண்டு.
இப்போது அந்த ஆசை எழுந்தவுடனேயே
ஆற்றங்கரைக்குச் சென்று மண் எடுத்து காளை
வாகனம், சூலம், உடுக்கை ஆகியவற்றுடன் சிவ
விக்கிரகம் ஒன்றைச் செய்து வழிபடத்
தொடங்கினார்.
கங்கைக் கரையில் உலவிக்கொண்டிருந்த
மதுர்பாபு தற்செயலாக அங்கு வர நேர்ந்தது. எந்த
தெய்வத்தை இவ்வாறு பக்திப் பரவசமாகப் பூஜை
செய்கிறார் என்பதை அறிய விரும்பிய அவர்
அருகில் சென்று பார்த்தார்.
அது ஒரு சிவ விக்கிரகமாக இருந்தது.
சிறியதாக இருந்தாலும் அது மிகவும் அழகாக
இருந்தது. அதைக்கண்ட மதுர்பாபு மிகவும்
மகிழ்ந்தார். தெய்வீகப்பொலிவு மிக்க இத்தனை
அழகான விக்கிரகம் வாங்கக் கிடைக்காது
என்பதை அறிந்திருந்த அவர் ஹிருதயரிடம் ”
இந்த விக்கிரகம் எங்கிருந்து கிடைத்தது?
இதனைச்செய்தது யார் என்றுக்கேட்டார்?
கதாதரரே இந்த விக்கிரகத்தைச்செய்தார்,
விக்கிரகங்கள் செய்வதுடன் உடைந்த
விக்கிரகங்களைத் திறம்படச் செப்பனிடுவதிலும்
அவர் வல்லவர் என்பதை மதுர்பாபுவிடம் கூறினார்
ஹிருதயர். மதுர்பாபு வியப்பில் ஆழ்ந்தார். பூஜை
முடிந்ததும் அந்த விக்கிரகத்தை தமக்குக்
கொடுத்துவிடுமாறு ஹிருதயரிடம்
கேட்டுக்கொண்டார். அவ்வாறே வழிபாடு
முடிந்ததும் கதாதரரின் அனுமதியுடன் அந்த
விக்கிரகத்தை மதுர்பாபுவிற்குக்கொடுத்தார்
தெய்வீகப்பொலிவுடன் திகழ்ந்த அந்த
விக்கிரகத்தை ராணி ராசமணியும்
கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக
அவருக்கு அனுப்பி வைத்தார்.
ராணியும் அதன் அழகால் மிகவும் கவரப்பட்டார்.
அதனை குருதேவர் தான் செய்தார் என்பதை
அறிந்தபோது அவரது களிப்பு இருமடங்காகியது.

இந்த நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் முன்பு தான்


கதாதரரைக்கோயில் பணியில் நியமிக்கலாம்
என்ற எண்ணம் மதுர்பாபுவின் மனத்தில்
தோன்றியிருந்தது. இப்போது அந்த எண்ணம்
மேலும் வலுப்பெற்றது. மதுர்பாபுவின் இந்த
விருப்பத்தைப்பற்றி ராம்குமார் கதாதரரிடம்
முன்பே கூறியிருந்தார்.ஆனால் அதில் கதாதரர்
சிறிதும்ஈடுபாடு காட்டவில்லை. நினைவு தெரிந்த
நாளிலிருந்தே இறைவன் ஒருவனைத் தவிர
வேறொருவரின் கீழ் பணி செய்யக்கூடாது என்ற
தீர்மானத்தோடு வாழ்ந்த அவரால் எப்படி அதனை
ஏற்றுக்கொள்ள முடியும்.
வேலை பார்ப்பது பற்றி குருதேவர் பலமுறை
எங்களிடம் கூறியதுண்டு. நிர்ப்பந்தம்
ஏற்பட்டாலன்றி ஒருவரின் கீழ் வேலைபார்ப்பதை
அவர் உயர்வாகக் கருதியதில்லை.
ஒரு சமயம் தமது இளம் பக்தர்களுள் ஒருவரான
நிரஞ்சன் ஒருவரின் கீழ் வேலை பார்க்கிறார்
என்று கேள்வியுற்ற அவர் மிகவும்
மனவேதனையுடன் இதைக்கேள்விப்பட்டு என்
மனம் படும்பாடு சொல்லி முடியாது.
அவன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்டால்
கூட நான் இவ்வளவு வேதனைப் பட்டிருக்க
மாட்டேன் என்று சொன்னார்.
பின்னர் ஒரு நாள் குருதேவர் அவனைச் சந்திக்க
நேர்ந்தது. தன் வயதான தாயைக் காப்பாற்றவே
வேலைக்குச் செல்வதாக அவன் தெரிவித்தான்.
உடனே அவனை அன்போடு தடவிக்கொடுத்து,
வயதான தாயைக் காப்பாற்றுவதற்காக நீ
அவ்வாறு செய்ய நேர்ந்தது.அதில் தவறில்லை.
உன் சொந்த சுகங்களுக்காக அவ்வாறு
செய்திருந்ததால் நான் உன்னைத் தொடவே
முடிந்திருக்காது. என் நிரஞ்ஜனிடம் சிறு துளியும்
அஞ்ஜன் இல்லை அவன் எவ்வாறு தவறு செய்ய
முடியும்? என்று கூறினார்.
குருதேவர் நிரஞ்ஜனிடம் இவ்வாறு கூறியது
புதிதாக வந்தவர்களுக்குத் திகைப்பை
அளித்தது.
அவர்களுள் ஒருவர் தயங்காமல் .”ஐயா நீங்கள்
வேலை பார்ப்பதைக் கண்டிக்கிறீர்கள்.வேலை
பார்க்காமல் நாங்கள் எவ்வாறு குடும்பங்களைக்
காப்பாற்ற முடியும்? என்று கேட்டார்.
அதற்கு குருதேவர் விரும்புபவர்கள்
செய்யுங்கள்.நான் தடுக்கவில்லை. நான்
சொல்வதெல்லாம் (நிரஞ்ஜனையும் மற்ற
இளைஞர்களையும் சுட்டிக்காட்டி) இவர்களுக்கு
மட்டுமே. இவர்கள் விஷயமே வேறு என்று பதில்
கூறினார்.
அந்த இளைஞர்களின் வாழ்ககை் யைத்
தனிவிதமாக உருவாக்கி வந்தார் குருதேவர்.
ஒருவரின் கீழ் வேலை பார்ப்பது ஆன்மீக
சாதகர்களுக்கு உகந்ததல்ல என்பதே குருதேவர்
கூறியதன் கருத்து.
மதுர்பாபுவின் நோக்கத்தைத் தன்
சகோதரரிடமிருந்து அறிந்த கதாதரர்
மதுர்பாபுவின் கண்களில் படாமல் இருக்க
முயன்றார்.
கதாதரரைப் பொறுத்த வரை மனம், வாக்கு, உடல்
இம்மூன்றாலும் மதிப்பது உண்மையையும்
தர்மத்தையும் தானே தவிர, எந்தத்
தனிமனிதரையும் அல்ல. அதற்காக,
காரணமின்றி யாரையும் அவமதிப்பதையும் அவர்
விரும்பவில்லை. பிறரிடம் நற்குணங்களைக்
கண்டால் அவற்றை மனதாரப்புகழவும் ,
சான்றோரைப் பாராட்டவும் அவர் என்றும்
தவறியதில்லை.கோயில் அர்ச்சகர் பொறுப்பை
ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது பற்றி
அவரே ஒரு முடிவுக்கு வராத நிலையில் ,
அந்தப்பொறுப்பை ஏற்கும் படி மதுர்பாபு
கேட்டுக்கொண்டால் மறுக்கநேரிடும்.அது
மதுர்பாபுவின் மனத்தைப் புண்படுத்தும்.
அத்தகையதொரு சூழ்நிலையைத்
தவிர்ப்பதற்காகவே கதாதரர் ஒதுங்கி வாழ
முயற்சி செய்திருக்க வேண்டும்.
அது மட்டுமின்றி கதாதரர் வயதில் மிகவும்
சிறியவர், மிகவும் சாதாரணமானவர்.
மதுர்பாபுவோ ராணி ராசமணியின் வலது
கையாகச் செயல்பட்டு வருபவர். மிகுந்த
மதிப்பிற்குரியவர். அவரது வேண்டுகோளை
மறுப்பது என்பது சிறுபிள்ளைத் தனமானதாகக்
கருதப்படும் என்றும் அவர் எண்ணியிருக்க
வேண்டும்.

நாட்கள் செல்லச்செல்ல காளி கோயிலின் மீது


கதாதரருக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அங்கு
வசிப்பது அவருக்கு மிகுந்த மகிழ்சச ் ியையும்
மனநிறைவையும் அளித்தது. காமார்புகூருக்குச்
செல்ல வேண்டும் என்ற ஆர்வம்
கூடக்குறையலாயிற்று.
பொறுப்புகள் , கடமைகள் எதுவும் கொடுக்கப்
படாவிட்டால் தட்சிணேசவரத்தில்
தங்குவதில்அவருக்கு எவ்வித மறுப்பும் இல்லை.
அப்போது நடந்த நிகழ்சச ் ிகளிலிருந்து இதனை
நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
எந்தத் தருணத்தை எண்ணி கதாதரர் கலங்கிக்
கொண்டிருந்தாரோ அது வந்து விட்டது.
ஒரு நாள் மதுர்பாபு ஆலயத்திற்கு வந்தபோது
சற்று தொலைவில் கதாதரரும் ஹிருதயரும்
சென்று கொண்டிருப்பதைக் கண்டார். உடனே
கதாதரரை அழைத்து வரும்படி வேலையாளை
அனுப்பினார்.
கதாதரர் அங்கிருந்து மெல்ல நழுவ
எத்தனித்தார். அதற்குள் வேலையாள் வந்து, பாபு
தங்களை அழைக்கிறார் என்று கூறினான்.
கதாதரர் தயங்குவதைக் கண்ட ஹிருதயர்
காரணம் கேட்ட போது கதாதரர், நான் இப்போது
அங்கு சென்றால் அவர் என்னை இங்கு
தங்கும்படி கோயில் பணியை ஏற்கும் படியும்
கூறுவார். அதனால் தயங்குகிறேன் என்று
சொன்னார்.
ஹிருதயருக்கு அது பெரிய விஷயமாகப்
படவில்லை. அவர் கதாதரரிடம் அதில் என்ன
கஷ்டம் இருக்கிறது? இத்தகைய ஒரு நல்ல
இடத்தில் ஒரு பெரிய மனிதரின் கீழ் பணி
செய்வது நல்லது தானே? இதற்குப்போய்
தயங்குகிறீர்களே! என்றார்.
அதற்கு கதாதரர் எந்த வேலையிலும் கட்டுண்டு
வாழ நான் விரும்பவில்லை. கோயில் பணியை
ஏற்றுக்கொண்டால் காளி விக்கிரகத்தின்
மீதுள்ள ஆபரணங்களுக்கும் நான் தானே
பொறுப்பு. அது என்னால் முடியாது.
ஆபரணங்களின் பொறுப்பை நீ ஏற்றுக்கொண்டு
என்னுடன் இங்கே தங்குவதானால் நான் பூஜைப்
பணியை ஏற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்.

ஹிருதயர் தட்சிணேசுவரத்திற்கு வந்ததே ஒரு


வேலை தேடித்தான். கும்பிடப்போன தெய்வம்
குறுக்கே வந்தது போல வேலையே தன்னைத்தேடி
வருவதைக்கண்ட ஹிருதயர் கதாதரரின்
கருத்துக்கு உடனே இசைந்தார்.
அதன் பின்னர் கதாதரர் மதுர்பாபுவிடம் சென்றார்.
எதிர்பார்த்தபடியே மதுர்பாபு கோயில் பணியை
ஏற்கும் படி வேண்டினார். கதாதரரும் முன்பு
குறிப்பிட்ட நிபந்தனையுடன் அதனை
ஏற்றுக்கொண்டார்.
காளியின் திருவுருவை அலங்கரிக்கின்ற
பணியை அன்று முதல் கதாதரருக்கு மதுர்பாபு
அளித்தார். கதாதரருக்கும் ராம்குமாருக்கும்
உதவுமாறு ஹிருதயரைப் பணித்தார்.
மதுர்பாபுவின் வேண்டுகோளுக்கு கதாதரர்
இணங்கியது ராம்குமாரின் கவலையைப்
பேரளவிற்கு க் குறைத்தது.
மேலே குறிப்பிட்ட நிகழ்சச
் ிகள் யாவும் கோயில்
கும்பாபிஷேகம் நிறைவுற்ற மூன்று மாதங்களில்
நிகழ்ந்தன.

தொடரும்..
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like