You are on page 1of 11

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-24
-
சாதனையும் தெய்வப்பித்தும்
--
அன்னையின் திருக்காட்சி தந்த பேரானந்தத்தில்
திளைத்திருந்த குருதேவரால் சில நாட்கள் வேறு
எந்தப்பணியிலும் ஈடுபட முடியாமல் போயிற்று.
பூஜை முதலான எந்தக்கடமைகளையும்
முறையாக அவரால் செய்ய இயலவில்லை.
வேறொருவரின் உதவி யுடன் ஹிருதயரே
இவற்றைச் சமாளித்து வந்தார்.
குருதேவரின் இந்த நிலைக்குக் காரணம்
மூளைக்கோளாறு என்று கருதிய ஹிருதயர்
அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பூகைலாஸ்
என்ற செல்வந்தரின் வீட்டு வைத்தியரை ஏற்பாடு
செய்தார்.
ஆனால் குணமடைவதற்கான அறிகுறி எதுவும்
தென்படவில்லை. எனவே காமார்புகூருக்குச்
செய்தி அனுப்பி குருதேவரிடம் தாயாருக்கும்
சகோதரருக்கும் விவரங்களைத்
தெரியப்படுத்தினார்.
கடவுள் காட்சிக்காக ஏங்கி, அதனால் புறவுலக
நினைவை இழந்த நாட்களைத் தவிர மற்ற
நாட்களில் குருதேவரே பூஜைப் பணிகளைச்
செய்ய முயன்றார்.
தமது பூஜை தியான வேளைகளில்
அனுபவங்களைப் பற்றி குருதேவர் கூறியதாவது,
மண்டபக்கூரையின் சுற்றுச்சுவரிலுள்ள தியான
நிலை பைரவரின் திருவுருவத்தைச்சுட்டிக்காட்டி
நான் என் மனத்திடம், மனமே நீயும் இந்த
பைரவரைப்போல் எவ்விதச் சலனமுமின்றி
அன்னையின் திருவடித் தாமரைகளை
தியானிக்க வேண்டும் என்று
சொல்லிக்கொள்வேன்.
தியானிக்க அமர்ந்த உடனே என் கால்களில்
தொடங்கி மேலே உள்ள உடம்பின் மூட்டுகள்
அனைத்தையும் யாரோ ஒன்றன்பின் ஒன்றாகச்
சாவிபோட்டு பூட்டுவது போலிருக்கும். சாவியைத்
திருப்பவது போன்ற கட்கட் ஒலி கூட எனக்குத்
தெளிவாகக்கேட்கும்.
அதன் பின்னர் நான் விரும்பினால் கூட உடம்பை
அங்கும் இங்கும் அசைக்க முடியாது.
அமர்ந்திருக்கின்ற நிலையையும் மாற்ற இயலாது.
விரும்பிய வேளையில் தியானத்திலிருந்து
எழுந்திருக்கவும் முடியாது.மீண்டும் அந்தகட்கட்
ஒலியுடன் தலையிலிருந்து கால் வரையுள்ள
பூட்டப்பட்ட மூட்டுகள் அனைத்தும் திறக்கும்
வரை என்னால் தியானத்திலிருந்து எழ முடியாது.
தியான வேளையில் நான் கண்ட காட்சிகள் தாம்
எத்தனை எத்தனை!
தியானிக்கும்போது ஆயிரமாயிரம் மின்மினிப்
பூச்சிகள் சேர்ந்து பறப்பது போன்ற ஒளிக்கூட்டம்
என் முன் தோன்றும்.
சில வேளையில் வெண்பனிப் படலம் போன்ற
ஒளிவெள்ளம் என்னைச்சுற்றி நாற்புறம் பரந்து
படர்ந்திருப்பதைக் காண்பேன்.
வேறு சிலவேளைகளில் அனைத்துப்
பொருட்களிலும் வெள்ளியை
உருக்கிவிட்டாற்போல் ஒளி பிரகாசிப்பதைப்
பார்ப்பேன்.
பொதுவாக இத்தகைய காட்சிகள் நான்
கண்களை மூடிக்கொண்டிருந்தபோது மட்டும்
தான் தோன்றும்.
சிலவேளைகளில் கண்களைத் திறந்து
வைத்திருந்த போதும் நான் கண்டதுண்டு. நான்
கண்ட காட்சிகள் என்னவென்றும் எனக்குத்
தெரியவில்லை.
இத்தகைய காட்சிகளைக் காண்பது நன்மையா
தீமையா என்பதும் புரியவில்லை.
குழம்பிய நான் அன்னை காளியிடம், அம்மா
எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது.
எதுவும் புரியவில்லை. உன்னை அழைப்பதற்கான
மந்திரங்களோ தந்திரங்களோ எனக்குத்
தெரியாது. அம்மா உன்னை நான் எப்படி
வந்தடைவேன் என்பதை எனக்குக் கற்பித்து
அருள்வாய். நீ கற்பிக்காவிட்டால் எனக்கு வேறு
யார் கற்றுத்தருவார்கள்? அம்மா, உன்னைத் தவிர
எனக்கு வேறு யார் அடைக்கலம். என்று
மனமுருகிப் பிராத்திப்பேன்.
ஒரு மித்த மனத்துடன் என் இதய வேட்கையைச்
சொல்லிப் பரிதாபமாக அழுவேன்.
இந்த நாட்களில் குருதேவரின் பூஜை, தியானம்.
போன்றவற்றில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன.
குழந்தை தாயிடம் கொண்டிருப்பது போல்
அன்னை காளியிடம் அவர் வைத்திருந்த
நம்பிக்கை, தன்னை மறந்த நிலை இனிமை
இவற்றைப் பிறருக்குப் புரிய வைப்பது கடினம்.
அவரது செயலில் வயதின் முதிர்ச்சியோ,காலம்,
இடம் ஆகியவற்றைப் பற்றிய உணர்வோ,
இதைச்செய்ய வேண்டும், இதைச்
செய்யக்கூடாது என்கின்ற விதிமுறைகளோ
எதுவும் தென்படவில்லை.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு
அதற்கேற்றவாறு செயல்பட்டதாகவும்
தெரியவில்லை. ஆனால் அவரது செயல்கள்
அனைத்திலும் இழையோடி நின்ற ஒன்று
பரிபூரண சரணாகதி.தமது நான் உணர்வையும்
சிறிய ஆசைகளையும் அன்னையின் தெய்வீக
மகாசங்கல்பத்தில் ஒன்றுபடுத்திக்கொண்டு
தம்மை முற்றிலும் அவளது கருவியாக
எண்ணியே அவர் செயல்பட்டார்.
அம்மா, எனக்குப் புகலிடம் நீயே, என்னை
ஏற்றுக்கொண்டு வழிநடத்துவாய், தாயே,
என்பதே அவரது இதயபூர்வமான
பிராத்தனையாக இருந்தது.

குருதேவரின் இத்தகைய வித்தியாசமான


போக்கு பலவித வதந்திகளைக் கிளப்பியது.
உலகியல் மாந்தரின் பார்வையில் அவரது
செயல்கள் இயற்கைக்கு முரணாதத் தோன்றின.
முதலில் மக்கள் தங்களுக்குள் கிசுகிசுக்துக்
கொண்டனர். நாட்கள் செல்லச்செல்ல
வெளிப்டையாகப்பேசத் தொடங்கினர்.
இவை எதுவும் குருதேவரைப் பாதிக்கவில்லை.
உலக அன்னையின் குழந்தையான அவர் அவளது
ஆணைப்படியல்லவா ஒவ்வொரு செயலையும்
செய்து வந்தார்.
ஊராரின் தூற்றுதல் அவரது செவிகளைச்
சிறிதும் எட்டவில்லை. ஏனெனில் அவர்
இவ்வுலகில் வாழ்ந்தாலும் இந்த உலகைச்
சார்ந்தவரைாக இருக்கவில்லை. புறவுலகம்
அவருக்கு ஒரு கனவுலகமாக மாறிவிட்டிருந்தது.
எவ்வளவு முயன்றும் அவரால் அந்தக் கனவுலகை
முன்புபொல் நனவுலகமாகப் பார்க்க
இயலவில்லை. அவரைப்பொறுத்தவரை உலக
அன்னையின் அற்புதப்பேரானந்த வடிவம் ஒன்றே
உண்மைப்பொருளாக விளங்கியது.
முன்பெல்லாம் குருதேவர் பூஜை தியானங்கள்
செய்கின்ற போது அன்னையின் அழகிய
திருக்கரங்கள், தாமரைத் திருப்பாதங்கள்,
இனியதிலும் இனிய அற்புதப் புன்முறுவல்,
பொங்கிப் பொலிகின்ற திருமுகம் ஆகியவற்றுள்,
ஏதேனும் ஒன்றினை மட்டுமே காண்பார்.
இப்போதோ, பூஜை தியானங்களில் ஈடுபடாத
வேளைகளில் கூட அன்னையின் ஒளிமிக்க
முழுவடிவையும் கண்டார். அன்பொழுகும்
ஆனந்தத்துடன் அவள் சிரித்தாள். இதைச்செய்,
அதைச்செய்யாதே என்றெல்லாம் கூறி
வழிகாட்டியபடி எப்போதும் அவருடன் இருந்தாள்.
முன்பெல்லாம் குருதேவர் அன்னைக்கு
நைவேத்தியம் படைக்கின்ற போது அன்னையின்
கண்களிலிருந்து ஓர் அபூர்வ ஒளிக்கதிர் கிளம்பி
நைவேத்தியப்பொருட்களைத்தொட்டு, அவற்றின்
சாரத்தை கிரகித்துக்கொண்டு, மீண்டும்
அன்னையின் கண்களுக்குள் சென்று
சங்கமிக்கும் இப்போதோ,நைவேத்தியம் படைத்து
முடிய வேண்டாம், ஏன், சில வேளைகளில்
படைக்குமுன்பே கூட, உலகெல்லாம் ஒளி
பரப்பிச்செல்லும் அழகுத் திருமேனியுடன்
அன்னை நேரில் வந்து அமர்வதைக்கண்டார்
குருதேவர்.
அவளது வருகையால்அந்தத் திருக்கோயில்
முழுவதுமே ஒளி வெள்ளத்தில் மூழ்குவது
போலிருக்கும்,

ஹிருதயர் கூறினார், ஒரு நாள் குருதேவர் பூஜை


செய்து கொண்டிருந்தபோது நான் அங்கே
எதேச்சையாகச் செல்ல நேர்ந்தது. அப்போது
அவர் தம்மை மறந்த நிலையில், முற்றிலும்
அன்னையின் உணர்வில் ஒன்றியவராய்
செம்பருத்தி மலரையும், வில்வ இலைகளையும்
அன்னையின் திருப்பாதங்களில் அர்ப்பிக்க
இருந்தார். ஆனால் அவற்றை அர்ப்பிக்கும் முன்
திடீரென, பொறு, பொறு முதலில் மந்திரத்தைச்
சொல்கிறேன்.பிறகு உணவை உட்கொள்வாய்
தாயே! என்று கூறினார். அதன் பின்னர் பூஜையை
முடிக்கும் முன்னரே நைவேத்தியம் செய்தார்.

முன்பெல்லாம் பூஜை தியான வேளைகளில்


தமக்கு முன்னால் இருந்த அன்னையின்
திருவுருவச் சிலையில் ஓர் உயிருணர்வு
ததும்புவதை மட்டுமே கண்டார். இப்போதோ
கோயிலில் கற்சிலையைக் காண்பதேயில்லை
அவர். யாருடைய உணர்வால் இந்த உலகம்
முழுமையும் உயிர் பெற்றுச் செயல்படுகிறதோ
அந்த அன்னை பேரறிவுப்பெருஞ்சுடராய்,வரமும்
அபயமும் பொலிகின்ற திருக்கரங்களுடன்
அங்கே நிற்பதை அவர் கண்டார்.

தொடரும்..
-
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like