You are on page 1of 9

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-25

பின்னாளில் குருதேவர் கூறினார், நான் என்


கையை அன்னையின் மூக்கிற்கு அருகில்
வைத்துப்பார்த்தேன். அன்னை உண்மையிலேயே
மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள்.
ஆனால் ஒன்று அங்கே நின்றிருந்த போதிலும்
அவளது நிழல் சுவரில் விழவில்லை. இரவின்
விளக்கொளியில் நான் கூர்ந்து கவனித்தேன்,
ஆனாலும் அவளது நிழலை ஒரு போதும் நான்
கண்டதில்லை.
நான் என் அறையில் அமர்ந்திருப்பேன்.
கிண்கிணிச் சலங்கைகள் ஜல்ஜல் என்று ஒலிக்க
அன்னை கோயில் மீது ஏறிச்செல்கின்ற ஓசை
கேட்கும்.
அவசர அவசரமாக வெளியே ஒடி வந்து
பார்ப்பேன். உல்லாசமான ஒரு சிறுமியைப்போல
உண்மையிலேயே அன்னை நடந்து சென்று
கொண்டிருப்பாள். விரித்த கூந்தலுடன் மாடியில்
சென்று தூரத்தே காணும் கல்கத்தாவையும்
அருகில் பாய்ந்தோடுகின்ற கங்கை நதியையும்
மாறிமாறிப் பார்த்தவண்ணம் நின்று
கொண்டிருப்பாள்.
ஹிருதயர் கூறினார்,
அந்த நாட்களில் காளி கோயிலில் நுழைகின்ற
எவரும் ஒருவித அச்சம் கலந்த பேரமைதி
நிலவுவதை உணர முடியும். குருதேவர் இல்லாத
நேரங்களில் கூடப்பரவி நிற்கின்ற இந்தச்
சொல்லொணாத தெய்வீக உணர்வு, அவர் உள்ளே
இருக்கும்போது எப்படி இருக்கு மென்று சொல்ல
வேண்டியதில்லை. அவர் பூஜை வேளையில்
எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதைப்
பார்ப்பதற்காக நான் அவ்வப்போது கோயிலுக்கு
ள்செல்வதுண்டு. அங்கே காண்கின்ற காட்சி என்
இதயத்தில் பக்தியையும் வியப்பையும் ஒருங்கே
உண்டாக்கிவிடும். ஆனால் வெளியே வந்ததும்
ஐயம் எழுந்துவிடும்.
உண்மையிலேயே மாமாவுக்குப் பைத்தியம்
பிடித்துவிட்டதா?
இல்லாவிடில் பூஜை வேளையில் ஏன் இவ்வாறு
நடந்து கொள்கிறார்? என்ற எண்ணம் என்னை
அலைக்கழிக்கும். இத்தகைய பூஜையைப் பற்றி
ராணியும் மதுர்பாபுவும் அறிந்தால் என்ன
நினைப்பார்களோ? என்ற அச்சமும் கூடவே எழும்.
ஆனால் மாமாவின் மனத்தில் இத்தகைய
எண்ணங்கள் ஏற்படாதது மட்டுமல்ல, நான்
அவரிடம் இவற்றை எடுத்துச் சொன்னால் கூட
அதை அவர் பொருட்படுத்துவதில்லை.
இதைப்பற்றி நான் அவரிடம் அதிகம், பேசவும்
முயலவில்லை. விவரிக்க முடியாத ஓர் அச்சமும்
தயக்கமும் என்னை அவரிடம் பேச முடியாமல்
தடுத்தன. இது ஏன் எனக்குத் தெரியவில்லை.
ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கும் எனக்கும்
இடையே இனம்புரியாத தோர் இடைவெளி
ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன்.
வேறுவழியின்றி, அவருக்கு என்னால் முடிந்த
பணிவிடைகளை அமைதியாகச் செய்து
வந்தேன். ஆனால் ஏதோ ஒரு நாள் நிச்சயமாக
அவர் ஒரு விபரீதத்தை ஏற்படுத்தப் போகிறார்
என்ற எண்ணம் மட்டும் என் மனத்திலிருந்து
விலகவில்லை.
குருதேவர் பூஜை செய்கின்ற வேளையில்
கோயிலுக்குள் சென்று கண்டதையும் மற்ற
நிகழ்சச
் ிகளையும் கீழ்கண்டவாறு ஹிருதயர்
விவரித்தார்.
செம்பருத்திப்பூ,வில்வம் கொண்ட அர்க்கியம்
தயாரிப்பார். முதலில் தம் தலை, நெஞ்சு, மற்ற
உறுப்புக்களில் ஏன் பாதங்களில் கூடத்
தொடுவார்.பின்னர் அன்னையின்
திருப்பாதங்களில் சமர்ப்பிப்பார்.
அவரது கண்களும் மார்பும் குடிகாரனின்
கண்களையும் மார்பையும் போன்று எப்போதும்
சிவந்தே கிடந்தன.தடுமாறிக்கொண்டே
திடீரென இருக்கையைவிட்டு எழுந்து பீடத்தின்
மீது எறி அன்னையின் முகத்தை அன்புடன்
தொட்டுக்கொஞ்சுவார்,பாடுவார், சிரிப்பார்,
வேடிக்கை செய்வார் பேசுவார் .சிலவேளைகளில்
அன்னையின் கைகளைப் பிடித்துக்கொண்டு
நடனம்ஆடுவார்.
நைவேத்தியம் படைத்துக்கொண்டிருப்பவர்
திடீரென எழுவார். சாதத்தையும் குழம்பையும்
பிசைந்து கையில் எடுத்துக்கொண்டு, பீடத்தில்
ஏறி அன்னையின் வாய்க்கு அருகில் கொண்டு
சென்று, சாப்பிடு! என்று கெஞ்சுவார்.
பின்னர் ஓகோ! என்னைச்சாப்பிடச்
சொல்கிறாயா? சரி, சாப்பிடுகிறேன், என்று
கூறியபடியே அந்த உணவில் சிறிது உண்டுவிட்டு
எஞ்சியதை அன்னையின் வாயில் வைத்து, நான்
சாப்பிட்டுவிட்டேன், இப்பொழுது நீ சாப்பிடு என்று
சொல்வார்.
ஒரு நாள் அவர் அன்னைக்கு உணவு படைக்கும்
போது ஒரு பூனை கத்திக்கொண்டே
கோயிலுக்குள் நுழைந்தது. அன்னைக்குப்
படைக்கவிருந்த உணவை அந்தப்பூனைக்கு
கொடுத்து சாப்பிடு, அம்மா சாப்பிடு என்று கூறி
அந்தப் பூனையைச் சாப்பிடச்செய்தார்.
பலவேளைகளில் இரவில் அன்னையைப்
பள்ளியறையில் படுக்க வைத்துவிட்டு என்னையும்
அருகில் படுக்க சொல்கிறாயா? அம்மா! நல்லது,
இதோ நான் படுத்துக்கொள்கிறேன்” என்று
கூறியபடியே அந்த வெள்ளிக் கட்டிலில் தாமும்
சிறிது நேரம் படுத்துக்கொண்டிருப்பார்.
பூஜைவேளையில் அவர் தியானம் செய்யும் போது
நீண்ட நேரம் புறவுலகை முற்றிலும் மறந்து தம்மில்
தாமாகவே லயித்திருப்பார்.
நாள்தோறும் அதிகாலையில்எழுந்து அன்னை
காளிக்கு மாலை தொடுப்பதற்காக மலர்
கொய்வார். அப்போதும் அவர் யாருடனோ பேசிக்
களிப்பார். சிரித்து மகிழ்வார், வேடிக்கை
வினோதங்கள் செய்து விளையாடுவார்.
இரவில் தூக்கம் என்பதே அவருக்குச் சிறிதும்
இல்லை. நான் கண்விழித்துப் பார்க்கும்
போதெல்லாம் அவர் யாருடனோ பேசிக்
கொண்டிருப்பார். அல்லது பாடிக்கொண்டிருப்பார்.
அல்லது பஞ்சவடிக்குச் சென்று தியானத்தில்
ஈடுபட்டிருப்பார்.
குருதேவரின் நடத்தையைக்குறித்து தான்
அஞ்சினாலும் தன் அச்சத்தை மற்றவர்களிடம்
எடுத்துக்கூறி ஆலோசனை பெறத் தன்னால்
முடியவில்லை. என்று ஹிருதயர் கூறினார்.
ஏனெனில் அதைக்கேட்பவர்களுள் யாராவது
கோயிலின் உயர் அதிகாரிகளிடம் கூறினால்
அவர்கள் கோயில் உரிமையாளர்களிடம் சொல்லி,
குருதேவருக்குப் பாதகமாக ஏதாவது
செய்யக்கூடும் என்ற எண்ணமே ஹிருதயரைப்
பிறரிடம் கலந்து ஆலோசிக்காமல்
இருக்கச்செய்தது.
ஆனால் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து
கொண்டிருக்கின்ற வினோதமான செயல்களை
யாரால் மறைத்து வைக்க முடியும்?
காளிகோயிலில் வழிபட வந்த ஒரு சிலர்
வழிபாட்டின்போது அங்கு நிகழ்ந்தவற்றை நேரில்
கண்டு கோயில் பொருளாளர் போன்ற
அலுவலர்களிடம் புகார் செய்தனர்.
அவர்களும் கோயிலுக்கு வந்து அனைத்தையும்
நேரடியாக க் கண்டனர். ஆனால் குருதேவரின்
தெய்வீக வடிவையும், தயக்கமற்ற
நடத்தையையும், பயமின்மையையும் தம்மையே
மறந்த நிலையையும் கண்ட அவர்களால்
அவரிடம் எதுவும் கூற முடியவில்லை. அவரது
செயல்களையும் அவர் களால் தடுக்க
முடியவில்லை. அலுவலகத்திற்குத் திரும்பி வந்த
பின் இதைப்பற்றிக் கலந்தாலோசித்து,
குருதேவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது
அல்லது ஆவிகளின் ஆவேசம் வந்துள்ளது
என்று முடிவு செய்தனர்.
பூஜைவேளையில் இவ்வாறு விதிகளுக்கு
முரண்பட்டு ஒருவர் நடக்க வேறு என்ன காரணம்
இருக்கமுடியும் என்பது அவர்களின் கேள்வி
.எப்படியோ பூஜை நைவேத்தியம் போன்ற ஆலயப்
பணிகள் சரிவர நடப்பதில்லை. இவர்
எல்லாவற்றையும் கெடுத்து விட்டார், இதைப்பற்றி
உரிமையாளர்களுக்குத் தெரிவிப்பது தங்கள்
கடமை என்று கருதினர் அந்த அலுவலர்கள்.

தொடரும்..
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like