You are on page 1of 9

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-26

மதுர்பாபுவிற்குச் செய்தி அனுப்பப்பட்டது. அதற்கு


பதிலனுப்பிய மதுர்பாபு தாமே நேரில் வந்து
நிலைமையைச் சோதித்தறிந்த பின் தேவையான
நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை அந்த
இளம் பூஜாரி வழக்கப்படியே பூஜைப் பணிகளைச்
செய்து வரட்டும் என்றும் அதை யாரும் தடுக்க
வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
மதுர்பாபுவின் கடிதம் கிடைத்தபின் அவரது
அலுவலர்கள் பூஜாரியின் வேலை நீகக ் ம்
நிச்சயம்,. மதுர்பாபு வந்ததும் இவரை
வெளியேற்றிவிடுவார்.
தெய்வக் குற்றம் செய்வதா? தெய்வம் தான்
எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருக்கும்?
என்றெல்லாம் பலவிதமாகப் பேசிக் கொண்டனர்.
ஒரு நாள் யாருக்கும் அறிவிக்காமல்
பூஜைவேளையில் திடீரென மதுர்பாபு
தட்சிணேசுவரம் வந்தார்.
நேராக காளிகோயிலுக்குச் சென்று குருதேவரின்
செய்கைகைளை நீண்ட நேரம் கூர்ந்து
கவனித்தார்.
பரவச நிலையிலிருந்த குருதேவர் மதுர் வந்ததை
கவனிக்கவில்லை.என்றும் போல அன்றும் அவர்
மனம் அன்னை காளியிடம் ஒன்றியிருந்தது. யார்
வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பதைப்
பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை.
கோயிலுக்குள் வந்ததும் மதுர்பாபு
இதனைப்புரிந்து கொண்டார்.
பின்னர் குருதேவர் அன்னையிடம் ஒரு
சிறுபையனைப்போல அடம்பிடித்து எதையோ
கேட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார். இந்தச்
செய்கைகள் யாவும் அவர் அன்னையிடம்
கொண்ட ஒருமித்த பக்தியாலும் அன்பாலும்
விளைந்தவை என்பதை மதுர்பாபுவால்
பகுத்துணர முடிந்தது.
இத்தகைய இதயபூர்வமான பக்தியாலன்றி வேறு
எதனால் அன்னையை உணர முடியும்?
தாரைதாரையாகக் கண்ணீர் வழிய பூஜை செய்து
கொண்டிருந்த அந்த பக்திப்பெருக்கு,
களங்கமற்ற அந்த ஆனந்த உல்லாசம் சிலநேரம்
ஆடாமல் அசையாமல் ஜடம்போல்
தம்மைச்சுற்றியுள்ள பொருட்களையும் உலகையும்
முற்றும் மறந்திருந்த தன்மை இவை
அனைத்தும்நேரில் கண்ட மதுர்பாபுவின் இதயம்
ஒப்பற்றதோர் ஆனந்தத்தால் நிரம்பிற்று. அந்த
ஆலயம் உண்மையிலேயே
தெய்வீகப்பேருணர்வுடன் பொலிவதை மதுர்பாப
உணர்ந்தார்.
குருதேவர் உண்மையிலேயே அன்னையின்
பேரருளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார் என்ற
உறுதியான எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர்
நிரம்பியது. இதயம் பக்தியால்
விம்மியது.தொலைவில் நின்றபடி
அன்னையையும், அன்னையின் அந்த
அபூர்வமான அர்ச்சகரையும் திரும்பத்திரும்ப
வணங்கினார்.
இத்தனை காலத்திற்கு ப் பிறகு இப்போது தான்
அன்னையைப் பிரதிஷ்டை செய்ததன் பலன்
கிடைத்திருக்கிறது. உண்மையில் இப்போது தான்
அன்னை ஆலயத்தில் எழுந்தருளியுள்ளாள்.
அன்னைக்கு உண்மையான வழிபாடு இப்போது
தான் நடக்கிறது, என்று இதயபூர்வமாக
உணர்ந்தார்.
கோயில் அலுவலர்களிடம் எதுவும் கூறாமல் வீடு
திரும்பினார். மறுநாள் கோயிலின் தலைமை
அலுவலருக்கு மதுரிடமிருந்து உத்தரவு ஒன்று
வந்தது.
அதில் அந்த அர்ச்சகர் எப்படி வேண்டுமானாலும்
பூஜை செய்யட்டும்.அவரைத் தடுக்க வேண்டாம்
என்று எழுதப்பட்டிருந்தது.
மேலே கூறப்பட்ட நிகழ்சச் ிகளைப் படிக்கின்ற
சாஸ்திர வல்லுனர்கள் குருதேவரின் நிலையை
எளிதில் புரிந்து கொள்வர்.
குருதேவரின் மனம் நியதிகளுக்கு உட்பட்ட
சாதாரண பக்தியைக் கடந்து பிரேம பக்தி
என்கின்ற மிக உயர்ந்த நிலையை அதிவேகமாக
எட்டிக் கொண்டிருந்தது. பிறர் புரிந்து கொள்வது
இருக்கட்டும், குருதேவரே தம்மிடம் ஏற்பட்டுள்ள
இந்த உயர்ந்த நிலையைப்புரிந்து கொள்ளவில்லை.
அவ்வளவு இயல்பாக இந்த மாற்றம்
ஏற்பட்டிருந்தது.
அன்னையிடம் இருந்த தணியாத பக்தியின்
வேகத்தால் தாம் இவ்வாறு நடந்து கொள்ளாமல்
இருக்க முடியாது. என்று அவர்
உணர்ந்திருந்தார்.அவரை யாரோ இவ்வாறெல்லாம்
செய்விப்பது போலிருந்தது.
சிலவேளைகளில் அவர், எனக்கு என்ன நேர்ந்து
கொண்டிருக்கிறது? நான் சரியான வழியில் தான்
செல்கிறேனா? என்று தமக்குத்தாமே கேட்டுக்
கொள்வார்.
அம்மா எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது?
எதுவும் புரியவில்லையே! நான் செய்ய
வேண்டியதைச் செய்யும் படி என்னை
வழிநடத்துவாய், நான் கற்க வேண்டியதை
எனக்குக் கற்பித்து அருள்வாய், எப்போதும் என்
கைகளைப் பிடித்து அழைத்துச் செல்வாய்? என்று
மிகுந்த மன ஏக்கத்துடன் அன்னையிடம்
பிரார்த்திப்பார்.
உலகியல் ஆசைகளான பணம், உடலின்பம், புகழ்,
பெருமை அதிகாரம் அனைத்தையும் துறந்து.
அன்னையின் அருளை மட்டுமே வேண்டினார்.
அன்னையும் அவரது மனப்பூர்வமான
பிராத்தனைக்குச் செவி சாய்த்து அவரை
வழிநடத்தினாள். அவருக்கு வேண்டிய
பொருட்களையும் மனிதர்களையும் அவரிடம்
கொணர்ந்து, சாதனைகளில் முழு வெற்றி
பெறவைத்து வாழ்ககை் யின்
இறுதிக்குறிக்கோளான தூய ஞானம், தூய பக்தி
ஆகியவற்றை அவர் கேட்காமலேயே
அருளிச்செய்து அவரை பக்தியின் உச்சியில் மிக
எளிதாக அமர்த்தி வைத்தாள். கண்ணனும்
கீதையில்,
அனன்யாச் சிந்தயந்தோ மாம் யே
ஜனா,பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகஷேமம்
வஹாம்யஹம்
வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளான
உணவு போன்ற பொருட்களைச் சிறிதும்
நினைக்காமல் மனம் ஒருமித்து உள்ளம்
முழுவதையும் என்னிடம், வைத்து என்னோடு
தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும்
பக்தர்களுக்கு, (அவர்கள் கேட்காமலேயே)
தேவையான அனைத்தையும் அவர்களின்
அருகில் கொண்டு வந்து கொடுக்கிறேன்,
என்று பக்தர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
குருதேவரின் இப்போதைய வாழ்ககை ்
நிகழ்சச
் ிகளைப் பார்க்கும்போது கீதையின்
இந்த அருள்மொழி அவரது வாழ்க்கையில்
எவ்வாறு முற்றிலும் பொருந்தியுள்ளது
என்பதை அறிந்து பிரமித்து நிற்கிறோம்.
வாழ்க்கையில் பொன்னும் போகமும் பெரிதென
எண்ணி அலையும் மனிதர்கள் வாழும் இந்தக்
காலத்தில் கீதையில் கூறப்பட்ட வாசகம்
உண்மையென நிரூபிக்கப்படவேண்டிய தேவை
மீண்டும் ஏற்பட்டுள்ளது. பல்லாண்டு காலமாக
சாதகர்கள், அனைத்தையும் விடு,
அனைத்தையும் பெறுவாய், அதாவது
இறைவனுக்காக ஒருவர் அனைத்தையும்
துறந்தாலும் அவர் எதையும் இழப்பதில்லை
என்று சொல்லி வந்தாலும் கூட உலகியல்
ஆசைகளில் சிக்கி உழலும் பலவீனமான
தற்கால மனிதர்கள் கீதையின் மேற்சொன்ன
அருள்மொழி உண்மை என
நிரூபிக்கப்பட்டாலன்றி அதை நம்பமாட்டார்கள்.
சாஸ்திரம் கூறுகின்ற அந்த வாசகத்தின்
உண்மையை உலகிற்குக் காண்பிக்கவே பிற
எல்லாவற்றையும் துறந்து, தன் அருளிலேயே
முற்றிலும் ஒன்றிய ஸ்ரீராமகிருஷ்ணர் மூலமாக
அன்னை இந்தத் திருவிளையாடல் புரிந்தாள்.
ஓ! மனிதா, இதைத் தூய உள்ளத்துடன் கேட்டு
தியாகப் பாதையில் உன்னால் முடிந்த அளவு
முன்னேறுவாய்!

தொடரும்..
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like