You are on page 1of 1

Surat Makluman Kepada Ibubapa melalui Whatsapp

25.6.2020
பெற்றோர் பாதுகாவலர்களுக்கு,
அன்புடையீர்,

கரு: பாலர் பள்ளி வகுப்பு தொடக்கம்

வணக்கம். மலேசியக் கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளை 1.7.2020 முதல் திறப்பதற்கு அனுமதியினை
வழங்கியுள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். அதன் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:

 பள்ளி நேரம் காலை 7.45 முதல் மதியம் 12.00 வரை (பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளக்
கட்டாயமாக மதியம் மணி 12.00 க்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்)
 பிள்ளைகளை பள்ளியின் முன் வாசல் வழி அழைத்து வர வேண்டும்.
 பிள்ளைகளுக்குச் சளி, இருமல்,தொண்டை வலி, காய்ச்சல் போன்ற உபாதைகள் இருப்பின் அவர்களைப்
பள்ளிக்கு அனுப்பி வைக்கக் கூடாது.
 மாணவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப் படுவர் ( குழு A, குழு B )
 குழு A மாணவர்கள் 1.7.2020 அன்றும், குழு B மாணவர்கள் 2.7.2020 அன்றும் பள்ளிக்கு வருவர்.
 பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் பின்வருமாறு காலை மணி 8.00 க்கு நடைபெறும்.
 ** குழு A மாணவர்களின் பெற்றோர்களுக்கு 1.7.2020 அன்றும், குழு B மாணவர்களின் பெற்றோர்களுக்கு
2.7.2020 அன்றும் நடைபெறும்.
 கலந்துரையாடல் கூட்டத்தில் பெற்றோரில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
குழந்தைகளை கலந்துரையாடலுக்கு அழைத்து வரக் கூடாது.
 பள்ளியின் முதல் நாள் மாணவர்கள் கட்டாயமாக புத்தகங்கள், பென்சில் பெட்டி, கலர் பென்சில்
ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். பென்சில் பெட்டி, கலர் பென்சில் பெட்டி ஆகியவற்றில் பெயர் எழுதி
அனுப்ப வேண்டும்.
 மாணவர்கள் தினமும் கட்டாயமாக முகக் கவரியை அணிந்து இருத்தல் வேண்டும்.
 மாணவர்கள் தினமும் பள்ளிக்கு மென்தாள் (திசு பேப்பர்) எடுத்துவர வேண்டும்.

நன்றி

You might also like