You are on page 1of 3

லாக்டவுனாம், அப்பரக்கா அன்லாக்காம்!

#ganeshamarkalam

இப்பத்தான் 3 மாசமா கஷ்டப்பட்டு ஒருவழியா லாக்டவுனில் வாழ கத்துண்டுட்டேன். வாங்கடா


ஒத்தைக்கு ஒத்தைன்னு சொல்ர அளவுக்கு, அதாவது இன்னும் 6 மாசம் உள்ளேயே இருக்கணும்னு
சொல்லு, ஒண்ணும் பிராப்ளமில்லை, கொயட்டா எதுத்துப் பேசாமா இருந்துப்பேன்னு சவால் விடும்
அளவுக்கு மனம் உடல் ஆன்மா எல்லாம் பக்குவப்பட்டுப் போச்சு. ஆனா பாருங்கோ இப்பன்னு என்னைக்
கேக்காம அன்லாக்காம்! அவுத்து விடரா.

நீங்க எல்லாருமே என்னைப்போல் வருவது வரட்டும்னு வந்ததுக்கு பழகியிருப்பேள். அதையும் இதையும்


பண்ணிக் கொடுக்கச் சொல்லி சாப்டூண்டு. முகநூலை நோண்டிண்டு. வாட்ஸப் க்ரூப்பிலெல்லாம்
ஏக்டிவ்வா பங்கெடுத்துண்டு. அதெல்லாம் மின்னமும்தான் பண்ணிண்டிருந்தம்! லாக்டவுனில்? இன்னும்
ஜாஸ்தி பண்ணியிருப்பேள். நானும் செஞ்சேனே! ஆனா இன்னும் சிலதும் செஞ்சு என்னை நீண்ட நெடிய
லாக்டவுனுக்கு தயார் செஞ்சு வச்சிண்டேன். இத்தனை சிரமப் பட்டிருக்க வேண்டாமோன்னு இப்ப
தோணித்து. அன்லாக்குன்னு சொல்லிபிட்டானுவ!

இந்த லாக்டவுனை எதிர்கொண்ட விதம் அவாவா வயசையும் மனநிலையையும் பொருத்து


அமைஞ்சதோ? எனக்கோ போன 8 வருஷமா ஒண்ணும் வெளி வேலைக்குன்னு போவேண்டிய
தேவையில்லைன்னு ஆய்பப ் ோச்சு. யாரும் நான் வரலைன்னு காத்திண்டிருக்கலை. ஆத்தில் மாமிதான்
எங்கேயாவது போய்ட்டு வாங்கோண்னு கட்டில்லேயே ஈஷி கிடக்கேண்டாம்னு அனுப்பி வைப்பா.
அவளுக்கும் சித்தே நிம்மதியா இருக்கலாமேன்னு. கிளம்பரச்சே “எந்தப் பக்கமா போவ்வேள்?” “எந்தப்
பக்கமாப் போனாலும் திரும்பரச்சே வெஸ்ட் மாம்பலம் வழியா வருவேன்.” முகம் சட்டுன்னு மலரும்.
ராகவேந்திரா போளி ஸ்டால் அங்கேதானே இருக்கு.

போன 3 மாசமா அதெல்லாம் ஸ்டாப். ரெண்டு பேரையுமே முடக்கிப் போட்டு. என்னொத்த வயசுக்காராள
கொஞ்சம் அதிகமாவே பயமுருத்தி. “உனக்கு கொரோனா வந்தா தொலைஞ்சாய். வென்டிலேட்டரில்
போடுவம்”. அப்பரம் ‘அதெல்லாம் வேண்டாம்’னுட்டான். பயம் போச்சா என்ன, போலையே?
வென்டிலேட்டரில் போடருதுன்னா என்னன்னு சில அறிவு ஜீவிகள் விவரம் தரவே பிராயாணாமம்
ஆரம்பிச்சுட்டென். பகவான் கொடுத்த வென்டிலேட்டடரை விடவா அப்போலோவில் இருக்கப் போரது?

அது என்ன அப்போலோ, உடம்புக்கு வந்தா அங்கேதான் போவியா? அத்தனை காசு இருக்கா
உங்கிட்டேன்னு கேக்கலாம். எதுக்கும் இருக்கட்டும்னு 10 லக்ஷம் ஆத்துக்காரிக்குத் தெரியாம ஒரு
ஃபிக்ஸடில் வச்சிருக்கேன். போரத்துக்குன்னு டயம் வந்தா (அவளுக்கோ எனக்கோ) அதுலேந்து
எடுத்துண்டு 5 ஸ்டார் ஆஸ்பத்ரீக்குத்தான் அழைச்சிண்டு போணம்னு சொல்லிடலாம்னு ஆசை. அதே
ஆஸ்பத்ரிக்கு ஆடிட், கன்ஸல்டிங்க்னு போய்ருக்கேன். ப்ரைவேட் வார்டெல்லாம் அராபிய ஷேக்குக்கா
வடிவமைச்சிருக்கா. 10 லக்ஷம் எத்தனை நாளுக்கு போதுமானதுன்னு கேட்டப்போ அஞ்சாருநா வருமாம்.
அதுவரைக்கும் இருந்துட்டு ஹிந்து மிஷணுக்கு வந்துடலாம்.

லாக்டவுனில் இப்படி அசட்டுப் பிசட்டுன்னு யோசிப்பதை தவிர்த்து வேற என்ன செஞ்சாய்னு கேப்பேள்.
அதுக்குத்தானே இந்த கட்டுரை.

சும்மாவே நம்பாண்டை நிறைய நேரம் கிடக்கும். லாக்டவுனில் டோட்டலி ஃப்ரீ. ஆத்தில் ரெண்டே பேர்தான்.
பேசிக்கக் கொள்ள, விளையாட, சண்டை பிடிக்கன்னு. அதனால் எதையும் கலந்தாய்வு பண்ணித்தான்
செய்யரதுன்னு லாக்டவுன் போட்ட 2 ஆவது வாரத்தில் தீரம ் ானம் போட்டாச்சு. அதனால் நாளைக்கு என்ன
செய்யலாம்னு இன்னைக்கு ராத்திரியும் இன்னைக்கு என்ன செய்யாலாம்னு கார்த்தாலெ எழுந்தவுடனும்
ரிப்பீட் டெலிகாஸ்ட் போல் பேசுவம். ஒரு 40 நிமிஷம் போவதே தெரியாது. நான் சொன்னதுக்கு அவள்
மறுப்பு சொல்லட ீ ்டு மாத்திப்பிடுவதும், அவ சொல்லி முடிக்கரத்துக்குள் நான் அதை வேண்டாம்னு
சொல்லி, கடைசீயில் அப்பரம் பெசலாம்னு எழுந்து போவம்.

கார்த்தாலே 0630 லேந்து 0900 வரைக்கும் பேப்பர் புரட்டுவம். எல்லாத்தையும் படிப்பம். குறிப்பா
சென்னையில் நேத்து எத்தனை கேஸ் அதில் எத்தனை அஸிம்பட ் மேடிக், ஆஸ்பத்ரீலேந்து ரிலீஸானவா
எத்தனை. அதான் விலாவாரியா புள்ளி விரங்களோட சார்ட் போடரானே. அதெல்லாம் பாத்துட்டு சந்தேகம்
கேப்பா. தீத்து வைப்பென். 270 பேர் பாஸிடிவ் காணலையாம்னு வந்தா அதை சித்தே அலசரது வழக்கம்.
யாராவது பிரபலங்களுக்கு தொத்து வந்துட்டா நன்னா வேணும்னு ஒரே டயத்தில் சொல்லுவம்.

மன்னார்குடியில் இவள் ஒண்ணுவிட்ட சித்தப்பா சித்தி. இவள் அம்மாவோட சித்தி பொண்ணு. எனக்கு
ஒண்ணுவிட்ட சின்ன மாமியார். யூஎஸ்ஸுக்கு புள்ளையோட இருக்கலாம்னு கிளம்பினவாளை
பிளேனெல்லாம் பறக்காது இங்கேயே கிடன்னுட்டா. இன்னும் ரீஃபண்ட் கொடுக்கலை. ஒருநா போன்
போட்டு க்ரீன் கார்ட் வேஸ்ட் அகிடும்னு அங்கலாய்ச்சர். அவாத்தில் தினம் டெம்பரேச்சர் எடுக்க வரான்னு
கேள்விப்பட்டம். அப்படி ஏதாவதுன்னு போன் போட்டு 2 மணிநேரம் பேசுவம். இவள் சொந்தம்னு ஒரு 50
ஃபேமிலி. தினம் ஒருத்தர்னு டயல் செஞ்சா லாக்டவுன் இருப்பதே தெரியாது.

சாப்பாடெல்லாம் சிம்பிள்தான். லாக்டவுன், வேற ஒண்ணும் செய்யரத்துக்கில்லைன்னு கண்டதை பண்ணி


மொக்கலை. சிலர் செய்யரா. சமைச்சதை தினம் போடோவும் பொடரா. சிலபேராத்தில் லாக்டவுன்னுட்டு
எல்லா ஜனமும் ஆத்துலேயே இருந்துண்டு இது வேணும் அதுவேணும்னு பிடுங்கி எடுப்பா. நாங்க ஏகாதசி
வச்சுட்டு துவாதசிக்கு வாழைக்காய்தான். ஆஷாதி ஏகாதசிக்கு அப்பரம் வர துவாதசியில் நிறைய
பண்டங்களை பண்ணி சாப்பிடணும்னு சொல்லியிருக்காம். நேத்துத்தான் சாவகாஸமா சொல்ரா. விட்டுப்
போச்சு. கன்னுக்குட்டி மாதிரி அகத்திக் கீரைன்னா சாப்டேன்! அதுக்குத்தான் ஐயரா இல்லாம ஐயங்காரா
பொறந்திருக்கணுமோன்னு தோணித்து. விவரம் பத்தலை. ஆனா அதெல்லாம் மின்னமே தெரிஞ்சு
பண்ணிக்கொடூன்னு கேட்டிருந்தா என்னாகியிருக்கும் என்பது வேற கதை. லாக்டவுனில் என்னை
குவாரன்டைன் பண்ணியிருப்பா. “சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்”னு பாடலாம்

லாக்டவுனில் எதையும் பரபரன்னு செய்யரதில்லை. என்ன அவசரம் வேண்டிக் கிடக்கு? எடுத்துண்ட


வேலை முடிஞ்சதும் அடுத்தது செய்ய ஒண்ணுமேயில்லையே! ஒரு ரூம்லேந்து இன்னொரு ருமுக்கு போக
எத்தனை நாழி எடுத்துக்க முடியுமோ அதை எடுத்துப்பேன். ஒருநா பாத்திண்டே இருந்த இவள் “என்ன
உங்களுக்கு ஹைட்ரோசில்லா, ஏன் இத்தனை மொள்ள நடக்கரேள்?” இல்லைன்னு ப்ரூவ் செய்ய
ரெண்டுநா வேகமா நடந்து காமிச்சேன். அப்பரம் சந்தேகம் போச்சுன்னு வச்சுக்கோங்கோ.

“சாப்பிட வரேளா”ம்பா. முன் ரூம்லேந்து ஹாலுக்கு வர 74 செகண்ட் எடுத்துப்பேன். 12 அடிதான். கை


அலம்பரச்சே குழாய மெல்லிசா தொறந்துவிட்டு 30 செகண்ட் அலம்பிப்பது சுபாவமாவே ஆச்சு. மாம்பழம்
இருந்தா ஒரு கதுப்பு சீவ 58 செகண்ட். கதுப்பை கொட்டைலேந்து பிரிக்க 2 நிமிஷம். அப்படீன்னா
கொட்டையை கையில் வச்சிண்டு எவ்வளவு சப்பியிருப்பேன்னு பாருங்கோ.

அன்னைக்கு கொட்டையும் தோலியும் வாசல்ல ,மாட்டுக்குப் போடலாம்னு போனேன். வந்த மாடு


“சே”ன்னுட்டு மூஞ்சியத் திருப்பிண்டு போச்சு. ஏன்னா அது சப்ப அதில் ஒண்ணுமேயில்லை.
சாபமிட்டிருக்கலாம். அதுக்கும் லாக்டவுன்.

லாக்டவுனில் கதை மட்டும் தினம் ஒண்ணு எழுதியாரது. பதிவாயிண்டிருக்கு. எல்லாருக்கும் லாக்டவுனாப்


போச்சோன்னோ, பொறுமையா படிக்கரவா அதிகமாயிடுத்தோன்னு சந்தேகம். லைக்கைவிட கமென்ட்ஸ்
ஜாஸ்தத் ி. அதெல்லாத்தையும் படிச்சு ஒப்பேத்தி பதில் மரியாதைக்கு நானும் சில கருத்தை சொல்லின்னு
நாளுக்கு 2 மணிநேரம் போயிடும். எப்படா யாராவது ஏதாவது சொல்லி என்னண்டை மாட்டுவான்னு
பாத்துப்பேன். ஏன்னா அதை வச்சு இன்னும் கொஞ்சம் நேரம் ஓட்டலாம். அன்னைக்கு அப்படித்தான்
ஏதோ விதண்டாவாதம் ஆரம்பிக்க என் சார்பில் சிலர் வக்காலத்துக்கு வர, தள்ளிநின்னு வேடிக்க
பாத்ததே 3 மணிநேரம் பொழுது போச்சு.

வெளீலே போரதில்லை. இந்த 3 மாசத்தில் 4 தடவை சுப்பர் மார்கெட்டுக்கு போயிருந்தேன்னா அதிகம்.


போனா ஹல்திராம் ப்ரேண்ட் லஸ்ஸன் காராசேவ் வச்சிருக்கானான்னு பாப்பேன். இப்பெல்லாம் நான் போர
இடத்தில் நிறைய சிட்டுக்களை வேலைக்கு போட்டிருக்கா. என்ன வேணும்னு லிஸ்ட் தந்தா அவாளே
ஷெல்ஃபுலேந்து எடுத்து கூடையில் வச்சு பில் கவுன்டருக்கு கொண்டுவரா. எல்லாம் முகமூடி
மாட்டிண்டிருக்குகள். இருந்தாலும் சிட்டுன்னு நான் கண்டுபிடிச்சுடுவேன். அது இயல்பா கூடவே பொறந்த
திறமை. பில் போட்டதும் இன்னொரு சிட்டு கூடைலேந்து பில் படி இருக்கான்னு பாத்து நம் பையில்
அடுக்கரா. ஆரம்ப்பத்தில் வாசல்ல கை அலம்பி விட்டு டெம்பெரேச்சர் பாத்து விடரான். எல்லாம் சேர்த்து
சாமன் வாங்குகிர டயம் ரெண்டு மடங்கா ஆகிடுத்து. டயம் போரதுன்னு கோவிச்சுக்கலை.
பூ, இவ்ளோதானா உன் லாக்டவுன்னு கேக்கலாம். பேரனுக்கு தமிழ் பாடம், அப்பரம் என் க்ளையன்ட்ஸோட
சம்பாஷணை, ட்ரெயினிங்க் அது இதுன்னு வாரத்தில் சிலபல நாட்கள் ஓடிடும். வெள்ளைக்கார நண்பன்,
லிவர்பூலில் இருக்கான் போன் செஞ்சிருந்தான். “எங்க நாட்டில் இனிமேல் எந்தெந்த நாட்டுலேந்தெல்லாம்
வரவிடுவம்னு தீர்மானம் செஞ்சுட்டம், அங்கேந்துதான் விமானப் போக்குவரத்து அனுமதிப்பம்”. நான்
சொன்னேன் “உங்கூரில் தொத்து ஜாஸ்தீன்னு யாரும் வரத் தயாராயில்லை, வேணும்னா என்
ஒண்ணூவிட்ட சின்ன மாமியார் யூஎஸ் போரச்செ லண்டன் வழியாப் பொச்சொல்ரேன்.” திட்டிட்டேன்.
என்ன நினைச்சிண்டிருக்கான்? ஊருக்கே வைத்தியம் செய்ய விவரம் தெரிஞ்ச நாடு எங்களோடது.
இப்படியும் லாக்டவுனில் தேசபக்திய காமிக்க நிறைய அவகாசம்.

என் போனில் சைனா ஆப்ஸ் இல்லை. அன்னைக்கு ஸர்க்கார் பேன் செஞ்சதில் ஏதவாது உண்டோன்னு
பாத்தா ஓலாவத் தவிர வேற ஆப்ஸ் ஒண்ணுமே வச்சுக்கலைன்னு தெரிஞ்சிண்டேன். அதுவும்
தெசபக்தீலே சேர்ந்துண்டு பெருமிதமா இருந்தது.

லாக்டவுனில் என்ன செய்யணும் என்னெல்லாம் செஞ்சு மனசைக் குழப்பிக்கப் பீடாதுன்னு நன்னாவே


புரிஞ்சு வச்சிருக்கென். வாசல்லே யாராவது முகமூடி மாட்டிண்டு பொண்கள் வந்தா கும்பிடு போட்டு
குனிஞ்சு நெத்தியக் காமிச்சுடரது. டெம்பெரேச்சர் எடுத்துக்கட்டும்னு. அன்னைக்கு நெத்தியக்
காமிச்சுட்டு இடதுகை ஆட்காட்டி விரலையும் என்னையும் அறியாம நீட்டியிருக்கேன். “என்ன சார்
அசிங்கமா செய்யரீங்க?” கேட்டா. “ஆக்ஸிஜென் எடுக்கலையா?” “இன்னைக்கு கொண்டு வரலை”.
எனெக்கெப்படி தெரியும்?

ஆனா ஒண்ணு, பேரக் குழந்தைகளை எப்ப பாப்பம், பாத்தாலும் அள்ளி அணைச்சு கொஞ்ச முடியுமான்னு
விசனம் அப்பப்போ தொத்திக்கும். செய்யணும்னா ஒருவேளை ஜனவரி 2021 க்கு அப்பரம்தான்.
அதுக்குள்ளே முகம் மறக்காம இருக்க டெக்னாலஜி துணை. உங்களுக்கெல்லாம் எனக்கு நடந்தாப்போல்
லாக்டவுனில் நடந்ததான்னு தெரியலை. அடிக்கடி என்னை பெத்துப் போட்டவா ஞாபகம் வந்தது. வந்த
நினைப்பு கூடவே இருந்து வாட்டித்து.

தனியா கூட்டுக் குடும்பமா இல்லாம லாக்டவுனில் பெரீய வீட்டில் ரெண்டே பேர் எப்பவோ ஒருக்கா
சினிமாவில் பாடல் காட்சியில் மட்டுமே வர ஸ்லோமோஷணில் நாப்பூரா வாழ்ந்துண்டு இப்படி தத்துப்
பித்துன்னு பதிவு போட்டுண்டு இருந்தா நிறைய சோகமான எண்னங்கள் வந்து சூழ்ந்துக்க வாய்ப்பு
உண்டு. அதுக்குத்தான் மனசை தெம்பா வச்சுக்க உடற்பயிற்சி, சுப்ரமனிய புஜங்கம், காயத்ரீன்னும், ரெம்ப
டவுனா இருந்துட்டா நாலைக்கு என்ன செய்யலாம்னு சிந்தனைகளை வளர்த்துண்டு இல்லாத ஒரு சில
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திண்டு நீ எத்தினி மாசம் வேணும்னாலும் லாக்டவுனை நட்டத்திக்கோ, நான்
என்னை பைத்தியம் பிடிக்காம பாத்துண்டுடுவேன்னு கெத்தா இருந்தவனுக்கு எல்லாம் கூடி வரச்சே
அன்லாக்குன்னு அன்னவுன்ஸ் செஞ்சுட்டான்.

இப்ப அன்லாக்குக்குன்னா தயார் செஞ்சுக்கணும்? செஞ்சிண்டு கதை சொல்ல வரேன்.

You might also like