You are on page 1of 1

Patai kilithu paru voosi thanai parunthu eduthu

Muta churuti en moikulalal kayil voon kuduthu

Kati iruntha gana mayakari than kamamelam vitu piriavenro

Inganeh sivan meendathuveh


”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”

என்று எழுதப்பட்டிருக்க, திருவெண்காடருக்கு ஏதோ சுரீர் என்று உரைத்தது. உடனே சென்று, அந்த
மூட்டைகளிலிருந்த விராட்டித் துண்டுகளை உடைத்துப் பார்க்கிறார் திருவெண்காடர். ஒவ்வொரு விராட்டியிலும்,
பொன்னும், முத்தும், பவளமும் பதித்து வைக்கப் பட்டிருந்தது தெரிய வருகிறது. மகன் மருதவாணரும் பெரும்
பொருளீட்டி இருப்பதையும், அவற்றைப் பத்திரமாகக் கொண்டுவர வேண்டி விராட்டியில் மறைத்துக் கொண்டு
வந்துள்ளார் என்பதையும் உணர்கிறார் திருவெண்காடர். அந்தப் பொருட்களுடன் கூடி, காதறுந்த ஊசியையும்
உற்றுப் பார்க்கிறார்.

மனிதன் எவ்வளவுதான் பொருளீட்டினாலும் கடைசியில் எதற்கும் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில்


கொண்டு செல்ல முடியாது என்ற தத்துவத்தை அந்தக் கணத்தில் உணர்கிறார். உணர்ந்த மாத்திரத்தில் விரக்த
கதியில் ஞானம் பெறுகிறார் திருவெண்காடர். தனது இந்த உயர்வான அனுபவத்தை எவ்வளவு அழகான தமிழில்,
தத்துவம் பொங்கக் கூறுகிறார் கேளுங்கள்;

பட்டைக் கிழித்துப் பருவூசி தன்னைப் பரிந்தெடுத்து

முட்டச் சுருட்டியென் மொய்குழலாள் கையின் முன்கொடுத்துக்

கட்டியிருந்த கனமாயக்காரி தன் காமமெல்லாம்

விட்டுப் பிரியவென்றோ இங்கனே சிவன் மீண்டதுவே!!!

தனது காம்ய வாழ்க்கையின் முக்கிய காரணியான மனைவியின் கையாலேயே அந்தக் காதறுந்த ஊசி
தரப்பட்டதற்குக் காரணம் இருப்பதாக அவருக்கு விளங்குகிறது. ஆசை வயப்படும் மேம்போக்கான வாழ்க்கை
விடுத்து, பார்ப்பது எது என்பதைப் பார்க்கத் தூண்டும் ஞான மார்க்கச் சிந்தனையில் ஆள்படுத்த வேண்டும்
என்பதே அதன் நோக்கம் என்று முழுவதுமாக உணர்கிறார் திருவெண்காடர். உணர்ந்த மாத்திரத்தில்
ஞானமெய்துகிறார். அதுவரை செல்வச் செழிப்பில் கொழித்து சுக போகங்களை அனுபவித்து மகிழ்ந்த
திருவெண்காடர், அவை அனைத்தையும் துறந்து இடுப்பில் கட்டிய ஒரு காவித் துண்டுடன் துறவறம்
மேற்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் ஞான மார்க்கச் சிந்தனைகளைத் தனது அழகானத் தமிழ்க்
கவிதைகளின் மூலம் உலகிற்கு வழங்கினார்.

அதன் பிறகு பற்றற்று வாழ்ந்து மனித சமுதாயத்திற்குப் பல விதங்களிலும் மெஞ்ஞானத்தை கவிதை வடிவில் பல
காலம் வழங்கியவர் பட்டிணத்தார் எனும் திருவெண்காடர். முதல்முறை படிக்கையில் சற்றுக் கடினமாகத்
தோன்றினாலும், தொடர்ந்து படிப்பின் வற்றாத இன்ப ஊற்று என்பதை உணரலாம். பட்டிணத்தார் எனும் தத்துவ
ஞானி தோன்றி மனித குலத்தை ரட்சித்த மொழியான தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நமக்கு
தமிழனென்று சொல்லத் தலை நிமிர வேண்டுமல்லவா!!!

You might also like