You are on page 1of 15

ஓம்.

ஆதிசங்கரர் அருளிய தென்முகக் கடவுள் துதி

(தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்)

தமிழில்: பத்மன்

-=-=-=-=-=-=-=-=-=

அத்வைத

தத்துவத்தை புனர்நிர்மாணம் செய்த ஸ்ரீஆதிசங்கரர், சிவபெருமானின்


அம்சமானவர். யாராலும் தோற்றுவிக்கப்படாத பெருமை வாய்ந்த
சனாதன தர்மத்தைப் பின்பற்றியோரிடையே, மறைஞானமாகிய
வேதத்தின் உட்பொருளை உணராமல் வெறும் சடங்குகளை
வலியுறுத்தும் மீ மாம்சை முக்கியத்துவம் பெற்ற காலகட்டத்தில்;
இக்காரணத்தால் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் மக்களிடையே
செல்வாக்கு பெற்ற சூழ்நிலையில், உபநிஷதங்களின் துணைகொண்டு
வேதாந்த ஒளிபாய்ச்சி ஹிந்து மதத்துக்குப் புத்துயிர் ஊட்டியவர்
ஸ்ரீஆதிசங்கரர். தன்னுள் இறைவனைக் காணும் அனுபூதியை
அனைவருக்கும் போதித்தவர். ஆண்டவனுக்கு கட்சி கட்டாமல்,
பேதமின்றி அனைத்துக் கடவுள்களையும் போற்றியவர். ஜீவாத்மா -
பரமாத்மா ஐக்கிய தத்துவத்தை நிலைநாட்டியவர்.

பிரும்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் (உரை) எழுதி, வேதாந்த விசாரணையை


மீ ண்டும் தொடங்கிவைத்தவர் ஸ்ரீஆதிசங்கரர். குணபேதமற்ற நிர்குண
வடிவாகிய ஆண்டவனை வலியுறுத்தியபோதிலும், பாமர மக்களின்
ஆன்மீ க முன்னேற்றத்துக்காக சுகுண (நற்குணம் பொருந்திய
உபாசனைத் தெய்வங்களின்) வழிபாட்டை ஆதரித்து ஏராளமான
ஸ்தோத்திரங்களை இயற்றியவர். ஞானக்கடலாகிய ஸ்ரீஆதிசங்கரர்
அருளிய இந்த ஸ்தோத்திரங்கள், மனிதனின் ஆன்மீ கத் தேடலுக்குச்
சிறந்த வழிகாட்டிகள். அவற்றுள் ஞானகுருவாகிய இறைவனைத்
துதிக்கும் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், ஆன்மீ க அன்பர்களுக்கு
அருட்பெரும் பொக்கிஷம்.

இந்த உலகம் வெறுமை அல்ல ஆன்ம மயமானது என்பதையும்,


உயிரினங்களுக்குள் உறையும் அந்த ஆன்மாவின் தன்மை குறித்தும்,
ஆன்மாவானது அனைத்துமாகி நிற்கும் அந்த ஏக இறைவனின்
பிரதிபலிப்புதான் என்பதையும் தெளிவாக விளக்குகிறது
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்.

(குறிப்பு : சிவம், சங்கரன் ஆகிய சொற்களில் வரும் ச என்ற ஒலியைக்


குறிக்க, ச Õ என்ற எழுத்து இந்த நூலில் பயன்படுத்தப்படுகிறது. இந்த
ஒலி ஸ, ஷ ஆகியவற்றுக்கு இடைப்பட்டது. இதேபோல், $ குறி உள்ள
இடங்களில் ஒரு மாத்திரை கூட்டி ஒலிக்க வேண்டும். உதாரணத்துக்கு,
கேவல: + அஹம் = கேவலோஹம் என்று சம்ஸ்கிருதத்தில் கூட்டுச்
சொல் ஆகும். இவ்வாறு இணையும்போது அ, உ சேர்ந்து தோன்றிய ஓ,
ஒரு மாத்திரை கூட்டி ஒலிப்பதால் கேவலோ$ஹம் என்று
குறிக்கப்படுகிறது.

: என்ற குறியீடு விஸர்க்கம் ஆகும். இது, ஹ என்ற ஒலிப்பை


உடையது.)

காப்புச்செய்யுட்கள்

ஓம் யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

யோ வை வேதாம்ஸ்ரவ ப்ரஹிணோதி தஸ்மை/

தம்ஹ தேவம் ஆத்மபுத்தி ப்ரகாசம்

முமுக்ஷர்வை சரணமஹம் ப்ரபத்யே//


ஆதியில் பதுமனை படைத்தவர் எவரோ அவருக்கு மறைபொருள்
உரைத்தவர் எவரோ ஆத்மவொளி யாயென்னுள் உறைபவர் எவரோ
அவர்பாதம் பணிந்தேன் விடுதலை வேண்டி.

பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் பதுமனைப் (தாமரையில் வற்றிருக்கும்



பிரும்மனை) படைத்தவரும், அவருக்கு வேதத்தின் ரகசியங்களை
உபதேசித்தவரும், எனக்குள்ளே (ஒவ்வொருவருக்கும் உள்ளே) ஆத்மா
குறித்த அறிவொளியை பிரகாசிக்கச் செய்பவருமான அந்தப்
பரம்பொருளின் (தக்ஷிணாமூர்த்தியாகிய சிவனின்) பாதங்களை, பிறவித்
தளையிலிருந்து விடுதலை பெற விரும்பி சரணடைகிறேன்.

மௌன வ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம் யுவானம்

வர்ஷிஷ்டாந் தேவஸத் ருஷிகணை: ஆவ்ருதம் ப்ரஹ்ம


நிஷ்டை:/

ஆசார்யேந்த்ரம் கரகலித் சின்முத்ரம் ஆனந்த ரூபம்

ஸ்வாத்மாராமம் முதிதவதனம் தக்ஷிணாமூர்த்தி மீ டே// ....(1)

ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

மௌனத்தின் விளக்கத்தால் பரம்பொருள் தத்துவத்தை பறைசாற்று


மிளைஞன் முதுபெரும் ஞானிகள் யோகிகள் சீடராய் சூழப்படும்
முனிவன் ஆசான்களின் தலைவன் அறிவொளி முத்திரையன் ஆனந்த
வடிவோன் ஆத்மாவின் ரசிகன் புன்சிரிப்பு வதனன் தென்முகத்தான்
போற்றி.

ஓம் அமைதி அமைதி அமைதி.------(1)


மௌனமான விளக்கத்தாலேயே பரம்பொருள் தத்துவத்தை பிரகடனம்
செய்பவரும், என்றும் இளைஞரும், மிகவும் வயது முதிர்ந்தவர்களான
ரிஷிகள், யோகிகள் ஆகியோரை சீடர்களாய்ப் பெற்றவரும்,
ஆசார்யர்களுக்கெல்லாம் தலைவராக விளங்குபவரும், அறிவின்
ஒளியாக விளங்கும் சின்முத்திரை (ஜீவாத்மா-பரமாத்மா ஐக்கிய
முத்திரை) காட்டுபவரும், எப்போதும் ஆனந்த வடிவானவரும், தன்
ஆன்மாவிலேயே ரசித்து திளைப்பவரும், புன்முறுவல்
முகத்தையுடையவருமான தக்ஷிணாமூர்த்தியைப் போற்றுகிறேன்.

ஸ்தோத்திரம்

விச்வம் தர்பண த்ருச்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்

பச்யன் ஆத்மனி மாயயா பஹிரிவோத் பூதம் யதா நித்ரயா/

ய: ஸாக்ஷாத் குருதே ப்ரபோதஸமயே


ஸ்வாத்மானமேவாத்வயம்

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே//


-----(`1)

ஆடியில் நோக்கிடும் சூழல்போல் உள்ளே வெளியுறும் உலகம்


தன்னுள் கண்டிடும் கனவில் வெளியோ உள்கொடு தோற்றம் உண்மை
ஒன்றுதான் பிரும்மம் ஆத்மா அதனுடை பிம்பம் அன்புடன் போதித்த
குருவே தென்முகக் கடவுளே போற்றி. ....(1)

இந்த உலகம், கண்ணாடிக்குள் பிரதிபலிக்கின்ற நகரம் போன்றது.


கண்ணாடிக்குள்தான் நாம் பார்க்கிறோம், ஆனால் அதில் தெரிபவை
வெளிப்புறத்தில் உள்ளவைதாம் அல்லவா? மேலும், நாம் காண்கின்ற
கனவிலோ, வெளியில் நாம் எங்கோ இருப்பதைப்போல் தோன்றினாலும்,
அது உள்ளே இருக்கின்ற மனத்தின் வேலை. இதுபோல் பிரும்மம்
ஆகிய கடவுள் ஒன்று மட்டுமே உண்மையானது. அது இரண்டற்றது.
அனைத்துமாகி நிற்பது. ஆத்மா என்று நமக்குள்ளே நாம் உணர்வது,
உண்மையில் அந்த பிரும்மத்தின் பிரதிபலிப்பே. சுயஅறிவு
பிரகாசிக்கும்போது இந்த உண்மை உணர்ந்துகொள்ளப்படும். அந்த ஆத்ம
அறிவொளியை எனக்கு அருளியவரும் அதுபற்றி போதித்த
குருவுமாகிய தென்முகக் கடவுளே (தக்ஷிணாமூர்த்தியே) உனக்கு எனது
பணிவான வணக்கங்கள்.

பீஜஸ்ய அந்தரிவாம்குரோ ஜகதிதம் ப்ராங் நிர்விகல்பம் புன:

மாயாகல்பித தேசகால கலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்/

மாயாவவ
ீ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீ வ ய: ஸ்வேச்சயா

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தேய நம இதம் ஸ்ரீ


தக்ஷிணாமூர்த்தயே// .......(2)

விதையுள் இருக்கும் மரம்போல் அவனுள் கிடந்த உலகம் அவனது


மாயா சக்தியால் எடுத்தது பலப்பலத் தோற்றம் தன்னிச்சை
யாலனைத்தும் படைத்த அவனோ மாபெரும் யோகியந்த அன்புடன்
போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி..................................(2)

எப்படி மரமானது விதைக்குள் அடங்கி உள்ளதோ, அதுபோல்


பரம்பொருளாகிய அவனுக்குள் இந்த உலகம் அடங்கிக் கிடந்தது.
அவனுடைய மாய சக்தியால் பல்வேறு தோற்றங்கள் கொண்டதாக
இந்த உலகம் வெளிப்பட்டது. தனது விருப்பத்தின் மாத்திரத்திலேயே
இவை அனைத்தையும் படைத்த, அந்தக் கடவுள் மிகப் பெரும் ஆற்றல்
நிறைந்த யோகி. அந்த மாபெரும் யோகியும், இதுகுறித்து எனக்கு
போதித்த குருவுமாகிய தென்முகக் கடவுளே உனக்கு எனது பணிவான
வணக்கங்கள். ......(2)
யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகம் அஸத்கல்பார்தகம்
பாஸதே

ஸாக்ஷாத் தத்வமஸீதி வேதவசஸா யோ போதயத்யாச்ரிதான்/

யத்ஸாக்ஷாத் கரணாத் பவேந்ந புனராவ்ருத்திர்


பவாம்போநிதௌ

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ


தக்ஷிணாமூர்த்தயே// .....(3)

அவனது ஒளியால் பொய்யுலகு தெரிகிறது உண்மைபோல் தோற்றம்


அவனே போதித்தான் உண்மையை நீயே அதுவெனும் மறைபொருளை
அதனை உணர்ந்தால் மட்டுமே அறுந்திடும் பிறவிச் சுழற்சி அன்புடன்
போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி. ............(3)

பொய்யாகிய இந்த உலகம், அந்தக் கடவுளின் ஒளியால்தான்


உண்மைபோல் தோற்றம் கொடுக்கிறது. வேதத்தின் ரகசியமாகிய ’நீயே
அது’ (தத்வமஸி) என்னும் உண்மையை அந்தக் கடவுளே
கருணையுடன் போதித்தான். அந்த உண்மையை அறிந்து, புரிந்து
கொண்டால் மட்டுமே மீ ண்டும் மீ ண்டும் பிறந்து மடிகின்ற சம்சார
பந்தம் அறுந்துபடும். அந்த உண்மையை எனக்கு போதித்த குருவாகிய
தென்முகக் கடவுளே, உனக்கு எனது பணிவான வணக்கங்கள். ............(3)

நானாச்சித்ர கடோதரஸ்தித மஹாதீப ப்ரபாபாஸ்வரம்

ஜ்ஞானம் யஸ்ய து சக்ஷுராதி கரணத்வாரா பஹி ஸ்பந்ததே/

ஜானாமீ தி தமேவ பாந்த மனுபாத் யேதத் ஸமஸ்தம் ஜகத்

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ


தக்ஷிணாமூர்த்தயே// ...........(4)
பல்துளை பாண்டத்து உள்ளிட்ட விளக்கு பல்லொளி பெருக்கும்
அவனுடை ஒளியே அனைத்திலும் ஒளிர்ந்து பார்வையுமாகும்
அறிவேன் என்ற விழிப்புங்கூட அவனது அறிவே கொடுக்கும்
அன்புடன்போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி. ...........///(4)

ஒளி பொருந்திய விளக்கின் மீ து பல துளைகள் நிறைந்த சட்டியைக்


கவிழ்த்து வைத்தால், அந்தத் துளைகளின் மூலம் பல்வேறு
ஒளிக்கற்றைகள் வெளிப்படும். அதுபோல் நமது பார்வை உள்ளிட்ட
அனைத்து ஒளிகளும், அவனது (ஆண்டவனது) பிரதிபலிப்புகளே. அவரது
பிரகாசம்தான் அனைத்திலும் ஒளிர்கிறது. எனக்குத் தெரியும் என்கின்ற
அறிவுகூட, அவரது ஞானத்தால் கிடைத்த விழிப்புணர்வுதான். அந்த
ஞானத்தை அளித்தவரும், அதுபற்றி போதித்த குருவுமாகிய தென்முகக்
கடவுளே உனக்கு எனது பணிவான வணக்கங்கள். ..........(4)

தேஹம் ப்ராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம்


விது:

ஸ்த்ரீபாலாந்த ஜடோபமாஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம்


வாதின:/

மாயாசக்தி விலாஸ கல்பித மஹா வ்யாமோஹ


ஸம்ஹாரிணே

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ


தக்ஷிணாமூர்த்தயே// .........(5)

உடல்மூச்சு ஐம்புலன் செய்கைச்சினை மாறுபடு புத்தியோடு


வெறுமைநான் பேதைபால ரந்தகர் மூடர்போல கலக்கமுடை அறிவரிது
மொழிவர் மாயசக்தி காட்டிடும் மயக்கமிந்த அறியாமை
அழிப்பதுடனதனை அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே
போற்றி. ...........(5)

காண்கின்ற உடல், மூச்சுக்காற்று, கண்-காது உள்ளிட்ட ஐம்புலன்கள்,


செயல்களைச் செய்ய உதவும் கை-கால் உள்ளிட்ட உறுப்புகள், அடிக்கடி
மாறுபடுகின்ற புத்தி என்று கூறப்படுகின்ற உணர்வு ஆகியவற்றுடன்
ஒன்றுமில்லாத வெறுமையை (சூன்யம்) ஆத்மா என்று சிலர் கூறுவர்.
அவர்கள் கூறுவது பெண்கள், சிறு குழந்தைகள், கண்பார்வை
யற்றவர்கள் மற்றும் மனக்கலக்கம் உடைய மனிதர்களின் வாதம்
போன்றது. (இந்த இடத்தில் பெண்கள், குழந்தைகள்,
பார்வையற்றவர்களை ஸ்ரீஆதிசங்கரர் குறைத்துக் கூறுவதாகக்
கருதக்கூடாது. இயற்கையிலேயே இவர்கள் அனைவரும் ஒருவகையில்
பலவனர்களாக
ீ இருப்பதால், அவர்களது ஆற்றல் முழுமையற்றது என்ற
பொருளில்தான் இந்தப் பதத்தை ஸ்ரீஆதிசங்கரர் பயன்படுத்தியுள்ளார்.)
மாயை காரணமாக நமக்குத் தோன்றும் இந்த அறியாமையை அந்தப்
பரம்பொருளே அழிக்கின்றான். அவ்வாறு அழிப்பதுடன், அதுபற்றி
போதித்த குருவுமாகிய தென்முகக் கடவுளுக்கு எனது பணிவான
வணக்கங்கள். ......................(5)

ராஹுக்ரஸ்த திவாகரேந்து ஸத்ருசோ மாயாஸமாச்சாதனாத்

ஸனமாத்ர: கரணோபஸம்ஹரணதோ யோபூத் ஸுஷப்த:


புமான்/

ப்ராகஸ்வாப்ஸமிதி ப்ரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ


தக்ஷிணாமூர்த்தயே// ........(6)

கிரகணம் பிடித்தாலும் சூர்யசந்திரர் உண்மையில் ஒளியிழப் பதில்லை


உறக்கத்தில்உணர்வு மனதுதொடர் பறுந்தாலும் அறிவாற்றல்
மறைவதில்லை உறக்கத்தை விழித்தவன் அறிவதுபோல் முன்மாயை
அறிவான் ஆத்மஞானி அன்புடன் போதித்த குருவே தென்முகக்
கடவுளே போற்றி. ........... (6)

கிரகணத்தின்போது ’ராகு’ எனப்படும் சாயா கிரகத்தால் (நிழல்


கிரகத்தால்) சூரியன், சந்திரன் ஆகியவை மறைக்கப்பட்டு, இருள்
சூழ்கின்றபோதிலும் உண்மையில் அவை ஒளியை இழந்து
விடுவதில்லை. தூங்குகின்றபோது நமது ஐம்புலன்கள் மற்றும் மனத்தின்
தொடர்பு துண்டிக்கப்படுகின்றபோதிலும், அறிவாற்றல் நம்மை விட்டு
விலகிவிடுவதில்லை. தூங்கி எழுந்தவனுக்கு முன் நடந்த நிகழ்வுகள்
தாமாகவே நினைவுக்கு வருகின்றன. அதுபோல், சுயத்தைப் பற்றிய
ஆத்ம ஞானம் பெற்றவன், முன்பு தமக்கிருந்த மாயை ஆகிய
அறியாமை பற்றி அறிந்து கொள்கிறான். அந்த அறியாமையைக்
களைந்து, ஆத்ம அறிவை போதித்த தென்முகக் கடவுளே உனக்கு எனது
பணிவான வணக்கங்கள். ......,,,(6)

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷூ ததா ஸர்வாஸ்வ


வஸ்தாஸ்வபி

வ்யாவ்ருத்தா ஸ்வனுவர்தமானமஹ மித்யந்த: ஸ்புரந்தம்


ஸதா/

ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ


தக்ஷிணாமூர்த்தயே// ........(7)

உடலுக்கு உண்டாம் குழந்தை முதலாம் பல்நிலை தனிலும் மனதுக்கு


உண்டாம் விழிப்பு முதலாம் பல்நிலை தனிலும் ஒருபோல் எப்போதும்
வற்றிருந்து
ீ ஞானமுத்திரை காட்டிடும் இறையே அன்புடன் போதித்த
குருவே தென்முகக் கடவுளே போற்றி. ............(7)
குழந்தை முதல் இளைஞர், முதியவர் என நமது உடல் பல வடிவ
மாறுதல்களை அடைந்தாலும் விழிப்பு, உறக்கம் என நமது மனம் பல
நிலைகளில் இருக்கின்ற போதிலும், நமக்குள்ளே உறைகின்ற அந்தப்
பரம்பொருள் எவ்வித மாறுதலையும் அடைவதில்லை. அந்தப்
பரம்பொருள், ஆத்மா குறித்த மிக உயர்ந்த அறிவை,
தமதுஞானமுத்திரையாலேயே (சின்முத்திரையால்) உணர்த்துகிறார்.
அவ்வாறு உணர்த்துவதுடன், அதுகுறித்து போதித்த குருவாகிய
தென்முகக் கடவுளை உனக்கு எனது பணிவான வணக்கங்கள். .........(7)

விச் வம் பச்யதி கார்யகாரணதயா ஸ்வஸ்வாமி ஸம்பந்தத:

சிஷ்யாசார்யதயா ததைவ பித்ரு புத்ராத்யாத்மனா பேதத:/

ஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ


தக்ஷிணாமூர்த்தயே// .....(8)

கனவு விழிப்பு இருநிலையில் காரண காரிய உறவுகளால் தலைவன்


தொண்டன் ஆசான் சீடன் தந்தை மகனாம் உலகின் அனுபவம்
பல்பேதம் அவனுடை மாயை ஆற்றலே அன்புடன்போதித்த குருவே
தென்முகக் கடவுளே போற்றி. .....(8)

விளைவு(காரியம்), அதற்கான அடிப்படை (காரணம்) ஆகிய இரண்டின்


உறவுகளால், கனவு மற்றும் விழிப்பு ஆகிய இருநிலைகளிலும் இந்த
உலகம் பல்வேறு அனுபவங்களைக் காண்கிறது. தலைவன்-தொண்டன்,
குரு-சிஷ்யன், தந்தை-மகன் என்று பல்வேறு வகைப்படும் இந்த
அனுபவங்கள் அனைத்தும் அந்தப் பரம்பொருளின் மாயா சக்தியால்
ஏற்படுபவையே. அந்த மாயை குறித்து போதித்த குருவாகிய தென்முகக்
கடவுளே உனக்கு எனது பணிவான வணக்கங்கள். ........(8)
பூரம்பாம்ஸ்யனலோனிலோ அம்பரமஹார்நாதோ ஹிமாம்சு:
புமான்

இத்யாபாதி சராசராத்மகமிதம் யஸ்யைவ மூர்த்யஷ்டகம்/

நான்யத் கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத் பரஸ்மாத்


விபோ:

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ


தக்ஷிணாமூர்த்தயே// .........(9)

புவிநீர் தீவளி ஆகாயம் சூரியன் சந்திரன் ஜீவாத்மா அசையும்அசையா


பிரபஞ்சத் தினெட்டும் அவனுடை வெளிப்பாடாம் பிரும்மம் அவனே
சத்தியம் அறிந்தால் ஒடுங்கும் ஆணவம் அன்புடன் போதித்த குருவே
தென்முகக் கடவுளே போற்றி. .................(9)

பூமி, நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் ஜீவாத்மா ஆகிய
அசையக்கூடியதும் அசைவற்றதுமான இந்தப் பிரபஞ்சத்தின் எட்டுவித
வடிவங்களும், அந்தப் பரமாத்மாவின் நுண்ணிய வெளிப்பாடுகளே.
(இந்தப் பிரபஞ்சம், ஒரேநேரத்தில் அசையக்கூடியதாகவும் அதாவது சரம்
ஆகவும், அசைவற்றதாகவும் அதாவது அசரம் ஆகவும் இருக்கிறது.
அதாவது, அசையக்கூடிய மற்றும் அசைவற்ற விஷயங்களின்
கலவையாகத்தான் இந்தப் பிரபஞ்சம் இருக்கிறது. அதனால்தான் இதற்கு
சராசரம் (சரம் + அசரம்) எனப் பெயர் வந்தது.) அந்தப் பரமாத்மா மட்டுமே
நிலைத்திருக்கக் கூடியவர்; வேறு எதுவும் 'நிலையற்றது' என்பதை
அறிந்துகொள்ளும்போது, அவரது கருணையால் இந்த வெளிப்பாடுகளும்
அதுசார்ந்த ஆணவமும் மறைந்துவிடும். அவ்வாறு மறையச்
செய்பவரும் அதுகுறித்து எனக்கு போதித்த குருவுமாகிய தென்முகக்
கடவுளே, உனக்கு எனது பணிவான வணக்கங்கள்.------------'''''(9)

ஸர்வாத்மதத்வமிதி ஸ்புடீக்ருதமிதம் யஸ்மாதமுஸ்மின்


ஸ்தவே
தேனான்ய ச்ரவணாத் ததர்த மனனாத் த்யானாச்ச
ஸங்கீ ர்தனாத்/

ஸர்வாத்மத்வ மஹாவிபூதி ஸஹிதம் ஸ்யாதீத் ஈச்வரத்வம்


ஸ்வத:

ஸித்தயேத் தத் புனரஷ்டதா பரிணதம்ச ஐச்வர்யமவ்யாஹதம்


//..................(10)

ஆத்மனின் பரந்த தன்மை இங்கே பகரப் பட்டது இதனைக் கேட்போர்


படித்தோர் உட்பொருள் இருத்துவோர் அடைவர் எங்கும் வியாபிக்கும்
பேற்றையும் எல்லாம் வல்ல இறைநிலையும் எட்டின் சாரமும்
அவராவர் முழுமதியும் மகிழ்வும் எட்டுவர் ..................(10)

எல்லாவற்றிலும் வியாபித்து நிற்கும் ஆத்மனின் (அதாவது ஒரே


ஆத்மாவாகிய பரமாத்மாவின்) தன்மை இந்தப் பாடலில் தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது. இதனைப் படிப்போர், படிப்பதைக் கேட்போர் மற்றும்
இதன் உட்பொருளை உள்ளிருத்தி தியானிப்போர் அந்த ஆத்மனின்
எல்லாவற்றி¢லும் வியாபிக்கும் இயற்கையான ஆற்றலை அடைவர்.
வேற்றுமையற்ற ஒருமையை முழுமையாக உணர்வார்கள். இந்தப்
பிரபஞ்சத்தின் அதிபதி தாமேதான் என்ற எல்லாம் நிரம்பப் பெற்ற
இறைநிலையையும் எட்டுவார்கள். (எவ்வாறெனில், எவனொருவன் தான்,
தனது என்ற அறியாமை, மாயை, ஆணவம் அழிந்து, அந்தக் கடவுளின்
பிரதிபிம்பமே தான் என்பதை உணரும்போது, அவன் அந்தப்
பரம்பொருளுடன் ஐக்கியப்பட்டு விடுகிறான்.) எட்டு வித
வெளிப்பாடுகளைக் கொண்ட (முன்பே விளக்கப்பட்டுள்ளது) இந்தப்
பிரபஞ்சத்தின் அடிப்படையாகவும் அவர்கள் ஆவார்கள்.
இறைநிலையுடன் ஒருமைப்படுவதால், எல்லையற்ற அறிவையும்,
அளவில்லா ஆன்மீ க மகிழ்ச்சியையையும் அவர்கள் அடைவார்கள்......
(10)
நிறைவுச் செய்யுட்கள்

10 ஸ்லோகங்கள் கொண்ட தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தை


பாராயணம் செய்த பிறகு அல்லது வாசித்த பிறகு சில
ஸ்லோகங்களைக் கூறி நிறைவு செய்வது வழக்கம். அவற்றில் முக்கிய
ஸ்லோகங்களாவன:

சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா குருர்யுவா/

குரோஸ்து மௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்ன


ஸம்சயா//

ஆலமரத் தின்கீ ழ் அதிசயம் காண ீர் அருங்கிழவோர் சீடராம் ஆசான்


இளைஞராம் மௌனமே ஆசான் மொழியாகும் சீடருக்கோ முற்றிலும்
தீர்ந்தது ஐயம்.

ஆலமரத்தின் கீ ழே அதிசயத்தைப் பாருங்கள்! வயதான ரிஷிகளும்,


முனிவர்களும் சீடர்களாய் அமர்ந்திருக்க, இளமையானவர் அவர்களது
குருவாக வற்றிருக்கிறார்.
ீ அதைவிட அதிசயமாய், குருவோ எந்த
உபதேசமும் செய்யாமல் மௌனமாய் இருக்க, சீடர்களுக்கோ எவ்வித
சந்தேகமும் எழவில்லை. ஞானம் குறித்து முக்கியமான 2 விஷயங்கள்
இங்கு குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.

ஒன்று, ஞானமானது வயதின் காரணமாக வருவதல்ல; தியானம், தவம்,


நற்சிந்தனைகளால் இளைய வயதிலும்கூட கைகூடுவது. அவ்வாறு
ஞானம் பெற்ற குருவை வயது வித்தியாசம் பாராமல் சரணடைய
வேண்டும். இரண்டாவது, எல்லா ஞானத்திற்கும் எல்லையாக இருப்பது
மௌனம். இதனை சற்று விளக்கலாம். ஆராயத் தொடங்கும்போது பல
சந்தேகங்கள் எழுகின்றன. அதைப் பற்றிப் பலரிடம் விசாரிக்கிறோம்.
நாமும் பல கேள்விகளை எழுப்பி அலசி ஆராய்கிறோம். உண்மை
தெரிந்தபின் வார்த்தைகளும், சந்தேகங்களும் அடங்கிவிடுகின்றன.
அமைதியே கோலோச்சுகிறது. இதனைத் தமிழறிஞர்கள், ஆன்றவிந்து
அடங்குதல் என்று கூறுவார்கள். உண்மையை அறிந்துகொள்ளும் ஞானி,
அலட்டிக் கொள்வதில்லை, அந்த அமைதியிலேயே லயித்து விடுகிறான்.
இதனைத்தான் சித்தர்கள், 'சும்மா இரு' என்று உபதேசித்திருக்கிறார்கள்.
மேலும், உபதேசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கப்படுவதல்ல;
அதன் உட்பொருளை உணர்த்துவதே. ஆகவேதான் உண்மையின்
சூட்சுமத்தை பரம்பொருளாகிய அந்த இறைவன் மௌனமாய்
உபதேசிக்க, சீடர்களும் முற்றுணர்ந்து, வணங்கிய வாயினராக
அமர்ந்திருக்கிறார்கள்.

வடவிடபிஸமீ பே பூமிபாகம் நிஷண்ணம்

சகலமுனிஜனானாம் ஞானதாதாரமாராத்/

த்ரிபுவனகுருமீ சம் தக்ஷிணாமூர்த்திதேவம்

ஜனனமரண துக்கச்சேததக்ஷம் நமாமி//

ஆலமரத்து அடிவற்று
ீ தியானிப்பார் நம்மீ து அளித்தருள்வார் ஞானத்தை
அண்டிடும் அடியோர்க்கு மூவுலகின் குருவசன்
ீ தென்முகத் தேவன்
மூள்பிறவித் துயரறுக்கும் கோவே போற்றி...

ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, சகல ஜீவராசிகள் குறித்தும்


தியானித்துக் கொண்டிருப்பவர் (தியானம் என்பதன் பொருள்,
இடைவிடாது நினைப்பது, உட்பொருளை ஊடுருவி அறிவது. எனவே,
பரம்பொருள் சிவனாரின் தியானம், மனிதர் உள்ளிட்ட அனைத்து
ஜீவராசிகளின் இயக்கம் மற்றும் நலன்கள் குறித்தது), தம்மை அணுகும்
முனிவர் முதலிய அடியவர்களுக்கு ஞானத்தை உபதேசித்து
அருளுபவர், மூன்று உலகங்களுக்கும் (பூலோகம், பாதாள லோகம்,
மேலுலகம் ஆகிய 3 உலகங்கள்; பூ, புவ, சுவ என்று சுட்டப்படும் 3
உலகங்கள்) குருவாகவும் ஈசனாகவும் விளங்குபவர், தெற்கு திசை
நோக்கி அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தியாகிய கடவுள். பிறப்பு - இறப்பு
என்னும் சம்சார சுழற்சியாகிய பெருந்துயரத்தை அகற்றிக் காப்பாற்றும்
அந்தக் கடவுளைப் போற்றுகின்றேன்.

சிவமயம்

-=-=-=

பத்மன்

(நா. அனந்த பத்மநாபன்),

பி.ஜி. மாஸ்கேசில்

46, திரௌபதி அம்மன் கோவில் தெரு,

உள்ளகரம், சென்னை - 600 091.

தொலைபேசி: 044-65349635

செல்பேசி: 9941890141

You might also like