You are on page 1of 3

SJK(T) KLEBANG, 31200 CHEMOR, PERAK DARUL RIDZUAN

¸¢§ÇÀ¡í ¾Á¢úôÀûÇ¢, 31200 º¢õ§Á¡÷, §Àáì.


KOD SEKOLAH : ABD2175 NO. TEL/FAX 05-
2913166
__________________________________________________________________________________

பெற்றோர் / பாதுகாப்பாளர் பார்வைக்கு,


அன்புடையீர்,
பொருள் : பாலர்பள்ளி மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு
வணக்கம், எதிர்வரும் 1 ஜூலை 2020 (புதன்கிழமை) பாலர்பள்ளி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
எனவே பெற்றோர்கள் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன்
கேட்டுக்கோள்கிறோம்.

Ibubapa / penjaga perlu mengambil tindakan seperti berikut:


பாலர்பள்ளி பெற்றோர் / பாதுகாப்பாளர் கடைப்பிடிக்க வேண்டியவை:

1. Memastikan anak atau anak jagaan berada dalam keadaan sihat sebelum hadir ke
prasekolah. Anak atau anak jagaan yang tidak sihat, tidak dibenarkan hadir.
மாணவர்கள் பாலர்பள்ளிக்கு வருவதற்கு முன்பாக ஆரோக்கியமான நிலையில்
இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். ஒருவேளை உடல் நலம் குறைவாக இருப்பின்
பள்ளிக்கு வரவேண்டாம்.

2. Memastikan anak atau anak jagaan menjaga kebersihan diri.


மாணவர்கள் தங்களின் சுய சுத்தத்தை எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும்
என்பதை வழியுறுத்தவும்.

3. Menghantar dan mengambil anak atau anak jagaan mengikut waktu yang ditentukan.
மாணவர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு அனுப்பி விட வேண்டும் மற்றும்
பள்ளி முடிந்த பின் தாமதிக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் அழைத்துச் செல்ல
வேண்டும்.

4. Menggalakkan anak atau anak jagaan memakai pelitup muka. Anak atau anak jagaan
berimuniti badan yang rendah mesti sentiasa memakai pelitup muka manakala anak atau
anak jagaan yang tidak boleh mengurus pemakaian pelitup muka tidak perlu
memakainya.
மாணவர்கள் முகக்கவரியை அணிந்து பள்ளிக்கு வருவது வரவேற்கப்படுகிறது.
மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பின் கண்டிப்பாக
முகக்கவரியை அணிந்து வர வேண்டும். இருப்பினும் முகக்கவரியை முறையாக
பயன்படுத்தத் தெரியாத மாணவர்கள் அதனை அணிந்து வர வேண்டாம்.

5. Mematuhi tatacara pelawat masuk ke primis prasekolah semasa menghantar dan


mengambil anak atau anak jagaan.
பெற்றோர்கள் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பும் மற்றும் பள்ளி முடிந்து அழைத்துச்
செல்லும் வேளையிலும் பள்ளியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மீட்புநிலை நடமாட்டக்
கட்டுப்பாட்டு ஆணையின் (PKPP) விதிமுறைகளை முறையாக பின்பற்றவேண்டும்.

6. Memastikan anak atau anak jagaan tidak membawa beg sekolah dan bekalan makanan
atau minuman (pengecualian diberikan kepada anak atau anak jagaan yang memerlukan
makanan khas dengan kebenaran pihak pentadbir sekolah).
மாணவர்கள் புத்தகப்பை, உணவுப் பொருள்கள் மற்றும் குடிநீரை பள்ளிக்கு எடுத்து
வர வேண்டாம். (மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை இருப்பின், ஆசிரியரிடம்
அனுமதி பெற்ற பின் பெற்றோர்களே உணவை தயாரித்துக் கொடுக்கலாம்).

7. மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தப் பிறகே பெற்றோர் / வாகன


ஓட்டுனர் அவ்விடத்தை விட்டு அகல வேண்டும். பரிசோதனை இடத்தைக் கடந்து
பெற்றோர் பள்ளியினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பரிசோதனைக்குப் பின்
மாணவர்கள் காத்திருக்கும் பகுதியில் கூடல் இடைவெளியில் அமர்த்தப்படுவர்.
ஆசிரியர்களே மாணவர்களை வகுப்பறைக்குக் கொண்டுச் செல்வர். பள்ளி முடிவுறும்
வேளையிலும் மாணவர்கள் காத்திருக்கும் பகுதியில் காத்திருப்பர், பெற்றோர்
அங்கிருந்தே தங்களின் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.

8. உடல்நலத்தைத் தவிர்த்து பள்ளிக்கு அனுப்ப இயலாமைக்கு வேறு ஏதேனும்


காரணங்கள் இருக்குமாயின் வகுப்பாசிரியரிடம் தெரிவிக்கவிக்கவும்.
9. ஒவ்வொரு நாளும் மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படும். மாணவர்கள்
அவர்களின் அமரும் இடத்தில் இருந்தே கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில்
ஈடுபடுபர்.

10. பொது போக்குவரத்தில் (van / car) பள்ளிக்கு வரும் மாணவர்கள் செந்தர இயங்குதல்
நடைமுறையை (SOP) கடைப்பிடிப்பதைப் பெற்றோர் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

பாலர்பள்ளி பெற்றோர்கள் அனைவரும் இதனை படித்துப் புரிந்துக்கொண்டு செயல்படுமாறு


கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

You might also like