You are on page 1of 3

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-15

-
அரசமரத்தை இப்போது வெட்டினால் நாளை மறுபடியும்
துளிர்விட்டிருக்கும். அதேபோல் உடல் உணர்வு அழிவதில்லை.
உணடல் உணர்வு அழியாமல் சமாதி கிடைக்காது.
-
நான் சர்க்கரையாக இருக்க(பிரம்மமாக) விரும்புவதில்லை.
சர்க்கரையை சுவைக்கவே(பக்தன்-பகவான்) விரும்புகிறேன்.
ஐந்து மற்றும் ஆறாம் தளங்களுக்கு இடையே படகைப்போல்
வந்துபோய் விளையாடுவது நல்லது. ஆறாம் தளத்தை கடந்து
ஏழாம் தளத்தில் அதிகநேரம் தங்கியிருப்பதை நான்
விரும்புவதில்லை.
-
நானே இறைவன் என்று நினைப்பது நல்லதல்ல. நான் உடல் என்ற
எண்ணம் இருக்கும்வரை இப்படி நினைப்பது பெரிய தீமையை
தரும். மேல்நோக்கி செல்ல முடியாது படிப்படியாக வீழ்ச்சிதான்
நேரும். இவர்கள் பிறரை ஏமாற்றுகிறார்கள். தங்களையும்
ஏமாற்றிக்கொள்கிறார்கள். தங்கள் நிலையை அவர்களால் அறிய
முடிவதில்லை.
-
ஏனோதானோ என்ற பக்தியினால் இறைவனை அடைய முடியாது.
பிரேமபக்தி ஏற்படாவிட்டால் இறைவனுபூதி கிடைக்காது.
பிரேமபக்திக்கு மற்றொரு பெயர் ராகபக்தி. பிரேமையும்
அனுராகமும் உண்டாகாமல் இறையனுபூதி இல்லை. அவரிடம்
அன்பு ஏற்படாமல் அவரை அடைய முடியாது
-
இவ்வளவு ஜபம் செய்ய வேண்டும், இவ்வளவு உபவாசம் இருக்க
வேண்டும், தீர்த்தயாத்திரை செய்ய வேண்டும், பூஜை செய்ய
வேண்டும் இப்படி பல வழிகளில் இறைவனை வழிபடுவது
வைதீபக்தி. வைதிபக்தி அதிகமானால் ராகபக்தி உண்டாகிறது
-
ராகபக்தி உண்டாகாமல் இறையனுபூதி கிடைக்காது. அவரை
நேசிக்க வேண்டும். இதயம் நூற்றுக்கு நூறு சதவீதம் அவரிடம்
பதியவேண்டும். அப்போது அவரை அடையலாம்.
-
சிலருக்கு ராகபக்தி தானாகவே உண்டாகிறது. குழந்தை
பருவத்திலிருந்தே உள்ளது. அவர்கள் சிறுவர்களாக
இருக்கும்போதே இறைவனுக்காக ஏங்கி அழுவார்கள்.
-
கடவுளிடம் அன்பு ஏற்படுவதற்காக ஜபம்,தபம், உபவாசம்
முதலியவை செய்வது வைதீபக்தி. ராகபக்தி ஏற்பட்ட பிறகு ஜபம்
முதலிய செயல்கள் தாமாகவே நின்றுவிடுகின்றன.
-
வைதீபக்தி உடையவர்களால் இறைவனைப்பற்றிய உண்மைகளை
புரிந்துகொள்ள முடியாது. ராகபக்தி ஏற்பட்டால்
புரிந்துகொள்ளலாம். இறைவனிடம் அன்பு ஏற்படாவிட்டால்
உபதேசங்களை புரிந்துகொள்ள முடியாது.
-
குழந்தைக்கு தாயிடமும், தாய்க்ககு குழந்தையிடமும்,
மனைவிக்கு கணவனிடமும் உள்ள அத்தகையை அன்பு
வேண்டும். இந்த அன்பு, இந்த ராகபக்தி உண்டாகும்போது
மனைவி மக்கள் உற்றார் உறவினர் முதலியவர்களிடம் மாயை
காரணமாக எழும் கவர்ச்சி இருக்காது. தயை இருக்கும்.உலகம்
அன்னிய இடம் என்று தோன்றும்.
-
வீடு கிராமத்தில் உள்ளது. பட்டணத்தில் வேலை கிடைத்துள்ளது.
பட்டணத்தில் தங்குவதற்கு ஒரு தற்காலிக இடம்
வேண்டுமல்லவா, அதுபோல் பக்தனுக்கு இந்த உலகம் ஒரு
தற்காலிக வீடு.
-
ஈரமான தீக்குச்சிகளை ஆயிரம்முறை கிழித்தாலும் தீ பிடிக்காது.
அதேபோல் உலகத்தில் பற்றுகொண்டவர்கள் ஈரதீக்குச்சி
போன்றவர்கள். இறைக்காட்சி அவர்களுக்கு கிடைக்காது.
உலகியலின் சாயல் ஒருசிறிது இருந்தால்கூட இறைக்காட்சி
கிடைக்காது
-
நான் எல்லாவற்றையும் கிருஷ்ணமயமாக காண்கிறேன் என்று
ராதை சொன்னாள். அதற்கு தோழிகள் நாங்கள் அவ்வாறு
பார்க்கவில்லையே என்று சொன்னார்கள். கண்ணில்
அனுராகம்(ராகபக்தி) என்ற மையை பூசிக்கொண்டு பாருங்கள்
அப்போது காணலாம் என்று சொன்னாள்
-

You might also like