You are on page 1of 1

நீர்க்கரைசல் நிலையில் ஐதரொட்சைட்டு ( OH- ) அயனின் செறிவை அதிகரிக்கச் செய்யும் இரசாயன

சேர்வைகள் மூலங்கள் எனப்படும்.

NaOH (aq) -------------> Na (aq) + OH- (aq)

வன்மூலம்
நீர்க்கரைசல் நிலையில் முற்றாக அயனாக்கம் அடைந்து காரங்களைக் கொடுக்கும்.

சோடியம் ஐதரொக்சைட்டு (NaOH)


பொற்றாசியம் ஐதரொக்சைட்டு (KOH)
KOH (aq) ---------> K+ (aq) + OH- (aq)

மென்மூலம்
நீர்க்கரைசல் நிலையில் பகுதியளவில் அயனாக்கம் அடையும்.

அமோனியா நீர்க்கரைசல் (NH4OH)

மூலங்களின் இயல்புகள்

1. கைகளினால் தொடும் போது, சவர்க்காரம் போன்ற வழு வழுப்பான உணர்வைக் காட்டும்.


2. மூலம் அமிலத்துடன் தாக்கமடைந்து, உப்பையும் நீரையும் விளைவுகளாகக்
கொடுக்கும்
2 NaOH (aq) + H2SO4 (aq) ---------> Na2SO4 (aq) + 2 H2O (l)

3. மூலம், சிவப்பு பாசிச் சாயத்தாளை நீல நிறமாக மாற்றும்.

சோடியம் ஐதரொக்சைட்டு பயன்படும் சந்தர்ப்பங்கள்

1. சவர்க்காரம், கடதாசி, மருந்துப் பொருள்கள், செயற்கைப் பட்டு, சாய வகைகள் என்பன உற்பத்தி
செய்வதற்குப் பயன்படும்.

2. இரசாயன ஆய்வுகடங்களில் பரவலகப் பயன்படும்.


3. பெற்றோலியம் உற்பத்திப் பொருள்களைத் தூய்மையாக்குவதற்குப் பயன்படும்.

You might also like