You are on page 1of 2

 தேங்காய் (பெரியது) - 2

 சீனி - தேவையான அளவு


 மில்க் பவுடர் - 6 தேக்கரண்டி (அ) கெட்டியான பால் - அரை கப்
 வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
 ஃபுட் கலர் - சில துளிகள்
 நெய் (அ) பட்டர்

Ads by OnlineBrowserAdvertisingAd Options

தேங்காயை உடைத்து 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து மெல்லிய துருவலாக துருவிக்


கொள்ளவும். பின்பு துருவலை நிறுத்து அதன் எடைக்கு சமமாக சீனியையும் நிறுத்து எடுத்துக்
கொள்ளவும். ஒரு தட்டில் நெய் அல்லது பட்டர் தடவி வைக்கவும். (தேங்காயை ஃப்ரிட்ஜில்
வைத்தெடுத்து துருவினால் மெல்லிய துருவலாகத் துருவலாம்).

அகலமான கடாயில் தேங்காய் துருவலுடன் சீனியைச் சேர்த்து மிதமான தீயில் வைத்துக்


கிளறவும்.
சீனி முழுவதும் கரைந்ததும் வெனிலா எசன்ஸ், மில்க் பவுடர் மற்றும் ஃபுட் கலர் சேர்த்துக்
கிளறவும். (நான் ப்ரவுன் சீனி சேர்த்துள்ளேன். அதனால் நிறம் சற்று மங்கலாக உள்ளது).

கலவை நன்றாகத் திரண்டு கடாயில் ஒட்டாத பதத்திற்கு வரும் போது இறக்கிவிடவும். (இது பர்ஃபி
பதத்தைவிட சற்று கெட்டியாக இருக்க வேண்டும்).

பட்டர் தடவிய தட்டில் தேங்காய் கலவையைப் பரவலாகப் போட்டு சமப்படுத்திக் கொள்ளவும்.


சற்று ஆறியதும் சதுர வடிவில் கீ றி வைக்கவும். நன்கு ஆறியதும் துண்டுகளைப் பிரித்தெடுக்கவும்.

சுவையான தேங்காய் பாறை ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வட்


ீ இது.

You might also like