You are on page 1of 29

Ghee rice

 பாஸ்மதி அரிசி - 2 கப்


 வெங்காயம் - ஒன்று
 பான்டன் இலை - ஒரு துண்டு
 இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 தயிர் - 2 தேக்கரண்டி
 மல்லித் தழை - சிறிது
 நெய் (அ) வெண்ணெய் - 4 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கு
 தண்ணர்ீ - 3 கப்
 தாளிக்க:
 பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா ஒன்று

வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். மல்லித் தழையை


சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக
எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் (அ) வெண்ணெயை உருக்கி, அதில் தாளிக்கக்
கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை


வதக்கவும்.

பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர் மற்றும் மல்லித் தழை சேர்த்து


வதக்கவும்.

அரிசியைக் களைந்து ரைஸ் குக்கரில் போட்டு தண்ண ீர் ஊற்றி உப்பு


போடவும்.
அதனுடன் தாளித்தவற்றைச் சேர்த்து குக்கரை மூடி ஆன் செய்யவும்.

கொதிக்கும் போது இடையில் ஒரு முறை குக்கரைத் திறந்து


கிளறிவிடவும்.

பிறகு மூடி போட்டு மீ ண்டும் வேகவிடவும். குக்கர் வாமில் வந்ததும் சிறிது


நேரம் அதிலேயே வைத்திருந்து எடுக்கவும்.
கமகம நெய் சோறு ரெடி.

 டின் டூனா மீ ன் - 200 கிராம்


 அல்லது ஃப்ரெஷ் மீ ன் வேக வைத்து முள்ளில்லாமல் உதிர்த்தது.
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்
 சீரகம்,சோம்பு - தலா அரைடீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 3
 இஞ்சி - சிறிய துண்டு
 பூண்டு - 2 பல்
 தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
 மல்லி கருவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவைக்கு.

 டின் மீ னை தண்ணர்ீ வடித்து உதிர்த்து வைக்கவும்.வெங்காயம்


பொடியாக நறுக்கி வைக்கவும்.சீரகம்,சோம்பு,இஞ்சி பூண்டு,பச்சை
மிள்காய் மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை
போட்டு வெடிக்கவும்,அரைத்த விழுதை போடவும்,வெங்காயம்
போட்டு வதக்கவும்.
 வெங்காயம் வதங்கியவுடன்,உதிர்த்த மீ னை போட்டு நன்கு பிரட்டி
விடவும்,தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.தேங்காய் துருவல்
சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.பிரட்டி இறக்கவும்.
 சுவையான மீ ன் பொரியல்/ மீ ன் பொடிமாஸ் ரெடி.

புளிப்பு தே

 முட்டை-4
 கெட்டியான தேங்காய் பால்- 1 கப்
 பச்சைமிளகாய்-8
 இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
 மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்
 சீரகத்தூள்- 1 ஸ்பூன்
 பட்டை,எலக்காய்,கிராம்பு,அன்னாசி,பிரிஞ்சி-தலா 1
 கொத்தமல்லி- கால் கப்
 வெங்காயம்-5
 எண்ணெய்- ஒரு குழிகரண்டி
 கறிவேப்பிலை-ஒரு கொத்து

 கடாயில் எண்ணெயை காய வைக்கவும்


 வாசனை பொருட்களை வறுக்கவும்
 வெங்காயம், பச்சைமிளகாயை, கறிவேப்பிலை வதக்கவும்.
 பின்னர்கொத்தமல்லி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
 பச்சைவாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்க்கவும்
 பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்
 நன்கு கொதி வந்ததும் தீயினை சிம்மரில் வைத்து முட்டையை
கொத்தி ஊத்தவும். மூடிவிடவும்
 5 நிமிடங்கள் கழித்து கீ ழே இறக்கி பரிமாறவும்.

கெட்டியான தேங்காய் பால் தான் சேர்க்க வேண்டும். தேங்காய் விழுது


சேர்க்க கூடாது. முட்டையின் அளவை கூட்டி குறைத்து போடலாம்.
காரத்திற்கு வெறும் பச்சைமிளகாய் மட்டுமே சேர்த்துள்ளதால் அதே
அளவிலேயே போடவும். பூரி சப்பாத்தி, நாண், படூரா ஆகியவற்றுடன்
அருமையாக இருக்கும்

 சீரகசம்பா அரிசி- 4 டம்ளர்


 டால்டா- 1 ஸ்பூன்
 தேங்காய் என்ணெய்-2 மேசை கரண்டி
 நெய்- 3 ஸ்பூன்
 பெரிய வெங்காயம்-4
 வாசனை பொடி- 1/2 ஸ்பூன் (பட்டை,ஏலக்காய்,கிராம்பு)
 புதினா- 1/2 கப்
 கொத்தமல்லி-1/2 கப்
 பச்சை மிளகாய்- 4
 சின்ன வெங்காய விழுது- 1/4 கப்
 தக்காளி- 8
 மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
 தயிர்- கால் கப்
 இஞ்சி பூண்டு விழுது- 5 ஸ்பூன்
 எலுமிச்சை பழம்- 2
 கலர் பொடி- சிறிதளவு
 உப்பு- தேவைக்கு

 பாத்திரத்தில் மூன்று எண்ணெய்களையும் விட்டு காய்ந்ததும்


வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
 அதில் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை
வதக்கவும்
 பின்னர் வாசனை தூள், புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய்
சேர்த்து வதக்கவும்
 பின்னர் சின்ன வெங்காய விழுது,தக்காளி, மிளகாய் தூள், தயிர்,
சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
 பின் 1 டம்ளருக்கு 2 என்ற விகிதத்தில் தண்ண ீர் ஊற்றி கொதிக்க
விடவும்
 பின் அரிசியை சேர்த்து லேசாக தண்ண ீர் இருக்கும் வரையில் தீயில்
வைக்கவும்
 நீர் வற்ற ஆரம்பிக்கும் தருவாயில் எலுமிச்சை சாறு ஊற்றி மீ ண்டும்
எல்லா பக்கமும் படும் படி கிளறவும்.
 பின் கலர்பொடியை நீரில் கரைத்து மேலாக ஊற்றி விட்டு
கலக்காமல் அப்படியே மூடி தம்மில் போடவும்

 பன ீர் - ஒரு பாக்கெட்


 பச்சை பட்டாணி - அரை கப்
 உப்பு - தேவைக்கு
 பட்டர் - தேவைக்கு
 சர்க்கரை - அரை தேக்கரண்டி
 கறிவேப்பிலை - 5 இதழ்
 வெங்காயம் - ஒரு தேக்கரண்டி ( பொடியாக நறுக்கியது)
 இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 கலவைக்கு :
 மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
 கரம் மசாலா - அரை தேக்கரண்டி
 மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
 தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் - ஒரு தேக்கரண்டி
 தக்காளி - ஒன்று ( நன்கு அரைத்தது )
 பால் - ஒரு கப்

முதலில் பட்டாணியை சுடு தண்ண ீரில் வேக வைத்துக் கொள்ளவும்.


பன ீரை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நைசாக
அரைக்கவும்.
கலவை செய்ய தேவையான அனைத்தையும் ஒன்றாக ஒரு பௌலில்
போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து பாயாசம் பதத்தில்
கலந்துக் கொள்ளவும்.

ஒரு தவாவில் வெண்ணெய் போட்டு உருக்கவும்.

நன்கு உருகியதும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை


வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி
வதக்கவும்.
பின் கலந்து வைத்த கலவையை ஊற்றி, 10 நிமிடம் மூடி போட்டு வைத்து
கொதிக்க விடவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக மீ தமுள்ள பாலை ஊற்றி தொடர்ந்து கலந்துக்


கொண்டே இருக்கவும். பின் உப்பும், சர்க்கரையும் சேர்த்து பன ீரை
சேர்க்கவும்.

மீ ண்டும் திறந்து வைத்து கொதிக்க விட்டு, பட்டாணி மற்றும் பொடியாய்


நறுக்கிய கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும். ஹோட்டலில் சாப்பிடும்
அதே சுவையுள்ள பன ீர் பட்டர் மசாலா ரெடி.

குறைந்
 கடுகு, சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம் எல்லாம் உப்பு சேர்த்து
பொடிக்கவும். கேப்ஸிகம், வெங்காயத்தை சதுர வடிவாக வெட்டவும்.


 பச்சை மிளகாயை வெறும் கடாயில் வதக்கி பூண்டு சேர்த்து நைசாக
அரைக்கவும்.


 தயிர், மஞ்சள் தூள், பொடித்த மசாலா, அரைத்த மிளகாய் பூண்டு
விழுது எல்லாம் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.


 இதில் பன ீர் சேர்த்து பிரட்டவும்.


 இத்துடன் நறுக்கிய கேப்ஸிகம், வெங்காயமும் சேர்த்து நன்றாக
கலந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

 பின் நாண்ஸ்டிக் பாத்திரத்தில் வெண்ணெய் / எண்ணெய் விட்டு இந்த
துண்டுகளை போட்டு வதக்கவும்.


 எல்லா பக்கமும் ஒரே நிறத்தில் சிவக்கும்படி பிரட்டி விட்டு
எடுக்கவும்.


 சுவையான பன ீர் டிக்கா தயார். இதில் அனைத்தும் கையால் இடித்து,
அரைத்து சேர்த்த மசாலா. அதனால் சுவையும் மணமும்
அருமையாக இருக்கும். இதை அடுப்பில் செய்யாமல் அவனில் க்ரில்
செய்தோ அல்லது அவன் ட்ரேவில் எண்ணெய் விட்டு வைத்தோ
சமைக்கலாம
 s


 தக்காளி - அரை கிலோ
 பொன்னி அரிசி - 3 கப்
 பெரிய வெங்காயம் - கால் கிலோ
 பச்சை மிளகாய் - 10
 புதினா - 2 கொத்து
 கொத்தமல்லித் தழை - 2 கொத்து
 இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
 தேங்காய், கசகசா விழுது - 4 மேசைக்கரண்டி
 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
 மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
 தண்ணர்ீ - 6 கப்
 உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
 எண்ணெய் - கால் கப்
 டால்டா - அரை கப்
 பட்டை - 2 துண்டு
 கிராம்பு - 3
 பிரிஞ்சி இலை - ஒன்று
 ஏலக்காய் - 3
 முந்திரி - 8

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை


மிளகாயை கீ றி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும். புதினா, கொத்தமல்லித் தழையை ஆய்ந்து, சுத்தம் செய்து
வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக்
கொள்ளவும்.
குக்கரில் டால்டா மற்றும் கால் கப் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை,
கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், முந்திரி போட்டு தாளித்து, இஞ்சி,
பூண்டு விழுது மற்றும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, புதினா மற்றும்
கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிடவும்.
மிளகாய் தூள் வாசனை போனதும் தேங்காய் கசகசா விழுது, உப்பு சேர்த்து
கிளறவும்.

பிறகு 6 கப் தண்ணர்ீ ஊற்றி கிளறிவிட்டு, ஒரு தட்டை வைத்து மூடி


நுரைத்து ஒரு கொதி வரும் வரை வைக்கவும்.

கொதி வந்ததும் மூடியைத் திறந்து, அரிசியைக் களைந்து தண்ண ீரை


வடித்து விட்டு சேர்த்து மூடி வைக்கவும்.
முக்கால் பதம் வேகும் வரை அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் ஒரு முறை நன்கு அடிப்பிடிக்காமல்
கிளறிவிடவும்.

கிளறிய பிறகு, குக்கரின் மூடியை வைத்து மூடி வெய்ட் போடவும்.


மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கிவிடவும். 5 நிமிடங்கள்
கழித்து திறந்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சுவையும், மணமும் நிறைந்த தக்காளி சாதம் தயார். இதனுடன் ஆனியன்


ரைத்தா மற்றும் காய்கறி குருமா சேர்த்து சா
 சின்ன வெங்காயம் - கால் கிலோ
 பச்சை மிளகாய் - 3
 பூண்டு - 2
 குடைமிளகாய் - கால் பாகம்
 தக்காளி - ஒன்று
 பாசிப்பருப்பு - கால் கப்
 மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் - தலா ஒரு தேக்கரண்டி
 உப்பு, புளி - தேவைக்கு ஏற்ப
 கடுகு, உளுந்து, சீரகம், எண்ணெய் - தாளிக்க
 கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீ றி


வைக்கவும். அரை கப் அளவு நீரில் புளியை கரைத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை


தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், தக்காளி சேர்த்து
வதக்கவும்.
வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து
வதக்கவும்.

பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். அடுப்பை சிறு தீயில்


வைத்து, வேக வைத்த பருப்பைச் சேர்த்து கிளறிவிட்டு சிறிது நேரம்
கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான வெங்காய கொத்சு தயார். கொத்தமல்லித் தழை தூவி


பரிமாறவும்.

Pothina chutney

 இஞ்சி துண்டுகள் - ஒரு மேசைக்கரண்டி


 சிவப்பு மிளகாய் - 7 - 9
 பச்சை மிளகாய் - 2
 கறிவேப்பிலை - ஒரு கப்
 கொத்தமல்லித் தழை - ஒரு கப்
 புதினா - ஒன்றரை கப்
 பெரிய வெங்காயம் - 3
 பூண்டு - 6 பல்
 உப்பு - ருசிக்கேற்ப
 தாளிக்க:
 எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
 கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
 பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.


பூண்டு பற்களை தோலுரித்து நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் சீவி,
சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிவப்பு மிளகாயை வறுக்கவும். பிறகு,
இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் எண்ணெய்
ஊற்றி வதக்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு
ஆறவிடவும்.

ஆறியதும் உப்பு சேர்த்து அரைக்கவும். தண்ண ீர் ஊற்ற வேண்டாம்.


வெங்காயத்தில் இருக்கும் தண்ண ீர்ப் பதமே போதுமானது.

புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து, பொடியாக


நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும் சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் மீ ண்டும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி,
கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் கறிவேப்பிலையை வதக்கி
ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியிலிருக்கும் விழுதுடன், இவற்றையும்
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு
தாளித்து, பெருங்காயப் பவுடரையும் சேர்த்து பொரியவிடவும்.
தாளித்தவற்றைத் துவையலுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

சுவையான இஞ்சி புதினா மல்லித் துவையல் தயார்.

இந்தத் து

Dosa

 பச்சைப் பயறு - கால் கிலோ


 பச்சை மிளகாய் - 5
 இஞ்சி - சிறு துண்டு
 சீரகம் - ஒரு தேக்கரண்டி
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய் துருவல் - ஒரு மூடி

 
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பச்சைப்
பயிறை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

ஊறிய பச்சைப் பயறுடன், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு


சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பயறு மாவுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து கலந்து, தோசைகளாக


வார்த்து எடுக்கவும். (விரும்பினால் பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயம், கொத்தமல்லித் தழை, பெருங்காயப் பவுடர் சேர்க்கலாம்).
சுவையான பயறு தோசை தயார். தேங்காய் சட்னி, வெங்காய சட்னியுடன்
பரிமாறவும்.

Chapathi

 மைதா மாவு (அ) கோதுமை மாவு - 4 கப்


 பட்டர் - ஒரு தேக்கரண்டி
 உப்பு - தேவையான அளவு
 பில்லிங் செய்ய:
 வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
 வெங்காயம் - ஒன்று
 பச்சை மிளகாய் - ஒன்று
 இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
 கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
 மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 மல்லித் தழை - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய்

 
வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு
விழுது மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, மல்லித் தழை,
உப்பு சேர்த்து வதக்கவும்.

வதக்கிய கலவையுடன் உருளைக்கிழங்கைச் சேர்த்து அனைத்தும் ஒன்று


சேர நன்கு மசித்துவிடவும்.

மாவில் பட்டர், தேவையான அளவு உப்பு, தண்ண ீர் சேர்த்து நன்கு சப்பாத்தி
மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவில் ஒரு உருண்டை
அளவு எடுத்து சப்பாத்தி போல இட்டுக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு
கரண்டி அளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.
மசாலா கலவை வெளியில் தெரியாதவாறு மூடி உருண்டையாக்கி,
பின்னர் அதை மொத்தமான சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்.

தவாவை காயவைத்து எண்ணெய் ஊற்றி அதில் தயார் செய்த


சப்பாத்தியை வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான ஆலு பரோட்டா ரெடி.

Veg kozhukuttai

 அரிசி மாவு - முக்கால் கப்


 பீன்ஸ் - 5
 கேரட் - ஒன்று
 தக்காளி - ஒன்று
 உருளைக்கிழங்கு - ஒன்று
 மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
 கறிவேப்பிலை - ஒரு கொத்து
 பொட்டுக்கடலை மாவு - ஒன்றரை தேக்கரண்டி
 கடுகு - ஒரு தேக்கரண்டி
 உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
 உப்பு - அரை தேக்கரண்டி
 எண்ணெய்

கேரட், பீன்ஸ் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் ஒரு கப் அளவு தண்ண ீரை ஊற்றி, நறுக்கிய கேரட், பீன்ஸ்,
உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில்
வைத்து வெய்ட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு
தாளித்து, தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் வேகவைத்த கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கைச்


சேர்த்து, அதனுடன் மிளகாய் தூள், உப்பு போட்டு நன்கு கிளறிவிடவும்.

பிறகு பொட்டுக்கடலை மாவைத் தூவி ஒரு நிமிடம் நன்கு பிரட்டி இறக்கி


வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவைப் போட்டு அரை தேக்கரண்டி எண்ணெய்
ஊற்றவும். முக்கால் கப் அளவு தண்ணரைக்
ீ கொதிக்க வைத்து அதை அரிசி
மாவில் ஊற்றி கை பொறுக்கும் அளவு சூட்டில் நன்கு கெட்டியாக
பிசையவும்.

ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை பெரிய


நெல்லிக்காய் அளவு எடுத்து அதில் வட்டமாக தட்டவும். அதன்மேல் தயார்
செய்துள்ள மசாலாவை ஒரு தேக்கரண்டி அளவு வைக்கவும்.

அதை அப்படியே மூடி கூம்பு வடிவில் கொழுக்கட்டையாக செய்து


கொள்ளவும்.
மீ தமுள்ள மாவிலும் இதேபோல் கொழுக்கட்டைகளைத் தயார் செய்து
கொள்ளவும். இட்லி பானையில் தண்ண ீர் ஊற்றி, எண்ணெய் தடவிய
இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து மூடி 10 நிமிடங்கள் ஆவியில்
வேகவைத்து எடுக்கவும்.

சுவையான வெஜ் கொழுக்கட்டை தயார். சூடாகப் பரிமாறவும்.

இந்த வெஜ் கொழுக்கட்டை குறிப்பை நமக்காக செய்து காட்டியவர்,


திருமதி. பானுமதி குமரப்பன் அவர்கள். பழமையும், புதுமையும் கலந்த
புதுவகை சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். கணவர் மருத்துவர்
என்பதால், இவரது தயாரிப்புகளில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்
அதிகம் இருக்கும்.

You might also like