You are on page 1of 3

மேன்மைமிகு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்

சங்கராபுரம்
I.A.No. 794 /2014

In

O.S.No.158 / 2014

குமுதா ... மனுதாரர்/1 ம்


பிரதிவாதி

எதிர்

மணிகண்டன் ... எதிர்மனுதாரர்


/வாதி

ஆணையர் தாக்கல் செய்யும் ஆணையர் அறிக்கை


ஆணையர் உத்தரவில் குறிப்பிட்டுள்ள தாவா சொத்தை சர்வேயர்
உதவியுடன் அளந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சமூகம் நீதிமன்றம்
எனக்களித்த உத்தரவினைத் தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்கள்
முன்னிலையிலும் வாதி, பிரதிவாதிகள் முன்னிலையிலும், சர்வேயர் மற்றும் கிராம
நிர்வாக அலுவலர் உதவியுடன் கடந்த 21.11.2014 அன்று காலை சுமார் 10
மணியளவில் தாவா சொத்தை பார்வையிட்டு சர்வேயர் உதவியுடன் அளந்து
கீழ்கண்டவாறு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

1. தாவா சொத்தான பழைய ச.எண் 128/1, புதிய ச.எண் 128/22 ஆனது நத்தம்
வகைப்பட்டைச் சேர்ந்தது என்று கூறி சர்வேயர் அடையாளம் காண்பித்தார்.
தாவா சொத்தானது ‘”L”’வடிவத்தில் அமைந்துள்ள சொத்தாகும். தாவா
சொத்தானது மேற்குப் புறத்தில் ச.எண் 128/21 ன் உரிமையாளரான ராஜீ
நாயக்கர் வீட்டுடன் சேர்த்து பொது சுவராக அமைக்கப்பட்ட வாதியின் மெத்தை
வீடு உள்ளதாக சர்வேயர் கூறினார். தாவா சொத்தின் நான்குபுற எல்லையாக
கிழக்குப்புறம் ச.எண் 128/25 மற்றும் 128/26 ம், மேற்குப்புறம் ச.எண் 128/21 ராஜீ
நாயக்கரின் மெத்தை வீடும், வடக்கில் ச.எண் 128/10 ம், தெற்கில் 7 மீ
அகலமுள்ள சிமெண்ட் ரோடும் அமைந்துள்ளது.

2. தாவா சொத்து ஆணையர் வரைபடத்தில் ABCDEF என குறிக்கப்பட்டுள்ளது.


தாவா சொத்தானது மேற்குப்புறத்தில் பொது சுவராக AB என்ற பகுதி 16.6 மீ
நீளமும், வடக்குப்புறத்தில் BC என்ற பகுதியானது 8.6 மீ அகலமும்,
கிழக்குப்புறத்தில் CD என்ற பகுதி 8.4 மீ நீளமும், D என்ற இடத்தில் வளைந்து
DE என்ற பகுதி 4.2 நீளமும், EF என்ற பகுதி 7.4 மீ நீளமும், தெற்குப்புறத்தில்
FA என்ற பகுதியானது 4.6 மீ அகலமும் உள்ளதாக சர்வேயர் வருவாய்துறை
ஆவணங்களை பார்த்து அதன்படி அளந்தும் காண்பித்தார்.

..2..

3. தாவா சொத்தின் கிழக்குப்புறத்தில்தான் அளவீடுகள் மாறுவதாக வாதி,


பிரதிவாதியும் அவர்களது இரு வழக்கறிஞர்களும் கூறியதால் கிழக்குப்புற
ச.எண்களான 128/25, 128/26 ம் அளவீடு செய்யப்பட்டது. தாவா சொத்தானது
நத்தம் வகைப்பாட்டைச் சேர்ந்தது என்பதால் வருவாய் துறை கற்களை
கண்டறிவது சிரமம் என சர்வேயர் கூறவே, அதை அளவீடு செய்ய இரு தரப்பு
வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொண்ட மேற்கில் ச.எண் 128/17 ல் 2.4 மீ அகலம்
அளவு கொண்ட பொது சந்திலிருந்தும், கிழக்கில் ச.எண் 128/27 ல் 1.6 மீ
அகலம் அளவு உள்ள சந்து வரையுலுள்ள இடைப்பட்ட ச.எண்களையும்
அளந்து அந்த அளவு சரியென இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட
பிறகு தாவா சொத்தின் கிழக்குப்புறம் அளவீடு செய்யப்பட்டது.

4. ச.எண் 128/26 வரைபடத்தில் GHIJ என குறிக்கப்பட்டுள்ளது. மேற்படி


ச.எண்ணின் மேற்குப்புறத்தில் GJ என்ற பகுதி 7.4 மீ நீளமும், வடக்குப்புறத்தில்
JI என்ற பகுதியானது 4.6 மீ அகலமும், கிழக்குப்புறத்தில் IH என்ற பகுதி 7.4 மீ
நீளமும், தெற்குப்புறத்தில் HG என்ற பகுதியானது 4.6 மீ அகலமும் உள்ளதாக
சர்வேயர் வருவாய்துறை ஆவணங்களை பார்த்து அதன்படி அளந்தும்
காண்பித்தார்.

5. ச.எண் 128/25 வரைபடத்தில் EFGJ என குறிக்கப்பட்டுள்ளது. மேற்படி


ச.எண்ணின் மேற்குப்புறத்தில் EF என்ற பகுதி 7.4 மீ நீளமும், வடக்குப்புறத்தில்
EJ என்ற பகுதியானது 4.4 மீ அகலமும், கிழக்குப்புறத்தில் JG என்ற பகுதி 7.4 மீ
நீளமும், தெற்குப்புறத்தில் GF என்ற பகுதியானது 4.4 மீ அகலமும் உள்ளதாக
சர்வேயர் வருவாய்துறை ஆவணங்களை பார்த்து அதன்படி அளந்தும்
காண்பித்தார்.

6. ச.எண் 128/25,128/26 இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு காலி இடமாக


வீடு கட்ட பூமிக்கு மேல் சுமார் 2 அடி எழுந்து கிழக்கிலிருந்து மேற்காக 20 ½
அடி அகலமும், தெற்கு வடக்காக 19 அடி நீளமுள்ள கடகால் எழுப்பப்பட்டு
அதன் நடுவில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ச.எண் 128/22 லுள்ள
வாதியின் சுவற்றிற்கும் ச.எண் 128/25 ற்கும் இடையில் சுமார் 4.7 மீ அளவுள்ள
இடைவெளி இருந்தது. ச.எண் 128/26 ல் தென் கிழக்கு மூலையில் சுமார் 3.0 மீ
அகலமும். 2.8 மீ நீளமும் உள்ள பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அது என்ன
என்று வினவியதற்கு பிரதிவாதிகள் தரப்பில் செப்டிக் டேங்க் என்று கூறினர்.
ச.எண் 128/25 ல் வாதியின் கிழக்குப்புற சுவற்றை ஒட்டி செம்மண்
கொட்டப்பட்டிருந்தது. ச.எண் 128/26 ன் வடக்குப்புறத்தில் கூரைவீட்டிற்கும் (
ச.எண். 128/24 ), கடக்காலுக்கும் இடையே 3 அடி பொது சந்து உள்ளது. அது
வாதியின் L’வடிவ பகுதியில் இல்லை. கடக்காலும் வாதியின் L வடிவ சுவருக்கும்
இடையில் சுமார் 1.0 மீ வெளியே சுவர் வந்து இடைவெளி ஏதும் இல்லாமல்
காணப்பட்டது. ச.எண் 128/17 லிருந்து அளவீடு செய்யும்போது வாதிக்கு
கிழக்குப்புறம் 7.4 மீ (FE) அளவுள்ள சுவரில் மட்டும் ½ மீ தள்ளி சர்வேயரால்
அளவீடு செய்யப்பட்டது.

7. ஆகவே கனம் நீதிமன்றம் அவர்கள் தயவு செய்து நீதிமன்ற ஆணையர்


சர்வேயர் உதவியுடன் தாவா சொத்தை அளந்து, உத்தரவை நிறைவேற்றி தாக்கல்
செய்யும் வரைபடத்துடன் கூடிய அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமாய்
கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கறிஞர்/ஆணையர்

இணைப்பு;

1. ஆணையர் வாரண்ட் 2. மேமோ

3. ஆணையர் வரைபடம் 4. ஆணையர் அறிக்கை

You might also like