You are on page 1of 5

மேன்மைமிகு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்

சங்கராபுரம்
I.A.No. 64 / 2016

In

I.A.No. 161 / 2017

in

O.S.No. 539 / 1989

ஜானகி அம்மாள் வகையறா ... மனுதாரர்கள்/வாதிகள்

எதிர்

பாக்கியலட்சுமி அம்மாள் வகையறா ... எதிர்மனுதாரர்கள்


/பிரதிவாதிகள்

ஆணையர்/வழக்கறிஞர் தாக்கல் செய்யும் ஆணையர்


அறிக்கை
மேற்படி வழக்கின் இறுதிநிலை தீர்ப்பாணை மனுவில் குறிப்பிட்டுள்ள மனு
சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தரும்படி சமூகம் நீதிமன்றம் மேற்படி
இடைநிலை மனுக்களில் எனக்களித்த இரண்டு உத்தரவுகளைத் தொடர்ந்து இரு
தரப்பு வழக்கறிஞர்கள், மனுதாரர்கள்/வாதிகள் மற்றும் எதிர்மனுதாரர்கள்/
பிரதிவாதிகள், ஊர் பொது மக்கள் ஆகியோர்கள் முன்னிலையில் கிராம நிர்வாக
அலுவலர் மற்றும் சர்வேயர் உதவியுடன் கடந்த 05.05.2017 அன்று காலை சுமார்
11 மணியளவில் மனு சொத்துக்களை பார்வையிட்டு வருவாய்துறை
ஆவணங்களின் படி அளவீடு செய்து கீழ்கண்டவாறு அறிக்கை தாக்கல்
செய்யப்படுகிறது.

1. மனு சொத்துகள் மொத்தம் நான்கு அயிட்ட சொத்துக்களாகும். இதில் 1,2


அயிட்ட சொத்துக்கள் சு.குளத்தூர் கிராம எல்லையில் பயிர் செய்யக்கூடிய
விவசாய நிலமும் அதற்கு நீர்ப்பாசன உரிமையுடைய கிணறும் ஆகும். மேற்படி
அயிட்ட சொத்துக்களின் சர்வே எண்கள் 139/1 மற்றும் 139/4 ஆகும். மேற்படி
சர்வே எண்ணில் 139/1 என்பது தற்போது 139/1B என வருவாய் துறையால்
உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது. சர்வே எண் 139/4 என்பது கூட்டுக்கிணறு ஆகும்.
இதில் 1 வது அயிட்ட சொத்தான சர்வே எண் 139/1B ல்
மனுதாரர்கள்/வாதிகளின் 2/3 பாகம் சுமார் 0.39 ½ செண்ட் ஆகும். மேற்படி
சொத்தில் மனுதாரர்கள்/வாதிகளின் பாகத்தை நடுவில் ஒதுக்கீடு செய்தால்
அவர்களுக்கு பாதை ஒதுக்கீடு செய்வதிலும், பொதுக்கிணற்றிலிருந்து நீர்
இறைக்கவும், இறைப்பு வாய்க்கால் அமைக்கவும் சிரமமான சூழல் உள்ளதோடு,
அதிகப்படியான நிலங்களும் வீணாகும் சூழ்நிலை உள்ளது.
..2..

2. மேலும் எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகள் தங்களுக்குண்டான பாகத்தை


அனுபவம் செய்வதிலும் வசதிக்குறைவு ஏற்படும் சூழ்நிலையில் மனுச்
சொத்துக்கள் உள்ளது. ஆதலால் மனு 1 வது அயிட்ட சொத்தில்
மனுதாரர்கள்/வாதிகளின் பாகமான 0.39 ½ செண்ட், ச.எண் 139/9 நிலத்திற்கும்
கிழக்கு, ச.எண் 139/3 நிலத்திற்கும் மேற்கு, ச.எண் 139/1C நிலத்திற்கும் வடக்கு,
ச.எண் 139/1B ல் உள்ள மீதி நிலத்திற்கும் தெற்கு, இதன் மத்தியில்
மனுதாரர்கள்/வாதிகளுக்கு அவர்களது பாகத்தை ஒதுக்கலாம் என பரிந்துரை
செய்கிறேன். மேலும் ச.எண் 139/4 ல் சுமார் 0.5 ½ செண்டில் அமைந்துள்ள
கிணறு மற்றும் கிணற்று மேட்டில் 2/3 பாகம் மனுதாரர்கள்/வாதிகளுக்கும், 1/3
பாகம் 1 ம் எதிர்மனுதாரர்/ பிரதிவாதிக்கும் அதில் அமைந்துள்ள மின்மோட்டாரில்
2/15 பாகம் மனுதாரர்கள்/வாதிகளுக்கும், 1/15 பாகம் 1 ம் எதிர்மனுதாரர்/
பிரதிவாதிக்கும் பாகமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேற்படி கிணற்றிலிருந்து
மனுதாரர்கள்/வாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட சொத்துக்கள் வரை நீர் இறைப்பு
வாய்க்காலையும் ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்கிறேன். இது ஆணையர்
வரைபடம் 1-ல் ABCD என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

3. மனுவில் குறிப்பிட்டுள்ள 3, 4 வது அயிட்ட சொத்துக்கள் மெத்தை வீடு,


அதனையொட்டிய காலிமனை மற்றும் ஒட்டு வீடுகள் ஆகும். மேற்படி
அயிட்டங்களை அளவீடு செய்ததில் மனுவில் குறிப்பிட்டுள்ள விஸ்தீரணங்களை
விட குறைவாகவே காணப்பட்டன. எனவே 3,4 மனு சொத்துக்களின்
விஸ்தீரணத்தைப் பொறுத்து மனுதாரர்கள்/வாதிகளுக்கும், 1 ம் எதிர்மனுதாரர்/1 ம்
பிரதிவாதிக்கும் மதிப்பீட்டின் அடிப்படையில் பாகங்கள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் 3 வது அயிட்ட சொத்து மேற்படி கிராமத்தில்
நடுத்தெரு என்று அழைக்கப்படும் தெருவில் அமைந்துள்ள பழைய மெத்தை
வீடு ஆகும். மேற்படி சொத்தின் ச.எண் 124/3 ஆகும். மேற்படி சர்வே எண்ணில்
அமைந்துள்ள மெத்தை வீடு இரண்டு அடுக்கு மெத்தை வீடு ஆகும். அதில்
மனுதாரர்கள்/வாதிகள் குடியிருந்து வருகிறார்கள். மேற்படி மெத்தை வீடானது
வெளிர் பச்சை வண்ணங்களால் வர்ணம் அடிக்கப்பட்டு இருந்தது. அதில்
மேற்படி வீடானது கடந்த 1956 ம் வருடத்தில் கட்டப்பட்டதாக வீட்டின்
முகப்பில் குறிப்புகள் காணப்பட மனுதாரர்கள்/வாதிகளும் அதை உறுதி
செய்தனர். 3 வது அயிட்ட சொத்தின் கிழக்குப்புறத்தில் அதை ஒட்டினாற்போல்
ஒரு மெத்தை வீடு உள்ளது. ஆனால் அதற்கும் மனு சொத்துக்களுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை.
4. மனுச் சொத்து விபரத்தில் 3 வது அயிட்ட சொத்து 0.02 செண்ட் என
குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அளவீட்டின் போது பூ ரூபத்தில் சுமாராக 0.01
½ செண்ட் மட்டுமே இருந்தது. மேற்படி தெருவில் 3 வது அயிட்ட சொத்துக்கு
அருகில் வெறும் மனைகள் ரூ 50,000/-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எனவே 3 வது அயிட்ட சொத்தின் வெறும் மனை மதிப்பு 1 செண்ட் ரூ.
50,000 எனில் 0.1 ½ செண்ட் ரூ. 75,000/- ஆகும். அதில் அமைந்துள்ள பழைய
மெத்தை கட்டிடம் மற்றும் கடக்காலின் மதிப்பு ரூ. 5,25,000/-. ஆக 3 வது
அயிட்ட சொத்தின் மொத்த மதிப்பு ரூ. 6,00,000/- ஆகும். இதன்
நான்கெல்லைகள்: பள்ளிக்கொண்டான் மெத்தை வீட்டிற்கும் கிழக்கு, ரங்கநாதன்
மெத்தை வீட்டிற்கும் மேற்கு, நடுத்தெருவிற்கும் வடக்கு, ரங்கநாதன் ஒட்டு
வீட்டிற்கும் தெற்கு, இதன் மத்தியில் கிழக்கு மேற்கு வடபுறம் 13 ½ அடி,
தென்புறம் 15 அடி, தெற்கு வடக்கு இருபுறமும் 39 அடி அளவில் அமைந்துள்ள
மெத்தை வீடு மற்றும் காலிமனையை மனுதாரர்கள்/வாதிகளின் பாகமான 2/3
பாகத்திற்கு பாகமாக ஒதுக்கலாம்

..3..

என பரிந்துரை செய்கிறேன். இது ஆணையர் வரைபடம் 2-ல் ABCD என


தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

5. மனுவில் குறிப்பிட்டுள்ள 4 வது அயிட்ட சொத்து நடுத்தெரு சந்து என்று


அழைக்கப்படும் தெருவில் அமைந்துள்ள பழைய ஒட்டு வீடு ஆகும். அதில்
இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு கிழக்குப் புறமாக இரண்டு கதவுகள் அமைத்து
3 ம் எதிர்மனுதாரர்/3 ம் பிரதிவாதியும் அவரது வாரிசுகளும் குடியிருந்து
வருகிறார்கள். மனுச் சொத்து விபரத்தில் 4 வது அயிட்ட சொத்தானது 0.02 ½
செண்ட் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அளவீட்டின் போது பூ ரூபத்தில்
சுமாராக 0.02 ¼ செண்ட் மட்டுமே இருந்தது. 4 வது அயிட்ட சொத்துக்கு
அருகில் வெறும் மனைகள் ரூ 50,000/-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எனவே 4 வது அயிட்ட சொத்தின் வெறும் மனை மதிப்பு 1 செண்ட் ரூ. 50,000
எனில் 0.02 ¼ செண்ட் ரூ. 1,25,000/- ஆகும். அதில் அமைந்துள்ள பழைய ஒட்டு
கட்டிடத்தின் மதிப்பு ரூ. 1,75,000/-. ஆக 4 வது அயிட்ட சொத்தின் மொத்த
மதிப்பு ரூ. 3,00,000/- ஆகும். 1 ம் எதிர்மனுதாரர்/1 ம் பிரதிவாதிக்கு அவரது
பாகமான 1/3 பாகம் ரூ 3,00,000/- மதிப்புடைய 4 வது அயிட்ட சொத்தும், காலி
இடமும் பாகமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

6. மேற்படி பாகமானது மனுதாரர்கள்/வாதிகள் தொடர்ந்த இரண்டாவது


மேல்முறையீட்டு எண் 1112/2002 தீர்ப்பின் அடிப்படையிலும், தகைமை
நெறிமுறை கோட்பாட்டின் அடிப்படையிலும் 3 ம் எதிர்மனுதாரர்/3 ம்
பிரதிவாதிக்கு ஒதுக்கீடு செய்யலாம் எனவும் பரிந்துரை செய்கிறேன். இதன்
நான்கெல்லைகள்: சிவக்குமார் ஒட்டு வீட்டிற்கும் கிழக்கு, ரங்கநாதன் செங்கல்
கட்டிடத்திற்கும் மேற்கு, ஆறுமுகம் காலி மனைக்கும் வடக்கு, நடுத்தெரு
சந்திற்கும் தெற்கு இதன் மத்தியில் கிழக்கு மேற்கு இருபுறமும் 19 ½ அடி, தெற்கு
வடக்கு இருபுறமும் 48 ½ அடி அளவில் அமைந்துள்ள இரு ஒட்டு வீடு மற்றும்
காலிமனையை 3 ம் எதிர்மனுதாரர்/3 ம் பிரதிவாதிக்கு தகைமை முறையில்
பாகமாக ஒதுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன். இது ஆணையர் வரைபடம் 3-
ல் ABCD என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

7. மேலும் மனுச்சொத்துக்கள் ஒதுக்கீடு செய்யும்போது 3 ம் எதிர்மனுதாரர்/3 ம்


பிரதிவாதி கிரயம் பெற்றுள்ள சொத்து அவருக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டு
மீதமுள்ள சொத்துக்களில் மனுதாரர்கள்/வாதிகளுக்கு 2/3 பாகம்
ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடுகள் சரியான அளவில் உள்ளதால் 3 ம்
எதிர்மனுதாரர்/3 ம் பிரதிவாதி கிரயம் பெற்ற சொத்தில் எந்த பகுதியையும்
மனுதாரர்கள்/வாதிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் ஏதும்
ஏற்படவில்லை.

8. மேற்படி கிராம எல்லையில் உள்ள சொத்துக்களில் மண்வளத்தையும்,


தற்போதைய விலைமதிப்பையும் கணக்கிட்டு, அனுபவம் செய்வதற்கு வசதியாக
யாருக்கும் பாதகமில்லாமல் மனுதாரர்கள்/வாதிகளுக்கு ஆணையர் வரைபடத்தில்
கண்டுள்ளவாறு நிலங்கள் மற்றும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

..4..

8. ஆகவே கனம் நீதிமன்றம் அவர்கள் தயவு செய்து நீதிமன்ற


ஆணையர்/வழக்கறிஞர் ஆகிய நான் மேற்படி சொத்துக்களை பார்வையிட்டு
மேற்கண்ட வகையில் பாகப்பிரிவினை செய்து உத்தரவிடலாம் என பரிந்துரை
செய்து, சமூகம் நீதிமன்றம் எனக்களித்த உத்தரவை நிறைவேற்றி வரைபடத்துடன்
தாக்கல் செய்யும் இந்த ஆணையர்/வழக்கறிஞர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள
வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கறிஞர்/ஆணையர்

இணைப்புகள்;

1. ஆணையர் வாரண்ட் (2)

2. ஆணையர் வரைபடம்

3. மெமோ

You might also like