You are on page 1of 3

மேன்மைமிகு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்

சங்கராபுரம்
I.A.No. 122 /2014

In

O.S.No. 220 / 2009

கோவிந்தசாமி ... மனுதாரர்/வாதி

எதிர்

பழனியம்மாள் வகையறா ... எதிர்மனுதாரர்கள்


/பிரதிவாதிகள்

ஆணையர்/வழக்கறிஞர் தாக்கல் செய்யும் ஆணையர்


அறிக்கை
மேற்படி வழக்கின் இறுதிநிலை தீர்ப்பாணை மனுவில் குறிப்பிட்டுள்ள மனு
சொத்துக்களை சர்வேயர் உதவியுடன் அளந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி
சமூகம் நீதிமன்றம் எனக்களித்த உத்தரவினைத் தொடர்ந்து இரு தரப்பு
வழக்கறிஞர்கள் முன்னிலையிலும் வாதி, பிரதிவாதிகள் முன்னிலையிலும்,
சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் கடந்த 21.02.2015
அன்று காலை சுமார் 10 மணியளவில் மனு சொத்துக்களை பார்வையிட்டு
சர்வேயர் உதவியுடன் அளந்து கீழ்கண்டவாறு அறிக்கை தாக்கல்
செய்யப்படுகிறது.

1. மனு சொத்துகள் மொத்தம் 11 அயிட்ட சொத்துக்களாகும். இதில் எடுத்தனூர்


கிராம எல்லையில் 1 முதல் 9 அயிட்டங்களும் 10,11 அயிட்டங்கள் சீர்ப்பனந்தல்
எல்லையிலும் உள்ள சொத்துக்களாகும். மனு சொத்தில் 1,8,5 வது அயிட்டமாக
குறிப்பிடப்பட்டுள்ள ச.எண் 68/1, 68/2, 68/5 ஆகிய சொத்துக்கள் அருகருகில்
அமைந்துள்ளது. இது ஆணையர் வரைபடம் 1-ல் ABCD எனவும் EFGH எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ச 68/1, 68/2 ஒரே சொத்துக்களாக உள்ளது.
இதன் நான்கெல்லைகள் வெங்கடாசலம் வகையறா இடத்திற்கும் கிழக்கு, ராஜா,
கோவிந்தன் இடத்திற்கும் மேற்கு, மண்ணம்மாள் இடத்திற்கும் தெற்கு, ராஜா,
கோவிந்தன் இடத்திற்கு வடக்கு, இதன் மத்தியில் மனுதாரர்/வாதிக்கு 1,8 வது
அயிட்டம் இரண்டையும் சேர்த்து ஒரே அளவாக அவரது பாகமான சுமார் 10 ½
செண்டை ஒதுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன்.
2. மனு சொத்தில் 5 வது அயிட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள ச.எண் 68/5 அயிட்ட
சொத்து அதற்கு அடுத்தாற்போல் அமைந்துள்ளது. இது ஆணையர் வரைபடம்
1-ல் EFGH என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நான்கெல்லைகள் ராஜா வகையறா
இடத்திற்கும் கிழக்கு, 69/1 ல் உள்ள ரோட்டிற்கும் மேற்கு, பாட்டை
புறம்போக்கிற்கும் தெற்கு, கோவிந்தன் இடத்திற்கும் வடக்கு, இதன் மத்தியில்
மனுதாரர்/வாதிக்கு அவரது பாகமான சுமார் 7 ¼ செண்டை ஒதுக்கலாம் என
பரிந்துரை செய்கிறேன்.

..2..

3. மனு சொத்தில் 2,3 அயிட்ட சொத்துக்களில் மனுதாரர்/ வாதியின் பாகமானது


மிகக்குறைவாக இருப்பதாலும், ஒதுக்கீடு செய்வது சிரமமாக இருப்பதாலும், இரு
சொத்துக்களும் சம மதிப்பீடு உள்ளதாலும் 2 வது அயிட்டத்திலேயே 3 வது
அயிட்ட பாகத்தையும் சேர்த்து ஒதுக்கப்படுகிறது. இது ஆணையர் வரைபடம் 2-
ல் ABCD என குறிப்பிடப்பட்டுள்ளது. 2 வது அயிட்ட சொத்தில் மனுதாரர்/
வாதியும், எதிர்மனுதாரர்கள்/ பிரதிவாதிகளும் எந்த விதமான தொந்தரவுமின்றி
அனுபவம் செய்ய வசதியாக 3 அடி அகலமும் 32.4 மீ நீளமும் கொண்ட பாதை
அமைக்கப்பட்டுள்ளது. இது ஆணையர் வரைபடம் 2-ல் ADEFG என
குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நான்கெல்லைகள் ஆணையரால் போடப்பட்டுள்ள
3 அடி பொதுபாதைக்கும் கிழக்கு, குமார் மெத்தை வீட்டிற்கும் மேற்கு,
ரோட்டிற்கும் தெற்கு, மீதி இடத்திற்கும் வடக்கு, இதன் மத்தியில்
மனுதாரர்/வாதிக்கு அவரது பாகமான சுமார் 1 ½ செண்டை ஒதுக்கலாம் என
பரிந்துரை செய்கிறேன்.

4. மனு சொத்தில் 4 வது அயிட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள அ.ந.ச.எண் 53/4


எடுத்தனூர் எல்லையில் அமைந்துள்ளது. இது ஆணையர் வரைபடம் 3-ல் ABCD
என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நான்கெல்லைகள் தாண்டவராய கவுண்டர்
இடத்திற்கும் கிழக்கு, கோவிந்தராஜ் இடத்திற்கும் மேற்கு, தர்மலிங்கம்
இடத்திற்கும் தெற்கு, 53/4 ல் உள்ள மீதி இடத்திற்கும் வடக்கு, இதன் மத்தியில்
மனுதாரர்/வாதிக்கு அவரது பாகமான சுமார் 2 ¾ செண்டை ஒதுக்கலாம் என
பரிந்துரை செய்கிறேன்.

5. மனு சொத்தில் 6,7 அயிட்ட சொத்துக்களில் மனுதாரர்/ வாதியின் பாகமானது


மிகக்குறைவாக இருப்பதாலும், ஒதுக்கீடு செய்வது சிரமமாக இருப்பதாலும், இரு
சொத்துக்களும் சம மதிப்பீடு உள்ளதாலும் 7 வது அயிட்டத்திலேயே 6 வது
அயிட்ட பாகத்தையும் சேர்த்து ஒதுக்கப்படுகிறது. இது ஆணையர் வரைபடம் 4-
ல் ABCD என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நான்கெல்லைகள் தர்மலிங்கம்
இடத்திற்கும் கிழக்கு, பெரியதம்பி வகையறா இடத்திற்கும் மேற்கு, பெரியதம்பி
வகையறா இடத்திற்கும் தெற்கு, வாய்க்காலுக்கும் வடக்கு, இதன் மத்தியில்
மனுதாரர்/வாதிக்கு அவரது பாகமான சுமார் 2 ¼ செண்டை ஒதுக்கலாம் என
பரிந்துரை செய்கிறேன்.

6. மனு சொத்தில் 8 வது அயிட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள அ.ந.ச.எண் 48/4


சொத்து எடுத்தனூர் எல்லையில் அமைந்துள்ளது. மேலும் அது ஏற்கனவே 4A,
4B என துணைப்பிரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4A வில் மனுதாரர்/ வாதியின்
பாகம் ஒதுக்கப்படுகிறது. இது ஆணையர் வரைபடம் 5-ல் ABCD என
குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நான்கெல்லைகள் பெரியதம்பி இடத்திற்கும் கிழக்கு,
48/5 பெரியதம்பி இடத்திற்கும் மேற்கு, 4A-ல் உள்ள மீதி இடத்திற்கும் தெற்கு,
தவிடன் இடத்திற்கும் வடக்கு, இதன் மத்தியில் மனுதாரர்/வாதிக்கு அவரது
பாகமான சுமார் 1 செண்டை ஒதுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன்.

7. மனு சொத்தில் 10 வது அயிட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள அ.பு.ச.எண் 312/3


சீர்ப்பனந்தல் எல்லையில் அமைந்துள்ளது. இது ஆணையர் வரைபடம் 6-ல்
ABCD என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நான்கெல்லைகள் பெரியதம்பி
வகையறா இடத்திற்கும் கிழக்கு, தவிடன் இடத்திற்கும் மேற்கு, மீதி இடத்திற்கும்
தெற்கு, வெங்கடேசன் இடத்திற்கும் வடக்கு, இதன் மத்தியில் மனுதாரர்/வாதிக்கு
அவரது பாகமான சுமார் 17 செண்டை ஒதுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன்.

8. மனு சொத்தில் 11 வது அயிட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள அ.பு.ச.எண் 322/1


சீர்ப்பனந்தல் எல்லையில் அமைந்துள்ளது. இது ஆணையர் வரைபடம் 7-ல்
ABCD என குறிப்பிடப்பட்டுள்ளது.

..3..

இதன் நான்கெல்லைகள் ஏரிக்கும் கிழக்கு, தார் ரோட்டிற்கும் மேற்கு, 323/2 ல்


உள்ள ரோட்டிற்கும் தெற்கு, மேற்படி சர்வே எண்ணில் உள்ள மீதி இடத்திற்கும்
வடக்கு, இதன் மத்தியில் மனுதாரர்/வாதிக்கு அவரது பாகமான சுமார் 11
செண்டை ஒதுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன்.

9. மேற்படி இரண்டு கிராம எல்லையில் உள்ள சொத்துக்களில்


மண்வளத்தையும், தற்போதைய விலைமதிப்பையும் கணக்கிட்டு, யாருக்கும்
பாதகமில்லாமல் மனுதாரர்/வாதிக்கு ஆணையர் வரைபடத்தில் கண்டுள்ளவாறு
நிலங்கள் மற்றும் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சில அயிட்ட
சொத்துக்களை அளவீடு செய்தபோது மனுதாரர்/ வாதிக்கு ஒதுக்கீடு செய்வதில்
சிரமங்களும், பேதங்களும் ஏற்பட்டதால் அதற்கு ஈடான மதிப்புடைய மற்றொரு
சொத்தில் மனுதாரர்/வாதிக்கு சொத்துகள் ஒப்படைவு செய்யப்பட்டுள்ளன.

10. ஆகவே கனம் நீதிமன்றம் அவர்கள் தயவு செய்து நீதிமன்ற


ஆணையராகிய நான் சர்வேயர் உதவியுடன் தாவா சொத்தை அளந்து,
உத்தரவை நிறைவேற்றி வரைபடத்துடன் தாக்கல் செய்யும் இந்த ஆணையர்
அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கறிஞர்/ஆணையர்

இணைப்பு;

1. ஆணையர் வாரண்ட் 2. மெமோ

3. ஆணையர் வரைபடம்

You might also like