You are on page 1of 114

(கா)2 ToC

(கா)2 ToC

Copywhatever
அன்புடையீர்,

eப்புத்தகத்தின் ப�ொருளடக்கமும், புகைப்படங்களும் Creative Commons, Copyright, Copyleft,


Copycenter, ப�ோன்ற கட்டுப்பாடுகளுக்குள் அடங்க மறுத்து, திமிறி எழுவதால்...

Disclaimer
eப்புத்தக உருவாக்கத்தில், இதன் வடிவமைப்பாளரைத் தவிர வேறு எந்த விலங்குகளையும், எழுத்தாளர்
துன்புறுத்தவில்லை.

ஜெய் தமிழ் தேசியம்


-பறவைநேசன்
(கா)2 ToC

நன்றி நவில்தல்
எழுத்தாளரின் பல்லாயிரம் குடைச்சல்களுக்கு இடையில்
புத்தக உருவாக்கம் (உதவி)
'நாமக்கல்' பாலா (எ) பெயர் ச�ொல்ல விரும்பாத ஒரு நபர்

வரைபட உதவி Anjali Bala

(சுமாரான) புகைப்படங்கள் உதவி சரவண கணேஷ் மற்றும் க�ொழந்த

நன்றி திரு. கே.என். சிவராமன் மற்றும் 'வசந்தம்' வாரயிதழ்

நன்றி Blog & Facebook வாசகர்கள்

புகார் பெட்டி => KaaSquare@gmail.com


(கா)2 ToC
Bird Conservation Status (கா)2 ToC

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN - International Union for Conservation of Nature) என்னும் அமைப்பால்,
ஒவ்வொரு ஆண்டும் Red List of Threatened Species என்ற பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் ஒவ்வொரு இனத்தின் தற்போதைய +
எதிர்கால காப்பு நிலைகள் (Conservation Status) கருத்தில் க�ொள்ளப்பட்டு, LC , NT , VU , EN , CR , EW & EX என்று
வரையறுக்கப்படுகின்றன. இப்புத்தகத்தில் ஒவ்வொரு பறவையின் பெயருக்கும் அடுத்து, அதன் Conservation Status குறிப்பிடப்பட்டுள்ளது.

»» IUCN Red List of Birds of india (2014)


»» List of Endangered Animals in India
ப�ொருளடக்கம் / CONTENTS (கா)2 ToC

Bird Conservation Status

Find Birds by Color

பறவை ந�ோக்குதல் (Bird Watching / Birding)

எங்கிருந்து த�ொடங்குவது?

பறவை ந�ோக்குதலின் நெறிமுறைகள் (Birding Ethics)

பறவைகளை இனங்காணுவது எப்படி?

Important Bird Areas of Tamilnadu

வாத்துகள் (Ducks / Goose)

புள்ளி மூக்கு வாத்து (Spot-billed Duck) LC

நீலச் சிறகி (Garganey) LC

ஊசிவால் வாத்து (Pintail) LC

நீர்க்காகங்கள் (Cormorants)

பெரிய நீர்க்காகம் (Large Cormorant) LC

சிறிய நீர்க்காகம் (Little Cormorant) LC

க�ொண்டை நீர்க்காகம் (Indian Shag) LC

முக்குளிப்பான் (Little Grebe) LC

பாம்புத்தாரா (Oriental Darter) NT

க�ொக்குகள் (Egrets)

உண்ணிக்கொக்கு (Cattle Egret) LC

சிறுவெண் க�ொக்கு (Little Egret) LC

வெள்ளைக் க�ொக்கு (Intermediate Egret) LC

நாரைகள் (Herons)

மடையான் (Indian Pond Heron) LC

செந்நாரை (Purple Heron) LC

சாம்பல் நாரை (Grey Heron) LC

குருகு (Bittern)

செங்குருகு (Chestnut Bittern) LC

பெரிய நாரைகள் (Storks)

சங்குவளை நாரை (Painted Stork) NT

வெண்கழுத்து நாரை (White-necked Stork) VU

கூழைக்கடா (Pelicans)

சாம்பல் கூழைக்கடா (Spot-billed Pelican or Grey Pelican) NT

அரிவாள் மூக்கன்களும் கரண்டிவாயனும் (Ibises & Spoonbill)

வெள்ளை அரிவாள் மூக்கன் (Black-headed Ibis) NT

சிறிய அரிவாள் மூக்கன் (Glossy Ibis) LC

கருப்பு அரிவாள் மூக்கன் (Black/Red-naped Ibis) LC

கரண்டிவாயன் (Eurasian Spoonbill) LC


(கா)2 ToC

கானாங்கோழிகள் (Waterhen) / நாமக்கோழிகள் (Coot)

தாழைக்கோழி (Common Moorhen) LC

நீலநிற தாழைக்கோழி (Purple Swamphen) LC

வெள்ளை மார்பு கானாங்கோழி (White-Breasted Waterhen) LC

நாமக்கோழி (Common Coot) LC

இலைக்கோழிகள் (Jacana)

நீளவால் இலைக் க�ோழி (Pheasant-tailed Jacana) LC

தாமிர இலைக்கோழி (Bronze-winged Jacana) LC

பறவைகளும் "V" வடிவமும்

உப்புக்கொத்திகள் (Plover)

பட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover) LC

மணல் நிற உப்புக்கொத்தி (Lesser Sand Plover) LC

ஆள்காட்டிகள் (Lapwings)

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing) LC

செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing) LC

உள்ளான்கள் (Stilt/Avocet/Snipe/Sandpiper)

நெடுங்கால் உள்ளான் (Black-Winged Stilt) LC

க�ோணல் மூக்கு உள்ளான் (Pied Avocet) LC

மயில் உள்ளான் (Greater Painted Snipe) LC

ப�ொறி உள்ளான் (Wood Sandpiper) LC

உள்ளான் (Common Sandpiper) LC

பச்சைக் காலி (Common Greenshank) LC

மீன்கொத்திகள் (Kingfishers)

வெண்மார்பு மீன்கொத்தி (White-throated Kingfisher) LC

கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher) LC

சிறுநீல மீன்கொத்தி (Common Kingfisher) LC

தடித்த அலகு மீன்கொத்தி (Stork-billed Kingfisher) LC

பறவைகளும் நிறங்களும்

மயில் (Peafowl) LC

கிளி (Parakeet)

பச்சைக்கிளி (Rose-ringed Parakeet) LC

நீலப் பைங்கிளி (Blue-winged / Malabar Parakeet) LC

குட்டைக் கிளி (Vernal Hanging Parrot) LC

பெரிய பச்சைக்கிளி (Alexandrine Parakeet) NT

பஞ்சுருட்டான்கள் (Bee Eaters)

சிறிய பஞ்சுருட்டான் (Small Green Bee-eater) LC

செந்தலை பஞ்சுருட்டான் (Chestnut-headed Bee-eater) LC

நீலவால் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater) LC


(கா)2 ToC

குக்குறுவான்கள் (Barbets)

கழுத்தறுத்தான் குக்குறுவான் (White-cheeked Barbet) LC

பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet) LC

செம்மார்பு குக்குறுவான் (Coppersmith Barbet) LC

மலபார் குக்குறுவான் (Malabar Barbet) LC

மின்சிட்டுகள் (Minivets)

ஆரஞ்ச் மின்சிட்டு (Orange Minivet) LC

சிறிய மின்சிட்டு (Small Minivet) LC

மாங்குயில் (Indian Golden Oriole) LC

கருந்தலை மாங்குயில் (Black-headed Oriole) LC

மாம்பழச் சிட்டு (Common Iora) LC

பச்சைச் சிட்டு (Golden-fronted Leafbird) LC

நீலச் சிட்டு (Asian Fairy Bluebird) LC

செந்தலைப் பூங்குருவி (Orange-headed Thrush) LC

வலசை மேஜிக்

புறா (Dove/Pigeon)

மாடப்புறா (Blue Rock Pigeon) LC

புள்ளிப்புறா (Spotted Dove) LC

கள்ளிப்புறா (Eurasian Collared-Dove) LC

சின்ன தவிட்டுப்புறா (Little Brown Dove) LC

காக்கை (Crow)

வீட்டுக் காகம் (House Crow) LC

அண்டங்காக்கை (Jungle Crow) LC

வால் காக்கை (Rufous Treepie) LC

குயில் (Cuckoo)

அக்கா குயில் (Common Hawk-cuckoo) LC

சிறுகுயில் (Indian Plaintive Cuckoo) LC

சுடலைக் குயில் (Pied Cuckoo) LC

ஆசியக் குயில் (Asian Koel) LC

செண்பகம் (Greater Coucal) LC

பச்சை வாயன் (Small Green-billed Malkoha) LC

மைனாக்கள் (Mynas)

மைனா (Common Myna) LC

காட்டு மைனா (Jungle Myna) LC

மலை மைனா (Common Hill Myna) LC

ச�ோளப்பட்சி (Rosy Starling) LC

கருங்கொண்டை மைனா (Brahminy Starling) LC


(கா)2 ToC

கரிச்சான்கள் (Drongos)

கருங்கரிச்சான் (Black Drongo) LC

துடுப்பு வால் கரிச்சான் (Greater Racket-tailed Drongo) LC

கரும்பச்சை கரிச்சான் (Bronzed Drongo) LC

வெள்ளை வயிற்றுக் கரிச்சான் (White-bellied Drongo) LC

சிலம்பன்கள் (Babblers)

தவிட்டுக்குருவி (Yellow-billed Babbler) LC

காட்டுச் சிலம்பன் (Jungle Babbler) LC

வெண்தொண்டை சிலம்பன் (Tawny-bellied Babbler) LC

கருந்தலை சிலம்பன் (Dark-fronted Babbler) LC

செஞ்சிலம்பன் (Rufous Babbler) LC

சிட்டுக் குருவி (Sparrow) LC

க�ொண்டைக்குருவிகள் (Bulbuls)

செம்புழை க�ொண்டைகுருவி (Red-vented Bulbul) LC

செம்மீசை சின்னான் (Red-whiskered Bulbul) LC

மஞ்சள் த�ொண்டைச் சின்னான் (Yellow-throated Bulbul) VU

மஞ்சள் புருவச் சின்னான் (Yellow-browed Bulbul) LC

வெண்புருவச் சின்னான் (White-browed Bulbul) LC

ப�ொன்தொண்டை சின்னான் (Flame-throated Bulbul) LC

ஆவணப்படங்கள் (Documentaries)

The Life of Birds - David Attenborough

Winged Migration

Earthflight: The Complete Series

Birds of the Gods

Planet Earth: The Complete BBC Series

பட்டாணிக் குருவிகள் (Tits)

பெரிய பட்டாணிக் குருவி (Cinereous Tit) LC

மஞ்சள் கண் பட்டாணிக் குருவி (Black-lored Yellow Tit) LC

வெல்வெட் நெற்றி பசை எடுப்பான் (Velvet-fronted Nuthatch) LC

ஈப்பிடிப்பான்கள் (Old World Flycatchers)

அரசவால் ஈப்பிடிப்பான் (Asian Paradise Flycatcher) LC

டிக்கெல் நீல ஈப்பிடிப்பான் (Tickell's Blue Flycatcher) LC

சாம்பல் தலை ஈப்பிடிப்பான் (Grey-headed Canary-flycatcher) LC

க�ொண்டு கரிச்சான் (Oriental Magpie Robin) LC

கருஞ்சிட்டு (Indian Robin) LC

கருப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bush Chat) LC

சாம்பல் கதிர்க்குருவி (Ashy Prinia) LC

ப்ளித் நாணல் குருவி (Blyth's Reed Warbler) LC


(கா)2 ToC

சாம்பல் தலை வானம்பாடி(Ashy-crowned Sparrow Lark) LC

வயல் நெட்டைக் காலி (Paddyfield Pipit) LC

கவுதாரி (Grey Francolin) LC

காடை (Common Quail) LC

கீச்சான்கள் (Shrikes)

செம்முதுகு கீச்சான் (Rufous-backed Shrike) LC

கருஞ்சிவப்பு முதுகு கீச்சான் (Bay-backed Shrike) LC

சில்லை (Munia)

வெண்முதுகு சில்லை (White-rumped Munia) LC

கருந்தலை சில்லை (Black-headed Munia) LC

வெண்தொண்டை சில்லை (White-throated Munia) LC

தகைவிலான்கள் (Swallows)

சிகப்புப் புட்டத் தகைவிலான் (Red-rumped Swallow) LC

கம்பிவால் தகைவிலான் (Wire-tailed Swallow) LC

விடுமுறையில் என்ன செய்யலாம்?

இருவாச்சிகள் (Hornbills)

சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill) LC

மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar Grey Hornbill) LC

க�ொண்டலாத்தி (Eurasian Hoopoe) LC

பனங்காடை (Indian Roller) LC

தூக்கணாங்குருவி (Baya Weaver) LC

தையல் சிட்டு (Common Tailorbird) LC

பூக்கொத்திகள் (Flowerpeckers)

டிக்கல் பூக்கொத்தி (Tickell's Flowerpecker) LC

தடித்த அலகு பூக்கொத்தி (Thick-billed Flowerpecker) LC

தேன்சிட்டுகள் (Sunbirds)

ஊதா தேன்சிட்டு (Purple Sunbird) LC

ல�ோடன் தேன்சிட்டு (Loten's Sunbird) LC

ஊதா பிட்ட/ஊர்தேன்சிட்டு (Purple-rumped Sunbird) LC

சின்ன தேன்சிட்டு (Crimson-backed Sunbird) LC

சிலந்தி பிடிப்பான் (Little Spiderhunter) LC

வெள்ளைக் கண்ணி (Oriental White-eye) LC

வாலாட்டிகள் (Wagtails)

வெண்புருவ வாலாட்டி (White Browed Wagtail) LC

கரும் சாம்பல் வாலாட்டி (Grey Wagtail) LC

மஞ்சள் வாலாட்டி (Yellow Wagtail) LC

காட்டு வாலாட்டி (Forest Wagtail) LC


(கா)2 ToC

ஆந்தைகள் (Owl)

புள்ளி ஆந்தை (Spotted Owlet) LC

கூகை (Barn Owl) LC

மரங்கொத்திகள் (Wood peckers)

கரும்பிட்ட ப�ொன்முதுகு மரங்கொத்தி (Black-rumped Flameback Woodpecker) LC

ப�ொன்முதுகு மரங்கொத்தி (Common Flameback Woodpecker) LC

சின்ன மரங்கொத்தி (Brown-capped Pygmy Woodpecker) LC

கரும்புள்ளி மரங்கொத்தி (Heart-spotted Woodpecker) LC

மஞ்சள் பிடரி மரங்கொத்தி (Lesser Yellownape Woodpecker) LC

பருந்துகளும், வல்லூறும் (Kites & Hawk)

செம்பருந்து (Brahminy Kite) LC

கரும்பருந்து (Black Kite) LC

கருந்தோள் பருந்து (Black-shouldered Kite) LC

வைரி (Shikra) LC

பாம்புப் பருந்து (Crested Serpent Eagle) LC

செந்தலை வல்லூறு (Red-necked Falcon) NT

பறவைகள் / சூழலியல் / விலங்குகள் - சில புத்தகங்கள்

ஆங்கிலத்தில் பறவைகள் குறித்த சில நூல்கள்

குறிப்பிடத்தக்க இணையதளங்கள்

References

Books

Websites
Find Birds by Color (கா)2 ToC
பறவை ந�ோக்குதல் (Bird Watching / Birding) (கா)2 ToC

உலகின் அனைத்து உயிரினங்களும் செய்யக் கூடிய ஓடுவது, நீந்துவது, ஊர்வது, தாவுதல் ப�ோன்ற சமாச்சாரங்கள் எல்லாம்… மனித இனத்திற்கும்
ப�ொதுவானது. ஆனால் ஒன்றே ஒன்றைத்தவிர. பறப்பது.

எப்படியாவது பறந்தாக வேண்டும் என்ற வெறியில் இறக்கை ப�ோன்ற அமைப்புகளின் உதவியுடன் உயரமான இடங்களிலிருந்து குதித்து, பறக்க
முயற்சித்தவர்கள் பற்றிய தகவல்கள் வரலாறு நெடுகிலுமுண்டு. "ம�ோனாலிஸா" புகழ் லியனார்டோ டாவின்சி இப்படி அடிக்கடி குதித்து பல
விழுப்புண்கள் பெற்றத�ொரு ஆசாமி. ஆக, பறப்பது / பறவைகள் சார்ந்த உந்துதல் ஆதிகாலம் த�ொட்டு இன்றுவரை மனிதர்களிடம் த�ொடர்ந்து
க�ொண்டுதான் இருக்கிறது. சிறுவயதில் பறவைகள், விலங்குகள் மீதான பிடிப்பிற்கு நாம் அனைவரும் விதிவிலக்கானவர்கள் அல்ல. வயது வளரவளர
நாம் இழக்கும் பல நல்ல விஷயங்களில் ஒன்று அவ்வயதிற்கே உண்டான, ஏறக்குறைய எல்லா விஷயங்களின் மீதும் ஏற்படும் ஈர்ப்பு; 'என்ன
இது' என்று தெரிந்துக�ொள்ளும் அதீத ஆர்வம்(Curiosity). குழந்தைகள் இயல்பிலேயே ஆராய்ச்சியாளர்கள் தானே. காக்கை ச�ோறு உண்பதைக்
கூட அப்போது ரசித்துப் பார்த்திருப்போம். ஒரு கட்டத்திற்குப் பிறகு இதுப�ோன்ற விஷயங்களை எல்லாம் கவனிக்க நேரம் வாய்ப்பதில்லை அல்லது
ஆர்வம் இருப்பதில்லை.

தனிப்பட்ட ஆர்வம், ப�ொழுதுப�ோக்கு என்பதையெல்லாம் தாண்டி பறவைகள், விலங்குகள், காடுகள் என்று சூழலியல் பற்றிய பரந்துபட்ட பார்வையையும்,
அக்கறையையும் தீவிரப்படுத்த வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் இருக்கிற�ோம். ப�ொருளாதார தன்னிறைவு என்ற பெயரில் உலகநாடுகள்
இத்தனை ஆண்டுகளாக செய்துவரும் வளர்ச்சிப்பணிகள் காரணமாக டாமின�ோ விளைவு ப�ோல படக்படக்கென்று நமது சூழலியலின் கட்டமைப்பு
சரியத்தொடங்கி, இன்று மீளமுடியாத ஒரு கட்டத்திற்கு சென்று க�ொண்டிருக்கிற�ோம�ோ என்று த�ோன்றுகிறது. ஆனால் இப்புத்தகத்தின் ந�ோக்கம்
சூழலியல் குறித்தான கட்டுரைகள் என்பதாக இருக்காது. மிகமிக எளிமையான பார்வையுடன் தான் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நாம் ரயிலில�ோ
பேருந்தில�ோ சென்றுக�ொண்டிருக்கும் ப�ோது, கடந்து ப�ோகும் மின்சாரக்கம்பிகளின் மீது அட்டகாசமான நீல நிறத்தில் - பெரும்பாலும் தனியாளாக
- உட்காந்திருக்கும் ஒரு பறவையை அடிக்கடி பார்த்திருப்போமே, அதன் பெயர் என்ன? பனங்காடை. இணையை கவர்வதற்காக வானில் பல
சாகசங்களை நிகழ்த்தும் ஒரு பறவை.

இதுப�ோன்ற மிகஅடிப்படையான செய்திகளின் மூலம் படிப்பவர்களிடையே பறவை ந�ோக்குதல், சூழலியல் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்த முயல்வதே
இப்புத்தகத்தின் ந�ோக்கமாகும். குறிப்பாக, இதனைப் படிக்கும் பெற்றோர்கள் மூலம் அவர்கள் குழந்தைகளிடம் இவ்விஷயம் ப�ோய்ச்சேர்ந்தால் அதைவிட
வேறன்ன சந்தோஷம் இருக்க முடியும். மற்றொரு முக்கிய விஷயம், அக்டோபர் முதல் பல வெளிநாட்டுப் பறவைகள் நம்மூரில் முட்டையிட்டு
குஞ்சுப�ொரிப்பதற்காக வலசை (Migration) வர ஆரம்பிக்கும். நீர்நிலைகளின் ஓரம் பலவகைப் பறவைகளை, சற்று சுலபமாக இக்காலங்களில்
பார்க்கலாம். அது ப�ோன்ற காலங்களில் இதுமாதிரியான ஈபுக், பெரும்பாலான மக்கள் உபய�ோகபபடுத்தும் டேப்லட் / ம�ொபைலிலேயே படிக்கக்
கிடைத்தால், ஒரு சிறிய துவக்கமாக இருக்கும் என்று த�ோன்றுகிறது. அடுத்தடுத்த பகுதிகளில் எங்கிருந்து பறவை ந�ோக்குதலை த�ொடங்குவது,
எவ்வாறு பறவைகளை பிரித்தறிவது என்பதில் த�ொடங்கி பரவலாக தமிழகத்தில் காணப்படும் பறவை வகைகள் என்பது பற்றியெல்லாம் பார்க்கத்
த�ொடங்குவ�ோம்.
எங்கிருந்து த�ொடங்குவது? (கா)2 ToC

பறவை ந�ோக்குதலை த�ொடங்க நினைக்கும் பலருக்கும் இயல்பிலேயே இக்கேள்வி எழும். எங்கிருந்து த�ொடங்குவது? வெகு சுலபம். நம் வீட்டில்
இருந்துதான். முதலில் வீடு -> நாம் வசிக்கும் பகுதி -> ஊர் என்று ஆரம்பித்து பின்னர் பறவை சரணாலயங்கள், முக்கிய வாழிடங்கள் என்ற
வரிசையில் செல்வது ப�ொருத்தமானதாக இருக்கும். நம்மைச் சுற்றியே மிகச்சாதாரணமாக, குறைந்தது பத்து வகைப் பறவைகளையாவது காண
முடியும். கிராமப்புறங்களில் மட்டுமே பறவைகள் அதிகமாக வாழும்; நகர்புறங்களில் அவ்வளவாக பறவைகள் இருக்காது என்ற கருத்து பலகாலமாக
நம்மிடையே புழக்கத்தில் உண்டு. மக்கள் பிதுங்கி வழியும் நகரத்தில் ஒன்று - எங்கு திரும்பினாலும் கட்டிடங்கள் - ம�ோசமான ஒலி மாசுபாடு என்று
பல பெருமைகளை தன்னகத்தே க�ொண்ட டெல்லியில் எத்தனை வகைப் பறவைகள் உள்ளன தெரியுமா? சுமார் 450. இது இந்தியாவின் ம�ொத்த
பறவை இனங்களில்(1300) கிட்டத்தட்ட 33%. சென்னையை எடுத்துக் க�ொள்வோமே. 200க்கும் அதிகமான பறவையினங்கள் சென்னையில் உண்டு.
இப்பிடி நம்மைச் சுற்றி ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பறவைகள் இருக்கவே செய்கின்றன. இங்கிருந்தே நமது பயணத்தை ஆரம்பிக்கலாம்.

நம்மூரில் இருக்கும் குளம், குட்டை, ஏரி ப�ோன்ற நீர்நிலைகளில் நிச்சயமாக பலவகைப் பறவைகளைக் காண முடியும். இன்னும் குறிப்பாக, நவம்பர்
மாதங்களில் பல வெளிநாட்டு பறவைகள் நம்மூரின் தட்பவெட்ப நிலையை விரும்பி, வலசை வர ஆரம்பிக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
வேண்டும். நாம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் மரங்கள் அடர்ந்த இடங்கள், புதர்கள் ப�ோன்றவைகளிலும் பலவகைப் பறவைகளைக் காண
முடியும். சற்று கவனத்துடன் நமது குடியிருப்பு பகுதிகளை பார்க்கவும்/கேட்கவும் பழகிக் க�ொண்டால் பறவையின் வாழிடங்கள் குறித்த சூட்சமங்கள்
க�ொஞ்சம் க�ொஞ்சமாக பிடிபடத் த�ொடங்கிவிடும். நமது வீடுகளில் பறவைகள் நீரருந்த தட்டு ப�ோன்ற வஸ்துக்களில் நீர் வைப்பது, உணவுக் கூடுகள்
(Feeders) ப�ோன்றவைகளை மரக்கிளைகள் மாதிரியான உயரமான இடங்களில் த�ொங்க விடுவதன் மூலம் நம் வீட்டிற்கே இச்சிறிய விருந்தாளிகளை
வரவைக்கலாம் (அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களுக்கு இது ஒன்றே வழி). க�ோடைக் காலங்களில் பறவைகளுக்கு மிகப்பெரிய இளை-
ப்பாறுதலாகவும் இவ்விஷயங்கள் அமையும்.

பறவைகளை "பார்ப்பது" என்ற நிலையிலேயே நின்று விட்டால் ப�ோதுமா? அதற்கடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்தானே?! அதற்கு சில
விஷயங்கள் தேவைப்படவே செய்கின்றன. அடங்கமாட்டா ஆர்வம் + குறிப்பெழுத சிறிய ந�ோட் + முடிந்தால் நல்ல பைனாகுலர் ஒன்று (சைனா
மேக் வேண்டாம். கண்களையும் சேர்த்துக் கெடுத்துவிடும்). இதன�ோடு, பறவையினங்கள் பற்றிய நல்ல குறிப்புப் புத்தகம் ஒன்று. புகழ் பெற்ற
பறவையிலாளர் சாலிம் அலி-யின் புத்தகத்தில் த�ொடங்கி, க்ரியா பதிப்பகத்தின் பறவைகள்: அறிமுகக் கையேடு வரை பலதரப்பட புத்தகங்கள்
உண்டு. சாலிம் அலியின் "The Book of Indian Birds" நல்லத�ொரு ஆரம்பமாக அமையும். இதுப�ோக திய�ோடர் பாஸ்கரன், ச.முகமது அலி
ப�ோன்ற சூழலியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களும் தற்போது பரவலாகக் கிடைக்கின்றன. புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்லும்பொழுது இத்தகைய
புத்தகங்கள் குறித்தும் நினைவில் வைத்துக்கொள்வோம்.

பைனாகுலர் - கேமரா ப�ோன்ற கருவிகள் கட்டாயம் தேவையா?


கட்டாயம் என்றில்லை. இருந்தால் மிக நல்லது. குறிப்பாக, நல்ல பைனாகுலர். மிகத்துல்லியமாக பறவைகளைக் காண பெரிதும் இது
உதவும். தவிர, பறவைகளை த�ொந்தரவு செய்யாமல் தூரத்தில் இருந்தே ரசிக்க முடியும்.
கேமரா - பறவைகளை புகைப்படங்களை எடுப்பதென்பது வேறு விஷயம். அதிலும் துல்லியமாக ஃப�ோட்டோ எடுப்பதென்றால்
சற்று விலையுயர்ந்த லென்ஸ்கள் தேவை. ஆனால் நாம் பார்த்த பறவைகளை அடையாளம் வைத்துக்கொள்ள, நமது தனிப்பட்ட
தேவைகளுக்கு என்று வரும்போது தற்போதுள்ள நல்ல zoom க�ொண்ட ஆரம்பநிலை Point & Shoot கேமராக்களே கூட
ப�ோதுமானது.
பறவை ந�ோக்குதலின் நெறிமுறைகள் (Birding Ethics) (கா)2 ToC

பறவை ந�ோக்குதலுக்காக…, ஜ�ோராக கிளம்பும் ப�ோது, மிக முக்கியமானத�ொரு விஷயத்தை கவனத்தில் க�ொள்ள வேண்டும். பறவை ந�ோக்குதலின்
நெறிமுறைகள் (Birding Ethics) தான் அது. Facebookல�ோ, நண்பர்கள் மத்தியில�ோ புகைப்படத்தைக் காட்டி பேர் வாங்க வேண்டும் என்பதில்
ஆரம்பித்து, நமது சுயநலத்திற்காக பறவைகளையும் அதன் வாழ்விடங்களையும் நாம் அச்சுறுத்திக் க�ொண்டேதான் இருக்கிற�ோம். ஹைவேசில்
சென்று க�ொண்டிருக்கும் ப�ோது, டிம் செய்யாமல் வரும் வண்டிகளின் வெளிச்சம் நம் கண்களில் சில நிமிடங்களுக்கு விழுவதே நமக்கு எவ்வளவு
எரிச்சலை ஏற்படுத்துகிறது?! ‘மசினகுடி’ மாதிரியான இடங்களில் வாகனங்களின் ஹைட்லைட் வெளிச்சத்தை திடீரென்று ஒரு விலங்கின் கண்களில்
அடித்து அதனை ஸ்தம்பிக்க வைக்கும் நிகழ்வுகள் பலவும் நடக்கின்றன. ப்ளாஷ் உபய�ோகிப்பதில் இருந்து ஏகப்பட விஷயங்களிள் கவனமாக இருக்க
வேண்டும்.

»» நாம்தாம் அவற்றின் எல்லைக்குள் நுழைகிற�ோம் என்பதை மனதில் க�ொண்டு அடக்கி வாசித்தல் நலம். அவற்றிக்கும் ப்ரைவசி உண்டுதானே!
»» காச்மூச் என்று கத்திக் க�ொண்டிருப்பதும், உரக்க பேசுவதும் செல்போனிகளின் மிதமிஞ்சிய சத்தத்துடன் கூடிய ரிங்டோன்கள்… ப�ோன்றவைகளை
தவிர்க்க வேண்டும்
»» மிகமிக முக்கியமானது - அடைகாக்கும் காலங்களில் பறவைகளை எவ்விதத்திலும் நெருங்குவதை தவிர்க்க வேண்டும். எரிச்சலடைந்தோ
கலக்கமுற்றோ பறவைகள் முட்டையை விட்டுவிட்டு பறக்க வாய்ப்புண்டு.
»» ப்ளாஸ்டிக், பாலிதீன் ப�ோன்ற ப�ொருட்களை காடுகளில் உபய�ோகிக்கக் கூடாது (ப�ொதுவாகவே இவைகளை தவிர்க்க முடிந்தால் நல்லது).
»» நாம் என்ன பறவையைப் பார்த்தோம் என்ற தெளிவில்லாவிட்டால் அதனைக் கணக்கில்கொள்ளக் கூடாது. அதனைப் பார்த்ததாகவும்
ச�ொல்லிக் க�ொண்டு திரியக்கூடாது.

Source: http://nothingseriousjustcomics.blogspot.in/2012/04/birding.html
பறவைகளை இனங்காணுவது எப்படி? (கா)2 ToC

எங்கிருந்து பறவை ந�ோக்குதலை த�ொடங்குவது என்பது பற்றிய சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். நமது குடியிருப்பின் அருகாமையிலயே பறவைகள்
வந்துப�ோகும் ஒரு இடத்தைக் கண்டுக�ொண்டோம் என்று வைத்துக் க�ொள்வோம். ஒரு நல்லநாளாகப் பார்த்து பறவை ந�ோக்குதலுக்காக அங்கே
செல்கிற�ோம் (எந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பது? பெரும்பாலும் அதிகாலை மிகஉகந்த நேரம். பறவைகள் வெகு சுறுசுறுப்பாக இரை தேடத் த�ொடங்கும்
நேரமது. அதுப�ோக மதிய நேரமும், அந்திசாயும் ப�ொழுதும் உகந்த நேரங்களே). எவ்வாறு பார்க்கும்/பார்த்த பறவைகளை இனங்காணுவது? அதற்குச்
சில வழிமுறைகள் உள்ளன.

உடல்/சிறகுகள் வண்ணம் & அமைப்பு (Color Pattern): ஒரு பறவையைப் பார்க்கும்போது, பெரும்பாலும் முதலில் நம் கண்ணில்படுவது
அதன் வண்ணங்களே. எந்த இடத்தில் என்ன மாதிரியான நிறம் என்பதையே முதலில் கவனிக்க வேண்டும். சிறகுகளின் நிறங்கள்; அலகு/தலையில்
இருக்கும் நிறங்கள்; மார்பு/வயிறு ப�ோன்றவற்றின் நிறங்கள்; விஷேசமாக க�ொண்டை/மீசை ப�ோன்ற அமைப்புகள் உள்ளனவா என்று அனைத்தையும்
கவனிக்க முயற்சிக்க வேண்டும் (இங்குதான் பைனாகுலர் ப�ோன்ற சாதனங்கள் பெரிதும் உதவும்)

அளவு & வடிவம் (Size & Shape): அளவைப் ப�ொறுத்தவரை, நமக்கு பரிட்சயமான பறவையை வைத்து இதனை முடிவு செய்யலாம். காக்கையை
விட பெரிதான, சிட்டுக் குருவியை விட சிறிய என்பது ப�ோல. மற்றொரு முக்கிய அம்சம், வடிவம். மரங்கொத்தி ப�ோன்ற பல பறவைகளுக்கு
தனித்துவமான உருவமைப்பு உண்டு.

அலகின் அமைப்பு (Beak/Bill Structure): மிகமிக முக்கியமானத�ொரு அம்சம். ஒவ்வொரு பறவைக்கும் அதன் வாழ்க்கைமுறைக்கு ஏதுவாகவே
அலகு இருக்கும். தேன் சிட்டுக்களுக்கு, தேனுறிஞ்ச ஏதுவாக நீண்ட அலகு, மரங்கொத்திகளுக்கு மிகக்கடினமான அலகு, பூச்சிகளை பிடிக்க
ஏதுவாக பஞ்சுருட்டான்களுக்கு பூச்சிபிடி அலகு என்று ஒவ்வொரு பறவையின் அலகும் விஷேஷமானது.

Source : Wikipedia

வாழிடம் (Habitat): ஒவ்வொரு பறவைக்கும் குறிப்பான வாழிடங்கள் உண்டு. ஆந்தை என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் வாழும்.
பெரும்பாலான மீன்கொத்திகள் நீர்நிலைகளின் அருகிலேயே வாழும். அதனால் பறவை ந�ோக்குதலின் ப�ோது, எந்த இடத்தில் பறவையைப்
பார்த்தோம், மரத்திலா - நீர்நிலையின் அருகிலா அல்லது நீருக்குள்ளா என்பதைக் குறித்துவைத்துக் க�ொள்ள வேண்டும்.

பழக்கங்கள் (Behavioral Aspects): அடிக்கடி வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறதா அல்லது வாலை விசிறிக் க�ொண்டிருக்கிறதா, பறந்து பறந்து
பூச்சிகளைப் பிடிக்கிறதா என்பதில் ஆரம்பித்து எப்படி கூடு கட்டுகிறது என்பதுவரை அனைத்தையும் கவனிக்க வேண்டும். கருப்பு வெள்ளை
மீன்கொத்தி (Pied Kingfisher) மீன்பிடிக்கும் முறை அலாதியானது. நீர்நிலைகளுக்கு மேலே பறந்து க�ொண்டிருக்கும் ப�ோது, அப்படியே
அந்தரத்தில் நின்று… கீழே மீன்கள் தெரிகின்றனவா என்பதை உறுதி செய்துக�ொண்டு மேலிருந்து… சர்ர்ர்ர்ர்ரென்று இறங்கி டைவ் அடித்து தான்
மீன் பிடிக்கும். அதுப�ோல, மரங்கொத்திகள் மற்ற பறவைகளிடத்திலிருந்து வேறுபட்டு, செங்குத்தாக மரங்களில் ஏறவும் இறங்கவும் செய்யும்.

அழைப்பு & கீச்சல் (Call): மிக குறுகிய அளவிலயே ஒலிக்கும். ஆண்,பெண் இரண்டுமே இடைவிடாமல் இதனை ஒலித்துக் க�ொண்டிருக்கும்.
ப�ொதுவாக இரை, இடம், தற்காப்பு ப�ோன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அழைப்பு இருக்கும். கீச்சல் (Song) என்பது த�ொடர்ச்சியாக -
அழைப்புகளைவிட நீண்டதாக - ஏற்ற இறக்கங்கள�ோடு, ஒரு ரிதமில் ஒலிக்கும்.
(கா)2 ToC

பறக்கும் முறை (Flying Pattern): புறா ப�ோன்ற பறவைகள் பறக்கும் ப�ொழுது இறக்கைகளை படபடவென்று அடித்துக்கொண்டே பறக்கும்;
கழுகு ப�ோன்ற பறவைகள் இறக்கைகளை பெரும்பாலும் விரித்தபடியே பறந்துக�ொண்டிருக்கும்; கழுகிலும் சிலவகைகள் வட்டமிடும்; சில வகைகள்
நேராகப் பறக்கும்; மரங்கொத்தி ப�ோன்ற பறவைகள் பறக்கும் ப�ொழுது ஏற்ற இறக்கமாகப் பறக்கும் (அலை வடிவில்) - இப்படி பறக்கும் முறைகளும்
ஒவ்வொரு பறவைக்கும் மாறுபடும்.

கூட்டின் அமைப்பு (Nest): ஒவ்வொரு பறவைக்கும் பிரத்தியேகமான கூடு கட்டும் முறை உண்டு. உதாரணமாக, நமது வீட்டுத் த�ோட்டங்களில்
அடிக்கடி தென்படும் தையல் சிட்டு (Common Tailorbird), இலையை மடித்து மிககச்சிதமாக நடுவில் தைய்க்கும். அதனால் கூடுகளும் எந்த
மாதிரியான பறவை என்பதை கண்டறிய பெரிதும் உதவும்.

குறிப்பு ந�ோட் மிக அவசியம் என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் க�ொள்ளுங்கள். ஒரு புதிய பறவையை காண நேர்கிறது. நாம் செய்ய வேண்டியது,
தேதி - நேரம் - பார்த்த இடம் - இதன�ோடு, மேல பார்த்த ஐந்து பாய்ண்ட்களையும் சேர்த்து ஒரு சிறுகுறிப்பை எழுதி வைத்துக்கொள்ள வேண்டியது.
புகைப்படம் எடுக்க முடிந்தால் இன்னும் நலம். அவ்வளவே. வீட்டிற்கு வந்து நம்மிடம் இருக்கும் பறவைகள் பற்றிய புத்தகத்தில�ோ இணையத்தில�ோ
அக்குறிப்புகளை வைத்துத் தேடினால் அப்பறவையைப் பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்துக�ொள்ள முடியும்.

பறவைகளின் பாகங்கள்
(கா)2 ToC
(கா)2 ToC
Important Bird Areas of Tamilnadu (கா)2 ToC

Interactive Google Map -


இங்கே க்ளிக் செய்யவும்

Links to Birding Sites

1. Pallikaranai Marshland, Chennai 14. Srivilliputhur Wildlife Sanctuary 27. Gulf of Mannar marine national park,
Ramanathapuram
2. Grass Hills, Coimbatore 15. Shola’s, Kodaikanal
28. Governor’s Shola, Nilgiri
3. Mukuruthi, Nilgiris 16. Poomparai, Dindigul
29. Kanjirankulam & Chitragudi, Ramanathapuram
4. Wellington Reservoir, Cuddalore 17. Muthukuzhi, Nagaercoil
30. Cairnhill Forest, Nilgiris
5. Virakasamuthirakulam, Virudhunagar 18. Naduvattam, Nilgiris
31. Bison Swamps, Nilgiris
6. Vettangudi, Sivagangai 19. Koonthangulam, Tirunelvelli
32. Sakarakottai Kanmai, Ramanathapuram
7. Veeraanam Lake, Cuddalore 20. Karaivetti Wildlife Sanctuary, Tirchy
33. Berijam, Kodaikanal
8. Vedanthaangal, Chengalpet 21. Kothagiri, Nilgiris
34. Avalanche, Nilgiris
9. Vaduvoor Lake, Tiruvaarur 22. Kullur Sandhai, Virudhunagar
35. Point Calimere Bird Sancturay, Nagai
10. Vandioor Tank, Madurai 23. Mudhumalai, Nilgiris
36. Pulicat Lake
11. Tirunelvelli Reserve Forest 24. Kalveli Tank, Cuddalore

12. Thaishola, Nilgiri 25. Kalakaad & Mundandhurai, Tirunelveli

13. Suchindaram - Theroor - Vembanoor, Kanyakumari 26. Indira Gandhi Wildlife Sanctuary, Coimbaotre
வாத்துகள் (Ducks / Goose) (கா)2 ToC

‘வாத்து மடையன்’ அதுஇது என்று வாத்துக்கள் அறிவு கம்மியான பறவைகளாகவே பலகாலமாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. இதில் துளியும்
உண்மையில்லை. இமயமலையைக் கூட கடந்து வலசை வரும் ஒரே பறவை - வாத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பட்டைத்தலை வாத்து (Bar-headed
Goose). சாதாரண நிலையில் கிடைக்கும் ஆக்சிஜனை விட 10% தான் இமயமைலையை இப்பறவைகள் கடக்கும் பாதையில் இருக்கும். ஆனால்
அவற்றை எல்லாம் சமாளித்து, த�ொடர்ந்து இறக்கைகளை அடித்தபடியே பறக்கும். அத்தகைய தகவமைப்பும் வலிமையையும் பட்டைத்தலை
வாத்துகளுக்கு உண்டு.

வாத்துகளின் இறக்கைகள் ரெயின்கோட் ப�ோல செயல்படக்கூடியது. எந்தளவிற்கு என்றால், நீரில் முழுதாக மூழ்கினாலும் அதன் அடிப்பாகம் பெரிதாக
ஈரமாகியிருக்காது. வாத்துகள் என்ற ப�ொதுப்பெயரில் நாம் அழைத்தாலும், "Duck" - அதன் உறவினரான "Geese, Swan" ப�ோன்றவைகளை
விட அளவில் சிறியது.

தாவரங்களையே விரும்பி உண்ணும் என்றாலும், சந்தர்பம் கிடைத்தால் சிறு மீன்களையும், நத்தைகள் ப�ோன்றவைகளும் உண்ணும். கூட்டமாக
வாழ்வதை விரும்பும் ஒரு பறவை.

புள்ளி மூக்கு வாத்து (Spot-billed Duck) LC

தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படும் வாத்து வகை.


அலகு - கருப்பு, மூக்கு, அதாவது அலகின் நுனி -
மஞ்சள் நிறத்தில் இருக்கும். கழுத்து முதல் அடிவயிறு
வரை சாம்பல் நிறம். அதில் செதில்கள் ப�ோன்ற
அமைப்பு காணப்படும். உடல் முழுவதும் பழுப்பு நிறம்.
கால்கள் ஆரஞ்ச் நிறம். பெரும்பாலும் தாவரங்களையே
உண்ணும் - அதுவும் நீரின் மேற்புறத்தில் இருக்கும்
தாவரங்களை.

நீலச் சிறகி (Garganey) LC

சற்று சிறிய உருவம் க�ொண்ட வாத்து வகை. இவைகளும்


புள்ளி மூக்கு வாத்து ப�ோன்றே நீரின் மேற்பரப்பிலேயே
தங்களது உணவுத் தேவையை முடித்துக்கொள்ளும்
(இதுப�ோன்ற - நீரின் மேற்பரப்பில் உணவை
முடித்துக்கொள்ளும் - வாத்து வகைக்கு Dabbling
ducks என்று பெயர்). கண்ணைச் சுற்றி தெளிவான
வெள்ளைப் பட்டை காணப்படும். உடல் முழுவதும் பழுப்பு
நிறம் + செதில்கள் காணப்படும். முகமும் வெளிறிய
பழுப்பு நிறம். இது வலசை ப�ோகும் பறவை.

Male & Female

ஊசிவால் வாத்து (Pintail) LC

மற்ற இரண்டு வாத்து வகைகளைப்


ப�ோலல்லாமல், இது நீரின் உள்ளே மூழ்கி
உணவைத் தேடக்கூடியது. ஆண் இனத்திற்கு
ஊசி ப�ோன்ற வாலும், கழுத்தின் இருபக்கமும்
வெள்ளை பட்டையும் காணப்படும். பெண்
இனத்திற்கு ஊசி ப�ோன்ற வாலிருக்காது.
பழுப்பு நிற உடலைக் க�ொண்டிருக்கும். இதுவும்
வலசை ப�ோகக் கூடிய பறவை. இந்தியாவிற்கு
அதிகமாக வலசை வரக்கூடிய பறவைகளில்
இதுவும் ஒன்று.
நீர்க்காகங்கள் (Cormorants) (கா)2 ToC

நீர்நிலைகளின் அருகில் பலதடவை… இறக்கையை விரித்தபடி, சற்றே பெரிய காகம் ப�ோன்ற த�ோற்றத்துடன் கூடிய ஒரு பறவையை நிச்சயம் நம்மில்
பலர் பார்த்திருக்கக் கூடும். நீர்க்காகம் தான் அந்தப் பறவை. வாத்து + காக்கை கலந்த கலவை ப�ோல இருக்கும். நீர்க்காகங்கள் வெளிறிய கருப்பு
நிறத்தில் இருக்கும். குட்டையான கருப்பு நிற வாலைக் க�ொண்டிருக்கும். தனித்துவமான மற்றொரு குணம், இறக்கையை அடிக்கடி உலர்த்தும். தவிர,
நீர்க்காகங்கள் அனைத்துமே மிகச்சிறந்த நீச்சல் வீர்கள். படுலாவகமாக டைவ் அடித்து மீன்களை படக்கென்று பிடித்துவிடும். எந்தவகை நீர்க்காகமாக
இருந்தாலும் சரி, கூடுகட்டும் முறை ஒன்றுப�ோலவே தான் இருக்கும்.

பெரிய நீர்க்காகம் (Large Cormorant) LC

பெயருக்கேற்றபடி மற்ற நீர்க்காகங்களை விட


பெரியது. வாத்தின் அளவிற்கு இருக்கும்.
தடிமனான அலகினைக் க�ொண்டது.
அடைகாக்கும் காலங்களில், காலில் வெள்ளை
நிற தீற்றல்களைக் காணலாம். இளம்
பறவைகள், பழுப்பு + கருப்பு நிறக் கலவையைக்
க�ொண்டவை. சீனா ப�ோன்ற நாடுகளில், இந்த
வகைப் பறவையை மீன் பிடிக்க பயன்படுத்து-
கின்றனர்.

சிறிய நீர்க்காகம் (Little Cormorant) LC

அண்டங்காக்கையின் அளவிற்கு இருக்கும். டாலடிக்கும் கருப்பு நிறத்தைக் க�ொண்டது. மற்ற நீர்க்காகங்களைக் காட்டிலும் சிறிய அலகினைக்
க�ொண்டது. த�ொண்டையில் வெள்ளைநிற பட்டை ஒன்றைக் காணலாம். சிறுசிறு குழுக்களாக, குளம் - குட்டைகள் - முகத்துவாரங்களின் அருகில்
வசிக்கும். மீன்களே இதன் பிராதன உணவு. மீன்களைப் பிடிக்க சின்ன சின்ன டைவ்களை நீருக்குள் அடிக்கடி நிகழ்த்தும்.

க�ொண்டை நீர்க்காகம் (Indian Shag) LC

சிறிய நீர்க்காகத்தை விட சற்று பெரியது.


தவிர, இதன் அலகின் நுனி சற்று வளைந்து
இருக்கும். மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம்,
இதன் நீல நிறக்கண்கள். மற்ற நீர்க்காகங்களைக்
காட்டிலும் அதிகளவில் கூட்டமாக வாழும்
தன்மை க�ொண்டது.

முக்குளிப்பான் (Little Grebe) LC

சிறிய வாத்து ப�ோன்ற உருவம் க�ொண்ட நீர்வாழ் பறவை. குட்டையான மஞ்சள் நிற அலகு + அலகு - கன்னம் சேரும் இடத்தில் வெள்ளை நிற
பட்டை, அடர் செங்கல் நிற கழுத்து என்ற நிறக்கலவையைக் க�ொண்டிருக்கும். படுஉஷாரான பறவை. ஆபத்து என்று உணர்ந்த அடுத்த ந�ொடி…
படக்கென்று நீருக்குள் மூழ்கிவிடும். முங்கு நீச்சல் அடிப்பதில் கெட்டிக்காரப் பறவை. நிறைய பேர் நினைப்பதைப் ப�ோலல்லாமல், முக்குளிப்பான்கள்
மிகநன்றாக பறக்கக் கூடிய பறவை. மீன்கள், தவளைகள், நத்தைகளை விரும்பி உண்ணும்.
(கா)2 ToC

பாம்புத்தாரா (Oriental Darter) NT

பெரிய விளக்கம் எல்லாம் இல்லாமலேயே இப்பறவையை


சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். பாம்பு ப�ோன்ற
கழுத்து - மிகத்தெளிவாகத் தெரியும். இந்நீண்ட கழுத்து,
படக்கென்று மீன்களைத் தாக்க உதவுகிறது. கருப்பு +
சாம்பல் கலந்த உடல். மஞ்சள் நிற, நீண்ட அலகினைக்
க�ொண்டது. நீந்தும் ப�ொழுது நீருக்கு வெளியே தலையை
மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். நீர்க்காகங்களைப்
ப�ோலவே, இறக்கையை உலர்த்துவதற்காக கரையில்
இறக்கைகளை விரித்தபடி உட்கார்ந்திருக்கும்.

நீர்க்காகங்கள், பாம்புத்தாரா ப�ோன்ற பறவைகள் தங்கள்


இறக்கையை விரித்து உலர்த்துவதற்கு - உடலின் வெப்ப
நிலையை சமனில் வைத்திருக்க (Thermoregulation),
சிறகுகளின் ஈரப்பதத்தை உலர்த்த என்று கலந்துகட்டி
ஒரு விளக்கத்தை ச�ொல்கின்றனர்.

ஒரேய�ொரு பறவை மட்டுமே இதுவரை "Mirror Test" எனப்படும், கண்ணாடியைப் பார்க்கும் ப�ொழுது தங்களையே அடையாளம்
கண்டுக�ொள்ளும் திறனை மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளது. அந்தப் பறவை - Eurasian Magpie. அப்பறவையின் உடம்பில்,
ஒரு கலர் புள்ளியை வைத்தால், கண்ணாடியைப் பார்த்து அதைத் துடைக்க மீண்டும் மீண்டும் விடாமல் முயற்சிக்கும்.
Asian Fairy Bluebird (Male)
(கா)2 ToC
க�ொக்குகள் (Egrets) (கா)2 ToC

க�ொக்கை இதுவரை பார்த்திராத ஆட்கள், மிகமிகக் குறைவு என்று உறுதியாகச் ச�ொல்ல முடியும். நீர்நிலைகளின் அருகிலும், ரயில் பிரயாணங்களிலும்,
வயல்வெளிகளிலும் நிச்சயமாக க�ொக்கை பார்த்திருப்போம். நீர்வாழ் உயிரினங்களான மீன்கள், தவளைகள், பூச்சிகள் ப�ோன்றவைகள் தான்
க�ொக்குகளின் ஆகாரம். மிகத்தீவிரமாக மீன்களை நீர்நிலைகளில் எதிர்பார்த்து காத்திருக்கும். அதுப�ோன்ற நேரங்களில், கழுத்துப்பகுதி இடவலமாக
மெல்லியதாக அசைந்து க�ொண்டிருக்கும். ‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை’ என்பதில் ஆரம்பித்து ஏகப்பட்ட உவமைகள் நமது இலக்கியத்தில்
க�ொக்கின் ப�ொறுமைக்காக ச�ொல்லப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே. அடுத்தமுறை ஏதாவத�ொரு க�ொக்கை காண நேர்ந்தால், நாம்
டக்கென்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் அலகின் நிறம், கால்களின் நிறம், முதுகில் ஏதாவது பஃப் ப�ோன்ற அமைப்பு உள்ளதா (இனப்பெருக்க
காலம் என்று புரிந்து க�ொள்ளலாம்) ப�ோன்றவைகளைத் தான்.

உண்ணிக்கொக்கு (Cattle Egret) LC

ஆடு, மாடு ப�ோன்ற கால்நடைகள் மேய்ந்து


க�ொண்டிருக்கும் ப�ொழுது, அதன் முதுகிலேய�ோ காலுக்கு
அருகிலேய�ோ ஒரு வெண்நிறக் க�ொக்கை அடிக்கடி
பார்த்திருப்போமே....அதுதான் உண்ணிக்கொக்கு.
கால்நடைகள் நடக்கும் ப�ொழுது நிலம் கிளறப்படும்
அல்லவா..? அதிலிருந்து வெளிவரும் சிறுசிறு
பூச்சிகளையும் கால்நடைகளின் மேலிருக்கும்
உண்ணிகளையும் பிடித்துத் தின்பதற்காக படுமும்முரமாக
அவற்றின் அருகிலயே சுற்றிக் க�ொண்டிருக்கும். தவிர,
நீர்நிலைகளின் அருகிலும் இவைகளைக் காணலாம்.
உடல் முழுவதும் அட்டகாசமான வெள்ளை நிறம்; அலகு
- மஞ்சள் நிறம். மெல்லிய ஆரஞ்ச் நிற இறகுகள்.
இனப்பெருக்க காலங்களில் இதன் கழுத்து முதல் முதுகுப்பகுதி வரை ஆரஞ்ச் நிறத்தில் காணப்படும். மாட்டுக்கொக்கு என்ற பெயரும் உண்டு.

சிறுவெண் க�ொக்கு (Little Egret) LC

பார்வைக்கு உண்ணிக்கொக்கை ப�ோன்றே த�ோன்றும்.


ஆனால், இதன் அலகு மற்றும் கால்கள் - கருப்பு நிறத்தில்
இருக்கும். குஞ்சு ப�ொறிக்கும் காலத்தில், மேலே ச�ொன்ன…
பஃப் ப�ோன்ற வெள்ளை இறகுகள், முதுகில் முளைக்கும்.
ஒருகாலத்தில் ஐர�ோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெண்கள்
அழகிற்காக இதனை அணிய ஆரம்பிக்க, பெருமளவில்
இப்பறவை அதற்காக வேட்டையாடாப்பட்டது. எங்கே
அவ்வினமே அழிந்துவிடும�ோ என்று மக்கள் அச்சப்படும்
அளவிற்கு அளவிற்கு வேட்டையாடுதலின் வேகம்
இருந்ததாக பறவையியல் அறிஞர் ‘சாலிம் அலி’ தனது
புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘சின்ன க�ொக்கு’ என்றும்
இதனை அழைப்பார்கள்.

வெள்ளைக் க�ொக்கு (Intermediate Egret) LC

மற்ற இரண்டைக் காட்டிலும் சற்று பெரிய க�ொக்கு. இதன்


அலகும் மஞ்சள் நிறமே. ஆனால், நுனிப்பகுதி கருப்பு
நிறத்தில் இருக்கும். க�ொக்கின் கால் விரல்கள் மஞ்சள்
நிறத்தில் இருக்கும்; இதன் விரல்கள�ோ - கருப்பு கலந்த
ஒரு அடர் நிறம்.
நாரைகள் (Herons) (கா)2 ToC

மடையான் (Indian Pond Heron) LC

பல சமயங்களில் குளம், குட்டைகளின்


ஓரங்களில் இருப்பதே தெரியாதவாறு க�ொக்கு
ப�ோன்றத�ொரு பறவையைப் பார்த்திருப்போம்.
டக்கென பார்க்கும் ப�ொழுது பழுப்பு நிறமே
பிரதானமாகத் தெரிந்தாலும், இறக்கைகள்
வெள்ளை நிறம். இனப்பெருக்க காலங்களில்
தலையும் உடலும் வெளிறிய பழுப்பு நிறத்தில்
இருக்கும். நாரைகள் ப�ோலில்லாமல்
மடையானும், வேறு சில க�ொக்குகளும்
கழுத்தை உள்ளிழுத்தே வைத்திருக்கும்.
இரையை கண்டுக�ொண்டால் மட்டுமே
படக்கென்று கழுத்தை நீட்டும். எவ்வளவு
நேரமானாலும், இரைக்காக மிகத்தீவிரமாக
ஒரே இடத்தில மணிக்கணக்கில் நிற்கக்
கூடிய பறவையிது. மீன்கள், தவளைகள்
ப�ோன்றவைகளை விரும்பி உண்ணும்.
சட்டென்று நம்மால் கண்டுக�ொள்ள முடியாது
என்ற நினைப்பில் (அது உண்மையும் கூட. அதன் நிறக்கலவை அப்படி) அதன் அருகில் செல்லும் வரைப் பறக்காது. இதன் காரணமாக இதற்கு
"குருட்டுக் க�ொக்கு" என்ற பெயரும் உண்டு.

செந்நாரை (Purple Heron) LC

மிகநீண்ட கழுத்தைக் க�ொண்டது. உடல் முழுவதும்,


நீலம் கலந்த சாம்பல் நிறத்திலும், தலைப்பகுதி
கருஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். கழுத்துப் பகுதியில்
மஞ்சள் நிறம் காணப்படும். நல்ல வெயில் நேரத்தில்
அடர் பழுப்பு நிறமாகத் தெரியும். ஆளரவமற்ற
இடங்களையே விரும்பும். இது வலசை ப�ோகக்கூடிய
பறவை. சிறு பாம்புகள், மீன்கள், தவளைகள்
ப�ோன்றவற்றை விரும்பி உண்ணும். ப�ொழுது புலரும்
- ப�ொழுது சாயும் நேரங்களில் மிகுந்த துடிப்புடன்
செயல்படும் (crepescular) பறவைகளில் இதுவும்
ஒன்று.

சாம்பல் நாரை (Grey Heron) LC

செந்நாரையை விட சற்று சிறிய கழுத்தைக்


க�ொண்டது. உடல் முழுவதும் சாம்பல் நிறம்.
உச்சந்தலையில் கருப்புத் தீட்டு காணப்படும்.
கழுத்தில் கருப்புப் புள்ளிகள் இருக்கும். அலகு
மஞ்சள் நிறம்; நுனியில் மெல்லிய சிகப்பு
காணப்படும்.
குருகு (Bittern) (கா)2 ToC

செங்குருகு (Chestnut Bittern) LC

சங்க காலத்தில் மிக நுணுக்கமாக கவனிக்கப்பட்டு, பாடல்களில் பதிவு


செய்யப்பட்ட ஒரு பறவை. ஒரு சிறிய உதாரணம், குறுந்தொகையில்
வரும் இந்தப்பாடல்
யாரும் இல்லை; தானே கள்வன்
தான் அது ப�ொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே

"நான் அவனுடன் கூடிய அந்நாளில் தினைச்செடியின் அடித்தாள்


ப�ோல் சிறிய மென்மையான கால்களைக் க�ொண்ட, ஓடும் நீரில்
ஆரல்மீனை பார்த்ததுப�ோல நின்ற குருகும் அருகே இருந்தது" என்று
அர்த்தம். அருகே குருகு இருப்பதாக ச�ொல்வதில் என்ன விஷயம் இருக்கப்போகிறது? இந்தப் பறவையின் குணாதிசயம் புரிந்தால், இதன் அர்த்தம்
விளங்கும். குருகு, மிகவும் ஜாக்கிரதை உணர்வுள்ள பறவை. நீர்நிலைகளின் அருகில் இருக்கும் புதர்களின் ஓரம் மிகக்கவனமாக மறைந்திருக்கும்.
அதனால் இப்பறவையைப் பார்ப்பது சற்று கடினமே. உடல் முழுவதும் வெளிறிய செங்கல் + பழுப்பு நிறத்தில் இருக்கும்.

பறக்கும் ப�ொழுது, கழுத்தை உள்ளே இழுத்துக�ொண்டு பறப்பது, நாரை இனத்தின் தனித்துவமான பறக்கும்
முறையாகும். க�ொக்கு ப�ோன்ற மற்ற நீண்ட கழுத்துடைய பறவைகள் பறக்கும் ப�ொழுது, கழுத்தை
நீட்டியவாறே பறக்கும். படத்தில், சாம்பல் நாரை (Grey Heron) பறக்கும் ப�ொழுது கழுத்தை
உள்ளிழுத்தவாறு பறக்கிறது.
பெரிய நாரைகள் (Storks) (கா)2 ToC

இப்பறவைகளும், நாரைகள் ப�ோன்றே கரைப்பறவைகள் (Wader's) ஆகும். நீண்ட கழுத்து - நீண்ட கால்கள் - நீண்ட நேரான அலகைக்
க�ொண்டது. க�ொக்குகள் - நாரைகளை விட அளவில் பெரியது. பறக்கும் ப�ொழுது இப்பறவைகளின் கழுத்து நீண்டும், கால்கள் சற்று த�ொங்கியவாறும்
இருக்கும். இறக்கைகளை அடிக்காமல், காற்றோட்டத்தின் உதவியால் பறக்கும் (Soaring) பறவைகளில் இதுவும் ஒன்று. இவ்வகைப் பறவைகளில்
பெரும்பாலானவை வலசை ப�ோகும். நத்தைகள், மீன்கள், தவளைகள், பூச்சிகள் - இப்பறவைகளின் பிரதான இரைகள்.

சங்குவளை நாரை (Painted Stork) NT

நீரில் இரைக்காக காத்திருக்கும்பொழுது, முதுகை சற்று வளைத்தாவறே நிற்கும்.


த�ோள்பட்டை - வாலின் நுனி - புட்டத்தின் அருகில் சிகப்பு + ர�ோஸ் கலந்த
நிறத்தில் இருக்கும். கால்கள் வெளிறிய ர�ோஸ் நிறம். அலகு மஞ்சள் நிறம்.

வெண்கழுத்து நாரை (White-necked Stork) VU

அழியக்கூடிய வாய்ப்புள்ள பறவையினங்களில் ஒன்றாக இப்பறவை வகை-


ப்படுத்தப்பட்டுள்ளது. உச்சந்தலையில் அடர் சாம்பல் நிறம் காணப்படும்.
கழுத்து, அடிவயிறு - நல்ல வெள்ளை நிறம். உடல் - கருப்பு. முதுகுப்பகுதி
- பச்சை கலந்த கருப்பு. கால்கள் நல்ல சிகப்பு நிறம். அலகு - பாதி வரை
கருப்பு நிறம். அதற்கு மேல் சிகப்பு, பின் க�ொஞ்சம் கருப்பு.

கூழைக்கடா (Pelicans)

பறவையினங்களில் மிகப்பெரிய பறவைகளில் ஒன்று. மிகநீண்ட இறக்கைகளைக் க�ொண்டிருக்கும். அண்டார்டிகா தவிர, உலகின் அனைத்துப்பகுதி-
களும் இப்பறவைகளைப் பார்க்கலாம். தனித்துவமான அம்சம் - தாடையின் கீழே இருக்கும் த�ொங்கும் பை ப�ோன்ற அமைப்பு. இரையைப் பிடிக்க,
இந்தப் பைகளின் மூலம் நீரை அப்படியே அள்ளும். இதன் நீண்ட அலகு கிட்டத்தட்ட 8 - 11 லிட்டர் அளவிற்கு நீர் க�ொள்ளும். கூழைக்கடாக்கள்
இரையை கூட்டமாக பிடிக்க விரும்பும். கடற்கரை, ஏரிகளின் அருகே இப்பறவைகளைப் பார்க்கலாம். மீன்கள், தவளைகள், நத்தைகள் இவற்றின்
பிரதான உணவு.

சாம்பல் கூழைக்கடா (Spot-billed Pelican or Grey Pelican) NT

தென்னிந்தியாவில் அதிகளவில் காணக்கூடிய கூழைக்கடாவில் ஒன்று. குறிப்பாக,


வேடந்தாங்கல் - கூந்தன்குளம் பகுதிகளில் இதனை அதிகளவில் காண முடியும்.
உடல் முழுவதும் அழுக்கு வெள்ளை. தலையில் சாம்பல் நிறம். அலகிலும்
பையிலும் புள்ளிகளைக் காணமுடியும். அலகின் நுனி மஞ்சள் நிறம்.

நாம் டர்க்கி (வான்கோழி) என்றழைக்கிற�ோமே, அதை துருக்கி நாட்டில் "ஹிந்தி" என்ற பெயரில் அழைக்கிறார்கள். அரேபியாவில்
"கிரேக்க க�ோழிகள்", கிரீசில் "ஃப்ரெஞ்ச் க�ோழிகள்", ஃப்ரான்ஸில் "இந்திய க�ோழிகள்". ஆனால் இந்தப் பறவையின் பூர்விகம்
அமெரிக்க நாடுகள்.
அரிவாள் மூக்கன்களும் கரண்டிவாயனும் (Ibises & Spoonbill) (கா)2 ToC

என்னவ�ொரு அட்டகாசமான பெயர்கள். அரிவாள் மூக்கன் & கரண்டிவாயன். அலகின் முக்கியத்துவத்தை சற்று நினைவுப்படுத்திக் க�ொண்டால்....
இந்தப் பறவைகளின் பெயர்க்காரணம் எளிதல் விளங்கிவிடும். இரண்டுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இரண்டுமே Wader எனப்படும்,
அலையாத்திக் காடுகள் - குளங்கள் - குட்டைகள் - சகதி நிறைந்த குளங்கள் - சதுப்பு நிலங்கள் ப�ோன்ற நீர்நிலைகளின் அருகில் வசிப்பவைகளாகும்.
அண்டார்டிகா, தவிர உலகின் அனைத்து இடங்களிலும் இக்குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளைக் காணலாம். நாரைகள், க�ொக்குகள் ப�ோன்றவைகள�ோடு
சேர்ந்து மரங்களில் கூடு கட்டி குஞ்சு ப�ொறிக்கும். இரண்டு பறவைகளும் இனப்பெருக்க/கூடு கட்டும் காலங்கள் தவிர, பெரும்பாலும் குரலெழுப்பாது.

இதில் தன் இரையைப் பிடிக்க, அரிவாள்மூக்கன் நீருக்குள் தனது அரிவாள் ப�ோன்ற அலகைக் க�ொண்டு, மேலும் கீழுமாகத் துழாவும். அனைத்து
அரிவாள் மூக்கன்களும் 2 - 5 முட்டைகள் வரை இடும். புழு, பூச்சிகள், தவளைகள், மீன்களை விரும்பி உண்ணும். பெரும்பாலும் கூட்டமாகவே
திரியும். இந்தியாவில் மூன்று வகையான அரிவாள் மூக்கன்களைப் பார்க்கலாம்.

வெள்ளை அரிவாள் மூக்கன் (Black-headed Ibis) NT

அலகு - கழுத்து - கால் முழுவதும் கருப்பு நிறத்தில் இருக்கும்.


மற்ற பாகங்கள் அனைத்தும் வெள்ளை. நவம்பர் முதல் ஃபெப்ரவரி
மாதங்கள் வரை தென்னிந்தியாவில் குஞ்சு ப�ொறிக்கும் காலம்.

சிறிய அரிவாள் மூக்கன் (Glossy Ibis) LC

மினுமினுக்கும் அரக்கு + கருப்பு உடலைக் க�ொண்டது. வெள்ளை


அரிவாள் மூக்கனை விட சற்று சிறிய பறவை. இப்பறவைக்கு "அன்றில்"
என்ற பெயரும் உண்டு. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் அன்றில்
பறவையைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

கருப்பு அரிவாள் மூக்கன் (Black/Red-naped Ibis) LC

சிறிய அரிவாள் மூக்கனை விட சற்று பெரிய பறவை. கருப்பு + க�ொஞ்சமாக செந்நிறம் என்ற நிறக்கலவையைக் க�ொண்ட பறவை. மற்ற
மூக்கன்களைப் ப�ோல, நாரைகள் க�ொக்குகள�ோடு சேர்ந்து கூடு கட்டாது. தனியாக கட்டுவதையே விரும்பும். நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள்
வரை தென்னிந்தியாவில் குஞ்சு ப�ொறிக்கும்.

கரண்டிவாயன் (Eurasian Spoonbill) LC

அரிவாள் மூக்கன்களைப் ப�ோல, வளைந்த அலகிற்குப் பதில், கரண்டி


ப�ோன்ற சப்பையான அலகு இருக்கும். அலகு + கால்கள் - நல்ல
கருப்பு நிறம். அலகின் முடிவில் மஞ்சள் புள்ளிகளைக் காணலாம்.
மற்ற பாகங்கள் அனைத்தும் வெள்ளை. நத்தை, தலைப்பிரட்டை,
மீன்களை விரும்பி உண்ணும். இரையைத் தேடும்பொழுது, அரிவாள்
மூக்கன்கள் ப�ோல மேல் கீழாகத் தேடாமல், இடம் - வலமாகத்
துழாவும். இனவிருத்திக் காலங்களில் - பல நாரை, க�ொக்குகள் ப�ோல
- தலையில் க�ொண்டை ப�ோன்ற அமைப்பைக் காணலாம்.
கானாங்கோழிகள் (Waterhen) / நாமக்கோழிகள் (Coot) (கா)2 ToC

கானாங்கோழி (Waterhen), தாழைக்கோழி (Moorhen), நாமக்கோழி (Coot) - அனைத்துமே Rallidae என்று குடும்பத்தைச் சார்ந்தவை.
அண்டார்டிகா தவிர, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இக்குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளைக் காண முடியும். சதுப்பு நிலங்கள், புதர்கள் மண்டிய
நீர்நிலைகள், அடர்ந்த காடுகள் - ஆகிய இடங்களில் இப்பறவைகளை அதிகளவில் காண முடியும்.

தாழைக்கோழி (Common Moorhen) LC

குளம், குட்டைகளில் அடிக்கடி பார்த்திருப்போம். தாழைக்கோழிகளின் அலகில் சிகப்பு நிற கவசம் ப�ோன்றத�ொரு அமைப்பு காணப்படும். படபடப்பான
பறவை. அங்குமிங்கும் பரபரப்புடன் அலைந்து க�ொண்டிருப்பதைக் காணலாம். பறவைகளின் உடலமைப்பிற்கும் வாழ்க்கை முறைக்கும் உள்ள
த�ொடர்பைப் பற்றி பலமுறை வேறு சில கட்டுரைகளில் பார்த்துள்ளோம். தாழைக் க�ோழி மற்றொரு உதாரணம். புதர்கள் மண்டிய நீர்நிலைகளில்
நடப்பதற்கு ஏதுவாக நீண்ட கால்கள் உண்டு. ஆனால், வால் - குட்டையானது. நத்தைகள், புழுக்கள், தலைபிரட்டைகள் ப�ோன்றவைகளே
இப்பறவைகளின் பிரதான உணவுகள். நீண்ட தூரத்திற்கு இவ்வகைப் பறவைகள் பறக்காது. தமிழ்நாட்டில், மிகச்சாதாரணமாக... குளம் குட்டைகளில்
இரண்டு வகையான தாழைக்கோழிகளை பார்க்கலாம். அதில் ஒன்று Common Moorhen. அடர் பழுப்பு + வெளிர் சாம்பல் நிறத்தைக்
க�ொண்டிருக்கும். வாலின் நுனியில் வெள்ளை நிறப்பட்டைகள் காணப்படும்.

நீலநிற தாழைக்கோழி (Purple Swamphen) LC

க�ோழியின் அளவிற்கு இருக்கும். ஒருமாதிரி டாலடிக்கும் ஊதா படர்ந்த


நீலநிறம். அலகில் இருக்கும் சிகப்புக் கவசம், நெற்றி வரை நீண்டிருக்கும்.
இரையைத் தேடும் ப�ொழுது, வாலை மேலெழுப்பும்.

வெள்ளை மார்பு கானாங்கோழி (White-Breasted Waterhen) LC

உடல் முழுவதும் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். முகத்தில் ஆரம்பித்து


அடிவயிறு வரை நல்ல வெள்ளை நிறம். குட்டையான வாலைக் க�ொண்டது.
வாலின் அடிப்புறம் துரு நிறத்தில் இருக்கும். மிகுந்த பாதுகாப்புணர்வு
க�ொண்ட பறவை. ஆபத்து என்று உணர்ந்த அடுத்தந�ொடி... டக்கென்று
புதருக்குள்ளோ, நீருக்குள்ளோ மறைந்துவிடும்.

நாமக்கோழி (Common Coot) LC

நல்ல கருப்பு நிறம். கண்கள் - சிகப்பு. தாழைக்கோழிகளுக்கு சிகப்பு நிற


கவசம் இருப்பதைப் ப�ோல, இப்பறவைக்கு வெள்ளை நிற - நாமம் ப�ோலத்
த�ோற்றமளிக்கும் - கவசம் உண்டு. மிகச்சிறிய வாலைக் க�ொண்டது.
புதர்கள் அடர்ந்த நீர்நிலைகளில் இதனைக் காண முடியும். மற்ற நீர்வாழ்
க�ோழிகளைக் காட்டிலும், சற்று ஆழமாக நீருக்கடியில் சென்று இரையைத்
தேடும். சிலசமயம் தனது எல்லைக்குள் நுழையும் மற்ற பறவைகளை
கலவரப்படுத்த பரபரவென்று நீச்சலடிக்கும்.
இலைக்கோழிகள் (Jacana) (கா)2 ToC

இந்தவகை நீர்கோழிகளுக்கு தனித்துவமான கால் அமைப்பு உண்டு. தாமரை - அல்லி ப�ோன்ற நீர்நிலைகளில் படர்ந்திருக்கும் இலைகளின் மீது
லாவகமாக நடந்து செல்வதற்கு ஏதுவாக, நீண்ட கால்கள் + நீண்ட விரல்கள். நம்மூரில் இரண்டு வகையான இலைக்கோழிகளைப் பார்க்கலாம்.

நீளவால் இலைக் க�ோழி (Pheasant-tailed Jacana) LC

பெயருக்கேற்றபடி, இனப்பெருக்கக் காலங்களில்... வளைந்த - நீண்ட


வால் ப�ோன்ற அமைப்பு காணப்படும். சாக்லேட் + வெள்ளை நிற
உடலைக் க�ொண்டது.

தாமிர இலைக்கோழி (Bronze-winged Jacana) LC

கழுத்து முதல் அடிவயிறு வரை அடர்கருநீல நிறமும், முதுகுப்பகுதி முழுவதும் வெளிறிய பழுப்பு நிறத்தையும் க�ொண்டிருக்கும். கண்களுக்கு மேலே
வெள்ளைநிறப் பட்டைகள் காணப்படும்.

Jesus Birds - நீரில், புதர்களுக்கு இடையே நடக்கும் ப�ோது... நீரின் மேலே நடப்பதைப் ப�ோன்ற த�ோற்றம் அளிப்பதால், இலைக்
க�ோழிகளுக்கு இப்படியான ஒரு பெயரும் உண்டு.
பறவைகளும் "V" வடிவமும் (கா)2 ToC

பலமுறை இதனை கவனித்திருப்போம் - நாரை ப�ோன்ற பெரிய பறவைக் கூட்டம் "V" வடிவில் பறப்பதை. இதற்கு அறிவியல் ரீதியாக என்ன
காரணம்?

முதலாவதாக பறக்கும் பறவை காற்றை பிரித்தபடி பறக்கும். அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் இரண்டாவதாக பறக்கும் பறவை,
எதிர்காற்றின் வேகத்தை சமாளிக்க தனது சக்தியை குறைவாக செலவிட்டால் ப�ோதும். இது அப்படியே மூன்றாவது பறவை - நான்காவது பறவை
என்று த�ொடரும். இப்படி ஆற்றலை சேமிக்க, V வடிவமே சிறந்தது என்பதை காலப்போக்கில் பறவைகள் கண்டுக�ொண்டுள்ளன.

இந்தப் படம் அதனைத்தான் தெளிவாக விளக்குகிறது. முதலாவதாக பறக்கும் பறவை, இருவகையான காற்றோட்டத்தை ஏற்படுத்தும். "Upwash"
& "Downwash". இதில் "Downwash" அப்படியே நேராக உள்ளே வரும் காற்றோட்டம். அதனால் முதலாவது பறவையின் நேர்-பின் பறந்தால்...
இரண்டாவது பறவைக்கு இந்த "Downwash" காற்றோட்டத்தையும் சேர்ந்து சமாளிக்க அதிக ஆற்றலை செலவழிக்க நேரிடும். அதேசமயம்,
"Upwash" எனப்படும் முதலாவது பறவையின் பக்கவாட்டில் உருவாகும் காற்றோட்டத்தின் ப�ோக்கில் பறந்தால், வேலை சுலபம்.
உப்புக்கொத்திகள் (Plover) (கா)2 ToC

உப்புக்கொத்தி என்பது, உலகின் ஒருசில இடங்களைத் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் காணப்படும் - நீர்நிலைகளைச் சார்ந்த ஒருவகைப்
பறவை. நீர்நிலைகளில் இருக்கும் தலைப்பிரட்டைகள், மீன்கள், நத்தைகள், புழுக்கள் ப�ோன்றவைகளை க�ொத்தி உண்ணும். தலைக்கு த�ொடர்பில்லாதது
ப�ோலத் தெரியும் அலகு - குட்டையான கால்கள் என்று தனித்துவமான உடலமைப்பு க�ொண்டது. உப்புக்கொத்திகளில் சிலவகை க�ொத்திகள் வலசை
ப�ோகும் இயல்பைக் க�ொண்டவை.

பட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover) LC

பரவலாக தமிழ்நாட்டில் காணப்படும் உப்புக்கொத்தி வகை இது.


சின்ன க�ோழி அளவிற்கு இருக்கும். மஞ்சள் நிற கால்கள் +
வெளிறிய பழுப்பு முதுகுப் பகுதி + வெள்ளை அடிவயிற்றைக்
க�ொண்டிருக்கும். கழுத்தில் கருப்பு-காலர் ப�ோன்ற அமைப்பு
காணப்படும். மிகமுக்கியமாக, கண்ணைச் சுற்றியிருக்கும் மஞ்சள்
நிற வளையம் - இதன் தனித்துவமான அடையாளம்.

மணல் நிற உப்புக்கொத்தி (Lesser Sand Plover) LC

இது வலசை ப�ோகும் வகையைச் சார்ந்த உப்புக்கொத்தி. கடல் ஓரங்களில் பார்த்திருக்கலாம். தமிழ்நாட்டில் க�ோடியக்கரை, புலிகாட் பகுதிகளில்
அதிகளவில் இப்பறவையை வலசை காலங்களில் காணமுடியும். பாசி படர்ந்த + அடர் சாம்பல் நிறக் கால்கள் + வெள்ளை நிற அடிவயிற்றைக்
க�ொண்டது. கண்ணிற்கு அருகில் பட்டை ப�ோன்ற அமைப்பு காணப்படும்.

250 - 300 கில�ோ உணவு, 150 லிட்டர் தண்ணீர்.... இது யானை ஒருநாளைக்கு உட்கொள்ளும் உணவின் அளவு. இத்தனை
லிட்டர் தண்ணீர் தேவையின் காரணமாகவே, நீர்ச்சத்து அதிகமுள்ள கரும்பு, வாழை ப�ோன்ற த�ோட்டங்களைத் தேடி யானைகள்
வந்துவிடுகின்றன. அவற்றின் இயற்கையான வாழிடங்களைத்தான் நாம் என்றோ ஆக்கிரமித்தாயிற்றே.
(கா)2 ToC

ale)
l (Fem
Koe
an
Asi
ஆள்காட்டிகள் (Lapwings) (கா)2 ToC

நீர்நிலைகள் - அதனருகில் இருக்கும் புதர்கள் - வறண்டு ப�ோன நீர்நிலைகள், இவற்றின் அருகில் அடிக்கடி இப்பறவைகளின் குரலை நீங்கள்
கேட்டிருக்கலாம். நம்மை கண்டவுடன் எச்சரிக்கும் த�ொனியுடன் குரலெழுப்பிக் க�ொண்டே பறக்கத் த�ொடங்கும். தரையிறங்கும் ப�ொழுது, சற்று
ஓடிவந்து இறங்கும். இவ்வகைப் பறவைகள், தரையில் சிறிய பள்ளத்தை த�ோண்டி முட்டையிடும். அதை மிகலாவகமாக இலைகள், சருகுகளைக்
க�ொண்டு மறைத்து வைக்கும். கூர்ந்து பார்த்தால�ொழிய தெரியாது. புழு, பூச்சிகளே இதன் பிரதான உணவு. நம்மூரில் இரண்டு வகை ஆள்காட்டிகளே
பிரதானமாக உண்டு. இரண்டுமே வலசை ப�ோகாதவை. ஆனால் நீர் தேவைகளுக்காக இடம் பெயரும்.

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing) LC

பழுப்பு நிற உடல் + மஞ்சள் நிற கால்கள் + வெள்ளை நிற அடிவயிறையும் க�ொண்டிருக்கும். கருப்பு நிற இறக்கையில் வெள்ளை நிறஅமைப்பு
காணப்படும். மிகமுக்கியமாக மூக்கு முதல் வாய் வரை மஞ்சள் நிற த�ோல் ப�ோன்ற அமைப்பு காணப்படும். நீர்நிலைகளைக் காட்டிலும், புதர்கள் -
வறண்ட நிலங்களில் அதிகளவில் காணப்படும்.

செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing) LC

மஞ்சள் மூக்கை விட, பருமனில் சற்று பெருத்த - கழுத்து


நீண்டது செம்மூக்கு ஆள்காட்டி. பித்தளை நிற முதுகுப் பகுதி
+ மஞ்சள் நிற கால்கள் + வெள்ளை அடிவயிறு + வெள்ளைக்
கழுத்து என்ற நிறக் கலவையைக் க�ொண்டிருக்கும். செம்மூக்கு -
மூக்கு முதல் வாய் வரை, சிகப்பு நிற த�ோல் ப�ோன்ற அமைப்பின்
காரணமாகவே இந்தப் பெயர். நீர்நிலைகளின் அருகில் அதிகளவில்
செம்மூக்கைக் காணலாம். மேலும், மலைப் பிரதேசங்களில் கூட
இப்பறவையைப் பார்க்கலாம். இப்பறவையின் அழைப்பு (Call) -
Did he do it...... didhedoit.... didhedoit... என்பதைப்
ப�ோன்றே ஒலிக்கும்.

Bengal Florican, தெற்காசியாவின் மயில் குடும்பத்தைச் சேர்ந்த இப்பறவை உலகின் மிகஅரிதான பறவைகளில் ஒன்றாக
கருதப்படுகிறது. அதேப�ோன்று, முன்னொரு காலத்தில் அதிகளவில் நடமாடிக் க�ொண்டிருந்த கானமயில் (Great Indian
Bustard)... மிகமிக ச�ொற்ப எண்ணிக்கையிலேயே - கிட்டத்தட்ட 300 - மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. மயில் குடும்பத்தை சேர்ந்த
பறவைகளுக்கான பிரத்தியேக வாழிடங்கள் அழிந்து வருவதன் காரணமாக, இக்குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் பலவும் அழிவை
ந�ோக்கி சென்று க�ொண்டிருக்கின்றன.
உள்ளான்கள் (Stilt/Avocet/Snipe/Sandpiper) (கா)2 ToC

நெடுங்கால் உள்ளான் (Black-Winged Stilt) LC

ப�ொய்க்கால் குதிரை ஆட்டக்காரர்கள் ப�ோல, உடலைவிட நீண்ட,


சிகப்பு கால்களைக் க�ொண்டது. தலைமுதல் அடிவயிறு வரை
வெள்ளை. இறக்கைகள் கருப்பு. நீண்ட கால்கள் உள்ளதால்,
நீரில் நிற்கும் ப�ொழுது நல்ல அழுத்தமாக நிற்க முடியும். குளம்,
குட்டைகள், சதுப்பு நிலங்கள் ப�ோன்ற நீர்நிலைகளின் அருகில்
இப்பறவையைக் காண முடியும்.

க�ோணல் மூக்கு உள்ளான் (Pied Avocet) LC

அலகின் அமைப்பு குறித்து Chpater - 4 - ல் பார்த்தோம். அதற்கு மற்றும�ொரு அருமையான உதாரணம், க�ோணல் மூக்கு உள்ளான். இப்பறவைகளுக்கு
நீர் நிலைகளில் இரையைத் துழாவித் தேட (Scything) ஏதுவாக, அதன் அலகு மேல்நோக்கி வளைந்திருக்கும். த�ோள்பட்டைகளில் கருப்புப்
பட்டை காணப்படும். அடர் நீலநிறக் கால்களைக் க�ொண்டது. இது, வலசை ப�ோகக்கூடிய பறவை. பல நீர்நிலைகளைச் சார்ந்த பறவைகளைப்போல
நத்தைகள், மீன்கள், நீர்வாழ் பூச்சிகளை உண்டு வாழும்.

மயில் உள்ளான் (Greater Painted Snipe) LC

இப்பறவைகளை கலங்கிய நீர்நிலைகள், சதுப்பு நிலங்களில்


பார்க்க முடியும். சட்டென்று பார்வைக்கு புலப்படாதவாறு
இதன் உருவ அமைப்பு இருக்கும். பென்சிலைக் க�ொண்டு
ப�ொறுமையாக வரைந்ததைப்போல தெளிவான கண்கள்,
அதனைச் சுற்றி வெளிர் ர�ோஸ் நிற பட்டையைக்
காணலாம். நீண்ட பழுப்பு நிற அலகு - நுனியில் சற்று
வளைந்திருக்கும். பறவைகளில், சற்று வித்தியாசமாக
இதன் பெண் இனம் பல நிறக்கலவைகளைக் க�ொண்டதாக
இருக்கும்.

ப�ொறி உள்ளான் (Wood Sandpiper) LC

இவ்வகைப் பறவைகள் பெரும்பாலும் நீரிநிலைகளின்


கரைகளில் சகதியைக் கிளறிவிட்டு... அதிலிருந்து சிறுசிறு
பூச்சிகள், பிற உயிரினங்களை பிடித்துத் தின்றுக�ொண்டி-
ருக்கும். சகதியில் உறுதியாக நிற்பதற்கு ஏதுவாக நீண்ட
கால்களைக் க�ொண்டது. பெரும்பாலான உள்ளான்கள்,
பழுப்பு நிறத்திலேயே இருக்கும். ப�ொறி உள்ளான் -
புட்டமும், அடிவயிறும் வெள்ளையாக இருக்கும்.
(கா)2 ToC

உள்ளான் (Common Sandpiper) LC

பார்வைக்கு ப�ொறி உள்ளானைப் ப�ோலவே இருக்கும். ஆனால் இதன் புட்டப்பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும். பறக்கும்போது மிகத்தெளிவாக
இதனைக் காணலாம்.

பச்சைக் காலி (Common Greenshank) LC

கழுத்தில் இருந்து அடிவயிறு, வால் வரை


வெள்ளை நிறம். மேலுடம்பு, இறக்கைகள்
பழுப்பு நிறம். கால் - பச்சை + மஞ்சள்
கலந்த நிறம். அலகு மேல்நோக்கி
மெல்லிசாக வளைந்ததைப்போலத் தெரியும்.
வலசை ப�ோகக்கூடிய பறவை இது.

தூரம் மிகஅதிகமாக இருந்தாலும் குறிதவறாமல் சுடும் வீரர்களின் பெயர் - Sniper's. இந்தப் பெயர் "Snipe" பறவைகளின்
காரணமாகவே வைக்கப்பட்டது. "Snipe" பறவைகள் பறக்கும் ப�ொழுது நேராக பறக்காது. மாறிமாறி பறக்கும். மேலும், ஆட்களைக்
கண்டால் உடனே ஓடிவிடும். அப்படியான பறவையையே வேட்டையாடும் திறனுள்ள ஆட்களை Snipers என்றழைக்க ஆரம்பித்தனர்.
மீன்கொத்திகள் (Kingfishers) (கா)2 ToC

இந்தியாவில் ம�ொத்தம் 13 வகையான மீன்கொத்திகள் உள்ளன. பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில் இவைகளைக் காணலாம். சற்று குட்டையான
கால்கள், பருமனான உடல் க�ொண்டது. மீன்கள், சிறு பூச்சிகளை உணவாக் க�ொள்ளும். மிகக்கூர்மையான நீண்ட "V" வடிவிலான அலகு இதன்
தனித்துவமான அம்சம். ஒவ்வொரு பறவைக்கும் தனித்துவமான அலகு உண்டு என்று பார்த்தோமே... அதனை ஞாபகப்படுத்திக் க�ொள்க. ஏன்
"V" வடிவம் என்றால்…, அதன் காரணம் பெயரிலயே இருக்கிறதே… - மீன்கொத்தி. நீரை படக்கென்று பிரித்து மீன்களை க�ொத்துவதற்கு "V"
வடிவம்தானே சிறந்தது?! இதுப�ோல பறவைகளின் பெயர்களையும் அதன் குணாதிசயங்களையும், வாழ்க்கை முறையையும் சேர்த்துப் பார்க்கத்
த�ொடங்குவது பறவை ந�ோக்குதலின் முக்கிய பாடங்களில் ஒன்று. "பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை (மீன்கொத்தியின் அலகு ப�ோல
சிவந்திருக்கும் முல்லை மலர்)" என்று ஐங்குறுநூறு த�ொடங்கி கம்ப ராமாயணம் வரை மீன்கொத்திகள் பற்றிய சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள்
உண்டு (சிரல் - மீன்கொத்தி).

வெண்மார்பு மீன்கொத்தி (White-


-throated Kingfisher) LC

இதன் மற்றொரு அழகான தமிழ்ப்பெயர்


பெயர் - விச்சிலி. காக்கையை விட
சிறியதாக இருக்கும். தலை முதல்
கழுத்து வரை நல்ல சாக்லேட் நிறத்திலும்,
த�ொண்டையில் ஆரம்பித்து மார்புப்பகுதி
வரை... வக்கீல்களின் உடையில்,
வயிற்றுப்பகுதி வரை வெள்ளையாக
இருக்குமே… அதுப�ோன்றத�ொரு அமைப்பு.
முதுகுப்பகுதி நல்ல நீல நிறத்தில் இருக்கும்.
நீண்ட செம்பழுப்பு நிற அலகை உடையது.
நீர்நிலைகள் மட்டுமின்றி, பிற இடங்களிலும்
அதிகமாக காணக்கூடிய மீன்கொத்தி இது.
மின்சாரக் கம்பிகளில் அடிக்கடி இதனைக்
காணலாம்.

கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied


Kingfisher) LC

கிட்டத்தட்ட வெண்மார்பு மீன்கொத்தி


அளவிற்கே இருக்கும். பெயருக்கேற்ப
உடல் முழுவதும் கருப்பு வெள்ளை
நிறத்தில் இருக்கும். தலையில் மிகச்சிறிய
க�ொண்டையைக் காணலாம். அந்தரத்தில்
அட்டகாசமான சாகசங்களை நிகழ்த்தும்.
மீனைப் பிடிக்க.... பல நிமிடங்கள்
அந்தரத்தில் அப்படியே சிறகடித்துக்
க�ொண்டே இருக்கும். தலை மட்டும் கீழே
மீன்களை கூர்ந்து ந�ோக்கியவாறு இருக்கும்.
சரியான நேரம் பார்த்து.... சர்ர்ர்ர்ர் என்று
ஒரு டைவ். அடுத்த ந�ொடி, மீன் அதன்
வாய்க்குள். அத்தனையும் கண் இமைக்கும்
நேரத்தில் முடிந்துவிடும்.
(கா)2 ToC

சிறுநீல மீன்கொத்தி (Common Kingfisher) LC

மற்றொரு பெயர் - சிறால் மீன்கொத்தி. சிட்டுக் குருவியை


விட சற்றுப் பெரியதாக இருக்கும். தலை - முதுகு -
வால் வரை அட்டகாசமான நீல நிறத்தில் இருக்கும்.
கழுத்து முதல் வயிற்றுப் பகுதி வரை ஆரஞ்ச் நிறம்.
பெரும்பாலும் மீன்களே இதன் உணவு. மீன்களைப்
பிடிக்க சற்று தாழ்வாக…, நீர்ப்பரப்பை த�ொடுவதுப�ோல
பறக்கும். அடிக்கடி தனக்குத்தானே ஆமாம்.... ஆமாம்
ப�ோட்டுக் க�ொள்வதைப் ப�ோல, தலையை ஆட்டிக்
க�ொண்டிருக்கும்

தடித்த அலகு மீன்கொத்தி (Stork-billed Kingfisher) LC

மற்ற மீன்கொத்திகளைக் காட்டிலும் பெரிய, தடித்த, சிவப்பான


அலகைக் க�ொண்டது. தலை - பழுப்பு நிறம். கழுத்து முதல்
அடிவயிறு வரை - வெளிறிய ஆரஞ்ச் நிறம்.

1500 முதல் 2013 வரை கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்து ப�ோயுள்ளன. பதினைந்தாம்
நுற்றாண்டு வரை ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒன்று, இரண்டு என்று பறவையினங்கள் அழிந்து வந்தது. ஆனால் கடந்த ஐநூறு
ஆண்டுகளில் இந்த அழிவின் வேகம் மிகக்கடுமையானதாக உள்ளதாக பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பறவைகளும் நிறங்களும் (கா)2 ToC

பல பறவைகள் எப்படி அத்தனை அட்டகாசமான நிறக்கலவையைக் க�ொண்டிருக்கின்றன? பலருக்கும் இந்த கேள்வி ஒருமுறையாவது த�ோன்றியிருக்கும்.
உலகின் 90% பறவைகள் நல்ல எடுப்பான நிறக்கலவையைக் க�ொண்டிருப்பவைகளே. இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு.

நிறமிகள் (Pigmentation): மனிதர்களின் நிறத்திற்கு காரணமான Melanin, Carotenoids ப�ோன்ற நிற வஸ்துக்கள் தான் பறவைகளின்
நிறக்கலவையிலும் முக்கிய பங்குவகிக்கின்றது. நிறமிகளின் அளவு/அடர்த்தியைப் ப�ொறுத்து, பறவைகளின் நிறங்கள் மாறுபடும்.

நிறக்கூறுகளின் அமைப்பு (Structural Colors): தேன்சிட்டு ப�ோன்ற பறவைகளை உற்று ந�ோக்கினால், ஒருவித டாலடிக்கும் நிறத்தைக் காண
முடியும். அது, அப்பறவைகளின் உண்மையான நிறமன்று. மாறாக, அப்பறவைகளின் சிறகுகளில் இருக்கும் சிறுசிறு மூலக்கூறுகள் பறவைகளின்
மீது படும் ஒளியை சிதறடிப்பதால் ஏற்படும் விளைவு தான் இந்த நிறக்கலவை. க�ொஞ்சம் தள்ளி நின்று, வெவ்வேறு க�ோணங்களில் அதுப�ோன்ற
பறவைகளைப் பார்த்தால், நிறங்கள் சற்று மாறுபடுவதைக் காணமுடியும்.
மயில் (Peafowl) LC (கா)2 ToC

மயில். பேரை பார்த்தவுடன் அதன் நீண்ட த�ோகையும்... விவரிக்க முடியாத வண்ண கலவையும் நிச்சயம் அனைவருக்கும் ஒருநிமிடம் கண்ணெதிரே
வந்து ப�ோகும். உலகளவில் ம�ொத்தம், மூன்று வகையான மயிலினங்கள் உள்ளன.

»» இந்தியா + ஸ்ரீலங்காவில் இருக்கும் நீலநிற மயில் (Indian/Blue Peafowl)


»» பர்மா + ஜாவா தீவுகளில் இருக்கும் பச்சை மயில் (Green Peafowl)
»» காங்கோ மயில் (Congo Peafowl)
»» வெள்ளை நிறமயில் என்று தனியாக ஒரு மயிலினம் கிடையாது. க்ரோம�ோச�ோம்கள் வேறுபாட்டின் காரணமாகவே அந்த நிறம் ஏற்படுகிறது.
அதுப�ோலவே, நிறமிகள் (Pigments) குறைபாடே வெள்ளை காக்கை என்று சிலவேளைகளில் செய்திகளில் வரும் காக்கையின் வெள்ளை
நிறத்திற்கான காரணம்.
Peacock என்று ப�ொதுவாகவே நாம் அழைத்தாலும், ஆண் மயில் - Peacock, பெண் மயில் - Peahen…, இரண்டையும் சேர்த்து Peafowl என்று
அழைப்பதே சரியானதாகும். மயில் என்று ச�ொன்னவுடன் அதன் த�ோகைதானே நினைவிற்கு வருகிறது?! ஆண் மயிலுக்குத்தான், பெண் மயிலைக்
காட்டிலும் மிகப்பெரிய த�ோகையுண்டு. அடர் நீலம் கலந்த பச்சை நிறத்தில் ஆரம்பித்து ஏராளமான நிறங்கள் அத்தோகையில் உள்ளன. அத்தகைய
நிறக்கலவைக்கு மிகமுக்கியமான காரணம், குறுக்கீட்டு
விளைவு (Interference). Structural coloration
என்ற பெயரில் இதனைப் பற்றி, சென்ற கட்டுரையில்
தான் பார்த்தோம். த�ோகையின் "உண்மையான"
நிறம் அத்தகைய அடர் நீலம் + பச்சையாக
இல்லாவிட்டாலும், நிறமிகளின் (Pigments)
செயல்பாட்டினாலேயே அவ்வாறு ஒளி எதிர�ொலிக்க-
ப்படுகிறது. பட்டாம்பூச்சிகளின் நிறத்திற்கும் இதுவே
காரணம். இத்தகைய அட்டகாசமான த�ோகையின்
பிரதான ந�ோக்கம், இணையக் கவர்தல். பெரும்பாலும்
பெண் இனம், ஆண் மயிலை… அதன் நிறம்,
த�ோகையின் அளவு/அசைவு ப�ோன்றவைகளின்
அடிப்படையிலயே தேர்ந்தெடுக்கும். அதனால்,
ஆண் இனம் தன்னால் முடிந்த மட்டும் த�ோகையின்
உதவியால் இணையக்கவர முயலும். இன்னொரு
முக்கிய விஷயம், மயில்களின் த�ோகை அதன்
ம�ொத்த உருவ அளவில் கிட்டத்தட்ட 60%. மயில்கள்
ஜனவரி மாதம் ப�ோல த�ோகையை உதிர்க்கும்.
(கா)2 ToC

மயில்களை, புதர்கள் நிரம்பிய இடங்களின் அருகில்


அதிகளவில் காண முடியும். தரையில் கூடுகட்டுக் கூடிய
பறவை வகைகளில் ஒன்று, தானியங்கள், புழு பூச்சிகள்
ப�ோன்ற தரைமட்ட உணவு வகைகளையே விரும்பி உண்ணும்.
இதன் காரணமாகவே மிகச்சுலபமாக விஷம் கலக்கப்பட்ட
நெல்லைய�ோ வேறு உணவுகளைய�ோ மயில்கள் உண்டு
இறக்க நேரிடுகிறது. முருகனின் வாகனத்தில் இருந்து
மயில் ஆட்டம் வரை தமிழ்நாட்டிற்கும் மயிலிற்குமான
த�ொடர்பு ஏராளம் என்றாலும், வெகுவேகமாக தமிழ்நாட்டில்
மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மயில்கள்
க�ொல்லப்படுவதும் த�ொடர்ந்தவண்ணமே உள்ளது.
விராலிமலை ப�ோன்ற இடங்களில் கூட மயில்களின்
எண்ணிக்கை குறைந்துக�ொண்டே வருவது கவலைக்குரிய
விஷயமாகும்.

இந்தியாவின் தேசியப் பறவையாக முதலில் அறிவிக்கப்படவிருந்த பறவை எது தெரியுமா? கானமயில் - The Great Indian
bustard. இந்தியாவில் மட்டுமே காணப்படும் - அழிவின் விளிம்பில் இருக்கும் பறவையிது. எங்கே the great indian bustardல்
"bustard"யை மாற்றி வாசித்துவிடுவார்கள�ோ.... என்ற காரணத்தால் மயில் இந்தியாவின் தேசியப்பறவையாக அறிவிக்கப்பட்டது.
Indian Peacock (Male)
(கா)2 ToC
கிளி (Parakeet) (கா)2 ToC

பறவைகளின் வாழ்வியல் முறைக்கும் அதன் அலகிற்கும் உள்ள த�ொடர்பைப்பற்றி பலமுறை இப்புத்தகத்திலேயே பார்த்துள்ளோம். அதற்கு மற்றொரு
மிகச்சிறந்த உதாரணம் - கிளிகள். பழங்கள், விதைகளை நன்றாக க�ொத்திச் சாப்பிட வசதியாக, வளைந்த - கடினமான அலகு கிளிகளுக்கு
உண்டு. உலகின் மிகுந்த வண்ணமயமான பறவையினங்களில் கிளிகளும் ஒன்று. காக்கைகளைப் ப�ோலவே கிளிகளும் மிகுந்த புத்திசாலிகள்.
Parrot/Parakeets என்ற வகைகள் குறித்து சிறிது குழப்பமாகவே பலரும் ச�ொல்வதுண்டு. ஆனால், Parrot என்ற வகைக்குள் தான் Parakeets
அடங்கும். சற்று குட்டையான நீண்ட வால் க�ொண்ட parrot’sகளைத் தான் parakeets என்றழைப்பார்கள். ஆரம்பகாலம் த�ொட்டே மனிதர்கள்
தங்களது இருப்பிடத்தில் வளர்த்துவந்த செல்லப் பறவைகளில் கிளிகளுக்கு தனியிடமுண்டு. குறிப்பாக, பச்சைக்கிளி பண்டைய கிரேக்கர்களின் வி-
ருப்பத்திற்குரிய பறவை. நீர்நிலைகளின் அருகில் இருக்கும் மரங்களிலும், அடர்ந்த மரங்களிலும் கூடுகட்டி வாழும்.

பச்சைக்கிளி (Rose-ringed Parakeet) LC

அனைவருக்கும் மிகப்பரிட்சயமான கிளிவகை. "கிளிப்பச்சை" நிறத்தில்


இருக்கும். எடுப்பான சிகப்பு நிற அலகு. ஆண் கிளியின் கழுத்தில்
அடர்சிகப்பு நிறத்தில் வளையம் காணப்படும். பெண் கிளிகளுக்கு
இவ்வளையும் இருக்காது. க�ொய்யாப்பழங்களை விரும்பி உண்ணும்.
சற்று உயரமான மரங்கள், க�ோவில்கள் என்று பல இடங்களிலும்
இக்கிளிகளைப் பார்க்கலாம்.

நீலப் பைங்கிளி (Blue-winged / Malabar Parakeet) LC

இவ்வகை கிளிகளுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. இது ஓரிடப் பறவை


வகைகளில்(Endemic) ஒன்று. நம் நாட்டில் மேற்குத் த�ொடர்ச்சி
மலைப்பகுதிகளில் மட்டுமே இதனைக் காணமுடியும். நீலநிற வால்,
அடர்நீலநிற இறகுகள், பச்சை நிற - கழுத்துப்பகுதியில் - பட்டை
என்று அட்டகாசமான நிறக்கலவையைக் க�ொண்டது.

குட்டைக் கிளி (Vernal Hanging Parrot) LC

குட்டைக் கிளி - காரணப் பெயரன்றி வேறெதுவும் இல்லை. பார்வைக்கு


கிளிக்குஞ்சு அளவிற்கே இருக்கும். கூர்ந்து கவனித்தால் தலையில்
நிறவேறுபாடுகளைக் கண்டறியலாம். இவ்வகைப் பறவைகளுக்குத்
தனித்தன்மையான ஒரு குணமுண்டு. அது தலைகீழாக த�ொங்கிக்கொண்ட
தூங்கும் குணம் - வ�ௌவால் ப�ோல. சற்று அடர்ந்த காடுகளிலும், க�ொஞ்சம்
மலைப்பாங்கான இடங்களிலும் இதனைக் காணலாம்.
(கா)2 ToC

பெரிய பச்சைக்கிளி (Alexandrine Parakeet) NT

அலெக்சாந்தர் இந்தியாவில் இருந்த சமயத்தில் (ப�ோரஸ் மன்னன் - ஹைடஸ்பஸ் ப�ோர்... நினைவிருக்கிறதா?) இப்பறவையை அதிகளவில்
ஏற்றுமதி செய்த காரணத்தால் இவ்வகைக்கிளிகள் Alexandrine Parakeet என்றழைக்கப்படுகிறது. பச்சைக்கிளிக்கும் இதற்கும் உள்ள மிகமுக்கிய
வித்தியாசம், இதன் சிறகுகளில் இருக்கும் வெளிறிய சாந்துப்பொட்டு நிறத்திட்டுக்கள். அதைத்தவிர, பெயரில் உள்ளதுப�ோல பச்சைக்கிளிகளை விட
சற்று பெரிய உருவம் க�ொண்டவை.

இரவில் வேட்டையாடும் திறனுள்ள பறவைகளில் ஆந்தைகளுக்கு தனியிடம் உண்டு. மிகச்சிறந்த பார்க்கும் திறனுக்கு ச�ொந்தக்காரர்கள்.
இதற்கு முக்கிய காரணம், Rod cells எனப்படும் ஒளியை மிகஅதிகமாக அதன் கண்களில் இருக்கிறது.
பஞ்சுருட்டான்கள் (Bee Eaters) (கா)2 ToC

வயல்வெளிகளின் அருகில், குறிப்பாக மின்சாரக் கம்பிகளில் அடிக்கடி கண்ணைக் கவரும் பச்சை நிறத்தில்... சற்று நீண்ட ஒற்றை குச்சி க�ொண்ட
வால் ப�ோன்ற அமைப்பு, இவ்வாறான பறவை ஒன்றை நம்மில் சிலர் கவனித்திருக்கலாம். அது.... சாட்சாத் பஞ்சுருட்டான் தான். இப்புத்தகத்தின்
ஆரம்ப கட்டுரைகளில், அலகின் அமைப்பை உற்று கவனிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அடிக்கடி ச�ொல்லி வருவதை கவனித்திருப்பார்கள்.
பஞ்சுருட்டான்களுக்கு உள்ளது பூச்சிப்பிடி அலகு. வாகாக, பூச்சிகளை பிடிக்க ஏதுவாக இதன் அலகு இருக்கும். கவனிக்க வேண்டிய மற்றொரு
அம்சம், பெரும்பாலும் பறந்து க�ொண்டிருக்கும் பூச்சிகளை பிடிப்பதிலேயே பஞ்சுருட்டான்கள் ஆர்வம் காட்டும். தட்டான், ஈசல் ப�ோன்றவைகளை
பிடித்தவுடன்... கடினமான ஓடு ப�ோன்ற அமைப்பு எதுவும் இருந்தால், அதனை நீக்குவதற்கு.... ப�ோட்டு தேய்த்தெடுக்க ஆரம்பிக்கும்.

சிறிய பஞ்சுருட்டான் (Small Green Bee-eater) LC

தமிழ்நாட்டில் பரவலாகக் காணக்கூடிய பஞ்சுருட்டான் வகை என்றால்... அது இதுதான்.


கழுத்தில் மெல்லிய கருப்புப்பட்டை இருக்கும். நல்ல பச்சை + மஞ்சள் கலந்த இறகு.
அலகிலிருந்து கண்கள் வரை கண்-மை ப�ோட்டது ப�ோல் கருப்புப்பட்டை ஒன்று ஓடும்.

செந்தலை பஞ்சுருட்டான் (Chestnut-headed Bee-eater) LC

இதை பரவலாகக் காணமுடியாது. வால்பாறை ப�ோன்ற மலைப் பிரதேசங்களில்


அதிகளவில் காணலாம். இதற்கும் சிறிய பஞ்சுருட்டானுக்கும் உள்ள மிகமுக்கிய
வேறுபாடு? அதன் பெயரிலயே உள்ளது - "செந்தலை". இந்த பஞ்சுருட்டானின்
பிடரி + கழுத்து + தலை வரை செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தில் கருப்பு
+ செம்பழுப்பு நிற பட்டை ஒன்றைக் காணலாம்.

நீலவால் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater) LC

சிறிய பஞ்சுருட்டான் ப�ோலவே த�ோற்றத்தில் இருந்தாலும், அளவில்


அதனைவிட நீலவால் பஞ்சுருட்டான்கள் பெரியது. எல்லாவற்றையும் விட,
அடிமுதுகு முதல் வால் பகுதி வரை நீல நிறத்தில் இருக்கும். மற்றபடி
இதன் நடவடிக்கைகள் பெரிதும் சிறிய பஞ்சுருட்டான்களை ஒத்திருக்கும்.

மனித கண்கள், மூன்று வித க�ோன்கள் (receptors - ஒளியை உள்வாங்கும் அமைப்பு) க�ொண்டுள்ளன. RGB - சிகப்பு, பச்சை,
ப்ளூ கலர்களை உள்வாங்கும் மூன்று க�ோன்கள். ஆனால் பறவைகளைப் ப�ொறுத்தவரை - நான்கு க�ோன்களைக் க�ொண்டுள்ளன.
RGB க�ோன்கள் ப�ோக, Ultraviolet ஒளிகளுக்காக பிரத்தியேக க�ோன். இரையை வேட்டையாடுவதில் ஆரம்பித்து ஆண் - பெண்
வேறுபாடு வரை பலவற்றிக்கும் இந்த புறஊதா (Ultraviolet) க�ோன்கள் தான் உதவுகின்றன.
குக்குறுவான்கள் (Barbets) (கா)2 ToC

இந்தியாவில் காணப்படும் குக்குறுவான்கள் பெரும்பாலும் பச்சை நிறத்தையே பிரதானமாகக் க�ொண்டிருக்கும். தலை - உடம்பு ரேஷிய�ோ, மற்ற
பறவைகளைக் காட்டிலும் சற்று அதிகம். தடித்த அலகைக் க�ொண்டது. பெரும்பாலான குக்குறுவான்கள், மரப்பொந்துகளில் முட்டையிட்டு குஞ்சு
ப�ொரிக்கும். அத்திப்பழம், ஆலம் பழம் ப�ோன்றவைகளை விரும்பி உண்ணும்.

கழுத்தறுத்தான் குக்குறுவான் (White-cheeked Barbet) LC

பெயருக்கேற்றபடி வெள்ளையான கன்னங்களை உடையது. உடல்


நல்ல பச்சை நிறம். மார்புப்பகுதியில் பழுப்பு நிறக் க�ோடுகள் இருக்கும்.
கண்களைச் சுற்றி ஆரஞ்ச் வளையத்தைக் காணலாம். மேற்கு
த�ொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகளவில் இப்பறவையைக் காணலாம்.

பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet) LC

உடல் முழுவதும் பச்சை நிறம். தலைப் பகுதி பழுப்பு. மார்பு


முதல் அடிவயிறு வரை வெளிர் பழுப்பு. இது கழுத்தறுத்தான்
குக்குறுவானை விட சற்று பெரியது. மரங்களிலேயே
பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் (Arboreal).

செம்மார்பு குக்குறுவான் (Coppersmith Barbet) LC

இது மரத்தை, ட�ொக் ட�ொக் என்று தட்டுவது க�ொல்லர்கள்


வேலை செய்யும்பொழுது வரும் ஒலியைப் ப�ோன்றே இருக்கும்.
அளவில் மற்ற குக்குறுவான்களைக் காட்டிலும் சிறியது. கழுத்து
& உச்சந்தலை க்ரிம்சன் (Crimson) நிறத்திலும், கழுத்து &
கண்களைச் சுற்றி உள்ள பகுதி, மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
உடல் முழுவதும் நல்ல பச்சை. மார்பு முதல் அடிவயிறு வரை
வெளிறிய பழுப்பு நிறம்.
(கா)2 ToC

மலபார் குக்குறுவான் (Malabar Barbet) LC

ஏறக்குறைய செம்மார்பு குக்குறுவனைப் ப�ோன்றே இருக்கும்.


ஆனால், கழுத்து - முகம் முழுவதும் இளம் சிகப்பு
(Crimson) நிறத்தில் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலை-
ப்பகுதிகளுக்கே உரித்தானது இப்பறவை.

பறவைகளின் ஆயுட்காலம் என்று எடுத்துக்கொண்டால், Artic Tern ப�ோன்ற பறவை, சில வகைக் கிளிகள் 40 ஆண்டுகள் வரை
உயிர் வாழும். Macaw, Amazon ப�ோன்ற பறவைகள் 100 ஆண்டுகள் வரைக்கூட உயிர் வாழும் - சரியான கவனிப்பிருப்பின்.
சிறிய பறவைகளின் ஆயுட்காலம் 4 - 12 ஆண்டுகள் வரை இருக்கும்.
மின்சிட்டுகள் (Minivets) (கா)2 ToC

பெயருக்கேற்றார் ப�ோல, சற்றே சிறிய பறவைகள். இவ்வகைப் பறவைகள் நீண்ட உடலையும் குட்டையான கால்களையும் உடையது. மின்சிட்டுகள்,
முற்றிலும் மரங்களுக்குள்ளாகவே தங்களது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளும் வகையைச் சேர்ந்தவைகள் (Aboreal). இரையைப்
பிடிப்பதென்றாலும், பறந்து பறந்து தான் பிடிக்குமே தவிர.. வெகுஅரிதாகவே தரைக்கு வரும். மேலும், மிகஉயர்ந்த இடங்களிலேயே கூடுகட்டும்.
மின்சிட்டுகள் வலசை ப�ோகாது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளாகவே சுற்றிக்கொண்டிருக்கும். மரங்கள் அடர்ந்த காடுகளில் அதிகளவில் இதனைப்
பார்க்கலாம். பூச்சிகளையே பிரதான உணவாகக் க�ொள்ளும்.

ஆரஞ்ச் மின்சிட்டு (Orange Minivet) LC

ஆரஞ்ச் மின்சிட்டு நீண்டநாட்களாக ஸ்கார்லெட் மின்சிட்டின்


இனத்தைச் சேர்ந்தத�ொரு பறவையாகவே கருதப்பட்டு வந்தது.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு, தென்கிழக்கு இந்தியா -
இலங்கைப் பகுதியைச் சேர்ந்த இவ்வகைப் பறவைகள் ஸ்கார்லெட்டி-

Male

லிருந்து சற்று மாறுபட்டிருப்பதைக் கண்டு, தனி இனமாக (Species) அட்ட-


வணைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மின்சிட்டுகளைக் காட்டிலும் சற்று பெரிய
பறவை இது. நிறக் கலவையில், ஆண்/பெண் இரண்டும் - உச்சந்தலையின்
சாம்பல் நிறமும், ஆண் - இறக்கையில் சிகப்பு புள்ளிகளையும் க�ொண்டிருக்கும்.
க�ொஞ்சம் நீண்ட வால்களை உடையது.

Female

சிறிய மின்சிட்டு (Small Minivet) LC

எல்லா மின்சிட்டுகளையும் விட அளவில் சிறியவை. ஆண், மற்ற மின்சிட்டுகள் ப�ோல அடர்கருப்பு நிற கழுத்து + முதுகுப்பகுதியைக் க�ொண்டிருக்காது.
மாறாக அடர்சாம்பல் நிறத்தில் இருக்கும். வயிற்றுப்பகுதி வெளிறிய ஆரன்ச் நிறத்தில் இருக்கும். பெண், வயிற்றுப்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
ஆரஞ்ச் மின்சிட்டுகள் ப�ோலவே இதற்கும் நீண்ட வால் உண்டு.
(கா)2 ToC

மாங்குயில் (Indian Golden Oriole) LC

மரங்கள் அடர்ந்த பகுதிகளில் இவ்வகை மாங்குயில்களை


பார்க்க முடியும். கழுத்து முதல் வால் வரை நல்ல மஞ்சள்
நிறம். கண்ணைச் சுற்றி கருப்பு தீட்டு காணப்படும். அலகு
- வெளிர் சிகப்பு. பெண் மாங்குயில்களுக்கு மார்புப்பகுதியில்
பழுப்பு நிறக்கோடுகள் காணப்படும். மாங்குயில்கள்,
பெரும்பாலும், கருங்கரிச்சான் ப�ோன்ற பறவைகளின் கூட்டுக்கு
அருகிலேயே கூடு கட்டி குஞ்சு ப�ொரிக்கும். ஏனென்றால்
கருங்கரிச்சான் மற்ற பறவைகளை தங்கள் கூட்டினருகே
நெருங்க விடாது என்பதால், தனக்கும் பாதுகாப்பு என்ற
வகையில். பழங்களே விருப்பமான உணவு என்றாலும்,
பூச்சிகளையும் அவ்வப்போது உண்ணும். மரங்களை விட்டு
வெகு அரிதாகவே கீழிறங்கும் (Arboreal).

கருந்தலை மாங்குயில் (Black-headed Oriole) LC

கருப்பு நிற த�ோள்பட்டை. தலை மட்டும் நல்ல கருப்பு. மற்ற உடல்


பாகங்கள் அனைத்தும் மஞ்சள். அலகு - ர�ோஸ் நிறம். மலைப்பகுதிகளில்
அதிகளவில் இதனைக் காண முடியும். பழக்கவழக்கங்கள், மாங்குயிலைப்
ப�ோன்றே இருக்கும். இதனது நடவடிக்கைகளும் பெரும்பாலும்
மரத்திலேயே இருக்கும்.

பறவைகளைப் பற்றி கட்டிவிடப்படும் பலக்கதைகளில் ஒன்று, ஆஸ்ட்ரிச் (நெருப்புக�ோழி) ஆபத்து நேரத்தில் மண்ணுக்குள் தலையை
புதைத்தவாறு நிற்கும். பின் எப்படி மூச்சு விடும்? ஆஸ்ட்ரிச் பல பறவைகளைப் ப�ோல மண்ணுக்குள் குழி த�ோண்டி முட்டையிடும்
அவ்வளவே.
Common Tailorbird
(கா)2 ToC

Velvet-fronted Nuthatcher
(கா)2 ToC

மாம்பழச் சிட்டு (Common Iora) LC

உலகளவில் ம�ொத்தம் நான்கு வகை ஐய�ோரா பறவைகள் மட்டுமே உள்ளன.


அத்தனை சிறிய குடும்பம் இது. அந்த நான்கில், இந்தியாவில் இரண்டும்
-> அதில் தென்னிந்தியாவில் ஒன்றும் - மாம்பழச் சிட்டு, உள்ளது. மரங்கள்
அடர்ந்த திறந்தவெளிக் காடுகளில் இப்பறவையைக் காண முடியும். கழுத்து
முதல் அடிவயிறு - வால் வரை நல்ல மஞ்சள் நிறம். தலையில் நெற்றி
முதல் பிடறி வரை கருப்பு. அலகு - சின்னதாக, கூர்மையாக இருக்கும்.
இனப்பெருக்க காலங்களைத் தவிர, ஆண் - பெண் நிறத்தில் பெரிய
வேறுபாடு இருக்காது. இனப்பெருக்க காலங்களில், ஆணின் இறக்கைகளில்
வெள்ளைப்பட்டை காணப்படும். மரங்களில், புதர்களில் இருக்கும் சிறுசிறு
பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடும்.

பச்சைச் சிட்டு (Golden-fronted Leafbird) LC

பச்சை சிட்டும், மாம்பழச் சிட்டைப் ப�ோலவே - உலகளவில் வெறும்


ஒன்பது வகை பச்சை சிட்டுகளே உள்ள - சிறிய குடும்பத்தைச்
சேர்ந்த பறவை. தாடையில் த�ொடங்கி கழுத்து வரை கருப்பு நிறம்.
நெற்றி - மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறம். உடல் முழுவதும் நல்ல
பச்சை. இதுவும் மாம்பழச் சிட்டைப் ப�ோல மரங்களை அடையும்
பறவை. சிறு பூச்சிகள், பழங்களை உணவாகக் க�ொள்ளும்.

நீலச் சிட்டு (Asian Fairy Bluebird) LC

இது மற்ற இரண்டு பறவைகளைக் காட்டிலும் மிகச்சிறிய குடும்பத்தைச்


சார்ந்தது. உலகளவில், இரண்டே இரண்டு வகையான Bluebirdகளே
உள்ளன. அவற்றில் ஒன்று - நீலச்சிட்டு - இந்தியாவில் உள்ளது. ஆண்
பறவை - தலை - பிடறி, த�ோள், புட்டம் - அனைத்திலும் டாலடிக்கும்

Female

நீல நிறத்தைக் க�ொண்டிருக்கும். பெண் - நீலம் படர்ந்த பச்சை நிறத்தில்


இருக்கும். அத்திப் பழங்களே இதன் பிரதான உணவு. அதுவும் ஒரே
மாதிரியான அளவுள்ள அத்திப் பழங்களையே தேடிப்பிடித்து, அதனை
நசுக்கி உண்ணும். பூச்சிகளையும் அவ்வப்போது உண்ணும்.

Male
(கா)2 ToC

செந்தலைப் பூங்குருவி (Orange-headed Thrush) LC

மரங்கள் அடர்ந்த பகுதிகளில் இப்பறவையைக் காணலாம். தலை - கழுத்து


- அடிவயிறு, நல்ல ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். வாலின் நுனிப்பகுதி -
புட்டம், வெள்ளை நிறத்தில் இருக்கும். வெள்ளைக் கன்னங்களில் கருப்புப்
பட்டைக் காணப்படும்.
வலசை மேஜிக் (கா)2 ToC

பறவையினங்களில் கிட்டத்தட்ட 40 - 50% பறவைகள் வலசை (Migration) ப�ோகக்கூடியவை. இதில் கிட்டத்தட்ட 15% மிகநீண்ட தூரத்திற்கு
வலசை ப�ோகக்கூடிய பறவைகள். பறவைகள் முக்கியமாக இரண்டு காரனங்களுக்காக வலசை ப�ோகும்: உணவுத் தேவைகளுக்காகவும், முட்டையிட்டு
- குஞ்சு ப�ொரிப்பதற்கு தகுந்த சீத�ோஷ்ணநிலைகளைத் தேடியும். ஆனால் எப்பிடி ஒவ்வொரு வருடமும் மிகக்கச்சிதமாக ஒரே இடத்திற்கு பறவைகள்
பல ஆயிரம் கில�ோமீட்டர்கள் தாண்டி வருகின்றன? இதற்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால், ஏகப்பட்ட
ஆராய்ச்சிகளின் முடிவு, மூன்று காரணங்களை பறவைகளின் திசை அறியும் துல்லியத்திற்கு காரணமாகச் ச�ொல்கின்றன.

»» மின்காந்தப்புலம் (Magnetic Field) பூமியின் மின்காந்தப்புலத்தின் வேறுபாடுகளைக் கணித்து அதன் மூலம் ப�ோக வேண்டிய இடத்திற்குச்
செல்கின்றன.
»» காந்தத் துகள்கள் (Internal Compass) புறா ப�ோன்ற பறவைகளுக்கு இயற்கையாகவே காம்பஸ் ப�ோன்ற மிகச்சிறிய அமைப்பு உண்டு
என்று கூறுகின்றனர். க்வான்டம் மெக்கானிசத்தின் பயனாக அந்த காம்பஸ் ப�ோன்ற அமைப்பிள்ள துகள்கள் எவ்வாறு பறவைகளுக்கு திசை
காட்டும் கருவியாகச் செயல்படுகிறது என்று பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன
»» நட்சத்திரங்களை அடையாளமாக வைத்துப் பறத்தல். கிட்டத்தட்ட மனிதர்கள் உபய�ோகப்படுத்தும் அதே டெக்கனிக்.
இதுப�ோக, குறிப்பிட்ட இடங்கள் / மலைகள் / ஆறுகள் / கட்டிடங்கள் - பார்வைத் திறன்/முகர்தல் - மரபுரீதியாகவே வரும் நுண்ணறிவு -
ஞாபகத்திறன் என்று மேலும் பல விஷயங்களும் பறவைகளின் துல்லியத்திற்குக் காரணம்.

Source: creationevolutiondesign.blogspot.com Source: watchingtheworldwakeup.blogspot.in


(கா)2 ToC

Source: Center for Ecological Sciences, IISc


புறா (Dove/Pigeon) (கா)2 ToC

உயரமான கட்டிடங்களில் ஆரம்பித்து மசூதிகள் வரை கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் புறாக்களைப் பார்க்கலாம். சற்று பெருத்த உருவம்,
அதற்கு த�ொடர்பில்லாதது ப�ோல் தெரியும் குட்டையான கால்கள், சிறிய கழுத்து + அலகு ப�ோன்றவைகள் புறாக்குடும்பத்திற்கான பிரத்தியேக
உடலமைப்பு. பழங்கள், குறிப்பாக தானியங்களை விரும்பி உண்ணும். பழ விதைகளை பல இடங்களில் எச்சமிடுவதன் மூலம் சுற்றுச்சூழலியலில்
புறாக்களின் பங்கு முக்கியமானது. தனது இணையக் கவர்வதற்காக புறாக்கள் பல்வேறு சேட்டைகளைச் செய்யும்.

புறா என்றவுடன் சிலருக்கு வேறு சில விஷயங்களும் ஞாபகம் வரலாம்.


‘புறா விடு தூது’ மற்றும் ‘பந்தயம்’. ஆதிகாலம் த�ொட்டே, மனிதன்
செய்திகளை ஒரு குறிப்பிட்ட த�ொலைவிற்குள் பரிமாறிக்கொள்ள
புறாக்களை வளர்த்துவந்ததற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன.
பின்நாட்களில் பெர்ஷியர்கள், புறாக்கள் மட்டுமல்லாமல் பலவகைப்
பறவைகளையும் இதுப�ோன்ற வேலைகளுக்காக வளர்ப்பதில் சிறந்து
விளங்கினர். பண்டைய காலம் த�ொடங்கி இருபதாம் நூற்றாண்டுவரை
ப�ோர்க்காலங்களில் புறாக்களின் சேவை மகத்தானது. அவ்வாறான
ப�ோர் புறாக்களைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு.
மிகச்சிறப்பாக இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்தமைக்காக(?) 32
புறாக்களுக்கு மெடல்கள் தரப்பட்டதெல்லாம் நடந்துள்ளது. Great
Barrier Pigeongram Service என்ற பெயரில் நியூசிலாந்தின்
ஆக்லாந்து பகுதிக்கும் க்ரேட் பேரியர் தீவிற்கும் இடையே 1897 முதல்
1908 வரை, பதின�ோரு ஆண்டுகள் இடைவிடாத தபால்சேவையை Source : dailymail.co.uk
புறாக்கள் சீரும் சிறப்புமாக செய்துவந்தன.

புறாக்களை தூதுவிடும் பழக்கம் இன்று பெருமளவில் இல்லை என்றாலும், புறா பந்தயம் மட்டும் இன்னும் உலகின் பல்வேறு இடங்களில்
நடந்துக�ொண்டுதான் இருக்கிறது. அதில் சென்னை தான் புறாக்களின் பறக்கும் தூரத்தின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 2100
கிமீ பந்தய தூரம். இப்படி தூது முதல் பந்தயம் வரை அட்டகாசமாகவும் துல்லியமாகவும் திசைகளை கண்டறிந்து பறக்கும் திறன் புறாக்களுக்கு எப்படி
வந்தது? வலசை பற்றி முன்பு பார்த்தோமே... அதுதான் இதற்கும் விடை. உள்ளுணர்வு, ஒலியலைகள், மின்காந்த அலைகள் என்று பல விஷயங்கள்
பறவைகளின் நீண்டதூர பறத்தலுக்குப் பின்னால் இருந்தாலும், இன்னும் தெளிவான விளக்கங்கள் கண்டறியப்படவில்லை என்பதே உண்மை.

மாடப்புறா (Blue Rock Pigeon) LC

கழுத்தில் டாலடிக்கும் பச்சை நிறத்தை வைத்து கண்டுக�ொள்ளலாம்.


க�ோவில்கள், உயரமான கட்டிடங்கள், சிதிலங்கள் ப�ோன்ற இடங்களில்
இருக்கும். அலகில் சிறிய வெள்ளை பட்டைகள் காணப்படும்.

புள்ளிப்புறா (Spotted Dove) LC

மற்றொரு பெயர் - மணிப்புறா. கருப்பு நிற கழுத்துப்பிடரியில் வெள்ளைப்புள்ளிகள்


திட்டுத்திட்டாக இருக்கும். சற்று நீண்ட வால் இருக்கும். மாடப்புறாவை விட
அளவில் சிறியது.
(கா)2 ToC

கள்ளிப்புறா (Eurasian Collared-Dove) LC

கழுத்தில் கருப்பு காலர் ப�ோன்றத�ொரு பட்டை இருக்கும்.


அதுதான் இவைகளின் அடையாளம். மாடப்புறாவைப்
ப�ோல மனிதர்களுடன் நெருங்கிப் பழகும்.

சின்ன தவிட்டுப்புறா (Little Brown Dove) LC

தலையும் வயிற்றுப்பகுதியும் சாம்பல் கலந்த பிங்க் நிறம்.


கழுத்தில் கருப்புப் புள்ளிகள் காணப்படும். வால் சற்று
நீண்டிருக்கும். த�ோள்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும்.

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது தெரியுமா? மரகதப் புறா


(Emerald Dove). அதேப�ோல், தமிழ்நாட்டின் மாநில விலங்கு -
நீலகிரி வரையாடு. உலகில் வேறெங்குமே இல்லாத ஒரு விலங்கினம்.
ஆனால் இன்றோ.... அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு உலகின்
அருகி வரும் இனங்களில் (Endangered Species) ஒன்றாக
அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.
காக்கை (Crow) (கா)2 ToC

என்னடா இது.... காக்கையைப் பற்றி தெரியாதா என்ன?! அதற்காக ஒரு கட்டுரையா… என்ற எண்ணம் நிச்சயம் எழக்கூடும். பறவை ந�ோக்குதல்,
அது சார்ந்த அறிவியல்பூர்வமான அணுகுமுறை என்று வந்துவிட்டால் எந்தப் பறவையையும் ஒதுக்கலாகாது. தவிர, நம்மைச் சுற்றி எப்போதும்
காக்கைகள் இருப்பதால் பெரிதாக நாம் அவைகளை கண்டுக�ொள்வதில்லை என்பதே உண்மை. "காக்கையை பாரு கூடி பிழைக்கும்", "உயரப்
பறந்தாலும் ஊர் குருவி" ப�ோன்ற பழம�ொழிகளில் ஆரம்பித்து... "காக்கா புடிக்கிறது, பாம்பு காது" ப�ோன்ற ச�ொல்லாடல்கள் எல்லாம் மிகைப்படுத்த-
ப்பட்ட ச�ொல்லாடல்கள். பறவைகள், விலங்குகள் ப�ோன்ற உயிரினங்கள் பற்றிய அறிவியல்பூர்வமான பார்வை நம் நாட்டில் ஆரம்பகாலம் த�ொட்டே
குறைவு என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். காக்கை மட்டுமல்ல, ஏராளமான உயிரினங்கள் கூட்டமாக வேட்டையாடுவதில் த�ொடங்கி உணவு
உண்ணுவது வரை, பாதுகாப்பிற்காகத்தான் என்ற அறிவியல் உண்மை மேலே பார்த்ததைப் ப�ோன்ற அலங்கார வார்த்தைளால் கவனிக்கப்படாமலேயே
மறக்கடிக்கப்படுகிறது.

உலகின் ஒருசில இடங்கள் தவிர, காக்கைகள் இல்லாத இடமே இல்லை. வலியது வாழும், தக்கன பிழைக்கும் என்ற டார்வினின் பரிணாமக்
க�ொள்கைகளின் அட்டகாசமான சான்றுகள்தான் காக்கைகள். சிட்டுக்குருவிகள் ப�ோன்ற பல பறவைகள், பெருகிவரும் நகரச் சூழ்நிலைகளுக்கு
ஏற்றவாறு தங்களை தகவமைத்துக்(adapt) க�ொள்ள முடியாமல் அழிந்து க�ொண்டிருக்கும் சூழ்நிலையில் காக்கைகள் மட்டும் அமர்க்களமாக
நம்மிடையே சகஜமாக புழங்கிக் க�ொண்டுதான் உள்ளன. காக்கை ஒரு அனைத்துண்ணி. செத்த எலியில் ஆரம்பித்து, கெட்டுப்போன ப்ரெட்
வகைகள் வரை அனைத்தையும் உண்ணக் கூடியது. அவ்வளவு ஏன்... பிற பறவைகள் தங்களது குஞ்சுகளுக்கு க�ொடுக்க வைத்திருக்கும் உணவையும்
சேர்த்தே தின்றுவிடும். பிற பறவைகளை அவ்வப்போது சீண்டிப் பார்க்கும். பயங்கர எச்சரிக்கை உணர்வு க�ொண்டது. முட்டை - குஞ்சுகள் என்று
வந்துவிவிட்டால், சர்வஜாக்கிரதையாக வட்டமிட்டுக்கொண்டே இருப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். மனிதர்களைப் ப�ோல, சற்று நக்கல்
பிடித்த பறவை என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெள்ளத்தெளிவாக விளக்குகின்றன. உலகின் மிகபுத்திசாலியான பறவைகளில் காக்கைக்கு
எப்பொழுதும் தனி இடம் உண்டு. சற்று நேரம் ஒதுக்கி நம்மைச் சுற்றி தினமும் பறந்துக�ொண்டிருக்கும் காக்கைகளை கவனித்தாலே அவைகளின்
புத்திக் கூர்மை வெகுஎளிதில் விளங்கிவிடும். இத்துணை புத்திசாலியாய் இருந்தாலும், குயில் அதன் முட்டையினை தங்களது கூட்டில் இட்டுச்
செல்வதை காக்கைகள் அறிந்துக�ொள்வதே இல்லை. அதையும் தங்களது முட்டைகளாக நினைத்து, அடைகாத்து குஞ்சு ப�ொறிக்கும். குயிலுக்கும்
காக்கைக்குமான இந்தத் த�ொடர்பை இன்றுவரை விஞ்ஞானிகள் ஆராய்ந்துக�ொண்டுதான் இருக்கின்றனர். நம்மைச் சுற்றி பெருவாரியாக இருப்பது
இரண்டு வகைக் காக்கைகள்.

வீட்டுக் காகம் (House Crow) LC

கழுத்து, பிடரி, மார்புப் பகுதிகளில் சாம்பல் நிறத்திலும்,


மற்ற இடங்கள் அடர் கருப்பு நிறத்திலும் இருக்கும்.

அண்டங்காக்கை (Jungle Crow) LC

வீட்டு காகத்தை விட சற்று பெரிய உருவம்.


முழுக்க மினுக்கும் கருப்பு நிறத்தில் இருக்கும். நல்ல
அடர்த்தியான அலகு.
(கா)2 ToC

வால் காக்கை (Rufous Treepie) LC

காக்கை குடும்பத்தைச் சார்ந்த பறவைகளில் ஒன்று. இதற்கு


ஏகப்பட்ட பெயர்கள் உண்டு - மாம்பழத்தான் குருவி;
அரிகாடை; முக்குறுணி. மைனா அளவிற்கான உடல்
இருந்தாலும், பார்த்தவுடன் அதன் - சாம்பல் + வெள்ளை
+ கருப்பு நிற நீண்ட வால் தனியாகத் தெரியும். முதுகுப்
பகுதி முழுவதும் அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும். தலை
முதல் கழுத்து வரை காக்கையைப் ப�ோன்றே இருக்கும்.
காக்கைகளைப் ப�ோன்றே இதுவும் ஒரு அனைத்துண்ணி.

இந்தியாவின் பறவை மனிதர் என்றழைக்கப்படுபவர் - சாலிம் அலி. தனது ஆயுட்காலத்தின் பெரும்பகுதியை பறவையிலுக்காகவே
செலவிட்டவர். அவரது The Fall of a sparrow (ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி) மிகப்பிரசித்த பெற்ற, சுவாரசியமானத�ொரு
சுயசரிதம்.
குயில் (Cuckoo) (கா)2 ToC

கூட்டுப் பரிணாமம் (Coevolution)... இன்றுவரை விஞ்ஞானிகளை வசியப்படுத்திக் க�ொண்டிருக்கும் ஒரு விஷயம். கூட்டுப் பரிணாமம் - சுருங்கச்
ச�ொல்வதென்றால், ஒன்றை ஒன்று சார்ந்து வளரும் இரு உயிரினங்கள், காலமாற்றத்தால் ஏற்படும் மாறுதல்களுக்கு உட்பட்டு எவ்வாறு ஒன்றுடன்
ஒன்று அட்ஜஸ்ட் செய்துக�ொண்டு பரிணாம வளர்ச்சி பெறுகிறது என்பதே. பூச்சிகள் - பூக்கள் - மகரந்த சேர்க்கை, ஒரு உதாரணம். பறவை
இனங்களில் இதற்கான அட்டகாசமான உதாரணங்களில் ஒன்றுதான் குயில்கள். குயில்கள், மற்ற பறவைகளின் அடைகாக்கும் திறனை பயன்படுத்தி
தனது இனத்தை வளர்க்கும் உயிரினம் (Brood Parasites). குயில் அடைகாக்காது என்பது பலருக்கும் தெரிந்த செய்தி. எங்கே இந்த கூட்டுப்
பரிணாமம் வருகிறதென்றால், ஒவ்வொரு குயிலினமும் ஒவ்வொரு மாதிரி முட்டையிடும். இது எங்கு பயன்படுகின்றதென்றால், காக்கை முட்டை
ப�ோல முட்டையிடும் குயிலினம், மிகச்சரியாக காக்கை கூட்டிற்குள்ளும், புதர் குருவியின் (Warbler) முட்டை ப�ோல் முட்டையிடும் குயிலினம்
மிகச்சரியாக அதன் கூட்டிற்குள்ளும் சென்று முட்டையிடும். இதில் மிகமுக்கியமான ஒன்று, வளர்ந்த புதர்சிட்டை விட அது உணவு ஊட்டி
வளர்க்கும் குயில் குஞ்சு, பலமடங்கு உருவத்தில் பெரியதாக இருக்கும். அதுகூடவா புதர்சிட்டுக்கு உறுத்தாது? எவ்வாறு ஒவ்வொரு குயிலினமும்
அதன் முட்டை ப�ோலவே இருக்கும் மற்றொரு பறவையினத்தின் கூட்டிற்குச் சென்று முட்டையிடுகிறது? இதற்கெல்லாம் இன்னமும் மிகத்தெளிவான
விளக்கங்கள் இல்லை என்பதே உண்மை.

அக்கா குயில் (Common Hawk-cuckoo) LC

உடல் அடர் சாம்பல் நிறம். கண்களில் மஞ்சள் வளையம் காணப்படும்.


கழுத்து முதல் வயிறு வரை பழுப்பு நிறக்கோடுகள் காணப்படும். பெரும்பாலும்
சிலம்பங்களின் கூட்டில் முட்டையிடும். இதன் குரல் "அக்கக்காக்கக"
என்பது ப�ோல ஒலிக்கும். இதனால் தான், அக்காக்குயில் என்ற பெயர்
வந்தது.

சிறுகுயில் (Indian Plaintive Cuckoo) LC

பார்வைக்கு அக்கா குயிலைப் ப�ோலவேத் தெரியும். ஆனால், இதன்


கண்களில் மஞ்சள் வளையம் இருக்காது. வால் - கருப்பு; நுனி -
வெள்ளை. பெரும்பாலும் தையல்சிட்டு அல்லது கதிர்க்குருவியின்
கூட்டில் முட்டையிடும்.

சுடலைக் குயில் (Pied Cuckoo) LC

கழுத்துப் பகுதி முழுவதும் நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் சிறிய


கருப்புக் க�ொண்டை ப�ோன்ற அமைப்பு காணப்படும். இந்தவகை குயிலுக்கு மற்றொரு
சிறப்பு உண்டு. பருவமழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் இதன்
நடமாட்டம் இருக்கும் என்றொரு நம்பிக்கை உண்டு. இதன் அடிப்படையில்
Migrant Watch (http://www.migrantwatch.in/) அமைப்பினர் இந்தக்
கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது குறித்து பலவருடங்களாக ஆராய்ந்து
வருகின்றனர். உங்கள் ஏரியாவில் இந்தப் பறவையைப் பார்த்தால் அவர்களது
தளத்திற்குச் சென்று அதனை பதிவு செய்யலாம்.
(கா)2 ToC

ஆசியக் குயில் (Asian Koel) LC

பரவலாக நம்மூரில் இருக்கும் குயிலினம் இது. பெரும்பாலும்


பார்த்ததைவிட, இதன் குரலயே கேட்டிருப்போம். ஆண் குயில்,
நல்ல அடர் கருப்பு நிறம் + சிகப்பு கண்களுடனும், பெண்
குயில் பழுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடனும் இருக்கும்.
குயில் கூவும் என்று ச�ொல்வோமே... அது பெரும்பாலும்
ஆண் இனத்தையே குறிக்கும். பெண் குயில், "கிக்கிக்கிக்"
என்று கத்தும். காக்கைகள் இல்லாத சமயத்தில் அதன்
கூட்டுக்குள் முட்டை இட்டுவிடும். அத�ோடு நிற்குமா.....
காக்கை முட்டைகள்

Female
சிலவற்றை தள்ளிவிட்டு உடைத்துவிடும். இவ்வாறு குயில்கள் மற்ற பறவைகளின்
முட்டைகளை உடைப்பதன் மூலம் அப்பறவைகளின் எண்ணிக்கையை கட்டுக்குள்
வைத்திருக்க உதவுகிறது. குளிர்காலங்களில் இதன் நடமாட்டம் இல்லாதது ப�ோலத்
தெரியும். க�ோடைகால த�ொடக்கத்தில் இருந்தே தன்னை வெளிக்காட்டிக்கொ-
ள்ள ஆரம்பிக்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை குயில்கள் முட்டையிடும் காலம்
(காக்கையும் இதேகாலங்களில் தான் முட்டையிட்டு குஞ்சு ப�ொறிக்கும்).

Male

செண்பகம் (Greater Coucal) LC

மற்றொரு பெயர்: செம்போத்து. குயில் குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இதை, பறக்கும் ப�ொழுது பார்த்ததை விட தவ்வித் தவ்வி ஓடும்போதுதான்
பலரும் பார்த்திருப்போம். புதர்கள் மண்டிக் கிடக்கும் இடங்களில் பரவலாகக் காண முடியும். பார்வைக்கு காக்கை ப�ோலவே இருக்கும். ஆனால்,
சற்ற நீண்ட வால்களை உடையது. உடல் முழுவதும் அடர் கருப்பாகவும் இறக்கை மட்டும் அரக்கு கலரில் இருக்கும். கண்கள் சிகப்பு நிறம். குயில்
குடும்பமாக இருந்தாலும், இதற்கொரு தனிச்சிறப்புண்டு. மற்ற குயிலினங்களைப் ப�ோலில்லாமல், ச�ொந்தமாக கூடுகட்டி குஞ்சு ப�ொறிக்கும் பறவை
இது.

பச்சை வாயன் (Small Green-billed Malkoha) LC

படு கூச்ச சுபாவி. ஆட்களைக் கண்டால் படக்கென்று ஓடிவிடும்.


கண்ணைச் சுற்றி நீல நிற அமைப்பு காணப்படும். அதனால்,
இப்பறவையின் பார்வை சற்று கலக்கமுற்றதாகவே நமக்குப்படும்.
அலகு - பச்சை நிறம். பெரும்பாலும் குரலெழுப்பாமல் அமைதியாகவே
திரிந்து க�ொண்டிருக்கும்.

"இந்திய பறவையியலின் ப�ோப்" என்றழைக்கப்படும் நபர் யார் தெரியுமா? ஏ.ஓ.ஹியும் (Allan Octavian Hume) என்ற
பிரிட்டிஷ்காரர். இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டதுப�ோல் இருக்குமே…? ஆம்... இவர்தான் 1855-ஆம் ஆண்டு தேசிய
காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த சிலரில் மிகமுக்கியமான ஆசாமி.
மைனாக்கள் (Mynas) (கா)2 ToC

மைனாக்கள், Starling எனப்படும் பறவையின் குடும்பத்தை சேர்ந்தவைகள். ஆசிய வகை ஸ்டார்லிங்களுக்கு மைனா என்று பெயர். பூச்சிகள்,
புழுக்கள், பழங்கள், விதைகள் என்று அனைத்தையும் சாப்பிடும். சிலவகை மைனாக்கள், ஒப்பொலி (Mimicry) செய்வதில் வல்லவர்கள்.
அதுமட்டுமா.. நமக்கு வட்டார ம�ொழி இருப்பது ப�ோல, சிலவகை மைனாக்களுக்கும் பிரத்தியகே "ம�ொழி" உண்டு. ஒரே காட்டிற்குள் ஒரு இடத்தில
இருக்கும் மலை மைனா (Hill Myna) குழுவிற்கும் சிலபல கில�ோமீட்டர்கள் தள்ளி இருக்கும் மற்றொரு குழுவிற்கும் வேறுவேறு ம�ொழிகள்
இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மைனா (Common Myna) LC

எங்கெல்லாம் மனித நடமாட்டம் உள்ளத�ோ அங்கெல்லாம்


இவ்வகை மைனாவைக் காண முடியும். கவனித்துப்
பார்த்தால், தனியாக இருப்பதை விட ஜ�ோடியாகத்தான்
அதிகமாக திரிந்துக�ொண்டிருக்கும். ஒவ்வொரு ஜ�ோடியும்
தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் க�ொள்ளும்.
அந்த எல்லைக்குள் மற்றொரு மைனா உள்ளே வரும்
சமயங்களில்.... அவர்களது சந்திப்பு பெரும்பாலும்
சண்டையில் ப�ோய்தான் முடியும். அடுத்த பறவை
இனங்களின், அப்பறவைகளின் இருப்பிடத்தின் மீது

பயங்கர ஆதிக்கம் செலுத்தும் பறவையினங்களில்


(Invasive species) மைனா மிகமுக்கியமான பறவை.

கருப்பு நிறக்கழுத்து; அடர்பழுப்பு நிற உடம்பு; அலகு -


கால் முழுவதும் நல்ல மஞ்சள் நிறம்; கண்ணைச் சுற்றி
அதே மஞ்சள் நிறம்.

எங்க ஏரியா... உள்ள வரதே.....

காட்டு மைனா (Jungle Myna) LC

மைனாவிற்கும் இதற்கும் தெளிவான வித்தியாசம்


- கண்களைச் சுற்றி இருக்கும் மஞ்சள்
திட்டு, இதற்கு இருக்காது. நீலநிற கண்கள்.
அதேப�ோல, அடர்த்தியான மீசை ப�ோன்ற
அமைப்பு (Whisker). இம்மைனாக்களை
சற்று மலைப்பாங்கான, குளிர் பிரதேசங்களில்
அதிகமாகப் பார்க்க முடியும். இனப்பெருக்க
காலங்கள் தவிர, மற்ற நாட்களில் கூட்டமாக
வாழும். மனிதர்களின் குரலுக்கு மிகநெருக்கமாக
ஒப்பொலி செய்யும் பறவைகளில் காட்டு
மைனாவிற்கு தனியிடமுண்டு.
(கா)2 ToC

மலை மைனா (Common Hill Myna) LC

பெயருக்கேற்றார் ப�ோல, மலைப் பிரதேசங்களில் இவைகளைக்


காணலாம். நல்ல அடர் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆரஞ்ச் +
மஞ்சள் கலந்த அலகு; மஞ்சள் பிடரி மற்றும் கழுத்துப்பகுதியில்
மஞ்சள் பட்டை என்ற நிறக்கலவை க�ொண்டது. இதன் "ம�ொழி
ஆளுமையைப்" பற்றி முதல் பத்தியில் பார்த்ததை மீண்டும்
நினைவுபடுத்திக் க�ொள்க. வளர்ப்பு மைனாவாக மிகஅதிகளவில்
இவ்வகை மைனாக்களே வளர்க்கப்படுகின்றன.

ச�ோளப்பட்சி (Rosy Starling) LC

உச்சந்தலை, த�ோள்பட்டை, வால் - அனைத்தும் கருப்பு.


காலும் அலகும் சாம்பல் கலந்த ஆரஞ்ச் நிறம். அடிவயிறு
சாம்பல் நிறம். இதுவும் பெரும்பாலான மைனாக்கள் ப�ோன்றே
கூட்டமாக அலையக்கூடியது. இப்பறவைகள் வலசை ப�ோகும்.

கருங்கொண்டை மைனா (Brahminy Starling) LC

உச்சந்தலையில் கருப்பு ஹெல்மட் மாட்டியது ப�ோல கருப்பு


க�ொண்டை காணப்படும். உடல் முழுவதும் பழுப்பு கலந்த சாம்பல்
நிறம்.

ஸ்டார்லிங் பறவைகளின் கூட்டத்திற்கு என்ன பெயர் தெரியுமா? Murmuration - a flock of starlings. இதை படித்துக்
க�ொண்டிருக்கும் ப�ோது.... அல்லது படித்து முடித்தவுடன், ஒரு சின்ன வேலை செய்யுங்கள். கூகிளில் Starlings murmuration
என்று டைப் செய்து பாருங்கள். சர்வநிச்சயமாக கூறுகிறேன். மறக்கமுடியாத ஒரு காட்சியனுபவம் கிடைக்கும். ஓராயிரம் ஸ்டார்லிங்கள்
ஒரே சமயத்தில் பறக்கும் காட்சி தான் அது. பறத்தல் என்றால் நமது நினைவுக்கு வரும் பறத்தல் அல்ல. இது ஒத்திசைவான பறத்தல்.
கடலலை ப�ோல, ஏறி இறங்கி - வளைந்து நெளிந்து - படக்கென்று டைவ் அடித்து...... இப்படியான படுரகளையான சாகசம்
அது. பெரும்பாலும் இந்நிகழ்வு பாதுகாப்பின் காரணமாக நிகழ்வதாகவே கண்டறியப்பட்டுள்ளது. கணித ந�ோக்கில், எப்படி இத்தனை
துல்லியமான வடிவங்களை murmurationகளின் ப�ொழுது இப்பறவைகள் உருவாக்குகின்றன என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சிகள்
நடந்துவருகின்றன.
கரிச்சான்கள் (Drongos) (கா)2 ToC

கரிச்சான்கள், Passerine வகையைச் சேர்ந்தவை. இவைகள் மட்டுமின்றி உலகின் ம�ொத்த பறவையினங்களில் கிட்டதட்ட பாதி Passerine வகைப்
பறவைகளே. இந்த Passerine பறவைகளுக்கு Perching birds என்ற பெயரும் உண்டு. தனித்தன்மையான வால் அமைப்பைக் க�ொண்ட -
இரட்டையாக பிளவுபட்டதாக - பறவையினம் இது. ஆனால், ஒவ்வொரு வகை கரிச்சானுக்கும் ஒவ்வொரு மாதிரியான வால் அமைப்பு இருக்கும்.

அமைதியாக கம்பிகளில் உக்காந்திருந்து, இரை கண்ணனுக்கு தட்டுப்படும்பொழுது, பறந்து பறந்து பூச்சிகளைப் பிடிக்கும். மழைக்காலங்களில்
ஈசல்களை இவ்வாறு கரிச்சான்கள் பிடிப்பதை நாம் பலரும் பார்த்திருப்போம். ஆடு, மாடுகளின் மேலிருக்கும் உண்ணிகள், புழுக்கள், பூச்சிகள்
ப�ோன்றவைகளை விரும்பி உண்ணும். ஆனால பெரும்பாலும் பறந்துக�ொண்டிருக்கும் பூச்சிகளையே பெரிதும் விரும்பிப் பிடிக்கும் (இதுப�ோன்ற
குணாதிசயம் க�ொண்ட மற்றொரு பறவை - பஞ்சுருட்டான்). சிலசமயம் அடுத்த பறவையிடமிருந்துகூட இரையை பிடுங்கித்தின்னும். பலவகைப்
பூச்சிகளை பிடித்துத் தின்பதால், வேளாண்மைக்கு பெரிதும் உதவுகின்றன.

ப�ொதுவாகவே, கரிச்சான்கள் தங்களது கூடு - முட்டை - எல்லைகளை காப்பதில் மிகுந்த திறமைசாலிகள். கடும்கோபக்கார்களும் கூட. காக்கை
ப�ோன்ற பறவைகளைக் கூட, தங்களின் கூட்டிற்கு அருகே அண்டவிடாது. குயில், மைனா என்று எந்தப் பறவையும் விதிவிலக்கல்ல. இதன்
காரணமாக, புறாக்கள் ப�ோன்ற சில பறவைகள் இதன் கூட்டிற்கு சற்று அருகில் தங்களது கூடுகளைக் கட்டும். பாதுகாப்பு நலன் கருதிதான்.
இவ்வகைப் பறவைகளின் மற்றொரு முக்கிய அம்சம், ஒப்புப்போலி குரல் எழுப்பும் தன்மை…, தமிழில் ச�ொன்னால்... மிமிக்ரி. வேறு பறவைகளைப்
ப�ோல மட்டுமின்றி, Meerkat என்ற மங்கூஸ் வகை உயிரினங்களைப் ப�ோலக் கூட சிலவகை கரிச்சான்கள் குரலெழுப்பி அதன் மூலம் அவைகளைக்
கலவரமடையச் செய்து... அதன் உணவைப் பறித்துக் க�ொள்கின்றன.

கருங்கரிச்சான் (Black Drongo) LC

பலதடவை தந்திக் கம்பிகளின் மீதி இவ்வகை கரிச்சானை


பார்த்திருப்போம். சிட்டுக்குருவியை விட பெரிய பறவை.
நல்ல கரி நிறத்தில் இருக்கும். இதற்கு King Crow என்ற
பெயரும் உண்டு.

துடுப்பு வால் கரிச்சான் (Greater Racket-tailed


Drongo) LC

பெயருக்கேற்றார் ப�ோல, மிகநீண்ட துடுப்பு ப�ோன்ற


வாலைக் க�ொண்ட கரிச்சான் இது. வாலின் நுனி
சற்று சுருண்டு காணப்படும். மேற்குத்தொடர்ச்சி
மலைப்பகுதியில் அதிகமாகக் காணலாம்.
(கா)2 ToC

கரும்பச்சை கரிச்சான் (Bronzed Drongo) LC

கருங்கரிச்சான் அளவிற்கே இருக்கும். ஆனால்


அதனைப்போன்ற இரட்டை வால் இருக்காது. உடல்
டாலடிக்கும் கரும்பச்சை. இந்தக் கரிச்சானையும்
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகமாகக் காண
முடியும்

வெள்ளை வயிற்றுக் கரிச்சான் (White-bellied Drongo) LC

கழுத்தில் சாம்பல் நிறத்தில் ஆரம்பித்து… க�ொஞ்சக�ொஞ்சமாக வயி-


ற்றுப்பகுதியில் வெள்ளை நிறத்தில் வந்து முடியும். இளம் பறவைகள்,
கருங்கரிச்சானைப் ப�ோன்றே த�ோற்றமளிக்கும்.

அதென்ன Passerine? பறவைகளைப் பற்றிய புத்தகங்களில் இணையத்தளங்களில் அடிக்கடி இந்த வார்த்தையை நீங்கள்
பார்த்திருக்கக் கூடும். Passerine Birds என்றால், மின்கம்பிகள் ப�ோன்ற செங்குத்தான தளத்தில் கால்களைக் க�ொண்டு பற்றி
அமரும் பறவைகள் என்று ப�ொருள். உதாரணமாக காக்கைகள், கரிச்சான்கள், ஈப்பிடிப்பான்கள். அப்பறவைகளின் பாதத்தில் மூன்று
விரல்கள் முன்னோக்கியும், ஒரு விரல் பின்னதாகவும் நிண்டிருக்கும். கம்பி ப�ோன்ற அமைப்புகளை பற்றி உட்காருவதற்கு ஏதுவாக.
Vernal Hanging Parrot
(கா)2
ToC
சிலம்பன்கள் (Babblers) (கா)2 ToC

Babble என்ற ஆங்கில வார்த்தைக்கு, த�ொணத்தொணவென பேசுதல் என்றொரு அர்த்தம் உண்டு. காரணப்பெயராகவே சிலம்பன்களை "Babblers"
என்று அழைத்திருக்கக்கூடும். கீக்..கீக்..கீக் என்று பயங்கர சுறுசுறுப்புடன் குரலெழுப்பிக்கொண்டிருக்கும் பறவையினம் இது. காட்டுப்பகுதிகளிலும்,
புதர்கள் - செடிகள் அடர்ந்த இடங்களிலும் இப்பறவையைக் காணலாம். பழுப்பு நிறமே அனேக சிலம்பன்களின் பிரதான நிறம். இப்பறவைகளின்
மற்றொரு குறிப்பிடத்தக்க குணாதிசயம், சிறுசிறு கூட்டமாகக் கூடி இரை தேடத்தொடங்கும். ஒரு கூட்டத்தில் 6 - 8 பறவைகள் வரை இருக்கும்.
பூனை ப�ோன்ற விலங்குகளை கூட்டமாகக் கூடி கத்தி கூச்சலிட்டு விரட்டிவிடும். சிலம்பன்கள், செண்பகம் (Greater Coucal) ப�ோல, அதிகளவில்
குறிப்பிட்ட தூரம்/உயரத்திற்கு மேல் பறக்காது. நம்மூர் சிலம்பன்கள், வலசை ப�ோகாத - ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளாகவே சுற்றிக் க�ொண்டிருக்கும்
பறவை இனம். பெரும்பாலும், மணிக்குயில்(Pied - crested cuckoo) சிலம்பன்களின் கூட்டில் தான் முட்டையிடும். புழுக்கள், பூச்சிகளைப்
பிரதான உணவாக உண்ணும்.

தவிட்டுக்குருவி (Yellow-billed Babbler) LC

வீடுகளுக்கு அருகிலும், மனித நடமாட்டம் இருக்கும்


இடங்களிலும் சகஜமாக தவிட்டுக்குருவியைப் பார்க்கலாம்.
சிலம்பன்களுக்கே உண்டான, சிறுசிறு கூட்டமாக… ட்ரி - ட்ரி
- ட்ரி என்று குரலெழுப்பிக் க�ொண்டிருக்கும். வெளிறிய பழுப்பு
நிற உடலையும் வெள்ளைநிற உச்சந்தலையும் க�ொண்டிருக்கும்.
அலகு வெளிர் மஞ்சள் நிறம். கவனிக்க வேண்டிய இன்னொரு
விஷயம், நீலநிறம் க�ொண்ட கண்கள். சிறுசிறு கூட்டம் என்று
பார்த்தோமே… பெரும்பாலும் ஏழு பறவைகள் ஒன்றுசேர்ந்து
திரியும். அதனால் இப்பறவைக்கு "ஏழு சக�ோதரிகள்" என்று
பெயரும் உண்டு.

காட்டுச் சிலம்பன் (Jungle Babbler) LC

பார்ப்பதற்கு, தவிட்டுச் சிலம்பனை உருவத்தில்


ஒத்திருக்கும். ஆனால் நிறத்திலும் குரலிலும் அதிலிருந்து
மாறுபட்டது. இச்சிலம்பன், வெளிறிய பழுப்பு நிற
உடல் + மஞ்சள் அலகு, மஞ்சள் நிறக்கால்களையும்
க�ொண்டிருக்கும். தவிட்டுக்குருவியின் வெள்ளை நிற
உச்சந்தலையும் நீலநிறக் கண்களும் இதற்குக் கிடையாது.
மாறாக மஞ்சள் நிறக் கண்களைக் க�ொண்டது. தவிட்டு-
க்குருவியைப் ப�ோலல்லாமல், கீக் - கீக் - கீக் என்று
குரலெழுப்பும்.

வெண்தொண்டை சிலம்பன் (Tawny-bellied Babbler) LC

மற்ற இரண்டு சிலம்பன்களை விட உருவத்தில் சற்று சிறியது. க�ொஞ்சம்


மலைப்பாங்கான இடங்களில் அதிகளவில் இப்பறவையைப் பார்க்கலாம்.
ஆரஞ்ச் + பழுப்பு கலந்த உடலும், வெளிறிய ஆரஞ்ச் நிற அடிவயிற்றையும்
க�ொண்டிருக்கும். பெயருக்கேற்றார் ப�ோல, வெள்ளைநிறத் த�ொண்டையைக்
க�ொண்டிருக்கும். தரைக்கு அருகாமையிலயே, புதர்களில் கூடு கட்டும்.
(கா)2 ToC

கருந்தலை சிலம்பன் (Dark-fronted Babbler) LC

கிட்டத்தட்ட வெண்தொண்டை சிலம்பன் அளவிற்கே இருக்கும். உச்சந்தலை முதல் பிடரி வரை கருப்பு நிறம். கழுத்து முதல் அடிவயிறு வரை
நல்ல வெள்ளை நிறம். மற்ற பாகங்கள் அடர்பழுப்பு நிறம். மஞ்சள் நிற கருவிழியைக் (Iris) க�ொண்டிருக்கும். தமிழ்நாட்டில் மேற்கு த�ொடர்ச்சி
மலைப்பகுதியில் இப்பறவையைக் காணலாம்.

செஞ்சிலம்பன் (Rufous Babbler) LC

தென்னிந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில்


இப்பறவையைக் காண முடியும். பெரும்பாலான சிலம்பன்கள் ப�ோல,
புதர்களில் அதிகமாக நடமாடிக்கொண்டிருக்கும். கழுத்து முதல்
அடிவயிறு வரை செஞ்சிவப்பு நிறமும், கண்களில் மஞ்சள் கலந்த
வெள்ளை வளையமும் காணப்படும்.

உலகளவில் புகழ்பெற்ற ‘பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம்’ (Bombay Natural History Society), இந்த ஆண்டிற்கான
ஆன்லைன் - அடிப்படை பறவையியல்(Basic Ornithology) வகுப்புகளுக்கான அறிவிப்பை வருடத்திற்கு ஒரு முறை வெளியிடுகிறது.
பறவையியலில் ஆர்வம் இருந்து, அடுத்த நிலைக்கு செல்ல விரும்புவ�ோர் நிச்சயமாக இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேற்கொண்டு விவரங்கள் அறிய இந்த தளத்திற்குச் செல்லவும்.
சிட்டுக் குருவி (Sparrow) LC (கா)2 ToC

Female
இந்தியாவிற்கும் ப்ரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ப�ோன்ற பல ஐர�ோப்பிய நாடுகளுக்கும் சிட்டுக் குருவியை வைத்து ஒரு (விரும்பத்தகாத) ப�ொருத்தம்
உள்ளது. மேலே ச�ொன்ன எல்லா நாடுகளிலும் சிட்டுக் குருவிகள் வெகுவிரைவாக அழிந்து வருகின்றன. இருப்பதிலேயே இங்கிலாந்தில்தான்
நிலைமை படும�ோசம். கடந்த பதினைந்து ஆண்டுகளில், 70% சிட்டுக்குருவிகள் அழிந்துள்ளன. ஒருகாலத்தில் உலகின் பெரும்பாலான இடங்களில்
சர்வசாதாரணமாக பறந்துக�ொண்டிருந்த சிட்டுக் குருவிகள், கடந்த முப்பது ஆண்டுகளாக எண்ணிக்கையில் மிகவேகமாக குறைந்துக�ொண்டே
வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஏன் இந்த வீழ்ச்சி என்பதற்கு இன்னமும் சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள், கீழ்காணும் காரணிகளால் இது நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

»» மரங்கள், புதர்களின் எண்ணிக்கை குறைந்துக�ொண்டே வருவது.


»» சிட்டுக் குருவிகள் கூடு கட்ட ஏதுவாக இருந்த முற்றம், மேல சிறிய ஓட்டைகள், கூரைகள், ஓடுகள் க�ொண்ட பழைய வீடுகளின் காலம்
ப�ோய் - கான்க்ரீட் வீடுகளின் பெருக்கம்.
»» வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் வீரியம்; கதிரடிக்கும் முறை என்று நமது விவசாயமே முற்றிலுமாக புதிய
முறைகளுக்கு மாறிப்போனது.
»» ஈயம் கலக்காத பெட்ரோலினால் (Unleaded petrol) சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவான புழு, பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தது,
செல்ஃப�ோன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு ப�ோன்ற சில காரணங்கள் ச�ொல்லப்பட்டாலும், இதுபற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன.
இப்படி சிட்டுக் குருவிகளை வைத்து உலகம் முழுவதும் பலவித ஆராய்ச்சிகள் நடந்துக�ொ-
ண்டிருக்க, தனிமனிதனாக நம்மால் இதுப�ோன்ற விஷயங்களில் என்ன செய்ய முடியும்...
என்ற அங்கலாய்ப்பு எழுவது சகஜம். நிச்சயம் நம்மாலும் சிறுபங்களிப்பை வழங்க இயலும்.
இதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘உலக சிட்டுக் குருவிகள் தினம்’. ஒவ்வொரு வருடம்
மார்ச் மாதம் 20ஆம் தேதி உலகம் முழுவதிலும் இந்நிகழ்வு, க�ொண்டாடப்படுகிறது என்றே
ச�ொல்லலாம். சிட்டுக் குருவிகள் மட்டுமின்றி, அன்றைய தினத்தில் ப�ொதுவாக நம்மைச்சுற்றி
காணப்படும் பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம், குறிப்பாக குழந்தைகளிடம்
க�ொண்டு சேர்ப்பதே இந்நிகழ்வின் ந�ோக்கம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், எவ்வாறு
நம் வீட்டைச் சுற்றி/வீட்டில் இருக்கும் பறவைகளை பாதுகாப்பது என்பது பற்றி க�ொஞ்சம்
நேரம் ஒதுக்கி ய�ோசிக்க வேண்டும். அவ்வளவே. சரி, நமக்கு ஒன்றும் பிடிபடாவிட்டால்....
இருக்கவே இருக்கிறது இணையம். http://www.worldsparrowday.org என்ற
தளத்திற்குச் சென்று, அங்குள்ளவர்களிடம் நமது சந்தேகங்களை கேட்டுத் தெளிவடையலாம்
(எவ்வாறு நாம் இதனை முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி ஏகப்பட்ட விஷயங்கள்
அத்தளத்தில் க�ொட்டிக்கிடக்கின்றன). சிட்டுக்குருவிகளுக்கென்று கூடுகள் ப�ோன்றவைகளை
செய்து நமது வீட்டு முற்றத்திலும் மரக்கிளைகளிலும் த�ொங்க விடலாம். தானியங்களை
வைத்து அவற்றின் வருகையை அதிகரிக்கலாம்.

Male
(கா)2 ToC

இந்தியாவில் ஐந்து வகையான சிட்டுக் குருவி இனங்கள் இருந்தாலும், மிகப்பரிச்சயமான குருவி வகை என்றால், ஊர் குருவி (அ) வீட்டுக் குருவி
(House Sparrow) வகைதான் அது. ஆண் குருவிக்கு கழுத்துப்பகுதி கருப்பாகவும், உச்சந்தலை சாம்பல் நிறத்திலும் இருக்கும். பின்னந்தலை
முதல் முதுகுப்பகுதி வரை அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும். பெண் இனம், வெளிறிய மஞ்சள் + பழுப்பு நிறத்தில் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற
புருவக்கோடு காணப்படும்.

இந்த உலக சிட்டுக் குருவிகள் தினத்தை ஆரம்பித்து வைத்தது... முகமத் தில்வார் என்ற இந்தியர். சிட்டுக் குருவிகளைக் காக்க இவர்
எடுத்துக்கொண்ட முயற்சிகளை பாராட்டி, டைம் இதழ் 2008ஆம் ஆண்டு - உலகின் 30 சிறந்த சுற்றுச்சூழலியல் ஆர்வலர்களில்
ஒருவராக தில்வாரை தேர்ந்தெடுத்துள்ளது.
க�ொண்டைக்குருவிகள் (Bulbuls) (கா)2 ToC

இனிய குரலுக்கு ச�ொந்தக்காரர்கள். இந்தியாவில், ப�ோன நூற்றாண்டில் சண்டைக்காக இப்பறவையை மக்கள் வளர்த்ததாக சாலீம் அலி கூறுகிறார்.
மறைவாக கூடு கட்டுவதில் சிறந்த பறவைகள். சிறிய கழுத்தும், இறக்கைகளும் க�ொண்டைக்குருவிகளின் அடையாளங்களில் ஒன்று. சிலவகை
க�ொண்டைக்குருவிகளுக்கு, பெயருக்கேற்ப சிறிய க�ொண்டைகள் உண்டு. அத்திப்பழம், ஆலம்பழம் ப�ோன்ற பழ வகைகளை விரும்பி உண்ணும்.

செம்புழை க�ொண்டைகுருவி (Red-vented Bulbul) LC

கழிவாய் (Vent) பகுதி சிவப்பாக இருக்கும். கருப்புக் நிறக்


க�ொண்டையைக் க�ொண்டது. இறக்கை - தூக்கலான பழுப்பு நிறத்தில்
இருக்கும். வாலின் முனை - வெள்ளையாக இருக்கும். மலை
அடிவாரங்களில், மலைப் பகுதிகளில் அதிகமாகத் தென்படும்.

செம்மீசை சின்னான் (Red-whiskered Bulbul) LC

கிட்டத்தட்ட அளவில் செம்புழை க�ொண்டைகுருவி மாதிரியே இருந்தாலும்,


உருவத்தில் கூடுதலாக சிகப்பு மீசைப் ப�ோன்ற அமைப்பிருக்கும். கழுத்து முதல்
அடிவயிறு வரை நல்ல வெள்ளை நிறம்.

மஞ்சள் த�ொண்டைச் சின்னான் (Yellow-throated Bulbul) VU

முகம் + த�ொண்டை மட்டும் நல்ல மஞ்சள் நிறம். மற்ற இடங்களில்


எல்லாம் சாம்பல் + மஞ்சள் கலந்த நிறம். அளவில் செம்மீசை
சின்னானை ஒத்திருக்கும். இது தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும்
பறவை. மேலும், அழிய வாய்புள்ள இனங்களில் ஒன்றாக இப்பறவை
வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகு-
திகளிலும், செஞ்சி மலைப்பகுதிகளிலும் இப்பறவையைக் காண முடியும்.
(கா)2 ToC

மஞ்சள் புருவச் சின்னான் (Yellow-browed Bulbul) LC

நல்ல மஞ்சள் முகம். கண்ணைச் சுற்றி மஞ்சள் தீட்டு. உடல் முழுவதும்


பச்சை, சாம்பல் கலந்த மஞ்சள் நிறம். அளவில் மற்ற புல்புல்களைக்
காட்டிலும் சிறியது. உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே இப்பறவையைக்
காண முடியும்.

வெண்புருவச் சின்னான் (White-browed Bulbul) LC

அளவில் செம்மீசை சின்னான் அளவிற்கு இருக்கும். ஆலிவ்


பச்சை + சாம்பல் நிற உடம்பும், அழுக்கு வெள்ளை நிற வயிற்று-
ப்பகுதியையும் க�ொண்டிருக்கும். தனித்துவமான, கண்ணைச் சுற்றி
- வெள்ளை புருவத்தைக் க�ொண்டிருக்கும். இவ்வகைப் பறவையும்
தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும்.

ப�ொன்தொண்டை சின்னான் (Flame-throated Bulbul) LC

மிக அட்டகாசமான ப�ொன்னிறம் + ஆரஞ்ச் கலந்த த�ொண்டையைக்


க�ொண்டிருக்கும். கண்கள், வெள்ளை. உடல் முழுவதும் ஆலிவ் பச்சை
+ சாம்பல் நிறக்கலவையும், மார்பு + வயிற்றுப்பகுதி முழுவதும் நல்ல
மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மேற்குத�ொடர்ச்சி மலைப்பகுதிகளில்
இப்பறவையைக் காண முடியும்.

செம்புழை க�ொண்டைகுருவி (Red-vented bulbul) - மைனாவைப் ப�ோன்றே, சூழலியல் மீது கடும் ஆதிக்கம் செலுத்தும்
பறவைகளில் ஒன்றாக (Invasive Species) வகைப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டம் கூட்டமாகச் சென்று பழங்களைத் தின்பதில்
ஆரம்பித்து, பிற பறவைகளை விரட்டிவிடுவது வரை அந்த சூழ்நிலையியலின் ப�ோக்கையே மாற்றக்கூடியது.
ஆவணப்படங்கள் (Documentaries) (கா)2 ToC

குழந்தைகளிடம் இயற்கை குறித்த பார்வையையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்கு ஒரு சுலபமான வழியுள்ளது - இயற்கை, விலங்குகள்,
பறவைகள் குறித்த ஆவணப்படங்கள் (Documentaries). ஏற்கனவே தமிழ் பேசும் டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜிய�ோகிராஃபிக் ப�ோன்ற
த�ொலைக்காட்சிகளின் வாயிலாக பலரும் இயற்கை சார்ந்த டாகுமெண்டரிகளை - சேனலை திருப்பும்பொழுது மட்டும் - பார்த்திருக்க கூடும். ஆனால்
இதுப�ோன்ற டாகுமெண்டரிகளுக்கென்றே உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. உலகளவில் பல முக்கிய விருதுகளும் இதுப�ோன்ற
டாகுமெண்டரிகளுக்கு தரப்படுகிறது.

திரைப்படங்களைப் ப�ோலல்லாமல், இதுப�ோன்ற டாகுமெண்டரிகளுக்கென்று பிரத்தியேக படமாக்கும் முறைகள் உண்டு. மாதக்கணக்காக காட்டுக்குள்ளேயே
தங்கித்தான் பெரும்பாலான டாகுமெண்டரிகள் படமாக்கப்படுகின்றன. மாதக்கணக்கென்ன, ஆண்டுக்கணக்கில் கூட படமாக்கப்பட்ட டாகுமெண்டரிகள்
பல உண்டு. இதில் பறவைகள் குறித்த டாகுமெண்டரிகளும் அடக்கம். பறவைகளின் சூழலியல், வாழ்க்கைமுறை ப�ோன்ற பல விஷயங்களை
படிப்பதை விட, காட்சி ரீதியாக பார்ப்பதில் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக சிறுவர்களிடையே மிகச்சுலபமாக இவ்விஷயங்கள் ப�ோய்ச்சேரும்.

அதேசமயம் மற்றொரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் க�ொள்ள வேண்டும். மிகைஉணர்ச்சியுடன் இயற்கையை காண்பித்து எடுக்கப்படும்
டாக்குமென்டரிகள், தவறான கருத்தை பரப்பும் டாக்குமென்டரிகள் என்றும் பலது உண்டு, உதாரணமாக, புலி வேட்டையாடும் ஒரு டாக்குமென்டரியில்
அதனை க�ொடூர மிருகம் ப�ோல சித்தரித்து - அப்புலியால் வேட்டையாடப்படும் மானை கண்டு... ‘ஐய�ோ… பாவம்’ என்று நாம் பரிதாபப்பட
வேண்டும் என்பதற்காகவே மிகையுணர்ச்சி, இசை, கேமரா க�ோணங்கள் என்று பல்வேறு ஜ�ோடனைகள் மிகுந்த டாக்குமென்டரி ஒன்றை சமீபத்தில்
காண நேர்ந்தது. இது குழந்தைகள் மனதில் புலி ப�ோன்ற விலங்களின் மீது ஒருவித பயத்தையும், வெறுப்பையும் வரவைக்கலாம். அதனால்
டாக்குமென்டரிகளை தேர்ந்தெடுக்கும் ப�ொழுது சற்று கவனம் தேவை.

The Life of Birds - David Attenborough

அட்டென்பர�ோ... இந்தப் பெயரை எங்கேய�ோ கேள்விபட்டது ப�ோல இருக்குமே. காந்தி திரைப்படம்?


அந்தப் படத்தின் இயக்குனர் - ரிச்சர்ட் அட்டென்பர�ோ - ‘ஜூராசிக் பார்க்’ படத்தில் வரும்
தாத்தாவும் அவரே. அவரது தம்பி தான் ‘டேவிட் அட்டென்பர�ோ’. உலகப்புகழ் பெற்ற ஆவணப்பட
கலைஞர். இவரைப் பற்றி தனியாக ஒரு முழு புத்தகமே எழுதும் அளவிற்கு விஷயங்கள் உண்டு.
புகப்பெற்ற BBC நிறுவனத்திற்காக இவர் எடுத்த பல அட்டகாசமான இயற்கை சார்ந்த ஆவண-
ப்படங்களில் ஒன்றுதான் The Life of birds. உலகின் நாற்பத்திரண்டு நாடுகளில், கிட்டத்தட்ட
முன்னூறுக்கும் அதிகமான, பல முக்கிய - பலரும் பார்த்திராத பறவையினங்களைப் பற்றிய
ஆவணப்படம் இது. பறவையினங்கள் குறித்த நமது பார்வையை நிச்சயம் இந்த ஆவணப்படம்
மாற்றியமைக்கும்.

Winged Migration

நம்ப முடியாத அதிசயம் என்று ச�ொல்வார்களே... கிட்டத்தட்ட அதற்கு இணையான


அனுபவத்தை இந்த ஆவணப்படம் நிச்சயம் தரும். நாலு வருட படப்பிடிப்பு;
In-flight எனப்படும் பறவைகளுடன் கூடவே பறந்து எடுத்தது (இதற்காக சில
பறவைகளை குஞ்சில் இருந்து எடுத்து வளர்த்து கூடவே பறந்துள்ளனர்) என்று
ஏராளமான பிரம்மிக்கத்தக்க காட்சிகள் உள்ளன. பறவைகள் வலசை ப�ோதல்
குறித்து சில கட்டுரைகளில் பார்த்துள்ளோம். அதன் முழு பரிமாணத்தையும் இந்த
டாகுமென்டரியின் மூலம் தெளிவாக உணரலாம்.
(கா)2 ToC

Earthflight: The Complete Series

இதுவும் வலசை ப�ோகும் பறவைகள் பற்றிய டாக்குமென்டரி

Birds of the Gods

இது முழுக்க முழுக்க Papua & New Guinea பகுதிகளைச் சேர்ந்த "Birds of
Paradise" என்றழைக்கப்படும் பறவைகளைப் பற்றிய டாக்குமென்டரி.

Planet Earth: The Complete BBC Series

சூழலியலில் ஆர்வம் உள்ள பலருக்கும் மிகப்பிடித்த டாக்குமென்டரியில் ஒன்று இது. நமது


பூமியின் பல்வேறு பரிமாணத்தை மிகத்தெளிவாக ஆவணப்படுத்தியிருப்பர்.
பட்டாணிக் குருவிகள் (Tits) (கா)2 ToC

பெரிய பட்டாணிக் குருவி (Cinereous Tit) LC

பட்டாணிக் குருவிகள், பழங்கள் - மரக்கிளைகளில் இருக்கும் பூச்சிகள்,


என்று இரண்டையும் உண்ணும். அதற்கு தக்கபடி சிறிய, உறுதியான
அலகிருக்கும். பெரிய பட்டாணிக் குருவி - தலை முதல் கழுத்து வரை
கருப்பு. கன்னங்கள் வெள்ளை நிறம். முதுகு சாம்பல் நிறம். இறக்கைகளில்
கருப்பு - வெள்ளை பட்டை காணப்படும். பெண் - ஆணை விட சற்று
ஒல்லியாகத் தெரியும். மரக்கிளைகளில் உட்கார்ந்துக�ொண்டு கிளைகளை
க�ொத்திக் க�ொத்தி பூச்சிகளை பிடித்துக்கொண்டிருக்கும்.

மஞ்சள் கண் பட்டாணிக் குருவி (Black-lored Yellow Tit) LC

தாடை முதல் அடிவயிறு வரை கருப்பு நிறம். மற்றபடி உடல் - மஞ்சள்


நிறத்தில் இருக்கும். சிறிய கருப்பு நிறக் க�ொண்டை உண்டு. இறக்கைகளில்
கருப்பு வெள்ளை பட்டைகள் காணப்படும்.

வெல்வெட் நெற்றி பசை எடுப்பான் (Velvet-fronted Nuthatch) LC

பசை எடுப்பான்கள், மற்ற பல பறவைகளுக்கு


இல்லாத ஒரு தனித்துவம் உண்டு. அது, தலைகீழாகக்
கூட மரத்தில் இருந்து கீழே இறங்கும். அதற்கு
தேவையான உறுதியான கால்கள் உண்டு. பசை
எடுப்பான்களுக்கே உரிய பெரிய தலை - வெல்வெட்
நெற்றி பசை எடுப்பானுக்கும் உண்டு. உடல் நீலம்
படர்ந்த வெல்வெட் நிறம். அலகிற்கு மேல் கருப்பு
தீட்டு காணப்படும். கழுத்து முதல் அடிவயிறு
வரை கருப்பும் மஞ்சளும் கலந்த (Biege) நிறம்.
சிறுசிறு சிலந்தி ப�ோன்ற பூச்சிகளே இதன் பிரதான
உணவு. மரங்கள் அடர்ந்த காடுகளில் அதிகளவில்
இப்பறவையைப் பார்க்கலாம்.
ஈப்பிடிப்பான்கள் (Old World Flycatchers) (கா)2 ToC

இவ்வகைப் பறவைகளுக்கு சில பிரத்தியேக குணங்கள் உண்டு. பறந்து பறந்து பூச்சிகளை பிடித்து, எங்கு உட்காந்திருந்தத�ோ அங்கயே திரும்ப
வந்தமர்ந்து அப்பூச்சிகளை உண்ணும். பெரும்பாலான பறவைகள் சிட்டுக் குருவியைப் விட சற்று பெரியதாகவ�ோ க�ொஞ்சம் சிறியதாகவ�ோ இருக்கும்.
மரங்கள் அடர்ந்த காடுகளில், புதர்கள் - சிறிய மரங்கள் - பாறைகள் நிறைந்த இடங்களின் அருகில் வசிக்கும்.

அரசவால் ஈப்பிடிப்பான் (Asian Paradise Flycatcher) LC

வளர்ந்த ஆண் பறவைகளுக்கு மிகநீண்ட வாலிருக்கும். இரண்டு


வகையான ஆண் இனம் - (பழுப்பு நிற வால், வெள்ளை நிற வால்).
அத்தனை நீண்ட வாலை வைத்துக�ொண்டு இப்பறவை பறக்கும்
ப�ொழுது பார்ப்பதற்கே அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். பெண்
இனத்திற்கு வால் சிறியது. ஆண் - பெண் இரண்டிற்குமே தலை -
கருப்பு. பூச்சிகளைப் பிடிக்க ஏதுவாக சிறிய அலகு. மூங்கில் மரங்கள்
அடர்ந்த இடங்களை விரும்பி அடையும்.

டிக்கெல் நீல ஈப்பிடிப்பான் (Tickell's Blue Flycatcher) LC

சற்று பெரிய சிட்டுக்குருவி அளவிற்கு இருக்கும். தலையிலிருந்து


- முதுகு - வால் வரை நீல நிறம். கழுத்து முதல் மார்பு வரை
வெளிறிய ஆரஞ்ச் நிறம். மரங்கள் அடர்ந்த மலைப்பகுதிகள், மலை
அடிவாரம் ப�ோன்ற இடங்களில் இப்பறவையைப் பார்க்கலாம்.

சாம்பல் தலை ஈப்பிடிப்பான் (Grey-headed Canary-flycatcher) LC

சிட்டுக் குருவி அளவிற்கு இருக்கும். தலை & கழுத்து சாம்பல் நிறம்.


த�ோள்பட்டை பழுப்பு நிறம். மற்ற இடங்கள் - பச்சை கலந்த அடர் மஞ்சள்
நிறம். படு துடிப்பான பறவை. ஒரு இடத்தில் இருக்காது. படக்படக்கென்று
பறந்து க�ொண்டேயிருக்கும்
(கா)2 ToC

க�ொண்டு கரிச்சான் (Oriental Magpie Robin) LC

மரங்கள் - புதர்கள் அடர்ந்த இடங்களில் சகஜமாக


இப்பறவையைக் காண முடியும். குண்டு கரிச்சான் என்றும்
அழைக்கப்படுவதுண்டு. சிட்டுக் குருவியை விட சற்று பெரிய
பறவை. ஆண், வயிறு-வாலின் அடிப்பகுதி(பளீர் வெள்ளை
நிறம்) தவிர மற்ற இடங்களில் பளபளக்கும் கருப்பு நிறத்தில்
இருக்கும். இறக்கையில் வெள்ளைப்பட்டை காணப்படும்.
பெண், வெளிறிய பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும்.
அடிவயிறு, சற்று அழுக்கேறிய வெள்ளை நிறத்தில் இருக்கும்.

உலகின் சில பகுதிகளில் இதன் எண்ணிக்கை வெகுவாக


குறைந்து வருகிறது. நகரமயமாதல், மைனாக்களின்
ஆதிக்கம் (மைனா உலகளவில் குறிப்பிடத்தக்கத�ொரு
invasive species - சூழலியல் மீது ஆதிக்கம் செலுத்தும்
ஒரு பறவை என்பதை மைனா பற்றிய கட்டுரையிலேயே
பார்த்துள்ளோம்.) என்று பல காரணங்கள் கூறப்படுகிறது.
குறிப்பிட்டு ச�ொல்ல வேண்டிய மற்றொரு விஷயம், க�ொண்டு
கரிச்சான்தான் பங்களாதேஷின் தேசியப் பறவை.

கருஞ்சிட்டு (Indian Robin) LC

எப்பொழுதுமே வாலை விறைப்பாக வைத்திருக்கும். சிட்டுக் குருவியை விட சற்று பெரியது. க�ொண்டு கரிச்சானை விட க�ொஞ்சம் சிறியது. ஒரு
காலத்தில் நம்மைச் சுற்றி ஏகப்பட்ட கருஞ்சிட்டுக்கள் இருந்தாலும், இதன் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

ஆண், அனேக இடங்களில் கருப்பு நிறமும் கழுத்து - இறக்கைகளின் அருகே துரு நிறமும் க�ொண்டிருக்கும். இறக்கைகளில் மெல்லிய வெள்ளைநிற
பட்டையும் காணப்படும் (க�ொண்டு கரிச்சானுக்கும், கருப்பு வெள்ளை புதர் சிட்டுக்கும் இதேப�ோன்ற வெள்ளைப்பட்டை, இறக்கைகளில் இருப்பதை
பற்றி க�ொஞ்சநேரம் முன்னர் பார்த்ததை நினைவுபடுத்திக் க�ொள்ளவும்). பெண், பழுப்பு நிறத்திலும் வெள்ளைப்பட்டை இன்றியும் காணப்படும்

கருப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bush Chat) LC

பெயருக்கேற்றது ப�ோல, புதர்களின் ஓரம் அதிகளவில் இப்பறவையைக்


பார்க்க முடியும். குறிப்பாக, கம்புகள் மீது லாவகமாக ஒற்றைக்
காலில் அமர்ந்திருக்கும். கால்நடைகளின் அருகிலும் பார்க்கலாம்.

Female
சிட்டுக்குருவியின் அளவிற்கு இருக்கும். ஆண் - த�ோளில் வெள்ளைநிறப்
பட்டைகளையும் மற்ற அனைத்து இடங்களிலும் கருப்பு நிறத்தை
க�ொண்டிருக்கும். பெண், முழுவதுமே பழுப்பு நிறம்.
Male

பறவைகளைப் பற்றிய தகவல்களை தேடும்பொழுது பெரும்பாலான சமயங்களில், முதலில் கண்ணில்படுவது Old World - New
World ப�ோன்ற வார்த்தைகளாகத்தான் இருக்கும். வேற�ொன்றும் இல்லை. ஆசியா, ஆப்ரிக்கா, ஐர�ோப்பா ப�ோன்ற பூக�ோளப்பகுதிகள்
Old World என்றும், ஏனைய பகுதிகள் New World என்றும் அழைக்கப்படுகிறது. ஐர�ோப்பியர்கள் வாணிபம் செய்ய ஆரம்பித்த
பகுதிகளின் அடிப்படையில் - ஆசிய/ஆப்ரிக்க பகுதிகளுக்குத்தான் அவர்கள் முதலில் வாணிபத்திற்காகச் சென்றது - இதனை
பிரித்துள்ளனர்.
(கா)2 ToC

சாம்பல் கதிர்க்குருவி (Ashy Prinia) LC

Female Male
இந்தவகைப் பறவைகள் வாலை நேராக நீட்டியவாறே வைத்திருக்கும். ஆண், பெண் பறவையை விட சற்று பெரியதாக இருக்கும். சாம்பல் தலை,
வெளிறிய ஆரஞ்ச் நிற மார்பு -> அடிவயிறு. பூச்சிகளையே உண்ணும் பறவை இனத்தை சேர்ந்தது (Insectivores).

ப்ளித் நாணல் குருவி (Blyth's Reed Warbler) LC

கதிர்க்குருவிகளை புகைப்படங்கள் மூலம் அடையாளம் காண்பதென்பது


படுகடினமான செயல். ஏறக்குறைய அனைத்தும் ஒன்று ப�ோலவேத் தெரியும்.
ஆனால் நேரில் பார்க்கையில் அதன் குரலையும், உடலமைப்பையும்
கவனமாகப் பார்த்தோமேயானால் வித்தியாசம் தெரியும். ப்ளித் நாணல்
குருவி - முதுகு ஆலிவ் பச்சை நிறம், முதுகுக்கு கீழ் உள்ள பகுதிகள்
அனைத்தும் பழுப்பு நிறம், மற்ற கதிர்க்குருவிகளைக் காட்டிலும் வால்
சற்று சின்னது, கண்ணின் மேலே வெள்ளை புருவம் இருந்தாலும் அது
அவ்வளவு தெளிவில்லாமல் இருக்கும். புதர்கள் அடர்ந்த இடங்களில்
இதனைக் காணலாம். பூச்சிகளே இதன் பிரதான உணவு. இது வலசை
ப�ோகக்கூடிய பறவை.

சாம்பல் தலை வானம்பாடி(Ashy-crowned


Sparrow Lark) LC

வானம்பாடிகள் தங்களது இணையக் கவர்வதற்காக பா....டி...க்...


க�ொ....ண்....டே... மேலிருந்து அட்டகாசமாக கீழே மெதுவாக
இறங்கும். வானம்பாடிகள் தரையிலேயே பெரும்பாலான
நேரத்தைக் கழிக்கும். தரையில் இருக்கும் சிறு பூச்சிகளே
இதன் முக்கிய உணவு. வானம்பாடிகள் - பெரும்பாலும் பழுப்பு
நிறக்கலவையைக் க�ொண்டிருக்கும். சாம்பல் தலை வானம்பாடி,
ஆண் - காதில் ஆரம்பித்து கண் - கழுத்து வரை கருப்பு
பட்டைய�ோடும். பெண்ணிற்க்கு கருப்பு பட்டை இருக்காது.
மற்ற நிறக்கலவைகள் சிட்டுக்குருவியை ஒத்திருக்கும்.
(கா)2 ToC

வயல் நெட்டைக் காலி (Paddyfield Pipit) LC

உடலை விட சற்று நீண்ட கால்களைக் க�ொண்டிருக்கும். மார்புப்பகுதியில் பழுப்பு


நிறக் க�ோடுகள் காணப்படும். இதுவும் சிட்டுக்குருவியைப் ப�ோன்ற, பழுப்பு நிற
உடல் - அதில் அங்கங்கே வெள்ளை பட்டைகள் - நிறக்கலவையைக் க�ொண்டது.
வானம்பாடிகள் ப�ோன்றே தரையிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடும்.
அங்கிருக்கும் சிறு பூச்சிகளை பிடித்து உண்ணும். நடமாடிக் க�ொண்டிருக்கும்போது
வாலை, மெதுவாக மேல் - கீழாக ஆட்டிக்கொண்டிருக்கும்.
(கா)2 ToC

Indian Pond Heron


(கா)2 ToC

கவுதாரி (Grey Francolin) LC

புதர்கள் மண்டிய இடம் மற்றும் வயல் ஓரங்களில் பலரும் இப்பறவையைப் பா-


ர்த்திருக்கக்கூடும். நமது நடமாட்டத்தைக் கண்டாலே படக்கென்று புதருக்குள்
ஓடிவிடும். பழுப்பு நிற உடல். அதில் கருப்பு வரிக்கோடுகள் காணப்படும்.
வேகமாக பறக்கக்கூடியது என்றாலும், பெரும்பாலும் ஓடவே செய்யும்.

காடை (Common Quail) LC

கவுதாரிய�ோடு சேர்ந்து, இந்தப் பறவையையும் உணவுக்காக வேட்டையாடுகின்றனர். அளவில் கவுதாரிய�ோடு சிறியது. பழுப்பு நிற உடலில் செம்பழுப்பு
நிறக் க�ோடுகள் காணப்படும். வயல்களிலும் புதர்களிலும் திரியும். ஆனால் பார்வைக்கு எளிதில் தட்டுப்படாது. தானியங்களையும் சிறு பூச்சிகளையும்
உண்ணும்.
கீச்சான்கள் (Shrikes) (கா)2 ToC

இது இரையை உண்ணும்முறை மற்ற பல பறவைகளில் இருந்து சிறிது மாறுபட்டது. சிறுசிறு பறவைகள், ஓணான்கள், தவளைகள் ப�ோன்றவைகளை
இரையாகக் க�ொள்ளும்போது, சில சமயங்களில் அப்படியே சாப்பிடுவதை விட, முட்புதர்களிலும் முட்களிலும் அவைகளை குத்தி வைத்து - உண்ண
வசதியாக இருக்கும் என்பதால் - உட்கொள்ளும்.பெரும்பாலும் தனியாகவே இருக்கும். இந்தக்குடும்பத்தின் பெரும்பாலான பறவைகள் பழுப்பு
நிறத்திலேயே இருக்கும்.

செம்முதுகு கீச்சான் (Rufous-backed Shrike) LC

Long-tailed Shrike என்ற பெயரும் உண்டு. இதனுடைய உணவுப் பழக்கத்திற்கு


ஏற்றார் ப�ோல, அலகு கூர்மையான முனையைக் க�ொண்டிருக்கும். தலை சாம்பல்
நிறம், புட்டம், முதுகு - வெளிறிய ஆரஞ்ச். கண்ணைச் சுற்றி கருப்பு பட்டை ஓடும்.
கழுத்து முதல் அடிவயிறு வரை வெள்ளை. த�ோள்பட்டை, கருப்பு. ஒப்பொலி
(Mimicry) செய்வதில் வல்லவர்கள் இப்பறவைகள்.

கருஞ்சிவப்பு முதுகு கீச்சான் (Bay-backed Shrike) LC

பார்வைக்கு செம்முதுகு கீச்சானைப் ப�ோல இருந்தாலும் அளவில் சிறியது. உச்சந்தலை வெளிறிய சாம்பல் நிறம். கழுத்து - சாம்பல் நிறம்.
முதுகுப்பகுதி - சாம்பல் கலந்த சிகப்பு நிறம். அடிவயிற்றில் வெளிறிய ஆரஞ்ச் நிறம். கீச்சான்களுக்கு உரித்தான, கண்ணைச் சுற்றி ஓடும் கருப்பு
பட்டைக் காணப்படும்.
சில்லை (Munia) (கா)2 ToC

வெண்முதுகு சில்லை (White-rumped Munia) LC

சில்லைகள் கூட்டமாக வாழும் குணம் க�ொண்டவைகள். தானியங்களையே


விரும்பி உண்ணும். அதற்குத் தக்கபடி தினையுண்ணி அலகை-
க்(Grain eating)- க�ொண்டது. வெண்முதுகு சில்லையின், கழுத்து
- முதுகு - அடிப்பகுதி நல்ல பழுப்பு நிறம். புட்டம், மார்பு - வெள்ளை
நிறம். அலகு - நீலம் கலந்த சாம்பல் நிறம். வயல்வெளிகளில் அடிக்கடி
இந்தப் பறவையைப் பார்க்கலாம்.

கருந்தலை சில்லை (Black-headed Munia) LC

வெண்முதுகு சில்லை அளவிற்கே இருக்கும். முதுகுப்பகுதி


முழுமையும் அடர் பழுப்பு நிறம். அலகு - சில்வர் நிறம். தலை -
நல்ல கருப்பு. கழுத்து முதல் அடிவயிறு வரை வெள்ளை நிறம்.

வெண்தொண்டை சில்லை (White-throated Munia) LC

இதன் சில்வர் நிற அலகு காரணமாக, இதற்கு Indian Silverbill என்ற


பெயரும் உண்டு. உச்சந்தலை - பிடறி - முதுகு - வால் வரை பழுப்பு நிறம்
படிப்படியாக கூடிக்கொண்டே ப�ோகும். பழக்கவழக்கங்கள் என்று வரும்
ப�ோது, மற்ற சில்லைகள் ப�ோல தானியங்கள் தான் இதன் முக்கிய உணவு.
தகைவிலான்கள் (Swallows) (கா)2 ToC

உழவாரக் குருவிகளுக்கும் (Swift's) தகைவிலானுக்கும் (Swallow's) சில வித்த்யாசங்கள் உண்டு. உழவாரக் குருவிகளுக்கு உடல், இறக்கை
சற்று நீண்டதாகவும், ஒடுங்கியும் இருக்கும். உழவாரக் குருவிகளின் வால் சற்று பிளவுபட்டதாகத் த�ோன்றும். அதேப�ோல, உழவாரன்கள் பூச்சிகளை
- அதுவும் பறந்து பறந்து பிடித்தபடியே - உண்ணும். ஆனால் தகைவிலான்கள், சில சமயம் தரைக்கு வந்தமரும். குறிப்பாக எலெக்ட்ரிக் கம்பிகள்
அடிக்கடி தகைவிலான் கூட்டங்களைக் காணலாம்.

சிகப்புப் புட்டத் தகைவிலான் (Red-rumped Swallow) LC

இதன் புட்டமும் பிடரியும் அடர் ஆரஞ்ச் வண்ணத்தில் இருக்கும்.


உச்சந்தலை டாலடிக்கும் நீல நிறம். மார்பு முதல் அடிவயிறு வரை
வெள்ளை. அதில் பழுப்பு க�ோடுகள் காணப்படும்.

கம்பிவால் தகைவிலான் (Wire-tailed Swallow) LC

பெயருக்கேற்றபடி, முழுதாக வளர்ந்த தகைவிலான்களுக்கு வாலின்


இருபுறத்திலும் நீண்ட மெல்லிய கம்பி ப�ோன்ற அமைப்பிருக்கும்.
உச்சந்தலை செங்கல் நிறத்திலும், உடல் நீல நிறத்திலும் இருக்கும்.
அடிவயிறு வெள்ளை நிறம்.
விடுமுறையில் என்ன செய்யலாம்? (கா)2 ToC

வீட்டிலிருக்கும் குட்டீஸ்களுக்கு ஏப்ரல் - மே, இரண்டு மாதமும் விடுமுறைதானே! கடும்வெயில் - ஸ்போர்ட்ஸ், டான்ஸ் ப�ோன்ற பயிற்சி வகுப்புகள்
- வெளியூர் பயணம் - இவை எல்லாவற்றையும் தாண்டி... இதுப�ோன்ற விடுமுறைகளில் ஒரு சிறிய விஷயத்தை முயற்சித்துப் பார்ப்போமா?
குழந்தைகளுக்கு இயற்கையாகவே பறவைகள் - பறத்தல் மீது ஆர்வமிருக்கும். அதை சற்று fine tune செய்ய இவ்விடுமுறைகளைப் பயன்படு-
த்திக்கொள்வோம். முதலில் கீழே படத்தில் இருப்பதைப் ப�ோன்றத�ொரு அட்டவணையை தயார் செய்து க�ொள்வோம். அடுத்து, நம் குழந்தைகள�ோடு
அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளையும் சேர்த்து, 2-3 குழுக்களாக பிரித்துக் க�ொள்ளலாம். ஒவ்வொருவரின் கையிலும் இந்த அட்டவணை
க�ொடுத்துவிட வேண்டும். அடுத்ததாக

»» காலை, ஒரு அரைமணி நேரம் (ஏழு மணி சுமாருக்கு) - மாலை ஒரு அரைமணி நேரம் (5மணி ப�ோல) குழந்தைகள் குழு, தங்கள் வீட்டுத்
த�ோட்டத்திலும், அருகிலிருக்கும் பூங்காக்கள், மரங்கள், நீர்நிலைகள் என்று வீட்டின் பக்கத்திலயே இருக்கும் அனைத்து இடங்களுக்கும்
சென்று கண்ணில்படும் பறவைகள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
»» ஒவ்வொரு நாளின் முடிவிலும், ஒவ்வொரு குழுவும் மற்றவர்கள�ோடு தாங்கள் பார்த்தவற்றை பகிர்ந்து க�ொள்ளுதல் அவசியம்
»» என்ன பறவையைப் பார்த்தோம் என்பதில் குழந்தைகளுக்கு குழப்பம் வரும். அதனைத் தீர்த்து வைப்பது, வீட்டிலிருக்கும் பெரியவர்களது
ப�ொறுப்பு. இணையம், புத்தகம் ப�ோன்றவைகளின் உதவியால் இது சாத்தியமாகும். இதற்கான எளிய வழிமுறைகளை இப்புத்தகத்தில்
ஏற்கனவே பலமுறை பார்த்துள்ளோம்
»» ஆர்வம் காரணமாக, விடுமுறை காலம் மட்டுமின்றி ஒவ்வொரு வருடமும்... அவ்வளவு ஏன், சிலபல மாத இடைவெளியில் கூட
குழந்தைகள் இதுப�ோல பறவை ந�ோக்குதலை அட்டவணைப்படுத்த ஆரம்பித்தால்... மிகமிக ஆர�ோக்கியமான மாற்றம் அது. அறிவியல்பூர்வாக
விஷயங்களை அணுகப் பழகிவிட்டார்கள் என்று அர்த்தம். பறவை - இயற்கை - சூழலியலில் த�ொடங்கி தான் கற்றவற்றை பகிர்ந்து
க�ொள்வது, குழுவாக செயல்படுவது என பல முக்கிய விஷயங்களை இதன்மூலம் தன்போக்கில் சுலபமாக கற்றுக்கொள்வார்கள்.
இருவாச்சிகள் (Hornbills) (கா)2 ToC

இருவாச்சி - இதற்கு ம�ொங்கான் என்ற பெயரும் உண்டு. சற்றே பெரிய பறவை இது. அடர்ந்த, உயரமான மரங்கள் நிறைந்த காடுகளில் இவை
வாழும். தமிழ்நாட்டில் மேற்குத் த�ொடர்ச்சி மலைகளிலும், க�ொடைக்கானல் மலைப் பகுதிகளிலும் இப்பறவையைக் காண முடியும்.

இப்பறவைகளுக்கு ஒரு தனித்துவமான குணமுண்டு. அது, குஞ்சு ப�ொரிக்கும் முறை. பெரிய மரப்பொந்துகளில் பெண் பறவை மூன்று - நான்கு
முட்டைகளையிட்டு, அங்கேயே அமர்ந்திருக்கும். சிலவகை இருவாச்சிகளில் ஆண் பறவையும், சிலவகை இருவாச்சிகளில் பெண் பறவையும் -
தங்கள் எச்சத்தைக் க�ொண்டு அந்த மரப்பொந்தை ஏறக்குறைய முழுவதுமாக மூடிவிடும். பெண் பறவையின் அலகு - வாய் மட்டும் வெளிய வர
சிறிய துளையை விட்டுவைத்திருக்கும். பின்பு, உணவைத் தேடித்தேடி க�ொண்டு வந்து பெண் பறவைக்கு அத்துளையின் வழியாக ஊட்டிவிடும்.
முட்டைகள் அடைகாக்கப்பட்டு குஞ்சுப் பறவை வெளியே வந்து - அந்த கூட்டைத் உடைக்கும். பின்னர் பெண் பறவை, ஆண் பறவையுடன் சேர்ந்து
குஞ்சுகளை பராமரிக்கும்.பெண் பறவை உள்ளே இருக்கும் சமயத்தில் தனது சிறகுகளை உதிர்க்கும்.

இவ்வகைப் பறவைகளின் அலகில் கவசம் அல்லது த�ொப்பி ப�ோன்ற அமைப்பு காணப்படும். தவிர, இதன் குரலும் ஆட்டின் பிளிறல் ப�ோல... சற்று
கலக்கமூட்டக் கூடியதாக இருக்கும். இப்பறவைகளின் பிரதான உணவு - பழங்கள். நாவல் பழம், அத்திப்பழம் ப�ோன்றவைகளை விரும்பி உண்ணும்.
இருவாச்சிகள் முழுக்க முழுக்க Arboreal என்ற மரங்களில் மட்டுமே வாழும் பறவை. அதுவும் உயரமான மரங்களே இதன் முக்கிய வாழிடம்.
ஆனால் நமது காடுகளில் இருக்கும் உயரமான மரங்கள் எல்லாம் அழிந்து வருவதால் இப்பறவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து
வருகிறது.

சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill) LC

தமிழ்நாட்டில் இவ்வகை இருவாச்சிகளே அதிகம். இருவாச்சிகளுக்கே


உரிய நீண்ட அலகு, அதன் மேல் கவசம் ப�ோன்ற அமைப்பு (இளம்
பறவைக்கு இக்கவசம் சின்னதாக இருக்கும்) எல்லாம் உண்டு.
வாலின் முனையில் கருப்பு வெள்ளை பட்டைகள் இருக்கும். உடல்
முழுவதும் வெளிர் சாம்பல் நிறம்.

மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar Grey Hornbill) LC

மற்ற இருவாச்சிகளைக் காட்டிலும் இது அளவில் சற்று சிறியது. அடிவயிறு வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் அலகில் கவசம் ப�ோன்ற அமைப்பு
இருக்காது. கண்களுக்கு மேலே வெள்ளைப் புருவம் ப�ோன்ற பட்டைக் காணப்படும். இவ்வகை இருவாச்சியில் பெண் பறவைதான் தனது எச்சத்தைக்
க�ொண்டு மரப்பொந்தை மூடும்.

Jurassic Park. இதில் வரும் T.Rex டைன�ோசரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். தற்போதுள்ள உயிரினங்களில்
DNAகளின் அடிப்படையில், அதன் நெருங்கிய உறவினர் ஒருவர் நம்மிடையே உள்ளார். அவர் - க�ோழி.
(கா)2 ToC

க�ொண்டலாத்தி (Eurasian Hoopoe) LC

வயல்வெளிகளின் ஓரங்களிலும், புதர்களுக்கு


அருகிலும் க�ொண்டை ப�ோன்ற அமைப்பு
க�ொண்ட இப்பறவையை பலரும் பார்த்திருக்கக்
கூடும். மண்ணைக் கிளறியபடி புழு, பூச்சிகளை
பிடித்து உண்ணும். இதன் தனித்தன்மையான
உடலமைப்பு, பார்த்தவுடனேயே தெரியும் -
க�ொண்டை. ஆபத்து வரும் என்று உணரும்
ப�ொழுதும், இணையைக் கவரும் ப�ொழுதும்
க�ொண்டை நேராக இருக்கும். இது அடிக்கடி மண்
குளியல் ப�ோடுவதை விரும்பும். அதேப�ோன்று
சூரியக் குளியலையும். இதற்கு மேலும் இரண்டு
தனித்துவமான குணங்கள் உண்டு. மண்ணைக்
கிளரும்/துழாவும் ப�ொழுது அலகு திறந்தபடி
இருக்கும். காரணம், நல்ல வலுவான மிகநீண்ட
அலகு. இந்த நீண்ட அலகின் காரணமாகவே
இதை மரங்கொத்தி ப�ோன்ற பறவைகள�ோடு சேர்த்து குழப்பிக்கொள்கின்றனர். மற்றொரு அம்சம், பறக்கும் ப�ொழுது அநேக பறவைகளைப்
ப�ோலல்லாமல், பட்டாம்பூச்சி ப�ோன்று படக்படக்கென்று அடித்து அடித்துப் பறக்கும்.

முதுகில் கருப்பு - வெள்ளை பட்டைகள் இருக்கும். உடல், பழுப்பு + சாம்பல் கலந்த நிறம். இது குறிப்பட்ட தூரம்வரை வலசை (Migaration)
ப�ோகும் பறவை. மரப்பொந்துகளில் முட்டையிடும்.

புழு, பூச்சிகள், சிலந்திகள் ப�ோன்று விவசாயத்தை பாதிக்கும் ஜந்துக்கள் தான் க�ொண்டலாத்தியின் பிரதான உணவுகள்.

பனங்காடை (Indian Roller) LC

பயணங்கள் ப�ோகும்பொழுது - மின் கம்பிகளின் மீது நல்ல


நீல + பழுப்பு நிறம் கலந்த ஒரு பறவையை நிச்சயமாக நாம்
எல்லாருமே பார்த்திருப்போம். அந்தப்பறவைதான் பனங்காடை.
இது கம்பிகளில் ஏதுவாக உட்காருவதற்கு ஏற்ப கால்களைக்
க�ொண்ட Passerine வகைப் பறவைகளில் ஒன்று. மிகமிக
அட்டகாசமாக, பறக்கும் ப�ொழுது சாகசங்கள் செய்யும். எல்லாம்
இணையைக் கவர்வதற்காகவே. உருண்டு புரண்டு பறக்கும்
என்பதாலேயே "ர�ோலர்" என்ற பெயர். இதன் அடர் நீலநிறம்
காரணமாக "Blue Jay" என்ற பெயரும் உண்டு.

நல்ல நீல நிறம். பறக்கும் ப�ொழுது இன்னும் எடுப்பாகத்


தெரியும். தலையுச்சியில் நீல நிறமிருக்கும். கழுத்து முதல்
அடிவயிறு வரை, ஆரன்ச் + பழுப்பு கலந்த நிறம். பெரும்பாலும்
தனியாளாகவே இப்பறவையைப் பார்க்கலாம். விவசாயத்திற்கு
உற்ற நண்பன். பயிர்களை பாதிக்கும் பூச்சிகள், புழுக்களில்
ஆரம்பித்து தவளைகள், ஓணான்கள் முதலியவற்றை விரும்பி
உண்ணும். இப்பறவை குளிக்கும் முறை அலாதியானது. சற்று உயரத்தில் இருந்து சரக்கென்று நீருக்குள் டைவ் அடிக்கும். பனை மரங்களின் அருகில்
சற்று அதிகளவிலும், புதர்கள் நிறைந்த - மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும் இப்பறவையைப் பார்க்கலாம். இது வலசை ப�ோகாத பறவை
என்றாலும், உணவிற்காக குறிப்பிட்ட த�ொலைவிற்குள் பெயரும். மனிதர்களின் இருப்பிடத்தோடு ஒத்து வாழக்கூடியது. ஆனால் ஒரு எல்லைக்குள்
மட்டுமே அதன் புழக்கம் இருக்கும்.

இந்தப் பறவைக்கு மற்றொரு சிறப்பு உண்டு. ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா, ஓடிஸா - ஆகிய நான்கு மாநிலத்தின் - மாநிலப் பறவை,
பனங்காடை தான்.

ஒரு பறவையின் கண்கள், அதன் தலையில் கிட்டத்தட்ட 50% இடத்தைப் எடுத்துக்கொள்கிறது. மனிதர்களுக்கு (நமக்கு ஏறக்குறைய
5%) அவ்வாறு இருந்தால், ஒரு க்ரிக்கெட் பந்து அளவிற்கு நமது கண்கள் இருக்கும். ஆனால் ஆந்தை ப�ோன்ற சில பறவைகளின்
கண்கள், கிட்டத்தட்ட 60%திற்கும் அதிகம்.
(கா)2 ToC

Yellow-throated Bulbul
(கா)2 ToC

இந்தக் கட்டுரையில், அட்டகாசமாகக் கூடு கட்டும் இரண்டு வகைப் பறவைகளைப் பற்றி பார்ப்போம். சரி, பறவைகள் எதற்கு கூடு கட்டுகின்றன?
மிக அடிப்படையான காரணம், முட்டைகள்/குஞ்சுகளை பாதுகாப்பது. இரண்டாவது, குஞ்சுகளுக்கு இறக்கை வளர சில மாதங்கள் பிடிக்கும்
என்பதால்... அதுவரை குளிரைத் தாங்க வேண்டுமல்லவா?! இதுப�ோன்ற சீத�ோஷண மாறுபாடுகளிலிருந்து குஞ்சுகளை பாதுகாக்கவும் கூடுகளை
கட்டுகின்றன. தரையில் ஆரம்பித்து மரப்பொந்து, மரக்கிளைகள் வரை ஒவ்வொரு வகைப் பறவையும் ஒவ்வொரு முறையில் கூடு கட்டும். குயில்
ப�ோன்ற சில பறவைகள் வேற பறவைகளின் கூட்டில் தங்களது முட்டைகளை இட்டுச் செல்லும். இந்த தன்மையைப் பற்றி விரிவாக, குயில் பற்றிய
கட்டுரையில் பார்த்துள்ளோம். மற்றொரு விஷயம், ஒவ்வொரு பறவையும் அந்தந்த கூடுகளைச் சுற்றி ஒரு எல்லையை வகுத்துக் க�ொள்ளும்.
அதற்குள் வேறு பறவைகள�ோ, விலங்குகள�ோ, ஆட்கள�ோ வரும்பொழுது - கரிச்சான், காக்கை ப�ோன்ற பறவைகள் தாக்குதல் நடத்தும். ஆள்காட்டி
ப�ோன்ற பறவைகள் அபாயக்குரலெழுப்பும். ஆகம�ொத்தம் எவ்வகையிலாவது கலவரமடையும்.

தூக்கணாங்குருவி (Baya Weaver) LC

தூக்கணாங்குருவியைப் பற்றி கேள்விப்பட்டிராதவர்களே இல்லை


எனலாம். முக்கியமாக அதன் கூட்டைப்பற்றி. இதன் கச்சிதமான
கூட்டை வைத்து பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வயல்வெளிகளின் அருகில் இதன் கூடுகளைக் காண முடியும்.


கிளைகளில் இருந்து த�ொங்கிக்கொண்டிருக்கும். புற்கள், வைக்கோல்,
களிமண் இவற்றைக் க�ொண்டே கூடு கட்டும். களிமண்ணை கூட்டின்
ஸ்திரத்தன்மைக்காக பயன்படுத்துகிறது. பயங்கர காற்று/மழை ப�ோன்ற
விஷயங்களை கூடு தாங்க வேண்டுமல்லவா. கூட்டினுள் கம்பார்ட்மென்ட்
ப�ோன்ற அமைப்புகளும் உண்டு. இணையக் கவர்வதற்காக ஆண்
குருவி தான் கூடு கட்டும். மே முதல் செப்டம்பர் வரைதான் இதன்
இனப்பெருக்க காலம். தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் தான் இதன்
இனபெருக்க வேலையும் நடக்கும்.

சிட்டுக்குருவியைப் ப�ோன்றே த�ோற்றமளிக்கும். ஆனால் அலகு


சிட்டுக்குருவியை விட சற்று வளைந்து இருக்கும். பழுப்பு நிற உடலில்
அடர் பழுப்பு பட்டைகள் இருக்கும். இனப்பெருக்க காலங்களில்,
உச்சந்தலை மற்றும் கழுத்து முதல் வயிற்றுப்பகுதி முழுவதும் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். தானியங்கள், புழுப்பூச்சிகளை விரும்பி உண்ணும்.

தையல் சிட்டு (Common Tailorbird) LC

வீட்டுத் த�ோட்டங்களிலும், புதர்கள் அடர்ந்த இடங்கள், காடுகள்


என்று பல இடங்களிலும் இப்பறவையைப் பார்த்திருப்போம்.
குறைந்தபட்சம் குரலையாவது கேட்டிருப்போம். படுசுறுசுறுப்பான
பறவை. பல சமயங்களில் வாலை ஆட்டிக்கொண்டே இருக்கும்.
இரண்டு விதமான கீச்சல்களை எழுப்பியபடி, கிளைக்கு கிளை
தாவிக்கொண்டே இருக்கும். ஆலிவ் பச்சை முதுகுப் பகுதியும், அடி-
வயிற்றுப்பகுதி முழுவதும் வெள்ளை நிறத்தையும் க�ொண்டிருக்கும்.
உச்சந்தையில் துரு நிறமிருக்கும். பூச்சிகள், புழுக்கள் ஆகியவைகளே
பிரதான உணவுகள்.

ஏப்ரல் - செப்டம்பர் தான் இதன் கூடு கட்டும் காலம். இது கூடு


கட்டும் முறை மிக அலாதியானது. மிகப்பெரிய இலையை அப்படியே
சுருட்டி, உள்ளே பஞ்சு ப�ோன்ற ப�ொருட்களை வைத்து கூடு கட்டும்.
இலையின் முனைகளை அட்டகாசமாக தைத்திருக்கும்.

மனிதர்கள் புழங்கும் இடங்களில் சகஜமாக உலாவரக் கூடியது.


அட்ஜெஸ்ட் செய்துக�ொள்ளும் தன்மை இப்பறவைக்கு அதிகம்.

Birdingpal.org என்றொரு தளம் உண்டு. உலகின் பல பகுதிகளிலும் இருக்கும். பறவை ஆர்வளர்கள் தாங்களாகவே முன்வந்து
தங்களது பெயரை இத்தளத்தில் பதிவு செய்து வைத்திருப்பர். நாம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதென்றால் இவர்களது உதவியை
நாடலாம்.
பூக்கொத்திகள் (Flowerpeckers) (கா)2 ToC

மிகச்சிறிய பறவை இனங்களில் ஒன்று. இந்தியாவில் இருக்கும் பூக்கொத்திகள் பெரும்பாலும் 7 - 10 செ.மீ வரை இருக்கும். பழங்களை, அதுவும்
குறிப்பிட்ட சிலவகை பழங்களை அப்படியே விழுங்கி... அதன் க�ொட்டைகளை பரவச்செய்தல் மூலம் சூழலியலில் - அனைத்து பறவைகளையும்
ப�ோல - முக்கிய பங்குவகிக்கின்றன.

டிக்கல் பூக்கொத்தி (Tickell's Flowerpecker) LC

மிகச்சிறிய, கிட்டத்தட்ட 7 செ.மீ - அளவே உள்ள பறவை. வீட்டுத்


த�ோட்டங்களிலும், பழ மரங்களிலும் அடிக்கடி சுற்றித் திரிந்துக�ொண்டிருக்கும்.
வெளிர்ரோஸ் நிற அலகைக் க�ொண்டிருக்கும். சாம்பல் + வெள்ளை நிற அடி-
வயிற்றுப்பகுதியும், வெளிர்பச்சை நிற முதுகுப்பகுதியையும் க�ொண்டிருக்கும்.

தடித்த அலகு பூக்கொத்தி (Thick-billed Flowerpecker) LC

பெயருக்கேற்றார் ப�ோல, தடிமனான அலகைக் க�ொண்டது. இது டிக்கலை விட சற்று பெரியதாக இருந்தாலும், பார்வைக்கு டிக்கலைப் ப�ோலவே
இருக்கும். ஆனால் இதன் அலகில் கருநீல நிறத்தில் ஒரு சிறிய அமைப்பைப் பார்க்கலாம். தவிர, இதன் மற்றொரு தனித்துவமான குணம், மற்ற
பூக்கொத்திகளைப் ப�ோல பழங்களை அப்படியே விழுங்காது. த�ோலை தேய்த்து எடுத்துவிட்டு தான் சாப்பிடும்.
தேன்சிட்டுகள் (Sunbirds) (கா)2 ToC

அனைவரும் நிச்சயம் ஒருமுறையாவது இப்பறவையைப் பார்த்திருப்போம். 8 - 15 செ.மீ வரை இருக்கும். அலகிற்கும் பறவையின் வாழ்க்கைமுறைக்கும்
உள்ள த�ொடர்பைப்பற்றி பலமுறை இப்புத்தகத்தில் பார்த்துள்ளோம். இத�ோ… மற்றும�ொரு உதாரணம். பூக்களில் இருக்கும் தேனை உறிஞ்சி
எடுக்க வசதியாக, நீண்ட - வளைந்த - ஊசி ப�ோன்ற அலகு இதற்கிருக்கும். பூக்களிலின் காம்பில் உக்கார்ந்து தேனை லாவகமாக உறிஞ்சும்.
நூலாம்படைகளை அதிகளவில் கூடுகட்டப்பயன்படுத்தும். பெண் சிட்டுகளே கூடு கட்டுவதில் முக்கிய வேலைகளைச் செய்யும்.

ஊதா தேன்சிட்டு (Purple Sunbird) LC

ஆண் - அடர் ஊதா + கருப்பு கலந்த நிறத்தில் இருக்கும்.


அதுவும் இனப்பெருக்க காலத்தில்(Breeding plumage)
மட்டும்தான். மற்ற நேரங்களில் பெண் தேன்சிட்டு ப�ோல
த�ோற்றமளிக்கும். ஆனால் மார்பில் ஒரு கரும்பட்டை இருக்கும்.
பெண் சிட்டு - அழுக்கு மஞ்சள் அடிவயிறு, வெளிர்பழுப்பு நிற
இறக்கைகள், கண்களின் அருகே ஒரு சின்ன மஞ்சள் தீட்டை
க�ொண்டிருக்கும். ஆண் பறவையின் இறக்கை ஆரம்பிக்கும்
இடத்தில் அடர்ஆரஞ்ச் முடிகள் இருக்கும்.

ல�ோடன் தேன்சிட்டு (Loten's Sunbird) LC

ஊதா தேன்சிட்டுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம்... இதன் நீண்ட அலகு


தான். ஊதா தேன்சிட்டு ப�ோலத்தான் இதிலும் ஆண், பெண் வேறுபாடு.
ஆனால், ஆணின் தலை அடர்ஊதா நிறத்திலும், உடல் அடர்பழுப்பு
நிறத்திலும் இருக்கும்.

Male

அடர்ஆரஞ்ச் பட்டை ஒன்று ஆணின் மார்புக்கு கீழ் இருக்கும்.


பெண்சிட்டிற்கு, கண்களின் அருகே மஞ்சள் தீட்டு - ஊதா பெண்
சிட்டுப�ோல - காணப்படாது.

Female
(கா)2 ToC

ஊதா பிட்ட/ஊர்தேன்சிட்டு (Purple-rumped Sunbird) LC

Male Female

ஆண் - உச்சந்தலையில் அடர்பச்சை + ஊதா கலந்த, ஒளிரும் நிறத்தில் இருக்கும். வயிற்றுப்பகுதி முழுவதும் நல்ல மஞ்சள் நிறம். புட்டம் -
அடர்ஊதா நிறம். பெண் - கழுத்து, வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.

சின்ன தேன்சிட்டு (Crimson-backed Sunbird) LC

தென்னிந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே


இப்பறவைகளைக் காண முடியும். மற்ற தேன்சிட்டுகளைக் காட்டிலும்
அளவில் சிறியது. உச்சந்தலையில் டாலடிக்கும் வெல்வெட் நிறமும்,
முதுகுப்பகுதியில் சிகப்பு கலந்த வெல்வெட் நிறமும் காணப்படும்.
மார்பில் இளம்சிவப்பு பட்டை காணப்படும். அடிவயிறு முழுவதும்
நல்ல மஞ்சள் நிறம். பழக்க வழக்கங்கள் அனைத்தும் மற்ற
தேன்சிட்டுக்களைப் ப�ோன்றே இருக்கும்.

Breeding Plumage - இனப்பெருக்க காலத்தில் பெண் இணைகளை கவர்வதற்காக ஆண் பறவைகளின் சிறகுகள் பல்வேறு
நிறக்கலவைகளைக் க�ொண்டதாக மாறும். அந்த காலகட்டத்தின் பெயர்தான் Breeding plumage.
(கா)2 ToC

சிலந்தி பிடிப்பான் (Little Spiderhunter) LC


ஏறக்குறைய தேன்சிட்டைப் ப�ோன்றே இருக்கும். ஆனால் தேன்சிட்டைக்
காட்டிலும் மிகநீண்ட அலகும் - உடல் சற்று மெலிதாக இருக்கும்.
ஆண் - பெண், பெரிய வேறுபாடின்றி ஒன்று ப�ோலவே தெரியும். தேன்
மற்றும் சிறிய பூச்சிகளை, குறிப்பாக சிலந்திகளை விரும்பி உண்ணும்.

வெள்ளைக் கண்ணி (Oriental White-eye) LC


சற்று சிறிய பறவை. கண்ணைச் சுற்றி மிகத்தெளிவான வெள்ளை
வளையம் காணப்படும். கழுத்து & உடல் முழுவதும் மஞ்சள் நிறம்.
மார்பு முதல் அடிவயிறு வரை கலங்கிய வெள்ளை நிறம். இவை
கூட்டங்கூட்டமாக வாழும் பறவை. சிறு பூச்சிகளே பிரதான உணவு.
பூக்களின் தேனையும் விரும்பி உண்ணும்.

Great Backyard Bird Count


ஃப்ரவரி 16. இத்தேதியை ஞாபகம் வைத்துக் க�ொள்வோம். உலகெங்கும் இருக்கும் பறவை ஆர்வலர்கள் சத்தமில்லாமல் வருடாவருடம்
இந்தத் தேதியில் ஒரு காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நமது வீட்டைச் சுற்றியிருக்கும் பறவைகளை த�ோராயமாக கணக்கெடுக்கும் வேலை இது. உலகம் முழுவதும், ஃப்ரவரி 14 - 17
வரையில் இந்த பணி படுஅமர்க்களமாக நடந்தேறி வருகிறது. 2013ஆம் வருடம் மட்டும், 111 நாடுகளில் இருந்து மூன்று க�ோடிக்கும்
அதிகமான மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். சரி... நாமும் இதில் பங்குபெற என்ன செய்ய வேண்டும்? ஒரு பதினைந்து நிமிடம்
ஒதுக்கி நம்மைச் சுற்றி இருக்கும் பறவைகளை கவனிக்க வேண்டும். அவ்வளவே. உங்கள் வீட்டின் பின்புறம் த�ோட்டம் இருந்தால்
ஒரு சேரைப் ப�ோட்டு அரைமணி நேரம் அங்கு செலவிடுங்கள். கண்ணில்படும் பறவைகள் அனைத்தையும் குறித்து வைத்துக்கொ-
ள்ளுங்கள். உதாரணமாக, 5 - காகம், 3 - மைனா... இதுப�ோல. அவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது. காலாற வெளியே
நடந்துசென்று இதனைச் செய்ய முடிந்தால், அதிக எண்ணிக்கையில் பறவைகளை காண முடியும். குறிப்பாக, வீட்டில் குழந்தைகள்
இருந்தால் அவர்களிடம் இதனைத் தெரிவியுங்கள். அவர்கள் மீதி வேலையை பார்த்துக் க�ொள்வார்கள். சரி, எடுத்த லிஸ்ட்டை
என்ன செய்வது? இங்குதான் ஒரு சின்ன சிக்கல். நெட் வசதி இருந்தால் ஒழிய, இது சாத்தியமில்லை. http://ebird.org என்ற
தளத்திற்குச் சென்று நமது லிஸ்ட்டை சேர்த்துவிட வேண்டும். முடிந்தது வேலை. உலகம் முழுவதும் ஒரே நாளில் இந்நிகழ்வு
நடப்பதால், பரவலாக காணக்கூடிய பறவையினங்களின் எண்ணிக்கை பற்றிய உத்தேச கணக்கிற்கு இது பெரிதும் உதவும். தவிர,
குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை பறவை ந�ோக்குதலின்பால் ஆர்வம் ஏற்பட ஒரு காரணமாகவும் இது இருக்கக்கூடும்.
வாலாட்டிகள் (Wagtails) (கா)2 ToC

மிகத்தெளிவான காரணப்பெயர். இவ்வகைப் பறவைகள், ஏறக்குறைய எல்லா நேரமும் தங்களது வாலை ஆட்டிக்கொண்டே இருக்கும். வாலாட்டிகள்
மட்டுமின்றி வேறு பல பறவைகளும் இப்படி தங்களது வாலை ஆட்டிக் க�ொண்டிருப்பதற்கு, பூச்சிகளை விசிறிவிடவும் - எதிராளியை சற்று கலவ-
ரப்படுத்தவும் - இணையைக் கவரவும் என்று பல காரணங்கள் கூறப்படுகிறது. ஆனாலும் வாலாட்டிகளின் விஷயத்தில் இன்னும் தெளிவான பதில்
கிடைக்கவில்லை. சமீபத்திய ஆய்வின்படி, பூச்சிகளைப் பிடிக்கவே அதிகளவில் வாலாட்டுதல் பயன்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர். ஆனாலும்
எல்லா வாலாட்டிகளும் வாலை ஆட்டுவதில்லை. உதாரணமாக, காட்டு வாலாட்டி (Forest Wagtail) முழு உடலையும் இடவலமாக ஆட்டும்.

வாலாட்டிகள், நம் நாட்டிற்குள்ளாகவே வலசை ப�ோகும் பறவை. இமயமலைப் பகுதிகளிலும், வடமேற்கு பகுதிகளிலும் அதிகளவில் இருக்கும்
இப்பறவைகள், செப்டம்பர் முதல் ஃப்ரவரி வரை, தகுந்த சீத�ோஷண நிலையைத் தேடி தமிழகப் பகுதிகளுக்கு வலசை வரும். நீர்நிலைகளின்
ஓரங்களிலும், காட்டுப்பிரதேசங்களிலும் இப்பறவைகளைக் காண முடியும். வாலை வேகமாக ஆட்டிக்கொண்டே சுறுசுறுப்புடன் பூச்சிகளைக் பிடித்துத்
தின்னும். பூச்சிகளே வாலாட்டிகளின் பிரதான உணவு. இப்பறவைகள் அட்டகாசமான குரலைக் க�ொண்டது. அளவு என்று பார்த்தால், வாலாட்டிகள்,
சிட்டுக்குருவியை விட சற்று பெரிய பறவைகள். வாலும் நீண்டதாக இருக்கும். தமிழ்நாட்டைப் ப�ொறுத்தவரை, ஆறு வகையான வாலாட்டிகளைக்
காணலாம்.

வெண்புருவ வாலாட்டி (White Browed Wagtail) LC

இதற்கு கருப்பு வெள்ளை வாலாட்டி (Large Pied Wagtail) என்ற


பெயரும் உண்டு. வாலாட்டிகளிலேயே இவ்வகை தான் மிகப்பெரிய பறவை.
வெள்ளையான புருவத்தைக் க�ொண்டிருக்கும். கழுத்து முதல் மார்புப்பகுதி
+ முதுகுப்பகுதி மட்டும் கருப்பு நிறத்திலும், மற்ற இடங்கள் அனைத்தும்
வெள்ளை நிறத்திலும் இருக்கும். அசப்பில், ப�ோன கட்டுரையில் பார்த்த
க�ொண்டு கரிச்சானை ஒத்திருக்கும்.

கரும் சாம்பல் வாலாட்டி (Grey Wagtail) LC

எலுமிச்சை நிற அடிப்பகுதியையும் சாம்பல் நிற இறக்கைகளையும்


க�ொண்டது. இனப்பெருக்க காலங்களில் ஆண் பறவையின் த�ொண்டை
கருப்பு நிறத்தில் இருக்கும். கிட்டத்தட்ட 5000மீ உயரத்தில் கூட
இப்பறவையைக் காண முடியும். மிகுந்த பரபரப்புடன் பூச்சிகளை தேடி-
க்கொண்டிருக்கும். பறந்துக�ொண்டிருக்கும் பூச்சிகளைக் கூட லாவகமாக
பிடிக்கும். அதப�ோல, தலைப்பிரட்டைகளையும் நீர்நிலைகளில் இருந்து
பிடித்து உண்ணும்.

மஞ்சள் வாலாட்டி (Yellow Wagtail) LC

இங்க்லாந்து ப�ோன்ற நாடுகளில், இப்பறவை வெகுவேகமாக அழிந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. உடல் முழுவதும் அடர் மஞ்சள் முதல்
வெளிறிய மஞ்சள் வரை படர்ந்து காணப்படும். முதுகுப்பகுதி - இறக்கைகளில் ஆலிவ் பச்சை நிறமிருக்கும்.

காட்டு வாலாட்டி (Forest Wagtail) LC

க�ொடிக்கால் வாலாட்டி என்ற பெயரும் உண்டு. ஏற்கனவே பார்த்தது ப�ோல, வாலை மட்டுமின்றி முழுஉடலையும் இடவலமாக ஆட்டிக்கொண்டிரு-
க்கும். அடர்ந்த காடுகளில் மட்டுமே வலசை வரும் பறவை இது. தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவில் இப்பறவையை
வலசை காலங்களில் காணமுடியும். தலை முதல் வால் வரை, அடர்பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வெள்ளைப் புருவம் ப�ோன்ற
அமைப்பைக் க�ொண்டிருக்கும். வெள்ளை நிற மார்பு (அதில் கருப்புப்பட்டை ஓடும்) + அடிவயிறைக் க�ொண்டது.
ஆந்தைகள் (Owl) (கா)2 ToC

மற்ற பறவை வகைகளைக் காட்டிலும் ஆந்தைகள் பல வகையிலும் வேறுபட்டது. இரவில் வேட்டையாடுவதாகட்டும், பறக்கும் ப�ொழுது சத்தமே
வராமல் பறப்பதாகட்டும் (இதற்காக வெல்வெட் ப�ோன்ற அமைப்புகள் ஆந்தையின் இறக்கைகளில் உண்டு. இறக்கையை அடிக்கும்போது எழும்
அதிர்வுகளை இந்த வெல்வெட் அமைப்பு உள்வாங்கிக்கொல்லும்), பைனாகுலர் விஷன் எனப்படும், நமக்கிருப்பதை ப�ோல கண்கள் முன்னோக்கி
இருக்கும் அமைப்பாகட்டும் (ஆந்தை 360 டிகிரியில் தலையை திருப்பி பார்க்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. அதிகபட்சமாக 260 - 270 டிகிரி
திரும்பும், அதுவே முழு 360 டிகிரிக்கு பார்க்க உதவும்) பல விஷயங்களில் ஆந்தை தனித்துவமிக்கது. பெரும்பான்மையான ஆந்தை வகைகள்
இரவில் தான் வேட்டையாடும். அதன் காரணமாக இரவில் பார்ப்பதற்கு ஏற்ப மிகக்கூர்மையான கண்களையும் - காதுகளையும் க�ொண்டது.

புள்ளி ஆந்தை (Spotted Owlet) LC

தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பரவலாகக் காணப்படும் ஆந்தை


வகைகளில் ஒன்று. உடல் முழுவதும் சாம்பல் கலந்த பழுப்பு நிறம். உடலில்
வெள்ளை புள்ளிகள் காணப்படும். ஆந்தைகளுக்கே உரித்தான, மிகஅமைதியாக…
மரக்கிளையில�ோ, ப�ொந்தில�ோ அமர்ந்தவாறு நடப்பவற்றை பார்த்துக்கொண்டிரு-
க்கும். எலி, தவளை ப�ோன்ற உயிரினங்களை பிடித்து உண்ணும்.

கூகை (Barn Owl) LC

"வித்தியாசமான பறவை ஒன்று பிடிபட்டது" - இப்படி செய்திகளில் அடிக்கடி வருமே... அந்தப்பறவை கூகை தான். வட்ட முகத்தில் விரலை
மடக்கியது ப�ோல மூக்கு, அதன் நுனியில் அலகு. முகம், உடல் - வெள்ளை, அங்கங்கே வெளிறிய பழுப்பு நிறம் இருக்கும். இறக்கைகள் பழுப்பு
நிறம். எலிகளே இதன் பிரதான உணவு. இங்லாந்து ப�ோன்ற நாடுகளில் பெருமளவில் நிறைந்திருந்த இப்பறவை, அங்கு வயல்களில் எலிகளை
ஒழிக்க பயன்படுத்தப்படும் க�ொல்லிகளின் காரணமாக - அங்கு இதன் எண்ணிக்கை குறைந்து க�ொண்டே வருகிறது.

பல பறவைகளின் இருச�ொற் பெயரீடு (Binomial nomenclature) அந்தப் பறவையை முதன்முதலில் எங்கு அதிகாரப்பூர்வமாக பார்த்து,
ஆவணப்படுத்தப்பட்டத�ோ அந்த நாட்டின்/ஊரின்/இடத்தின் பெயரையே பல சமயங்களில் பறவைக்கு வைத்துவிடுவர். இவ்வாறு தமிழ்நாட்டின்
சில ஊர்களின் பெயரைத் தாங்கிய சில பறவைகள்:

செஞ்சிக் க�ோட்டை (Gingee):

»» Egyptian Vulture - Neophron p ginginianus


»» Bank Myna - Acridotheres ginginianus
மெட்ராஸ் (Madras)

»» Black-hooded Oriole - Oriolus x maderaspatanus


»» Indian Scimitar Babbler - Pomatorhinus h maderaspatensis
»» White-browed Wagtail - Motacilla maderaspatensis
நீலகிரி (Nilgiri Hills):

»» Nilgiri Pipit - Anthus nilghiriensis


»» Pied Bushchat - Saxicola c nilghiriensis
வேலூர் (Vellore):

»» Jungle Bush Quail - Perdicula a vellorie


இதுபற்றி இன்னும் தெரிந்துக�ொள்ள, இந்த லிங்க் உதவும்.
மரங்கொத்திகள் (Wood peckers) (கா)2 ToC

மரங்கொத்திகளை பார்த்திருக்காவிட்டாலும், அதன் ‘ட�ொக்... ட�ொக்…’ சத்தத்தை நிச்சயம் பலரும் கேட்டிருப்போம், மிக வலிமையான அலகே
இதன் தனித்தன்மை. இயற்கையின் பரிணாம வளர்ச்சியின் மற்றொரு அட்டகாசமான தகவமைப்பை (adaptation), மரங்கொத்திகளிடம் பார்க்கலாம்.
க�ொஞ்சம் ய�ோசித்துப் பார்ப்போம். ஒரு நாளைக்கு, கிட்டத்தட்ட 12,000 தடவை ஒரு உயிரினம் கடினமான மரங்களை க�ொத்திக்கொண்டே
இருக்கிறது, அதுவும் மணிக்கு 20 - 25 KM வேகத்தில். அப்படியானால் மூளை எப்பிடி இத்தனை வேகத்தை, அழுத்தத்தைத் தாங்குகிறது? அதன்
கடினமான மண்டைய�ோடுகள், சிறிய மூளை அளவு + அதனைச் சுற்றி இருக்கும் ஹெல்மெட் ப�ோன்றத�ொரு அமைப்பு. பரிணாம வளர்ச்சியில்
மெல்ல மெல்ல மிகக்கச்சிதமாக மரங்கொத்திகளுக்கு இந்த அமைப்பு உருவாகியுள்ளது.

மரங்களில் செங்குத்தாக ஏறும் வழக்கத்தைக் க�ொண்டது. இதற்கு ஏதுவாக இதன் கால் அமைப்பு இருக்கும் (Zygodactyl). இரண்டாவது /
மூன்றாவது விரல்கள் முன்னோக்கியும் - ஒன்று/நான்காவது விரல்கள் பின்னோக்கியும் இருக்கும். பெரும்பாலான மரங்கொத்திகள், கருப்பு -
வெள்ளை - சிகப்பு - மஞ்சள் நிறக்கலவையைக் க�ொண்டிருக்கும். மரங்கொத்திகளின் குஞ்சுகள் பிறக்கும் ப�ொழுது சிறகுகள் இல்லாமலும், பார்வைத்
திறன் இல்லாமலும் இருக்கும். தாய�ோ தந்தைய�ோ பாதுகாப்பிற்கு இருக்க, மற்றொரு பெற்றோர் இரையைத் தேடிக்கொண்டு வரும். மரப்படைகளின்
இடையே இருக்கும் பூச்சிகளே இதன் பிரதான உணவு.

இரைக்காக மட்டுமின்றி, இணையைக் கவர்வதற்கும் மரங்களில் "தாளம்" ப�ோடும். இதற்கு "Drumming" என்று பெயர். மரங்கொத்திகள் பிற
பறவை இனங்களை தங்கள் அருகே அண்டவிடாது. துரத்திவிடும்.

இந்தியாவில் 33 வகையான மரங்கொத்திகளைப் பார்க்கலாம். அதில் 12 வகை தமிழ்நாட்டில் உள்ளன.

கரும்பிட்ட ப�ொன்முதுகு மரங்கொத்தி (Black-


-rumped Flameback Woodpecker) LC

தமிழ்நாட்டில் பரவலாகக் காணக்கூடிய மரங்கொத்திகளில்


ஒன்று. நகர்புறங்களிலும் கூட இம்மரங்கொத்திகளை-
க் காண முடியும். உடல் முழுவதும் கருமஞ்சள் நிறம்.
கழுத்து - அடிவயிறு கலங்கிய வெள்ளை நிறம். புட்டம்
- கருப்பு நிறத்தில் இருக்கும்.

ப�ொன்முதுகு மரங்கொத்தி (Common Flameback Woodpecker) LC

இந்த வகை மரங்கொத்திகளையும் தமிழ்நாட்டில் எளிதாகக் காணமுடியும். ஏறக்குறைய கரும்பிட்ட மரங்கொத்தி ப�ோன்றே இருக்கும். ஆனால்
இதற்கு புட்டம் - இளஞ்சிவப்பு நிறத்திலும், முதுகுப்பகுதி ஆரஞ்ச் கலந்த நிறத்திலும் இருக்கும்.

சின்ன மரங்கொத்தி (Brown-capped Pygmy


Woodpecker) LC

அளவில் பெரும்பாலான மரங்கொத்திகளைக் காட்டிலும் சிறியது.


உடல் - பழுப்பு & வெள்ளை கலந்த நிறத்தில் இருக்கும்.
மற்றொரு தனித்துவ அமைப்பு, கண்ணைச் சுற்றி இருக்கும்
வெள்ளை புருவம்.
(கா)2 ToC

கரும்புள்ளி மரங்கொத்தி (Heart-spotted Woodpecker) LC

த�ோள் மட்டும் வெள்ளை நிறத்திலும், முதுகுப்பகுதி முழுவதும் கருப்பு நிறத்திலும் இருக்கும். முதுகுப்பகுதியின் கருப்ப நிறம் - ஹார்ட் ப�ோன்ற
த�ோற்றத்தில் இருக்கும். கழுத்து முதல் அடிவயிறு வரை சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில்
அதிகளவில் காணலாம்.

மஞ்சள் பிடரி மரங்கொத்தி (Lesser Yellownape


Woodpecker) LC

ப�ொன்முதுகு மரங்கொத்தி அளவில் இருக்கும். பிடரி


மஞ்சள் நிறத்தில் இருக்கும். உச்சந்தலையின் இரு
பக்கத்திலும் இளஞ்சிவப்பு பட்டை காணப்படும்.
அடிவயிற்றில் புள்ளிகள் காணப்படும்.

சூழலியலில் மரங்கொத்திகளின் பங்கு மிகப்பெரியது. மரப்பட்டைகளின் பூச்சிகளை க�ொத்தித் தின்பதன் மூலம் மரங்களைக் காப்பத�ோடு
மட்டுமல்லாமல், க�ொத்துவதன் மூலன் ஏற்படும் ஓட்டைகளில் பிற சிறிய பறவைகள் கூடு கட்ட உதவி புரிகின்றன (Primary Cavity
Nesters). இப்பிடி பிற பறவைகள் ஏற்படுத்திய ஓட்டைகளில் முட்டையிட்டு குஞ்சு ப�ொரிக்கும் பறவைகளுக்கு Secondary Cavity
Nesters என்று பெயர். ஆந்தைகள், மைனாக்கள் ப�ோன்ற பறவைகள் இதற்கு உதாரணம்.
பருந்துகளும், வல்லூறும் (Kites & Hawk) (கா)2 ToC

பிற உயிரினங்களை வேட்டையாடி உணவாக்கிக் க�ொள்ளும் (Birds of prey) குடும்பத்தை சேர்ந்தவை தான்... பருந்துகள் (Kites), கழுகுகள்
(Eagles) மற்றும் வல்லூறுகள் (Hawks). ஒவ்வொரு பறவைக்கும் அதன் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற உடலமைப்பும், வேட்டையாடுவதற்கு ஏதுவாக
மிகலாவகமாகவும் வேகமாகவும் பறக்க ஏற்ற இறக்கை/வால் அமைப்புகளையும் க�ொண்டிருக்கும். ஆதிகாலம் த�ொட்டே வேட்டையாடுவதற்கு
இவ்வகைப் பறவைகளை மனிதன் பழக்கப்படுத்தி வந்திருக்கிறான்.

கழுகிற்கும் பருந்திற்குமான வித்தியாசம் அதன் உடலமைப்பிலும் வேட்டையாடும் முறையிலும் உள்ளது. பருந்துகள், கழுகை விட சற்று அளவில்
சிறியவை. வால் அமைப்பு பெரும்பாலன பருந்துகளுக்கு "V" வடிவில் இருக்கும். மேலும் பருந்துகள் பெரும்பாலும் இறந்த உயிரினங்களை உணவாகக்
க�ொள்ளக்கூடியவை. கழுகுகள், வேட்டையாடி உண்ணுவதையே அதிகம் விரும்பும்.

செம்பருந்து (Brahminy Kite) LC

கருடன் என்றழைக்கிற�ோமே.... அது இந்தப் பருந்துதான். தலை, மேல்


முதுகு, மார்பு - இவை அனைத்தும் நல்ல வெள்ளை நிறத்திலும், மற்ற
இடங்கள் நல்ல அடர் சாக்லேட் நிறத்திலும் இருக்கும். இதன் வால், மற்ற
பருந்துகளுக்கு இருக்கும் "V" வடிவ வாலில் இருந்து மாறுபட்டு, சற்று
தட்டையான வட்டவடிவில் இருக்கும். நீர்நிலைகளின் அருகில் இவைகளை
அதிகளவில் காண முடியும். எலி, மீன்களை விரும்பி உண்ணும்.

கரும்பருந்து (Black Kite) LC

பெருநகரங்களில் அதிகமாக இந்தவகை பருந்துகளைப் பார்த்திருப்போம்.


குப்பைமேட்டிற்கு அருகில் அடிக்கடி இவைகளைப் பார்க்கலாம். உடல்
பகுதி, முக்கால்வாசி பழுப்பு நிறத்தில் இருக்கும். கண்களுக்கு மேலே
மெல்லிய கருப்புப் பட்டை ஒன்று ஓடும். இறந்த உயிரினங்களை
ஆர்வமாக உண்ணும். வவ்வால்களின் கதையை, அவைகள் பறந்து
க�ொண்டிருக்கும்போதே முடித்துவிடும். ஏர்போர்ட்டிற்கு அருகில்
இருக்கும் குப்பைகளை குறிவைத்து இவைகள் அங்கே சுற்றுவதால்,
அடிக்கடி விமான விபத்துகளில் இவ்வகைப் பருந்துகள் சிக்குவதுண்டு.
காக்கையால் அடிக்கடி துரத்தப்படும் பறவைகளில், இதற்கு முதலிடம்
தரலாம்.

கருந்தோள் பருந்து (Black-shouldered Kite) LC

பல நேரங்களில் ப�ோஸ்ட் கம்பங்களின் மீதும், உயரமான கட்டிடங்களின்


மீதும் அமர்ந்திருப்பதைக் காணலாம். ரூபி நிறக்கண்கள் - கண்களுக்கு மேலே
கருப்புக்கோடு - முதுகுப் பகுதியில் மட்டும் அடர் சாம்பல் கலந்த கருப்பு
- மற்ற இடங்கள் வெள்ளை - என்று பார்த்த மாத்திரத்தில் இவைகளை
கண்டுக�ொள்ள முடியும். பெரும்பாலும் தனியாளாகவே இருக்கும்.
(கா)2 ToC

வைரி (Shikra) LC

இது வல்லூறு (Hawk) குடும்பத்தைச் சார்ந்த பறவை. குயிலின்


அளவே இருக்கும். பருந்துகளை விட அளவில் சிறியதாக
இருந்தாலும், நல்ல அகண்ட த�ோள்களை உடையது. வெளிர்
சாம்பல் நிற உடலையும் வெள்ளை அடிவயிற்றுப்பகுதியையும்
கழுத்து முதல் அடிவயிறு வரை செம்பழுப்பு நிற பட்டையான
க�ோடுகளைக் க�ொண்டிருக்கும். பெண், ஆண் இனத்தை விட
பெரியதாயும் வலிமைமிக்கதாயும் இருக்கும். எலி, தவளை, மற்ற
சிறிய பறவைகள் - இவைகளை வேட்டையாடி உண்ணும்.

பாம்புப் பருந்து (Crested Serpent Eagle) LC

மரங்கள் அடர்ந்த காட்டுபகுதியில் இவ்வகைப் பறவைகளை அதிகளவில்


பார்க்கலாம். பிடரியில் கருப்பு + க�ொஞ்சம் வெள்ளை கலந்த குடுமி
ப�ோன்ற அமைப்பு காணப்படும். உடல் முழுவதும் பழுப்பு நிறம். மார்பில்
இருந்து அடிவயிறு வரை அங்கங்கே புள்ளிகள் இருக்கும். வாலிலும்
இறக்கைகளிலும் வெள்ளைப் பட்டை காணப்படும். பறக்கும் ப�ொழுது
மிகத்தெளிவாகத் தெரியும்.

செந்தலை வல்லூறு (Red-necked Falcon) NT

மிக அதிவேகமாகப் பறக்கக் கூடிய பறவைகள் இவை. இதனைவிட


அதிக எடை க�ொண்ட பறவைகளைக் கூட, அத்தனை வேகத்தில் பறந்து
க�ொண்டே தாக்கும். அந்த வேகத்திற்கு பெரும்பாலான பறவைகளால்
ஈடுக�ொடுக்க முடியாது. உச்சந்தலை முதல் பின்னங்கழுத்து வரை
செம்பழுப்பு நிறம் காணப்படும். கன்னங்கள் நல்ல வெள்ளை நிறம்.
பார்வைக்கு சட்டென்று ப�ொறி வல்லூறு (Peregrine Falcon) ப�ோன்று
தெரியலாம். ஆனால் ப�ொறி வல்லூறின் தலை அடர் சாம்பல் நிறத்தில்
இருக்கும். வறண்ட புல்வெளிகள், பாலை நிலங்களில் அதிகளவில்
இப்பறவையைக் காண முடியும்.

உலகிலே மிகவேகமாக பறக்கக் கூடிய பறவைகளில் ஒன்று, ஷாஹீன் வல்லூறாகும் (Shaheen Falcon). இரையை பிடிக்கும்
சமயத்தில் மணிக்கு 240 - 320 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது. அந்த வேகத்தில் தன்னைவிட அதிக எடைக�ொண்ட
பிற உயிரினங்களைக் கூட சர்வசாதாரணமாக தாக்கிவிடும்.
(கா)2 ToC

Racket-tailed Drongo
பறவைகள் / சூழலியல் / விலங்குகள் - சில புத்தகங்கள் (கா)2 ToC

»» பறவை உலகம்: சாலிம் அலி, ஸயீக் ஃபதேஹ் அலி: National Book Trust of India (NBTH)
»» பறவைகள்: அறிமுகக் கையேடு: ப.ஜெகநாதன் & ஆசை: க்ரியா பதிப்பகம்
»» தமிழ்நாட்டுப் பறவைகள்: க. ரத்னம்: மெய்யப்பன்
»» ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி: சாலிம் அலி: National Book Trust of India (NBTH)
»» மழைக்காலமும் குயில�ோசையும்: மா. கிருஷ்ணன்: காலச்சுவடு பதிப்பகம்
»» வட்டமிடும் கழுகு: ச.முகமது அலி: சந்தியா பதிப்பகம்
»» தென் தமிழக நீர்நிலைவாழ் பறவைகள்: ஆல்வின் ஜேசுதாசன், எம். மதிவாணன், AITREE, Bangalore

»» இயற்கை - செய்திகள் & சிந்தனைகள்: ச. முகமது அலி: இயற்கை வரலாற்று அறக்கட்டளை


»» இன்னும் பிறக்காத தலைமுறைக்காக: சு. தியட�ோர் பாஸ்கரன்: உயிர்மை பதிப்பகம்
»» வானில் பறக்கும் புள்ளெலாம்: சு.தியட�ோர் பாஸ்கரன்: உயிர்மை பதிப்பகம்
»» கானுறை வேங்கை: உல்லாஸ் கரந்த்: காலச்சுவடு பதிப்பகம்
»» யானைகள் - அழியும் பேருயிர்: ச. முகமது அலி, க. ய�ோகானந்த்: இயற்கை வரலாற்று அறக்கட்டளை
»» பல்லுயிரியம்: ச. முகமது அலி: வாசல் பதிப்பகம்
»» சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்: பி.எல்.சாமி: சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம் (இந்த புக்கும் இதுவரை கிடைக்கவே
இல்லை)
»» இறகுதிர் காலம்: க�ோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு
»» யாருக்கானது பூமி: பா. சதீஸ் முத்து க�ோபால், அகநாழிகை
»» காடுகளுக்காக ஒரு ப�ோராட்டம்: சிக்கோ மென்டிஸ், தமிழில்: பேராசிரியர் ச. வின்சன்ட், எதிர் வெளியீடு
»» பாம்பு என்றால்?: ச.முகமது அலி, இயற்கை வரலாறு அறக்கட்டளை
»» பூச்சிகளின் தேசம்: க�ோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு
»» இந்தியப் பாம்புகள்: ர�ோமுலஸ் விட்டேகர், நேஷனல் புக் டிரஸ்ட்
»» பாலூட்டிகள்: இராம.சுந்தரம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
»» மழைக்காடுகளும் சிறு ஊனுண்ணிகளும்: ச.முகமது அலி, மலைப்படுகடாம்
»» மழைக்காடுகளின் மரணம்: நக்கீரன், பூவுலகின் நண்பர்கள்
»» வனப் பயன்பாட்டியல்: ச.முகமது அலி, மலைபடுகடாம்
»» காடு: சூழலியல் கட்டுரைகள் அடங்கிய மாத இதழ் - லிங்க்

ஆங்கிலத்தில் பறவைகள் குறித்த சில நூல்கள்

»» The Book of Indian Birds: Salim Ali: Oxford University Press


»» Birds of Indian Subcontinent: Richard Grimmett, Carol Inskipp, Tim Inskipp 2nd Edition: Helm Publishing
Company
»» A Field Guide to the Birds of the Indian Subcontinent: Krys Kazmierczak & B. van Perlo, Yale University
Press
»» A Photographic Guide to the Birds of India: B. Grewal, B. Harvey & O. Pfister
»» Important Bird Areas in India Priority sites for conservation: Asad Rahmani & Zafar Islam
»» Joy of bird watching: Vishwa Mohan Tiwari: National Book Trust of India (NBTH)
(கா)2 ToC

குறிப்பிடத்தக்க இணையதளங்கள்

»» Indiabirds.com - என் சாய்ஸ் இதுதான். படங்களை வைத்தே (Gallery) டக்கென்று என்ன பறவை என்று நம்மால் அடையாளம்
காண முடியும். பறவைகளின் ஒலிக் குறிப்புகளும் இருப்பது இன்னொரு அட்டகாசமான அம்சம்.
»» Kolkatabirds.com - என்ன மாதிரியான பைனாகுலர், கேமரா என்பதில் ஆரம்பிச்சு ஏகப்பட்ட டிப்ஸ்கள் உண்டு. ஆனால்,
பறவைகளின் படங்கள் பெயர் தெரிந்தால் மட்டுமே தேட முடியும்
»» Myexperiencewithbirds.in - கிட்டதட்ட 200 வகை பறவைகளின் புகைப்படங்கள் + தமிழ் பெயருடன் உள்ளன.
»» Birding.in - இதிலும் படங்களைப் பார்த்தே சுலபமாகத் தேடலாம்
»» Indianaturewatch.net - பறப்பன, ஊர்வன என்று அனைத்திற்குமான தளம்.
»» Butterflies of India - முழுக்க முழக்க பட்டாம்பூச்சிகளுக்கான தளம்.
»» Dragonflies of India : A Field Guide - 111 பதின�ோரு வகை இந்திய தட்டாம்பூச்சிகள் பற்றிய அருமையான களஆய்வுத்
த�ொகுப்பு.
»» The Cornell lab of ornithology - பறவைகளுக்கான விக்கிபீடியா
»» The Internet bird collection - உலகம் முழுமைக்குமான பறவைகள் பற்றிய தளம் இது. Calls & Songs, Videos இருப்பது
மற்றொரு சிறப்பு.
References (கா)2 ToC

Books

»» The Book of Indian Birds: Salim Ali: Oxford University Press


»» பறவைகள்: அறிமுகக் கையேடு: ப.ஜெகநாதன் & ஆசை: க்ரியா பதிப்பகம்
»» வட்டமிடும் கழுகு: ச.முகமது அலி: சந்தியா பதிப்பகம்

Websites

»» விக்கிபீடியா தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள்


»» Wikipedia - List of Birds in Tamilnadu
»» My experience with birds
»» மழை குருவி
»» Lensing Wild
BLACK & WHITE
(கா)2 ToC
ORANGE
(கா)2 ToC
BLUE
(கா)2 ToC
BROWN
(கா)2 ToC
(கா)2 ToC
BROWN & WHITE
(கா)2 ToC
WHITE
(கா)2 ToC
GREEN (கா)2 ToC
BLACK
(கா)2 ToC
GREY
(கா)2 ToC
YELLOW
(கா)2 ToC

You might also like