You are on page 1of 6

கேள்வி 23

கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு வினாக்களுக்கு விடை


எழுதுக.

1. மேலே உள்ள படம் எதனைக் காட்டுகிறது?

(1 புள்ளி
)

2. இந்நோய் கண்டால் ஏற்படும் விளைவுகள் இரண்டனைக் குறிப்பிடுக.

i) ______________________________________________________________________________

ii) ______________________________________________________________________________

(2 புள்ளி
)

3. நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றுவதன் அவசியத்தைக்


குறிப்பிடுக.

(1 புள்ளி
)

4. நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணையின்போது வட்டிலிருந்து


ீ செய்யக்கூடிய
இரண்டு நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.

i) ______________________________________________________________________________
ii) ______________________________________________________________________________

(2 புள்ளி
)

(6
புள்ளிகள்)

கேள்வி 24

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள பனுவலை வாசித்து தொடர்ந்து வரும்


வினாக்களுக்கு விடை எழுதுக.

உணவும் சத்துகளும்

ஆரோக்கிய வாழ்வு அனைவரும் விரும்பும் ஒன்றாகும். ஆரோக்கிய

வாழ்வைத் தருவதில் நாம் உண்ணும் உணவும் அதில் அடங்கியுள்ள

சத்துகளுமே முதன்மை வகிக்கின்றன. ஆரோக்கியமாக இருக்க

வேண்டும் என்றால் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிவும் அவசியம்.

அதற்கு சத்தான, சமச்சீரான உணவை சாப்பிட வேண்டும். நம்முடைய

உணவில் உப்பு, சர்க்கரை, போன்றவை அளவாக இருக்க வேண்டும்,

கொழுப்புச்சத்து குறைவாக இருக்க வேண்டும். பழங்களையும்

காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். விதவிதமான

உணவு வகைகளை விரும்பி சாப்பிட வேண்டும். ரொட்டி வகைகளை

வாங்கும்போது அவை முழு தானியங்களைப் பயன்படுத்தி

தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம். முழு

தானியங்களில் அதிக ஊட்டச்சத்தும் நார்ச்சத்தும் இருக்கின்றன.

கொழுப்பு அதிகம் இல்லாத இறைச்சி, மீ ன் போன்றவற்றில் புரதச்சத்து


அதிகமாக இருக்கிறது. முடிந்தால் வாரத்திற்கு இருமுறை மீ ன்

சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளை

சாப்பிட்டால் உடல் எடை கூடும். இதை தவிர்ப்பதற்கு, சர்க்கரை

சேர்க்கப்பட்ட பானங்களை குடிப்பதற்குப் பதிலாக தண்ணரைக்


ீ குடிக்க

வேண்டும். இனிப்பு வகைகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்களை

சாப்பிடலாம். இறைச்சி, வெண்ணை,அணிச்சல், பாலாடைக்கட்டி,நெய்

போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது, அதனால்

அவற்றை சாப்பிடுவதை குறைத்துக் கொள்வத்உ அவசியம். வெண்ணெய்,

நெய் போன்றவற்றை வைத்து சமைப்பதற்குப் பதிலாக கொழுப்புச்சத்து

குறைவாக உள்ள எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம். உப்பு

உணவில் அதிகமாக இருந்தால், இரத்த அழுத்தம்

அதிகமாகிவிடும்.ஆகவே உப்பு குறைவாக உள்ள உணவு

பொருட்களையே பயன்படுத்த வேன்டும்.

எதை சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல, அதை எவ்வளவு சாப்பிடுவது

என்பதும் முக்கியம். சாப்பிடும்போது வயிறு நிறைந்தது போல்

உணர்ந்தால், அதற்குமேல் சாப்பிடக்கூடாது. சரியாக சமைக்கப்படாத,

பதப்படுத்தப்படாத உணவை சாப்பிடும்போது அந்த உணவே நஞ்சாக

மாறிவிடும். இது நச்சுணவு எனப்படும். இதுபோன்ற உணவை

சாப்பிடுவதால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர்

பாதிக்கப்படுகிறார்கள் என உலக சுகாதார அமைப்பு (WHO) சொல்கிறது.

அதுமட்டுமல்ல,நச்சுணவால் சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள்.எனவே

சத்தான உணவை உண்போம்.ஆரோக்கியமாக வாழ்வோம்.


1. ஆரோக்கிய வாழ்வைத் தருவதில் எவை முதன்மை வகிக்கின்றன?

________________________________________________________________________________

(2 புள்ளி )

2. உடலுக்கு நன்மை தரும் இருவகை உணவுகளையும் அவற்றிலுள்ள

சத்துகளையும் கூறுக.

i) ______________________________________________________________________________

ii) ______________________________________________________________________________

(2 புள்ளி )

3. கொழுப்பு வகை உணவுகளை உண்பதால் ஏற்படும் தீமைகள்


இரண்டினை எழுதுக.

i) _____________________________________________________________________________

ii) ______________________________________________________________________________

(2 புள்ளி )

(6 புள்ளிகள்)
கேள்வி 24

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள சிறுகதையை வாசித்து தொடர்ந்து வரும்

வினாக்களுக்கு விடை எழுதுக

“ ஜோன்! ஜோனி!, ” என்று ஒருமுறைக்குப் பலமுறை ரகு தன் செல்லப் பிராணியான நாய்க்குட்டியை அழைத்தான்.
ஓடி வந்த நாய்க்குட்டியை அணைத்து முத்தமிட்டான். தன் நாயிடம் விளையாடிக் கொண்டே இரண்டு வாரத்திற்கு முன்பு
நடந்ததை நினைக்கலானான்.

இரவு நிலாவின் வெளிச்சம் கிராமத்துக்கே ஒளி தந்தது. ரவியும் மாலனும் ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
“ வவ்! வவ்வவ்! ,” என்று இரு மணி நேரம் கத்திக் கொண்டிருந்த நாய்க்குட்டியின் சத்தம் ரவியின் தூக்கத்தையும்
மாலனின் தூக்கத்தையும் கெடுத்தது. திடுக்கிட்டு எழுந்த இருவரும், “ நாளை இரவுக்குள் இதை ஒரு வழி செய்திடனும்,
” என்று திட்டமிட்டனர்.

எழுந்து காலைக் கடன்களை முடிந்த ரவியும் மாலனும் முதல் வேளையாக அத்தெருவில் இருந்த நாய்க்குட்டிக்கு உணவை
கிராமத்திலுள்ள கிணறுவரை போட்டுக் கொண்டே சென்றனர். உணவின் நறுமணத்தில் ஏமாந்த நாய்க்குட்டி உணவைச்
சாப்பிட்டுக்கொண்டே கிணற்றை அடைந்தது. இதுதான் சமயம் என்று எண்ணிய இருவரும் ‘லபக்’ என்று பிடித்தனர்.
தங்களின் வலையில் மாட்டிய நாய்க்குட்டியைப் பார்த்துச் சிரித்தனர்.

‘தொப்’ என்ற ஓசை. நாய்க்குட்டி நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவர்களோ, “ இன்றோடு
தொல்லை ஒழிந்தது,” என்றனர்.அப்பக்கமாக வந்த ரகுக்கு சத்தம் செவியில் எட்டியது. “ என்ன சத்தம் ” என்று மெல்ல
சிந்தித்துக் கொண்டே சத்தம் வந்த இடத்திற்கு நடை போட்டான் .ரவியோ, “ரகு எதற்கு இங்கே வருகின்றான்?,” என்று
மாலனிடம் கேள்வி கேட்டான். திரும்பிப் பார்த்து, “ ஐயோ! பார்க்கிறானே,” என்று மாலனிடம் பதற்றத்தோடு
கூறினான். அருகில் ஒளிந்தவாறே பார்வையிட்டான் மாலன்.

“குளிருதா! இரு உன்னை வெளியே எடுக்கிறேன்.” என்று கூறிய ரகு வாளியை எடுத்து அக்கிணற்றுக்குள் நுழைந்து
நாயைக் காப்பாற்றினான். தனது நன்றியைக் கூற அந்நாய்க்குட்டி ரகுவின் கையை நக்கியது.

1. ரவியும் மாலனும் கண்விழிக்கக் காரணம் என்ன?

(2 புள்ளி )

2. இருவரும் நாயை என்ன செய்தனர்?

(2 புள்ளி )

3. நாய் எவ்விதம் தனது நன்றியைக் காட்டியது?

________________________________________________________________________________

(2 புள்ளி )
(6 புள்ளிகள்)

You might also like