You are on page 1of 2

முன்னோட்டம் 2

ஒரு ஆற்றுக்குக் கட்டிய பாலத்தினூடாகப் போய்க்கொண்டிருந்த பஸ் , திடீர் என்று


“ படார் .... " என்கிற பெரும் சத்தத்துடன் ஒரு குலுங்கு குலுங்கிப் பின் அசைந்து
வேகமாகச் சுழன்று , அங்கிருந்த சுவரில் மோதியவாறு மறுபுறம் சரியத்
தொடங்கியது . முன்பக்கமாக விழப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்ட
சிவார்ப்பணா " ஓ நோ ... " என்று பதறியவாறு தலைக்கு மேலிருந்த கம்பியை
இறுகப் பற்றி விழாதிருக்க எவ்வளவுதான் முயன்றும் , சரிந்த வேகத்திற்கு
நிலைப்படுத்தமுடியாதவளாக , தனக்கு முன்புறமாக அமர்ந்திருந்த அந்த
ராட்சஷனின் மீது முழுவதுமாக விழுந்தாள் . விழுந்த வேகத்தில் அவளுடைய
தலை பஸ்சின் இருக்கையில் அமைத்திருந்த இரும்புக் கம்பியில் நச் என்ற மோதி
பின் அவன் தலையுடன் முட்டிக்கொள்ள , அவனுடைய முகம் கச்சிதமாக அவள்
மார்பில் தஞ்சம்புகுந்திருந்தது . அப்படியே , பஸ் சரிய ,அந்த சரிவிற்கேற்ப ,
இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு சுழன்று நச்சென்று கீழே விழுந்தனர்
. கொஞ்ச நேரம் அங்கே என்ன நடந்தது என்பது ஒருவருக்குமே புரியவில்லை .
பஸ் முழுவதும் புழுதியும் புகையும் நிரம்பியிருந்தன . திடீர் என்று ஏற்பட்ட
விபத்தில் , பேச்சு மூச்சின்றி அனைவரும் ஸ்தம்பித்திருந்தது சில கணங்களே ,
அடுத்து அனைவருக்கும் நிலைமை புரிய , முன்புறமாக விழுந்திருந்தவர்கள்
அனைவரும் எழ முயன்றுகொண்டிருந்தனர் . தன் மீது பஞ்சுப்போதியென
விழுந்துகிடந்தவளை தன்னோடு இறுக அணைத்துக்கொண்டிருந்தவன் பின்
அவளுடைய தோள்களிலே கரத்தை வைத்து , தன்னிடமிருந்து பிரித்துத் தள்ள
அவன் செய்த முயற்சிகள் எதுவும் பயனளிக்காமல் போக , எழ முடியாமல் அவன்
அப்படியே இருக்க , கொஞ்ச நேரம் , இருவரும் ஒருவர் மீது ஒருவராக விழுந்து
கிடந்தனர் . முதலாவதாக சுய நினைவு பெற்றவன் அந்த இளைஞன்தான் . "
ஹலோ மிஸ் ... கான்யு கெட் அப் ... ? ” என்றான் எரிச்சலையும் கோபத்தையும்
மறைக்காத குரலில் கூறுவது சிவார்ப்பணா விற்குக் கேட்கவே இல்லை .
அவள்தான் அடிப்பட்ட வேகத்தில் மயக்கத்தில் இருந்தாளே . " ஹலோ மிஸ் ...
உங்களைத்தான் ... " என்று அவளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு ,
உலுப்பியவாறு அழைத்துப் பார்த்தான் . அப்போதும் அவளிடம் சிறு அசைவும்
இருக்கவில்லை . உடனே அவளுடைய தோள்களைப் பற்றித் தூக்கிப் பார்த்தான் .
அவள் விழிகள் மூடிக்கிடந்தன . நெற்றி புடைத்திருந்தது . அப்படியே அருகே
சரித்து அவள் தொடைகளின் இரு பக்கமும் தன் கால்களைப் போட்டு , வலது
முழங்கால் தரையில் பதிந்திருக்கவும் , இடது கால் மடிந்து , கால்பாதம் தரையில்
பதிந்திருக்கவும் , அவளை நோக்கிக் குனிந்தான் . " ஹே வேக்கம் ... " என்று
அவளுடைய கன்னத்தைத் தட்டிப் பார்த்தான் மூடியிருந்த விழிகளில் எந்த
அசைவும் இருக்கவில்லை. யோசனையாக அவள் கழுத்தில் சுண்டுவிரலையும்
நடுவிரலையும் வைத்து நாடித்துடிப்பைப் பரீட்சித்துப் பார்த்தான் . மெல்லியதாக
அது துடிக்க , தலையை அசைத்து வாயைக் குவித்து மெல்லியதாகப் பெருமூச்சு
விட்டவன் , மீண்டும் அவள் கன்னத்தைத் தட்டி , " ஹலோ மிஸ் ... டிட் யு ஹியர் மி ...
ஹலோ ... " என்று அவள் வயி ரம் பதித்து அசைத்துப் பார்த்தான் .

You might also like