You are on page 1of 3

வேந்தன் 1 :

உலகின் தலைச்சிறந்த நகரங்களில் ஒன்றானது இலண்டன்


பெருநகரம்.ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட
குடித்தொகையையும் பல அடுக்குமாடி கட்டிடங்களையும்
குடியிருப்புகளையும் கொண்டது இந்த இலண்டன் மாநகர் .
இலண்டனில் பல வகையான மக்களுடன் , பல
பண்பாடுகளும் , சமயங்களும் நிலவுகின்றன .
இந்நகரத்தின் எல்லைக்குள் 300 க்கும் மேற்பட்ட மொழிகள்
பேசப்படுகிறது .
இலண்டனில் நான்கு உலகப் பாரம்பரியக் களங்கள்
அமைந்துள்ளன . இவை , இலண்டன் கோபுரம் , பழங்கால
கிரீனிச் குடியிருப்புக்கள் ராயல் தாவரவியல் பூங்கா
வெசுட்மின்சுட்டர் அரண்மனை , வெசுட்மின்சுட்டர் மடாலயம்
, புனித மார்கிரட் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய
பகுதி என்பனவாகும் . இலண்டன் பாதாளத் தொடர்வண்டி
வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான
பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும் .
இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் மாநகரம்
உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாகத்
திகழ்கின்றது.ஐரோப்பாவின் 500 பெரிய நிறுவனங்களில்
100 இலண்டனில் உள்ளன . அத்தோடு இலண்டன் ஒரு
முக்கியமான உலக நகரமாக இருப்பதுடன் , ஐரோப்பாவில்
கூடுதல் நகரத்துக்குரிய மொத்த உள்ளூர் உற்பத்தியுடன்
உலகின் மிகப் பெரிய நிதி மையமாக செயல்படுகிறது .
அனைத்திலும் முதன்மையாக திகழும் இங்கிலாந்து அரசு
பொருளாதாரத்திலும் தங்களது நிலையை
உயர்த்திக்கொள்ள வேண்டி பல்வேறு முயற்சிகளை
செய்துக்கொண்டிருந்தது .
வேதியியல் மற்றும் மருந்துவ துறைகளிலும் , மேலும்
தொழில்நுட்பத்திலும் முதன்மையாகவும்
விண்வெளித்துறை , ஆயுதத் தொழிற்சாலைகள்
போன்றவற்றில் முன்னணியில் உள்ள இங்கிலாந்து நகரம்
உணவு துறையிலும் தங்களது முதலிடத்தை
நிலைநாட்டவேண்டி ஒரு முக்கிய பிரமானத்தைக் கொண்டு
வந்துள்ளது.அது உலகின் உணவுத்துறை பொருளாதாரத்தில்
முன்னிலையில் இருக்கும் நாடுகளை ஆக்கிரமித்து அங்கு
உள்ள அவர்களது உணவுப்பொருள் ஆகாரத்தை அழித்து
தங்களது உணவுப்பொருள்களை அறிமுகப்படுத்தி
தங்களது பொருளாதாரத்தை உயர்த்த நயவஞ்சகமாக
இங்கிலாந்து அரசு திட்டம் தீட்டியிருந்தது . அதை ஐக்கிய
நாடுகளின் தலைமை செயலகத்தை தன் கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டுள்ள அமெரிக்க ஜனநாயக அரசிற்கு
தெரியாத வகையில் ரகசிய திட்டம் ஒன்றை தீட்டி அதை
செயல்படுத்த முனைந்துக்கொண்டிருந்தது இங்கிலாந்து
அரசாங்கம் . ( இவையனைத்தும் கற்பனை ) அதன்பலனாய்
இங்கிலாந்து அரசின் பார்வை இந்தியாவின் மீது
திரும்பியிருக்க , இங்கு அவர்களது முதல் அழிக்கும் படலம்
விவசாயத்தின் மீதும் இரண்டாவது அழிக்கும் படலம் பால்
உற்பத்தியின் மீதும் திரும்பியிருந்தது .

You might also like