Professional Documents
Culture Documents
பேப்பர் தட்டு தயாரிப்பில் பிரமாத லாபம்
பேப்பர் தட்டு தயாரிப்பில் பிரமாத லாபம்
கட்டமைப்பு: இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை, தேவையான பேப்பர்,
உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின் இணைப்பு
(ரூ.3 ஆயிரம்). முதலீடு: பேப்பர் பிளேட் இயந்திரம் 1 (ரூ.1.4 லட்சம்), பேப்பரை 5, 6, 7, 8, 9,
10, 12 ஆகிய இஞ்ச் அளவுகளில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த
அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ.54 ஆயிரம்) என மொத்தம் முதலீடு ரூ.1.94
லட்சம்.
உற்பத்தி பொருட்கள்: பாலிகோட் ஒயிட் பேப்பர் (திக் ரகம் டன் ரூ.72 ஆயிரம், நைஸ் ரகம்
ரூ.40 ஆயிரம்) சில்வர் திக் (டன் ரூ.38 ஆயிரம்), சில்வர் நைஸ் (டன் ரூ.30 ஆயிரம்), புரூட்டி
பேப்பர் திக் (டன் ரூ.50 ஆயிரம்), நைஸ் ரகம் (ரூ.38 ஆயிரம்) மற்றும் பேக்கிங் கவர், லேபிள்,
செலோ டேப். கிடைக்கும் இடங்கள்: பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட
பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசி, சில்வர்
நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை கேரளாவிலும் மலிவாக
கிடைக்கின்றன.
வருவாய்: ஒரு பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் கிடைப்பதால் தினசரி லாபம் ரூ.2
ஆயிரம். 25 நாளில் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். விற்பனை வாய்ப்பு: கேட்டரிங்
நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர்
பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும்
சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர்
கிடைக்கும்.
தயாரிப்பது எப்படி?
கட் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால்
பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும்.
பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு
உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.
மின்னஞ்சல் |
0
0
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
? ? ?? ? ? ? ? ? ?? ?? ? ??