You are on page 1of 2

அச்சமும், அவமதிப்பும்

அச்சம், அவமதிப்பு இரண்டும் மனிதனின் இயல்பு நிலையை முடக்கி, ஒருவனை முற்றிலும் செயல்
இழக்க வைக்கும் சக்திகள். பயத்தில், மனம் உறைந்து விடுகிறது. அவமதிப்பில் கூனிக் குறுகி,
ஒடுங்கி அடங்கிப் போகிறது. இவை நம் திறமைகளில் தேக்கங்களையும், முன்னேற்றங்களில்
முட்டுக்கட்டைகளையும் இடுகின்றன . நம் தன்னம்பிக்கையும் தன்மானமும் தடம் புரள்கின்றன,
என்றால் மிகையாகாது. நாம் நமது அச்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தினால் , வாழ்க்கை எனும்
போர்க் களத்தில் வெற்றி வாகை சூடி வலம் வரலாம்...

Fear, not fear. There's nothing to fear but fear itself…

So fear is the key...one should overcome.

An injury is much sooner forgotten than an insult.


Insults should be well avenged or well endured.
The biggest slap to your enemy is your success.

தயக்கமெனும் தடைக்கல்

பலரின் திறமைக் கதவுகள் திறக்க பெரும் தடையாக இருப்பது தயக்கம் என்கிற தாழ்ப்பாளே. தாழ்வு
மனப்பான்மை, கடந்த கால தோல்விகள், முன்னெடுப்பின் விளைவுகளைப் பற்றிய அச்சம், தம்
திறமையை பற்றிய ஐயம் ஆகியவையே தயக்கத்தின் ஊற்றுக்கண்கள் .

அதட்டி, அடக்கி வளர்க்கப்பட்ட சூழல், சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என


தயக்கத்துக்கு பல காரணிகள் .

சரித்திரம் படைக்கப் போகும் அந்த தருணத்திற்காக, உலகமே உறங்காமல் கண்விழித்துக்


காத்திருந்தது.

அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கி விட்டது. விண்கலத்தின் முதன்மை விமானி ஆல்ட்ரின்


விமானப் படையில் பணி புரிந்து நீண்ட அனுபவமிக்க சிறந்த விமான ஓட்டி. விண்கலத்தின் சக
விமானி ஆம்ஸ்ட்ராங்கோ கப்பல் படையில் விமானம் ஓட்டியவர். வான்வெளி மையக் கட்டுப்பாட்டு
கேந்திரம், விமானி ஆல்ட்ரினை நிலவில் இறங்க, உத்தரவிடுகிறது. ஆல்ட்ரின் ஒரு சில விநாடிகள்
ஏனோ தயங்குகிறார். உடனே கடடுப்பாட்டு மையம், துணை விமானியை நிலவில் இறங்க
ஆணையிடுகிறது . ஏதும் தயக்கமுமின்றி அக்கணமே இறங்கி, நிலவில் கால் பதித்த முதல் மனிதன்
என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை நீல் ஆம்ஸ்ட்ராங் சாதிக்கிறார்.

திறமையிருந்தும் தயக்கத்தினால் தடுமாறுகின்றனர் பலர். தன்னம்பிக்கை , தணியாத உற்சாகம் என்ற


எரிமலைகளுக்கு முன் தயக்கம் என்ற புல் ஒருக்காலும் முளைக்காது. நேர்மறை எண்ணங்கள் ,
தோல்வி கண்டு துவளாமை, விடாமுயற்சி இவற்றைக் கொண்டு எண்ணிய இலக்குகளை
திண்ணமாக எட்டி வாழ்க்கையில் உயரலாம்.

நீட்டிய கரங்களை பற்றிக் கொள்ளவும், தேவை உள்ளவருக்கு உதவிக் கரம் நீட்டவும் பழகிக்
கொள்ளுங்கள்.

இதிகாசங்களில் அனுமன், அர்ச்சுனன், மற்றும் தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி ஆகியோரும்,


தத்தம் தயக்கங்களிலிருந்து மீண்டு, வெற்றி கண்டவர்கள் தாம். பிறகென்ன...

நெய்ய ஆரம்பித்தால் நூலை கடவுள் தருவார்...


முதலில் ஆற்ற விழையும் கடமையில் அர்ப்பணிப்பு. அடுத்து சிறிதும் காலம் தாழ்த்தாமை. இடையறாத
உந்துதல், தொடர்ந்து விடை தேடும் முயற்சி.
காலம் யாருக்காகவும், ஒருபோதும் காத்திருப்பதில்லை.

தயக்கத்தால் இழந்த சந்தர்ப்பங்கள் ,


தவறிய இலக்குகள் , விடுபட்ட உறவுகள், ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் எத்தனை , எத்தனையோ?.

திறவாத கதவுகள் இல்லை. தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும். எவ்வளவு பெரிய


பூட்டானாலும் திறக்கும் சாவி சிறிதே. முயன்றால் அவிழ்க்க இயலாத முடிச்சுகள் இல்லை.

எல்லையில்லாதது வானம். சிறகடித்துப் பறக்க கற்றுக்கொள்ளுங்கள் . நாளை நமதே!.

A moments hesitation can stop us from our greatest victory..

Doubt kills more dreams than failure ever will.

Doubt your doubts before you doubt your beliefs.

சற்றே சிந்திப்போம்…

படங்கள் உதவிய கூகுளுக்கு நன்றி.

You might also like