You are on page 1of 1

அன்பிற்குரிய Ruj.

Tuan :
பண்டார் செகாமட் தமிழ்பப் ள்ளி Ruj.Kami :
பெற்றோர்/பாதுகாவலர்கள், தேதி : 01/10/2020

ஹாக்கி விளையாட்டுப் பயிற்சி


வணக்கம். இவ்வறிக்கையின் வழி தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இம்மாத இறுதியில் பத்து
பஹாட்டில் மாநில ரீதியில் மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. அதில் கடந்த ஆண்டைப்
போல பயிற்சி கொடுத்து சிறந்த விளையாட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளோம்.

2. எனவே, கீழ்க்காணும் வகையில் நமது பள்ளியில்மாணவர்களுக்கு ஹாக்கி விளையாட்டுப் பயிற்சி


நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். முதற்கட்டமாக
சனிக்கிழமைகளிலும் பின்னர், நிலைமைக்கேற்ப மாலை நேரத்திலும் பயிற்சி நடத்த திட்டம் உள்ளது.

3. பெற்றோர்களே, இந்தப் பயிற்சித் திட்டம் செவ்வனே நிறைவேற மாணவர்களுக்குப் போக்கு வரத்து


சம்பந்தமாக தாங்கள் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது எங்கள் அவா.

திகதி : ஆரம்பம் (3/10/2020) சனிக்கிழமைகளில்


இடம் : பண்டார் செகாமட் தமிழ்ப்பள்ளி.
நேரம் : காலை 08.00 மணி - காலை 10.00 வரை
உடை : JDT t-shirt/spots shoe

மிக்க நன்றி, வணக்கம்

______________________________
(திரு.கோவிந்தன் பெருமாள் )
தலைமையாசிரியர்
பண்டார் செகாமட் தமிழ்பப் ள்ளி.

நகல்: 1.பெ.ஆ.சங்கத் தலைவர்


2.பள்ளிக் கோப்பு

“STBS ALWAYS THE BEST”

You might also like