You are on page 1of 3

*அதிகாலைச் செபம்.

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடத்திலே


நின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், எங்கள் சர்வேசுரா, பிதாவுடையவுஞ்
சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே. ஆமென்.

தானாய் அனாதியுமாய், சரீரமில்லாதவருமாய், அளவில்லாத சகல நன்மைச்


சுரூபியுமாய், ஞானத்தினாலேயும் பலத்தினாலேயுங் காரணத்தினாலேயும்
எங்கும் வியாபித்திருக்கிறவருமாய், எல்லாத்திற்கும் ஆதிகாரணமுமாய்,
யாவர்க்குங் கதியுமாய், பொல்லாதவர்களை நரகத்திலே தள்ளி நல்லவர்களுக்கு
மோட்சம் கொடுக்கிறவருமாகிய பிதாச் சுதன் இஸ்பிரீத்துசாந்து என்னும்
மூன்றாட்களாயிருந்தாலும் ஒரே சர்வேசுரனாயிருக்கிற என் ஆண்டவரே,
தேவரீர் மாத்திரம் மெய்யான தேவனாயிருக்கிறபடியினாலே உமக்கு
மாத்திரஞ் செய்யத்தக்க தேவாராதனையை உமக்கே செய்கிறேன்.

சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்ட புத்தியுடைத்தான வஸ்துகளுக்குள்ளே


மேலானவளாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியாயே, நீர் மோட்சவாசிகள்
என்னப்பட்ட யாவரையும் பார்க்க எண்ணப்படாத நன்மைகளினாலே
அதிசயித்துச் சர்வலோகத்துக்கும் இராக்கினியாயிருக்கிறதினாலேயும்,
எப்பொழுதும் பரிசுத்த கன்னியாஸ்திரியாயிருந்து மெய்யான சர்வேசுரனும்
மெய்யான மனுஷனும் ஒன்றான சேசுநாதருக்குத் திவ்விய
மாதாவாயிருக்கிறதினாலேயுஞ் சகலமான அர்ச்சியசிஷ்டர்களுக்குஞ்
செய்யத்தக்க சாதாரண ஆராதனையைப் பார்க்க உமக்கு மாத்திரமே விசேஷ
ஆராதனை செய்கிறேன்.

சர்வேசுரா சுவாமீ , தேவரீர் என்னாத்துமத்தையுஞ் சரீரத்தையும்


ஒன்றுமில்லாதிருக்கையிலே உண்டாக்கி, இந்த ஆத்துமமுஞ் சரீரமும்
பிழைக்கிறதற்கு எண்ணப்படாத நன்மைகளைத் தந்தருளினதினாலே உமக்கே
தோத்திரம் உண்டாகக்கடவது.

பின்னையுந் தேவரீர் இந்தப் பூலோகத்திலே எனக்காக வந்து மனுஷாவதாரஞ்


செய்து பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை
அடைந்ததினாலே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
மேலும் உம்முடைய திருமரணத்தினாலே வந்த அளவில்லாத பலனை
எனக்கு ஞானஸ்நானத்தின் வழியாகக் கொடுத்தருளின ீரே, சுவாமீ உமக்கே
தோத்திரம் உண்டாகக்கடவது.

ஞானஸ்நானம் பெற்றபிற்பாடு நான் அநேகமுறை பாவங்களைச் செய்திருக்க


அந்தப் பாவங்களையெல்லாம் பாவசங்கீ ர்த்தன மூலமாகப் பொறுத்து, தெய்வக

போசனமாகிய நற்கருணையுங் கொடுத்து, எனக்கொரு காவல் சம்மனசையுங்
கட்டளையிட்டு, இவை முதலான எண்ணிக்கைக்குள் அடங்காத சகாய
உபகாரங்களைச் செய்து கொண்டு வருகிறதினாலேயும், விசேஷமாய் இந்த
இராத்திரி காலத்திலே என்னாத்துமத் துக்குஞ் சரீரத்துக்கும் யாதொரு பொல்
லாப்பு இல்லாமற் காத்திரட்சித்ததினாலே யும், என்னாற் கூடியவரையில் நன்றி
யறிந்த மனதோடு தேவரீரை வணங்கித் தோத்திரஞ் செய்கிறேன். சுவாமீ
உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.

சர்வத்துக்கும் ஆண்டவரே, தேவரீர் என் சரீரத்தையும் பஞ்சேந்திரியங்களையும்


அவை களிலே உண்டான தத்துவங்களையும் என் ஆத்துமத்தையும்
அதிலேயுள்ள புத்தி நினைவு மனதென்கிற மூன்று புலன்களாகிய உள்
ளிந்திரியங்களையும் எனக்குக் கொடுத்தருளி ன ீரே. இவை எல்லாந்
தேவரீருக்குப் பிரியமாயிருக்கிறதற்குச் சேசுநாதர் செய்த
புண்ணியங்களோடேயுஞ் சகல அர்ச்சியசிஷ்டர்களுடைய தேவ வசீகரமான
காணிக்கைகளோடேயுந் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன்.
ஆனபடியினாலே இப்பொழுது துவக்கி மரணபரியந்தம் நான் செய்யும் தரும
காரியங்கள் எல்லாத்தையுந் தேவரீருக்குத் தோத்திரமாக ஒப்புக்கொடுக்கிறேன்.

சர்வேசுரா சுவாமி, தேவரீருக்கு அளவில்லாத பலமும் மட்டில்லாத ஞானமும்


அளவறுக்கப்படாத கிருபாகடாட்சமும் உண்டாயிருக்கிறபடியினாலே
சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து, அடியேனுக்குந் திருச்சபைக்குஞ்
சகலமான சனங்களுக்கும் வேண்டிய சகாயங்களைச் செய்கிறதுமல்லாமல்
விசேஷமாய் நான் இன்று பாவங்களைச் செய்யாமற் புண்ணிய வழியிலே
சுமுத்திரையாய் நடக்கத் தக்கதாகவும் எனக்கு அநுக்கிரகஞ் செய்தருளும்
சுவாமி.

கர்த்தர் கற்பித்த செபம், மங்களவார்த்தை செபம், பத்துக் கற்பனை,


திருச்சபையின் கட்டளை, உத்தம மனஸ்தாப மந்திரஞ் சொல்லவும்.
சர்வேசுரா சுவாமீ , தேவரீர் அருளி செய்த வேத கற்பனையின்படியே அடியேன்
சுமுத்திரையாய் நடக்கத் துணிந்திருக்கிறபடியினாலே என்னிடத்தில் இருக்கிற
ஆங்காரங் கோபம் முதலிய விசேஷ துர்க்குணங்களை நீக்கி இன்று அநேக
தருமங்களைச் செய்து வாக்கினாலேயுங் கிரிகையினாலேயுந் தாழ்ச்சி
பொறுமை கற்பு முதலிய புண்ணியங்களை அடையப் பிரயாசைப்படுவேன்.

இவையெல்லாம் என்னுடைய பலத்தினாலே கூடாதே, பரிசுத்த தேவ மாதாவே,


எனக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். என் காவலான
சம்மனசானவரே, என்னைப் புண்ணிய நன்னெறியில் நடப்பித்துக் காத்தருளும்.

நான் பேர் கொண்டிருக்கிற அர்ச்சியசிஷ்டரே, உம்மைப்போல நான்


இவ்வுலகத்திற் சர்வேசுரனைப் பத்தியோடு சேவிக்கவும் உம்மோடு அவரைப்
பரலோகத்திலே தரிசித்துத் துதிக்கவுந் தேவகிருபை எனக்குக்
கிடைக்கும்படியாக மன்றாடிக்கொள்ளும்.

*ஆமென்.*

You might also like