You are on page 1of 4

எது வேகமான கார்???

கார் ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுவது எது வேகமான கார்


என்பது தான்….

இதுவரை புகாட்டி chiron ஆ koenigsegg agerra வா என பரோட்டா சூரி


சிவகார்த்திகேயன் போல அடித்துகொண்டிருக்கயில் அப்படி போய்
விளையாடுங்க பா என்று வந்துள்ளது SSC இன் tuatara என்ற கார்…

ஆம், இதுவரை புகாட்டி மற்றும் அகெரா வைத்திருந்த ரெக்கார்டு


அனைத்தயும் முறியடித்து உலகின் அதிவேக ஹைப்பர் கார் எனும்
பட்டத்தை பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இருந்த உலகின் அதிவேக கார் எனும் பட்டத்தை


புகாட்டி சிரோன் இடம் இருந்து தட்டிபரித்துள்ளது இந்த Tuatara.

SSC - செல்பி ஸ்போர்ட்ஸ் கார் எனும் வட அமெரிக்காவை சே்ந்த நிறுவனம்


உருவாகியுள்ள tuatara எனும் கார் இந்த சாதனை ஓட்டத்தை நிகழ்த்தியது.
அதுவும் ஒரு பொது வழி சாலையில் நிகழ்த்தி உள்ளது, முன்னதாக இதே
சாலையில் 2017 ஆம் ஆண்டு koenigsegg agerra கார் மணிக்கு 447 கிமீ வேகம்
சென்றது, பின்னர் புகாட்டி அச்சாதனையை முறியடித்து மணிக்கு 490.58 கிமீ
சென்று உலகின் வேகமான கார் எனும் பெருமையை பெற்றது.

தற்பொழுது அந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து ssc tuatara


மணிக்கு அதிகபட்சமாக 532.93 கிமீ வேகம் சென்று உலகின் வேகமான கார்
எனும் பெருமையை பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் நேவெடா மாகாணத்தில் உள்ள


லோஸ்வேகஸ் இல் நடந்த ஓட்டத்தில் இந்த காரை பிரிட்டன்னை சேர்ந்த
ஒலிவர் வெப் என்னும் ரேஸ் கார் டிரைவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

அவர் அதிகபட்சமாக 532.93 கிமீ வேகத்தையும், இரு வழி பாதையில்


தோராயமாக மணிக்கு 508.73 கிமீ எனும் உட்சகட்ட வேகத்தை எட்டியதன்
மூலம் இது சாத்தியமானது.

Ssc tuatara காரை பற்றி பார்ப்போம்


Tuatra பெயரே வித்தியாசமாக உள்ளது இல்லையா, நியூசிலாந்து காட்டில்
வாழும் ஒரு அரிய வகை விலங்கின் பெயரை அடிப்படையாக கொண்டு
உள்ளது.

இந்த காரானது கார்பன் பைபர் மொனாகாக் சாசிஸ் மீ து அழகாக


வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் நெல்சன் ரேசிங் என்ஜின் உருவாக்கிய 5.9 லி
இரட்டை டிர்போ கொண்ட v 8 என்ஜின் உள்ளது இது அதிகபட்சமாக 1750
குதிறைதிரணையும் 1818 நியூட்டன் மீ ட்டர் டார்ககையும் வெளிப்படுத்தும்
சக்திவாய்ந்த என்ஜின் ஆகும். இதனுடன் CIMA நிறுவனத்தின் 7 ஸ்பீடு
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்ந்து,பேர்பார்மன்ஸ் தெரிக்கவிடுகிறது.இந்த
காரின் அதிகபட்ச எடை 1247 கிலோ ஆகும்.

2011 ஆம் ஆண்டு காட்சி படுத்தபட்ட ultimate aero எனும் காரின் உருவக்கமே
இந்த tuatara கார் ஆகும்.

இந்த காரினை ஜேசன் கேஸ்றியோடா உருவாக்கியுள்ளார், இவர்


பினின்பரினா டிசைன் இன் முன்னாள் டிசைனராக பணியாற்றியவர்.

சுமார் இந்தியமதிப்பில் 14 கோடி ரூபாய் விலையில் விற்பனைக்கு


வந்துள்ளது. இது மொத்தம் 12 கார் மட்டுமே லிமிடெட் எடிஷன் ஆக
உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே விற்பனை ஆகி விட்டது என்று
ssc நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like