You are on page 1of 1

 

 வணிகம் என்பது என்ன? ஒரு பொருள் அல்லது சேவையை இலாப நோக்கோடு விற்பனை
செய்வதும், நுகர்தற் பொருட்டு அப்பொருள் அல்லது சேவையைப் பணம் கொடுத்து வாங்குவதும்
சேர்ந்து ‘வணிகம்’ எனப்படுகிறது. இந்த வணிக நடவடிக்கை இருவருக்கிடையே நேருக்கு நேர்
நடைபெறலாம். அப்படி நடைபெறுமானால் பொருளை வாங்குவதும் பணத்தைக் கொடுப்பதும்
உடனுக்குடன் நடந்து முடிந்து விடுகின்றன. வேறெந்தத் தகவல் பரிமாற்றத்துக்கும் தேவையில்லாமல்
போகிறது. விற்பவரும் வாங்குபவரும் வெவ்வேறு இடங்களில் இருக்கும்போது இருவருக்கும்
இடையே பொருளை வாங்குவதற்கான விழைவைத் தெரிவித்தல், பொருளின் விலையைத்
தெரிவித்தல் போன்ற தகவல் பரிமாற்றங்களோடு பொருளுக்கான விலையைச் செலுத்துகின்ற பணப்
பரிமாற்றமும் நடைபெற்றாக வேண்டும். இப்பரிமாற்றங்கள் அஞ்சல் வழியாகவோ, ஆள் மூலமோ,
தொலைபேசி வழியாகவோ நடைபெற்றால் அது மரபுவழி வணிகம் ஆகும். கணிப்பொறிப்
பிணையங்கள் வழியாக மின்னணுத் தகவல் வடிவில் நடைபெறுமாயின் அது ‘மின்வணிகம்’
எனப்படுகிறது. யார் யாருக்குடையே வணிகம் நடைபெறுகிறது என்பதன் அடிப்படையிலும்,
எத்தகைய கணிப்பொறிப் பிணையம் வழியாகத் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது என்பதன்
அடிப்படையிலும் மின்வணிகத்தை வகைப்படுத்தலாம். இத்தகைய வகைப்பாடுகள் பற்றியும்,
மின்வணிகத்தில் பணம் செலுத்துகை எந்தெந்த வடிவங்களில் நடைபெறுகிறது என்பது பற்றியும்
இப்பாடப் பிரிவில் அறிந்து கொள்வோம்.்

You might also like