Buku Teks Digital KSSM - Bahasa Tamil Tingkatan 5

You might also like

You are on page 1of 40

KURIKULUM STANDARD SEKOLAH MENENGAH

தமிழ்மொழி
BAHASA TAMIL
ð®õ‹
TINGKATAN

ஆசிரியர்கள்் / PENULIS
க�ோபாலன் முத்தையா / GOPALAN MUTIHAH
செல்வஜ�ோதி இராமலிங்கம் / SELVAJOTHI RAMALINGAM
சரவணன் இராமச்சந்திரன் / SARAVANAN RAMACHINDRAN
பதிப்பாசிரியர்கள்் / EDITOR
நாராயணசாமி குப்புசாமி / NARAYANASAMY KUPPUSAMY
மகேஸ்வரி சண்முகம் / MAGESWARY SHUNMUGAM
ப�ொறுப்பாசிரியர் / EDITOR AM
சகாதேவன் எட்டியன் / SAHADEVAN YETIAN
வடிவமைப்பாளர் / PEREKA BENTUK
அமலன் சகாதேவன் / AMALAN SAHADEVAN
ஓவியர்கள்் / ILUSTRATOR
பெர்னாண்டோ இக்னேசியஸ் / FERNANDO IGNATIUS
சந்திரன் கிருஷ்ணன் / SANDRAN KRISHNAN

UMA PUBLICATIONS
2020
i
KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

No Siri Buku : 0096 PENGHARGAAN


KPM-2020 ISBN 978-967-434-XXX-X - 0096 Penerbitan buku teks ini melibatkan kerjasama
Cetakan Pertama 2020 banyak pihak. Sekalung penghargaan dan
© Kementerian Pendidikan Malaysia terima kasih ditujukan kepada semua pihak
yang terlibat:
Hak Cipta Terpelihara. Mana-mana bahan dalam • Jawatankuasa Penambahbaikan
buku ini tidak dibenarkan diterbitkan semula, Pruf Muka Surat, Bahagian Sumber
disimpan dalam cara yang boleh dipergunakan dan Teknologi Pendidikan,
lagi, ataupun dipindahkan dalam sebarang Kementerian Pendidikan Malaysia.
bentuk atau cara, baik dengan cara bahan
elektronik, mekanik, penggambaran semula • Jawatankuasa Penyemakan
mahupun dengan cara perakaman tanpa Pembetulan Pruf Muka Surat,
kebenaran terlebih dahulu daripada Ketua Bahagian Sumber dan Teknologi
Pengarah Pelajaran Malaysia, Kementerian Pendidikan, Kementerian
Pendidikan Malaysia. Perundingan tertakluk Pendidikan Malaysia.
kepada perkiraan royalti atau honorarium. • Jawatankuasa Penyemakan Naskhah
Sedia Kamera, Bahagian Sumber
Diterbitkan untuk Kementerian Pendidikan dan Teknologi Pendidikan,
Malaysia oleh: Kementerian Pendidikan Malaysia.
UMA PUBLICATIONS
85, Jalan Perhentian, Sentul, • Pegawai-pegawai Bahagian Sumber
51100 Kuala Lumpur, dan Teknologi Pendidikan dan
Malaysia. Bahagian Pembangunan Kurikulum,
Tel : 03-40411617 Kementerian Pendidikan Malaysia.
Faks : 03-40440441 • Jawatankuasa Peningkatan Mutu,
e-mel : umapublications@gmail.com Uma Publications.

Reka Letak dan Atur Huruf : Semua pihak yang terlibat secara
UMA PUBLICATIONS langsung atau tidak langsung dalam usaha
Muka taip teks : UNI-Nisha menjayakan penerbitan buku ini.
Saiz taip teks : 13 poin

Dicetak Oleh :
Percetakan Advanco Sdn.Bhd. (45169-K),
No.19, 21 & 23, Jalan Segambut Selatan,
51200 Kuala Lumpur,
Malaysia.

ii
உள்ளடக்கம்
1

த�ொகுதிகள் முன்னுரை iv
மொழிக்கூறுகளுக்கான படச்சின்னங்கள் v
சிந்தனை வரைபடம் vi
த�ொகுதிப் படர்ச்சி vii

1 உடல் நலம் 1
2 தகவல்யுக அடிச்சுவடுகள் 11
3 குடும்பத்தில் இளைஞர்கள் 21
4 இலக்கிய வேர் 31
5 ப�ொருள் வளர்க்கும் ப�ொருளகம் 41
6 ம�ொழியும் மனிதனும் 51
7 வாழ்வு நெறி 61
8 இலக்கியச் சுவை 72
9 ப�ொருளியல் உலகு 81
10 பூவுலகின் ச�ொர்க்கம் 91
11 இல்லற இன்பம் 101
12 சமூகத்தில் நாம் 111
13 சுற்றுச்சூழல் 121
14 நாடகக் கலை 131
15 இலக்கிய உலா 141
16 குடும்பவியல் மேம்பாடு 151
17 வங்கியியல் 161
18 வனப்புமிகு வரலாறு 171
19 பயணம�ோ பயணம் 181
20 கவின்மிகு மலேசியா 191
21 ப�ொருளாதாரம் 201
22 வாழ்வும் இலக்கியமும் 211

iii
முன்னுரை
1

இடைநிலைப் பள்ளிகளில் ஐந்தாம் படிவத்தில் தமிழ்மொழியைத் தேர்வில் ஒரு பாடமாகத் தெரிவு செய்ய
விழையும் மாணவர்களை மனத்தில் க�ொண்டு இப்பாடநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப மாணவர்களின்
தமிழ்மொழி ஆளுமையையும் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பதே இந்நூல் ஆசிரியர்களின்
ந�ோக்கமாகும். இவற்றிற்கு ஏற்பப் பாடப் பகுதிகளின் அளவு அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் அடங்கியுள்ள
பனுவல்கள் பன்முகத் தன்மை க�ொண்டவையாக உள்ளன. எஸ்.பி.எம். தேர்வினை முடித்த மாணவர்கள்
த�ொடர்ந்து தங்களின் கல்வியைத் த�ொடர அல்லது வேலை வாய்ப்புகளைத் தெரிவு செய்ய உதவும் வகையில்
பனுவல்கள் அமைந்துள்ளன.

மேலும், தமிழ்மொழியைப் பயில விரும்பும் மாணவர்கள், மனமகிழ்ச்சியுடனும் ஆர்வமுடனும் தமிழைக்


கற்ற வேண்டும் என்பதே இந்நூல் ஆசிரியர்களின் விருப்பமாகும். எனவே, இதற்கேற்பவும் பாடங்களும்
நடவடிக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்நூல் மேல் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் அடைய வேண்டிய கல்வி இலக்குகள், குறிப்பாக,
தமிழ்மொழி சார்ந்த இலக்குகள், ஒட்டு ம�ொத்தக் கல்வியியல் க�ோட்பாடுகள் மற்றும் சிந்தனை ஆற்றல்கள்
ப�ோன்றவற்றைக் கவனத்தில் க�ொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களின் அறிவு, சிந்தனை
முதிர்ச்சிகளுக்குச் சவாலாக அமையும் வண்ணம் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 21ஆம் நூற்றாண்டின் கல்வியியல் கூறுகளான, த�ொடர்புறவுத் திறன், உயர்நிலைச் சிந்தனைகள்,


ஆக்கச் சிந்தனைகள், அலசி ஆராயும் திறன் ப�ோன்றவையும் கவனத்தில் க�ொள்ளப்பட்டுள்ளன. இந்நூலில்
தனித்துக் கற்கவும், இணைந்து கற்கவும், கூடிக் கற்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழிக்கான பாடநூல் என்பதனால், தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த


கூறுகள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. ம�ொழியணி மற்றும் இலக்கணக் கூறுகள் பாடத்திட்ட
வரையறையைப் பின்பற்றிச் சற்று ஆழமாகப் பார்க்கப்பட்டுள்ளன. அதே வேளையில், வங்கித்துறை,
விவசாயம், நாட்டு இயல், தற்கால அறிவியல் த�ொழில்நுட்பம், சமூகம் சார்ந்த கூறுகள் பாடப்
ப�ொருள்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இப்பாடநூல் 22 த�ொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்நூலின் சிறப்பு அம்சமாக, நிகர்நிலை கற்றலில்


ஈடுபடுதல்; இணையத்தளத்தைப் பயன்படுத்துதல்; ஜாப்பரைப் பயன்படுத்துதல்; காண�ொலிகளைப்
பயன்படுத்துதல் ப�ோன்றவையும் இணைக்கப்பட்டுள்ளன.

இவற்றை நன்கு பயன்படுத்தி, ஐந்தாம் படிவத்தில் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் தமிழ் கற்று,
சிறந்த தேர்ச்சியினைப் பெற ஆசிரியர்கள் துணை நிற்பர் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். இறுதியாக,
இவ்வாய்ப்பினை நல்கிய கல்வி அமைச்சுக்கு எங்களின் நன்றி உரித்தாகுக.

நன்றி.
நூலாசிரியர்கள்

iv
1
மொழிக்கூறுகளுக்கான படச்சின்னங்கள்

ü£Šð˜ (Zappar) â‹


செவிமடுத்திடுக
ð£ì‹ ªî£ì˜¹¬ìò «î´
ªð£¼¬÷ M¬óM™ «î®ì ªêòL¬òŠ ðFMø‚è‹
Þ‰«ï£‚°‚ °Pf†¬ìŠ ªêŒ¶ Þ‰î «ï£‚°‚
ðò¡ð´ˆî¾‹. °Pf†¬ìŠ ðò¡ð´ˆî¾‹.
QR AR
«ï£‚°‚ «ï£‚°‚
°Pf´ °Pf´

v
சிந்தனை 1வரைபடம்
1 5

வட்ட வரைபடம் இணைப்பு வரைபடம்


(சூழலுக்கு ஏற்ப வரையறுத்தல்) (முழுமைப் ப�ொருளையும் பகுதியையும் பகுப்பாய்வு செய்தல்)

2 6

குமிழி வரைபடம் நிரல�ொழுங்கு வரைபடம்


(ச�ொல், ச�ொற்றொடர்களைக் க�ொண்டு விவரித்தல்) (கருத்துகளை நிரல்படுத்துதல்)

3 7

பல்நிலை நிரல�ொழுங்கு வரைபடம் மர வரைபடம்


(காரணங்களையும் விளைவுகளையும் ஆராய்தல்) (வகைப்படுத்துதல்; குழுமப்படுத்துதல்)

4 8

இரட்டிப்புக் குமிழி வரைபடம் பால வரைபடம்


(ஒற்றுமை வேற்றுமைகளை அறிதல்) (ஒற்றுமையைக் காணுதல்)

vi
த�ொகுதிப் படர்ச்சி
கற்றல் ம�ொழியணி/ சிந்தனை உயர்நிலைச்
கருப்பொருள் தலைப்பு
தரம் இலக்கணம் வரைபடம் சிந்தனைத்திறன்
1. உடல் நலமும் வாழ்க்கை 1.1.5
முறையும்
2. தூய்மையும் நலமான 2.1.10
த�ொகுதி 1 வாழ்வும் முற்றியலுகரம் மர வரைபடம் பாடம் 1
உடல் நலம் இடுபணி 2
3. உளநலமும் உடல் நலமும் 3.3.7
4. இலக்கணம் 5.1.5
1. த�ொடர்புறவுக்குத் த�ொழில் 1.2.6
நுட்பம்
த�ொகுதி 2 2. நம்பகத் தகவல்
தகவல்யுக
2.2.8
திருக்குறள்
அடிச்சுவடுகள்
3. மாறும் தகவல்யுகம் 3.4.34
4. செய்யுளும் 4.2.5
ம�ொழியணியும்
1. இளைஞர்களும் 1.3.10
ப�ொருளாதாரமும்
த�ொகுதி 3 2. இளைய�ோருக்கு பாடம் 2
குடும்பத்தில்
2.3.13 தன்வினை
ஊரடங்கு இடுபணி 2
இளைஞர்கள்
பிறவினை
3. நல்லத�ொரு குடும்பம் 3.4.29 வளப்படுத்துதல்
4. இலக்கணம் 5.2.7
1. இயற்கையில் மாந்தன் 1.3.11
2. இலக்கியமும் பண்பாடும் 2.3.14 பாடம் 2
த�ொகுதி 4 கம்ப நிரல�ொழுங்கு இடுபணி 1
இலக்கிய வேர் 3. இயற்கை இன்பம் 3.4.32 இராமாயணம் வரைபடம் இடுபணி 3
4. செய்யுளும் 4.3.5 எதிர்காலவியல்
ம�ொழியணியும்
1. பணப் பரிமாற்றம் 1.4.7
த�ொகுதி 5 2. ம�ோசடி எச்சரிக்கை! 2.3.15 பாடம் 2
ப�ொருள் இடுபணி 3
வளர்க்கும்
3. சேமிப்புத் திட்டம் 3.4.33 வடம�ொழிச் சந்தி
குறைநீக்கல்
ப�ொருளகம் 4. இலக்கணம் 5.3.9

1. மலேசியாவில் 1.5.5
தமிழ்க்கல்வி
த�ொகுதி 6
ம�ொழியும்
2. ம�ொழிபெயர்ப்பு 2.2.8
இணைம�ொழி
மனிதனும் 3. ம�ொழி தரும் வேலை 3.3.7
4. செய்யுளும்
4.4.5
ம�ொழியணியும்

vii
கற்றல் ம�ொழியணி/ சிந்தனை உயர்நிலைச்
கருப்பொருள் தலைப்பு
தரம் இலக்கணம் வரைபடம் சிந்தனைத்திறன்
1. குடும்ப நலனில் 1.1.5
நன்னெறி
பல்நிலை
த�ொகுதி 7 2. அறப்போர் 2.1.11
வாழ்வு நெறி
முற்றியலுகரம் நிரல�ொழுங்கு
3. சிறுகதையில் மனவியல் 3.4.36 வரைபடம்
4. இலக்கணம் 5.4.8
1. இலக்கிய நுகர்வு 1.2.6
த�ொகுதி 8 2. முருகுணர்ச்சி 2.3.14 பாடம் 2
இலக்கியச் 3. பயன் தரு இலக்கியம் 3.4.30 திருக்குறள் இடுபணி 2
சுவை 4. செய்யுளும் 4.2.5 குறைநீக்கல்
ம�ொழியணியும்
1. கடன் உதவி 1.3.10 பாடம் 1
த�ொகுதி 9 2. வங்கி பிறந்த கதை 2.3.15 இடுபணி 2
ப�ொருளியல்
நிரல�ொழுங்கு
3. வரமும் சாபமும் 3.4.31 பெயரெச்சம் பாடம் 2
உலகு
வரைபடம்
4. இலக்கணம் 5.5.10 இடுபணி 1
வளப்படுத்துதல்
1. வெனிஸ் நகரம் 1.3.11
த�ொகுதி 10 2. கவிச்சக்கரவர்த்தி கம்பன் 2.1.11
பூவுலகின்
வட்ட
3. வயல்வௌி 3.4.32 புறநானூறு
ச�ொர்க்கம்
வரைபடம்
4. செய்யுளும் 4.3.5
ம�ொழியணியும்
1. குடும்ப உறவு 1.4.7
2. குறள் காட்டும் குடும்பம் பாடம் 2
த�ொகுதி 11 2.3.13 எழுவாய்த்தொடர்
இல்லற இன்பம் 3. பெண்களின் பங்கு
இடுபணி 1
3.4.33 விளித்தொடர்
வளப்படுத்துதல்
4. இலக்கணம் 5.5.11
1. பண்பியல் தீர்வுகள்
1.3.10
2. நற்பணி
த�ொகுதி 12 3. 2.1.10 உவமைத்தொடர்
சமூகத்தில் நாம் 4.
அறப்பணி
3.4.35
செய்யுளும்
4.5.5
ம�ொழியணியும்

viii
கற்றல் ம�ொழியணி/ சிந்தனை உயர்நிலைச்
கருப்பொருள் தலைப்பு
தரம் இலக்கணம் வரைபடம் சிந்தனைத்திறன்
1. தூய்மைக்கேடு 1.2.6
2. நெகிழியும் நாமும் 2.2.8 பல்நிலை
த�ொகுதி 13 த�ொகாநிலைத்
சுற்றுச்சூழல்
3. சுற்றுச்சூழலும் 3.4.30 நிரல�ொழுங்கு
த�ொடர்
மேம்பாடும் வரைபடம்
4. இலக்கணம் 5.7.6
1. த�ொடர் நாடகம் 1.4.7
2. நாடகம் வளர்த்த தமிழ் 2.1.11
த�ொகுதி 14 3. கலையா...? 3.4.31
நாடகக் கலை
திருக்குறள்
க�ொலையா...?
4. செய்யுளும் 4.2.5
ம�ொழியணியும்
1. தேர்வில் இலக்கியம் 1.3.10
பாடம் 2
த�ொகுதி 15 2. அறிவியல் இலக்கியம் 2.3.14 த�ொகாநிலைத்
இலக்கிய உலா 3. இலக்கிய மேடை
இடுபணி 2
3.4.34 த�ொடர்
வளப்படுத்துதல்
4. இலக்கணம் 5.7.7
1. பெண்ணின் பெருமை 1.2.6
2. குழந்தை வளர்ப்பு 2.3.13
த�ொகுதி 16 பல்நிலை பாடம் 2
குடும்பவியல் 3. விழல் நீர் 3.4.36 பழம�ொழி நிரல�ொழுங்கு இடுபணி 1
மேம்பாடு 4. செய்யுளும் 4.7.5 வரைபடம் குறைநீக்கல்
ம�ொழியணியும்
1. முதலும் முதலீடும் 1.1.5
த�ொகுதி 17 2. வாங்குவ�ோம் பங்கு 2.3.15 த�ொகாநிலைத் பாடம் 2
வங்கியியல் 3. பங்குச் சந்தை 3.4.29 த�ொடர் இடுபணி 2
4. இலக்கணம் 5.7.8
1. பல்லவர் பதிப்பு 1.1.5
த�ொகுதி 18 2. கீழடியில் த�ொன்மை 2.1.10
வனப்புமிகு 3. வரலாற்றுக் கழகம் 3.4.35 மரபுத்தொடர்
வரலாறு 4. செய்யுளும் 4.6.5
ம�ொழியணியும்

ix
கற்றல் ம�ொழியணி/ சிந்தனை உயர்நிலைச்
கருப்பொருள் தலைப்பு
தரம் இலக்கணம் வரைபடம் சிந்தனைத்திறன்

1. எழில்மிகு கிழக்கு 1.3.11


மலேசியா
த�ொகாநிலைத்
த�ொகுதி 19 2. ப�ோக்குவரத்து 2.1.10
பயணம�ோ இடையூறுகள் த�ொடர்

பயணம் 3. பார்க்க வேண்டிய காட்சி 3.4.32


4. இலக்கணம் 5.7.9

1. சுற்றுலாத் தலங்கள் 1.5.5

த�ொகுதி 20 2. திரங்கானுவில் லண்டன் 2.2.8


கவின்மிகு த�ொல்காப்பியம்
மலேசியா
3. சுற்றிப் பார்ப்போம்! 3.4.31

4. செய்யுளும் 4.3.5
ம�ொழியணியும்

1. ப�ொருளியல் சிக்கல் 1.4.7


2. மலேசிய வங்கிகளும் 2.3.15
த�ொகுதி 21 செயல்பாடுகளும் த�ொகாநிலைத் பாடம் 2
ப�ொருளாதாரம் த�ொடர் இடுபணி 3
3. மாறிவரும் வங்கியியல் 3.4.34
4. இலக்கணம் 5.7.10
1. இலக்கியம் பேணுவ�ோம்! 1.3.10
2. காப்பியப் பெருமை 2.3.14
த�ொகுதி 22 பாடம் 2
வாழ்வும்
குமிழி
3. இலக்கியமும் மனிதனும் 3.4.33 பழம�ொழி இடுபணி 2
இலக்கியமும்
வரைபடம்
4. செய்யுளும் 4.7.5
ம�ொழியணியும்

x
1 உடல் நலம்
ð£ì‹ 1 உடல் நலமும் வாழ்க்கை முறையும்

ஒலிபரப்பப்படும் உரையை மதிப்பீடு செய்யும் வகையில் கவனமாகச் செவிமடுத்திடுக.

த�ோழர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்,’ என்கிறார் திருமூலர். இதை நாம் மறக்கக்கூடாது. உடல் காக்கத்
துணைபுரிவது நம் உணவு முறைதான் என்பது மறுக்க முடியாத கூற்று. எனவே, உடல் காக்க, ‘உணவே
மருந்து; மருந்தே உணவு,’ எனும் சித்தர்கள் காட்டிய நெறியில் நாம் வாழ முற்பட வேண்டும்.
இன்றைய தவறான உணவு முறையால், நம்மைப் பல்வேறு ந�ோய்கள் வாட்டி வதைக்கின்றன.
சித்தர் நெறியைப் பின்பற்றி நவதானிய உணவுகள், கீரை வகைகள், பழ வகைகள், காய்கறிகள்
ப�ோன்றவற்றை நம் உணவு முறையில் சேர்த்துக் க�ொள்ள வேண்டும். அதே வேளையில், உப்பு, புளி,
காரம், இனிப்பு, க�ொழுப்பு, எண்ணெய் வகைப் ப�ொருள்களை உணவில் அதிகமாகச் சேர்ப்பதைத்
தவிர்க்க வேண்டும். இவை மட்டுமல்ல; அளவ�ோடு சரியான நேரத்தில் உண்ணவும் பழக வேண்டும்.

1.1.5 செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளை மதிப்பீடு செய்து த�ொகுத்துக் கூறுவர்.

1
த�ொகுதி 1
நண்பர்களே!
உடல் நலத்தைக் காப்பதற்கு மற்றொரு சிறந்த வழி உடல் தூய்மையைக் காப்பதுதான். புறத்தூய்மை
நீரால் அமையும் என்று வள்ளுவர் வழிகாட்டுகிறார். இந்த நெறியை இப்பொழுது நம்முள் சிலர்
மறந்துவிட்டோம். முன்பெல்லாம் வெளியில் சென்று வீடு திரும்புகையில் கைகால்களைக் கழுவாமல்
உள்ளே வரக்கூடாது என்ற பழக்கம் இருந்தது. வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் நீரால் தம் கை, கால்,
முகம் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்த பின்னரே வீட்டினுள் நுழைவர்.
அவ்வளவு ஏன்? புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்க்கச் செல்வோர் மஞ்சள் நீரால் கை, கால்
கழுவிய பின்புதான் வீட்டினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். இறப்பு நிகழ்வில் கலந்துவிட்டு இல்லம்
திரும்புவ�ோர், மஞ்சள் நீரில் குளித்துவிட்டுத்தான் வீட்டினுள்ளே நுழைவர். மஞ்சள் மிகச்சிறந்த கிருமி
நாசினி. க�ொர�ோனா பெருந்தொற்றின் ப�ோது, மஞ்சள் நீர் சிறந்த கைத்தூய்மியாகப் பரிந்துரைக்கப்பட்டதை
நீங்கள் மறந்திருக்க முடியாது. மேலும், மஞ்சள், உணவாகக் க�ொள்ளும் நச்சு நாசினி. அதனால்தான் நம்
முன்னோர் காலம் த�ொட்டு, மஞ்சளை உணவில் ஒரு முக்கியத் துணைச் சேர்க்கையாக நாம் பயன்படுத்தி
வருகின்றோம்.
த�ோழர்களே!
உடல், மன நல்வாழ்விற்காக நாம் சில பழக்க வழக்கங்களைக் கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும்.
சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளல்; உடற்பயிற்சி செய்தல்; உள்ளத்தை மகிழ்ச்சியாக
வைத்திருத்தல்; தூங்கும் நேரத்தை முறைப்படுத்தல் ப�ோன்றவற்றை நம்முடைய பழக்கமாக்க வேண்டும்.
மேலும், க�ொர�ோனா பெருந்தொற்று ப�ோன்ற ந�ோய் பரவும் காலத்தில், முறையான கட்டுப்பாடுகளையும்
விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இதுவே நல்வாழ்வுக்குச் சிறந்த வழி. எனவே,
முறையான வாழ்வு முறைக்குத் திரும்புங்கள். விடைபெறுகின்றேன்.
நன்றி, வணக்கம்.

1
உரையின் பகுதிகள் உணர்த்தும் உடல் நலமும் வாழ்க்கை முறையும் பற்றிய கருத்துகளை
இணையராகக் கலந்துரையாடி மர வரைபடத்தில் நிறைவு செய்க. கருத்துகளைப் பகுப்பாய்வு
செய்து கூறுக.
உடல் நலமும் வாழ்க்கை முறையும்
எ.கா:
முறையான உணவுப் பழக்கம் உடல் தூய்மை காக்கும் வழிகள் நலமான வாழ்க்கை முறைகள்
சித்தர்நெறியைப் பின்பற்றுதல் கைகால்களைக் கழுவுதல் உடற்பயிற்சி மேற்கொள்ளல்

2
பகுப்பாய்வு செய்த தகவல்களை மதிப்பீடு செய்து, உடல் நலமும் வாழ்க்கை முறையும் பற்றிய
கருத்துகளைத் த�ொகுத்துக் கூறுக. உமது கருத்துகளைக் கீழ்க்காணும் முறையில் த�ொகுத்திடுக.

முன்னுரை: தலைப்பை விளக்குதல்.


தெரிநிலைக் கருத்து: முறையான உணவுப் பழக்கத்தைக் க�ொண்டிருத்தல்.
புதைநிலைக் கருத்து: முன்னோர் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றுதல்.
முடிவுரை: பரிந்துரை /விளைவு / ச�ொந்தக் கருத்து

2
த�ொகுதி 1
3
கீழ்க்காணும் தலைப்பை ஒட்டிய கருத்துகளைத் திரட்டி மதிப்பீடு செய்க. கருத்துகளைத்
த�ொகுத்து வகுப்பில் கூறுக.

க�ொர�ோனா பெருந்தொற்று பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தினாலும், சில நல்விளைவுகளையும்


ஏற்படுத்தியிருக்கின்றது.

õ÷Šð´ˆ¶î™

கலந்தாய்வுக் களத்தின் கருத்துகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்க; த�ொகுத்துக் கூறுக.


இன்றைய மக்களுக்கு உடல் நலத்தைப் பற்றிய அக்கறை குறைந்துவிட்டது; பேராசை மிகுந்துவிட்டது.
தேவையில்லாததை எல்லாம் தேவை என்று எதையெதைய�ோ தேடித் தேடி அலைந்து க�ொண்டிருக்கிறார்கள்.
அதன் விளைவுதான் சிறிய ந�ோய்கூட பெருந�ோயாக மாறி மக்களை வதைக்கிறது; வாட்டுகிறது.

மக்களைத் தாக்குகின்ற இன்றைய ந�ோய்களுக்கு நாம் மக்களை மட்டுமே குறை கூறுகிற�ோம்.


உண்மையில் அவர்களை மட்டுமே குற்றஞ்சாற்றுவது தவறுதான். இன்றைய வாழ்க்கை முறை அவ்வாறு
ஆகிவிட்டது. அவர்கள் என்ன செய்வார்கள்? வாழ்க்கையின் தேவைகளை நிறைவு செய்ய அவர்கள்
ப�ோராட வேண்டியுள்ளதே!

°¬øc‚è™

வளப்படுத்துதல் நடவடிக்கையில் கலந்தாய்வு செய்யப்பட்ட கருத்துகளைப் பட்டியலிடுக.

1.

2.

3.

3
த�ொகுதி 1

ð£ì‹ 2 தூய்மையும் நலமான வாழ்வும்

அறிக்கையினை மெளனமாக விரைந்து வாசித்திடுக.


முறையீட்டு அறிக்கை:
தாமான் முகிபா குடியிருப்பாளர் சங்கம்
எண்.32, பெர்சத்து சாலை, தாமான் முகிபா,
42700 பந்திங், சிலாங்கூர்.

நகராண்மைக் கழகத் தலைவர்,


தெலுக் டத்தோ நகராண்மைக் கழகம்,
42700 பந்திங்,
சிலாங்கூர்.

நகராண்மைக்கழக ஊழியர்களின் அலட்சியப் ப�ோக்கும் ந�ோய்களின் தாக்கமும்

1.0 குடியிருப்புப் பகுதியின் பின்னணி


எங்களின் தாமான் முகிபா குடியிருப்புப் பகுதி, பந்திங் பட்டணத்திலிருந்து 4 கில�ோமீட்டர் த�ொலைவில்
அமைந்துள்ளது. எங்களின் வசிப்பிடத்தில் ஏறக்குறைய 470 குடும்பங்கள் இருக்கின்றன; 1700 பேர்
வசிக்கின்றனர். இங்கு மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக் குடியினர் எனப் பல்லின
மக்கள் வசிக்கின்றனர்.
2.0 வசிப்பிடத்தில் நிலவும் குறைபாடுகள்
எங்கள் இருப்பிடத்தில் இதுவரை எந்தவித இடர்ப்பாடுகளும் இன்றி நாங்கள் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தோம்.
நாங்கள் நகராண்மைக் கழகம் விதிக்கும் வீட்டுவரி, பராமரிப்பு வரி முதலியவற்றை முறையாகச் செலுத்தி
வருகிற�ோம். ஆனால், என்ன காரணம�ோ தெரியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறு
துன்பங்கள்; துயரங்கள்; தாங்க முடியா வேதனைகள். குறிப்பாக நகராண்மைக் கழக உறுப்பினர்கள்
கால அட்டவணைக்கேற்பக் குப்பைகளை அகற்றுவதில்லை; சாக்கடைகளைத் துப்புரவு செய்வதில்லை;
கால்வாய்களைத் தூர்வாராமைப் ப�ோன்றவற்றால் சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு அடைந்ததால் இங்குள்ள
மக்கள் மிகவும் அல்லல்படுகிற�ோம்.
3.0 அலட்சியப் ப�ோக்கினால் ஏற்படும் ந�ோய்களின் தாக்கம்
நகராண்மைக் கழக ஊழியர்களின் அக்கறையற்ற ப�ோக்கினால், ‘டிங்கி’ ந�ோயின் தாக்கம் மிக
வேகமாகப் பரவி வருகிறது. எங்கும் ஒரே துர்நாற்றம்; எலிகளின் பெருக்கம்; ஈக்களின் தாக்கம்.
என்ன செய்வது என்று அறியாமல் இருக்கிற�ோம். பல முறையீடுகள் செய்துவிட்டோம். ஆனால்,
இதுவரையிலும் ஏன் எந்தவ�ொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் அறிய
விழைகிற�ோம். இந்தச் சிக்கலினால் நகராண்மைக் கழகத்தின்பால் எங்களுக்கு இருந்த நம்பிக்கை மிகவும்
குறைந்து வருகிறது.

2.1.10 அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

4
த�ொகுதி 1
4.0 வேண்டுக�ோளும் தீர்வும்
ஐயா, எங்கள் வசிப்பிடத்தின் நிலைமை மேலும் ம�ோசமடைவதற்குள், உடனடி நடவடிக்கைகளைத்
தயவுசெய்து மேற்கொள்ளுங்கள். ‘நலமான வாழ்வுக்குத் தூய்மையே அடித்தளம்’ என்பதை உறுதி
செய்யுங்கள்.
நன்றி.

அறிக்கை தயாரித்தவர், 10.2.20

(இளவேந்தன் தமிழினியன்)
செயலாளர்,
தாமான் முகிபா குடியிருப்பாளர் சங்கம்

1
அறிக்கையினை ஆழ்ந்து வாசித்து வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவை வெளிப்படும் இடங்களை
ஆய்ந்து அடையாளம் காண்க.

2
அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
உரக்க வாசித்துக் காட்டுக.

3
அறிக்கையில் காணும் லகர, ளகர, ழகர; னகர, ணகர; றகர, ரகரச் ச�ொற்களைப் பட்டியலிட்டுச்
சரியான உச்சரிப்புடன் உரக்க வாசித்துக் காட்டுக.

லகரம் ளகரம் ழகரம் னகரம் ணகரம் றகரம் ரகரம்

5
த�ொகுதி 1

õ÷Šð´ˆ¶î™

மருத்துவச் சுற்றறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவை வெளிப்பட


உரக்க வாசித்துக் காட்டுக.

விழிப்புடன் இருங்கள்..! ஏடிஸை ஒழியுங்கள்..!


டிங்கிக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
‘ஏடிஸ்’ எனும் ஒருவகைக் க�ொசுவினால் பரவும் ந�ோய்தான் டிங்கிக் காய்ச்சல்.
இந்நோய் த�ொடர்பாக உலகம் முழுவதும் இதுவரை சுமார் ஒரு க�ோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கள் த�ொடர்ச்சியான காய்ச்சல், தலைவலி, ப�ொதுவான உடல் வலி (தசை


இந்த அறிகுறி
னமாக வலி, மூட்டு வலி), குமட்டல் மற்றும் வாந்தி, பல் ஈறுகளிலிருந்து
இருந்தால் கவ
குருதி வடிதல்
இருங்கள்..!

தடுப்பு முறைகள்
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்; ஏடிஸ் க�ொசு உற்பத்தியாகும் வாழ்விடங்களை
முற்றுமுழுதாக அழித்தல் ; சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை மூடுதல்;
பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தல்; ஒரு வாரத்திற்கு ஒருமுறை பூச்சாடிகள், நீர் தேங்கும்
பாத்திரங்களைத் தூய்மைப்படுத்துதல் ; த�ோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிதல்.

°¬øc‚è™

ந�ோய்த் தடுப்பு அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்


நிறுத்தக்குறிகளுக்கேற்ப உரக்க வாசித்துக் காட்டுக.

இளம் வயதில் முகத்தில் சுருக்கமா? அதைத் தடுக்க வேண்டுமா?


அமிலத் தன்மை க�ொண்ட உணவு வகைகளை உண்ணுகிறீர்களா? தவிர்த்து விடுங்கள்.
காய்கறி, பழ வகைகளைத் தவிர்க்கிறீர்களா? தப்பு ; தவறாமல் சாப்பிடுங்கள்.
வாரத்தில் ஓரிரு முறையாவது ஆரஞ்சு, சிவப்பு முள்ளங்கிச் சாறுகளை அருந்துங்கள்!
கறிவேப்பிலையிலுள்ள உயிர்ச்சத்து ‘ஏ’ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் க�ொள்ளப்
பெரிதும் உதவும் என்பதை அறிவீர்களா? பின் எதற்குத் தாமதம்? த�ொடங்குங்கள்.
இந்த வழிமுறைகளை நாளும் பின்பற்றி வாருங்கள்..!
முகச்சுருக்கம் நீங்குகிறதா இல்லையா பாருங்கள்..!
6
த�ொகுதி 1
ð£ì‹ 3 உளநலமும் உடல் நலமும்

ஆய்வின் விவரங்களை மெளனமாக வாசித்தறிக.

இன்றைய நிலையில் மலேசிய இளைஞர்கள் பல்வேறு மனநலப் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.


மலேசியச் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நல்வாழ்வுக் கழகம் கடந்த 2017ஆம் ஆண்டு
வெளியிட்ட களஆய்வு இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது. அந்த ஆய்வின் விவரங்களை ஆய்ந்தறிக.
மலேசிய இளைய�ோர்களின் மனநலப் பாதிப்பு
மனச்சோர்வு மனப்பதற்றம் மன அழுத்தம்
5 பேரில் ஒருவர் 5 பேரில் இருவர் 10 பேரில் ஒருவர்
பாதிக்கப்
படுவ�ோர்
எண்ணிக்கை

பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண்

பாலினம்

17.7% 18.9% 42.3% 37.1% 10.3% 8.9%


மூலம் : தேசிய நல்வாழ்வுக் கழகம் (மலேசிய சுகாதார அமைச்சு) 2017

1
க�ொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியலை ஒட்டிக் குழுமுறையில் கலந்துரையாடி,
விவரங்களைக் கண்டறிக.

2
புள்ளிவிவரப் பட்டியலை அடிப்படையாகக் க�ொண்டு கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை காண்க.

1. இந்த அட்டவணை எதைப் பற்றி விளக்குகிறது?


2. இந்த அட்டவணையை வெளியிட்டவர் யார்?
3. எத்தகைய மனநிலை பாதிப்புகளை மலேசிய இளைஞர்கள் எதிர்நோக்குகின்றனர்?
4. மனநலப் பாதிப்புகளால் ஏற்படும் விளைவுகள் யாவை? அவற்றை எவ்வாறு தீர்க்கலாம்?

3.3.7 புள்ளிவிவரப் பட்டியலிலுள்ள விவரங்களைத் த�ொகுத்து எழுதுவர்.

77
த�ொகுதி 1

3
பட்டியலிட்ட விவரங்களைத் த�ொகுத்து எழுதுக. கீழ்க்காணும் அமைப்பு முறையை வழிகாட்டியாகக்
க�ொண்டு த�ொகுப்பினை எழுதுக.

முன்னுரை - புள்ளிவிவரப் பட்டியலின் தலைப்பை ஒட்டிய விளக்கம்


தெரிநிலைக் கருத்து - அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள்
- அதிகமான பாதிப்பு (விழுக்காடு, பாலினம்)
- குறைவான பாதிப்பு (விழுக்காடு, பாலினம்)
புதைநிலைக் கருத்து - மனநிலை பாதிப்பதற்கான காரணங்கள் / விளைவுகள்
முடிவுரை - மனநிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் / தீர்வுகள்

õ÷Šð´ˆ¶î™

புள்ளிவிவரப் பட்டியலில் தரப்பட்டுள்ள விவரங்களை ஆராய்ந்து அறிந்து த�ொகுத்து எழுதுக.

2012 & 2017 ஆம் ஆண்டுகளின் ஒப்பீடு உணவைத்


தவிர்க்கப்படும் பாதிக்கப் படுவ�ோர்
தவிர்ப்பதற்கான
உணவு வேளைகள் எண்ணிக்கை
2012 2017 காரணங்கள்
காலை உணவு உடல் எடை
28% 30% 74%
(காலை 6 - காலை 8) கூடிவிடும்
மதிய உணவு
மதிய உணவு
48% 48% உட்கொள்வதில் 44%
(காலை11 - மதியம் 3) ஆர்வமின்மை
இரவு உணவு ப�ோதுமான நேரம்
53% 56% 32%
(மாலை 6 - இரவு 10) இருப்பதில்லை
மூலம் : தேசிய நல்வாழ்வுக் கழகம் (மலேசியச் சுகாதார அமைச்சு) 2018

°¬øc‚è™

இன்றைய பள்ளி மாணவர்கள் பல்வேறு மனவுளைச்சல்களை எதிர்நோக்குகின்றனர்.


அவற்றைய�ொட்டிய புள்ளிவிவரப் பட்டியல் தரப்பட்டுள்ளது. அதனை ஆராய்ந்து விவரங்களைத்
த�ொகுத்து எழுதுக.
காரணம் விழுக்காடு
தேர்வை ஒட்டிய பயம் 50%
குடும்பச் சிக்கல் 29%
பிற மாணவர்கள் ஏற்படுத்தும் த�ொல்லைகள் 11%
ஆசிரியர்களால் ஏற்படும் சிக்கல்கள் 10%
மூலம் : தேசிய நல்வாழ்வுக் கழகம் ( மலேசியச் சுகாதார அமைச்சு) 2018

8
த�ொகுதி 1
ð£ì‹ 4 இலக்கணம்

முற்றியலுகரம்

எல்லா உகரங்களும் (கு, சு, டு, து, பு, று, ஙு, ஞு , ணு, நு, மு, னு, யு, ரு, லு, வு, ழு, ளு) தனித்து
முழுமையாக ஒலிக்கும் ப�ோது முற்றியலுகரங்களாகும்.
தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகரம் முற்றியலுகரமாகும்.
எ.கா: நடு, விடு, உறு, ப�ொது, பசு, படு
ச�ொல்லின் இறுதியில் வருகின்ற மெல்லின, இடையின உகரங்கள் முற்றியலுகரங்களாகும்.
எ.கா: அணு, விம்மு, உரு, பளு, விழு, கதவு, தாழ்வு
ச�ொல்லின் முதல் எழுத்தாக வரும் உகரம் முற்றியலுகரம்.
எ.கா: உலகம், குடல், புண், முன், துவர்ப்பு

1
ச�ொற்குவியலில் காணும் முற்றியலுகரச் ச�ொற்களை மட்டும் அடையாளம் கண்டு பட்டியலிடுக.

முழு நிறைவு இங்கு விரிவு ஓய்வு எது

உடம்பு இரவு பிறழ்வு தடு

ஓய்வு வலு தனு பாட்டு நிகழ்வு உழு

உறுமு நகு அழகு துள்ளு குடம் புலவு

உருவம் பளு முடி உணவு

எரு ஏவு உறவு காசு மூக்கு க�ொசு

5.1.5 முற்றியலுகரம் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

99
த�ொகுதி 1

2
பட்டியலிட்ட முற்றியலுகரச் ச�ொற்களை வகைப்படுத்துக.

ச�ொல்லின் இறுதியில்
தனிக்குறிலை அடுத்து
வருகின்ற மெல்லின, ச�ொல்லின் முதல் எழுத்தாக
வருகின்ற வல்லின உகர
இடையின உகர வரும் உகர முற்றியலுகரம்
முற்றியலுகரம்
முற்றியலுகரம்

எ.கா: மறு எ.கா: உறுமு எ.கா: துணை

3
க�ொடுக்கப்பட்ட வகைக்கேற்ப எடுத்துக்காட்டுச் ச�ொற்களை எழுதுக.
1. தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகர முற்றியலுகரங்கள்:

2. ச�ொல்லின் இறுதியில் வருகின்ற மெல்லின, இடையின உகர முற்றியலுகரங்கள்:

3. ச�ொல்லின் முதல் எழுத்தாக வரும் உகர முற்றியலுகரங்கள்:

õ÷Šð´ˆ¶î™

முற்றியலுகரச் ச�ொற்களைப் பயன்படுத்திப் ப�ொருள் விளங்க வாக்கியத்தில் அமைத்துக் காட்டுக.

°¬øc‚è™

முற்றியலுகரச் ச�ொற்களைக் க�ொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.

1. பேச்சாளரின் அருமையாக இருந்தது.


2. மக்களின் பசிப�ோக்கும் உலகின் தலைசிறந்த த�ொழில்.
3. அண்ணன் வழி பல முக்கியமான ஆவணங்களை அனுப்பியிருந்தார்.
4. ஆசிரியர் விளக்கமாக எடுத்துச் ச�ொன்னார்.

பதிவு அஞ்சல் முழுப் பேச்சும் ப�ொதுக் கருத்தை உழவுத் த�ொழில்

10
2 தகவல்யுக அடிச்சுவடுகள்
ð£ì‹ 1 த�ொடர்புறவுக்குத் த�ொழில்நுட்பம்

விளக்கப்படம் த�ொடர்பாகக் குழுவில் கலந்துரையாடுக.

2018இல் ஒரு மணித்துளியில் இணையத்தில் நடந்தவை

973,000 18 மில்லியன்
முகநூல் குறுஞ்செய்தி

4.3 மில்லியன்
3.7 மில்லியன்
வலைய�ொலிப்
கூகுள் பார்வை

$ 862, 823 174,000


இயங்கு அலை
க�ொள்முதல் 60 படவரி
வினாடி

1.1 மில்லியன் 481,000


திண்டர் கீச்சு

38 மில்லியன் 187 மில்லியன்


புலனக் மின்னஞ்சல்
குறுஞ்செய்தி

விளக்கப்படம்: ஒரு நிமிட இணையப் பயன்பாடு


1.2.6 காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்பர்.

11
1
விளக்கப்படத்தின் தகவல்களை அடிப்படையாகக் க�ொண்டு 60 வினாடிகளில் இணையப்
பயனர்களின் இணையப் பயன்பாடு குறித்த காரண காரியங்களை அறிய கேள்விகள் கேட்டிடுக.

எ.கா: மடல் அனுப்புவதைவிட மின்னஞ்சல் அனுப்புவதை மக்கள் விரும்புகிறார்கள். ஏன்?


த�ொகுதி 2

2
தகவல் பரிமாற்றப் பரிணாமத்தில் த�ொழில்நுட்ப மேம்பாட்டினை வரைபடம் விவரிக்கின்றது.
இதன் காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்டிடுக.

தகவல் பரிமாற்றத்தின் பரிணாம வளர்ச்சி

தகவல் பரிமாற்றத்தில் புறாக்களின் பயன்பாடு ஏன் èõùˆF™ ªè£œè


எ.கா:
அற்றுப் ப�ோனது? காரணத்திற்கும் காரியத்திற்கும்
த�ொடர்பு இருத்தல் வேண்டும்.

காரணம் அறியும் கேள்விகள் காரியம்/செயல்/ நிகழ்வு அறியும்


கேள்விகள்

பயன்படுத்தத் தக்க வினாச் பழைய த�ொலைபேசிகளின்


ச�ொற்கள்: ஏன்? எதனால்? இரண்டிற்கும் இடையே மறைவு புதிய கைப்பேசிகளின்
எதற்காக? எவ்வகையில் உள்ள த�ொடர்பு வரவிற்கு எவ்வகையில்
த�ொடர்புள்ளது? த�ொடர்புடையது?

காரண காரியம் அறிய வினவுதல்

12
3
காண�ொலிப் பதிவைப் பார்த்துத் திறன்பேசி வரவால் ஏற்பட்ட மாற்றங்களின்
காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்டிடுக.

õ÷Šð´ˆ¶î™

த�ொகுதி 2
தகவல் பரிமாற்றத்தில் த�ொழில்நுட்பம் தவிர்த்து, மாந்தரிடையிலான த�ொடர்புறவும் முக்கியப்
பங்காற்றுகின்றது. மாந்தரிடையிலான த�ொடர்புறவில் சில இடையூறுகள் ஏற்படுகின்றன. இந்த
இடையூறுகளுக்கான காரண காரியங்களை அறிய ஏற்ற கேள்விகளைக் கேட்டிடுக.

காரணம் காரியம் / செயல் / விளைவு


எ.கா:
தெளிவற்ற ம�ொழிப் பயன்பாடு தெளிவற்ற புரிதல்

°¬øc‚è™

திறன்மிகு த�ொடர்புறவிற்குச் சில திறன்களை விளக்கும் படங்கள் வழங்கப்பட்டுள்ளன.


இத்திறன்களின் தேவைகளுக்கான காரணங்களை அறிய ஏற்ற கேள்விகளைக் கேட்டிடுக.

கேட்டல் நட்புறவு திறந்த மனப்பான்மை

பின்னூட்டு நம்பிக்கை சைகைம�ொழி

13
ð£ì‹ 2 நம்பகத் தகவல்

மெளனமாக விரைந்து வாசித்திடுக.


த�ொகுதி 2

தகவல் த�ொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால், மாந்தரிடையே தகவலின்


பரவலாக்கம் மிகுந்துள்ளது. உலகத்தில் தகவலை உடனே சேர்ப்பிக்க
மனிதர் காட்டும் ஆர்வம் ச�ொல்லி மாளாது. பலவேளைகளில் இவர்கள்
காட்டும் ஆர்வம், க�ோளாறாகவே அமைகிறது. தகவலைப் பரப்புவதில்
இவர்கள் காட்டும் ஈடுபாட்டில் சிறு அளவேனும், அத்தகவலின்
உண்மையையும் நம்பகத் தன்மையையும் தேடுவதில் காட்டினால்
அனைவருக்கும் நன்மை பயக்கும். நாம் தகவலைப் பரப்புவதில்தான்
முனைப்புக் காட்டுகிற�ோமே தவிர, தகவலின் நம்பகத் தன்மையில்
காட்டுவதில்லையே என்றெண்ணும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.
ஏனிந்த நிலை ஏற்படுகிறது? ப�ொதுவாகவே நமக்கு எப்பொழுதுமே
ப�ொறுமை இருப்பதில்லை. ஒரு தகவல் நமக்குக் கிடைத்தவுடன்,
அதை உடனடியாக நம் நண்பர்களுக்கும் பிறருக்கும் அனுப்பிவிட
வேண்டுமென்ற அவசரமே நம்மைச் சில வேளைகளில் தவறான
தகவல் பரவலுக்குத் துணைப�ோகச் செய்கின்றது. மேலும், எதையும் ஆராய்வதில�ோ உண்மையைத்
தேடிக் கண்டறிவதில�ோ நமக்குப் பெரும்பாலும் ஈடுபாடும் அக்கறையும் இருப்பதில்லை. இதற்குப்
ப�ொறுமையின்மையே முக்கியக் காரணமாக அமைகிறது.
இன்று மனிதரிடையே தான்தான் ஒன்றனை முதலில் செய்தேன் என்றும், தான்தான்
ஒரு சம்பவத்தை முதலில் பார்த்தேன் என்றும் ச�ொல்லிக் க�ொள்வதில் பெருமிதம் அதிகரித்து
வருகின்றது. இதே நிலையைத் தகவல் பரவலிலும் காண முடிகின்றது. எதையுமே ‘நான்தான்
முதலில் அனுப்பினேன்’ என்று பெருமைப்பட்டுக் க�ொள்ள வேண்டுமென்ற எண்ணமே தகவலை
உடனே பரப்புகின்ற செயலைத் தூண்டுகின்றது.
‘எண்ணித் துணிக கருமம்’ என்கிறது வள்ளுவம். ஆனால், நாம் துணிந்துவிட்டு, பிறகுதான்
எண்ணுகிற�ோம். சிந்தித்துச் செயல்படுவதைவிடச் செயல்பட்டுவிட்டுச் சிந்திப்பவராகத் த�ொடர்ந்து
நாம் இருப்பதால், தகவல் பரவலிலும் அத்தகைய ப�ோக்கையே கையாளுகிற�ோம். வந்த
தகவலின் உண்மையை அலசி ஆராயாமல் அனுப்பிவிட்டுப் பின்னர், அதன் விளைவால்
ந�ொந்து ப�ோகிற�ோம்; மனம் வெந்து வாடுகிற�ோம்.

2.2.8 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவுக்கு வருவர்.

14
தகவல் பரவலில் மற்றொரு சாராரும் உளர். ‘எனக்கு வந்த தகவலைப் பிறருக்கு அனுப்புவது
என் கடமை அல்லவா?’ என்ற எண்ணம் க�ொண்ட கடமை வீரர்கள் இவர்கள். ‘யான்பெற்ற
இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணம் க�ொண்டவர்கள் இவர்கள். வந்த தகவல் என்ன?
அதனால் என்ன விளைவு வரும்? என்பன பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை.
‘எனக்கு ஒருவர் அனுப்பினார், நான் மற்றவருக்கு அனுப்புகிறேன்’ என்ற சிந்தனை
க�ொண்டவர்கள் இத்தகைய�ோர்.

த�ொகுதி 2
துரித காலத்தில் வாழ்ந்து க�ொண்டிருக்கிற�ோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக,
நமக்கு அனுப்பப்படுகின்ற தகவலின் நம்பகத்தன்மையையும் உண்மையையும் அறிந்து,
நாம் அனுப்புகின்ற தகவல் பிறருக்கு நன்மை பயப்பதாக இருப்பதை உணர்ந்து பரவலாக்கம்
செய்வது அனைவருக்கும் நன்மை பயக்கும். தகவல் பரப்பலில் ‘மெய்ப்பொருள் காண்பது
அறிவு’ என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் கூற்றுக்குச் செவி சாய்த்தால், அனைவருக்கும்
நன்மை விளையும்; அவதூறுகளைப் பரப்பி அவமானத்தில் சிக்காமல் இருக்கலாம்.

1 èõùˆF™ ªè£œè

மேற்கண்ட பனுவலின் கருத்துகளைக் குறித்துக் க�ொள்க. பகுத்தாய்ந்திட…


வகுப்பில் கலந்துரையாடுக. முக்கியத் தகவல்களை
அடையாளம் காண்க.
கருத்துகளின் அடிப்படையில்
2 பகுத்தாய்க.

கலந்துரையாடிய முக்கியத் தகவல்களை இணையராகப்


இவற்றின் அடிப்படையில்
முடிவினைக் கூறுக.
பகுத்தாய்ந்து வகுப்பில் படைத்திடுக.

3
பகுத்தாய்ந்த தகவல்களை அடிப்படையாகக் க�ொண்டு முடிவைக் கூறுக; எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவு கூறுக; எழுதுக.


மனித வாழ்க்கையின் சுழற்சி மிகத் துரித வளர்ச்சி கண்டுள்ளது. எதையெடுத்தாலும் அதில் துரிதம்
நிறைந்துள்ளது. பயணம் துரிதமடைந்துள்ளது. பாசம் துரிதம் கண்டுள்ளது; பக்தி துரிதமாகிவிட்டது;
உணவு துரிதமாகிவிட்டது. ம�ொத்தத்தில் மனித வாழ்வே துரிதமாய் மாறிவிட்டது. இந்தத் துரிதம் மாந்தனுக்கு
நன்மை அளிப்பதாய் இல்லையே என்பதுதான் வேதனையளிக்கிறது.

15
துரிதத்தால், வேகத்தால் நன்மையன்றோ என நீங்கள் எண்ண
வேண்டா. பயணத் துரிதத்தால் விபத்துகள் பெருகிவிட்டன.
பாசத் துரிதத்தால் உறவுகளில் விரிசல்கள் மலிந்துவிட்டன.
ஒரே குறுஞ்செய்தியில் இன்று பாசம், அன்பு பகிரப்படுவது, நாம்
அறிந்ததுதானே! அமைதியாக இறைவனை வணங்க இன்று
மனிதனுக்கு நேரமில்லை. பக்தியும் இன்று மின்னியலில் பின்னிக்
கிடக்கிறது. உணவு குறித்துச் ச�ொல்ல வேண்டியதில்லை. துரித
த�ொகுதி 2

வளர்ச்சியில் முதலிடம் வகிப்பது உணவுதான்! எல்லாம் உடனடிச்


சமையல்; துரிதக் கடையில் உணவு.
துரித உணவுக் கடைக்குச் சென்றால், கையடக்கக் கணினியில்
நம் உணவின் அளிப்பாணை சமையல் கட்டிற்குச் செல்கின்றது.
உணவு நம் மேசையின் மீது வந்து சேர்கின்றது. உறவுகளின்
நலன் விசாரிப்பு, புலனத்தில் நடக்கின்றது. பயண ஏற்பாடுகள்
முகம் பார்க்காமலே முடிந்துவிடுகின்றன; யாவும் இணைய
வழியே செய்து முடிக்கப்படுகின்றன. த�ொழில்நுட்பம், குறிப்பாகத்
தகவல் த�ொழில்நுட்பம், மாந்தரின் செயலை விரைவுபடுத்தியது
மட்டுமன்று; மாந்தர் உறவில் விரிசலையும் ஏற்படுத்தி
விட்டத�ோ என்னவ�ோ!
இப்படியே துரிதம் துரிதம் என்று ஓடி, நம் காலமும் நேரமும்
சுருங்கிவிட்டன! 24 மணிநேரம் 24 நிமிடத்தில் முடிவதுப�ோல்
இருக்கிறது! ஒரு வாரம் 7 மணிநேரத்தில் முடிகிறது! ஒரு மாதம் 30
மணிநேரத்தில் முடிகிறது! ஒரு வருடம் 30 நாள்களிலே முடிவதாய்
இருக்கிறது! துரிதத்தால் மனித மரணமும் துரிதமாகிவிட்டது.
100 ஆண்டுகள் வாழ்ந்த மனிதன், இன்று 60 ஆண்டுகளைத்
த�ொடுவதே அரிதாகிவிட்டது! நாளை?

°¬øc‚è™

வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவு கூறுக; எழுதுக.


புலனத்தில் இடுகை (status) வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைவரும் அறிவ�ோம். இதனைப் ப�ொது
நலனுக்கும், தனியாள் நலனுக்கும் பயன்படுத்துவதே சிறப்பு. இதற்கு மாறாக, வணக்கம் என்று அனுப்புவதும்
பலவிதமான பயனற்ற பரவல் செய்திகள் அனுப்புவதும் தவிர்த்தால் நல்லது. கைப்பேசிப் பயனர்கள்
கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், வணிகத் தெரிவல்கள் மற்றும் ப�ொதுவான சமூகத் தகவல்கள்
ப�ோன்றவற்றை உள்ளீடு செய்யும் தளமாக இதனைப் பயன்படுத்தலாம். இதனால், வணக்கங்களால்
நிறைந்த புலனக் குழுவில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, கைப்பேசிப் பயனர்கள் மகிழ்ச்சி அடைவர்.

16
ð£ì‹ 3 மாறும் தகவல்யுகம்

உரையாடலை விரைந்து வாசித்திடுக. அதன் அமைப்பைக் கண்டறிக.

(‘திறன்பேசி வளர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுத ஆசிரியர்

த�ொகுதி 2
பணிக்கிறார். கட்டுரைக்குக் கருத்துகள் திரட்ட நகுலன், முகிலனைக் காண அவன் வீட்டிற்குச் செல்கிறான்.
இருவரும் உரையாடுகின்றனர்.)
நகுலன்: வணக்கம் முகிலா! என்ன திறன்பேசியையும் உன்னையும் பிரிக்க முடியாது ப�ோல. அன்றில்
பறவைப�ோல் எந்நேரமும் ஒன்றிப்போய் இருக்கிறீர்கள்?
முகிலன்: வணக்கம் நகுலா. இப்பொழுதுதான் கணிதப் பாடத்தை முடித்தேன். நீ வருவதற்குச் சற்று
நேரத்திற்கு முன்னர்தான், திறன்பேசி துணைக�ொண்டு கட்டுரைக்கான கருத்துகளைத்
தேடினேன். சரி, வந்து உட்கார். திரட்டிய கருத்துகளைப் பற்றிக் கலந்துரையாடுவ�ோம்.
நகுலன்: த�ொடர்புக் கருவியாகத் திறன்பேசி விளங்குகிறது என்பதை முதல் கருத்தாகக் க�ொள்ளலாம்.
கற்காலம் த�ொடங்கி மனித இனத்தில் எவ்வாறு தகவல் பரிமாற்றம் நடந்தது என்பதை விளக்கி
எழுதினாலே ப�ோதுமானதாக இருக்குமென நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய் முகிலா?
முகிலன்: அதுவும் சரிதான் நகுலா. பறவையில் த�ொடங்கி ம�ொழி உருவாகி இன்று திறன்பேசி
வரையிலான வளர்ச்சியை விளக்கி எழுதினாலேயே ப�ோதுமானதாக இருக்கும். த�ொடர்ந்து,
திறன்பேசியின் வரவு உலகை உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டதை மறுத்துவிட முடியுமா?
இன்று, நிழற்படக் கருவியை நிழற்பட நிபுணர்கள் கைகளில் மட்டுமே காணமுடிகிறது. படம்
எடுப்பது முதல் காண�ொலிக் காட்சி உருவாக்குவது வரை அனைத்து வேலைகளையும் இந்தத்
திறன்பேசிகளே முடித்து விடுகின்றனவே நண்பா!
நகுலன்: நீ கூறுவது முற்றிலும் உண்மைதான் நண்பா. நிழற்படக் கருவியாக, `எல்லாரும் படம்
பிடிக்கலாம்,’ எனும் நிலைக்கு வந்துவிட்டது. அத�ோடு மட்டுமா திறன்பேசியின் நீட்சி நிற்கிறது?
கணிப்பான், கடிகாரம், அலாரம், பாடல் கேட்டல், வலைய�ொலி உலா வரல், படம் பார்த்தல்
என அதன் நீட்சியும் ஆட்சியும் பல்கிப் பெருகியுள்ளனவே! மனிதனின் ஆறாம் விரலாக
எழுதுக�ோல் இருந்தது அப்போது! இப்போது மனிதனின் மூன்றாம் கரமாக மாறிவிட்டதே
திறன்பேசி! சரி முகிலா, நான் புறப்படுகிறேன். கருத்துகள் ப�ோதுமென்று நினைக்கிறேன்.
நாளை ஆசிரியரும் மற்ற நண்பர்களும் வேறு
கருத்துகள�ோடும் வருவார்கள். ப�ோதுமான
கருத்துகள் கிடைக்குமென்றே எண்ணுகிறேன்.
நான் விடை பெறுகிறேன்.
முகிலன்: சரி நகுலா. நாளை சந்திப்போம், வணக்கம்.

3.4.34 250 ச�ொற்களில் உரையாடல் எழுதுவர்.

17
1
உரையாடலின் அமைப்புக் கூறுகளை அறிந்து கூறுக.

2
உரையாடலில் இடம்பெற்ற கருத்துகளைக் குழுவில் கலந்துரையாடி விளக்கி எழுதுக.
த�ொகுதி 2

3
த�ொழில்நுட்பம் கல்வியியலில் பெரும் மாற்றத்தைக் க�ொண்டு வந்திருக்கின்றது. பின்வரும்
விளக்கப்படத்தைத் துணையாகக் க�ொண்டு அம்மாற்றம் குறித்து உம் நண்பர�ோடு உரையாடுகின்றீர்.
அவ்வுரையாடலை 250 ச�ொற்களில் எழுதுக.

கற்றல் திறன்கள் படிப்பறிவுத் திறன்கள் வாழ்வியல் திறன்கள்


ஆக்கச் சிந்தனை தகவல் நெகிழ்வுடைமை
èõùˆF™ ªè£œè
மாறிவரும்
வேலைச்சந்தையில் தலைமைத்துவம் உரையாடல் அமைப்பு:
புனைவாக்கம்
மாணவர் • த�ொடக்கம்: இருவர�ோ மூவர�ோ பங்கு
ஊடகம்
கற்றோங்க முன்னெடுப்பு
பெறலாம்; முகமன் கூறல்.
இணைவாக்கம் • உள்ளடக்கம்: நான்கு கருத்துகள்;
வேண்டிய
ஆக்கமுடைமை பேசும் கருப்பொருளைய�ொட்டி
21ஆம் த�ொழில்நுட்பம் • முடிப்பு: விடை பெறல்.
நூற்றாண்டுக் த�ொடர்புறவு
சமூகவியல் • ம�ொழி: இயல்பான ம�ொழி;
கற்றல் திறன்கள் மரியாதைச் ச�ொற்கள், கனிவு, த�ொனி,
உச்சரிப்பு ப�ோன்றவை.

பேச்சு ம�ொழியறிதல்
õ÷Šð´ˆ¶î™
கணினி ந�ோக்கு
விளக்கப்படத்தை இயல்பு ம�ொழிச் செயற்பாடறிதல்
அடிப்படையாகக் இயந்திரக் கற்றலாக்கம்
க�ொண்டு 250 திட்டமிடலும் அட்டவணையாக்கமும்
ச�ொற்களில் உரையாடல்
ஒன்றனை எழுதுக.
உச்சப் பயன்மை
இயந்திரமனிதமயமாக்கம்
திறமிகு அமைவு

°¬øc‚è™

‘த�ொழில்நுட்பம் மனித வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள்’ எனும் தலைப்பில் உம் நண்பனுடன்


உரையாடுகின்றீர். உரையாடலுக்கான கருத்துகளைக் கலந்துரையாடித் திரட்டுக.
18
ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும்

திருக்குறள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

த�ொகுதி 2
கெடுநீரார் காமக் கலன். (605)

ப�ொருள்
காலம் நீட்டித்தல், மறதி, ச�ோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற
இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
கருத்து
காலம் கடத்துதல், மறதி, ச�ோம்பல், அதிக தூக்கம் ஆகியவை ஒருவரின் முன்னேற்றத்தைத்
தடைசெய்யும்.

1
உரையாடலை வாசித்து, கற்ற குறளின் ப�ொருளை விளக்கிக் கூறுக.

மறவன்: வணக்கம் ஐயா. நலமா? உங்களைப் பார்த்து எத்தனை நாளாகிவிட்டது!


ஆசிரியர்: வணக்கம் மறவா. நலமே விழைகிறேன். உன்னைப் பார்த்தும் எத்தனை நாளாகிவிட்டது?
பல்கலைக்கழக வாழ்க்கை எப்படி இருக்கிறது? விடுமுறையில் இருக்கிறாயா?

4.2.5 ஐந்தாம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன் ப�ொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

19
மறவன்: ஆம் ஐயா. ஒரு மாத கால விடுமுறையில் இருக்கிறேன்.
ஆசிரியர்: சரி, உன் நண்பன் அரசு எப்படி இருக்கிறான்? இன்னும் காலத்தைக் கடத்தியும் ச�ோம்பியும்
திரிகின்றானா? அல்லது உருப்படியாக வேலைக்குப் ப�ோகிறானா?
மறவன்: அதை ஏன் ஐயா கேட்கிறீர்கள்? அவன் நடத்தையில் க�ொஞ்சமும் மாற்றம் இல்லை.
பல்கலைக்கழகத்திலிருந்து வந்ததும் அவனைச் சந்திக்க அவன் வீட்டிற்குச் சென்றேன். அவன்
வெளியே ப�ோய் இருப்பதாக அவன் அம்மா ச�ொன்னார். மேலும், அரசு எந்த வேலைக்கும்
த�ொகுதி 2

ப�ோகாமல் காலத்தைக் கடத்திக் க�ொண்டிருப்பதாக அவன் அம்மா வேதனைபட்டுக் க�ொண்டார்.


முன்பைக் காட்டிலும் அதிகச் ச�ோம்பலாக இருக்கிறானாம். வீட்டில் இருந்தால் தூங்கியே
காலத்தைக் கழிப்பதாகவும் அரசுவின் அம்மா குறைபட்டுக் க�ொண்டார், ஐயா.
ஆசிரியர்: படிக்கும் காலத்தில்தான் அப்படி இருந்தான். இன்னமும் அப்படியே இருந்தால் எப்படி?
பாடத்தைக் கருதிப் படித்திருந்தாலும் பரவாயில்லை. க�ொடுக்கும் பாடங்களைக் காலந்தாழ்த்தியே
செய்வான். பல வேளைகளில் மறந்துவிட்டதாகவும் ச�ொல்வான். இன்று, அவன் எதிர்காலம்
கேள்விக்குறியாகிவிட்டதே! காலம் நீட்டித்தல், மறதி, ச�ோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம்
ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகுமென்ற தெய்வப்
புலவர் திருவள்ளுவரின் கூற்று அப்படியே அவனுக்குப் ப�ொருந்தி வருகின்றது.

2
திருக்குறளையும் அதன் ப�ொருளையும் மனனம் செய்து ஒப்புவித்திடுக.

3
திருக்குறளுக்கேற்ற சூழல் ஒன்றனை உருவாக்கி நடித்துக் காட்டுக.

õ÷Šð´ˆ¶î™

திருக்குறளுக்கேற்ற கதை ஒன்றனை எழுதுக.

°¬øc‚è™

ஒருவரின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் நான்கு செயல்கள் யாவை? அவற்றிற்குச் சிறு


விளக்கம் தருக. எடுத்துக்காட்டைத் துணையாகக் க�ொள்க.
எ.கா:
க�ொடுக்கப்பட்ட பணியினைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்காமல் பின்னர் செய்து க�ொள்ளலாமெனக்
காலத்தைத் தாழ்த்துவது காலத்தை நீட்டித்தல் ஆகும். நமக்குக் க�ொடுக்கப்பட்ட பணியை, கடமையைக்
குறித்த காலத்தில் செய்து முடித்தல் அவசியமாகும். அப்படிச் செய்யாமல் ப�ோனால், வேலைப்பளு
கூடுவத�ோடு பிறருக்கும் அது துன்பத்தை அளிக்கும். நாம் கெடுவது மட்டுமல்லாமல் அடுத்தவர்
வேலையையும் கெடுப்பதற்கு நாமே காரணமாக அமைந்து விடுவ�ோம்.

20
3 குடும்பத்தில் இளைஞர்கள்
ð£ì‹ 1 இளைஞர்களும் ப�ொருளாதாரமும்

கீழ்க்காணும் சூழலை வாசித்துப் பேச்சுவார்த்தை நடத்தும்


முறையைக் குறித்துக் க�ொள்க.

(இளைஞர் மன்றத்தின் நிகராளி திரு. குமரனும் இளைஞர் மற்றும்


விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரி திருமதி ந�ோரிசா பிந்தி
சாமாட்டும் தேசியப் பரிவு உதவித் திட்டம் (Bantuan Prihatin Nasional)
குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.)

திரு. குமரன்: வணக்கம் திருமதி ந�ோரிசா. நான்தான் குமரன். தேசியப் பரிவு உதவித் திட்டம் குறித்துப்
பேசுவதற்காகத் தங்களிடம் அனுமதி க�ோரியிருந்தேன்.
திருமதி ந�ோரிசா: வணக்கம், திரு.குமரன். ஓ! நீங்கள்தான் அவரா? ச�ொல்லுங்கள்.
திரு. குமரன்: தற்போது இந்தக் க�ொர�ோனா நச்சுப் பெருந்தொற்றுக் காரணமாக இளைஞர்கள்
பலர் வேலை கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். ஆனால், அரசாங்கப் பரிவுத்
திட்டத்தின்கீழ் சில பிரிவினருக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கிறது. இளைஞர்கள்
அனைவருக்கும் இந்த உதவித் த�ொகை கிடைத்தால் அவர்களுக்குப் பேருதவியாக
இருக்கும் அல்லவா?
திருமதி ந�ோரிசா: உண்மைதான் திரு. குமரன். அனைவருக்கும் இது வழங்கப்படவில்லை என்றாலும்,
அரசாங்கம் பல ஆய்வுகளை நடத்தி, வேலை இழந்து அவதியுறும் இளைஞர்களுக்கு
இந்தத் த�ொகையை வழங்கித்தானே வருகின்றது.
திரு. குமரன்: ஆமாம் உண்மைதான். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டத்தில் மலேசியக்
குடிமக்களில் 58.2 விழுக்காட்டினர் அதாவது 24 வயதுக்கும் குறைவாக உள்ளவர்கள்.
அப்படியிருக்க 21 வயத்துக்குக் கீழ்ப்பட்டோருக்கும் இந்த உதவித்தொகை வழங்குவது
நல்லதுதானே?
திருமதி ந�ோரிசா: மன்னிக்கவும், எங்கள் பார்வையில் 21 வயது அடைந்தவர்களுக்கு இந்த உதவியை
வழங்கினால் ப�ோதும். வேலை இல்லாத் திண்டாட்டத்தில் இருக்கும் இளைஞர்கள்
ஓரளவு பயன் பெறுவார்கள். மேலும், 21 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்களுள் பெரும்பால�ோர்
மேற்கல்வியைத் த�ொடரும் மாணவர்கள்தாமே?
திரு. குமரன்: நீங்கள் கூறுவதும் உண்மைதான். ஆனால், என்னுடைய கவலை எல்லாம் 21
வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கும் இந்த உதவிநிதி கிடைக்க வேண்டும் என்பதுதான்.
இதன் மூலம் அவர்களின் குடும்பச் சுமை ஓரளவு குறைவத�ோடு அவர்களின்
அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தியாகும். இதனை நீங்கள் கருத்தில் க�ொண்டால்,
இளைஞர்களுக்குப் பயன் விளையும் என்று எண்ணுகிறேன்.
1.3.10 சிக்கலுக்குத் தீர்வு காணப் பண்புடன் பேச்சுவார்த்தை நடத்துவர்.

21
திருமதி ந�ோரிசா: நல்லது திரு. குமரன். நீங்கள் பரிந்துரைத்த கருத்தை நான் ஏற்றுக் க�ொள்கிறேன்.
இதனைப் பரிசீலனை செய்து தக்க நடவடிக்கைகள் எடுக்க அமைச்சுக்குப் பரிந்துரை
செய்கிறேன்.
திரு. குமரன்: மிக்க நன்றி.
திருமதி ந�ோரிசா: நன்றி.

1
மேற்கண்ட பேச்சுவார்த்தையைப் பாகமேற்று நடித்துக் காட்டுக.

2
வழங்கப்பட்டுள்ள ம�ொழிக்கூறுகளை மேற்கண்ட பேச்சுவார்த்தையிலிருந்து வெளிக்கொணர்க.

முன்வைத்தல் ஆதரித்தல் பரிசீலித்தல் இடைமறித்தல் ஏற்றுக்கொள்ளல்


த�ொகுதி 3

3
உங்கள் வசிப்பிடப் பகுதியில் விளையாட்டு நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி
பெறுவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவதுப�ோல் நடித்துக் காட்டுக. பின்வரும் குறிப்புகளைத்
துணையாகக் க�ொள்க.

èõùˆF™ ªè£œè
இரவு நேர வேலையின் தன்மை
பண்புடன் பேசுதல்:
மாற்று நடவடிக்கைகள்
ந�ோக்கம் நவில்தல்.
எழும் சிக்கல்கள்
செயலுக்கான விளைவுகளை விளக்குதல்.
கிடைக்கும் நன்மைகள் பண்புடன் பேசுதல்.
தீர்வுக்கான ஆல�ோசனையைக் கேட்டறிதல்.

õ÷Šð´ˆ¶î™

க�ொர�ோனா பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக


உங்கள் குடும்பத்தில் திருமணம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்நிகழ்ச்சியை
நடத்துவதற்குக் காவல்துறை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்துக.

°¬øc‚è™

பேச்சுவார்த்தைக்கு ஒரு சிக்கலை முன்வைத்திடுக; அதனைத் தீர்வு காண்பதற்கான ஒரு


பரிந்துரையையும் வழங்கிடுக.

22
ð£ì‹ 2 இளைய�ோருக்கு ஊரடங்கு
ம�ௌனமாக விரைந்து வாசித்திடுக.

த�ொகுதி 3
மலேசிய அரசாங்கம் பதின்ம வயது இளைஞர்கள் இரவு வேளைகளில் வெளியே செல்வதற்கு
ஊரடங்குச் சட்ட அமலாக்கம் த�ொடர்பாக விவாதித்து வருகிறது. இது த�ொடர்பாக, இளைஞர்கள் இரவு
வேளையில் வெளியில் செல்ல விரும்புவதன் காரணத்தைத் தீவிரமாக ஆராய வேண்டும் என்று அரசாங்கம்
கருதுகின்றது. இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இளைஞர்கள் வெளியில் செல்வது
த�ொடர்பாக, நடைமுறையில் உள்ள சிக்கல்களையும் அவற்றிற்கான காரணங்களையும் கண்டறிய
இந்தப் ப�ொருத்தமான ஆய்வு துணைபுரியும் என்று கருதுகிறார்.
இளைஞர்கள் இரவு வேளை வெளியில் செல்வதற்குக் குடும்ப நடைமுறைகள் முக்கியக் காரணமாக
அமைகின்றன. பதின்ம வயதிலிருக்கும் இளைஞர்கள் இரவு வேளையில் தங்கள் வீட்டை விட்டு வெளியில்
செல்கிறார்கள் என்றால் அதற்குப் பெற்றோர்களே முழுப் ப�ொறுப்பேற்க வேண்டும். காரணம், இவர்கள்
இரவு வேளையில் வெளியில் செல்கிறார்கள் என்றால் அதற்கான அவசியக் கூறுகள் பற்றி பெற்றோர்கள்
அறிந்திருக்க வேண்டும். தேவை இல்லையெனில் அவர்கள் வெளியில் செல்வதைத் தடுக்க வேண்டும்.
இல்லையெனில் எதிர்பாராச் சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது.
இன்றைய காலக்கட்டங்களில் இளைஞர்கள் இரவு வேளையில் வெளியில் சென்றாலே பெரும் சிக்கல்கள்
ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், இவர்களின் இரவு வேளை நடவடிக்கைகளால் பல சமூகச்
சீர்கேடுகள் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டாக, இளைஞர்களிடையே ப�ோதைப்பொருள் பழக்கம், தகாத
பாலியல் உறவு, குண்டர் கும்பல், சட்டவிர�ோதப் பந்தயம் ப�ோன்ற நடவடிக்கைகளை இங்குச் சான்றுகளாகப்
பகரலாம். இவ்வாறான நடவடிக்கைகள் பெரும்பாலும் இரவு வேளைகளிலேயே நடைபெறுகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் இளைஞர்கள் இரவு வேளையில் வெளியில் செல்வதைத்
2.3.13 குடும்பவியல் த�ொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

23
தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் பெற்றோர்கள் கண்டிப்புடன் இருந்தாலும்கூட இளைஞர்கள்
அவர்களையும் மீறி வெளியில் சென்று விடுகிறார்கள். இந்தக் காரணத்தால்தான் இந்த ஊரடங்குச் சட்டம்
அவசியமாகக் கருதப்படுகிறது.
இவ்வாறான ஊரடங்குச் சட்டம் வெளிநாடுகளில், குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்றும்
அமலாக்கத்தில் உள்ளது. இது ப�ோன்ற ஊரடங்குச் சட்டம் இதுவரை குறைந்தது ஏழு நாடுகளில்
அமலாக்கத்தில் உள்ளது. அதில் நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து ப�ோன்ற நாடுகளும்
அடங்கும். பதினாறு வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் இரவு பத்து மணிக்கு மேல் வெளியில் செல்லலாகாது
என்றும், பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வெளியில் செல்லலாகாது
என்றும் இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தும் நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்,
இது நமது நாட்டிற்குப் ப�ொருத்தமானதாக அமையக்கூடியதா என்பதைத் துல்லியமாக ஆராய வேண்டும்.
இந்த ஊரடங்குச் சட்டம் அமலாக்கம் செய்வதற்கு முன், அவர்கள் எதற்காக வெளியில் செல்கிறார்கள்
என்பதை அறிய முற்பட வேண்டும். சிலர் பகுதிநேர வேலைகளுக்காக வெளியில் செல்கிறார்கள். இன்னும்
சிலர் இரவு வேளைகளில் சில சிறப்பு வகுப்புகளுக்கும், தற்காப்புக் கலை பயிற்சிக் கூடங்களுக்கும், இசை
வகுப்புகளுக்கும் சென்று வீடு திரும்புவதற்குத் தாமதமாக ஆகிவிடுகிறது. ஆகையால், இந்தத் தடையை
அமல்படுத்துவதற்கு முன் அரசாங்கம் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல்
த�ொகுதி 3

இந்த ஊரடங்குச் சட்டம் நம் இளைஞர்களுக்குத் தேவையா இல்லையா என்பது அவரவர் ஈடுபடும்
நடவடிக்கைகளைப் ப�ொருத்தே அமைகிறது. இவ்வாறான சட்டம் நலம் பயக்குமெனில் அதனால்
நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மையே.

1
வண்ணமிடப்பட்டுள்ள ச�ொற்களுக்குச் சூழலுக்கு ஏற்ற ப�ொருள் கூறுக.

2
கீழ்க்காணும் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக.

1. பதின்ம வயது இளைஞர்கள் இரவு வேளைகளில் வீட்டை விட்டு வெளியில் செல்வதைப்


பெற்றோர்கள் எவ்வாறு தடுக்க இயலும்?
2. ‘பெற்றோர்கள் கண்டிப்புடன் இருந்தாலும்கூட அவர்களையும் மீறி வெளியில் சென்று
விடுகிறார்கள்’ எனும் கூற்றை விளக்குக.
3. குடும்ப நடைமுறை எவ்வாறு பதின்ம வயது இளைஞர்கள் இரவு வேளைகளில் வீட்டை விட்டு
வெளியில் செல்வதைத் தடுக்க இயலும் என்பது த�ொடர்பான உமது கருத்துகளைக் கூறுக.

3
உரைநடைப் பகுதியில் உள்ள கருத்துகளை 50 ச�ொற்களில் த�ொகுத்துக் கருத்துரைத்திடுக.

24
õ÷Šð´ˆ¶î™

கீழ்க்காணும் உரைநடைப் பகுதியை வாசித்துத் த�ொடர்ந்துவரும் வினாக்களுக்குப் பதிலளித்திடுக.

மலேசிய நாட்டின் (2017) மக்கள் த�ொகையில் 29.4 விழுக்காட்டினர் பதின்ம வயது இளைஞர்கள்,
குறிப்பாகப் பதினெட்டு வயதிற்குக் கீழுள்ளவர்கள் ஆவர். இவர்களின் ம�ொத்த எண்ணிக்கை 9.4
மில்லியன் ஆகும். ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும், அதன் எதிர்காலமும் இந்த இளைஞர்கள்
கையில் இருக்கிறதென்றால் அது மிகையாகாது. இந்த இளைஞர்கள் நாட்டின் கண்கள்; தூண்கள்
என்று கூறுவதற்கு முன் இவர்கள் ஒவ்வொருவரும் வீட்டின் கண்களாகவும் தூண்களாகவும் இருந்து
வருகின்றனர் என்பது சாலப் ப�ொருத்தமான ஒன்று.
இப்படிப்பட்ட இளைஞர்கள் இரவு வேளைகளில் தங்களது வீட்டை விட்டு வெளியில் செல்லும்
வழக்கம் இன்று நம் நாட்டில் பரவலாகவே காணப்படுகிறது. குறிப்பாக இது நகர்ப்புறங்களில்
அதிகமாக நிலவி வருகின்றது. வீட்டிலிருந்து வெளியில் செல்லும் இவர்கள் தீயச் செயல்களில்
ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 2016ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி ம�ொத்தம் 30 844

த�ொகுதி 3
ப�ோதைப் ப�ொருள் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ம�ொத்தம் 23 000 சம்பவங்கள்
புதியதாகப் ப�ோதைப் ப�ொருளைப் பயன்படுத்தும் முயற்சியாகப் பதிவாகியுள்ளன. இன்னும் குறிப்பாகக்
கூறப்போனால், பதின்ம வயது இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பத�ோடு, இன்னும்
அதிகமாகிக் க�ொண்டும் வருகின்றது. 2012ஆம் ஆண்டில் 3 700ஆக இருந்த எண்ணிக்கை, 2013ஆம்
ஆண்டில் 7 816ஆக அதிகரித்துள்ளது. அஃதாவது, ஒரே ஆண்டில் 100 விழுக்காட்டுக்கும் மேல்
கூடியுள்ளது. ப�ோதைப் ப�ொருள் தவிர்த்து இதே காலக்கட்டத்தில் திருமணத்திற்கு முன் மகப்பேறு
அடையும் சம்பவங்களின் எண்ணிக்கை ம�ொத்தம் 81 000 ஆகப் பதிவாகியுள்ளது. இவ்வாறான
சம்பவங்கள் குடும்பக் கட்டமைப்பையும் நல்லுறவையும் பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாக்கும்
எனும் அச்சம் தற்போது மூத்த தலைமுறையினருக்கு வந்துள்ளது. எது எப்படியிருப்பினும்
இளைஞர்கள் இரவில் செல்வதைத் தடுக்கும் ப�ொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது என்பதும் தீர
ய�ோசிக்க வேண்டிய ஒன்றாக அமைகிறது.
1.
இளைஞர்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் கண்களாகவும் தூண்களாகவும் உள்ளனர் எனக்
கூறப்படுவதற்கான காரணம் என்ன?
2. 2012ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டிற்குள் ப�ோதைப் ப�ொருளுக்கு அடிமையானவர்கள்
100 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருப்பதற்குக் காரணங்கள் எவையாக இருக்கும்
என்று ஊகித்துக் கூறுக.
3. `இளைஞர்கள் இரவில் வெளியில் செல்வதைத் தடுக்கும் ப�ொறுப்பு பெற்றோர்களிடமே
உள்ளது,’ எனும் கூற்றுத் த�ொடர்பான உமது கருத்து என்ன?

°¬øc‚è™

மேலே உள்ள பனுவலின் அடிப்படையில், ஆண்டு வாரியாக நீங்கள் அறிந்துக�ொண்ட


தகவல்களை நிரல�ொழுங்கு வரைபடத்தில் எழுதுக.

25
ð£ì‹ 3 நல்லத�ொரு குடும்பம்
பனுவலை மேல�ோட்டமாக விரைந்து வாசித்திடுக.

இவ்வுலகில் மனித இனம் த�ோன்றியது முதல் இன்றைய நாள் வரை, மானிடவியலில் மாற்றங்கள்
நிகழ்ந்துக�ொண்டுதான் இருக்கின்றன. தனிமனிதர்கள் சேர்ந்து குடும்பமாகவும், குடும்பங்கள் ஒன்றிணைந்து
சமூகமாகவும், சமூகங்கள் இணைந்து நாடாகவும் உருப்பெறுகின்ற நிலையை நாம் அறிகிற�ோம். இந்தப்
பரிணாமத்தில் குடும்பம் மிகவும் முக்கியப் பங்கை வகிக்கின்றது என்றால் அது மிகையாகாது. சீரான
குடும்பம் சிறப்பான சமுதாயத்தை உருவாக்கும். சிறந்த சமுதாயம் நல்ல குடிமக்களை உருவாக்கும்.
அதனால்தான், ‘நல்லத�ொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
பல்கலைக்கழகம் எனப் பெயரிடும் அளவிற்குக் குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடு அமைய வேண்டும்.
முதலாவதாக, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும். ஒற்றுமை இல்லாக் குடும்பம் ஒருமிக்கக்
கெடும் எனும் பழம�ொழிக்கேற்பக் குடும்பத்தில் ஒற்றுமை இல்லையெனில், குடும்ப உறுப்பினர்கள்
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுப் பிளவுபட்டு, இறுதியில் குடும்பமே சின்னாபின்னமாகப் ப�ோய்விடும்.
உண்மையில், ஒற்றுமையான குடும்பத்தில் இருக்கும் சக�ோதரர்கள், சக�ோதரிகள் ஆகிய�ோருக்கிடையே
த�ொகுதி 3

நெருக்கம் அதிகமாக இருக்கும். இப்படி நெருக்கமாக இருக்கும் நிலையில், அவர்களிடையே


புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். இதனால், குடும்ப ஒற்றுமை மேல�ோங்கும்; நல்ல பண்புமிக்க
குடிமக்களாக உருவாகுவர்.
அடுத்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாக வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக
வேண்டுமெனில், குடும்ப உறுப்பினர்கள் விடுமுறைக் காலங்களில் சுற்றுலாவ�ோ சிற்றுலாவ�ோ
மேற்கொள்ளலாம். குடும்பமாக ஒன்றிணைந்து, இவ்வாறான மனமகிழ் நடவடிக்கைகள் மேற்கொள்வதால்
குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும். இந்த மகிழ்ச்சிகரமான சூழல் குடும்ப
உறுப்பினர்களிடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உதவும்
மனப்பான்மைய�ோடு உறவுக�ொள்வதற்கு இந்த மகிழ்ச்சியான சூழல் ஏதுவாக இருக்கும்.

3.4.29 250 ச�ொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

26
மேலும், குடும்பத்தில் மரியாதைப் பண்புகள் ப�ோற்றப்பட வேண்டும். ப�ொதுவாக, இன்றைய சூழலில்
குடும்ப உறுப்பினர்களிடையே இந்த மரியாதைப் பண்பு குறைந்து வருகின்றது. இளைய வயதுடையவர்கள்
வயதில் மூத்தவர்களை மரியாதையின்றி அழைப்பது வழக்கமாகி வருகின்றது. அண்ணன் அல்லது
அக்காள் உறவு முறைகளை அண்ணன், அக்காள் என்று அழைக்காமல் அவர்களைப் பெயர் ச�ொல்லி
அழைப்பதுவும் கண்டிக்கத்தக்கதாகும். மேலும் பலர் ‘வாடா; ப�ோடா’ என்றும், ‘வாடி; ப�ோடி’ என்றும், ‘அது;
இது’ என்றும் அழைப்பது மரியாதைப் பண்புக்கு இழுக்காக அமைகிறது. ஆகவே, மரியாதைப் பண்பு
என்பதைக் குடும்பத்திலிருந்து த�ொடங்க வேண்டும். குடும்பத்தில் அவர்கள் கற்றுக் க�ொள்ளும் மரியாதை,
சிறிய நிலையில் இருந்தாலும் இந்தத் த�ொடக்கம் அவர்களின் வாழ்வில் மரியாதைப் பண்புடன் நடந்து
க�ொள்வதற்கு அடிப்படையாக அமையும்.
அடுத்ததாக, குடும்ப உறுப்பினர்கள் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் க�ொடுக்க வேண்டும். சுவர்
இருந்தால்தானே சித்திரம் வரைய இயலும் எனும் பழம�ொழிக்கேற்பக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ
வேண்டுமெனில், குடும்ப உறுப்பினர்கள் உடல்நலத்தைப் பேண வேண்டும். இவ்வாறு உடல்நலத்தைப்
பேணுவதற்கு வாரத்தில் இரண்டு முறை குடும்ப உறுப்பினர்கள�ோடு மெதுநடைப் பயிற்சி, வனதள நடைப்
பயிற்சி, மலையேறுதல், நீச்சல் ப�ோன்ற ஆர�ோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதன்வழி,
அவர்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்க இயலும். இவ்வாறான குடும்பங்களில் ந�ோய் ந�ொடி ஏதுமின்றி
மகிழ்ச்சிகரமான வாழ்க்கைச் சூழலை மேற்கொள்ளலாம்.

த�ொகுதி 3
ஆகவே, நல்லத�ொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனும் கூற்றுப்படி, குடும்பம் ஒற்றுமையாகவும்
மகிழ்ச்சியாகவும் மரியாதைப் பண்புமிக்க சமுதாயமாகவும் உடல்நலத்தோடும் வாழ்ந்து வந்தால், அந்தக்
குடும்பம் சிறந்த குடும்பமாகத் திகழும். இவ்வாறான நிலை ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட்டால் வீடும்
சிறக்கும்; நாடும் மேன்மையுறும்.

27
1
வாசித்த பனுவலிலுள்ள கருத்துகளை வகைப்படுத்திக் குறிப்புகளாக எழுதுக.

2
‘குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு’ எனும் தலைப்பிற்கேற்ற முன்னுரை எழுதுக. கீழ்க்காணும்
குறிப்புகளைத் துணையாகக் க�ொள்க.

குடும்பம் என்றால் என்ன?

இன்றைய சூழலில் எவ்வாறெல்லாம் குடும்ப ஒன்றுகூடல் நடைபெறுகின்றது?

நம் நாட்டில் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வுகள் எவ்வாறு நடைபெறுகின்றன?

குடும்ப ஒன்றுகூடலால் ஏற்படும் நன்மைகள்.


த�ொகுதி 3

3
மேற்கண்ட தலைப்பை அடிப்படையாகக் க�ொண்டு 250 ச�ொற்களுக்குள் கட்டுரை
ஒன்றனை எழுதுக.

கருத்துகள் முக்கியக் கருத்து துணைக் கருத்து


உறவினர்களிடையே கருத்துப் பகிர்வு அல்லது
கருத்து 1 அனுபவப் பகிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு
உள்ளது.
நெருக்கம் அதிகமாகும், ஒருவருக்கொருவர் உதவி
கருத்து 2
செய்துக�ொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

õ÷Šð´ˆ¶î™

`அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,’ எனும் தலைப்பில் 250 ச�ொற்களில் கருத்து விளக்கக்
கட்டுரை ஒன்றனை எழுதுக.

°¬øc‚è™

உம் நண்பர் ஒருவர் தம் குடும்பத்தினரை விட்டு ஒதுங்கி இருக்க நினைக்கின்றார். அவருடைய
இந்தச் செயலைச் சுட்டிக்காட்டித் திருத்தும் வண்ணம் சில அறிவுரைகளைக் கூற விரும்புகிறீர்.
அந்த அறிவுரைகளை ஒரு பத்தியில் எழுதுக.

28
ð£ì‹ 4 இலக்கணம்

தன்வினை, பிறவினை

தன்வினை எழுவாய் தானே செய்யும் செயலைக் குறிப்பது தன்வினையாகும்.


பிறவினை எழுவாய் பிறரைக் க�ொண்டு செய்விக்கும் செயல் பிறவினையாகும்.

தன்வினை பிறவினை
• தம்பி படித்தான். • தம்பி படிப்பித்தான்.
எ.கா: • தாத்தா உண்டார். எ.கா: • தாத்தா உண்பித்தார்.
• ஆசிரியர் கட்டுரை எழுதினார். • ஆசிரியர் கட்டுரை எழுதுவித்தார்.

எ.கா: கம்பர் எழுதினார் எ.கா: கம்பர் எழுதுவித்தார்

த�ொகுதி 3
இவ்வாக்கியத்தில் கம்பர் என்னும் எழுவாய் இவ்வாக்கியத்தில் கம்பர் என்னும்
எழுதும் செயலைத் தானே செய்வதால் அது எழுவாய் எழுதும் செயலைப் பிறர்கொண்டு
தன்வினை வாக்கியமாகிறது. செய்விப்பதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

பாடினாள் பாடுவித்தாள்
கட்டினான் கட்டுவித்தான்
திருத்தினான் திருத்துவித்தான்
ஆடினான் ஆட்டுவித்தான்
மாற்றினாள் மாற்றுவித்தாள்

1
பின்வரும் ச�ொற்களைத் தன்வினை, பிறவினை என வகைப்படுத்தி எழுதுக.

படிப்பி செய்தான் கற்பிப்பார் நடந்தான்


செய்வி தேடினான் சேர்கிறேன்
உண்பிப்பான் த�ொடுத்தாள் அடக்கு

5.2.7 தன்வினை, பிறவினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

29
2
அட்டவணையை நிறைவு செய்க.

தன்வினை பிறவினை
தட்டுவார்
பாய்ச்சுவித்தான்
உருள்வான்
எழுப்புவித்தார்
வருந்துவான்

3
உமக்குத் தெரிந்த தன்வினை பிறவினை ச�ொற்களைப் பட்டியலிடுக.
த�ொகுதி 3

தன்வினை பிறவினை

õ÷Šð´ˆ¶î™

தன்வினை பிறவினைச் ச�ொற்கள் க�ொண்ட வாக்கியங்களை எழுதுக.

தன்வினை:

பிறவினை:

°¬øc‚è™

வாக்கியத்தில் தன்வினை பிறவினைச் ச�ொற்களைக் க�ோடிடுக.

1. பல்லவ மன்னர்கள் தமிழ் நாட்டில் பல க�ோயில்களைக் கட்டுவித்தனர்.


2. ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போது மாணவர்கள் அனைவரும் கவனமாகச் செவிமடுத்தனர்.
3. அவன் தனக்குத் தெரிந்த தகவல்களைத் தெளிவாக எழுதினான்.
4. அகழ்வாராய்ச்சியாளர்கள் கீழடி அகழ்வாராய்ச்சிப் பகுதியில் தமிழர் நாகரிகத்தை
வெளிப்படுத்தும் ப�ொருள்களைக் கண்டுபிடித்தனர்.
5. ‘ஆட்டுவித்தால் ஆர�ொருவர் ஆடாதார�ோ’ எனும் பாடல் ப�ொருள் ப�ொதிந்தது.

30

You might also like