You are on page 1of 1

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மற்றும் மலையாளப் புத்தாண்டு நாளான

விஷூ ஆகிய சமயங்களில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள்


சபரிமலை செல்ல அனுமதிக்கப்படாவிட்டாலும், மாதாந்திர பூஜைகளுக்காக
கோயில் திறக்கப்பட்ட சமயங்களில், கோயில் நிர்வாகத்தால், எந்த வயது
வேறுபாடும் இல்லாமல் பெண்கள் அனுமதிக்கப்பட்டது அந்த வழக்கு
விசாரணையில் தெரியவந்தது.

எனினும், நீண்ட காலமாக பின்பற்றப்படும் வழக்கம் உள்ளிட்ட காரணங்களைக்


கூறி 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் சபரிமலைக்குள் நுழைய கேரள உயர்
நீதிமன்றம் தடை விதித்தது.

10 முதல் 50 வயதுள்ள பெண்கள் நுழையத் தடை விதிக்கப்படுவது அரசியல்


சாசன சட்டத்துக்கு முரணானதல்ல என கேரள உயர்நீதிமன்றம் அந்த வழக்கின்
தீர்ப்பில் கூறியிருந்தாலும், மாதாந்திர பூஜைகளுக்காக கடந்த 20
ஆண்டுகளாகவே பெண்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என அதே தீர்ப்பில்
கூறியிருந்தது.

"மலையாள ஆண்டு 1115 இல் திருவாங்கூர் மன்னர் மற்றும் அரசி அந்தக்


கோயிலுக்குச் சென்றதாகக் குறிப்பிடும் இந்தத் தீர்ப்பு, பண்டைய நாட்களில்
பெண்கள் கோயிலுக்குச் செல்ல தடை இல்லை; எனினும் அதிக
எண்ணிக்கையில் கோயிலுக்குப் பெண்கள் செல்லவில்லை," என்று அந்தத்
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில், குறிப்பாக 1950 க்குப் பிறகு, பெண்கள் கோயிலுக்குச்


செல்லும் முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று 1991 இல்
வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மாதவிடாய் வயதில் உள்ள பெண்களையும் கட்டணம் வாங்கிக்கொண்டு


சபரிமலைக்குள் நுழைய அனுமதித்த அதே சபரிமலை தேவசம் போர்டு, 2016 இல்
பெண்கள் நுழைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

1990 இல் ஒரு நிலை எடுத்திருந்த தேவசம் போர்டு அதற்கு மாறாக 2016 இல்
உச்ச நீதிமன்றத்தில் கூறியது, அதன் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தில்
ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இருக்கலாம்.
எனவே, 2018 செப்டம்பர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே மாதவிடாய்
வயதுள்ள பெண்கள் முதல் முறையாக சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தனர்
என்பது உண்மையான தகவல் அல்ல.

You might also like