You are on page 1of 1

Farewell Day ( கல்லூரி கால நட்பு)

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள்


என்ற கனவுடன் நுழைந்தேன்
கல்லூரிக்குள்...!

முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி


முதல் நட்பு கிடைக்க, நாளடைவில்
எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை
இந்த கல்லுரியில்...!

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்


என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின்
கவலையைப் போக்க போராடியும்,
என் நண்பன் வட்டு
ீ விசேசங்களுக்கு சென்று
அவர்களின் வட்டுப்
ீ பிள்ளைதான் நாங்களும்
என்று கவனித்த அவர்களின் பாசத்தையும்
இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...!

என் முகம் வாடிக்கிடக்க,


நான் இருக்கிறேன் உனக்காக
என்ற குரல் ஒன்று போதும்
என் முகம் மலர...!

தினம் தினம் நமது கால்கள்


ஒன்றின்பின் ஒன்றாக நடக்கவே
இன்பம், துன்பம் அனைத்தையும்
பகிர்ந்தபடியே மெல்ல சென்றது
கல்லூரி கால நாட்கள்...!

இன்று கல்லூரி படிப்பு முடிந்தாலும்


நம் நட்புக்கு முடிவு
என்பதே இல்லை என்றும்...!

தொடரட்டும் நம் நட்பு என்றென்றும்...!!!

You might also like