You are on page 1of 2

தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை

ஆர்.முத்தையா

தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான


தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள
சுண்டிக்குளியில் பிறந்தார். முத்தையா அவர்கள் தாம் கண்டுபிடித்த
தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது
சிறப்பான பல அம்சங்களை உடையது.

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு


வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அமைக்க முடியாது. எனவே, பல
எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி
விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன்
சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும்.
அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச்
செய்ய வேண்டும்.

பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக்


கண்டுபிடித்தார். அதாவது "வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை
அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள "வ" வை அடித்த பின்
தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன.
இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு
உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம்


இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள்
இந்த மூன்று விசைகளையும் வலக்கையின் சிறு விரலால்
இயக்குவர். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’,
த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற
எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது
குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை
என அழைக்கப்படுகிறார்.

You might also like