You are on page 1of 18

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு

அறிவிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வெயில் தகிக்கும்


சாலைகளில் நடந்து சென்றதையும் உணவின்றி இறந்துபோனதையும் நாம்,
மறந்திருக்கமாட்டோம்.

படிக்க :
♦ வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக்
கூட்டவிருக்கும் விவசாயிகள் !
♦ விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு

சமீ பத்தில் Oxfam நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகின் முதல் பத்து


பணக்காரர்களின் செல்வம் ஒட்டுமொத்தமாக அரை டிரில்லியன் டாலர்கள்
அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த பணம் வறுமையை ஒழிக்கவோ, தடுப்பூசி போடவோ
பயன்படுத்தப்படவில்லை.

பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயரும் அதே சமயத்தில், இன்றைய பொருளாதார


அமைப்பில் தனக்கு இருக்கும் வல்லமையை பயன்படுத்திக்கொண்டு ஏகாதிபத்திய
நாடுகள் வளரும் நாடுகளை சுரண்டுவதில்தான் கவனம் செலுத்தினவேயன்றி,
கொரோனாவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும் வளரும் நாடுகளுக்கு எந்த
உதவியும் செய்யவில்லை. மாறாக, சர்வதேச நிதி நிறுவனங்கள் வட்டியைக் குறைத்து,
மீ ண்டும் கடன் வாங்கச் சொல்கின்றன.
பெரும் வட்டிக்கு கடன் கொடுத்து கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்குச் செல்ல
வேண்டிய பணத்தை வட்டிகட்ட நிர்பந்திக்கின்றன. வளரும் நாடுகளின் வெளிநாட்டுக்
கடன் மொத்தம் 11 டிரில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதில் கடந்த ஆண்டு மட்டும்,
உலகின் 64 நாடுகள் தங்கள் நாட்டின் சுகாதாரத்திற்கு செலவிட்டதைவிட அதிகமான
தொகையை கடன்களை அடைக்க செலவிட்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கண்டுபிடிக்கும்


தடுப்பூசிகளுக்கு காப்புரிமை வைத்துக் கொண்டு அதன் மூலமான சுரண்டலிலும்
ஈடுபடுகின்றன. “தடுப்பூசிகள் மீ தான காப்புரிமைகளை நீக்கிக் கொள்ளுமாறு” வளரும்
நாடுகள் வைத்த கோரிக்கைகளை இந்த பணக்கார நாடுகள் அலட்சியம் செய்தன.
இப்படிப்பட்ட மோசமான பெருந்தொற்று காலத்திலும் காப்புவாதம் அப்பட்டமாக
பின்பற்றப்படுவதுதான் முதலாளித்துவக் கட்டமைப்பின் ‘சிறப்பியல்பு’.

ஐக்கிய நாடுகள் சபையின் (UN), உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் உணவு


பாதுகாப்பின்மை பற்றிய 2020-ம் ஆண்டிற்கான அறிக்கை, “வரும் 2030-ம் ஆண்டிற்குள்
உலகில் பட்டினியாக இருப்பவர்களின் எண்ணிக்கை 840 மில்லியனாக அதிகரிக்கும்”
என்று சுட்டிக் காட்டுகிறது. எதார்த்தத்தில் நிலைமை இதை விட மோசமாக இருப்பதற்கே
வாய்ப்பு அதிகம்.

உலகம் முழுவதும் சத்தான உணவு கிடைக்காமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 2


பில்லியனாக உள்ளது. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 26% ஆகும். இந்த
மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள், அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழக்கமாக
கிடைப்பதில்லை. பெருந்தொற்றுக்கு முந்திய நிலைதான் இது. “இந்த பெருந்தொற்று
கட்டுக்குள் வைக்கப்படும் முன்பே, பட்டினி கிடக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு
மடங்காகும்” என உலக உணவு செயல்திட்டம் எனும் நிறுவனம் கணித்திருக்கிறது.

உலகளவில் பசிக் கொடுமை தலை விரித்தாடும் இப்போதைய நிலையில், பொருளாதார


கொள்கை விவசாயிகளுக்கு சாதகமாக மாற்றுவதன் மூலம், பெருந்தொற்று காலத்தில்
தரமான உணவு கிடைக்க வழிவகை செய்யமுடியும். உணவு மலிவாக கிடைக்க
மானியங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால், IMF போன்ற உலக நிறுவனங்கள்
பொது உணவு விநியோகத்திற்கான மானியங்களை வழங்க முன்வருவதில்லை. இந்த
நிறுவனம்தான் மானியங்களை ஒழிக்கச்சொல்லி மூன்றாம் உலக நாடுகளுக்கு அழுத்தம்
கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
உலகம் முழுவதும்
நிலைமை இப்படியெனில், இந்தியாவில் இந்தப் பெருந்தொற்றை பயன்படுத்தி
விவசாயத்தை கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் சட்டங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் வேளாண் பொருட்கள் சந்தையை
கார்ப்பரேட்டுகளின் கையில் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொடுக்கவே இந்தச் சட்டங்கள்
நிறைவேற்றப்படுகின்றன.

ஒருபக்கம் இந்திய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு


உயர்கிறது. இன்னொரு பக்கம் வேலையிழப்பும், கூலி குறைப்பும், வறுமையும்,
பட்டினியும் நடந்துகொண்டிருக்கிறது. மக்களின் வாழ்நிலைக்கும் இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சியாகக் காட்டப்படும் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணிற்கும் எந்தச்
சம்பந்தமும் இல்லை என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது.

உணவு, கல்வி, மருத்துவம் என முக்கிய ஆதாரங்களில், ஏகாதிபத்திய நாடுகள் தங்களின்


வல்லாதிக்க நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வளரும் நாடுகளை
சுரண்டுகிறது. பணக்காரர்கள் ஏழை மக்களிடமிருந்து பணத்தை உருஞ்சுவதில் நுட்பமான
செயல்படுகிறார்கள். இதைப் பயன்படுத்தி உழைப்பாளர்களின் கூலியை குறைத்தனர்.
வருமானம், கூலி குறையும் போது அது தொழிலாளர்களின் வாழக்கைத்தரத்தை மேலும்
பாதிக்கும். மீ ண்டும் சந்தையில் தேக்க நிலை உருவாகும்.

முதலாளித்துவத்தின் இயல்பாகவே இருக்கின்ற நெருக்கடியை மக்களைச் சுரண்டிதான்


முதலாளித்துவம் சரி செய்து கொள்ளும். இது போன்ற கொடுமையான பெருந்தொற்று
காலத்திலும் இந்த அரசுக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது இலாபத்தை
அதிகரிக்கவே அவர்கள் முயற்சி செய்து வருகிறது முதலாளித்துவம்.

உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் ஆங்காங்கே போர்க் குணமிக்க போராட்டங்களை


மேற்கொண்டு வந்தாலும், இவை எதுவும் மக்களைச் சுரண்டும் வகையில்
வடிவமைக்கப்பட்ட இந்த பொருளாதாரக் கட்டமைப்பை நிகழ்ச்சிப் போக்கில் மாற்றிவிடப்
போவதில்லை. மாற்றவும் முடியாது. சமூக மாற்றத்திற்கான அறிவியலான
மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால்
மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை
தகர்க்க முடியும்.
பெருந்தொற்றின் காரணமாக அரசே தனது சுரண்டலை குறைத்துக் கொள்ளும் என்றோ,
கார்ப்பரேட்டுகளுக்குக் கடிவாளம் போடும் என்றும் நினைப்பது வெறும் பகல்கனவுதான்.

உலகின் பல்வேறு நாடுகளில் இனிமேல்தான் 5 ஜி (5G) தொழில்நுட்பம் நடைமுறைக்கு


வரவிருக்கிறது. ஆனால் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டமான 6 ஜி
(6G)-யை கைகொள்ளும் போட்டியில் சீனாவும் அமெரிக்காவும் கடுமையாக
ஈடுபட்டுள்ளன. 6 ஜி தொழில்நுட்பத்தை முதலில் தயாரித்து அறிமுகப்படுத்தும் நாடுதான்
அடுத்த தொழிற்புரட்சி என்று சொல்லப்படும் 4.0 ல் வெற்றியாளராக இருக்கமுடியும்.

5 ஜி-யின் உச்சபட்ச வேகத்தைவிட 6 ஜி தொழில்நுட்பத்தின் வேகம், 100 மடங்கு


அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. 6 ஜி தொழில்நுட்பம் இன்னும் கோட்பாட்டு
அளவிலானதாக இருந்தாலும், அதுசார்ந்து படிப்படியான வளர்ச்சிகள் ஏற்பட்டு
வருகின்றன. 6 ஜி-யை நடைமுறைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர இன்னும்
குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் ஆகும். 6 ஜி-யை கொண்டு இதுவரை அறிவியல்
புனைகதைகளில் கூறப்பட்டு வந்த தொழில்நுட்பங்களையும் கூட நடைமுறைக்கு
கொண்டுவர முடியுமென்பதால் அதற்கான போட்டியில் தற்போதே அமெரிக்காவும்
சீனாவும் அதிக கவனம் செலுத்துகின்றன.

ஏற்கெனவே இருந்த 5 ஜி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா – சீனா இடையிலான போட்டி


உலகமறிந்ததே. 5 ஜி தொழில்நுட்பத்தில் முன்னேறி உலகளாவிய சந்தையை முதலில்
கைப்பற்றிய சீனாவை ஓரம்கட்ட அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

படிக்க :
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
♦ கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும்
சென்னை பல்கலை !

சீன நிறுவனங்களின் செயல்பாடுகளை அமெரிக்காவால் முடக்க முடியும் என்பதற்குச்


சான்றாக, ZTE என்னும் தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை
கடந்த 2018-ம் ஆண்டில் தடை செய்ததன் மூலம் நிரூபித்தது. இந்தத் தடை ZTE
நிறுவனம் ஏறக்குறைய சந்தையிலிருந்து காணாமல் போகும் அளவுக்குத் தீவிரமாக
இருந்தது. இதுபோல Huawei நிறுவனத்தின் தொலைதொடர்புச் சாதனங்களால் வேவு
பார்க்கப்படும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அமெரிக்கா, ஜப்பான், ஸ்விடன்,
இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்த நிறுவனத்தின் 5 ஜி வலைப்பின்னல் கருவிகளை தடை
செய்தன. டிரம்ப் ஆட்சியில் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு
இன்னல்களை சந்தித்திருந்தாலும், அவையெதுவும் சீன நிறுவனங்களை 5 ஜி
தொழில்நுட்பத்தில் முன்னணியாளராக வளர்வதை தடுக்கமுடியவில்லை.

உலகளவில் சீனாவின் Huawei தொழில்நுட்ப நிறுவனம்தான் 5 ஜி தொழில்நுட்பத்தில்


மிகப் பெரியதாக இருக்கிறது. இதனால், 6 ஜி தொழில்நுட்பத்தை கைக்கொள்வதன்
மூலம், அமெரிக்கா கம்பியில்லா (wireless) தொழில்நுட்பத்தில் தான் தவறவிட்ட
இடத்தை மீ ண்டும் பெற்றுக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறது.
6 ஜி தொழில்நுட்பம் சீனா, அமெரிக்கா நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களின்
செயல்திட்டத்தில் பல ஆண்டுகளாகவே இருந்திருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள்
அதிபர் டிரம்ப் 2019-ம் ஆண்டிலே, 6 ஜி விரைவில் கொண்டு வரப்படவேண்டும் என்று
ீ செய்துள்ளார். 6 ஜி தொழில்நுட்பத்தில், சீனா ஏற்கனவே முன்னணியில்
டிவட்
இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், 6 ஜி அலைகளை அனுப்புவதில் அலைக்கற்றைகளின்
திறனை சோதனை செய்யும் விதமாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில்
செலுத்தியுள்ளது. மேலும் ஹுவாவெய் நிறுவனம் கனடாவில் 6 ஜி ஆய்வுக்கூடத்தை
அமைத்திருக்கிறது.

6 ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டுவர, மிக உயர்ந்த அதிர்வெண் கொண்ட


அலைகள் உருவாக்கும் தொழில்நுட்பம் வேண்டும். அந்த அலைகளில் கடத்திவரப்படும்
மிக அதிக அளவிலான தரவுகளை சேர்த்துவைத்து கையாளும் மின்னணு கருவி(Chip)
இன்னும் உருவாக்கப்படவில்லை. மேலும், இந்த மிக உயர்ந்த அதிர்வெண் கொண்ட
அலைகளால் மிகக்குறுகிய தூரம்தான் செல்லமுடியும் என்பதால், ஒவ்வொரு
தெருவிலும் நிறைய டவர்கள் அல்லது நிலையங்கள் தேவைப்படுவதோடு, ஒவ்வொரு
கட்டிடத்திலும் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய தேவை ஏற்படலாம். இதன் உப
விளைவுகள் நகர்புற மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, தனி மனிதர்களின்
அந்தரங்க உரிமைகளையும் பாதிக்கும்.

5 ஜி , 6 ஜி தொழில்நுட்ப
மேலாதிக்கத்துக்கான போட்டி வெறுமனே இரு நாடுகளோடு முடிந்துவிடவில்லை.
அறிவியலின் அடுத்தகட்டத்தை யார் கைக்கொள்வது என்பதில் முதலாளித்துவம் இரு
முகாம்களாக அணி சேர்ந்திருக்க்கிறது. ஏற்கெனவே, அமெரிக்காவின் “Alliance for
Telecommunication Industry Solutions” (ATIS) எனும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம்
சார்ந்த கூட்டமைப்பு, Next G Alliance என்ற ஒரு கூட்டமைப்பை அமைத்துள்ளது. அதில்,
Apple, Google, Qualcomm Inc, AT&T Inc, Samsung Electronics போன்ற தொழில்நுட்பப் பெரு
நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதிலும் சீன நிறுவனமான ஹுவாவெய் சேர்த்துக்
கொள்ளப்படவில்லை. ஆனால், ரசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் ஆப்பிரிக்க
நாடுகள் ஹுவாவெய் (Huawei) நிறுவனத்தை ஏற்றுக்கொண்டுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டணி திட்டம் 5 ஜி தொழில்நுட்ப விவகாரத்தில், உலகம் இரண்டு முகாம்களாக
பிரிந்துள்ளதை காட்டுவதாக இருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனித குலத்தின் அறிவுச் செழுமையின் விளைவுதான்


என்றாலும் அது யார் கையில் இருக்கிறது என்பதில் இருந்தே அதன் நோக்கம்
தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் சீனாவும் அமெரிக்காவும் இந்த 5 ஜி
தொழில்நுட்பத்தை பெரும்பாலும் கண்காணிப்பு மற்றும் தமது தகவல் திரட்டு
தொழில்நுட்பத்திற்காகவுமே பயன்படுத்தி வந்திருக்கின்றன.

இனி வரவிருக்கும் 6 ஜி தொழில்நுட்பத்தையும் கண்காணிப்பை இன்னும் நுண்ணியமாக


மேற்கொள்ளவே பயன்படுத்துவர் என்பது உறுதி. சீனாவும் அமெரிக்காவும் ஏற்கெனவே
தமது சொந்த நாட்டு மக்களையும், உலகம் முழுவதையும் கண்காணிப்பதில்
தொழில்நுட்பத்தை கேடாக பயன்படுத்தி வருகின்கிறன.

படிக்க :
♦ சுற்றிவளைக்கப்படும் சீனா!
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

முதலாளித்துவத்தின் கையில் தொழில்நுட்பம் இருக்கும்வரையில் அது


ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்துக்கும், கண்காணிப்புக்குமான தொழில்நுட்ப போட்டியாக,
புவியரசியல் ஆதிக்கத்திற்கானதாகவும், சர்வதேச வல்லாதிக்கத்திற்கானதாகவும்
பயன்படுத்தப்படுகிறது. அதற்கு தற்போதைய 5 ஜி மற்றும் அடுத்து வரவிருக்கும் 6 ஜி
தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான
போட்டியே சாட்சி.

முதலாளித்துவத்தின் கையில் தொழில்நுட்பமானது லாபவெறிக்காகவும், மக்களை


கண்காணிப்பதற்கும் சுரண்டுவதற்காகவுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில்
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனிற்கு
என்றும் சேவை செய்யப் போவதில்லை என்பதைத் தாண்டி, அவர்களைக்
கண்காணிக்கவும், படிப்படியாக ஒழித்துக் கட்டவுமே அது பயன்படுத்தப்படுகிறது.

Kjyhspj;JtKk; njhopw;El;gKk;

அதானி அலறியதையும் அறிக்கை விட்டதையும் இரண்டு


நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்று அம்பானி அலறுகிறார்.

ஜியோவிலிருந்து லட்சக்கணக்கானவர்கள்
வெளியேறுகிறார்களாம். “விவசாயிகள் போராட்டத்தை
ஆதரியுங்கள், ஜியோவிலிருந்து வெளியேறுங்கள்” என்று தங்கள்
வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லும் வோடபோனும் மெசேஜ்
அனுப்புகிறார்களாம். அவர்கள் மீ து நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று டிராய் க்கு புகார் செய்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.

அம்பானி, டேட்டாவுக்கு அலைவரிசையை ஏலமெடுத்து


வாய்ஸ்க்கு மாற்றினார். வரம்பு மீ றிய காலத்துக்கு இலவச சேவை
அளித்து வாடிக்கையாளர்களை வளைத்து விட்டு பின்னர் விலை
உயர்த்தினார். பி.எஸ்.என்.எல் கம்பி வடங்களை நாசமாக்கினார்.
சந்தை ஏகபோகத்தை  கைப்பற்றுவதற்காக எல்லா
அயோக்கியத்தனங்களையும் செய்த அம்பானி , இன்று தனக்கு
அநீதி இழைக்கப்படுவதாக அலறுகிறார்.

அம்பானி அதானி நிறுவனங்கள், பொருளாதார ரீதியாக ப் பெரிதும்


பாதிக்கப்படாவிடினும், அவர்கள் இந்திய மக்களின் எதிரிகள்
என்பதும், மோடி அரசு அவர்களது அடிமை என்பதும்
பொதுக்கருத்தில் பதிவாகிவிட்டது.

இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆர்.எஸ்.எஸ்


இன் முன்னணி அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்சின் மாநாட்டுத்
தீர்மானத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். (RSS affiliate picks holes
in laws, warns against monopoly by MNCs, The Tribune,14.12.20)

ADVERTISEMENT
REPORT THIS AD

அதன் அனைத்திந்திய  மாநாடு கீ ழ்க்கண்டவாறு தீர்மானங்கள்


நிறைவேற்றியிருக்கிறது:

“சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடை


செய்யவேண்டும்.

ஒரேயொரு ஏகபோக நிறுவனம்,  விவசாயிகளையும்


நுகர்வோரையும் சுரண்டும் வகையில் சட்டம் இருக்கக் கூடாது.

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்க வேண்டும்.


விவசாயி என்று  ஒரு கார்ப்பரேட் கம்பெனியையே இந்த சட்டம்
வரையறுக்கிறது. இதனை மாற்றவேண்டும்.”

“ஹிந்து ஹ்ருதய சாம்ராட்”டுக்கு எதிராக சங்கிகளே தீர்மானம்


போட வேண்டிய  ஒரு துர்ப்பாக்கிய நிலை!

காலிஸ்தான், மாவோயிஸ்டு பூச்சாண்டிகளெல்லாம்


போணியாகாத நிலையில், பஞ்சாப் – அரியானா வுக்கு
இடையிலான நீண்டகாலத் தண்ணர்ப்
ீ பிரச்சனையான, சட்லஜ் –
யமுனா இணைப்புக் கால்வாய் பிரச்சனையைக் கிளப்பி பஞ்சாப்
விவசாயிகளுக்கு எதிராக அரியானா விவசாயிகளை கொம்பு சீவ
முடியுமா என்று பார்க்கிறார் அரியானாவின் விவசாயத்துறை
அமைச்சர்.

“இந்த நேரத்தில்தான் நமக்கு  சுலபமாக அப்பாயின்ட்மென்ட்


கிடைக்கும். உடனே டெல்லிக்குப் போய் மோடிக்கு ஆதரவு
கொடுத்துவிட வேண்டியதுதான்” என்று,   தமிழ்நாடு,
தெலுங்கானா, பிகார் போன்ற மாநிலங்களிலிருந்து,  பச்சைத்
துண்டணிந்த சில அல்லக்கைகள் கிளம்பி விட்டார்கள்.  மந்திரி
தோமரை சந்தித்து “ஆதரவு” தெரிவித்து போட்டோ எடுத்து
போட்டுக் கொள்கிறார்கள்.
(தமிழ்நாட்டிலிருந்து போன இந்த அல்லக்கை யாரென்று
தெரியவில்லை)

எல்லையில் வந்து குவிந்த வண்ணம் இருக்கும் விவசாயிகள்


கூட்டத்தைக் கண்டு கதிகலங்கி, “போதும் இதற்கு மேல் கூட்டம்
சேர்க்காதீர்கள்” என்று விவசாய சங்கத் தலைவர்களிடம்
ரகசியமாக கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அரியானா போலீஸ்
அதிகாரிகள்.

நிலைமை இப்படி இருக்க பாஜக வின் தேசிய செயலர் அருண் சிங்


“நாட்டின் 99%  விவசாயிகள் மோடியின் பக்கம்” அண்ணன் மேல
கை வெச்சி பாருங்கடா என்று சவால் விடுகிறார்.  மோடியோ,
“விவசாயிகளை  வேண்டுமென்றே குழப்புவதற்கு சதி நடக்கிறது”
என்று குஜராத்துக்குச் சென்று குமுறுகிறார்.
அண்ணன் மோடி,  அரை பாடி வண்டியிலேயே கம்பியைப்
பிடிக்காமல் நிற்கக்கூடியவர். அவர் இப்போது பேலன்ஸ்
பண்ணுகிறாரா, தடுமாறுகிறாரா என்று சக சங்கிகளால் ஒரு
தீர்மானத்துக்கு வர முடியவில்லை.

நெடுஞ்சாலையில் காய்கறி விவசாயம்!

மோடியின் நிலை இவ்வாறிருக்க, திக்ரி நெடுஞ்சாலையில்


காய்கறி பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள் விவசாயிகள்.

“சாலைகளுக்கு இடையிலுள்ள பகுதியில்  மண் அருமையாக


இருக்கிறது. கொத்தமல்லி, காலி ஃபிளவர், முள்ளங்கி,
கீ ரையெல்லாம் போட்டிருக்கிறோம்.  வட்டுத்
ீ தோட்டம்னு
வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் ஆத்ம நிர்பார். இதுவும் ஒரு
போராட்டம்தான். கோரிக்கை நிறைவேறாமல் இங்கிருந்து  கிளம்ப
மாட்டோம் என்று மோடிக்கு புரிய வைக்கின்ற போராட்டம்”
என்கிறார்கள் விவசாயிகள்.

மெரினாவின் ஜல்லிக்கட்டு காட்சி நினைவுக்கு வருகிறது.


மேடையில் யார் யாரோ பேசியவண்ணம் இருக்கிறார்கள். யார்
வேண்டுமானாலும் பேசலாம்.  பேச விரும்பினால் தனது ஊர்,
பெயர் மற்றும் விவரங்களை எழுதிக்கொடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட மதம் அல்லது க ட்சி பற்றி பேசக்கூடாது.
அவ்வளவுதான் நிபந்தனை. கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள்,
திரைப்படங்கள் என்று காலை 11 மணி முதல் பகல்பொழுது
துடிப்புடன் நகர்கிறது. பகல் நேரத்தின் திறந்த மேடைதான் இரவு
நேரத்தில் பலருக்கு படுக்கையறை.

நன்கொடையாக பொருட்கள் வந்த வண்ணமிருக்கின்றன.


உண்டியலில் பணம் சேர்கிறது. அன்று இரவு பணத்தை எண்ணி,
கணக்கு வைத்து, தேவையான பகுதிகளுக்கு பிரித்துத்
தருகின்றனர்.
இரவுச் சாப்பாடு 12 மணி வரையில் தொடர்கிறது.  குளிருக்கு
சூடான தேநீரைப் பருகிய வண்ணம், கும்பல் கும்பலாக
இளைஞர்கள் கூடி நின்று அரசியல் விவாதம் நடத்துகிறார்கள். 
முன் பின் தெரியாதவர்களும்  போர்வைகளையும்
விரிப்புகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

விவசாயிகளிடையே பிரச்சனையை உருவாக்கி போராட்டத்தை


சீர்குலைக்கும் நடவடிக்கைகள்த் தடுக்கும் பொருட்டு,
முன்னெச்சரிக்கையாக 200 மீ ட்டருக்கு நான்கு பேர் என இரவு
ரோந்து  செல்கிறார்கள் தொண்டர்கள்.

காலை நான்கரை மணிக்கெல்லாம் துப்புரவுப் பணி, சமையல்,


தேநீர் … என காலைப்பொழுது சுறுசுறுப்பாகத் தொடங்குகிறது.
(Night at the farmers protest, Ind exp, 14.12.20)

குளிர் 4 டிகிரிக்கு கீ ழே போய்க் கொண்டிருக்கிறது.  நாட்கள் நகர்ந்து


கொண்டிருக்கின்றன.  “களைப்படைந்து வெளியேறுவார்கள்”
என்று மோடி அரசு  நம்பக்கூடும். அரசியல் ரீதியாகவோ, மத
ரீதியாகவோ  பிளவை ஏற்படுத்தவும்  அவர்கள் 
முயற்சிக்கக்கூடும்.

அது எளிதல்ல. நிலைமை அவ்வாறு இல்லை.

அன்று, “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்று நாடாளுமன்றத்தில் 


பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குண்டு வசினான்
ீ பகத்சிங்.

இன்று,  மோடி அரசுக்கு எதிராக  பஞ்சாப்  விவசாயிகள்


எழுப்பியிருக்கும் போர்க்குரல், நாடெங்குமுள்ள விவசாயிகளின்
காதுகளை மெல்ல எட்டி வருகிறது. உ.பி, ம.பி, அரியானா,
ராஜஸ்தான் எனப் பல மாநில விவசாயிகளும் டில்லியை நோக்கி
வந்த வண்ணமிருக்கிறார்கள்.
ராஜஸ்தான் விவசாயிகளை ஜெய்ப்பூர் – டில்லி
நெடுஞ்சாலையில்  தடுத்து நிறுத்தியிருக்கிறது அரியானா
போலீஸ். மோடி அரசு டில்லிக்குள்ளே மனிதர்களை அனுமதிக்க
மறுப்பதால்,  மாடுகளைப் பெரும்படையாக
அனுப்பியிருக்கிறார்கள் ராஜஸ்தான் விவசாயிகள்.

கோமாதாவுக்கும் தடைதான்.

தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இடம் எது தெரியுமா? ஆல்வார்


நகரம்.

பெஹ்லுகான் அடித்துக் கொல்லப்பட்ட அதே நகரத்தில், அதே


நெடுஞ்சாலையில், கோமாதாக்களும் ஹிந்து விவசாயிகளும்
மோடிக்கு எதிராக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மித்ஷாவைக் கண்டு அடிமை எடப்பாடி அரசு நடுங்குவதை


வைத்து, “அமித் ஷா பெரிய அப்பாடக்கர்” என்று பில்டப்
கொடுக்கும் தமிழ் ஊடக வைத்திகள், நேற்று விவசாயிகள்
வெளியிட்டிருக்கும்  அறிக்கை  பற்றி என்ன சொல்வார்கள்?

“நான் சொன்னபடி புராரி மைதானத்துக்கு வா, 3 ஆம் தேதி


பேசுவோம்” என்று தெனாவெட்டாக அறிவித்த அமித் ஷாவின்
முகத்தில் சப்பென்று அறைந்திருக்கிறார்க்கள் விவசாயிகள்.

“அரசு முன்வைத்த தீர்வுகளை நிராகரிக்கிறோம்” என்று மட்டும்


அவர்கள் சொல்லவில்லை. “நாங்கள் 3 சட்டங்களையும் திரும்ப
பெறு என்று கோருகிறோம். அதற்கு பதில் சொல்லாமல்,
பிரச்சனையை திசை திருப்பி  விவசாயிகளை
அவமானப்படுத்தியிருக்கிறீர்கள்”என்று சாடியிருக்கிறார்கள்.

ரிலையன்ஸ், அதானி பொருட்கள் புறக்கணிப்பு, ஜியோ


புறக்கணிப்பு, டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்த மறுப்பு,
பாஜக எம்.எல்.ஏ , எம்.பி, அமைச்சர்களின் வடுகள்
ீ முற்றுகை,
ஜெய்ப்பூர் சாலை மறியல்!

போரராட்ட அறிவிப்புகள் அனைத்தும் இலக்கை நோக்கி


கூர்மையாகவும், போர்க்குணத்துடனும், மக்களைப் 
போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமாகவும் 
அமைந்திருக்கின்றன.

நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.  நம்ம ஊரில் மத்திய


அரசை எதிர்ப்பதென்றால் தபால் ஆபீசு, மாநில அரசை
எதிர்ப்பதென்றால் கலெக்டர் ஆபீசு … இவைதான் நமது
இலக்குகளாக இருந்து வருகின்றன.

அங்கேயோ, விவசாயிகள் அடித்த அடியில் அதானி நிறுவனம்


ஆடிப்போய் ஒரு தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறது. இதுதான்
நாம் கவனிக்க வேண்டிய விசயம்.

000

“நாங்கள் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதுமில்லை.


அதன் விலை நிர்ணயத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும்
இல்லை. இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்யும்
தானியங்களை எங்கள் கிடங்குகளில் பராமரிக்கிறோம்.
அவ்வளவுதான். ஒரு பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனமான
எங்கள் மீ து சேறடித்து, பொது மக்கள் மத்தியில் எங்கள்
கவுரவத்தைக்குலைக்கிறார்கள்” என்று இன்றைய பிசினஸ்
ஸ்டாண்டர்டு நாளேட்டில் ஒரு மறுப்பு அறிக்கை
வெளியிட்டிருக்கிறது அதானி நிறுவனம்.

அதானி நிறுவனம் சொல்லியிருப்பது உண்மையா, பொய்யா?

கொஞ்சம் உண்மை. நிறைய பொய்.


21 Jan 2015 Livemint  இணைய இதழில்   Adani in slow, strategic bid to
stay ahead in agriculture என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும்
செய்தியைப் பார்ப்போம்.

இந்திய உணவுக்கழகம் பஞ்சாபிலும் அரியானாவிலும்


கொள்முதல் செய்யும் தானியங்களை சேமித்து வைக்க பல
இடங்களில்  அதானியின் கிடங்குகளைத்தான் (WAREHOUSE)
பயன்படுத்திக் கொள்கிறது. பஞ்சாபில் மட்டுமல்ல,  சென்னை,,
கோவை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட
நகரங்களில அதானிக்கு தானியக் கிடங்குகள் உள்ளன.
தானியங்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்ல
ஏராளமான வேகன்களும், தனிச்சிறப்பான ரயில்பாதைகளும்
இருக்கின்றன. ஏற்றுமதி செய்ய  துறைமுகமும் இருக்கிறது. 
ஆப்பிளை சேமித்து வைத்து ஏற்றுமதி செய்ய  இமாச்சல
பிரதேசத்தில் குளிரூட்டப்பட்ட கிடங்குகள் உள்ளன.

இவை அனைத்தும் சேர்ந்ததுதான் Adani Agri Logistics.

மேற்கூறியவையெல்லாம் அதானி நிறுவனமே மறுக்கவியலாத


உண்மைகள்.

அதானி இன்றுவரை  தானியக் கொள்முதலில் இறங்கவில்லை


என்பதும் உண்மைதான்.  அதாவது இன்றுவரை.

ஆனால் நாளை?

“அதானி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளில் சிறுகச்சிறுக உள்


கட்டுமானங்களில்  முதலீடு செய்து வைத்திருக்கிறது. 
விரைவிலேயே விவசாயத்துறையில் நுழைவதற்கு அரசு
அனுமதிக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த முதலீடுகள்
செய்யப்பட்டிருக்கின்றன” என்கிறார் லைவ் மின்ட் கட்டுரையாளர்.
“இந்திய உணவுக்கழகம் re structure செய்யப்படவிருக்கிறது.
தானியக் கொள்முதலில் அரசின் பாத்திரம் குறையப்போகிறது.
இந்த இடத்தில் முந்திக் கொண்டு நுழைவதற்கு அதானி தயாராக
இருக்கிறார்” என்று லைவ் மின்ட்  பத்திரிகையாளரிடம்
சொல்கிறார் அகமதாபாத் ஐ.ஐ.எம் இன் விவசாயத்துறை வல்லுநர்
சுக்பால் சிங்.

கவனமாகப் பாருங்கள். இந்த செய்தி வெளிவந்தது ஜனவரி 2015


இல்.

சென்ற பதிவில் நான் கூறிப்பிட்டிருக்கும் நிதி ஆயோக் – இன்


அறிக்கையோ டிசம்பர் 2015 இல் தான் வெளிவருகிறது.

மோடி 2013 இலிருந்தே தேர்தல் பிரச்சாரத்துக்கு அதானியின் தனி


விமானத்தில் பறக்கத் தொடங்கி விட்டார்.

முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை ||


உலகப் பட்டினிக் குறியீடு
அம்பானி, அதானி, அசிம் பிரேம்ஜி என உலகக் கோடீசுரர்கள் வாழும் இந்தியா,
உலகப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசைப் பட்டியலிலோ அதலபாதாளத்தில்
கிடக்கிறது.

By

 புதிய ஜனநாயகம்

 -

December 10, 2020

0
உலகு தழுவிய அளவில் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் உடல்
மெலிவுற்று, வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் உயரத்திற்கு ஏற்ற எடையும் இன்றி
நோஞ்சான்களாக உயிர்வாழும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், அன்றாடம்
ஊட்டமான உணவு கிடைக்காமல் வெந்ததைத் தின்று உயிர் வாழும் மக்களைக் கொண்ட
நாடுகள் அடங்கிய தரவரிசைப் பட்டியல், உலக பட்டினிக் குறியீடு 2020 எனும் பெயரில்
வெளியாகியிருக்கிறது.

வழமை போலவே, இந்தியா இந்தப் பட்டியலில் பின்தங்கி இருப்பதோடு − 107


நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 94 ஆவது இடத்தில் உள்ளது − நமது அண்டை
நாடுகளான பாகிஸ்தான் (88−ஆவது இடம்) இலங்கை (64),வங்கதேசம் (75), நேபாளம்
(73), மியான்மர் (78) ஆகிய சிறிய, வறிய நாடுகளைவிட மிக மோசமான நிலையில்
இருப்பதை அக்குறியீடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில், அதாவது வளர்ச்சி நாயகன் என விளம்பரப்படுத்தப்பட்ட


திருவாளர் மோடியின் ஆட்சியில் உயரத்திற்கு ஏற்ற எடை அற்ற இந்தியக்
குழந்தைகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளைக் காட்டிலும் 2.2
சதவதம்
ீ அதிகரித்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
இதுவொருபுறமிருக்க, பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமும், தேசிய
மாதிரி கணக்கெடுப்பு நிறுவனமும் தனித்தனியாக வெளியிட்டிருக்கும் அறிக்கைகள்,
இந்தியக் கிராமப்புறங்களில் நான்கில் மூன்று பேர் சத்தான, சரிவிகித உணவுக்கு
வழியின்றி வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளன.

படிக்க :
♦ ஏழைகளை பட்டினிச் சாவுக்குத் தள்ளும் ஆதார் !
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

சத்தான சரிவிகித உணவுக்கு வழியில்லாத கிராமப்புற இந்திய மக்கள், உயரத்திற்கு ஏற்ற


எடையும், வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் இல்லாத இந்தியக் குழந்தைகள் என்ற இந்த
விவரமெல்லாம் காட்டுவதென்ன? கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் அடிப்படை
உணவுத் தேவையைக்கூட ஈடுசெய்து கொள்ள முடியாத வறுமையின் பிடியில்
சிக்கியிருக்கிறார்கள் என்பதுதான்.

உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டிருக்கும் இத்தரவரிசை இடம்,


கரோனா பாதிப்புகளுக்கு முந்தைய கணிப்பாகும். இப்பெருந்தொற்று
தீவிரப்படுத்தியிருக்கும் நிச்சயமற்ற நிலையைக் கணக்கில் கொண்டால், எதிர்காலத்தில்
இந்தியா இந்தத் தரவரிசைப் பட்டியலில் இன்னும் கீ ழே சரிந்து விழக்கூடும்.

அரைகுறை பட்டினி என்ற இந்த அவலத்தை, அபாயத்தை எதிர்கொள்ள


வேண்டுமென்றால், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய்
மட்டுமின்றி, பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்து
அளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை மானிய விலையில் அனைவருக்கும்
கிடைக்கும்படி ரேஷன் விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், ஐந்து வயதிற்கு உட்பட்ட
குழந்தைகள் ஆகியோருக்காக நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு விதமான சத்துணவுத்
திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். மிகவும் முக்கியமாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற
ஏழைகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களையும், அவர்களது வாழ்க்கைச்
செலவுகளை ஈடுகட்டக்கூடிய கூலியையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஆனால், மோடி அரசோ


இதற்கு நேர் எதிர் திசையில், ரேஷன் விநியோகத்தில் உணவுப் பொருட்களுக்குப்
பதிலாகப் பணப் பட்டுவாடாவைக் கொண்டுவர முயலுகிறது. அத்தியாவசிய உணவுப்
பொருள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி, பதுக்கலுக்கும் விலை உயர்வுக்கும் வழி
ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டுவந்திருக்கும்
சீர்திருத்தங்கள் மூலம் வேலை உத்தரவாதத்தையும், குறைந்தபட்ச கூலி
கொடுப்பதையும் இல்லாது ஒழித்திருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், இச்சீர்த்திருத்தங்கள் மூலம் ஏழைகளை, அடித்தட்டு மக்களைத்


தமது வயிற்றைச் சுருக்கிக்கொண்டு வாழச் சொல்கிறது, மோடி அரசு. இப்படிப்பட்ட
ஆட்சியில் பட்டினிச் சாவுகள் நடக்கத் தொடங்கினாலும் ஆச்சரியங்கொள்ள முடியாது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் பட்டினிக் குறியீடு தர வரிசை


குறையாதது துரதிருஷ்டவசமானது என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்,
முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள். ஆடு கொழுக்கட்டும் என ஓநாய்களும்,
நரிகளும் வேண்டுமானால் காத்துக் கிடக்கலாம். ஆனால், கார்ப்பரேட் முதலாளி வர்க்கம்
இந்த நியதியை ஏற்றுக் கொள்வதில்லை.

அம்பானி உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் எந்தளவிற்கு முன்னேறிச் செல்கிறாரோ,


அந்தளவிற்கு இந்தியாவில் ஏழ்மையும் பட்டினியும் அதிகரிக்கவே செய்யும். இதுதான்
முதலாளித்துவ சமூக விதி. கம்யூனிசப் புரட்சியாளர்கள் கூறிவரும் இந்த
உண்மையைத்தான் உலகப் பட்டினிக் குறியீடு 2020−ம் எடுத்துக்காட்டியிருக்கிறது.
மேகலை

டிசம்பர் 2020 – மின்னிதழை தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

You might also like