You are on page 1of 5

ஸ்ரீ: 9 ஸ்ரீமதே ராமானுஜாய

நம:
ஸ்ரீமான் உ.வே. வேளுக்குடி ஸ்வாமி தலைமையில்
நடந்த ஸ்ரீராம அநுயாத்திரை யில் அடியேன் பெற்ற
பங்கும் அனுபவங்களும் பகிர்பவர்
எஸ்.விஜயராகவன் (
my gmail address: artistsvr@gmail.com
பத்தாம் பாகம்
28-08-2006

அயோத்தியில் இருந்து
நந்திகிராம் போகும் சாலை 21
கிலோ மீ ட்டர் பயணம் 45
நிமிட பயணம்.
ஸ்ரீ ராமர் பாதுகைகளை
பரதன் பெற்று வந்து பூஜித்து
ராஜ்யத்தை ஆண்ட இடம்.
இங்கே ராமர் பாதுகைகள்,
பரத, சத்ருக்னர்
ஆஷ்ரமங்கள், ராம பாரத
ஹனுமான் சேர்த்தி பளிங்கு சிலைகள் இன்றும் சேவிக் கும்படியாக உள்ள சிறிய
கோவில்களை காணலாம் இந்த ஆஷ்ரம வாசலில் ராமரும் பரதரும்
அணைத்துக்கொண்டிருக்கும் சிலைகளை பட்டு வஷ்த்ரங்க ளுடன் நிறுத்தி
வைத்துள்ளார்கள். 28-ந்தேதி காலை கிருஷ்ணன் சுவாமி சொல்லியிருந்தபடி நாங்கள்
எல்லோரும் சரியாக 6-௦௦ மணிக்கே சித்தமாகி விட்டோம். எங்கள் பஸ்களில்
ஏறிஅமர்ந்தும் விட்டோம். இந்த இடத்திற்கு நாங்கள் சுமார் 7-௦௦ மணிக்கு வந்து
சேர்ந்தோம் பத்து .பஸ்கள் சாலையிலேயே நிறுத்திவிட்டு நாங்கள் உள்ளே சென்று சிறு
சிறு கோவில்களாக இருந்த புனிதமான ஸ்தலங்களை விழுந்து சேவித்து விட்டு
வெளியே தோட்டம் போன்ற இடத்திற்கு வந்து காலை பால போஜனம் பொங்கல்
கொத்ஸு-வை அவரவர் தட்டில் வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்குள்ள ஜலதாரை பக்கம்
சென்று குழாயில் தண்ண ீர் பிடித்து கை கால்களை அலம்பிக்கொண்டு எங்கள் டம்ளர்
களிலேயே காபியை வாங்கிக் கொண்டு பருகினோம். அங்கிருந்து உள்ளே சென்று
கோவில்பக்கம் சிறிய மைதானத்தில் அமர்ந்து 115-வது ஸர்க்கம் பாராயனமாயிர்று. ஸ்ரீ
கிருஷ்ணன் சுவாமி பாராயணத்திற்குப் பின்பு அந்த சர்க்கத்தின் நிகழ்வை உபன்யாசகமாக
சொன்னதன் விவரம்: பரதன் ஸ்ரீ ராமபிரான் அருளிய பாதுகையை தன் தலைமேல் சுமந்து
(நந்திகிராமத்திற்கு கொண்டு வந்து (இந்த கிராமம் அயோத்தியின் எல்லையில் உள்ளது)
ஸ்ரீ ராமர் இல்லாமல் நான் இந்த அயோதிக்குள் நுழைய மாட்டேன். அதுவரை இந்த
பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் பண்ணி இங்கேயே சிம்ஹாசனத்தில் இரண்டு
பாதுகைகளையும் எழுந்தருளப்பண்ணி அதன் சார்பாக இந்த ராஜ்ஜியத்தை
ஆண்டவருவேன்.என்று பிரதிக்ஞை பண்ணி பதினான்கு ஆண்டு காலம் அயோத்தியை
ஆண்ட புனிதமான ஸ்தலம் இது. ராவண வதம் முடிந்து ஸ்ரீ ராமன் சீ தையுடனும்
லக்ஷ்மணன் விபிஷணன் சுக்ரீவன் ஹனுமனுடன் இங்கு வந்து பரதாழ்வானை ஆரத்
தழுவி திருவடி பதித்த ஸ்தலம் என்று நாங்கள் பாராயணம் பண்ணிய ஸ்தல
விசேஷத்தை கொண்டாடி முடித்தார். மீ ண்டும் அங்கெ ஒருமுறை விழுந்து வணங்கி
அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி பஸ்களில் அமர்ந்து சிருங்கிபேரபுரத்தை நோக்கி
பயணமானோம்.மணி.9-௦௦ அங்கிருந்து சிருங்கிபேரபுரம் 15 ௦ கிலோ மீ ட்டர் இரண்டரை
மணி நேரப் பயணம். நாங்கள் ஸிருங்கிபேரபுர த்தை அடைந்தபோது மணி. சுமார் 12-௦௦
இருக்கும் .கங்கை நதி சுமார் ஒருமைல் அகலத்துக்கு மேல் ஆரவாரித்துக் கொண்டு
ஓடியது. அந்த ஸ்தலத்தில் தான் குஹன் ஸ்ரீ சீ தா ராம லக்ஷ்மணாதிகளை தன் படகில்
ஏற்றிக்கொண்டு கங்கை நதியை கடந்து போனார் அதற்கு முன்னால் இரவு அந்த
கரையிலேயே தங்கினார்கள். ஸ்ரீ ராமரும், சீதையும் அன்று ராத்திரி திருக்கண்
வளர்ந்தருளின ஸ்தலத்தையும் சேவித்தோம், குஹனும், லக்ஷ்மணனும் இரவு முழுதும்
அங்கு காவல் காத்த இடத்தையும் காண்பித்தார்கள். ஒரு சிறிய ஒலைகீ ற்று
மண்டபம்.அதன் கீ ழே ஒரு மேடை. அந்த மேடையின்மேல் தர்ப்பையினால் நெய்த
பாய்.ஒன்று. அந்தப் பாயில்தான் உறங்கினது என்று காண்ப்பிக்கிறார்கள்.ஒரு லக்ஷம்
வருஷங்களுக்கு முந்தய நிழ்ச்சி அந்த பாய் எல்லாம் நம்பலாமா என்று கேட்காதீர்கள்.
அவர்கள் அந்த ஸ்தலத்தில் உறங்கி இருப்பார். அதை பின் வரும் சந்ததியினருக்கு காட்ட
அந்த இடத்தில் ஒரு
மண்டபம், தர்ப்பையினால் செய்த பாய் மேடை என்றெல்லாம் வைத்து அவ்வப்போது
புதுபித்தும் வந்திருப்பார்கள்... அவர்கள் பக்தியை போற்றுவோம். நாங்கள் அனைவரும்
பஸ்ஸை விட்டிறங்கி அந்த நதியில் ஸ்ரீ ராமன் திருவடி பட்ட படித்துறை தீரத்தை
ஆசமனம் பாணி சிரசில் சிறிது ப்ரோக்ஷித்துக்கொண்டோம். அந்த நதியின்துறையை
கீ ழேயுள்ள போட்டோவில் காணலாம். .இப்பவும் நிறைய படகுகள் அங்கே நிற்கின்றன.
சுவாமியும் இன்னும் சிலரும் அதில் ஏறி சிறிது தூரம் சென்று திரும்பினர். திரும்புகாலில்
சுவாமியுடன் சென்ற ஒரு வாலண்டியருக்கு முழங்காலில் படகில் இருந்த ஒரு ஆணி
கீ றி கொஞ்சம் ரத்தம் சிந்த அவரை உடனே ஆண்டி-செப்டிக் ஊசியும், முதலுதவி கட்டும்
போடா தக்க துணையுடன் அங்கிருந்த ஒரு காரில் ஏற்றி பக்கத்திலிருந்த அஹமதாபாத்
நகருக்கு அங்கிருந்த ஆஸ்பத்திரிக்கு சிகித்க்ஷைக்கு அனுப்பி விட்டு வந்தார். அதுவரை
அந்த துறையின் இருபக்கம் இருந்த குன்றின் மேலும் உள்ள கோயில்களை நாங்கள்
கீ ழேயிருந்தே சேவித்தோம். ஒன்று ரிஷ்யசிருங்கர் சந்நிதி. எதிர்பக்கம் ஹனுமான் சந்நிதி
என்றும் சிலர் சிவன் கோயில் என்றும் சொன்னார்கள். அதில் ரிஷ்யசிங்கர் சந்நிதி
போட்டோ படியுடன் காணப்படுவது. காட்டியுள்ளேன். பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பி
ஸ்ரீ சீதா ராமர் பள்ளிக்கொண்டிருந்த ஸ்தலத்தை மீ ண்டும் சேவித்தோம். அதை சுற்றி
நிழல் பகுதிகளில் அமர்ந்தோம். மதியம் ஒருமணிக்கு வாழை இலைகள் போடப்பட்டு
அறுசுவை கொண்ட உணவை புசித்தோம்.வாழைக்காய் கறியமுது, வெண்டைக்காய்
குழம்பு,, தக்காளி ரசம்,அப்பளம் என்று வாய்க்கு ருசியான வியஞ்சனங்கள். சாப்பிட்டு
முடித்தும் அங்கேயே நிழல் படிந்த இடத்தில் பாராயணமும் ஒரு சிறு விளக்கமும்
தரப்பட்டது.. சர்க்கம் 5 ௦ - 53 பாராயணம் செய்யப்பட்டது. அதன் விளக்கம் ஸ்ரீ கிருஷ்ணன்
சுவாமி தந்ததன் விவரம்.வருமாறு:

ராமபிரான் கோஸலராஜ்யத்தின் எல்லையைக் கடந்ததும் அயோத்யாபுரியை நோக்கி


வனவாசத்துக்கு அனுமதியை பிரார்த்தித்தார்.பிறகு கங்கைக் கரையை அடைந்து
ரதத்திலிருந்து இறங்கினார்தம்மை பார்க்க வந்த வேடர் தலைவனான குஹனுடன்
தோழமை கொண்டார்.சாயங்கால சந்த்யவந்தனத்தை முடித்து ஜலாஹாரத்தை பண்ணி
இரவு பூமியில் படுத்துறங்கினார்.பிராட்டியும் அவர் அருகில் படுத்து உறங்கினால்.
ஸுமந்த்ரர், லக்ஷ்மணன்,குஹன் ஆகிய மூவரும் பேசிக்கொண்டே அன்றிரவை கழித்தனர்
குஹனிடம் இளையபெருமாள் புலம்பினார்.,ஸ்ரீ ராமபிரானுடைய ஆஜ்ஞையினால் குஹன்
ஓடத்தை கொணர்ந்தான்.ராமபிரான் ஸுமந்தர்ரரை அயோத்தியைக்கு திரும்பிச்
செல்லுமாறு கட்டளையிட்டார் . மாதா பிதாக்களுக்கு செய்தி சொன்னார். ஸுமந்த்ரர்
தாமும் வனத்துக்கு வருவதாக பிரார்த்தித்தார். ராமபிரான் அவருக்குநீதிகளை எடுத்துச்
சொல்லி தடுத்தார். ராமாதிகள் ஓரிடத்தில் ஏறி அமர்ந்தார்கள்.சீதை கங்கையை குறித்துப்
பிரார்த்தித்தாள்.கங்கைக் கடந்து ராமாதிகள் வத்ச தேசத்துக்கு சென்றார்கள். இரவு ஒரு
மரத்தடியில் தங்கினார்கள். ராமபிரான் கைகேயிநிடமிருந்து கெளசாலை, ஸுமித்திரை
ஆகியவர்களுக்கு அநிஷ்டம் வரலாம்.எனவே நீ அயோதியை சென்று அவர்களைக்
காப்பாற்று என்று இளையபெருமாளிடம் கூறினார். பெருமாளை விட்டு சீ தைக்கும்
தமக்கும் ஜீவனம் அஸம்பவம் என்று பிரதிபாதிதார்.லக்ஷ்மணர். எனவே அவரும் உடன்
வர சம்மதித்தார் பெருமாள். என்று கூறி முடித்தது,

ஸிறுங்கிபெரபுரத்து
கங்கைக் கரை. இந்த
துறையில் ராமரும்
சீதையும்
லக்ஷ்மனருடன்
படகை குஹன்
செலுத்தத்அ
கங்கையை கடந்து
அக்கறை ஏறினர்.
இந்த போட்டோ ஸ்ரீ
ரிஷ்யஷிருங்கர் கோயில்
. இந்த முனிவர் தான்
தசரதர் புத்ரகாமேஷ்டி
யாகம் செய்கையில்
அந்த யாகத்துக்கு
தலைமை ஏற்று நடத்தி
வைத்தவர். கீ ழேயுள்ள
போட்டோ தான்
ஹனுமான் மற்றும்
/சிவன் கோயில்

நாங்கள் எல்லோரும் கிளம்பி அவராவே பஸ்களில் அமர்ந்து அஹமதாபாத்திலுள்ள


பரத்வாஜன் ஆஷ்ராமத்தை சேவிக்க கிளம்பினோம். பாகம் பத்து முற்றியது.

You might also like