You are on page 1of 11

x

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமான் உ.வே. வேளுக்குடி ஸ்வாமி

தலைமையில் நடந்த ஸ்ரீராம அநுயாத்திரை யில்


அடியேன் பெற்ற பங்கும் அனுபவங்களும்
பகிர்பவர் எஸ்.விஜயராகவன்
my Email address: artistsvr@gmail.com
பாகம் - பதினேழு

02-09-2006 ஸ்ரீமான் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அறிவித்தபடி எல்லோரும்


இன்று பதினோரு மணிக்கே ஷாமியான பந்தலில் தரையில் அமர்ந்து சாப்பிட
சென்றோம். பூப்போன்ற வெண்மையான மென்மையான ஸாதம், பொடி சேர்த்து
எண்ணையில் வாட்டிய கத்திரிக்காய் கறியமுது.(கிட்டதட்ட எண்ணை
கத்திரிக்காய்மாதிரியே ருசியாய் இருந்தது.) கேரட், குடமிளகாய், கத்திரி
வெண்டைக்காய் பொடி சேர்த்த குழம்பு (கிட்டத்தட்ட கதம்ப குழம்பு மாதிரி
இருந்தது.) தக்காளி ரஸம், பகளாபாத், தொட்டுக்க நெல்லிக்காய் ஊறுகாய். படு
ருசியான தளிகை ஜமாய்த்திருந்தார் புருஷோத்தமன். ஆனால் சாப்பிட்ட கோஷ்டி
குறைவாய் இருந்தது. 11-௦௦ மணிக்கு ஒரு குருப், 11-3 ௦ க்கு ஒரு குரூப் என
இரண்டு குருப்பாக சாப்பிட்டார்கள். என் எதிரே நின்றிருந்த சமையற்குழுவை
சேர்ந்த ஒருவர் நான் அப்போதே சொன்னேன் 7-3 ௦மணிவரை டிபன்
போடாதேன்னு.பலருக்கு இன்னும் பசி எடுக்கலை 6-மணிக்கு டிபன் சாப்பிட்ட
உங்களை போன்றவர்கள் கரெக்டா முதல் பேட்ஜ்-க்கு வந்து விட்டீர்கள். 12-௦௦
மணிக்கு சுவாமி கரெக்டா கிளம்பிடுவார். ராத்திரி ஒன்பது மணிக்கு 38 ௦ பேருக்கு
புளிசாதமும் 5-அடுக்கும் வத்தல் வடாமும் தயிர்சாதமும் 5-அடுக்கும் நம்ம
பஸ்ஸில் டிக்கியிலே ஏத்தணும் .புனே ஸ்டேஷன்-லே ட்ரைன்-ல ஏற்றியாகனும்.
வண்டி கரெக்டா ஐந்து நிமிஷம் தான் புனேவிலே நிற்பான். என்று எங்கள்
வாலண்டியரிடம் முனகிக் கொண்டிருந்தது என் செவியிலும் கேட்டது. நான் போய்
எல்லாரையும் அனுப்பறேன் கவலைப்படாதேயும் என்று சொல்லி எங்கள்
வாலண்டியர் மேலே சென்று எல்லாரையும் அழைத்து வந்தார். சமையல்
குழுவினருக்கு முகத்தில் சிரிப்பு வந்தது. அழைத்து வந்தவர்களை உட்கார
வைத்து பரிமாறினார்..எங்கள் வாலண்டியர் அவரைப்பார்த்து “சீனு! கவலை
வேண்டாம் நாங்கள் வாலண்டியர் இருபது பேர் இருக்கோம் இரண்டு
நிமிஷத்திலே ட்ரைன்-ல ஏற்றி விடலாம்.” என்று அவரை தட்டிக் கொடுத்தார்.
எல்லோரும் தளிகையை சப்பு கொட்டிக்கொண்டு சாப்பிட்டு முடித்து இன்றைக்கு
சமையல் பிரமாதம் என்றும் சிம்பிள் அண்ட் கிராண்டு என்றும் பாராட்ட
புருஷோத்தமன் சுவாமி “நிதானமாக சாப்பிடுங்கோ ஒரு அவசரமும் இல்லை”
என்று சொல்லிக்கொண்டே சேர்ந்து பரிமாறினார்.. 12-மணிக்கு பெட்டியை தூக்கிக்
கொண்டு எல்லோரும் கீ ழே இறங்கி தயாராய் இருந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டனர்
திட்டமிட்டபடி பஸ்கள் “ஜெய் ஸ்ரீராம் “என்ற கோஷத்துடன் கிளம்பி ஒன்றன்பின்
ஒன்றாக இடையே கேப் விடாமல் போய்க் கொண்டிருந்தது. பின்னால் வரும் பஸ்
ஏதாவது ஒன்று நின்றாலும் எல்லா பஸ்களும் நின்று எந்த பஸ்ஸும் வழிதவறி
வேறு ரூட்டில் போய்விடாமல் பார்த்துக்கொண்டேநல்ல ஸ்பீடில் போய்க்
கொண்டிருந்தது.நேற்று மாலை நடந்தமாதிரி இன்றைக்கு ஆயிடக்கூடாது என்ற
பயம். தாமதம் ஏற்பட்டு பூனே ஸ்டேஷன்-ல் ட்ரைனை மிஸ்பண்ணிடக்கூடாது
என்ற பொறுப்புடன் வாலண்டியர்கள் ஒருவருக்கொருவர் மொபைல் போனில்
இணைக்கப் பட்டிருந்தார்கள்...நாசிக் பூனே ஸ்டேஷன் தேசியநெடுஞ்சாலை
யானதால் வழி தவற வாய்ப்பில்லைதான். ..சரியாக மாலை மணி 4-15 க்கு பூனே
ஸ்டேஷன்-ஐ வந்தடைந்து விட்டோம். நாசிக் டு பூனே சுமார் 21 ௦ கி.மீ . சரியாக
நாலு மணி நேரப் பயணம்.அந்த பஸ்காரர்களுக்கு விடை கொடுத்து அனுப்பியாகி
விட்டது.
இன்னும் வண்டி வர ஒரு மணி காலம் இருந்தது. இருப்பினும் எங்கள் போகிகள்
எந்த இடத்தில் நிற்கும் என்று பிளாட்பாரத்தில் காட்டும் பலகையைப் பார்த்து
அந்தந்த இடத்தில் நின்று கொண்டோம். ரயில்வே ஸ்டேஷனில் மட்டும் டைம்
போவதே தெரியாது. டிரையின்கள் போவதும் வருவதும் காபி,பலகாரங்கள்,
பழவகைகள், கூல் டிரிங்ஸ், ஐஸ் கிரீம் விற்பவர்களின் கூச்சல்களும் உறவினர்கள்
நண்பர்கள் வரவேற்பும், வழியனுப்புதலும் பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம்
போவது தெரியாது. அது மாதிரியே எங்கள் வண்டி ஸ்டேஷன்-னில் நுழைந்து
கொண்டிருப்பதை ஒலிபெருக்கி அன்நௌன்ஸ் பண்ணிக்கொண்டிருந்தது,
எங்கள் காதில் விழ பரபரப்படையாமல் நாங்களும் எங்களுக்கு ரிசெர்வ்
செய்திருந்த போகியில் ஏறி சீட்களில் அமர்ந்தோம்.அந்த ஸ்டேஷன்
மாஸ்டருக்கு நாங்கள் 38 ௦பேர் அங்கே ஏறுவது தெரிந்துதான் உள்ளது
ஆகையினால் தன ரூமை விட்டு சற்று வெளியே வந்து நின்று நாங்கள்
அனைவரும் ஏறியாகிவிட்டதா என்று பார்த்து தன் பச்சை கொடியை காட்ட,
கார்டும் என்ஜின் டிரைவருக்கு சிக்னல் தர வண்டி நகர்ந்தது..இதெல்லாம் இங்கு
தேவையா என்று இதைப் படிப்பவர் முனு முனுப்பது என்காதில் விழத்தான்
செய்கிறது. ஆனால் நான் அடைந்த அந்த அனுபவங்களை நீங்களும்
அனுபவித்தால் மட்டுமே அந்த யாத்திரையின் முழு சூழ்நிலை புரியும்.அதனால்
எழுதியது. வண்டி கிளம்பிய நேரம் மணி 5-5 ௦ ஆறு மணிக்கு பாலை வாங்கி காபி
தயாரித்து அனைவரும் பருகினோம். சரியாக ராத்திரி ஒன்பது மணிக்கு எங்கள்
தட்டுகளில் கதம்ப சாதமும், தயிர் சாதமும் பொறித்த வடாமும்,நெல்லிக்காய்
ஊறுகாயும் வண்டியிலேயே நம் சமையல் குழுவினர் எங்கள் சீட்டுக்கே வந்து
பரிமாறினார். நல்ல சுவைதான். காலை 12-மணிக்கே சாப்பிட்டு விட்டதால் நல்ல
பசியும் இருந்தது. சரியாக ஒன்பது மணிக்கு வண்டியிலேயே சாப்பிட்டுவிட்டு
தட்டுகளை அலம்பி தோள்பையுடன் சேர்த்து பெட்டியில் வைத்து பூட்டினோம்.
வண்டி ஷோலாபூர் ஸ்டேஷன்-ல் நுழைந்து கொண்டிருந்தது. சுமார் நாலைந்து
போகிகளில் நம் யாத்ரிகர்களே இருந்ததால் பிரச்னை ஏதும் இல்லை. ராத்திரி
ஸ்லீபரை போட்டுக்கொண்டு அனைவரும் நன்றாக உறங்கினோம்.
இனி ௦ 3-௦ 9-2 ௦௦ 6-ல் நடைபெற்ற யாத்திரை விவரங்கள்:
அதிகாலை ஐந்து மணிக்கே வண்டி அதோனி தாண்டியதும், எழுந்து பல்விளக்கி
காலை கடன்களை முடித்துக்கொண்டு 6-௦௦ மணிக்கு ஒரு கப் பால் வாங்கி காபி
instant பௌடரை போட்டு கலக்கி எல்லோரும் பருகியாயிற்று.வண்டி சுமார் 7-௦௦
மணிக்கு குண்டக்கல்-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.வண்டி நின்றதும் எல்
லோரும் இறங்கியதும் வண்டி சென்றபிறகு ஸ்டேஷன்-க்கு மேற்கு பக்கம்
வெளியே வந்து பார்க்கையில் ஏழு பஸ்கள் தயாராக நின்று கொண்டிருந்தன.
கிருஷ்ணன் சுவாமி ஒலிபெருக்கி மூலம் சொன்ன விவரங்கள்: நாம் இப்போது 7
பஸ்களில் இங்கிருந்து ஹோஸ்பெட் செல்கிறோம். சுமார் 11-௦௦ மணிக்கு
சேருவோம். இரண்டு கல்யாண சத்திரங்களில் இடம் புக் செய்துள்ளது. யார் யார்
எந்த சத்திரம் எந்த ரூம்கள் என்கிற விவரங்கள் உங்கள் வாலண்டியரிடம் எழுதிக்
கொடுத்துள்ளது.அங்கே இறங்கி குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நெற்றிக்கு
இட்டுக் கொள்ளுங்கள். துவைத்து காய போட வேண்டியவைகளை
சத்திரத்துக்குள்ளேயே ஹாலில் கொடி கட்டி காயப் போட்டுவிட்டு எல்லாருடைய
பெட்டிகளையும் ஒரு ரூமில் போட்டு பூட்டி சாவியை உங்கள் வாலண்டியரிடம்
கொடுத்து விடுங்கள். பகல் சுமார் ஒரு மணிக்குள் எதிர்பக்கம் உள்ள தெருவில்
இருக்கும் உத்திராதி மடத்துக்கு வாருங்கள் கால்நடை தூரம்தான். அங்கே மதிய
உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது. சாப்பிட்டு விட்டு மீ ண்டும் உங்கள்
சத்திரத்துக்கே போய் மாலை மூன்று மணிவரை ரெஸ்ட் எடுக்கலாம்.எல்லோரும்
திரும்ப உத்தராதி மடத்தில் 4-௦௦ மணி வாக்கில் காபி அருந்திவிட்டு கால்
நடையாகவே சில தெருக்களை கடந்து ஒரு சிறிய ஆறு பம்பா ஏரியில் இருந்து
ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கே போகிறோம்.அங்கேதான் வாலி சுக்ரீவன் சண்டை
நடந்த இடம். அந்த ஆற்றின் எதிர்பக்கம் ராமர் இருந்து வாலி மீ து பானம்
போட்டு வதம் பண்ண இடம். மற்றும் . அங்கே சபரிகுகை, மதங்க ரிஷி ஆஸ்ரமம்.
ரிஷிமுகம் .போன்ற ராமாயணத்தில் ராமன் திருவடி சாற்றிய பல ஸ்தலங்களை
சேவிக்க இருக்கிறோம். பாராயணமும் உபன்யாசங்களும் நடக்கும். ஏழு எட்டு
மணிக்குள் கால் நடையாகவே திரும்பி விடலாம்.நாம் போகும் இடங்களில்
எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லை. அஸ்தமிப்பதற்குள் காணவேண்டிய ஸ்தலங்கள்.
அதனால் நான்கு மணிக்கே கிளம்பினால் தான் அஸ்தமனத்திற்குள் திரும்ப
முடியும்.என்று விரிவாக அன்றைய ப்ரோகிராம் முழுவதையும் கூறி
முடித்தபோது எங்களுக்கு காபி காத்திருந்தது.எங்கள் டம்ளர்களில் வாங்கி பருகி-
விட்டு எங்கள் பஸ்களில் ஏறி சுமார் பனிரெண்டு மணிக்கு ஹோஸ்பெட்
சேர்ந்தோம். பாதி குரூப்பிற்கு நஞ்சப்பா கல்யாண மண்டபத்தில் இடம்
தந்திருந்தார்கள் மீ தி பாதி பேருக்கு வாசவி கல்யாண மண்டபம் என்று நினைவு..
அடியேனும் என் ஆப்தர் வேணுகோபாலன்,அடியேன் மாப்பிள்ளை சுவாமியும்
தங்கிய இடம் நஞ்சப்பா கல்யாண மண்டபம். உடனே குளித்தோம்.நிறைய
பாத்ரூம்கள் இருந்தது.குழாய்களில் தண்ண ீர் நிறைய கொட்டிற்று.ஆடைகளை
மாற்றிக் கொண்டு திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டோம்..நனைத்து பிழிந்த
ஆடைகளை கொடிகட்டி உலர்த்தினோம் .பெட்டிகளை வாலண்டியர் சதீஷ் சுவாமி
காட்டிய அறைக்குள் வைத்து பூட்டினோம். ரூம் சாவியை அவர் பெற்றுக்கொண்டு
எங்களுடனே உத்திராதி மடம் வந்தார். மடத்து ஹாலில் வாழை இலை போட்டு
சாப்பாடு நன்றாக நடந்தது. வாழைக்காய் தேங்காய் சேர்த்து கறியமுது, பூசனிக்காய்
புளுப்பு கூட்டு,கத்திரிகாய்,,வெண்டைக்காய்,கொத்தவரைக்காய்,தக்காளி இப்படி
நாலைந்து ஐட்டம் சேர்த்து குழம்பு குழம்பின் ருசி அபாரம்.(அதன் ரகசியத்தை
மறுநாள் சீனுவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். துவரம் பருப்போடு கொஞ்சம்
பயத்தம் பருப்பும் கலந்து போட்டு சாம்பார் பண்ணிப் பாரும் இந்த ருசி
கிடைக்கும் என்றார்) .நிற்க., மைசூர் ரசம்,திருகண்ணமுது மோர் இத்யாதி
அறுசுவை உணவு சாப்பிட்டவுடன் சுவாமி சொன்ன மாதிரி சத்திரம் வந்து
இரண்டுமணி நேரம் ரெஸ்ட் தேவைப்பட்டது. மாலை சுமார் 3-௦௦ மணிக்கு
எல்லோரும் முகத்தை அலம்பிக்கொண்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, கொஞ்சம்
FRESH பண்ணிக்கொண்டு ரெடியாகும் சமயத்தில் காபி வந்தது. அதை பருகிவிட்டு
கதவுகளை பூட்டிக்கொண்டு வாலண்டியர்களுடன் உத்திராதி மேடம்
வரைந்தபோது கிருஷ்ணன் சுவாமி எங்களுக்காக மடத்து வாசலில் காத்துக்
கொண்டிருப்பது தெரிந்தது.எல்லோரும் சேர்ந்து உள்ளூர் ஆட்கள் வழிகாட்ட சற்று
குறுக்கு வழிகளில் மலை பாறைகளுக்கு இடையிலும், சற்றுதூரம் மிக
குறுகலான ஒற்றையடிப்பாதைகளிலும், கல்லிலும், முள்ளிலுமாக நடக்க வேண்டி
வந்தது..அதன் பின்னர் ஒரு மலை அடிவாரத்தை அடைந்தோம்.அதுதான்
ருஸ்யமுகம் . என்ற இடம்.அந்த இடத்தில் நின்று கொண்டு சுவாமி சொன்ன
ஆரண்ய காண்டம் சர்க்கங்கள். 69 -73
“ஜடாயுவிற்கு ஸம்ஸ்காரம் பண்ணிவிட்டு சீதையை தேடத் தொடங்கிய இராம
லக்ஷ்மணர்கள் கோதாவரியைக் கடந்து ஜனஸ்தானத்துள்
நுழைந்தார்கள்.அங்கிருந்து மூன்று க்ரோஸங்கள் நடந்து க்ரௌஞ்சாரண்யம் என்ற
வனத்தை அடைந்தார்கள். அங்கெ கபந்தன் என்ற ராக்ஷசனின் கைகளில்
மாட்டிக்கொண்டார்கள். இருவரும் விசாரித்து அவனுடைய கைகளைத்
துண்டித்தார்கள். அவன் இவர்களிடம் மகிழ்ந்து இவர்களை யாரென்று
விசாரித்தான். லக்ஷ்மணன் அவனிடம் தங்கள் கதையைக் கூறினான். அவனும்
தன்னுடைய கதையைக் கூறினான்.இந்திரனுடைய சாபத்தால் நானிந்த கபந்த
உருவத்தை அடைந்தேன் .வயிறுக்குள் மார்பும் தலையும் அழுந்திக் கிடக்கும்
உருவம் பெற்றேன்.நான் எப்படி உண்பேன் என்று இந்திரனிடம் கேட்டேன் கைகள்
ஒரு யோசனை உனக்கு நீளட்டும்.என்றான் அவன். அதன்படி கை நீண்டது.நீண்ட
கைகளால் மிருகங்களை பிடித்து வயிறுக்குள் போட்டு பற்களால் கடித்து
உண்பேன்.சாப நிவ்ருத்தி எப்போது என்று இந்திரனிடம் கேட்டேன் .ராம
லக்ஷ்மணர்கள் இவ்விடம் வந்து உன் கைகளை வெட்டும்போது என்றான் அவன்.
அதன்படியே இப்போது நேர்ந்துள்ளது.என் உடலை கொளுத்தி விட்டால் நான்
திவ்ய ரூபத்தை அடைந்து விடுவேன்.என்றான் அவனை .அப்படியே அவர்கள்
கொளுத்தினார்கள் .அவனும் திவ்ய ரூபத்தை அடைந்து “ஸுக்ரீவன்என்ற
வானரன் ரிஷ்யமுக பர்வதத்தில் உள்ளான்.அவனுடன் நட்பு கொள்ளுங்கள் அவன்
சீதையை தேட உதவி செய்வான்” என்று சொல்லி, ருஸ்யமுக பர்வதம்,
பம்பாஸரஸ்,ஆகியவற்றிற்கு போகும் வழியைக் கூறி மதங்க முனிவரின் ஆஸ்
ராமத்தையும் பற்றிக் கூறிவிட்டு திவ்ய ரூபத்துடன் அவ்விடத்தில் இருந்து
கிளம்பிச் சென்றான். இந்த விவரங்கள் ஆரண்ய காண்டம் ஸர்கம் 69-73 ல்
விரிவாக சொல்லப்பட்டுள்ளதை மேலே பார்த்தோம்.
அதன்பின் ஆரண்ய காண்டம் ஸர்க்கம் 74 பாராயணம் பண்ணினோம்.அதன்
விளக்கத்தையும் சுவாமி கூறினார்: ராம லக்ஷ்மணர்கள் பம்பாஸரஸ்ஸின்
கரையில் உள்ள, மதங்கவனத்தில் ஸபரீ என்ற வேடுவச்சியாகிற
தருமசாரிணியின்ஆஸ்ரமத்தை அடைந்தார்கள் .அவள் ராமபிரானை நன்கு
ஸத்கரித்தாள். அவள் ஆசார்யநிஷ்டை உடையவள். ஆசாரியர்களின் கட்டளைப்படி
ராமபிரான் எழுந்தருளும்போது அவரை ஸத்கரிப்பதற்காகவே பிரானன்களை
காப்பாற்றிக் கொண்டிருந்தாள். அதை அறிந்த ராமபிரான் இனி நீ உன் விருப்பபடி
மோக்ஷத்துக்கு செல் என்று அனுமதியளித்தார்.அவளும் அக்நியில் தன உடலை
ஹோமம் செய்து திவ்யாபரனங்கள், திவ்யமால்யங்கள், திவ்யாம்பரங்கள்
ஆகியவற்றை யுடைய திவ்யரூபத்துடன் மோக்ஷமடைந்தாள். ஆச்சார்யா
நிஷ்டயினால் பகவான் அவளுடைய மொக்ஷ்பிராப்திக்கு ஸாக்ஷியாயிருந்தார்.
அந்த ருஸ்யமுகம் பர்வதம் இது தான் அந்த போட்டோ பக்கத்தில் தந்துள்ளேன்
நாமும் அதன் கீ ழே தான் இப்போது நிற்கிறோம் என்று கூறினார்

. இதன் அருகில் தான் மதங்க முனிவரின் ஆஸ்ரமம் உள்ளது.இவருக்கு


கைங்கர்யம் பண்ணி வந்த சபரீ என்கிற வேடுவச்சியின் ஆஸ்ரமும் உள்ளது.
அவளுக்கு ஸ்நான பானாதிகளுக்கு உபயோக மாகிவந்த பம்பா ஸரஸ்
தாமரைகுளமும் அவள் ஆஸ்ரமம் எதிரிலேயே உள்ளது”.என்று கூறினார்.
கீ ழே உள்ள போட்டோ பம்பாஸரஸ் தாமரைக்குளம். அதன் கீ ழ் உள்ள போட்டோ
சபரி ஆசரம். சபரி ஆஸ்ரமமும் இங்கே பாதுகாத்து வருகிறார்கள்.
ரிஷிமுகமலையில்தான் மதங்க ரிஷி ஆஸ்ரமம் உள்ளது.

. .

.
இது தான் சபரி ஆஸ்ரமம். இங்குதான் ஸ்ரீ ராமபிரானுக்கும் லக்ஷ்மணனுக்கும்
சுவை மிகுந்த கனிகளை தன் கையால் கொடுக்க அவர்களும் வாங்கி உண்டதாக
ராமாயணம் கூறுகிறது. சபரி ஆஸ்ரம சுவர்களை ஸ்ரீ ராமபிரானும் லக்ஷ்மணனும்
சபரியிடமிருந்து கனிகளை வாங்கி சாப்பிடும் சித்திரங்கள் அலங்கரிக்கிறது. பம்பா
சரஸ் தீர்த்தத்தை எங்கள் சிரசில் ப்ரோக்ஷித்துக் கொண்டோம்.

பக்கத்தில் உள்ள போட்டோ. கிஷ்கிந்தாவில் உள்ள ஆஞ்சநேய பர்வதம். இந்த


மலைமேல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது.அதன் போட்டோ கீ ழே உள்ளது
அவர் கோவில் உள்ள இடத்தை தான் ஸ்ரீ ஆஞ்சநேயர் அவதார ஸ்தலம்
என்கிறார்கள்..இந்த மலை மேல் ஏறி சேவிக்க அவகாசமில்லை

கீ ழே உள்ள போட்டோ ஒரு


மலைச்சரிவான இடம்..இந்த
பாறையில்தான் வாலி சுக்ரிவனிடம் சண்டை போட்ட இடம். இங்கே ராமபிரானின்
திருவடிகளை ஓரிடத்தில் செதுக்கி வைத்துள்ளார்கள் அதை தொட்டு கண்ணில்
ஒற்றிக்கொண்டோம். இதன் எதிர்புறம் ஓரு சிறிய ஆறு சல சல வென்று
ஓடிக்கொண்டிருந்தது... அந்த ஆற்றின் அப்புறம் ஓறு சிறிய கோவில் உள்ளது. அந்த
ஸ்தலத்தில் நின்றுதான் ராமன் வாலி மீ து பாணத்தை எய்து வாலியை கொன்றான் என்று
சொல்கிறார்கள். நாங்கள் மேலே உள்ள போட்டோவில் காட்டியுள்ள மலை பாறை தரையில்
எல்லோரும் அமர்ந்து ஒத வேண்டிய சர்க்கங்களை பாராயணம் செய்தோம். மணி 6-௦௦
.பாராயணத்திற்கு பின் வேளுக்குடி சுவாமி விளக்கமும் சாதித்தார். இனி அதை பாப்போம்

ஆரண்யகாண்டம் 54 வது சர்க்கம்:


ராவணன் சீ தையை தன் புஷ்பக விமானத்தில் ஆகாய மார்க்கமாக அபஹரித்து
சென்றபோது,ருஷ்யமுக பர்வதத்தின் சிகரத்தில் ஐந்து வானரர்கள் உட்கார்ந்து
இருந்ததை பார்த்தாள். தன் புடவைத் தலைப்பை கிழித்துத் தன் ஆபரணங்கள்.சிலவற்றை
அதில் முடிந்து அவர்கள் மத்தியில் போட்டாள்அவர்கள் ராமனுக்கு சொல்லுவார்கள்
என்று நினைத்தாள்.
கிஷ்கிந்தா காண்டம் ஸர்க்கங்கள் 1 – 12 .பம்பா சரஸ்ஸைபார்த்த ராமபிரானுக்கு துக்கம்
ஏற்பட்டது.அதனுடைய அழகையும் அதன் கரையிலுள்ள காதலைத் தூண்டும்
ஸாமகிரிகளின் அழகையும் லக்ஷ்மணனிடம் வர்ணித்து சீ தையை பிரிந்ததை நினைத்து
துக்கித்தார்,லக்ஷ்மணன் அவரை தேற்றினான். ருஷ்யமுக பர்வதத்தை நோக்கி வருகிற
அவர்களிருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ஸுக்ரீவனுக்கும் மற்ற வானரர்களுக்கும்
இவர்கள் வாலியின் ஆட்களோ என்று பயம் ஏற்பட்டது. ராம லக்ஷ்மனர்களுடைய
மனோபாவத்தை அறிந்து வருமாறு ஸுக்ரீவன் ஹனுமானை அவர்களிடம்
அனுப்பினான். ஹனுமான் அவர்கள் வனத்துக்கு வருவதற்கான காரணத்தை வினவினார்.
ஸுக்ரீவனைப் பற்றியும், தன்னைப்பற்றியும் விவரங்களை கூறினார்.ஒரு அபசப்தம் கூட
இல்லாமல் தொடர்ந்து அவர் பேசுவதைக் கண்ட ராமபிரான் மூன்று வேதங்களையும்
வியாகரண ஸாஸ்த்ரத்தையும் நன்கு கற்காமல் இப்படிப் பேச இயலாது என்று
கொண்டாடினார்.லக்ஷ்மணனை அவரோடு பேசுமாறு நியமித்தார்.லக்ஷ்மணன்
தங்களுடைய கதையைசொல்லி ஸுக்ரீவன், சீதையைத் தேடுவதில் தங்களுக்கு உதவ
வேண்டும் என்று சொன்னான். ஹனுமான் சுக்ரீவணன் வாலியினுடைய கதைகளையும்
சொல்லி அவர்களை ஆஸ்வாசப்படுத்தி தன்னுடன் அவர்களை அழைத்துச் சென்று
அழைத்துச் சென்று ராம ஸுக்ரீவனர்களுக்குள் நட்பை ஏற்படுத்தி வைத்தான். வாலி
வதத்தை பண்ணுவேன் என்று பெருமாள் சுக்ரீவனிடம் பிரதிஜ்க்ஞை பண்ணினார்.
ஸுக்ரீவன் ராமபிரானிடம் சீ தையினுடைய பூஷனங்களை கொணர்ந்து காட்டினான்.
ராவணனால் அவள் ஆகாஸமார்க்கத்தில் அபஹரிக்கப்பட்டபோது ரிஷ்யமுக பர்வதத்தில்
இருந்த ஐந்து வானரர்களருகில் அவள் எரிந்த ஆபரணங்கள் தான் இவை.ராமபிரான்
அவற்றைப் பார்த்து சோகித்தார்.சுக்ரீவன் ராமபிரானை ஆசவாசப் படுத்தி கார்ய ஸித்தி
ஏற்படும் என்ற விசுவாசத்தை உண்டாக்கினான்.
அதன் பின் கிஷ்கிந்தா காண்டம் ஸர்க்கம் 8-11 பாராயணம் செய்யப்பட்டது. அதன்
விளக்கத்தை ஸ்ரீமான் கிருஷ்ணன் சுவாமி சாதித்ததை சுருக்கமாக இங்கே எழுதுகிறேன்.
சுக்ரீவன் தன தமையனான வாலியினால் தனக்கு ஏற்பட்ட துக்கத்தை சொன்னான்.
பெருமாள் அவனை ஆஸ்வாசப்படுத்தி ப்ராதாக்களான உங்கள் இருவருக்கும் பகை
ஏற்படக் காரணம் என்ன என்று வினவினார். ஸுக்ரீவன் வாலி தன்னிடம் விரோதம்
பாராட்டுவதற்கு காரணம் கூறினான். அந்த பிரசங்கத்தில்தான் வாலியை சரணாகதி
பண்ணி சமாதானப் படுத்தியும் கூட அவன் சமாதான மடையாமல் தன்னை
கொள்வதற்காக உலகம் முழுவதும் துரத்தித் துரத்தி வந்ததைக் கூறினான்.. சுக்ரீவன்
வாலியின் பராக்ரமத்தை வர்ணித்தான்.வாலியானவன் சூர்யன் உதிப்பதற்கு முன்னே .
நாலு திக்குகள் உள்ள சமுத்திரங்களுக்கும் சென்று வருவான். அவன் துந்துபி என்கிற
அசுரனைக் கொன்று அவனுடைய சரீரத்தை மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் எறிந்தான்.
அதனால் மதங்க முனிவர் வாலி இந்த ஆஸ்ரமத்தில் நுழைந்தால் அவன் தலை
வெடித்து விடும் என்று சாபமிட்டார். எனவே அவன் வர முடியாத இவ்விடத்தில் நான்
வாசம் பண்ணுகிறேன் என்றான். பிறகு வாலியை கொல்லும் பராக்கிரமம் அவருக்கு
இருக்கிறதா என்று அறிவதற்காக ராமபிரானை ஸாலவிருக்ஷங்களை அம்பால்
துளைக்கும்படி வேண்டினான். பிறகு ராம பிரான் துந்துபியின் ஸரீரத்தை கால் கட்டை
விரலால் பத்து யோசனை தூரம் தள்ளினார். சுக்ரீவன் வார்த்தைப்படி ஏழு சால
மரங்களையும் ஒரே அம்பினால் துளைத்தார்..சர்க்கம் 12-16 பாராயணம் செய்யப்பட்டது.
பின்னர் அதன் விவரணமும் சொல்லப்பட்டது.
ராமபிரானுடைய வார்த்தைப்படி ஸுக்ரீவன் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியை யுத்தத்துக்கு
அழைத்தான். யுத்தத்தில் வாலியிடம் தோற்றுப்போய் மதங்க வனத்தில் வந்து ஒளிந்து
கொண்டான்.அங்கே ராமபிரான் அவனை ஆச்வாசப்படுத்தினார். சுக்ரீவனும் வாலியும்
ஒரே மாதிரியாக இருந்ததால் தம்மால் அடையாளம் தெரிந்து கொள்ள
முடியவில்லை.என்று கூறி கஜபுஷ்பங்களாலான கோடியை அவன் கழுத்தில் மாலையாக
அணிவித்து மீ ண்டும் வாலியுடன் யுத்தத்துக்கு அனுப்பினார். சுக்ரீவனும் வாலியை
மீ ண்டும் யுத்தத்துக்கு அழைத்தான். வாலி கிளம்பும்போது அவனுடைய பத்தினியான
தாரை தடுத்து சுக்ரீவனுடனும் ராமபிரானுடனும் நட்பு கொள்ளும்படி கூறினாள். வாலி
அவளை நிந்தித்து சுக்ரீவனுடன் யுத்தத்துக்கு வந்தான்.மறைந்திருந்த ராமன் ஒரே
பாணத்தால் வாலியை கீ ழே வழ்த்தினார்..

இத்துடன் அன்றைய அனுயாத்திரையை முடித்துக்கொண்டு அனைவரும் அவரவர்
தங்கும் சத்திரத்துக்கு திரும்புவோம் என்று கூறினார். போகும்போதே உத்திராதி மடத்தில்
இரவு உணவை முடித்துக்கொண்டு போகுமாறும் கூற பாராயணம் முடிவு
பெற்றது.அப்போது மணி 8-௦௦.
மேற்கொண்டு ஸ்ரீமான் கிருஷ்ணன் சுவாமி கூறிய விஷயம். நாம் திரும்பி போகும்
வழியில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் ஒன்றுள்ளது. அந்த கோவில் அர்ச்சகர்
சுவாமி நம் யாத்திரை நோக்கத்தை அறிந்து சந்தோஷித்து நம் யாத்திரை வெற்றி பெற
வாழ்த்தினார். யாத்ரிகர்களுடன் தம் கோவிலுக்கும் வந்து பெருமாளை சேவித்து விட்டு
செல்லுமாறு கூப்பிட்டார். நாம் உத்திராதிமடம் போகும் வழியில் இந்தக் கோவிலுக்கு
சென்று பெருமாளை செவிக்கிறோம். என்று கூறி எழுந்தார்.

இந்தக் கோவில் தான் ஸ்ரீ


வேணுகோபால ஸ்வாமி
திருக்கோவில். கிஷ்கிந்தை.
நாங்கள் இங்கே சென்று
பெருமாள் சேவித்தோம்.
பட்டர் சுவாமி நன்கு
சேவை பண்ணி வைத்தார்.
அதன்பின்னர் அந்தக்
கோவில் முன் முகப்பிலே
ஸ்ரீமான் கிருஷ்ணன்
ஸ்வாமி மேற்கொண்டு
நாளைய ப்ரோகிராமை
ஒலிபெருக்கி மூலம்
கூறிய விவரங்கள்
வருமாறு :

இப்போது நாளைய ப்ரோகிரமையும் சொல்லி விடுகிறேன். நாளை காலை 6-௦௦ மணிக்கு


காலைகடன்களை முடித்துக்கொண்டு காபி ஆனவுடன் பஸ்களில் கிளம்பி சுமார் ஏழு
மணிக்குள் ஹம்பி செல்கிறோம். ஹம்பி இங்கிருந்து நான்கு கிலோ மீ ட்டர்தான். ஒரு
அரைமணி நேரப் பயணம் அங்கெ துங்கபத்ர நதியில் நீராடுகிறோம். அந்தப் பகுதி
கிஷ்கிந்தையை சேர்ந்ததொரு பகுதியே. ஹம்பி விஜயநகர சாம்ராஜ்ய தலைநகரம்
இருந்த இடம். துருஷ்க்க படை எடுப்பின்போது அங்கிருந்த அற்புதமான சிற்ப
வேலைப்பாடுகளுடன் இருந்த கோவில்கள் தெய்வக
ீ சிலைகள் ரொம்பவும் அழிவுக்கு
ஆளானது. இருப்பினும் தொல்லியல் துறையால் பல இடங்கள் காப்பாற்றி சீர்படுத்தி
யுள்ளார்கள்.ஹம்பியில் தான் சுக்ரீவன் ஒளிந்திருந்த குகை உள்ளது. ராமபிரான்
சுக்ரீவனிடம் நட்பு கொண்ட ஸ்தலமும் உள்ளது. அங்கே மழைக்காலம் நான்கு மாதங்கள்
மால்யவான் என்கிற மலையில் ஸ்ரீ ராமபிரானும், லக்ஷ்மணனும் தங்கியிருந்த இடம்
உள்ளது. இப்போது அங்கே ஒரு ராமபிரான் கோயிலும் உள்ளது. அவைகளை
சேவித்துக்கொண்டு திரும்பி ஹோஸ்பெட் வருகிறோம். வந்து பகல் போஜனதிற்குப் பிறகு
நாம் பஸ்களில் கிளம்பி ஹுப்ளி ரயில்வே ஸ்டேஷன்-ஐ அடைகிறோம். போகிற
வழியில் கடாக்கில் வரீ நாராயண பெருமாள் கோவில் வாசலில் இறங்கி சேவித்துக்
கொண்டு ஹுப்ளி செல்கிறோம். இந்தக் கோவில் ஸ்ரீ ராமானுஜர் விருப்பத்தின்படி அவர்
சீடர் ஸ்ரீ முதலியாண்டானால் கர்நாடகாவில் கட்டப்பட்ட பஞ்ச நாராயண
க்ஷேத்திரங்களில் ஒன்று. என்று சொல்லி முடித்தார்.. அப்போது மணி 9-௦௦..நாங்கள்
உத்திராதிமடம் சேர்ந்து கதம்ப சாதமும், பகாலபாத்தும் சாப்பிட்டோம்.கதம்ப சாதம்
பிசிபெலாபாத்மாதிரி சூடாக சுவையுடன் இருந்தது.அதற்க்கு பொறித்த அப்பளம். பகாளபாத்
சூடாக கஞ்சியுடன் பெருங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கடுகு,உளுத்தம்பருப்பு
தாளித்து சுவையோ சுவை. தொட்டுக்கொள்ள ஊறுகாய். உண்டு சத்திரம் திரும்பி
படுத்தபோது மணி 1 ௦-௦௦.
நாளைய ப்ரோக்ராம் மனசில் ஓடிக்கொண்டிருந்தது. பிழைத்து கிடந்தால் துங்கபத்திரை
நதியில் குளிப்பது உடுத்திக்கொள்ள வேஷ்டி,உத்திரியங்கள் கையில் கொண்டு செல்வது
திருமண் பெட்டி தோல்பை போதும் என்று நாங்கள் பேசிக்கொண்டே உறங்கிப்
போனோம்.
. . (இத்துடன் பாகம் பதினேழு முற்றியது.)

பாகம் -18 தொடரும்

You might also like