You are on page 1of 2

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு


அதன் குளிர்ச்சித் தன்மை தான் காரணம். எனவே வெள்ளரிக்காயை
துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில்
தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து
வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள குழிகளை
மறைக்கும் சக்தி உள்ளது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை
முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி
வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை
மறைக்கலாம்.

பப்பாளி
பப்பாளி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, முகத்தில் உள்ள
குழிகளையும் தான் மறைக்கப் பயன்படுகிறது. எனவே நன்கு கனிந்த
பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு
வேண்டும்.

தக்காளி
உண்மையில் முகத்தில் உள்ள குழிகள், சருமத்துளைகள் திறந்து, மீ ண்டும்
மூடாமல் இருப்பதால் ஏற்படும். தக்காளி திறந்துள்ள சருமத்துளைகளை
மூட உதவும் எனவே தக்காளியை அரைத்து முகத்தில் தடவி
மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து,
பின் கழுவ வேண்டும்.
கடலை மாவு
கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி
சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி
தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள
பள்ளங்கள் மெதுவாக மறைவதை நன்கு காணலாம்.

You might also like