You are on page 1of 9

Sri Lanka - Political

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டியதில்லை, நிறுவனங்களை முன்னேற்ற வேண்டும் –


ஜனாதிபதி

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. செய்ய வேண்டியது
நிறுவனங்களை முன்னேற்றுவதாகும்.

அதற்காக வருமானம் ஈட்ட வேண்டும். வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வேண்டும்.


செலவுகளையும் வீண்விரயத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைக்கும்
மக்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் மூலமே அரச நிறுவனங்கள் இயங்குகின்றன. எனவே
நிறுவனங்கள் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது' என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
அவர்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர்களுடன் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில்
இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகள் பொதுமக்கள் நலன் பேணல் சேவைகள் என்பதால் வருமானம்
ஈட்டுவதை அவற்றிடமிருந்து எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் ஏனைய
நிறுவனங்கள் தமது பராமரிப்பு மற்றும் ஊழியர் மேம்பாட்டிற்கு தேவையான வருமானங்களை தாமே
ஈட்டிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகின்
ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையிலும் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன. நிறுவனத் தலைவர்கள் நாட்டைப் பற்றி சிந்தித்து
செயற்பட வேண்டும். அவ்வாறில்லாத போது நிறுவனங்கள் வீழ்ச்சியடையவும் முடியும். இந்தப்
பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு மட்டுமன்றி எதிர்கால பொருளாதார அபிவிருத்திக்காகவும் அரச
நிறுவனங்களை திட்டமிட்ட வகையில் பலப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஓலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக


இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமது நேயர்கள் யார் என்பதை சரியாக விளங்கி
அவர்களின் இரசனைக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சக நிகழ்ச்சித்திட்டங்களை தயாரிக்குமாறும்,
முறையான திட்டத்துடன் வருமானம் ஈட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் ஜனாதிபதி அவர்கள்
கூட்டுத்தாபன தலைவர்களிடம் தெரிவித்தார். 'நிறுவனங்கள் அடைந்துள்ள நிலை பற்றி ஊழியர்களுக்கு
தொடர்;ச்சியாக அறிவூட்டுங்கள் தம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்காது நிறுவனத்தின்
முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பதற்கு அவர்களை உற்சாகப்படுத்துங்கள்' என்றும் ஜனாதிபதி
அவர்கள் குறிப்பிட்டார்.
கூட்டுத்தாபன ஊழியர்களின் அதிகபட்ச வினைத்திறனை உறுதிப்படுத்துவதுடன், முறையான
திட்டத்தின் கீழ் வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்கள் விளக்கினார்.

ஓலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் விக்ரமசிங்க, பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே


மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர் என்று ஜனாதிபதி ஊடகப்
பிரிவு தெரிவித்துள்ளது

பாரம்பரிய சிந்தனைகள் - கட்டமைப்பிலிருந்து விலகி பொருளாதார புத்தெழுச்சிக்கு பங்களிக்குமாறு


ஜனாதிபதி வங்கித்துறையினரிடம் வேண்டுகோள்

கொவிட் 19 நோய்தத ் ொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் பலமாக


கட்டியெழுப்புவதற்காக பாரம்பரிய சிந்தனைகள் மற்றும் கட்டமைப்பில் இருந்து விலகி பங்களிக்குமாறு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வங்கித் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தது.


தற்போதுள்ள பாரிய சவால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். ஆடை
கைத்தொழிலை வழமை நிலைக்கு கொண்டுவர நீண்ட காலம் செல்லும். சுற்றுலா துறையிலும் பாரிய
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இழந்த வருமானம் மற்றும் தொழில்கள் மிகவும் பெரியதாகும். பழைய இறக்குமதி
முறைமையை தொடரந்தும் முன்னெடுக்க முடியாது. நாம் உற்பத்தி பொருளாதாரத்தில் கவனம் செலுத்த
வேண்டும். அதற்காக செயற்திறமாக பங்களிப்பதற்கு வங்கித் துறையினருக்கு முடியும்' என்றும்
ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கு பிந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு


வங்கித் துறையை பங்குதாரராக்கிக் கொள்ளுதல் மற்றும் அதன்போது வங்கித் துறையில் உருவாகியுள்ள
பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற
சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர்
டபிள்யு.டீ. லக்ஷ்மன் உட்பட பிரதி ஆளுநர்கள், அரச மற்றும் தனியார் துறை வங்கித் தலைவர்கள் மற்றும்
தலைமை நிறைவேற்று அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கொரோனா பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு சுகாதாரத் துறை உட்பட அனைத்து தரப்பினரும் பெரும்


அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் வங்கித் துறையிடமும் அத்தகைய
பங்களிப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

தற்போதுள்ள முக்கிய தேவை உற்பத்தி பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகும். இதற்காக


முதலிடக்கூடிய பல துறைகள் உள்ளன. தேயிலை உட்பட பெருந்தோட்ட கைத்தொழில், சிறிய மற்றும்
நடுத்தர உற்பத்திகள், வீடுகள் மற்றும் ஏனைய நிர்மாணத் துறை, விவசாயத்துடன் தொடர்புடைய
உற்பத்திகள் பெறுமதி சேர்க்கப்பட்ட கறுவா, மிளகு போன்ற பயிர்கள் அவற்றில் சிலவாகும்.
இத்துறைகளில் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்காக இலகுவான நிபந்தனைகளின் கீழ் கடன் வழங்குமாறு
ஜனாதிபதி அவர்கள் வங்கிச் சமூகத்திடம் கேட்டுக்கொண்டார்.
'வாகனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற இறக்குமதிக்காக கடன் வழங்கி இலகுவாக
இலாபமீட்டும் முறைமையை தொடர்ந்தும் பேண முடியாது. புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள
முன்னுரிமைகளுக்கே அதிகம் கடன் வழங்கப்பட வேண்டும். விவசாயிகள் அதிக வட்டிக்கு
வியாபாரிகளிடம் கடன் பெறுகின்ற போது அவர்கள் வியாபாரிகளினால் சுரண்டப்படும் நிலைக்கு
ஆளாகின்றனர். அது எல்லா வகையிலும் பாதிப்பானதாகும். பெரிய வியாபாரிகளுக்கு போன்றே சிறிய
வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் வங்கிகள் உதவ வேண்டும்.' என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி
அவர்கள், கடன் வழங்கியதன் பின்னர் அதன் மூலம் பயன்பெறும் விதம் குறித்து தொடர்ந்தும்
தேடிப்பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் வங்கிகளில் இருந்து கடன்பெற்று
அவற்றை திருப்பிச் செலுத்தாதவர்களில் அதிகமானவர்கள் ஏழைகளன்றி பணக்காரர்களேயாகும்
என்றும் குறிப்பிட்டார். மத்தியதர வர்க்கத்தினருக்காக வீடுகளை நிர்மாணித்து சலுகை விலையில்
அவற்றை வழங்குவதற்கு தனது கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்ததை நினைவுகூர்நத ் ஜனாதிபதி
அவர்கள் அத்தகைய சந்தர்ப்பங்களில் மத்தியதர வர்க்கத்தினருக்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்க
வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கலந்துரையாடலில் பங்குபற்றிய வங்கிப் பிரதிநிதிகள் பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்கம்


முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டனர். அவர்கள் வங்கித்
துறை முகம்கொடுத்துள்ள சில பிரச்சினைகளையும் முன்வைத்ததுடன், மத்திய வங்கியுடன்
கலந்துரையாடி அவற்றை தீர்த்துக்கொள்ளவும் இணக்கம் தெரிவித்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும்


இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு


ஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத
ஓய்வூதிய சம்பளத்தையும், இரு கண்களையும் இழந்த உயன ஹேவகே அசோக தனது
சேமிப்பிலிருந்த 5 லட்சம் ரூபாவையும் இன்று (09) கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு
அன்பளிப்பு செய்தனர். நாடு முகம்கொடுத்துள்ள கடினமான சந்தர்ப்பத்தில் பிரஜைகள் என்ற வகையில்
அதற்கு பங்களிக்க கிடைத்தமை ஒரு மனிதாபிமான கடமை என அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்தியாவசிய உணவு வர்த்தக பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர்


அன்பளிப்புச் செய்த 25 மில்லியன் ரூபாவை அமைச்சர் சமல் ராஜபக்ஷவும், இலங்கை கிரிக்கட் நிறுவனம்
அன்பளிப்பு செய்த 25 மில்லியன் ரூபாவை அமைச்சர் டலஸ் அழகப்பெறும, இலங்கை கிரிக்கட்
சங்கத்தின தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும்
லசித் மாலிங்க ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தனர்.

பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி, விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின்


பணிக்குழாமினர் அன்பளிப்புச் செய்த 7 மில்லியன் ரூபாவை அமைச்சர் ரமேஷ் பதிரண ஜனாதிபதியிடம்
கையளித்தார்.

எயார்போட் எண்ட் ஏவியேஷன் சர்விசஸ் (ஸ்ரீலங்கா) லிமிடற் நிறுவனம் 10 மில்லியன் ரூபா, அரச


அதிகாரிகளின் நலன் பேணல் சங்கம் மற்றும் இரிகேஷன் இன்ஜினியரின் டிப்லொமெட்ஸ் எசோசியேஷன்
நிறுவனம் என்பன தலா ஒரு மில்லியன் ரூபா, களுத்துறை பௌத்த நம்பிக்கை சபை 10 மில்லியன்
ரூபா, மனோ சேகரம் 5 மில்லியன் ரூபா, பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் 2.5 மில்லியன்
ரூபா, இலங்கை குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகளின் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம், அரச நிதி
திணைக்களம் ஒரு லட்சத்து 25000 மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சபை 1.5 மில்லியன் ரூபா
அன்பளிப்புகள் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலே
அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று பிற்பகலாகும் போது கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு


மீதி 585 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, 
சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நே
ரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும்
அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும்.
காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும். 

எதிரணியை வெளுத்துக்கட்ட தயாராகும் ரொனால்டோ... நாளை முதல் பயிற்சி

பிட்மான்ட் : கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் ரத்து செய்யப்பட்ட கால்பந்தாட்ட தொடர் வரும்
ஜூன் 13 ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்தர அணிகள் தங்களது கால்பந்தாட்ட
பயிற்சிகளை திங்கள் முதல் துவங்கலாம் என்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா
காரணமாக கடந்த 2 மாதங்களாக மதெய்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் முடங்கியிருந்த
கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 5 ம் தேதி இத்தாலி திரும்பியுள்ளார்.

கோவிட் -19 ஆல் IPL தொடர்ந்து தள்ளிப்போன DNPL


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடரான ஐபிஎல் ஸ்டைலில், தமிழகத்தில் நடத்தப்பட்டு தமிழ்நாடு
பிரீமியர் லீக் தொடர் நடக்கிறது. இந்நிலையில் 2020 ஆண்டுக்கான ஐந்தாவது சீசன் வரும் ஜூன்
10 ஆம் தேதி துவங்க இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக டிஎன்பிஎல் தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரால் காரணமாக உலகின் பல்வேறு விளையாட்டுத் தொடர்கள்


நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் திருவிழா போல நடக்கும் டி20 தொடரான ஐபிஎல்
தொடரும் நடத்தப்படாமல் உள்ளது. முன்னதாக இந்த தொடர் கடந்த மார்ச் 29 இல் துவங்கயிருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2020 டிஎன்பிஎல் தொடரில்
எட்டு அணிகள் பங்கேற்க இருந்தன. லீக் சுற்று, பிளே-ஆஃப், ஃபைனல் என தொடருக்கான ப்ளான் தயார்
செய்யப்பட்ட நிலையில் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

வைரலாகும் அருண் விஜய்யின் ஒர்க்அவுட் வீடியோ


தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம்.
பழமைவாய்ந்த மிகசிறந்த நடிகரான விஜயகுமாருக்கு வனிதா, ப்ரத
ீ ா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள்
உள்ளனர். அவரது குடும்பத்தில் உள்ள ஒரே மகன் அருண் விஜய்.

சினிமா துறையில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்நத


் ாலும் தனது சொந்த
முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ளார் அருண் விஜய். இவரை
ஹீரோவாக திரையில் கண்டு ரசிக்கும் ரசிகர்களை விட வில்லனாக ரசிக்கும் ரசிகர்களே அதிகம்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை
வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பழைய
வீடியோ ஒன்றை வெளியிட்டு Miss this.. என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில்
வைரலாகி வருகிறது. 

பாக்ஸர், சினம், ஜிந்தாபாத் என அடுத்தடுத்து அருண் விஜய்யின் படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பது


கூடுதல் தகவல்.

லாக்டவுன் முடிந்ததும் வெளியாகப்போகும் விஜய் சேதுபதியின் படம்


கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள்
அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும்
திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்போதைக்கு திரையரங்குள் திறக்க
வாய்பப் ில்லை என்றும், இன்னும் குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்தே திரையரங்குகள்
திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் பல்வேறு படங்களின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் ஊரடங்கிலும் நடந்து வருகிறது.


இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள "இடம் பொருள் ஏவல்"
படத்தை லாக்டவுன் முடிந்தவுடனே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்துள்ள இப்படத்தில் விஷ்ணு , நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ்
உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள
இப்படத்தின் ரிலீஸ் தேதி மக்கள் செல்வன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் Facebook


பேஸ்புக் நிறுவனம்
அதன் உள்ளடங்கங்களை
தணிக்கை செய்து வெளியிடும் மதிப்பட
ீ ்டாளர்கள் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு சுமார் ரூ.392
கோடி ரூபாய் வழங்குவதாகவும் , அவர்களுக்குத் தேவையன மன நல மசோதா வழங்க ஏற்பாடு
செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உலகில் அதிகளவிலான பயனாளர்களைக் கொண்டுள்ள சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், அதன்


அதன் வலைதளத்தில், அதிக நச்சுத் தன்மை கொண்ட அதிர்ச்சியூட்டும் 

தன்மை கொண்ட தகவல்களைப் படித்து தணிக்கை செய்து


வெளியிட வேண்டி பல பணியாளர்களைப் பணிமயர்தத
் ியுள்ளது.

இந்நிலையில், இவர்கள் அதிக வக்கிரத் தன்மையுள்ள படங்கள், கொலை, வன்முறை போன்ற


செய்திகளையும், படங்களையும் அடிக்கடி பார்க்கும்போது மனநல பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக
தெரிகிறது.
எனவே, இந்தப் பணியாளர்களை மனநலத்தைக் காக்கும் பொருட்டு, பேஸ்புக் நிறுவனம்
11,250 பேருக்கு மொத்தம் 392 கோடி ரூபாய் இழப்படீ ாக
வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இதன்மூலம் தற்போதைய பணியாளர்கள், முன்னாள் பணியாளர்கள் ஆகியோருக்கு தலா ரூ. 75 ரூபாய்


முதல் ரூ நாலரை லட்சம் வரை வழங்கப்படும் என தெரிகிறது.

You might also like