You are on page 1of 3

குறள் :

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை


அதிர வருவதோர் நோய்.

குறள் விளக்கம் :

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக


வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

தந்திர நரி (Sly Fox)


திருக்குறள் நீதிக் கதைகள் 
(Thirukural Moral Story)

ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை தொரத்துகிறது. 
சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம்
ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில்
விழுந்தது.

இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. 

தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது
நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.

தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக


பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி
நம்பிவிட்டது.

நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று
கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை
தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை
நிரவேற்றிக்கொண்டது.

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை


பெருகலிற் குன்றல் இனிது.
விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும்
அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.

என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். நல்ல நட்புடன் பழக வேண்டும் என்று கூறுகிறேன்.

You might also like