You are on page 1of 2

சூரிய குடும்பம் என்பது சூரியனையும் 8 கோள்களையும் உள்ளடக்கியது

சூரிய குடும்பம் பால்வீதி மண்டலத்தில் அமைந்துள்ளது. இதன் மையத்தில் சூரியன் அமைந்திருக்கின்றது.


சூரியன் மிகப்பெரிய நெருப்புப் பந்தாகும்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, நிருதி மற்றும் வருணன் ஆகிய 8 கோள்களும் தத்தம்
சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன

ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி சுற்றுப்பாதை இருப்பதால் அவை ஒன்றோடொன்று மோதிக்


கொள்வதில்லை

சூரிய மண்டல உறுப்பினர்கள்

சூரியன் மற்றும் கோள்களைத் தவிர்த்து, சூரிய மண்டலத்தில் விண்கற்கள், எரிகல்/எரிமீன், வால்மீன்


இயற்கைத் துணைக்கோள் ஆகியவையும் அடங்கும்.

இயற்கை துணைக்கோள்

இயற்கைத் துணைக்கோள் (Natural satellite) அல்லது நிலா என்பது ஒரு கோளின் ஈர்ப்பு விசையால்


அக்கோளைச் சுற்றி வரும் இயற்கையில் அமைந்த ஒரு பொருள். பூமியைச் சுற்றி வரும் நிலா அதன்
ஒரே இயற்கையான துணைக்கோள் ஆகும்.

விண்கற்கள்

விண்கற்கள் கற்களாலும் உலோகங்களாலும் ஆனவை. இவை செவ்வாய் மற்றும் வியாழன்


கோள்களுக்கிடையில் ஒரு கோள் பட்டையில் அமைந்துள்ளன. இவை சூரியனைச் சுற்றிவரும் மிகப் பெரிய
கற்குவியல்கள்.

எரிகல்
விண்கற்களின் சுற்றுப்பாதையிலிருந்து வெளிவரும் சிறு சிறு கற்களாகும். காற்று மண்டலத்தில் உராயும்போது
தீப்பற்றி எரியும்.

வால்மீன் / வால் நட்சத்திரம்

வால்மீன் பனிக்கட்டி, தூசு மற்றும் உறைந்த வாயுக்களால் ஆனது. இது ஒளி எழுப்பாது. சூரியனை
நெருங்கும்போது நீண்ட வாலுடன் ஒளிரும்.
கோள்கள்
பன்னாட்டு வானியல் ஒன்றிய வரையறைகளின்படி, சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உண்டு.
சூரியனில் இருந்து தொலைவு கூடக்கூட முதலில் புவிநிகர் கோள்களான புதன், வெள்ளி, புவி,
செவ்வாய் ஆகியவை அமைகின்றன. அடுத்து பெருங்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ்,
நெப்டியூன் ஆகியவை அமைகின்றன. முதல் இரண்டு கோள்களில் நிலா ஏதும் இல்லை.

நிலவு மற்றும் சூரியன்

You might also like