You are on page 1of 6

கதை களத்தின்

நாயகன்....நாதன்...

மனைவி... மங்கை

நாதன் தம்பி.....விசு

மனைவி....நித்யா

நித்யா அம்மா

நித்யா அண்ணன்.... சேகர்

நித்யா அண்ணி....விஜி

நாதன் ஆபீஸிலிருந்து வந்ததும் மங்கை கடிதம் வந்த விபரத்தை சொன்னாள்...தம்பி விசு


உல்லாசபயணம் போறதுக்கு காசு வேணுமாம்...

நாதனுக்கு தம்பிப்பாசம் ஜாஸ்தி....அவன் ஆசைபட்டதெல்லாம் எப்பாடுபட்டாவது


வாங்கிக்கொடுத்துடுவான்...

விசுவும் படிச்சு நல்ல உத்யோகம்...வசதியான வீட்டுப்பெண் ... நல்லபடி வாழ்க்கைனு ...


செட்டிலானான்......

விசு நல்லா சம்பாதித்தாலும் மனைவி ஊதாரி....

புடவை ... ஹோட்டல்.... மேக்கப்னு செலவழிப்பதால்...

சம்பளம் பாதி அவளுக்கே காலியாகி டும்.....மாசக்கடைசில‌அண்ணனிடம் வந்து நிப்பான்....நாதன்


குறைந்த வருமானத்திலும் சேமிப்பான் ..

அடிக்கடி விசு வந்து பணம் கேட்கறதும்....நாதன் கொடுக்கறதும் தொடருது.......

நாதன் அப்பா இறந்து பதினாறாம் நாள் காரியம்... விசுக்கு பணமுடை.... நாதன் விசு கொடுத்தான்
என்று பொய்சொல்லி அவனுக்கும் சேர்த்து செய்றான்.....
நித்யாக்கு விசுதான் எல்லாம் செலவழிக்கறதா நினைப்பு...நாதனையும் மங்கையையும் மட்டம் தட்டி
பேசுகிறாள்....

நாதன் தாயை தன்கூட வந்துடு.... கிராமத்துல தனியா இருக்க வேண்டாம்னான்...நித்யா "உங்ககூட


வந்தா பாதிநாள் பட்டினி கிடக்கணும்....எங்க கூட வந்தா மூணு வேளையும் சாப்பாடு
போடுவேன்"...சொல்றா...

சொந்தக்காரங்க முன்னாடி மனைவி பேச்சைக் கேட்டு கோபத்தில் "நித்யா வாயமூடுனு" கத்தினான்


விசு.....

அவள் சரியாத்தான் சொல்றானாங்க நித்யா அம்மா....அதக்கேட்டு சொந்தங்கள் ஷாக்காக....... நித்யா


அண்ணன் சேகர் "நித்யா நீ பேசுறது சரியில்லை ....அம்மா ..,.அவ பேசறத கண்டிக்காம நீங்க
பேசுறது தப்பு" னு கோபப்படுறான்....

அண்ணன் அண்ணி எல்லார் முன்னால் அவமானப்படுறத தாங்காம ..விசு

"நித்யா ......

இன்னிக்கு நல்ல நிலையில் நானிருக்கக் காரணம் அண்ணன் அண்ணி தான் ....அவங்களயா தப்பா
பேசுற"....

"படிக்க வச்சாங்கன்னா அஞ்சோ பத்தோ கொடுங்க ....தலையில் தூக்கி வச்சு ஆடாதீங்க.."

நித்யா பதிலுக்கு கத்த...இடைபுகுந்த நாதன் ...விசு விடு...அம்மா எங்க இஷ்டப்படுறாங்களோ அங்க


இருக்கட்டும்...

அம்மாவோ நாதன் கூடவே போறேன்றாங்க..... நித்யா ".பட்டினிகிடந்து சாகணும்னு உங்க தலையில்


எழுதி இருக்கு போல.."..சொல்ல

விசு நித்யாவை இழுத்து ஒரு அறை ... விட....

நித்யா அம்மா வேகமாக வந்து விசுவை தள்ளிட்டு...பிள்ளையா வளர்த்து வச்சிருக்கீங்க....என் மகளை


இப்படி போட்டு அடிக்கறானேனு அழவும்...
"யாரு?....நல்லா வளர்க்கலை ...எங்கம்மா வா?......நீங்களா? .வீட்டுக்கு வந்த மருமகளை
விட்டுக்கொடுக்கக்கூடாதுனு இவ பேசுறதெல்லாம் பொறுத்துட்டிருக்காங்க.....

எங்கண்ணன் வீட்டுக்குப் போனா பட்டினி கிடக்கணுமா?.... எங்கண்ணன் ரூபாய்ல தான் இவளே


சோறு சாப்பிடுறா.... தெரியுமா? நான் அண்ணன் சம்பளத்தை விட டபுளா சம்பாதிக்கிறேன்....

என் சம்பளம் தெரிஞ்சும் இவ வசதியை கொஞ்சமும் குறைக்கலை...

புடவை வாங்குவது....ஹோட்டல்.... ஊர் சுத்துவது.... இதான் தெரியும்.......இவளை சந்தோஷப்படுத்த


அதிகமா உழைக்கேன்.....

அவர் சம்பளத்துல சிக்கனமாக வாழ்ந்து.....எனக்கும் கொடுத்துதவுறார்...

இடம்பொருளில்லாமல் மரியாதைகெட்டத்தனமா பேசுற இவளை நீங்க வளர்த்தவிதம் சரியா?..இல்ல

இவ சொன்ன பழிசொல்லையெல்லாம் தாங்கி குடும்பமானம் காக்க பொறுமையா ....எனக்காக...


நிக்கற எங்க அம்மா..அண்ணன்.. அண்ணி சரியா?...

சொல்லுங்க"

"வீட்டுக்கு வந்த பொண்ணு கஷ்டப்படக்கூடாது நாளானா சரியாகிடும்னு என்னை சமாதானபடுத்தின


அண்ணனும்...கட்டின பொண்டாட்டிய சந்தோஷமா வச்சுக்க வேண்டியது கணவன் கடமைனு
நினைக்கிற நானும் வளர்ந்தவிதம் சரியில்லையா?

பொறுப்பில்லாம செலவழிச்சதில்லாம ....பெரியவங்கனு மட்டுமரியாதையில்லாம எங்கப்பா இறந்தவீட்ல


மனசொடிந்து போய் நிக்கற எங்களை சொந்தபந்தம் முன்னாடி அசிங்க படுத்தற இவளை அடக்க
...அடிச்சது தப்பா?

விசு பேச்சு கேட்ட பின்னரும் ஆனாலும் னு இழுத்த நித்யா அம்மாவை ....நித்யா அண்ணி

விஜி..., நிறுத்துங்க அத்தை ...நித்யாக்கு சப்போர்ட் பண்ணாதீங்க.... மாப்பிள்ளை சொல்வது


சரிதான்.....செல்லம் கொடுத்து கெடுத்ததும் இல்லாமல்....தூண்டி விடாதீங்க...
நித்யா முதலில் எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேளு....விஜிசொன்னதும்.... சொந்தக்காரங்களும் ....
கொஞ்சங்கூட ஈவுஇரக்கமில்லா பேசுறா...என்ன பொண்ணு இவ....

'யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்கும்அவசியம் எனக்கில்லை ......இனி ஒரு நிமிஷம் கூட இங்கு


இருக்கமாட்டேன்....இப்பவே என் அம்மா வீட்டுக்குப்போறேன்".....கிளம்பும் நித்யா கிட்ட

"எங்க வர்ற...இந்த குடும்பத்தை கஷ்டப்படுத்தினது போதாதா.....எங்க நிம்மதிய வேறக்கெடுக்கப்


போறியா....மன்னிப்பு கேட்டு ஒழுங்கா வாழற வழியப்பாரு..புருஷனோட .சந்தோஷமா வந்து இரண்டு
நாள் என்ன பத்து நாள் கூட வந்து இரு...கோவிச்சுகிட்டு அங்க வந்து டேரா போடலாம்னு கனவு
காணாத....எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு......மோசமான உதாரணமாகி விடாத.. ."

அம்மா இப்ப வரப்போறியா இல்லையா" கத்தின சேகரைப்பாத்து பயந்து என்ன சொல்றதுன்னு


தெரியாம டேய் தங்கச்சி பாவம் டா....கூட்டிட்டுப் போவோம்டா....சொன்ன நித்யாம்மாவப் பார்த்து

சேகர்....

"இப்ப வரப்போறியா இல்லையா..... அவ குடும்ப பிரச்சினை அவ பார்த்துப்பா....

வந்தமா விசேஷம் முடிஞ்சதும் கிளம்பணும்.".. .... சேகர் அப்பா இறந்ததும்

பிஸினஸையும் கவனித்து, அண்ணனா தங்கைக்கு திருமணமும் செய்து வைத்தான்

..

அண்ணன் பின்னாடி போற அம்மாவைப் பார்த்து‌ அப்படியே நின்றாள் நித்யா.....எல்லா சொந்தமும்


போயாச்சு......வீடே அமைதியா இருக்கு.....

மங்கை எல்லாருக்கும் காபி போட்டு கொடுத்தாள்...."நித்யா யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்க


வேண்டாம்......ஒரு வீட்டுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் என்ன மன்னிப்பு.....நீயும் என் மகள்
போலத்தான்....நடந்தத கெட்ட கனவா மறந்திடு.....கைகாலு அலம்பிட்டு வா" பிரியமா பொறுமையா
பேசுற மங்கையைப் பார்த்து மலைப்பாக இருந்தது...,.,

இத்தனை சண்டைக்கப்புறமும் கோபப்படாம குத்தலா பேசாம எப்படி ..இப்படி தன்மையா


பேசுறாங்க..... நித்யா வால் தாங்க முடியலை.....

அவ முக மாற்றத்தை பார்த்த நாதன் ஒரு முடிவுக்கு வந்தவனா விசுவை தனியே போய் பார்த்தான்..
" இப்ப ஊருக்கு போனா இரண்டு பேரும் சண்டை போட்டு சின்ன பிரச்சினையை
பெரிசாக்கிடுவீங்க....நீ ஊருக்குப்போ....அவ இங்க இருந்து நல்லது கெட்டது தெரிஞ்சுகட்டும்

சின்ன பிரிவு உறவின் வலிமையை அவளுக்கு உணர்த்தும்....நீயும் தனிமையில் கொஞ்சம்


யோசி.....அவ பண்ணது தப்புனா....ஆத்திரப்பட்டு அவள நீ எல்லார் முன்னிலையிலும் அடித்ததும்
தப்பு.....ஒரு தப்புக்கு ஒருதப்பு பதிலாகாது....."

விசுக்கும் சரின்னு பட்டது.... நித்யா முகத்தை நேரில் பார்க்காம அம்மா ....ஆபிஸ் வேலையா 10
நாள் டெல்லி போறேன்.... வந்து அவளை சென்னைக்கு கூட்டிட்டு போறேன்....அதுவரை இங்க
இருக்கட்டும் சொல்லிட்டு....நித்யாவை ஒரு பார்வை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு போயிட்டான்.....

அண்ணன் அம்மா விட்டுட்டு போனதிலும்.....சொந்தக்காரங்க கேவலமா பார்த்த பார்வையிலும் .....விசு


ஒரு வார்த்தை கூட பேசாம போனதிலும் .....மனம் நொந்து போன நித்யா யார் கூடவும் பேசாம
தனியா ரூம் குள்ள போய் படுத்துட்டாள்.....நாதன் மங்கையை கண்ஜாடையில விட்டுரு சொன்னதும்
மங்கை குழந்தைகள் பாட்டி எல்லாரும் வீட்டின் உள்ளே போயிட்டாங்க.....

நடந்ததெல்லாம் நினைச்சு பார்த்த நித்யா க்கு தப்பு பண்ணிட்டோமேனு தோணிச்சு......சே நாம்


அப்படி பேசிருக்கக்கூடாது......

கணவனிடம் கோபம் வந்தது.....

தப்புனா சொல்லாம்ல.......அறைந்தானே....

கொஞ்சநாள் அம்மா வீட்டுக்கு போகலாம்னா அண்ணன் வராதங்கிறான்..... அம்மா கூட அண்ணன்


கத்தினதும் பேசாம போயிட்டாங்களே......

நமக்கு போக்கிடம் கிடையாதா.....

இவங்க பேச்சை கேட்டுட்டு பேசாம இருக்க வேண்டியதானா..

யோசிச்சுட்டே நித்யா கண்ணசந்தப்ப... யாரோ ரகசியமா பேசுறது கேட்டது.....உத்துக்கேட்டதுல


நாதனும் மங்கையும்..

என்னங்க இன்னும் நடந்ததையே நினைச்சுட்டிருக்கீங்களா........சின்ன பெண்...ஏதோ பேசிட்டா


விடுங்க....
இல்லம்மா..அவ பேசினது தப்பு தான்....ஆனா பாவம்....விசுவும்...அவ அண்ணனும்
கோபப்பட்டு....அம்மாவும் விட்டுட்டுப் போய்....நித்யா மனசளவில் நொறுங்கி போயிருப்பா...நாம் தான்
அன்பாயிருக்கணும்..

நீ ஏதும் அவ வருத்தப்படுறாப்ல பேசிடாத

நாதன் சொன்னதைக் கேட்டதும்.....

நித்யா வால் தாங்க முடியலை.... இவ்வளவு நடந்த பின்னும் நான் வருத்தப்படக்கூடாது


நினைக்காங்க.....எப்படிப்பட்ட மனுஷங்கள்...இவங்கள காயப்படுத்திட்டமேனு...

ஓடி வந்து... நாதன் மங்கை கால்ல விழுந்தாள்....

தவறை உணர்ந்தபின் பிரிவிற்கு என்ன வேலை..

நாதன் போன் பேசியதால் விசு உடனே கிளம்பி வந்தான்....

நித்யா மட்டுமல்ல ....அப்பா ஆகப்போற நற்செய்தியும் காத்திருந்தது விசுக்கு......

You might also like