You are on page 1of 2

பிரியாணி...

டைட்டில் உருவான கதை...

டின்னெர்க்கு வெஜ் பிரியாணி சாப்பிட்டவுடன் இந்த டைட்டில் தான் தோணுச்சு...

(பிரான், மட்டன், சிக்கன், பிஷ், முட்டைனு எல்லா பிரியாணியும் எனக்கு ரொம்ப


பிடிக்கும்...)

இனி கிறுக்கலுக்கு போலாமே...


இடம்... சென்னை பெரிய கொடுங்கையூர்...

அந்த 1 BHK வில் இளவரசி மட்டும் தான் தங்கி இருக்கிறாள். MR நகர் இல்
இருக்கும் KBI பாங்கில் அவள் கிளெர்க்.

அன்று காலை 9 மணிக்கு எழுந்த இளவரசிக்கு ஒரே உடல் வலி, பீரியட் வேறு,
வலிக்காத ஒரே போர்ஷன் வாய் மட்டும் தான்.

மேனேஜர் கிட்ட கேட்டு லீவு வாங்கி கொண்டாள்.

பிரிட்ஜ் ஐ திறந்தாள். ஒன்றும் உருப்படியாய் இல்லை. பசி வயிற்றை கிள்ளியது...

உடை மாற்றி கொண்டு bagai எடுத்து கொண்டு கிளம்பினாள்.

Tondiarpet High Road சென்று ஒரு பிரியாணி கடையில், பிரியாணி வாங்கி கொண்டு
மளிகை, காய்கறி வாங்கி கொண்டு வீடு நோக்கி நடந்தாள்.

அப்போது ஒரு வயதான பாட்டி வந்து பிச்சை கேட்டாள்.

"கண்ணு, சாப்பிட்டு ரெண்டு நாள் ஆவுது. காசு குடுமா"

பணம் தந்தால் கிழவி சாப்பிடுவாளோ மாட்டாளோ என எண்ணி,

"பாட்டி, இதுல சிக்கன் பிரியாணி இருக்கு. இதை சாப்பிடுங்க."

"நீ நல்லா இருப்ப ராசாத்தி. வரேன்மா ." - விடைபெற்றுக்கொண்டாள் கிழவி...

இளவரசியின் மனம் மட்டும் அல்ல, வயிறும் நிறைந்து போனது கிழவியின்


வாழ்த்தால். வீட்டை நோக்கி நடந்தாள் அவள்.

                                                                      (நிறைந்தது...)

You might also like