You are on page 1of 1

1

வரமாமுனிவர்

வரமாமுனிவர் (நவம்பர்
ீ 8, 1680 - பெப்ரவரி 4, 1747)[ இத்தாலி என்னும் இடத்தில் பிறந்தார்.

இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi).

இவர்  கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில்  1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

 வரமாமுனிவர் தமிழகத்தில் 1710
ீ இலிருந்து 1747 வரை மறைப்பணியும் தமிழ்ப்பணியும்
ஆற்றினார். 

சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

அவர் இலக்கணம், இலக்கியம், அகராதி, சிறுகதை போன்ற பல துறைகளில் தமிழ் வளர்ச்சிக்குப்


பெரிதும் பங்களித்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய ஒரு சீரிய பணி தமிழ் எழுத்துக்களில் அவர்
கொணர்ந்த சீர்திருத்தம் ஆகும்.

இவர்  23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான


நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும்
தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப்
புலமைக்குச் சான்றாக உள்ளது.

தமிழ் காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால்


இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம்], திருப்புகழ்], நன்னூல்,


ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு
லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400
சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீ ய அகராதியை உருவாக்கினார்.

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர்


வரமாமுனிவர்.

இவர் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளதாக குறிப்புள்ளது. இந்நூல்கள் பாடல் வடிவில்


உள்ளன.

1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.  இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் தேர்ந்த வரமாமுனிவர் பூக்கள் மீ


ீ து மிகுந்த ஈடுபாடு
கொண்டவர் என்றும் பூந்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் தெரிகிறது.

You might also like