You are on page 1of 2

திருமணம்

திருமணம் என்பது குடும்பத்தில் இன்னொரு நபர் இணைவது. ஜாதகத்தில் இதை 2--


ம் இடம் காண்பிக்கிறது. இப்படி வரும் ஒரு நபர் ஒரு ஒப்பந்தத்தின் மூலம்
(கருத்தொற்றுமை மூலம்) சேர்க்கப்படுகிறார். இதை ஜாதகத்தில் 7 ஆம் இடம் காட்டுகிறது.
இப்படி சேர்ந்த அந்த நபர் குடும்பத்தில் ஒரு நிலையான சந்தோஷத்திற்கும், சந்ததி
விருத்தி ஏற்படக்கூடிய வாய்ப்புக்கும் காரணமாகிறார். இது 11--ம் இடத்தால்
காட்டப்படுகிறது.
ஆகவேதான் திருமணத்திற்கு முன் ஆண், பெண் ஜாதகங்களில் 2, 7, 11-ஆம் இடங்கள்
ஆராயப்படுகின்றன. அவ்வாறு ஆராயும்போது திருமணம் செய்து கொண்டால்
அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது:
(1)சம்பந்தப்பட்ட ஜாதகர்களுக்கு திருமண பந்தத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா?
(அதாவது தனித்தனியாக பார்க்கும் பொழுது)
(2) ஜாதகரின் தன்மை, குணம்; அவர்களை ஆளும் கிரகம்; இருவரும் ஏற்கனவே
உறவினர்களா அல்லது இல்லையா? அவர்களுடைய தோற்றம் தனிச்சிறப்பு, குணம்,
தொழில் முதலியவை.
(3) திருமணத்திற்கு உரிய காலம் நேரம்;(Time of Marriage).
(4)திருமண வாழ்க்கை (i) மனதொத்த, முரன்பாடில்லாத மற்றும் பிரிக்க முடியாத
பந்தமாய் இருக்கிறதா, அல்லது (ii) தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஈடுபாடும், இணக்கமும்
இல்லாமல் சமூகத்திற்கு பயந்து ஒரே வட்டில்
ீ ஒரு குடும்ப வாழ்க்கை நடத்துவார்களா,
அல்லது (iii) சண்டை சச்சரவுடன் இருப்பார்களா (பெரும்பாலும் பகலில் எலியும் பூனையும்
ஆனாலும் அவர்களுக்கு நிறைய குழந்தைகள் இருக்கும்) அல்லது (iv) அவர்கள் அடிக்கடி
விவாகமும் -- விவாகரத்தும் செய்யக்கூடியவர்களா?
முதலாவதாக, ஆண், பெண் இருவருடைய தனிப்பட்ட ஜாதகங்களுக்கு
திருமணம்/பந்தம் விதிக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா? யாருக்கு திருமண பாக்கியம்
உள்ளது?
(இந்து தர்மப்படி) திருமணம் அதற்கு ஏற்ற வயதில் அல்லது இளமையில் நடக்க
வேண்டுமானால்:--
a. சந்திரனும் சுக்கிரனும் நற்பலன் அளிக்கும் ராசிகளில் இருக்க வேண்டும்.
(ரிஷபம், கடகம், விருச்சிகம், மீ னம் மற்றும் தனுசு)
b. அல்லது அந்த கிரகங்கள் 7--ம் பாவத்தில் ராசி சந்தியில் அமைய வேண்டும்.
c. அல்லது குரு அல்லது சுக்கிரன் 2, 7, 11--ல் அமைய வேண்டும்.
d. அல்லது குரு சந்திரனுடன் 1, 5, 10, 11-ல் அமைய வேண்டும்.
e. அல்லது சுக்கிரன், சந்திரனுடன் 1, 5, 10, 11-- ல் அமைய வேண்டும்.
f. சந்திரனும், சுக்கிரனும் சனியோடு சம்பந்தமோ, பார்வையோ இல்லாதிருக்க
வேண்டும். அதோடு சனியை விட சந்திரனும் சுக்கிரனும் பலமாக இருக்க
வேண்டும்.
g. அல்லது லக்னாதிபதி, 7--ம் அதிபதியோடு சேர்ந்து ஒரு சுப ராசியில்
அமைந்திருக்க வேண்டும்.
h. அல்லது லக்கினாதிபதியும், 7--ம் அதிபதியும் ஒருவருக்கு ஒருவர் 3--11-- லோ
அல்லது 5--9 --லோ இருப்பது.
i. அல்லது 2-- அல்லது 7-- அல்லது 11--ல் சுபர்கள் இருப்பது.
j. அல்லது 2-- அல்லது 7-- அல்லது 11--ல் சுபர்களுடன் சுப சம்பந்தப்பட்டிருப்பது.
k. அல்லது 7--ம் இடத்தில் சுபர்கள் இருந்து லக்னாதிபதியும், 7--ம் அதிபதியும் பலம்
அடைந்து, நல்ல ஸ்தானங்களில் இருப்பது.
l. அல்லது சுக்கிரன் அவனுடைய சொந்த வட்டிலோ
ீ அல்லது உச்ச வட்டிலோ

இருந்து, 7--ம் அதிபதி சுபர் வட்டில்
ீ இருப்பது.
m. அல்லது 7--ம் வட்டில்
ீ புதன் இருந்து, சுக்கிரன் 7--ம் அதிபதியுடன் கூடி இருப்பது.
n. அல்லது 7--ம் அதிபதி 11--ல், சுக்கிரன் 2--ல் இருப்பது.
o. அல்லது சுக்கிரன் லக்னத்திலிருந்து, லக்னாதிபதி 7--ல் இருப்பது.
p. அல்லது லக்னாதிபதியும், 7--ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆகி இருப்பது.
(இதற்கு கோபால யோகம் எனப்படும்).
q. அல்லது 7--மிடத்தில் குரு உச்சமாகி சுபர்களுடன் சேர்ந்து இருப்பது.
r. அல்லது சுக்கிரன் 7-ம் இடத்தில் பலமாய் இருப்பது.
s. அல்லது 7--ம் அதிபதியும், சுக்கிரனும் 2--ம் இடத்தில் இருப்பது.
t. அல்லது லக்னாதிபதி 10--லும், 2--ம் அதிபதி 11--லும் இருப்பது.
u. அல்லது 1,2 ,7--ம் இடங்களில் சுபர்கள் இருப்பது.
v. அல்லது 2, 11--ம் அதிபதிகள் பரிவர்த்தனை ஆகியிருப்பது.
w. அல்லது 2, 7--ம் அதிபதிகள், 11--ல் இருப்பது.
x. அல்லது (மேற்கத்திய ஜோதிடப்படி) ஆணின் ஜாதகத்தில் சந்திரனும் சுக்கிரனும்
சுப ஸ்தானங்களில் இருந்து, சுபர்களின் பார்வை யோடு இருப்பது.
y. அல்லது பெண் ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் சுப ஸ்தானங்களில்
இருந்து சுபர்கள் பார்வையோடு இருப்பது.
z. அல்லது பிறந்த நேரத்தில் லக்னம் மற்றும் 7--ம் பாவங்களின் ராசி சந்தியில்
(CUSP) முறையே 12 அல்லது 6--ம் இடங்களில் ஒரு சுபரின் சஞ்சாரம்.

திருமண பாக்கியம் உண்டு ஆனால் திருமணம் தாமதப்படும். யாருக்கு?

a. லக்னத்திலிருந்தோ, சந்திரனிலிருந்தோ 1, 3, 5 அல்லது 7 அல்லது 10--மிடத்தில்


சனி இருப்பது.
b. பாபர்கள் 7--ம் பாவத்தில் இருந்து குரு மற்றும் யுரேனஸின் சாதகமற்ற
பார்வையில் இருப்பது.
c. 8--ம் இடத்தில் செவ்வாய் இருப்பது.
d. சந்திரனும், சனியும் சேர்ந்திருப்பது; முக்கியமாக 1, 2, 7 அல்லது பதினொன்றில்.
e. செவ்வாயும், சுக்கிரனும் 5, 7 அல்லது 9--ல் கூடியிருந்து குரு மற்றும்
யுரேனஸின் சுப பார்வை இல்லாமல் இருப்பது.
f. 7--ம் அதிபதியும், சுக்கிரனும் சனியால் பார்க்கப்படுவது.
g. சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் கேந்திரத்தில் குரு அல்லது யுரேனஸ்.

You might also like