You are on page 1of 1

நலக்கல்வி ஆண்டு 6

1.1.1 மற்றும் 1.1.2

இளமைப் பருவத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்.

1. இளமைப் பருவம் என்பது 10 முதல் 19 வயது வரை உள்ளவர்கள்.

2. உடலில் சுரக்கும் ஊக்கி நீரில் (ஹோர்மோன்) ஏற்படும் இரசாயன


மாற்றங்களால் உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

3. ஆண்களுக்கு விரைகளில் தெஸ்தஸ்ரோன் நீர் சுரக்கும்.


4. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்திரோன் நீர் சுரக்கும்.
4. இளமைப் பருவத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்:
 உயரம் விரைவாக அதிகரிக்கும்
 உடல் எடை அதிகரிக்கும்
 சிலருக்கு முகத்தில் முகப்பருக்கள் தோன்றும்
ஆண்கள் :
 ஆண்களுக்கு முகத்தில் மீசையும் தாடியும் முளைக்கும்
 அக்குள்களிலும் பிறப்புறுப்புப் பகுதியில் உரோமங்கள் முளைக்கும்
 ஆண்களின் தோள் பகுதி விரிவடையும்; இனப்பெருக்க உறுப்புகளில்
முதிர்ச்சியடையும்
 கனவில் விந்து கழிதல் நடைபெறும்
 ஆண்களின் குரல் கரடு முரடாகும்
பெண்கள் :
 பெண்களுக்கு மார்பகம், பிட்டம், எலும்புகள், தசைநார்கள் வளர்ச்சி
ஏற்படும்.
 இனப்பெருக்க உறுப்புகள் முதிர்ச்சியடையும்
 அக்குள்களிலும் பிறப்புறுப்புப் பகுதியில் உரோமங்கள் முளைக்கும்
 பருவ பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.

You might also like