You are on page 1of 236

கொலை வள்ளல்

ராஜேஷ்குமார்
1
நிலைக்கண்ணாடி முன்
நின்று நெற்றியின்
மையத்திலிருந்த ஸ்டிக்கர்
பொட்டை சரி செய்து
கொண்டிருந்த தர்மாவை ,
சுவரோர டீபாயின் மேல்
உட்கார்ந்திருந்த டெலிபோன் ,
சிணுங்கலாய்க் கூப்பிட்டது .
கண்ணாடியினின்றும் தன்
முகத்தைப் பெயர்த்துக்
கொண்டு - டெலிபோனை
நோக்கிப் போய் ரிஸீவரை
எடுத்து - பொன்
வளையங்கள் பளீரிடும்
காதுக்குக் கொடுத்தாள் .

“ ஹலோ . . . ! ”

“ பேசறது யார் , தர்மாவா ? ”


- மறுமுனையில்
‘ தீப்பந்தம் ’ பத்திரிகை
ஆசிரியர் பார்த்திபன் தன்
வெண்கலக் குரலில்
கேட்டார் .

“ ஆமா . . . ஸார் . . .
குட்மார்னிங் . . . ! ”

“ குட்மார்னிங் . . .
மந்திரியோட பங்ஷனுக்கு
சீக்கிரம் புறப்படம்மா . . .
முன் வரிசையில நீ இடம்
பிடிச்சாத்தான் . . . பல
சூடான ந்யூஸ்
கிடைக்கும் . . . மந்திரி
நரஹரி வெளிநாட்டுக்குப்
போயிட்டு வந்ததில்
கட்சிக்குள்ளே ஏகப்பட்ட
புகைச்சல் . ஒவ்வொருத்தரும்
மூஞ்சியை இழுத்துக்கிட்டு
உட்கார்ந்திருப்பாங்க . . .
‘ கிசுகிசு ’ நிறைய
கிடைக்கும் . பாராட்டு விழா
எங்கே நடக்குதுன்னு
தெரியுமா ? ”

“ தெரியும் ஸார் . . . ‘ ராஜா


மஹால் ’ ல . . . ”

“ பஸ்ஸை
தேடிட்டிருக்காதே . . . டாக்ஸி
பிடிச்சுப் போயிடு . . . ”

“ சரி ஸார் . . . ”

“ விஷயங்களை
அள்ளிக்கிட்டு எத்தனை
மணிக்கு வருவே . . ? ”

“ மத்தியானம் ஒரு
மணிக்குள்ளே வந்துடுவேன்
ஸார் . . . ”

“ கண்டிப்பாவந்துடு . . . நீ
வந்தா தான் முதல் எட்டுப்
பக்கமும் ரொம்பும் . . .
ரிஸீவரை வெச்சுடட்டுமா . . ? ”

அவர் மறுமுனையில்
ரிஸீவரைச் சாத்த ,
தர்மாவும் சாத்திவிட்டு -
தன் சந்தன மணிக்கட்டைப்
பார்த்தாள் . சதுர
எச் . எம் . டி . 9 . 4 5
என்றது . ‘ மதுக்குமாரை
எங்கே காணோம் ? ’ -
மனசு கேட்க - மூளை
சொன்னது : ‘ இதோ பார்
தர்மா . . . உலகத்தில யாரை
வேண்டுமானாலும் நம்பு . . .
ஆனால் , உன்னோட
காதலன் மதுக்குமாரை
மட்டும் நம்பாதே . . ! அவன்
சொன்ன நேரத்திற்கு
எப்போ
வந்திருக்கான் . . ? ’ வாசலை
நோக்கிப் போனவளை
- மறுபடியும் கூப்பிட்டது ,
டெலிபோன் . தர்மா
மறுபடியும் ரிஸீவரை
எடுத்து காதுக்குக்
கொடுத்தாள் .

“ ஹலோ . . ! ”

“ என்அன்பான
காதலியே . . ! நான்
மதுக்குமார் . . . ” தர்மா
கோபமாய் ரிஸீவரில்
வெடித்தாள் : “ அய்யா . . .
எங்கிருந்து பேசறார் . . ? ”

“ அமிஞ்சிக்கரைக்குப்
பக்கத்திலே . . . ஒரு
பாடாவதி டெலிபோன்
பூத்திலிருந்து
பேசிட்டிருக்கேன் தர்மா . . . ”

“ ஒன்பதரைமணிக்கு
‘ டாண் ’ ணு என்னோட
வீட்டுக்கு வந்து என் னை

‘ பிக்அப் ’ பண்ணிட்டுப்
போற லட்சணம்
இதுதானா . . ? மணி இப்போ
எவ்வளவு தெரியுமா . . ? ”

“ சொல்லு . . .
சோதனையா
என்னோட வாட்ச்சும்
இன்னிக்கு ரிப்பேர் . . . ”

“ மணி ஒன்பது அம்பது . . . ”


“ கவலைப்படாதே தர்மா . . .
இன்னும் ஒரு நிமிஷத்துல
உன்னோட வீட்டு வாசல்ல
நிற்பேன் . . ! ”

“ எப்படி நிப்பீங்க . . ?
அமிஞ்சிக்கரை என்னோட
வீட்டுக்குப் பக்கத்துக்
காம்பௌண்டிலா
இருக்கு . . ? ”

“ இன்னும்ஒரு நிமிஷத்துல
நான் வந்துட்டா . . . நீ
எனக்கு என்ன தர்றே . . ? ”

“ நீங்க எதைக்
கேட்டாலும் . . . ”

“ நிஜமா . . ? ”

“ நிச்சயமா . . . ”

“ உன்னோட இடுப்புச்
சதையைப் பத்து தரம்
கிள்ளுவேன் . . . ”

“ தாராளமா
கிள்ளிக்கலாம் . . . ”

“ சரி . . . தர்மா . . . இப்போ


உன்னோட தலையைக்
கொஞ்சம் உயர்த்தி உனக்கு
வலது பக்கமா இருக்கிற
ஜன்னல் வழியா ரோட்டைப்
பாரு . . . ” அவன்
சொன்னபடியே பார்த்தாள் .
ரிஸீவரில் குரல்
தொடர்ந்தது .

“ ரோடு தெரியுதா ? ”

“ ம் . . . தெரியுது . ”

“ அமுதசுரபி ஹோட்டல்
தெரியுதா ? ”

“ தெரியுது . . . ”

“ ஹோட்டலையொட்டினபடி
ஒரு டெலிபோன் பூத்
இருக்கே தெரியுதா ? ”

“ ம் . . . தெரியுது . . . ”

“ அந்த டெலிபோன் பூத்தை


நல்லா உற்றுப் பாரு . . .
கண்ணாடி தடுப்புக்குள்ளே
நான் பேசிக்கிட்டிருக்கேன் . . .
தெரியுதா . . ? ”

தர்மா பார்த்தாள் . பூத்தின்


கதவைத் திறந்து
கையாட்டினான் மதுக்குமார் .
தர்மா ஒரு சந்தோஷ
திகைப்போடு மதுக்குமாரைப்
பார்க்க - அவன் ரிஸீவரில்
சொன்னான் : “ இடுப்புச்
சதையைப் பத்து தரம்
கிள்ள வர்றேன் . . . ”
மதுக்குமார் ரிஸீவரை
வைத்துவிட்டு ரோட்டைக்
கிராஸ் செய்து அரை
நிமிஷ அவகாசத்திற்குள் -
தர்மாவின் வீட்டு வாசலில்
நின்றான் . இடுப்பில்
கைகளைப் பதித்துக்
கொண்டு அழகாய்ப்
புன்னகைக்கும்
மதுக்குமாருக்கு தங்கத்தை
உரசின மாதிரி நிறம் .
இருபத்தைந்து பிறந்த
தினங்களைப்
பார்த்திருந்தான் . ஒரு
புதுமுக நடிகனைப் போன்று
முகவெட்டு . எப்படி
சீவினாலும் பிடிவாதமாய்
வந்து ஒரு மோதிரமாய்
நெற்றியில் சுருள்கிற
கிராப் . சிகரெட் புகை
படியாத உதடுகளுக்கு
மேலே - ஆட்காட்டி
பருமனில் கருகரு மீசை .
பாசி நிற சபாரியில்
அறுபது கிலோ உடம்பு .
அவனைச் சிரிப்பு பொங்க
பார்த்த தர்மாவுக்கு
இருபத்தியொரு வயது .
மதுக்குமாரின் நிறத்துக்கு
ஒத்து வந்தாள் .
‘ விஜி ’ த்தனமான உருண்  டை
முகத்தில் கண்கள் முதல்
பரிசு வாங்கியிருந்தன .
தலையில் அழுந்தப்
படியாமல் சிலும்பியிருந்த
கேசம் இரண்டாவது பரிசை
வாங்கியிருந்தது .
ஜர்னலிஸம் படித்த
தர்மாவுக்கு அம்மாவும்
அப்பாவும் பம்பாயில் .
அவள் சென்  னை யில்
தனியாய் - ‘ தீப்பந்தம் ’
பத்திரிகை ஏற்பாடு செய்து
தந்திருக்கும் வீட்டில் தங்கி
அந்த பத்திரிகைக்கு
உண்  மை யாக உழைப்பவள் .
கடந்த ஒரு வருஷ
காலமாய் வீடியோ
காமிராமேன் மதுக்குமாரைக்
காதலித்துக்
கொண்டிருப்பவள் .
ஏ . வி . எம் . மின் ராஜேஸ்வரி
கல்யாண மண்டபத்தில் ஒரு
சினிமா நடிகையின்
‘ இரண்டாவது கல்யாண ’
ரிசப்ஷனுக்குப்
போயிருந்தபோது - வீடியோ
காமிராவை இயக்கிக்
கொண்டிருந்த மதுக்குமாரின்
சுறுசுறுப்பாலும் பேச்சாலும்
ஈர்க்கப்பட்டவள் .

“ பொய் . . .
பொய் . . .
என் 
னை எமாத்திட்டீங்க . . . ”
ஏன்றாள் தர்மா .

“ நோ . . . நோ . . .
இடுப்பைக் காட்டு . . . நான்
கிள்ளணும் . . . ” -
மதுக்குமார் , சேலைக் கட்டு
நெகிழ்ந்து போய் -
வெண்ணெய்க் கட்டியாய்த்
தெரிந்த அவளுடைய
இடுப்பை நோக்கிக் கை
நீட்டினான் .

“ ப்ளீஸ் . . . வேண்டாம்
மது . . . ”

“ நோ . . .
பந்தயம்னா
பந்தயம்தான் . . . காட்டு . . .
காட்டு ! இடுப்பைக்
காட்டு . . . என் கைவிரல்கள்
பத்தும் பரபரக்கிறது . . . ”

“ சரி . . . ஒரேயொரு
கிள்ளு . . . ”

“ என்னோட கணக்குக்கு
பத்துக் கிள்ளு . . . ”

“ உம் சீக்கிரமா
கிள்ளுங்க . . . ” கண்களை
மூடிக்கொண்டு இடுப்பைக்
காட்டினாள் தர்மா .
மதுக்குமார் அவளுடைய
இடுப்பில் தன் உஷ்ணமான
உள்ளங்கையை வைத்தான் .
பூ இதழைப் பிய்க்கிற
மாதிரி மெல்லக்
கிள்ளினான் . . .

“ ஒண்ணு ரெண்டு
மூணு . . . ”

“ ம் . . . சீக்கிரமா கிள்ளி
முடிங்க . . . ”

“ நாலு . . . அஞ்சு . . . ஆறு . ”

“ பூனை மாதிரி
பிறாண்டாதீங்க . . . ”

“ ஏழு . . . எட்டு . . .
ஒன்பது . . . ”

“ அம்மாடி . . . உங்க கை
பட்டாலே என்னோட
உடம்புல இருக்கிற
நரம்பெல்லாம் டிஸ்கோ
ஆடுது . . . பத்தாவது
கிள் 
ளை சீக்கிரமா
கிள்ளுங்க . . . ”

“ மாட்டேனே . . . இந்த
பத்தாவது கிள்ளு பேலன்ஸ்
இருக்கட்டும் . . . நான்
இஷ்டப்பட்ட நேரத்தில் எப்ப
வேணுமானாலும்
கிள்ளுவேன் . . . ”

“ இனிமே உங்ககூட
ஜென்மத்துக்கும் பந்தயம்
கட்ட மாட்டேன் . . .
கிளம்புங்க , கூட்டத்துக்கு
நேரமாச்சு . . . ”

“ நான் ரெடி . . . ”

“ உங்க வீடியோ காமிரா . . ? ”

“ டாக்ஸியில ரெடியா
இருக்கு . . . டிரைவர்
நமக்குத் தெரிஞ்ச
ஆள்தான் . ‘ டீ சாப்பிட்டு
வர்றேன் ’ னு
டீக்கடைக்குள்ளே போனான் .
அவன் திரும்பி
வர்றதுக்குள்ளே உன்கிட்டே
‘ அமிஞ்சிக்கரை
விளையாட் ’ டை
விளையாடினேன் . . . ”

“ சரிவாங்க போகலாம் . . .
மணி பத்தாகுது . . .
இந்நேரம் ஃபங்ஷன்
ஆரம்பமாயிருக்கும் . . . ”
வீட்டைப் பூட்டி வாசற்படியில்
இறங்கிக் கொண்டே
சொன்னாள் தர்மா .

“ ஆரம்பமாகியிருக்காது . . . ”

“ எப்படி சொல்றீங்க . . ? ”

“ மந்திரி
நரஹரி
வரப்போகிற ஃபிளைட்
ஒருமணி நேரம் லேட் . . . ”

“ உங்களுக்கு எப்படித்
தெரியும் . . ? ”

“ ஏர்போர்ட்டுக்குப் போன்
பண்ணிக் கேட்டுட்டுத்தானே
வர்றேன் . . . ”

“ புத்திசாலி நீங்க . . . ”

“ இல்லேன்னா என் 
னை நீ
காதலிச்சிருப்பியா . . ? ”
ரோட்டின் எதிர்ச்சாரியில்
நின்றிருந்த டாக்ஸியை
நெருங்கினார்கள் .

“ ரங்கராஜ் . . .
கிளம்பலாமா . . ? ”
மதுக்குமார் கேட்க ,
சிகரெட்டைப் புகைத்தபடி -
கட்டண கழிப்பறைச்
சுவரின் மேல்
ஒட்டப்பட்டிருந்த ‘ தகாத
உறவு ’ மலையாளப்பட
போஸ்டரைப் பார்த்துக்
கொண்டிருந்தவன் -
ரங்கராஜ் என்று
அழைக்கப்பட்ட அந்த
டாக்ஸி டிரைவர் -
திரும்பினான் . சிகரெட்டை
அவசர அவசரமாய்ச்
சுண்டியெறிந்தான் .
மதுக்குமார்
சொன்னான் : “ ரங்கராஜ் !
அந்த சினிமாவுக்குப் போய்
ஏமாந்து போயிடாதே . . !
போஸ்டர்ல போட்டிருக்கிற
சீனையெல்லாம்
சென்ஸாரிலேயே
வெட்டிட்டானுக . . . ”

“ இல்ல ஸார் . . . நான்


சும்மா
பார்த்துட்டிருந்தேன் . . . ”

“ சரி ; கிளம்பலாமா ? ”

“ போலாம் ஸார் . . . ” டாக்ஸி


கிளம்பியது . தர்மா
கேட்டாள் : “ காமிராவில்
எத்தனை ரோல் எடுக்கப்
போறீங்க . . ? ”

“ ரெண்டு ரோல் . . . ”

“ வீடியோ காமிராவுக்கு
ஏற்பாடு பண்ணினது யார் ?
கட்சி மேலிடமா ? ”

“ கட்சி மேலிடமா ? சரியாப்


போச்சு . . . அது மந்திரி
நரஹரியோட தம்பி
பர்சனலா வந்து பார்த்து
எடுக்கச் சொன்னது . ”

“ அட்வான்ஸ்
வாங்கிட்டீங்களா ? ”

“ பாதி அமௌண்ட்
வாங்கிட்டேன் . . . ”

“ இன்னிக்குக்
கூட்டத்திலே
என்னமோ கலாட்டா
ஆகும்னு சொல்றாங்களே ,
உண் 
மை யா மது ? ”

“ ஆகலாம் . ”

“ என்ன காரணம் ? ”

“ கோஷ்டிதான் . . .
மந்திரி
நரஹரிக்கு கொஞ்ச
நாளாவே கட்சிக்குள்ளே
மகா எதிர்ப்பு . அதையும்
மீறி எப்படியோ டெல்லி
மேல்மட்டத் தலைவர்களைப்
பார்த்து - வெளிநாடு
போக சான்ஸ் பிடிச்சு . . .
போயிட்டும் வந்துட்டார் . . . ”

“ எதுக்காக வெளிநாடு ? ”

“ வெளிநாட்டுக் கோழிகள்
எப்படி சத்துள்ள முட்டையா
போடுது ? ன்னு பார்க்க
டெல்லியிலிருந்து ஒரு
உயர்மட்ட குழு ஏழெட்டு
நாடுகளுக்கு விஜயம்
பண்ணினாங்க . . . அந்தக்
குழுவில் நம்ம அமைச்சரும்
ஒருவர் . . . அவர்
வெளிநாடு போனது
யார்க்கும் பிடிக்கலை . . .
முக்கியமா போன
எலக்ஷன்ல நின்னு
தோத்துப்போன நம்ம
தொகுதி மாஜி எம் . எல் . ஏ .
நிலாதாசனுக்கு சுத்தமா
பிடிக்கலை . . . அவர்
ஏதாச்சும் கலாட்டா
பண்ணுவாரோன்னு ஒரு
பரபரப்பு இருக்கு . . . ”

“ மந்திரியைப் பாராட்டிப்
பேசற வி . ஐ . பி . , லிஸ்ட்ல
நிலாதாசன் பேர்
முதலாவதாக இருக்கே . . ? ”

“ அதுதான் அரசியல் .
நிலாதாசன் மேடையில
மைக்கைப் பிடிச்சுட்டு
மந்திரியைப் பாராட்டிப்
பேசுவார் . . . அதே விநாடி
அவரோட ஆட்களும்
கூட்டத்துல உட்கார்ந்துகிட்டு
ரகளை கிளப்புவாங்க . . . ”
டாக்ஸி வேகம் பிடித்து
ராஜா மஹாலை நெருங்கிக்
கொண்டிருந்தது .
வழிபூராவும் துணி
பேனர்கள் காற்றில் ஆடின .
வெளிநாடு சென்று கோழிச்
செல்வம்கண்டு வந்த
கோமானே ! வருக . . . !
வருக ! கொற்றவனே ! உன்
பொற்றாமரை முகம்
கண்டுகளிக்க -
காத்திருந்தோம் . . . வருக ! . . .
வருக ! பார்த்த
இடமெல்லாம் போஸ்டர்கள் .
அதில் மந்திரி நரஹரியின்
பொய்ப்பல் வரிசை சிரிப்பு .
ஜனங்களை ஏமாற்றும்
மாய்மாலக் கும்பிடு .
டாக்ஸி , ராஜா மஹாலின்
வாசலை நெருங்கியது .
நிறைய போலீஸ் . திட்டுத்
திட்டாய் ஜனக் கும்பல் .
அதில் - தென்பட்ட
முகங்களில் பதட்டம் . ‘ ஏதோ
ஒரு விபரீதம் நிகழப்
போகிறது ’ என்கிற
உண் மை யை டாக்ஸியை
விட்டுக் கீழே இறங்கிக்
கொண்டிருந்த தர்மா
உணர்ந்தாள் . மனசுக்குள்
ஒரு நடுக்கம் பரவியது .
“ என்னய்யா
2 சொல்றான்
ஏர்போர்ட்ல . . . மந்திரி
ஃபிளைட் வருமா ,
வராதாமா . . ? ” -
ஆத்திரத்தோடு கேட்ட
நிலாதாசன் , பத்து
நிமிஷங்களுக்கு
முன்னால்தான் இரண்டு
பெக் ஸ்காட்ச்சை உள்ளே
தள்ளி நரம்புகளுக்குக்
கதகதப்பைக்
கொடுத்திருந்தார் . இடம்
அவருடைய பங்களா .
நிலாதாசனுக்குக் கொஞ்சம்
ஆகிருதியான உடம்பு .
முக்கால் சிவாஜியை
ஞாபகத்துக்குக்
கொண்டுவந்தார் . அடுத்த
மூன்று வருடங்களில்
அறுபது வயதை
எட்டப்போகும் நிலாதாசனுக்கு
எந்த சின்ன வீட்டில்
அறுபதாம் கல்யாணத்தை
வைத்துக் கொள்வது
என்கிற பிரச்னை சில
நாட்களாகவே இருந்து
வருகிறது . நிலாதாசனுக்கு
அவருடைய அப்பா அம்மா
வைத்த பெயர் குப்புசாமி .
அவர்களுக்குப் பிறந்த
எந்தக் குழந்தையும்
நிலைக்காமல் போனதால் -
மூன்றாவதாய் அவதரித்த
இவரைக் குப்பைத்
தொட்டியில் போட்டு எடுத்து
- வலது பக்கம் மூக்குக்
குத்தி ‘ குப்புசாமி ’ என்று
பெயர் வைத்தார்கள் .
குப்புசாமிக்கு தன்னுடைய
பதினெட்டாவது வயதில்
காதல் அரும்பியபோது -
அவரைக் காதலித்த வக்கீல்
வீட்டுப் பெண் முதன்
முதலில் அவருடைய பெயர்
நன்றாக இல்  லை என்று
சொல்ல - அரசாங்க
கெஜட்டுக்கு எழுதிப்போட்டு
நிலாதாசனாக மாறினார் .
எஸ் . எஸ் . எல் . சி . யை
ஏழுதரம் எழுதியும் பாஸாக
முடியாததால் - சலித்து
அரசியலுக்குப் போனார் .
பொதுக் கூட்டங்களில்
நக்கலாகப் பேசி -
கைத்தட்டல் வாங்கி -
வார்டு கவுன்சிலராகி -
பிறகு மூன்று தரம்
எம் . எல் . ஏ . வாக இருந்து -
நான்காம் தரம் தொகுதி
மக்கள் காலை வாரிவிடவே
- அந்தக் கோபத்தில்
கட்சிக்குள் கோஷ்டிப்
பூசலை உண்டாக்கிக்
கொண்டிருந்தார் . மந்திரி
நரஹரியும் , இவரும்
சமகால அரசியல்வாதிகள் .
அவர் மட்டும்
மந்திரியானதில் -
இவருடைய ராத்திரித்
தூக்கம் பல சமயங்களில்
கெட்டுப் போயிருக்கிறது .
‘ வேஷ்டியை ஒழுங்கா
கட்டத் தெரியாது . . .
இவனெல்லாம்
மந்திரிய்யா . . ! ’ -
நிலாதாசன் அடிக்கடி
சொல்லும் வாசகம் இது .

“ ஃபிளைட் எத்தனை மணி


நேரம் லேட்டாம் ? ஒழுங்கா
கேட்டியா தொரைராஜீ . . ? ”

“ கேட்டேண்ணே . . . ஒரு
மணி நேரம் லேட்டாம் . . . ”

“ விமான சர்வீஸை நடத்தற


உரிமையை
மாநிலங்களுக்குக்
குடுத்தாதான் ஃப்ளைட்
சரியான நேரத்துக்கு
போகும் ; வரும் . . . ”

“ ஆமாண்ணே . . . ”

“ மண்டபத்துல கூட்டம்
எப்படியிருக்காம் ? ”
“ நிறைஞ்சி வழியுதாம் . . . ”

“ அந்த ஹரியோட தம்பி -


பிளாட்பாரத்துல கதை
பேசிட்டு
உட்கார்ந்திருக்கிறவனையெல்
லாம் தலா பத்து
ரூபாய்க்குப் புடிச்சுட்டு
வந்திருப்பான் . . . ”

“ வீடியோ காமிரா வேறு


ஏற்பாடு
பண்ணியிருக்கான் . . . ”

“ பண்ணுவான் . . .
பண்ணுவான் . . . யார்
வீட்டுப் பணம் . . ? எல்லாம்
நம்ம ஜனங்களோட
பணம் . . . ! டேய்
தொரைராஜு . . . ”

“ என்னண்ணே ? ”

“ ஐஸ் கம்மியா போட்டு


ஒரு ஸ்மால் குட்றா . . .
பாழாப் போன ‘ கிக் ’
ஏறவே மாட்டேங்குது . . .
‘ கிக் ’ ஏறலைன்னா மைக்
முன்னாடி போய் நின்னா
வார்த்தையே வராதுடா . . .
அப்புறம் அந்த நரஹரியை
எப்படிப் பாராட்டிப்
பேசறது . . ? ”

“ இன்னிக்கு மீட்டிங்க்ல
என்னண்ணே பேசப்
போறீங்க ? ” - ஒரு ஜால்ரா
பேர்வழி கேட்க -
நிலாதாசன் முன்
வரிசையில் கட்டியிருந்த
தன்னுடைய நான்கு தங்கப்
பற்கள் தெரிய சிரித்தார் .

“ வெளிநாட்டுக் கோழிகள்
எப்படி முட்டை போடுதுன்னு
பார்க்கப் போன மந்திரியில
முதல் ஆள் நம்ம
நாஹரியாத்தான்
இருக்கணும் . . . இது நம்ம
தமிழ் நாட்டுக்கே
பெருமையில்  லை யா . . ?
அதைத்தான் பேசப்
போறேன் . . . ” நிலாதாசன்
சொல்லிக் கொண்டிருக்கும்
போதே - இன்னொரு
ஜால்ரா பேர்வழி
வாசலினின்றும் உள்ளே
வந்தான் .

“ அண்ணே ! ”

“ என்ன சக்திவேலு ? ”

“ அந்த அம்மாவும்
பொண்ணும் உங்களைப்
பார்க்கிறதுக்காக
வந்திருக்காங்க . . . ”

“ எந்த
அம்மாவும்
பொண்ணும் . . ? ”

“ அதாண்ணே . . .
கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில
நர்ஸ் உத்தியோகம்
வேணுமின்னு போன வாரம்
அப்ளிகேஷனோட
வந்தாங்களே அவங்க . . . ”

“ஓ... சிவப்பா . . . சின்ன


வயசு ஸ்ரீதேவி மாதிரி
இருப்பாளே . . ? அந்தப்
பொண்ணு . . ? ”

“ ஆமாண்ணே
அவளேதான் . . . ”

“ நான் இப்போ ஒரு


‘ ஸ்மால் ’ போடப்
போறேன் . . . ஒரு அஞ்சு
நிமிஷம் கழிச்சு . . .
அம்மாவையும்
பொண்  ணை யும் உள்ளே
அனுப்பு . . . ”

“ சரிண்ணே . . . ”
ஐஸ்கட்டி
தளும்பிக் கொண்டிருந்த
ஸ்காட்ச்சை துரைராஜ் நீட்ட ,
அதை வாங்கி உதட்டுக்குக்
கொடுத்துக் கொண்டே
நிலாதாசன்
சொன்னார் : “ பொண்ணு
நல்லா அம்சமா இருக்கா . . .
இந்த நர்ஸ்
உத்தியோகத்தை வாங்கிக்
கொடுத்து மடக்க
முடியுமான்னு பார்க்கணும் . ”

“ நீங்க நினைச்சது
எதுண்ணே நடக்காமே
போயிருக்கு ? ” - ஒரு
பேர்வழி ஜால்ராவை
பலமாய்த் தட்ட -
நிலாதாசன் ஸ்மாலை சப்பி
விட்டு டம்ளரைப்
பின்பக்கமாய்க் கொடுத்து
விட்டு - தோள் மேல்
போட்டிருந்த சால்  வை யால்
வாயைத் துடைத்துக்
கொண்டார் . சரியாய் ஐந்து
நிமிஷம் கழித்து - அந்த
அம்மாவும் பொண்ணும்
தயக்க நடையோடு உள்ளே
வந்தார்கள் . ஒன்றாய்க்
கும்பிட்டார்கள் . நிலாதாசன்
கேட்டார் : “ அப்ளிக்கேஷன்
குடுத்திட்டீங்களா . . ? ”

“ போன வாரமே
குடுத்துட்டோமய்யா . . . ”
அம்மாக்காரி சொன்னாள் .

“ பொண்ணு பேரென்ன ? ”

“ மலர்க்கொடி . . . ”

“ பொண்ணுக்கு அப்பா
இல் 
லை யா . . ? ”

“ போன வருஷம் காய்ச்சல்ல


விழுந்து செத்துட்டார்ங்க . . .
பொண்  ணை எப்படியோ
கஷ்டப்பட்டுப் படிக்க
வெச்சுட்டேன் . நீங்கதான்
பார்த்து அவளுக்குக் கை
தரணும் . . . ”

“ பொண்ணுக்கு என்ன
வயசு . . ? ”

“ பதினெட்டுங்க . . . ”

“ சரி . . .அடுத்த வாரம்


ஞாயிற்றுக்கிழமை
சாயந்தரம் ஆறுமணிக்கு
மேலே இதே வீட்டுக்கு
வாங்க . . .
அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை
வாங்கிட்டுப் போலாம் . . . ”

“ ரொம்பவும் நன்றிய்யா . . . ”
மலர்க்கொடி
கும்பிடுவதற்காகக் கைகளை
உயர்த்தியபோது -
அவளுடைய அக்குள்
பகுதியில் கிழிந்து ,
உடம்பின் நிறம் ஒரு
வெளிச்சக் கோடாய்த்
தெரிய - அதை
ரசனையோடு பார்த்தார்
நிலாதாசன் . அடுத்த
கணமே அம்மாக்காரியின்
பக்கமாய்த் திரும்பினார் .

“ ஏம்மா . . .
வயசுப்
பொண் 
ணை வெளியே
கூட்டிட்டு வர்றப்போ . . .
கிழிசல் இல்லாத
ஜாக்கெட்டா போட்டுக்
கூட்டிட்டு வரக் கூடாது . . ? ”
அந்த அம்மாவின்
கண்களில் நீர் மின்னியது .
தழுதழுப்பான குரலில்
சொன்னாள் : “ அவகிட்ட
இருக்கிற நல்ல ஜாக்கெட்டே
அதுதான்யா . . . ”

“ ச்சொ . . . ச்சொ . . . ” -
பல்லி மாதிரி ‘ உச் ’
கொட்டிக்கொண்டு தன்
ஜிப்பாவினின்றும் அந்த
கனமான பர்ஸை எடுத்தார் .
பிரித்து இரண்டு நூறு
ரூபாய் நோட்டுகளை உருவி
அந்த அம்மாவிடம்
நீட்டினார் .

“ இந்தாம்மா . . .பிடிங்க . . .
பொண்ணுக்கு நாலைஞ்சு
நல்ல ஜாக்கெட்டுகளா
தெச்சுக் குடுங்க . . .
ஆம்பிளைங்க இருக்கிற
பக்கம் வர்ற பொண்ணு . . .
இப்படி கிழிசலைப்
போட்டுட்டு வரலாமா . . ? ”
அம்மாக்காரி பணம்
வாங்கத் தயங்கினாள் .

“ சும்மா
வாங்கிக்கங்கம்மா . . . உங்க
மூத்த அண்ணன் பணம்
குடுத்தா வாங்கிக்க
மாட்டீங்களா . . . ? ” அந்த
வார்த்தையில் அடிபட்ட
பெண் - கையை நீட்டி
பணத்தை வாங்கிக்
கொள்ள , நிலாதாசன்
சொன்னார் : “ அடுத்த
ஞாயித்துக்கிழமை
சாயந்திரம் ஆறுமணிக்கு
மேலே பொண்  ணை க்
கூட்டிட்டு இங்கே
வந்துடுங்கம்மா . . . ஆர்டர்
வாங்கிட்டுப்
போயிடலாம் . . . ”

“ வர்றோம்ய்யா . . . ”

“ போய்ட்டு வாங்க . . . ”
அவர்கள் திரும்பிப்
போனார்கள் . போனதும்
சொன்னார் நிலாதாசன் :
“ மலர்க்கொடிக்கு நல்ல
உடம்பு . இடுப்பு இப்பவே
பெரிசா இருக்கு . . . ”

“ அண்ணே இது
‘ படியும் ’ ன்னு எனக்குத்
தோணலை . . . ”

“ அடுத்த ஞாயித்துக்கிழமை
முயற்சி பண்ணிப்
பார்ப்போம் . . . ” என்று
சொன்ன நிலாதாசன்
பின்பக்கமாய்த் திரும்பி
துரைராஜைப் பார்க்க , “ நீங்க
கேப்பீங்கன்னு
தெரியும்ண்ணே . . . அதான்
ஊத்தி வெச்சுட்டேன் - ”
தயாராய் வைத்திருந்த
‘ ஸ்மாலை ’ எடுத்து
நீட்டினான் .
3
மேடை நரஹரிக்காகக்
காத்திருக்க , சுற்றிலும்
அரைவட்டமாய் வியூகம்
போட்டிருக்க - மதுக்குமார்
வீடியோ காமிராவோடு
இயங்கிக் கொண்டிருந்தான் .
ப்ளட் லைட் வெளிச்சத்தை
ஒருத்தர் உயர்த்திப்
பிடித்துக் கொண்டு -
நாற்காலிகளில்
உட்கார்ந்திருந்த
முக்கியஸ்தர்களை
அடையாளம் காட்ட , காமிரா
அவர்களைச் சுருட்டிக்
கொண்டிருந்தது . தர்மா ,
கையில் ஒரு சின்ன நோட்
புத்தகத்தோடும் , உதட்டில்
கடித்த பால்பாயிண்ட்
பேனாவோடும் திரிந்து
முக்கியஸ்தர்களின்
வாயிலிருந்து வரப்போகும்
வார்த்தைகளுக்காக
காத்திருந்தாள் .
நிமிஷத்திற்கொருதரம்
மதுக்குமாரின் பக்கமாய்த்
திரும்பி - அவன் தந்த
புன்னகையைச் சேகரித்துக்
கொண்டிருந்தாள் . மைக்கைப்
பிடித்திருந்த கட்சிப்
பிரமுகர் ஒருவர் -
வெளிநாட்டிலிருந்து திரும்பப்
போகும் நரஹரியைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தார் .

“ எனவேதான்
சொல்கிறேன் . . . நரஹரி
பதவிக்கோ . . . பட்டத்திற்கோ
என் 
றை க்கும்
ஆசைப்பட்டவரில் லை
 ...
பதவியும் பட்டமும் தானாக
அவரைத் தேடி வந்தது .
நம் கட்சி எதிர்க்கட்சியாக
இருந்த காலத்தில் போலீஸ்
அடக்குமுறையின் காரணமாக
தன் சுண்டு விரலையே
பலி கொடுத்தவர் .
மொத்தம் முப்பது நாட்கள்
சேலம் ஜெயிலில்
கடுங்காவல் தண்டனையை
அனுபவித்தவர் . அவருடைய
ஏற்றத்தையும் உயர்வையும்
கண்டு - நம்
கட்சிக்குள்ளே இருக்கின்ற
சில மூன்றாந்தர
பேர்வழிகள்
வயிறெரிகிறார்கள் ; அவரை
வீழ்த்தத் துடிக்கிறார்கள் . . .
அவர்களுக்கெல்லாம் நான்
சொல்லிக் கொள்வேன் .
பனிமலை உருகும்
எவரெஸ்ட் சிகரம் கீழே
வரும் . அப்போது
அதன்மேல் ஏறி நிற்கலாம்
என்று கனவு
காணாதீர்கள் ! ” அவர் பேசப்
பேச அவருடைய
வார்த்தைகளுக்காக -
கூட்டத்தின் ஒரு பகுதியினர்
சோகையாய்க்
கைதட்டினார்கள் .
மேடையோரம்
உட்கார்ந்திருந்த நிலாதாசன் ,
தன் நாற்காலியில்
அவஸ்தையாய் நெளிந்து
தன் அருகே
உட்கார்ந்திருந்த
ஜால்ராவிடம் மெல்லிய
குரலில் சொன்னார் : “ அந்த
ஜொள்ளுவாயனை சீக்கிரமா
பேச்சை முடிச்சுக்கிட்டு
உட்காரச் சொல்லய்யா . . .
மேடையும் மைக்கும்
கிடைச்சுட்டா போதும் . . .
படியில்லாமே அளக்க
ஆரம்பிச்சுடுவான் . . . ” அந்த
ஜால்ரா எழுந்து போக -
இன்னொரு ஜால்ராவின்
பக்கமாய்த் திரும்பினார்
நிலாதாசன் : “ அந்த வீடியோ
காமிராக்காரனைக் கூப்பிட்டு
என் 
னை க் கொஞ்சம் கவர்
பண்ணச் சொல்லய்யா . . .
காமிரா எம்பக்கமே
திரும்பமாட்டேங்குது . . . ”

“ போய்ச்சொல்லிட்டு
வர்றேண்ணே . . . ” அவன்
கிளம்ப - நிலாதாசனுக்குப்
பின்னால் அந்தக் குரல்
கேட்டது : “ எக்ஸ்க்யூஸ்மீ
ஸார் . . . ” நிலாதாசன்
திரும்பினார் . தர்மா
புன்னகைத்தாள் .

“ என்னம்மா . . . என்ன
வேணும் . . ? ”

“ நான் ஒரு
பத்திரிகையிலிருந்து
வர்றேன் ஸார் . . . உங்க
கிட்ட ஒரு சின்ன
பேட்டி . . . ”

“ எந்தப் பத்திரிகை ? ”

“ தீப்பந்தம் ”

“ நல்லா எரியுதா ? ” தர்மா


விழிக்க - “ சர்க்குலேஷன்
நல்லா போகுதாம்மான்னு
கேட்டேன் . . . ”

“ லட்சத்துக்கு மேலே
போகுது ஸார் . . . ”

“ சரி . . .
என்கிட்டே
என்னம்மா கேக்கப்
போறே . . . ? ”

“ அமைச்சர் நரஹரியோட
வெளிநாட்டுப் பயணத்தைப்
பத்தி நீங்க என்ன
நினைக்கறீங்க ஸார் . . . ? ”

“ தமிழ்நாட்டுக்கே
பெருமை . . . ”

“ அவரைப் பத்தி நீங்க


என்ன ஸார்
நினைக்கறீங்க ? ”

“ நல்லவர் , வல்லவர் . . . ”

“ உங்களுக்கும் அவருக்கும்
ஏதோ கருத்து
வேறுபாடுன்னு
சொன்னாங்களே ,
உண் 
மை யா ஸார் . . . ? ”

“ எதிர்க்கட்சிகள் வைக்கிற
ஒப்பாரி அது . . . ”

“ இந்தக்கூட்டம் ஒரு
அசாதாரணமான
டென்ஷனோட இருக்கு .
ஏதாவது கலாட்டா
நடக்கலாம்ன்னு போலீஸ்
ஃபீல் பண்றாங்க . நீங்க
என்ன நினைக்கறீங்க . . . ? ”

“ அப்படியெல்லாம் எதுவும்
நடக்காது . கட்டுப்பாட்டோடு
கூடிய கட்சி எங்க கட்சி .
கூட்டம் அமைதியா
நடக்கும் . . . ”

“ நீங்க இந்த மேடையில


பேசப் போறீங்களா ? ”

“ கண்டிப்பா . . . ”

“ தேங்க்யூ ஸார் . . . ”
மேடையை விட்டு நகர்ந்தாள்
தர்மா . நிலாதாசனைக் கவர்
பண்ண வீடியோ
காமிராவோடு வந்த
மதுக்குமார் எதிர்ப்பட ,
புன்னகைத்தாள் .

“ சூடான நியூஸே கிடைக்க


மாட்டேங்குது மது . . . ”

“ நிலாதாசன் என்ன
சொல்றார் ? ”

“ ரொம்பவும் பவ்யமா
பேசினார் மது !
நரஹரியைப் பத்தி
பேசறப்போ உயர்வா
பேசறார் . கூட்டத்தில தான்
டென்ஷன் இருக்கு . . .
அவர்கிட்டே இல்லே . . . ”

“ சரி . . .
நகரு . வீடியோ
காமிரா அவரைக் கவர்
பண்ணலைன்னு
கோபமாம் . . . அதான்
போயிட்டிருக்கேன் . . . ”
- அவன் சொல்லிக்
கொண்டிருக்கும் போதே -
வெளியே மண்டப வாசலில்
அந்த இரைச்சல் எழுந்தது .

“ அமைச்சர் நரஹரி ! ”

“ வாழ்க . . . ! ”

“ வெளிநாடு சென்ற
வேந்தர் . . . ”

“ வாழ்க . . . ! ”

“ அன்பு அண்ணன்
நரஹரி . . . ”

“ வாழ்க . . . ! ”

“ மந்திரி வந்துட்டார்
போலிருக்கு தர்மா . . .
கூட்டம் கண்டபடி நெரியும் .
நீ என் பக்கத்திலேயே
இரு . . . கூட்டத்துல போய்
எசகுபிசகா மாட்டிக்காதே !
ஆட்கள் உன்  னை ப்
பஞ்சாமிர்தம்
பண்ணிடுவாங்க . . . ” மந்திரி
நரஹரி ஏராளமான
மாலைகளோடு - போலீஸ்
வளையத்துக்குள் வந்து
கொண்டிருந்தவர் , மாலை
போட வந்தவர்களுக்காக
தலையைச் சாய்த்தார் .
பொதுவான கும்பிடு
ஒன் 
றை ப் போட்டுக்
கொண்டே மேடையை
நெருங்க - ட்ரெய்னிங்
கொடுத்து
பழக்கப்படுத்தியிருந்த
சீருடை மாணவிகள் ,
செவ்வந்திப் பூ இதழ்களைத்
தூவினார்கள் . அறுபது
வயதில் - நரைத்த
முடியோடு - மேடையேறிய
நரஹரியை - உட்கார்ந்திருந்த
நிலாதாசன் எழுந்து கட்டித்
தழுவிக் கொள்ள -
கூட்டத்தில் கைதட்டல்
பிய்த்துக் கொண்டு
போயிற்று . ஒரே ஆரவாரம் !
நிலாதாசனுக்கு முன்னால்
மைக் வைக்கப்பட - அவர்
பேசினார் : “ எனக்கு
அண்ணனாகவும் ,
வழிகாட்டியாகவும் இருக்கிற
அமைச்சர் நரஹரி
அவர்களே ! ஏதோ நடக்கப்
போகிறது என்று
எதிர்பார்த்து வந்திருக்கிற
என் இனிய எதிர்க்கட்சி
நண்பர்களே ! நம்
கட்சியைக் கட்டிக் காக்கும்
தூண்களே . . . ! யாவர்க்கும்
என் வணக்கம் ! கடந்த
ஒரு மாத காலமாய்ப்
பத்துக்கும் அதிகமான
வெளிநாடுகளில் பயணம்
செய்து , கோழி
முட்டையிடுவதைப் பற்றிய
தெளிவான விளக்கம்
பெற்று வந்திருக்கிறார் நம்
அமைச்சர் . ‘ கோழி
முட்டையிடுவதைப் பார்க்க -
அரசாங்கப் பணத்தைச்
செலவு செய்து கொண்டு
போக வேண்டுமா . . . ? நம்
நாட்டின் கிராமங்களுக்குப்
போய்ப் பார்த்தாலே
தெரியாதா ? ’ என்று
எதிர்க்கட்சி நண்பர்கள்
கேலி பேசுகிறார்களாம் .
அவர்களுக்கெல்லாம் நான்
ஒன்று சொல்லிக்
கொள்வேன் . நம் நாட்டுக்
கோழிகளுக்கும்
வெளிநாட்டுக்
கோழிகளுக்கும்
எத்தனையோ வித்தியாசம்
இருக்கிறது . ஆஸ்திரியா
கோழி ஒரு வாரத்திற்கு
பதினைந்து முட்டைகள்
இடுகிறது . ஆனால் , நம்
இந்தியக் கோழிகள் ஆறு
முட்டைகள்தான்
இடுகின்றன . வாரத்தில்
ஒரு நாள் லீவு போட்டு
விடுகிறதாம் . ஏன் இந்த
வேறுபாடு ? அதுவும் கோழி ,
இதுவும் கோழி . நம்
நாட்டுக் கோழி ஏன்
வாரத்தில் பதினைந்து
முட்டைகள் போடக் கூடாது ?
என்கிற கவலையின்
எதிரொலிதான் அமைச்சரின்
வெளிநாட்டுப் பயணம் .
இந்தப் பயணத்திற்குப்
பின்னால் - முட்டைகள்
உற்பத்தி பெருகி - அதன்
காரணமாக முட்டைகளின்
விலை வீழ்ச்சி அடைந்து
விடுமோ என்கிற பயத்தில்
எதிர்க்கட்சிகள்
கூச்சலிடுகின்றன . ”
நிலாதாசன் பேசப் பேச -
கைதட்டல் எகிறியது .

“ அமைச்சரின் இந்த
மகத்தான வெளிநாட்டு
விஜயத்தைப் பாராட்டி - என்
சார்பாக அன்னார்க்கு
இந்தப் பொன்னாடையைப்
போர்த்தி மகிழ்கிறேன் . . . ”
மேடைக்கு கீழே நின்றிருந்த
ஒரு ஜால்ரா - ஒரு மஞ்சள்
நிற பட்டுச் சால்  வை யை
எடுத்து நீட்ட - அதை
வாங்கின நிலாதாசன் -
அந்த பட்டுச் சால்  வை யை
ஏலம் போடப் போவதைப்
போல் விரித்துக்
காட்டிவிட்டு - மந்திரி
நரஹரியை நெருங்கி
தோழமையோடு
போர்த்திவிட்டுத்
திரும்பினார் . அதே
விநாடி - ‘ ஷ்ஷ்ஷ்க் ’ என்று
ஒரு சின்ன சத்தம் . ‘ என்ன
சத்தம் ? எங்கிருந்து
வந்தது ? ’ என்று தீர்மானம்
செய்வதற்குள் ,
பொன்னாடையைப் போர்த்திக்
கொண்ட மந்திரி நரஹரி ,
மெல்ல மெல்லத் தளர்ந்து -
உடம்பின் முன்பக்கமாய்
முடங்கிச் சுருண்டார் .
விழிகள் நிலைகுத்த
மல்லாந்தார் . அவருடைய
தொண்  டை க் குழியில் அந்த
ஊசி குத்திட்டு
நின்றிருந்தது .
4
அந்த ‘ ஷ்ஷ்ஷ்க் ’ சத்தம்
கேட்ட ஐந்து
விநாடிகளுக்குள் செத்துப்
போயிருந்தார் நரஹரி .
இரண்டங்குல நீளமும் -
மயிரிழை பருமனும் இருந்த
அந்த நீலநிற ஊசி
நரஹரியின் தொண் டை 
மையத்தில் ‘ ச்சத் ’ என்று
குத்திட்டு நிற்க - ஒரு துளி
சிவப்பு ரத்தம் முத்தாய்
திரண்டு எட்டிப் பார்த்தது .
நரஹரி சாய்ந்ததுமே -
காக்கி யூனிஃபார்ம்கள்
தபதபவென்று ஓடிவந்து
அரண் காத்தார்கள் .
அவரை நெருங்க
முயன்றவர்களைத்
தள்ளினார்கள் . மைக்
இரைச்சல் போட
மேடையைச் சுற்றிலும்
குழப்பமான சத்தங்கள் .

“ என்னாச்சு . . .
மயக்கமா . . . ? ”

“ யாரோ சுட்டுட்டாங்க . . . ”

“ கழுத்துல விஷ ஊசி


மாதிரி . . . என்னமோ
பாய்ஞ்சிருக்கு . . . ”

“ தள்ளுங்க . . . வழி
விடுங்க . . . ” காப்ஸ்
தள்ளினார்கள் .
அலைமோதும் கூட்டத்தில்
தன் வீடியோ காமிராவைப்
பாதுகாத்துக் கொள்ள
ரொம்பவும் சிரமப்பட்டான்
மதுக்குமார் . அவன்
தோளோரமாய் ஒதுங்கினாள்
தர்மா .

“ நினைச்ச மாதிரியே
அசம்பாவிதம் நடந்துடுச்சு ,
மது . . . அந்த ‘ ஷ்ஷ்ஷ்க் ’
சத்தம் மேடைக்கு இடது
பக்கமிருந்து வந்தது . . .
அதென்ன சத்தம் . . . ? ”

“ எனக்குக் கேக்கலை . . .
நான் காமிராவில மும்முரமா
இருந்தேன் . . . மந்திரி
மயங்கி கீழே சாயறப்பதான்
எனக்கே தெரிஞ்சது . . . ”
இவர்கள் பேசிக்
கொண்டிருக்க - மேடையின்
மேல் மைக்கைப் பிடித்துக்
கொண்டு இன்ஸ்பெக்டர்
ஒருவர் கத்திக்
கொண்டிருந்தார் .

“ இந்தக் கூட்டத்தில்
டாக்டர்கள் யாராவது
இருந்தால் உடனடியாய்
இங்கே வரும்படி கேட்டுக்
கொள்கிறோம் . வீ ஆர்
இன் வாண்ட் ஆப் ஒன்
டாக்டர் ’ ஸ் சர்வீஸ் ! கம் . . .
இம்மீடியட்லி . . . ”
மண்டபத்தின் கோடியில்
யாரோ கத்தினார்கள் .

“ டாக்டர்ஈஸ் ஹியர் . . .
ஹி ஈஸ் கம்மிங் . . . ”
கும்பல் மளமளவென்று
ஒதுங்க நெடுநெடுவென்று
வளர்ந்த அந்த மனிதர் ,
வேகவேகமாய் மேடையை
நோக்கிப் போனார் .

“ ஐயாம் டாக்டர்
சுரேந்தர் . . . ”

“ பாருங்க டாக்டர் . . .
ஹாஸ்பிடல்கொண்டுபோக
முடியுமான்னு பாருங்க . . . ”
டாக்டர் சுரேந்தர்
மண்டியிட்டு உட்கார்ந்து
மந்திரி நரஹரியின்
நாடியை பிடித்துப்
பார்த்தார் . அது துடிப்பைக்
காட்ட மறுத்தது . மார்பில்
காதை வைத்தார் .
ஆழ்கடலின் நிசப்தம் .
டாக்டர் எழுந்தார் . அருகே
நின்றிருந்த
இன்ஸ்பெக்டரிடம்
சொன்னார் : “ ஹி ஈஸ்
டெட் . . . ட்யூ டூ திஸ்
பாய்சன்ட் நீடில் . . . ”
மண்டபம் முழுக்க
கசகசவென்ற பேச்சொலி .
நிலாதாசனின் முகம்
அமாவாசை நிறத்துக்குப்
போயிருந்தது . மதுக்குமார்
தன் கையிலிருந்த வீடியோ
காமிராவைக் கூட்டத்தின்
நெரிசலில் இருந்து
காப்பாற்றிக்
கொள்வதற்காகப்
பின்னோக்கி நகர்ந்தவன் ,
சட்டென்று நின்றான் .
அவன் தோளோடு தோளாய்
ஒண்டிக் கொண்டு வந்த
தர்மா கேட்டாள் : “ என்ன
மது ? ”

“ இந்தக் காமிராவை ஒரு


நிமிஷம் பிடிக்கிறியா ? ”

“ ஏன் . . . ? ”

“ அந்த வெள் ளை ச் சட்டை


போட்டிருக்கிற ஆசாமி
கையில ரிவால்வர் மாதிரி
இருந்ததைச் சட்டைப்
பைக்குள்
பதுக்கிக்கிட்டிருக்கான் . நான்
ஆளைப் போய்
அமுக்கறேன் . நீ
காமிராவோடு இப்படி ஓரமா
நில்லு . . . ” தர்மா
தலையாட்ட - மதுக்குமார்
கும்பலில் - அந்த
வெள் ளை ச் சட்டைக்காரனை
நோக்கி நீந்தினான் .
போலீஸ் கெடுபிடிக்குப்
பயந்து வாசலை நோக்கிப்
போய்க் கொண்டிருந்த
கும்பல் - அவனை முன்னேற
விடாமல் தடுக்க -
இடுப்புகளுக்கு மத்தியில்
குனிந்து அந்த வெள்  ளை ச்
சட்டைக்காரன் இருந்த
பக்கமாய்ப் போனான் .
அதற்குள் அவன் கண்களை
விட்டு மறைந்திருக்க -
பதட்டமாய் சுற்றும் முற்றும்
பார்த்தான் . எல்லோரும்
வாசலை நோக்கிப் போய்க்
கொண்டிருக்க - மதுக்குமார்
மேடையின் மேலிருந்த
இன்ஸ்பெக்டரை நோக்கிக்
கத்தினான் .

“ இன்ஸ்பெக்டர் . . . !
மண்டபத்தோட எல்லாக்
கதவுகளையும் அடைக்கச்
சொல்லுங்க . . . மர்டரர் ஈஸ்
ஸ்டில் ஹியர் . . . ஒரு
வெள் ளை ச் சட்டைக்காரன்
தன் சர்ட் பனியனுக்குள்ளே
ரிவால்வர் மாதிரி ஏதோ
ஒண் ணை பதுக்கினதைப்
பார்த்தேன் . . .
ஒவ்வொருத்தரையா
சோதனை போட்டு
அனுப்புங்க . நிச்சயமா ஆள்
மாட்டிக்குவான் . . . ”
இன்ஸ்பெக்டர் உடனே
மேடையினின்றும் கீழே
குதித்து மண்டப வாசலை
நோக்கி ஜனங்களைத்
தள்ளிக் கொண்டு ஓடினார் .

“ ஆல் ஆப் யூ . . . டோண்ட்


மூவ் . . . ”

“ கான்ஸ்டபிள் ! முன்னாடி
கேட்டைச் சாத்து . . . செக்
எவ்ரிபடி . . . ” அடுத்த
விநாடி - மண்டபத்தின்
முன்பக்கக் கதவு சாத்தப்பட
- இன்ஸ்பெக்டர் கத்தினார் :
“ ப்ளீஸ் ஃபார்ம் எ
லைன் . . . ” அவருடைய
கத்தலுக்குக் கட்டுப்பட்ட
கூட்டம் மண்டபச்
சுவரோரமாய் ஒதுங்கி - ஒரு
க்யூவை அமைத்துக்
கொண்டு நின்றது .
பேச்சொலி சுத்தமாய்
நின்றது . மண்டபம் பூராவும்
ஒரு அசாத்திய நிசப்தம்
நிலவியது . இன்ஸ்பெக்டர் ,
மதுக்குமாரை ஏறிட்டார் .

“ மிஸ்டர் . . . ! இங்கே
வாங்க . . . ” மதுக்குமார்
வந்தான் .

“ உங்க பேர் ? ”

“ மதுக்குமார் . . . ”

“ பத்திரிகை நிருபரா ? ”

“ நோ . . . இன்ஸ்பெக்டர் .
வீடியோ காமிராமேன் . . . ”

“ யாரோ ஒரு
வெள் ளை ச்சட்டை பேர்வழி -
சர்ட் பனியனுக்குள்ளே
ரிவால்வர் மாதிரி ஏதோ
ஒண் ணை ப் பதுக்கினதைப்
பார்த்ததா சொன்னீங்க . . . ? ”

“ ஆமா . . . ”

“ இங்கே இருக்கிறவங்கள்ல
யாருன்னு அடையாளம்
காட்ட முடியுமா . . . ? ”

“ ஸாரி . . .இன்ஸ்பெக்டர் . . .
அந்த ஆளோட மூஞ்சியைக்
கவனிக்கிறதுக்குள்ளே
கும்பல் என் 
னை ப்
பின்னுக்குத் தள்ளிடுச்சு . . .
அவனை நெருங்கி பிடிக்கப்
போன சமயத்துல ஆள்
எப்படியோ கும்பல்ல
மறைஞ்சிட்டான் . . . ”

“ சரி , கேட் கதவுக்கு


வாங்க . . . கான்ஸ்டபிள்
ஒவ்வொரு ஆளையும் செக்
பண்றப்ப நீங்களும்
பாருங்க . . . ” மதுக்குமாரைக்
கூட்டிக் கொண்டு மண்டப
கேட்டுக்குப் போனார்
இன்ஸ்பெக்டர் . கான்ஸ்டபிள்
ஒவ்வொரு ஆளையும் -
உடம்பு முழுக்கத் தடவி
தடவி வெளியே விட , க்யூ
நகர்ந்தது . மதுக்குமார்
கான்ஸ்டபிளின் அருகே
நின்று ஒவ்வொருவரின்
முகத்தையும் உன்னிப்பாய்ப்
பார்த்துக் கொண்டிருந்தான் .
காற்றில் கற்பூரம் கரைகிற
மாதிரி - கூட்டம் கொஞ்சம்
கொஞ்சமாய்க் கரைந்து
கொண்டிருக்க ,
இன்ஸ்பெக்டர் முகம்
இருண்டு கொண்டிருந்தார் .
மேடையினின்றும் கீழே
இறங்கி வந்த நிலாதாசன் ,
இன்ஸ்பெக்டரின் அருகில்
வந்து நின்றார் .

“ இது
எதிர்க்கட்சிக்காரங்களோட
வேலையாத்தான் இருக்கும்
இன்ஸ்பெக்டர் . . . அமைச்சர்
மேடையிலே சாஞ்சதுமே ஒரு
கும்பல் மண்டப கேட்
வழியா வெளியே
போயிடுச்சு . . . சுட்டவன்
நிச்சயமா
மண்டபத்துக்குள்ளே இருக்க
மாட்டான் . . . எப்பவோ
பறந்திருப்பான் . . . ”

5
விவேக்கிற்கு டெலிபோன்
அழைப்பு வந்தபோது - தன்
புத்தம்புது மனைவி
ரூபலாவிடம் அறுவை ஜோக்
கேள்விகளாய்க் கேட்டு
அவளை அறுத்துக்
கொண்டிருந்தான் .

“ தபால் பெட்டி ஏன்


சிவப்பாயிருக்கு . சொல்லு ,
பார்க்கலாம் . . . ? ” ரூபலா
தன் அழகிய பெரிய
விழிகளால் விழிவிழியென்று
விழித்துவிட்டு , “ தெரியலை ”
என்று சொல்ல - விவேக்
“ கவர்மென்ட் அதுக்கெல்லாம்
சிவப்பு பெயிண்ட்
அடிச்சிருக்காங்க . . . அதான்
சிவப்பாயிருக்கு . . . ”
என்றான் .

“ சரியான கடி ! ” என்றாள்


ரூபலா . ( வயது இருபது )
“ கிரிக்கெட் ப்ளேயர்
ரவிசாஸ்திரிக்கும்
மகாத்மாவுக்கும் என்ன
வித்தியாசம் ? ”

“ தெரியலை . . . ”
( பொன்னிறம் . முகத்தில்
காலண்டர் லட்சுமி
தெரிந்தாள் . ) “ ரவிசாஸ்திரி
லெப்ட் ஹாண்ட் ஸ்பின்னர் ,
மகாத்மா காந்தி ரைட்
ஹாண்ட் ஸ்பின்னர் . . . ”
விவேக் - அடுத்த அறுவை
ஜோக்குக்குத் தாவும்
முன்பாக - டெலிபோன்
தொண்  டை யைச் செருமி
கூப்பிட்டது .

“ உங்களை யாரோ
கூப்பிடறாங்க . . . ” என்றாள்
ரூபலா . ( மாம்பழ நிற
கலரில் இருந்த புடவையில்
மெலிசாய்
நிரம்பியிருந்தாள் . ) “ ரூபி . . . ”
“ ம் . . . ”

“ ரிஸீவரை நீயே எடு . . .


டிபார்ட்மெண்ட்டிலிருந்து
என் 
னை க் கேட்டா ,
மாம்பலம் ரங்கநாதன்
தெருவுக்குச் சென்று நான்
மளிகை சாமான் வாங்கப்
போயிருக்கிறதா
சொல்லிடு . . . ” ரூபலா
சிரித்தாள் . ( பல்வரிசை ,
போட்டோ பிளாஷாய்
மின்னியது . ) போய் ரிஸீவரை
எடுத்தாள் .

“ ஹலோ . . . ”

“ என்னம்மா . . .
ரூபலா . . .
விவேக் இருக்காரா . . . ? ”
மறுமுனையில் கோகுல்நாத்
கேட்டார் .

“ இருக்கார் ஸார் . . . ”

“ அவர்கூடகொஞ்சம்
பேசணுமேம்மா . . . ”

“ ஒரு நிமிஷம் . . . ”
என்றவள் , ரிஸீவரின்
வாயைப் பொத்திக்
கொண்டு விவேக்கை
புன்னகையோடு பார்த்தாள் .

“ என்னங்க . . . வந்து
பேசறீங்களா ? ”

“ ஃபோன்ல யாரு ? ”

“ மிஸ்டர் கோகுல்நாத் ! ”

“ போச்சுடா . . . ”
தரையில்
அப்படியே உட்கார்ந்து
தலையில் கை வைத்துக்
கொண்டான் விவேக் .

“ மனுஷன் நிச்சயமா
ஏதாவது கேஸைக் கொண்டு
வந்திருப்பார் . . . ”

“ வந்து பேசறீங்களா . . . ? ”

“ நான்இருக்கேன்னு
சொல்லிட்டியா ? ”

“ சுத்தமா சொல்லிட்டேன் . . . ”

“ அசோகனோட பேச்சைக்
கேட்காமே போயிட்டேனேன்னு
இப்போ வருத்தமா
இருக்கு . . . ”

“ அது யாரு அசோகன் ? ”

“ என்னோட ப்ரெண்ட் .
பாக்கெட் நாவல்
ஆசிரியர் ! ”

“ என்ன சொன்னார் ? ”

“ இவ்வளவு சீக்கிரத்துல
கல்யாணம்
பண்ணிக்காதேன்னு ”

“ ரொம்ப லேட் . . . வந்து


பேசறீங்களா . . . ? மிஸ்டர்
கோகுல்நாத் ஃபோன்ல
காத்திட்டிருக்கார் . . . ”

“ வர்றேன் . . . ”
என்று
சொன்ன விவேக் ,
மெதுவாய் நடந்து வந்து
ரிஸீவரை வாங்கி , “ ஹலோ ”
என்றான் .

“ விவேக் ! குட்மார்னிங் . . .
நான் கோகுல்நாத்
பேசறேன் . . . ”

“ குட்மார்னிங் ! சொல்லுங்க
கோகுல்நாத் . . . ”

“ நீங்க
உடனே ராஜா
மஹாலுக்கு வரணும் . . . ”

“ கேஸா . . . ?
கோகுல்நாத் !
நான் ரூபலாவோட கழுத்துல
கட்டின தாலியோட மஞ்சள்
கூட இன்னும் காயலை . . .
அதுக்குள்ளே கேஸா . . . ?
என் 
னை ப் பார்த்தா
உங்களுக்குப் பாவமா
இல் 
லை யா . . . ? ”

“ விவேக் ! உங்க நிலைமை


எனக்குத் தெரியும் . . .
இருந்தாலும் இது ஒரு
வி . ஐ . பி . மர்டர் . . . ”

“ வி . ஐ . பி . யா . . . ? ”

“ மினிஸ்டர் . . . ”

“ யாரு . . . ? ”

“ நரஹரி . . . ”

“ ஃபுட் மினிஸ்டர் . . . ? ”

“ அவரேதான் . . . ”

“ அவர் இன்னிக்குத்தான்
வெளிநாட்டிலிருந்து
வரப்போறதா ‘ ஹிண்டு ’ வில
பார்த்தேன் . . . ”

“ வந்தார் . . . ராஜா
மஹால்லே நடந்த ஒரு
பாராட்டு விழாவிலே
கலந்துக்கிட்டார் .
பொன்னாடை
போர்த்தறப்பவே
சாய்ஞ்சுட்டார் . . . ”

“ எப்படி . . . ? ”

“ பாய்ஸன் நீடிலை
ரிவால்வர்ல ஃபிக்ஸ்
பண்ணி யாரோ
சுட்டிருக்காங்க . . . ஊசி
தொண்  டை யிலேயே
பாய்ஞ்சிடுச்சு . . . ”

“ நான் இப்போ
வர்றேன் . . . ’ ரிஸீவரை
வைத்துவிட்டுக் கொஞ்சம்
கவலையோடு திரும்பினான்
விவேக் . ரூபலா தன்
கையில் தயாராய்
வைத்திருந்த ஹோண்டா
பைக்கின் சாவியை
நீட்டினாள் .
6
விவேக் தன் ஹோண்டாவை
ராஜா மஹால் வாசலில்
நிறுத்தினான் . ரோட்டின்
இரண்டு பக்கமும் கும்பல்
திட்டுத் திட்டாய்
நின்றிருக்க , போலீஸ்
கான்ஸ்டபிள்கள் விரட்டிக்
கொண்டிருந்தார்கள் . கட்சித்
தொண்டர்களில் சிலர்
நிஜமான துக்கத்தோடு
அழுதார்கள் . விவேக்
உள்ளே வந்தான் .
பத்திரிகையாளர்களும் ,
போட்டோகிராபர்களும்
ஸ்தம்பித்துப் போய் -
ஹாலின் ஒரு ஓரமாய்
நின்றிருக்க - மந்திரி
நரஹரியை ஓர் ஓரமாய்க்
கிடத்தி - இரண்டு பக்கமும்
போலீஸார் தெரிந்தார்கள் .
விஷயத்தைக் கேள்விப்பட்ட
வேறு இலாகாக்களைச்
சேர்ந்த மந்திரிகள் ,
நாற்காலிகளில் உட்கார்ந்து -
மோவாய்களைத் தாங்கி
முகங்களுக்கு சோகத்தைக்
கொடுத்திருந்தார்கள் .
அசோக ஸ்தூபி சின்னம்
தரித்த உயர்மட்ட போலீஸ்
அதிகாரிகள் தள்ளி நின்று
மௌனம் அனுஷ்டிக்க -
விவேக் அவர்களுக்கு
போலீஸ் சம்பிரதாயப்பட்ட
சல்யூட்களைக் கொடுத்தபடி
கோகுல்நாத்தை
நெருங்கினான் .
கான்ஸ்டபிளுக்கு ஏதோ ஒரு
உத்தரவைக் கொடுத்துக்
கொண்டிருந்த கோகுல்நாத்
திரும்பினார் .

“ வாங்க விவேக் . . . ”

“ சம்பவம் எத்தனை
மணிக்கு நடந்தது ? ”

“ அரைமணி நேரத்துக்கு
முன்னாடி . . . ”

“ நீங்கஅந்த சமயம்
ஸ்பாட்ல இருந்தீங்களா . . . ? ”

“ நோ . . .
நானும்
இப்பத்தான் வந்தேன் . . .
இன்ஸ்பெக்டர் ஜெயராஜ்
ஸ்பாட்ல இருந்திருக்கார் . . . ”

“ யாரையாவது சந்தேகக்
கேஸ்ல அரஸ்ட்
பண்ணியிருக்கீங்களா ? ”

“ இல் 
லை . . . ”

“ வாங்க , பாடியைப்
பார்க்கலாம் . . . ” கால்களை
நீட்டி - வாய் பிளந்து
செத்துக் கிடந்த நரஹரியை
நெருங்கினார்கள் . அந்த
நீலநிற ஊசி இன்னமும்
அவருடைய
தொண்  டை யிலேயே குத்திட்டு
நின்றிருந்தது .

“ எனி க்ளூ ? ”

“ வெள் 
ளை ச் சட்டை போட்ட
ஒரு ஆள் - ரிவால்வர்
மாதிரியான ஏதோ
ஒண் ணை சர்ட்
பனியனுக்குள்ளே
பதுக்கினதை ஒரு வீடியோ
காமிராக்காரர்
பார்த்திருக்கார் . ஆளை
அமுக்கறதுக்குள்ளே
தப்பிச்சுட்டான் .
உள்ளேயிருந்த
ஒவ்வொருத்தரையும் செக்
பண்ணி வெளியே
அனுப்பிச்சிருக்காங்க . . . ”

“ மேடையில யார் யார்


இருந்தாங்க . . . ? ”

“ எக்ஸ்எம் . எல் . ஏ .
நிலாதாசன் , அருவியோசை
அருணன்னு ஒரு
பேச்சாளர் , அப்புறம் கோழி
வளர்ப்பு வாரியத் தலைவர்
ராஜமன்னார் , அப்புறம்
நாலைஞ்சு கட்சிப்
பிரமுகர்கள் . . . ” மேடையைத்
திரும்பிப் பார்த்தான்
விவேக் . மேடைப் பரப்பு
பூராவும் ரோஜா மாலைகள்
சிதறியிருக்க . . . ஒரு
பிரம்பு நாற்காலி குப்புறக்
கிடந்தது . நரஹரிக்கு
நிலாதாசன் போர்த்தின
பொன்னாடை கும்பலாய்க்
கிடந்தது .

“ பொன்னாடை போர்த்தப்
போகிறப்போவா இந்தச்
சம்பவம் ? ”

“ ஆமா . . . ”

“ ஏதாவது சத்தம் ? ”

“ ஷ்ஷ்ஷ்க்ன்னு பாம்பு
சீறுகிற மாதிரி ஒரு சத்தம்
கேட்டிருக்கு . . . மவுத்ல
பிஸ்டல வெச்சு மந்திரியை
நோக்கி
ஊதியிருக்கலாம் . . . ”

“ அத்தனை கும்பலுக்கு
மத்தியில் அது
சாத்தியமில் 
லை
கோகுல்நாத் . . . ” - சொல்லிக்
கொண்டே மேடையின் மீது
தாவி ஏறினான் விவேக் .
ஒரு முறை சுற்றி
வந்தான் .

“ சத்தம்எந்தப் பக்கம்
இருந்து கேட்டிருக்கு . . . ? ”

“ இடப் பக்கம் . . . ”
மேடைக்குப் பின்பக்கமாய்ப்
போய் - நீட்டிய
பலகைகளுக்குக் கீழே
எட்டிப் பார்த்தான் விவேக் .
எட்டிப் பார்த்துவிட்டுத்
திரும்ப நினைத்தவன் -
சட்டென்று நின்றான் .
குனிந்தான் .

“ என்ன விவேக் . . . ? ”

“ கோகுல்நாத் ! ஒரு நிமிஷம்


வாங்க . . . ” கோகுல்நாத்
அவனை நெருங்கினார் .
விவேக் சுட்டிக் காட்டினான் .

“ கீழே பார்த்தீங்களா ? ”
அவர் பார்த்தார் . பிஸ்டல் .
எவர்சில்வர் உடம்போடு
மின்னியது . விவேக் தன்
கர்ச்சீப்பை உபயோகித்து
பிஸ்டலை எடுத்தான் .
ரொம்பவும் சாதாரண
பிஸ்டல் . மிருகங்களுக்கு
ஊசிமருந்து இன்ஜெக்ட்
பண்ணுகிற பிஸ்டல் .
பிஸ்டலின் காதில் அந்த
துண்டுச் சீட்டு ஒரு
கயிற்றில் கட்டித்
தொங்கியது . அதில் ஏதோ
நான் கை ந்து வரிகள்
ஓடியிருந்தது . படித்தான் .
டைப் அடித்த தமிழ்
வாசகங்கள் . ‘ போலீஸ்
துறைக்கு வந்தனம் !
செத்தவருக்காக
கவலைப்படாதீர்கள் .
மக்களுக்காக
கவலைப்படுங்கள் . ஏதோ
என்னால் முடிந்த ஒரு
சிறிய சமூகத்தொண்டு .
நான் உங்களுக்குக்
கிடைக்க மாட்டேன் .
அப்பாவிகளை சந்தேகப்பட்டு
அரெஸ்ட் செய்து
கோர்ட்டுக்குக் கொண்டுபோய்
விடாதீர்கள் . ஒரு
அதர்மத்தைச் சாய்ப்பதில்
வெற்றி பெற்றிருக்கிறேன் .
என் 
னை த் தேடுவதை
விட்டுவிட்டு வேறு
கேஸ்களில் கவனம்
செலுத்துங்கள் . மறுபடியும்
வந்தனம் . ’ “ கொழுப்பு ”
என்றான் விவேக் .

“ பிஸ்டலை உபயோகிச்சவன்
சந்தடிசாக்குல அதை
மேடைக்குப் பின்புறமா
நழுவ விட்டுட்டுப்
போயிருக்கான் விவேக் . . .
அதான் செக் பண்ணினப்ப
அவன் மாட்டலை . . . ”

“ இந்தப் பிஸ்டலை பிரசர்வ்


பண்ணி வையுங்க
கோகுல்நாத் . . . ” - விவேக்
கர்ச்சீப்பால் போர்த்தப்பட்ட
அந்தப் பிஸ்டலை
கொடுக்க - கோகுல்நாத்
அதை ஒரு பிரசாதம்
மாதிரி பாவித்து வாங்கிக்
கொண்டார் .

“ கோகுல்நாத் ! ”

“ சொல்லுங்க விவேக் . . . ”

“ எனக்குஇன்னொரு
தகவலும் தெரியணும் . . . ”

“ என்ன ? ”

“ மந்திரி நரஹரியோட
தம்பி . . . ஏன் இந்த
விழாவை ஏற்பாடு
பண்ணணும் . . . ? கட்சியோ ,
அரசாங்கமோ ஒரு
மந்திரிக்குப் பாராட்டு விழா
நடத்தறது நியாயம் . . .
அவருடைய தம்பி எதுக்காக
நடத்தணும் . . . ? அவர்
இங்கே இருக்காரா . . . ? ”

“ இருக்கார் . . . ”

“ அவரை நான் கொஞ்சம்


விசாரிக்கணும் . . . ”
கோகுல்நாத் திரும்பி ,
உறைந்துபோய் நின்றிருந்த
கும்பலுக்கு மத்தியில்
மோவாயில் கை வைத்தபடி
நாற்காலியில் தலைகுனிந்து
உட்கார்ந்திருந்த - மேலே
நீலத்துண்டு போட்ட அந்த
நபரைக் காட்டினார் .

“ அவர்தான் விவேக் . . . ”

“ வாங்க . . . அவரைக்
கொஞ்சம் உரசிப்
பார்ப்போம் . . . ”
போனார்கள் . நாற்காலியில்
உட்கார்ந்திருந்த அவரிடம்
குனிந்து கோகுல்நாத் ஏதோ
சொல்ல - அவர் கலங்கி
சிவந்து போன விழிகளோடு
நிமிர்ந்தார் . எழுந்து
தோளில் போட்டிருந்த
துண்டு நழுவி கீழே
விழுந்ததையும்
பொருட்படுத்தாமல்
விவேக்கை நோக்கி
வந்தார் . வந்தவர்க்கு
ஐம்பது வயதிருக்கும் .
மந்திரி நரஹரியின் சாயல்
லேசாய் அவர்மேல் புரண்டு
விழுந்து எழுந்து
போயிருந்தது . சிறிய
உப்பலான முகமும் -
துருத்தின மாதிரி தெரிந்த
வயிறும் - ஆசாமி ராத்திரி
நேரங்களில் விஸ்கியைக்
காதலிக்கிறவர் என்று
அடையாளம் காட்டியது .
தொளதொள
ஜிப்பாவுக்குள்ளும் மஸ்லின்
வேஷ்டிக்குள்ளும் நுழைந்து -
மூக்கை இம்சைப்படுத்துகிற
சென்ட்டால் தன் னை

நனைத்திருந்தார் . அந்த
நிமிஷம் அழுதிருந்தார் .

“ ஸாரி ஃபார் த
டிஸ்டர்பன்ஸ் ” என்றான்
விவேக் .

“ நீங்க யாரு
இன்ஸ்பெக்டரா . . . ? ”
கேட்டார் அவர் .

“ நோ . . . க்ரைம்
பிராஞ்ச் . . . ” கண்களில்
கொஞ்சம் மரியாதை
காட்டி , “ என்ன கேக்கப்
போறீங்க ? ” என்று கேட்டார் .

“ உங்க பேர் ? ”

“ வேங்கடஹரி ”

“ மந்திரிநரஹரி கூடப்
பிறந்தவர் தானே ? ”

“ ஆமா . . . ”

“ அவர் கூடவே நீங்க


இருக்கீங்களா , இல்லே
தனியா இருக்கீங்களா ? ”

“ அவரோட பி . ஏ .
நான்தான் . . . ”

“ எத்தனை வருஷமா
அவர்கூட இருக்கீங்க ? ”

“ நாலைஞ்சு வருஷமா . . . ”

“ மினிஸ்டர் நரஹரிக்கு
ஃபேமிலி இருக்கா . . . ? ”

“ மனைவிஇல் 
லை . . .
ஒரேயொரு பையன்
மட்டும் . . . அவனும்
அமெரிக்காவில் டாக்டரா
இருக்கான் . . . ”

“ உங்களுக்கு ஃபேமிலி
இருக்கா ? ”

“ எனக்கு கல்யாணமே
நடக்கலை . . . ”

“ இந்தப் பாராட்டு விழாவை


ஏற்பாடு பண்ணினது
நீங்கதான்னு சொல்றாங்க . . .
உண் மை யா . . . ? ”

“ ஆ . . . மா . . . ”

“ அவர் சார்ந்திருக்கிற
கட்சியோ அல்லது இந்த
அரசாங்கமோ ஏற்பாடு
செய்ய வேண்டிய ஒரு
விழாவை நீங்க தனிப்பட்ட
முறையில ஏன் ஏற்பாடு
பண்ணினீங்க . . . ? ”

“அ...அ... அது
வந்து . . . ”

“ சொல்லுங்க . . . ”

“ அப்படிக் கொஞ்சம்
ஒதுக்கமா
போயிடலாமா . . . ? ” - மண்டப
சுவரோரமாய்க் கை
காட்டினார் வேங்கடஹரி .
போனார்கள் .

“ சொல்லுங்க . . . ” என்றான்
விவேக் . அவர் மெல்லிய
குரலில் சொன்னார் :
“ இப்போ கட்சிக்குள்ளே . . .
ஏகப்பட்ட குழப்பம் . . .
அண்ணன் பேர்ல நிறைய
பேருக்குக் காழ்ப்பு . . .
அண்ணன் பேர்ல
தொண்டர்களுக்குப்
பிடிப்பில் 
லை ன்னு பொய்ப்
பிரசாரம்
பண்ணிட்டிருந்தாங்க . . .
அதையெல்லாம்
முறியடிக்கணும்னு
அண்ணன் விரும்பினார் .
அவர் வெளிநாட்டுல
இருக்கும்போதே ‘ நான்
திரும்பற அன்னிக்கு -
தொண்டர்கள் சார்பாக ஒரு
பாராட்டு விழாவை ஏற்பாடு
பண்ணும்படி ’ யா
சொன்னார் . . . அதான்
அவசர அவசரமா இந்தப்
பாராட்டு விழாவுக்கு
ஏற்பாடு பண்ணினேன் . . . ”

“ இந்த கோஷ்டிப்பூசல்
ரொம்ப நாளாவே
இருக்கா ? ”

“ ஒரு வருஷமாத்தான் . . . ”

“ உங்களுக்கு யார்
மேலயாவது சந்தேகம்
இருக்கா ? ”

“ நான் யாரைன்னு சொல்ல


முடியும் ? ”

“ மந்திரிக்கு எதிர்
கோஷ்டியில்
இருக்கிறவங்கள்ல
முக்கியமானவர் யாரு ? ”

“ நிலாதாசன் ! ”

“ அவர்கட்சியிலே
என்னவாய் இருக்கார் ? ”

“ அவர் ஒரு எக்ஸ்


எம் . எல் . ஏ . அவ்வளவுதான் .
மத்தபடி கட்சியில் அவர்க்கு
எந்தப் பொறுப்பும்
கிடையாது . . . ” விவேக்
அடுத்த கேள்விக்காக
வாயைத் திறந்த நேரம் -
போலீஸ் கமிஷனர் அவனை
நோக்கி வந்தார் .

“ மிஸ்டர்விவேக் . . .
கவர்னரும் , சி . எம் . மும்
எந்த நிமிஷமும் வரலாம் . . .
நீங்க உங்க விசாரணையை
அவங்க வந்துட்டுப்
போனதும் கண்ட்டினியூ
பண்ணிக்கலாமே . . . ? ”

“ எஸ் ஸார் . . . ” என்று


விறைப்பானான் விவேக் .
7
தர்மா வெடித்தாள் - அந்த
ராத்திரி எட்டு மணி
வேளையில் .

“ மந்திரியை . . . விஷ
ஊசியாலே . . . பிஸ்டல்
பண்ணி . . . கொலை செஞ்ச
ஆசாமியைப் பிடிக்கத்தான்
போலீஸ் டிபார்ட்மெண்ட்
இருக்கே . . . மது ?
எல்லாத்துக்கும் மேலே
விவேக் இருக்கார் . . . நீங்க
ஏன் முயற்சி எடுத்துட்டுக்
கஷ்டப்படணும் . . . ? ”
கேஸட்டை டெக்கில்
சொருக்கிக் கொண்டே
மதுக்குமார் , தீர்மானமாய்ச்
சொன்னான் : “ நீ
என்னதான் சொல்லு தர்மா !
என்மனசு கேட்கலை . . .
பிஸ்டல் வெச்சிருந்த அந்த
ஆளைப் பார்த்தேன் . . . சர்ட்
பனியனுக்குள்ளே அதைத்
தள்ளிட்டிருந்தான் .
பக்கத்துல போய் அவனைத்
தொடறதுக்குள்ளே
மறைஞ்சுட்டான் . என்னோட
வீடியோ காமிரா அந்த
விழாவில இருக்கிறவங்களை
சுத்திச் சுத்தி வந்து படம்
எடுத்திருக்கு . . . அந்தக்
கேஸட்டைத்தான் இப்போ
‘ டெக் ’ குல போட்டிருக்கேன் .
நாப்பத்தைஞ்சு நிமிஷம்
ஓடற இந்தக் கேஸட்டோட
ஏதாவது ஒரு செ . மீட்டர்
பரப்புல அவன் நிச்சயமா
இருப்பான் . . . ”

“ எனக்கு
நம்பிக்கையில் லை . . . ”
தர்மா உதட்டைப்
பிதுக்கினாள் .

“ வா . . . இப்படி . . . வந்து
உட்கார் . . . நிதானமா
டி . வி . யோட ஸ்கிரீனைப்
பாரு . . . விழாவில் உனக்கு
யாராவது சந்தேகமா
தெரிஞ்சா உடனே சொல்லு
தர்மா . . . ” டி . வி . க்கு எதிரே
உட்கார்ந்தார்கள் . டி . வி .
திரை சில வெளிச்சக்
கோடுகளை வரைந்து
காட்டிவிட்டு - திடீரென்று
அடர்த்தியான வண்ணத்தில்
நரஹரியின் விழா
மேடையைக் காட்டியது .
கூடவே சளசளவென்ற
சத்தம் பிரசவமாகியது .
காமிரா கொஞ்சம்
கொஞ்சமாய் நகர -
மேடையில் உட்கார்ந்திருந்த
வி . ஐ . பி . க்களில் ஒருவர்
மூக்கை நிரடிக்
கொண்டிருக்க -
இன்னொருத்தர் தன்
பின்னந்தலையைக் கீறிக்
கொண்டிருந்தார் .
நிலாதாசன் அருகேயிருந்த
தன் ஜால்ரா பேர்வழியைக்
குனிய வைத்து ஏதோ
சொன்னார் . தர்மா கையில்
பென்சிலோடும் ,
நோட்புக்கோடும் விழா
மேடையேறிக் கொண்டிருக்க -
மைக்கில் யாரோ
ஆவேசமாய்
வாயசைத்தார்கள் . காமிரா
பேனர்களின் மேல் பட்டு
திரும்பியது .
பார்வையாளர்களுக்கு
மத்தியில் தத்தியது .
அநேகமாய் நிறைய பேர்
வெள் ளை ச் சட்டை . முடி
கொட்டிப் போன
பின்னந்தலைகள் . மூக்குக்
கண்ணாடி முகங்கள் .
சீரியஸாய் குடும்ப
விஷயங்களைப் பேசும்
இரண்டு பெண்கள் .
அழுகிற குழந்தை .
மறுபடியும் காமிரா
மேடையை நோக்கித்
திரும்ப - பார்த்துக்
கொண்டிருந்த தர்மா ‘ உச் ’
கொட்டினாள் .

“ விக்ரம் கேஸட் இருந்தா


போடுங்க மது . . .
பொழுதாவது இன்ட்ரஸ்டிங்கா
போகும் . . . ”

“ பேசாம டி . வி . யைப் பாரு


தர்மா . . . அந்த ஆள் என்
பார்வைக்கு மாட்டாம போக
மாட்டான் . . . ” தர்மா
சிரித்தாள் .

“ மந்திரியைக் கொல்ல
வந்தவன் நெத்தியில எழுதி
ஒட்ட வெச்சுட்டா
வந்திருப்பான் . . . ? ”

“ நெத்தியில எழுதி ஒட்ட


வெச்சிருக்க வேண்டிய
அவசியமில் லை . . . தர்மா .
அவனோட பார்வையைப்
படிச்சாலே போதும் . . . ஆள்
நிச்சயமா மாட்டுவான் . . . ”

“ அங்க பாருங்க ஒருத்தர்


எப்படிக் கொட்டாவி
விடறார்ன்னு . . . ” தர்மா
சொல்லி சிரித்துக்
கொண்டிருக்கும்போதே -
மதுக்குமார் குபீரென்று
எழுந்தான் .

“ என்ன மது ? ”

“ஐ காட் இட் . . . ”
ஓடிப்போய் . . . கேஸட்டை
ரீவைண்ட் செய்து குமிழைத்
திருக - பார்வையாளர்கள்
சலசலப்போடு
தெரிந்தார்கள் . காமிரா
நகர நகர - மேடையின்
இடதுபக்கம் வந்தது .
வெள் ளை சர்ட் போட்டிருந்த
ஒரு ஆசாமி சுற்றும்
முற்றும் பார்த்தபடி
மேடையேற முயல - யாரோ
தள்ளி விட்டார்கள் . அவன்
மறுபடியும் மேடை ஏற
முயல - மதுக்குமார் அந்தக்
காட்சியை ‘ ப்ரீஸ் ’ செய்து
பார்த்தான் . தர்மா
அவனருகே வந்து
நின்றாள் .

“ இவனா நீங்க சொன்ன


ஆசாமி . . . ? ”

“ ஆமா தர்மா . . .
இவனேதான் . . . ” தர்மா
அவனைப் பார்த்தாள் .
எண்ணெய் மினுமினுக்கும்
கறுப்பான முகம் . தலைமுடி
சுருள்சுருளாய்
பம்மியிருந்தது . மெலிதான
மீசைக்குக் கீழ் ஊதா நிற
சிகரெட் நிகோடின்
உதடுகள் . சுமாரான
வெள்  ளை யில் சர்ட்டும் ,
நீலநிறப் பேண்ட்டும்
அணிந்து கழுத்தில்
கர்ச்சீப்பைக்
கட்டியிருந்தான் . பார்வையில்
ஒரு திருட்டுத் தனமும் -
பயமும் தெரிந்தது .

“ சந்தேகமேயில் 
லை
தர்மா . . . இவனேதான் . . . ! ”
- சொன்ன மதுக்குமார்
திரும்பி அடுத்த அறையை
நோக்கிப் போனான் .

“ எங்கே போறீங்க ? ”

“ போலீஸுக்கு ஃபோன்
செய்ய வேண்டாமா ? விவேக்
ஸ்டேஷன்லதான்
இருப்பார் . . . ” டெலிபோனை
நோக்கி நடந்தவனை - அந்த
ஆண்குரல் நிறுத்தியது .

“ ஒரு நிமிஷம்
மதுக்குமார் . . . ”
மும்முரமாய் - டி . வி . யைப்
பார்த்துக் கொண்டிருந்த
தர்மாவும் - டெலிபோனை
நோக்கி நடந்து
கொண்டிருந்த மதுக்குமாரும்
யாரோ திருப்பி விட்டமாதிரி
திரும்பினார்கள் . அவன்
சுவரோரமாய் இருந்த
பீரோவுக்குப் பின்புறமிருந்து
மெல்ல வெளிப்பட்டான் .
கிளவுஸ் அணிந்த கையில்
துப்பாக்கி ஆயுதம் .
உடம்பை நீளமான
அங்கியால் மறைத்து -
முகத்திற்குக் கர்ச்சீப்பைக்
கட்டியிருந்தான் . நெற்றியை
மறைத்த தொப்பிக்குக் கீழே
- சின்ன சைஸ் கண்கள்
சிவப்பாய் தெரிந்தன . குரல்
கரகரக்கப் பேசினான் .

“ மதுக்குமார் . . .
டெலிபோன்ல அப்புறமா
பேசிக்கலாம் . . . மொதல்ல
டி . வி . யை ஆஃப் பண்ணி
டெக்கில் இருக்கிற அந்த
கேஸட்டை எடுத்து
என்கிட்டே குடு . . . ”
மதுக்குமார் மெல்ல
பின்வாங்கினான் .

“ யா . . . யார் நீ ? ”

“ யாராயிருந்தா
உனக்கென்ன ? நிச்சயமா . . .
உனக்கு வேண்டாதவன்
நான் . . . அந்தக் கேஸட்டை
எடுத்துத் தர்றியா . . . ? ”
அந்தப் பேர்வழி கேட்டுக்
கொண்டிருக்கும் போதே -
மதுக்குமார் குபீரென்று கீழே
குனிந்து டீபாயின்
மேலிருந்த அந்த ஃபிளவர்
வாஸை எடுத்து அவனை
நோக்கி வீசினான் . அவன்
விருட்டென்று ஓரடி நகர்ந்து
கொள்ள - அந்த கனமான
ஃபிளவர்வாஸ் சுவரில்
மண் டை யை மோதிக்
கொண்டு ‘ டிங்டினார் ’
என்று கீழே உருள - அது
மேற்கொண்டு சத்தம்
போடாதபடி - அதன் மேல்
காலை வைத்து
அழுத்தினான் , துப்பாக்கிப்
பேர்வழி . சிரித்தான் .
சிரித்துக் கொண்டே
கேட்டான் .

“ உன்னோட வீட்டுச்
சாமான்களை நீயே
உடைக்கிறதா தீர்மானம்
பண்ணிட்டியா
மதுக்குமார் . . . ? ”
மதுக்குமார் கோபமாய்
சுற்றும் முற்றும் பார்த்தான் .
அவன் பிஸ்டலை சுழற்றிக்
கொண்டே சொன்னான் .

“ மதுக்குமார் ! இன்னொரு
தரம் நீ அசைஞ்சே . . .
பிஸ்டலிலிருந்து தோட்டா
சீறிடும் . அசையாமே
அப்படியே நில்லு . . . !
தர்மா . . . ! நீ கொஞ்சம்
முன்னாடி வா . . . ” தர்மா
பயந்து கொண்டே வந்தாள் .

“ அதோ . . .அந்த மூலையில்


இருக்கிற நைலான்
கயித்தை எடு . . . ” அவள்
தயங்க - அவன் உறுமினான் .

“ நான் சொன்னதை நீ
செய்யலைன்னா . . . இந்த
பிஸ்டல்ல இருக்கிற
தோட்டா நீ காதலிக்கிற
இந்த மதுக்குமார் மார்பில்
பாயும் . சரியா . . . ? ”

“ நோ . . . அவரைச்
சுட்டுடாதே ! ” - நெற்றி
வியர்த்து குரல் கமறச்
சொன்னாள் தர்மா .

“ அப்படின்னா நான்
சொன்னதைச் செய் . . . ”

“ என்ன பண்ணணும் ? ”

“ அந்த நைலான் கயித்தை


எடுத்து - மதுக்குமாரை
நாற்காலியில் உட்காரப்
பண்ணி இறுக்கமா
கட்டிப்போடு . . . அவனைக்
கட்டாமே போனா உனக்கு
முன்னாடி தன்னோட
ஹீரோத்தனத்தை காட்ட
நினைப்பான் . . . ” தர்மா
கட்ட ஆரம்பித்தாள் .

“ ம் . . .
இறுக்கமா கட்டு . . . ”
அவனைக் கட்டி
முடித்துவிட்டு நிமிர்ந்தாள் .

“ குட் . . . நீ
இன்னொரு
காரியமும் பண்ணணும்
தர்மா . . . அப்படியே நீ
டி . வி . செட்டுக்கு மெல்ல
நடந்து போய் - டெக்கில்
இருக்கிற அந்த கேஸட்டை
கொண்டு வந்து என்
கையில் தந்துடணும் . . .
உன்னோட காதலன்
மதுக்குமாருக்கு ஜாதகத்துல
இப்போ போதாத காலம் . . .
மந்திரி நரஹரி இவனுக்கு
மாமனா , மச்சானா . . . ?
ஒரு நல்ல காரியம்
பண்ணியிருக்கிற என்னோட
ஆளை போலீஸ்ல பிடிச்சுக்
குடுக்கப் பார்க்கிறானே . . .
இது நியாயமா . . . ? இந்த
மூணு நாளா இவனை
ஃபாலோ பண்றதுதான்
என்னோட வேலை . . .
இவன் எப்படியும் விழாவில
எடுத்த கேஸட்டை டெக்ல
போட்டுப் பார்ப்பான்னு
எனக்குத் தெரியும் . . . அந்த
கேஸட் போலீஸ் கைக்கு
போறதுக்கு முந்தி என்
கைக்கு வரணும்ன்னு
நினைச்சேன் . . . எடுத்துத்
தர்றியா ? ” தர்மா
அசையாமல் நின்றாள் .
அவன் உறுமினான் .

“ நான் சொன்னது காதுல


விழலை . . . ? ” மதுக்குமாரை
விட்டு மெல்ல நகர்ந்தாள்
தர்மா . டி . வி . பெட்டியை
நோக்கிப் போனாள் .
துப்பாக்கி பேர்வழி மெல்ல
நடந்து வந்து -
மதுக்குமாரின் அருகே
நின்று அவன் நெற்றிப்
பொட்டில் துப்பாக்கியை
வைத்தான் .

“ இதோபார் . . . தர்மா . . .
இன்னும் உனக்கு அரை
நிமிஷம் - அதாவது , தர்ட்டி
செகண்ட்ஸ் தர்றேன் .
முப்பதாவது விநாடி கேஸட்
என் கையில
இருக்கணும் . . . அப்படி
இல்லேன்னா இந்த பிஸ்டல்
எனக்கு விசுவாசமா
வெடிச்சுடும் . . . ”

“ வேண்டாம் . . .
சுட்டுடாதே . . . ” தர்மா
பதற - அவன் சிரித்தான் .

“ ம் . . .
கேஸட்டை எடு . . . ”
தர்மா பரபரவென
செயல்பட்டாள் . ஓடிப்போய்
டெக்கின் பட்டனைத் தட்ட -
அது கேஸட்டை
வழுக்கலாய்த் துப்பியது .
எடுத்துக் கொண்டு வந்து
துப்பாக்கி பேர்வழியிடம்
நீட்டினாள் .

“ குட் . . .இருபது
செகண்ட்ல வேலையை
முடிச்சுட்டே . . . ” என்றவன்
கேஸட்டை வாங்கி தன்
நீளமான அங்கியின்
பைக்குள் போட்டுக்
கொண்டு புன்னகைத்தான் .

“ தர்மா ! நீயும் ஒரு


நாற்காலியை எடுத்துப்
போட்டுக்கிட்டு உட்கார் . . . ”
அவள் தயக்கமாய் போய்
உட்கார்ந்தாள் . துப்பாக்கிப்
பேர்வழி அறையின்
மூலைக்குப் போய் - அங்கே
கிடந்த நீளமான ஸ்கிரீன்
துணியை எடுத்து வந்து -
அவளை நாற்காலியோடு
சேர்த்துக் கட்டினான் .

“ நீ
எந்தப் பத்திரிகையில
வேலை பார்க்கிறே ? ”

“......”

“ நீ சொல்லலைன்னா
உன் னை தப்பான இடத்துல
தொட்டுப் பார்ப்பேன் .
உனக்கும் பிடிக்காது ,
மதுக்குமார்க்கும் கோபம்
வரும் . . . எப்படி வசதி . . . ?
சொல்றியா . . . ? இல்லே ,
நான் தொட்டுப்
பார்க்கட்டுமா . . . ? ”
சொல்லிக் கொண்டே
கையை கழுத்துக்கு கீழே
கொண்டு போனான் அவன் .
தலையை அப்படியும்
இப்படியுமாய் ஆட்டினாள்
தர்மா .

“ வே . . . வேண்டாம் . . .
சொ . . . சொல்றேன் . . . ”

“ சொல்லு . . . ”

“ தீப்பந்தம் . . . ”

“ மதுக்குமாரை நீ
காதலிக்கறியா ? ”

“ஆ... ஆமா . . . ”

“ கல்யாணம் பண்ணிக்கப்
போறே ? ”

“ஆ... ஆமா . . . ”

“ அப்படீன்னா அவனுக்கு
புத்திமதி சொல்லு . . . இந்த
துப்பறிகிற வேலையெல்லாம்
பார்க்கிறதுக்கு போலீஸ்
டிபார்ட்மெண்ட்ல தண்டச்
சம்பளம் குடுத்து ஆட்களை
வெச்சிருக்காங்க . அந்த
வேலையை அவங்களே
பார்க்கட்டும் . இவனைப்
பாக்க வேண்டாம்ன்னு
சொல்லு . . . ”

“ ம் . . . ம் . . . ம் . . . ”

“ டெலிபோன் எங்கே
இருக்கு . . . ? ”

“அ... அடுத்த ரூம்ல . . . ”

“ நான் போய் போன்ல


பேசிட்டு வர்ற வரைக்கும்
நீங்க ரெண்டு பேரும் இதே
மாதிரி
உட்கார்ந்திருக்கணும் . கட்டை
அவிழ்க்கறதுக்கோ , சத்தம்
போடவோ முயற்சி
பண்ணினா என்னோட
பிஸ்டலுக்குப் பிடிக்காது .
ரெண்டு பேர்ல யார் சத்தம்
போட்டாலும் சரி . . . சத்தம்
போட்டவங்களைச் சுட
மாட்டேன் . சத்தம் போடாமே
உட்கார்ந்திருக்கிறவங்களைத்
தான் சுடுவேன் . . . ”
மதுக்குமாரும் தர்மாவும்
மிரண்ட விழிகளோடு
பார்த்துக் கொள்ள , அவன்
அடுத்த அறையிலிருந்த
டெலிபோனை நோக்கிப்
போனான் . ரிஸீவரைத்
தொட்டு எடுத்து டயலில்
போலீஸ் எண்களைச்
சுழற்றினான் . மறுமுனையில்
ரிங் போய் யாரோ
எடுத்தார்கள் .

“ ஹலோ போலீஸ்
ஸ்டேஷன் ? ”

“ ஆமா . . . ”

“ விவேக் இருக்காரா ? ”

“ இருக்கார் . . . நீங்க யார்


பேசறது ? ”

“ அவரோட ப்ரெண்ட் . . . ”
மறுமுனை , சில
விநாடிகளுக்கு நிசப்தமாகிப்
பின் விவேக்கின் குரல்
கேட்டது .

“ ஹலோ . . . யார்
பேசறது . . . ? ”

“ விவேக் . . . !நான்
யார்ன்னு உங்களுக்குத்
தெரிய வேண்டிய அவசியம்
இல் லை . சொல்றதை
மட்டும் கேட்டுக்குங்க . நான்
இப்போ வீடியோ
காமிராமேன் மதுக்குமார்
வீட்டிலேயிருந்து
பேசிட்டிருக்கேன் . நீங்க
பார்க்க வேண்டிய
வேலையை எல்லாம் . . .
அவன் பார்த்திட்டிருந்தான் .
ரெண்டு தட்டுத் தட்டி
அவனையும் , அவனைக்
காதலிக்கிற தர்மாங்கற
பெண்  ணை யும் கட்டிப்
போட்டிருக்கேன் . தானா
அவங்களாலே கட்டை
அவிழ்த்துக்க முடியாது .
உங்களுக்கு அந்த
திருப்பணியைத் தரலாம்ன்னு
தான் ஃபோன்
பண்ணினேன் . கொஞ்சம்
சிரமம் பார்க்காமெ உங்க
துப்பறியற
வேலைகளையெல்லாம்
விட்டுட்டு . . . மதுக்குமார்
வீட்டுக்கு ஒரு நடை
வந்துட்டுப் போறீங்களா ?
ப்ளீஸ் . . . நீங்க
வரலைன்னா . . . ரெண்டு
பேரும் விடிய விடிய
நாற்காலியிலேயே கிடக்க
வேண்டியதுதான் .
வர்றீங்களா . . . ? ”

“ மதுக்குமார் வீடு
எங்கேயிருக்கு ? ” விவேக்
பரபரத்தான் .

“ அட்ரஸ் வேணுமா . . . ?
சொல்றேன் . . .
குறிச்சுக்குங்க . . . நம்பர்
ஏழு , சாஸ்திரி
அபார்ட்மெண்ட் ரோடு ,
மகாலிங்கபுரம் . சீக்கிரமா
வந்து கட்டை அவிழ்த்து
விடுங்க விவேக் . . . பாவம் ,
ரெண்டு பேரும்
திணறிட்டிருக்காங்க . . . ”
டொக்கென்று ரிஸீவரை
வைத்துவிட்டு
அறையினின்றும்
வெளிப்பட்டான் அவன் .
நாற்காலிகளில் அதே
நிலையில் உட்கார்ந்திருந்த
மதுக்குமாரும் , தர்மாவும்
அவனை முறைப்பாய்ப்
பார்த்தார்கள் .

“ இன்னும் ஒரு பத்து


நிமிஷத்துல விவேக்
வந்துடுவார் . . . அவர் வந்து
உங்க கட்டுகளை அவிழ்த்து
விடுவார் . அதுவரைக்கும்
கொஞ்சம் பொறுமையா
உட்கார்ந்திருங்க . . .
வரட்டுமா . . . ? ” அவன்
கையிலிருந்த ரிவால்வரை
நீளமான அங்கியின்
பைக்குள் போட்டுக்
கொண்டு - வீட்டின்
பின்பக்கத்தை நோக்கி ‘ தப்
தப் ’ என்று ஓடினான் .

8
போலீஸ் ஜீப் மதுக்குமாரின்
வீட்டு முன்பு நின்றபோது -
மணி ஒன்பது பத்து .
சாஸ்திரி அபார்ட்மெண்ட்
தெரு முழுவதும் இருட்டில்
இருந்தது . விவேக்கும் ,
கோகுல்நாத்தும் உள்ளே
நுழைந்தார்கள் . முன்னால்
போன இரண்டு
கான்ஸ்டபிள்களும் -
மதுக்குமாரையும் ,
தர்மாவையும்
கட்டுக்களினின்றும்
விடுவித்தார்கள் . விவேக்
ஒரு நாற்காலியை இழுத்துப்
போட்டுக் கொண்டு
மதுக்குமாரின் அருகே
உட்கார்ந்தான் .

“ வந்தவன் யாரு . . . ? ”

“ தெரியலை ஸார் . . .
மூஞ்சியைக் கர்ச்சீப்பாலே
கட்டி - நீளமா அங்கி
மாதிரி போட்டிருந்தான் .
தலையில தொப்பி . . . ”

“ எதுக்காக வந்திருந்தான் ? ”

“ மந்திரி நரஹரியோட விழா


சம்பந்தமான கேஸட்டை
டெக்குல போட்டு , அதுல
நான் பார்த்த - அந்தக்
கொலையாளியைத்
தேடிட்டிருந்தேன் ஸார் . . .
அப்பத்தான் அவன்
திடீர்ன்னு பீரோவுக்குப்
பின்னாடியிருந்து பிஸ்டலோட
வந்தான் . . . ”

“ அவன் உள்ளே இருந்ததை


எப்படி கவனிக்காம
விட்டீங்க . . . ? ”

“ பின்பக்க வழியா
வந்திருக்கான் ஸார் . . . ”

“ இப்போ . . . கேஸட்
எங்கே . . . ? வந்தவன்
எடுத்துக்கிட்டுப்
போயிட்டானா ? ”

“ ஆமா . . . ஸார் . . . ”

“ அந்தக் கேஸட்ல நீங்க


என்ன பார்த்தீங்க . . . ? ”

“ நான் சந்தேகப்பட்ட நபர்


அந்தக் கேஸட்ல இருந்தான்
ஸார் . . . மேடையேற
முயற்சி பண்ணிட்டிருந்தான் .
அதை மட்டும் அப்படியே . . .
ப்ரீஸ் பண்ணிப்
பார்த்திட்டிருந்தப்பதான்
அவன் வந்தான் . . . ”

“ கேஸட்ல நீங்க பார்த்த


ஆளும் , வீட்டுக்கு வந்து
மிரட்டின ஆளும் ஒரே
ஆள்தானா ? ”

“ அது தெரியலை ஸார் . . .


வந்தவன் மூஞ்சியை
மறைச்சிருந்தான் . தொப்பி
போட்டிருந்தான் .
உயரமாயிருந்தான் . . . ”

“ கேஸட்ல பார்த்தவன்
எப்படியிருந்தான் ? அவனை
இதுக்கு முன்னாடி நீங்க
பார்த்திருக்கீங்களா ? ”

“ இல்ல ஸார் . . . ”

“ தர்மா . . .நீங்க ? ”
திக்பிரமையடித்துப் போய்
உட்கார்ந்திருந்த தர்மா ,
கலங்கிய விழிகளோடு
மெல்லத் தலையை
உயர்த்தினாள் .

“ நானும் பார்த்ததில்லை
ஸார் . . . ”

“ வந்தவனோட குரலை
இதுக்கு முன்னாடி
எங்கேயாவது
கேட்டிருக்கீங்களா . . . ? ”

“ இல்ல ஸார் . . . ” விவேக்


எழுந்து பீரோவின் பக்கமாய்
வந்தான் .

“ இந்த பீரோவுக்குப்
பின்னாடிதான்
ஒளிஞ்சிட்டிருந்தானா அந்த
மிரட்டல் பேர்வழி ? ”
மதுக்குமார்
தலையாட்டினான் .

“ ஆமா . . . ”

“ நரஹரியோட பாராட்டு
விழாவை வீடியோ எடுக்கச்
சொன்னது யாரு ? ”

“ நரஹரியோட தம்பி
வேங்கடஹரி . . . ”

“ அந்த வீடியோ கேஸட்ல


வந்தவனை மறுபடியும்
நீங்க பார்த்தா
கண்டுபிடிச்சுடுவீங்களா ,
மதுக்குமார் . . . ? ”

“ கண்டிப்பா முடியும்
ஸார் . . . ”

“ அவன் எப்படியிருந்தான்னு
ஒரு ஸ்கெட்ச் பண்ணித்தர
முடியுமா ? ”

“ எனக்கு ஆர்ட் அவ்வளவா


வராது ஸார் . . . ”

“ உங்களாலே
முடிஞ்சவரைக்கும் வரைஞ்சு
குடுங்க போதும் . . .
மத்ததை போலீஸ்
டிபார்ட்மெண்ட்
பார்த்துக்கும் . . . ”

“ சரி ஸார் . . . ” விவேக்கும்


கோகுல்நாத்தும்
விடைபெற்றுக் கொண்டு
வெளியே வந்தார்கள் .
ஜீப்பில் பரவி
புறப்பட்டார்கள் .

“ என்ன விவேக் . . . கேஸ்ல


ஒண்ணும் பிடிபடலை . . .
மந்திரிக்கு வேண்டியவங்க
யாரோ இதுல
சம்பந்தப்பட்டிருக்காங்க . . . ”

“ வேங்கடஹரியைப் பத்தி
நீங்க என்ன நினைக்கறீங்க
கோகுல்நாத் . . . ? ” விவேக்
கேட்க - கோகுல்நாத்
சொன்னார் : “ அந்த ஆளோட
பேச்சும் , பார்வையும்
சரியில் 
லை விவேக் .
மந்திரி வீட்டிலேயும்
வெளியேயும் விசாரிச்ச
அளவுல வேங்கடஹரியைப்
பத்தி சுத்தமான ரிப்போர்ட்
இல் 
லை . ஆள் கரப்டட் . . .
அண்ணனுக்குத் தெரியாம
நிறைய லஞ்சம்
வாங்கியிருக்கார் . . . ”

“ வாட் அபௌட்
நிலாதாசன் ? ”

“ கட்சியில் செல்வாக்குள்ள
ஆசாமி . ஆனா , ஜனங்க
மத்தியில நல்ல ரிப்போர்ட்
கிடையாது . . . ”

“ இந்த நரஹரியைத்
தீர்த்துக் கட்டினது
நிலாதாசனோட வேலையாய்
இருக்குமோ . . .
கோகுல்நாத் . . . ? ”

“ அவரையும் நம்ம சந்தேக


லிஸ்ட்ல
சேர்த்திருக்கோம் . . . ”

“ நிலாதாசன் வீடு
எங்கேயிருக்கு ? ”

“ சிந்தாதிரிப்
பேட்டையில . . . ”

“ அட்ரஸ் உங்களுக்குத்
தெரியுமா ? ”

“ தெரியும் . . . ”

“ ஜீப்பை அங்கே
விடுங்க . . . ”

“ இந்த நேரத்திலா . . . ? ”

“ சினிமா நடிகைகளைப்
பகல்ல பார்த்துப்
பேசணும் . . .
அரசியல்வாதிகளை
ராத்திரியில பார்த்துப்
பேசணும் . . . அந்த
சமயத்துலதான் -
அவங்களைப் பத்தின
உண் மை யான பிக்சர்
கிடைக்கும் கோகுல்நாத் . . . ”
கோகுல்நாத் புன்னகைத்துக்
கொண்டே ஜீப்பை
விரட்டினார் . சிந்தாதிரிப்
பேட்டைக்குப் போகும்
பாதையில் ஜீப்பை திருப்பிக்
கொண்டே கேட்டார் : “ மேரேஜ்
லைஃப் எப்படியிருக்கு
விவேக் ? ”

“ ரூபலா ரொம்பவும்
சலிச்சுக்குறா . . . ”

“ இது ஒரு மினிஸ்டரோட


மர்டர் . . . இல்லேன்னா
உங்களைக் கூப்பிட்டிருக்க
மாட்டேன் விவேக் . . . ”
விவேக் சிரித்தான் .

“ நீங்க தப்பா
புரிஞ்சுக்கிட்டீங்க . . .
கோகுல்நாத் ! ரூபலா
என் னை வீட்டுக்கே
வரவேண்டாம்னு சொல்றா . . .
கேஸை முடிச்சு . . .
கொலையாளியைக்
கண்டுபுடிச்சுட்டு அப்புறமா
பெட்ரூம் பக்கம் வாங்கன்னு
சொல்றா . . . நான் கேஸைப்
பத்தி மறந்திருந்தாலும் அவ
ஞாபகப்படுத்தி ‘ அங்கே
போய் விசாரிச்சுப்
பாருங்களேன் . . . இங்கே
போய் கேட்டுப்
பாருங்களேன் ’ னு சொல்லி
சலிச்சுக்கறா . . . ”

“ போலீஸ்
டிபார்ட்மெண்ட்டுக்கு ஏத்த
பொண்ணு . . . ” கோகுல்நாத்
ஜீப்பின் வேகத்தைக்
குறைத்து - ஒரு தெருவில்
திருப்பி - அதன் கோடியில்
கொண்டு போய்
நிறுத்தினார் .

“ இதுதான் நிலாதாசனோட
பங்களா . . . எம் . எல் . ஏ .
ஆறதுக்கு முன்னாடி
அமிஞ்சிக்கரையில ஒரு
ஒண்டுக் குடித்தனத்துல
வாடகைக்கு இருந்தார் .
எப்படியோ அரசியலில்
நுழைஞ்சு - தேர்தலில்
நின்னு எம் . எல் . ஏ . வாகி
நிறைய சம்பாதிச்சு
இன்னிக்கு இந்த
பங்களாவில் இருக்கார் . . .
மெட்ராஸ்ல இருக்கிற பாதி
பெட்ரோல் பங்க் இவர்க்குச்
சொந்தம் . . . ” காம்பௌண்ட்
கேட்டைத் திறந்து கொண்டு
இருவரும் உள்ளே
நுழைந்தார்கள் .
வரவேற்பறையில் உட்கார்ந்து
தீவிரமாய்ப் பீடி பிடித்துக்
கொண்டிருந்த ஒருவன் -
கோகுல்நாத்தையும் ,
விவேக்கையும் பார்த்ததும் -
பீடியைக் காலுக்கு கீழே
போட்டுத் தேய்த்து விட்டு
அவர்களை நெருங்கினான் .

“ யார் ஸார் வேணும் ? ”

“ நிலாதாசன்
இருக்காரா . . . ? ”

“ அய்யா . . .
தூங்கிட்டிருக்காரே . . . ”
கோகுல்நாத்
சொன்னார் : “ இந்நேரத்துக்கே
வா . . . ? போய் எழுப்பிப்
பாருங்க . . . போலீஸிலிருந்து
வந்திருக்கிறதா
சொல்லுங்க . . . ”

“ வாங்க இன்ஸ்பெக்டர் . . . ”
குரல் கேட்டுத்
திரும்பினார்கள்
கோகுல்நாத்தும் ,
விவேக்கும் . உள் அறையின்
நிலைப்படியில் மேலே
போர்த்தப்பட்ட சால் 
வை யோடு
நிலாதாசன் நின்றிருந்தார் .
முகம் உப்பலாய் - கண்கள்
சிவப்படித்துப் போய்
தெரிந்தன . போர்த்தியிருந்த
சால் 
வை யையும் மீறிக்
கொண்டு தொப்பையின்
பரிமாணம் தெரிந்தது . பீடி
குடித்த பேர்வழியைப்
பார்த்து சத்தம் போட்டார் .

“ ஏண்டா ராஜப்பா . . . அந்த


காக்கா முழியனும் , தவிட்டு
வாயனும் வந்தாத்தான்
நான் தூங்கிட்டிருக்கிறதா
சொல்லச் சொன்னேன் . . .
இன்ஸ்பெக்டர் வந்திருக்கார் .
அதே பொய்யைச்
சொல்றியேடா . . . ! நீங்க
வாங்க இன்ஸ்பெக்டர் . . .
அந்த தம்பி பேர்தான்
விவேக்கா ? ” கேட்டுக்
கொண்டே உள்ளே கூட்டிப்
போனார் நிலாதாசன் .
விவேக் பார்வையைச்
சுழற்றிக் கொண்டே உள்ளே
போனான் . ஹாலுக்குள்
நுழைந்ததும்
நாற்காலிகளைக் காட்டினார்
நிலாதாசன் .

“ உட்கார்ங்க . . .
இன்ஸ்பெக்டர் . . . பொதுவா
ராத்திரி ஒன்பது மணிக்கு
மேலே நான் யாரையும்
பார்க்கிறது கிடையாது .
ம் . . . என்ன விஷயம்
சொல்லுங்க . . . ”

“ மினிஸ்டர் மர்டர்
சம்பந்தமா உங்களைப்
பார்க்க வந்திருக்கோம் . . . ”
என்றான் விவேக் .
நிலாதாசன் சிரித்தார் .
சிரித்தபோது அவர்
வாயிலிருந்து விஸ்கி
நாறியது .

“ என் 
னை ப் பார்த்து என்ன
பிரயோஜனம் ? நான்தான்
அவர்க்கு மலர் வளையம்
சாத்தி - அனுதாபக்
கூட்டத்திலேயும் அரை மணி
நேரம் பேசிட்டேனே . . . ”

“ அவருக்கும் உங்களுக்கும்
டெர்ம்ஸ் சரியில் 
லை ன்னு
சொல்றாங்களே ? ”

“ அரசியல்ல ஒருத்தனுக்கு
நிரந்தர எதிரியும்
கிடையாது . நிரந்தர
நண்பனும் கிடையாது .
நரஹரியும் நானும்
என்னிக்குமே
நண்பர்கள்தான் . . . எனக்கும்
அவருக்கும் வேண்டாதவங்க
யாரோ இந்தப் புரளியைக்
கிளப்பி விட்டிருக்காங்க . . .
நான் அவர்க்கு
வேண்டாதவனாயிருந்தா
அவர்க்கு நடந்த பாராட்டுக்
கூட்டத்துல நான்
பேசியிருப்பேனா ? ”

“ மந்திரி நரஹரிக்கு
இப்பேர்ப்பட்ட மரணம்
வரும்ன்னு
எதிர்பார்த்தீங்களா ? ”

“ நிச்சயமா இல் 
லை . . . ”

“ உங்களுக்கு மதுக்குமாரைத்
தெரியுமா மிஸ்டர்
நிலாதாசன் ? ”

“ யாரது ? ”

“ வீடியோ காமிராமேன் . . . ”

“ஓ... அந்த சுருட்டை


முடிப் பையனா . . . அவன்
பேரு மதுக்குமாரா . . . ?
எனக்குத் தெரியாது . விழா
அன்னிக்கு அவனைப்
பார்த்தேன் . ஏன் . . . அந்தப்
பையனைப் பத்தி என்ன ? ”

“ மதுக்குமார்கிட்டேயிருந்து
விழா பற்றின கேஸட்டை
யாரோ ஒருத்தன் மிரட்டி
வாங்கிட்டுப்
போயிருக்கான் . . . ”

“ அந்தக் கேஸட்ல
அப்படியென்ன
விசேஷம் . . . ? ”

“ கேஸட்ல கொலையாளி
இருந்திருக்கான் .
ஏற்கெனவே மதுக்குமார்
விழா மண்டபத்தில்
அவனை அடையாளம்
கண்டிருக்கார் . . . ”

“ சரி . . .
என்கிட்டேயிருந்து
உங்களுக்கு என்ன தகவல்
வேணும் . . . ? என் 
னை நீங்க
சந்தேகப்படறீங்களா . . . ? ”

“ நோ . . .
நோ . . . ”
- கோகுல்நாத் மறுக்க ,
நிலாதாசன் சிரித்தார் .

“ நீங்க தாராளமா என்மேலே


சந்தேகப்படலாம்
இன்ஸ்பெக்டர் . உங்களுக்கு
மட்டுமில் 
லை ; பலர்க்கும்
இந்த சந்தேகம் இருக்கு .
ஒருத்தன் செத்துத்தான் என்
தலையில கிரீடம்
ஏறணும்னு இல் லை  .
எனக்கு இருக்கிற மதிப்பும் ,
மரியாதையும் என்னிக்குமே
இருக்கு . . . நீங்க எம்மேல
சந்தேகப்படற பட்சத்துல . . .
இந்த பங்களா பூராவையும்
அலசிப் பார்க்கலாம் . நான்
இப்படியே
உட்கார்ந்திருக்கேன் . . . பீரோ
சாவிக் கொத்தும் , அலமாரி
சாவிக் கொத்தும் டீபாய்
மேலேயே இருக்கு . . .
எடுத்துக்குங்க . . . தாராளமா
சோதனை பண்ணிப்
பாருங்க . . . ” விவேக்
எழுந்தான் .

“ ஜஸ்ட் . . .இது ஒரு


என்கொய்ரிதான் . . . இந்த
விசாரணையோட நோக்கம்
உங்க மேல்
சந்தேகப்படுவது கிடையாது .
நீங்க சொல்ற தகவல்களை
வெச்சு . . . இந்தக் கேஸ்ல
மேற்கொண்டு முன்னேற
முடியுமான்னு பார்க்கத்தான்
வந்தோம் . . . தொந்தரவுக்கு
மன்னிக்கணும் . . . ”
புறப்பட்டார்கள் .
9
‘ ஜனார்த்தனா ஜவுளிக்
கடல் ’ - தங்க நிறமாய்
மின்னிய உலோக
எழுத்துக்கள் காலைச்
சூரியனின் கதிர்களால்
சூடாகிக் கொண்டிருக்க -
மேல்நோக்கி தூக்கி
விடப்பட்ட ஷட்டரின்
இரண்டு பக்கங்களிலும்
வாழை மரங்கள்
பசேலென்று தெரிந்தன .
இரண்டு வாழை
மரங்களையும் இணைத்த
மாதிரி கட்டப்பட்ட அந்த
மஞ்சள் நிற ரிப்பன் ,
காற்றில் ஆடிக்
கொண்டிருந்தது . மூன்று
போட்டோகிராபர்கள்
ஃபிலிமைத் தின்பதற்காகக்
காத்துக் கொண்டிருக்க -
பேண்ட் வாத்தியக்காரர்கள்
‘ புட்டா மில் கயா ’
வாசித்துக்
கொண்டிருந்தார்கள் .
கடைக்கு முன்னால் சின்னக்
கும்பல் . நடுவே ஒரு
போலீஸ் யூனிபார்ம் . தோல்
பையைக் கக்கத்தில்
இடுக்கிக் கொண்டு -
குறுக்கும் நெடுக்குமாய்ப்
போய்க் கொண்டிருந்த அந்த
நடுத்தர வயது நபர்
யாரையோ விரட்டிக்
கொண்டிருந்தார் .

“ ஃபோன் பண்ணிப்
பார்த்தியா ராமு ? ”

“ பார்த்தேன் ஸார் . . .
என்கேஜ்ட் டோனா
வருது . . . ”

“ நல்ல நேரம்
போயிட்டிருக்கு . . . பத்தரை
வந்துட்டா ராகுகாலம்
ஆரம்பமாயிடும் . . . ராகு
காலத்துல புதுக்கடையைத்
திறக்க முடியுமா . . . ? ”

“ நேர்ல போய்க்
கூப்பிட்டப்போ . . . பத்து
மணிக்கெல்லாம் சரியா
வந்துடறேன்னு சொன்னார்
ஸார் . . . எப்படியும்
வந்துருவார் . . . ” அந்த ஆள்
சொல்லிக் கொண்டிருக்கும்
போதே - பியட் கார் ஒன்று
வந்து ஓரமாய் நிற்க -
கக்கத்தில் இடுக்கிய
கைப்பைக்காரர்
வேகவேகமாய் கார் அருகே
ஓடினார் . காரின்
பின்சீட்டிலிருந்து பைனான்ஸ்
கார்ப்பரேஷன் டைரக்டர்
சூர்யப்பிரகாஷ் , மெலிதான
நீலம் ஓடிய சூட்டில்
இறங்கினார் .

“ வணக்கம் ஸார் . . . ”
உயரமாய் - சிகப்பாய் -
பின்னந்தலை
வழுக்கையோடு இருந்த
சூர்யப்பிரகாஷ் , இன்டிமேட்
செண்ட் வாசனையோடு
சிரித்தார் .

“ என்ன . . .
திறப்பாளர்
நிலாதாசன் வந்தாச்சா ? ”

“ இன்னும் வரலை ஸார் . . . ”

“ நேரம் பத்தாகப்
போகுதே . . . ! ”

“ அவர்க்காகத்தான்
காத்திட்டிருக்கோம் ஸார் . . . ”
சொல்லிக் கொண்டே
அவரை வழிநடத்திக்
கொண்டு போய் -
ரோட்டோரமாய்ப் போட்டிருந்த
சாமியானா வர்ண
மேடைக்கு மேல் ஏற்றி
நாற்காலியில் உட்கார
வைத்தார் . பாண்ட் கோஷ்டி
மும்முரமான வாசிப்பில்
இருந்தது . ரோட்டில்
போய்க்கொண்டிருந்த
வாகனங்கள் , ஒரு நிமிஷம்
நின்று - புதிய ஜவுளிக்
கடையின்
கோலாகலங்களைச்
சேகரித்துக் கொண்டு
போனது . பேச்சுக்
குரல்கள் .

“ திறப்பு
விழாவுக்கு யார்
ஸார் வர்றாங்க . . ? சினிமா
நடிகையா ? ”

“ ஊஹும் . . .
நிலாதாசன் . . . ”

“ அதான் கும்பல் கம்மியா


இருக்கு . . . ஒரு
அனுராதாவையோ , ஒரு
டிஸ்கோ சாந்தியையோ . . .
கூப்பிட்டிருந்தா . . . கும்பல்
இப்படியா இருக்கும் . . ? ”

“ மேடையில
உட்கார்ந்திருக்காரே அவர்
யாரு . . ? ”

“ வழுக்கைத் தலைக்காரரா ? ”

“ ஆமா . . . ”

“ அவர்தான் இந்தத் திறப்பு


விழாவுக்குத் தலைமை . . . ”
குரல் கோபமாய்ச்
சொன்னது .

“ யாரய்யா அந்த ஜவுளிக்


கடை ஓனர் . . ? விழாவுக்கு
கிழட்டுப் பசங்களா
பார்த்துக்
கூப்பிட்டிருக்கார் . . . ”
திடீரென்று கும்பலில் ஒரு
பரபரப்பு தொற்றியது .
யாரோ யார்க்கோ
சொன்னார்கள் : “ நிலாதாசன்
வந்துட்டார் . . . ”

“ அந்த மாலையைக்
கொண்டாங்க . . .
சீக்கிரம் . . . ” மாலையோடு
ஒருவர் ஓட - போட்டோ
கிராபர் தன் சோடாபுட்டிக்
கண்ணாடியோடு லொங்கு
லொங்கென்று அவர்க்குப்
பின்னால் ஓடினார் .
நிலாதாசன் தன் பொய்ப்பல்
சிரிப்போடு காரினின்றும்
இறங்கி - வாக்காளர்களைக்
கும்பிடுகிற மாதிரி
அனைவரையும் பார்த்துக்
கும்பிட்டார் . ஒரு பெரிய
ரோஜாப்பூ மாலை அவர்
கழுத்தில் - மெத்தென்று
விழுந்து கம்மென்று
மணத்தது . காமிராக்கள்
வெளிச்சங்களோடு
கண்ணடித்தன .

“ என்ன தலைவர்
வந்துட்டாரா . . ? ”

“ அவர் அப்பவே வந்துட்டார்


ஸார் . ”

“ நான்தான் லேட்டா . . ?
சி . எம் . மைப் பார்க்கப்
போயிருந்தேன் . . . அவர்தான்
என் 
னை க் கலக்காமே எந்த
அனௌன்ஸ்மென்  டை யும்
வெளியே விடமாட்டாரோ . . . ”
சூர்யபிரகாஷ் எழுந்து கை
குவித்தார் .

“ வணக்கம் . . . ”

“ வணக்கம் . . . நான்
கொஞ்சம் லேட் . . . ”

“ பரவாயில் 
லை . . . ! வாங்க
உட்கார்ங்க . . . ”

“ நீங்க உட்கார்ங்க . . . நான்


இப்படியே
உட்கார்ந்திருக்கேன் . . . ”

“ நோ . . . நோ . . . நீங்கதான்
சீஃப் கெஸ்ட் . . . ஓரத்துல
போய் ஏன்
உட்கார்ந்திருக்கீங்க . . . ? நடு
சேர்க்கு வாங்க . . . ”
சூர்யபிரகாஷின்
வற்புறுத்தலால் நிலாதாசன்
எழுந்து - நடுவில் இருந்த
நாற்காலிக்கு வர -
சூர்யபிரகாஷ் ஓரத்துக்கு
நகர்ந்த விநாடி - அந்தச்
சத்தம்
கேட்டது . ‘ ஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க் . . .
’ “ ஹக் . . . ” -
சூர்யபிரகாஷ் அப்படியே
குப்புற விழுந்தார் . ஒரு
தடவை புரண்டு மேடை
நாற்காலிகளுக்கு இடையே
மல்லாந்தார் . இடது பக்கக்
கழுத்தில் - அந்த நீலநிற
ஊசி பாய்ந்திருந்தது !
பாய்ந்த இடத்தில்
கருஞ்சிவப்பாய் ஒரு துளி
ரத்தம் முத்திட்டு நின்றது .
10
விவேக்கும் கோகுல்நாத்தும்
ஜனார்த்தனா ஜவுளிக்
கடலுக்கு வந்த போது -
ரோட்டில் போக்குவரத்து
உறைந்து போயிருந்தது .
கலவர முகங்களோடு
ஜனக்கூட்டம் ஸ்தம்பித்துப்
போயிருந்தது . நிலாதாசன்
கடையோரமாய்ப்
போடப்பட்டிருந்த
நாற்காலியில் முகத்தில்
இருட்டை வாங்கிக் கொண்டு
உட்கார்ந்திருந்தார் . விவேக்
மேடையேறி -
நாற்காலிகளுக்கு மத்தியில்
எசகு பிசகாய்
மல்லாந்திருந்த
சூர்யபிரகாஷ் அருகே
மண்டியிட்டு உட்கார்ந்தான் .
சூர்யபிரகாஷ் பாதி திறந்த
வாயிலும் பாதி செருகிய
கண்களிலும் உயிரை
விட்டிருந்தார் . அவருடைய
உதட்டின் மேல் ஒரு ஈ
விடாப் பிடியாய்
ஒட்டியிருந்தது . கழுத்தில்
பாய்த்திருந்த ஊசியை
இழுத்துப் பார்த்தான்
விவேக் . அது ஆழமாய்
புதைந்து போயிருந்தது .
சூர்யபிரகாஷை மெல்லப்
புரட்டினான் . கீழே
விழுந்ததில் நாற்காலியின்
நுனி தலையில் பட்டு -
ஒரு ரத்தப் பொத்தலை
உண்டாக்கியிருந்தது .

“ நரஹரிக்கு ஏற்பட்ட அதே


வகை மரணம் ” -
சொல்லிக் கொண்டே
எழுந்தான் விவேக் .
கண்கள் கவலைக்குப்
போயிருந்தன .

“ கோகுல்நாத் ”

“ என்ன விவேக் ? ”

“ ஜவுளிக்கடை ஓனர்
யாரு . . ? ” கோகுல்நாத்
திரும்பி யார் என்று
விசாரிக்கும் முன்
கக்கத்தில் பையை
இடுக்கிய அந்த மனிதர் ,
கலவரமாய் விவேக் அருகே
வந்தார் .

“ நான்தான் ஸார் . . . ”

“ உங்க பேரு . . . ? ”

“ ஜனார்த்தனன் . . . ”

“ இந்த ஜவுளிக்கடைத்
திறப்பு விழாவுக்கு ,
பைனான்ஸ் கார்ப்பரேஷன்
டைரக்டரை எதுக்காகக்
கூப்பிட்டீங்க . . ? ”

“ அவரோட உதவியாலத்தான்
எனக்கு லோன் கிடைச்சுது
ஸார் . . . ”

“ சரி . . .நிலாதாசனை
எதுக்காகக்
கூப்பிட்டீங்க . . . ? ”

“ அவர் எங்க ஊரைச்


சேர்ந்தவர் ஸார் . . . அவர்
சிபாரிசு பண்ணித்தான்
லோன் வாங்கிக்
கொடுத்தார் . . . ”

“ அவர் கழுத்துல ஊசி


பாய்ஞ்சுக் கீழே
விழறப்போ . . . மேடையில
யார் யார் இருந்தாங்கன்னு
சொல்ல முடியுமா . . ? ”

“ நிலாதாசனும் , பைனான்ஸ்
டைரக்டரும் மட்டுந்தான்
இருந்தாங்க . . . ஸார் . . .
நான் மேடை ஏறப்போன
சமயத்துலதான்
‘ ஷ்ஷஷ்க் ’ ன்னு அந்தச்
சத்தம் கேட்டது . சத்தம்
கேட்ட அதே விநாடி
சூர்யபிரகாஷ் சத்தமில்லாமே
குப்புற விழுந்தார் . . . ”

“ சத்தம் எந்தப் பக்கமிருந்து


வந்ததுன்னு சொல்ல
முடியுமா . . ? ”

“ மேடைக்கு இடது
பக்கத்திலிருந்து . . . ” விவேக்
திரும்பிப் பார்த்தான் .
நான்கு பக்கமும் எந்த
மறைப்பும் இல்லாத மேடை
அது . இடது பக்கமாய்ப்
பார்வையை ஓட்டினான்
விவேக் . ஜவுளிக் கடைக்குப்
பக்கத்தில் புதிதாய்க்
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்
அந்தக் கட்டிடம் தெரிந்தது .
சாரங்களோடும் , சாக்குப்
படுதாக்களோடும் சிமெண்ட்
தூசியில் நின்றிருந்தது .

“ அது யாரோட கட்டிடம் . . ? ”

“ சென்னிமலையிலிருந்து
வெங்கடாசலம்னு ஒருத்தர்
வந்து இதைக்
கட்டிட்டிருக்கார் . என்ன
காரணத்தாலோ ஒரு மாசமா
வேலை நடக்கலை . . . ”
அவர் சொல்லச் சொல்ல
- அந்த கட்டிடத்தை நோக்கி
நடந்தான் விவேக் .
கோகுல்நாத் பின்
தொடர்ந்தார் . சுற்றிலும்
பார்த்தீனிய செடிகள்
பசேலென்று தெரிய -
அதன் நடுவே கட்டிடம்
பாதி சிமெண்ட் பூச்சில்
நின்றிருந்தது . நட்டு
வைத்திருந்த தகர போர்டில்
“SITE FOR CHENNIAPPA
MEDICALS” என்ற
எழுத்துக்கள் பளிச்சென்ற
பெயிண்ட்டில் தெரிந்தது .

“ ஆட்கள் யாருமே இல் 


லை
போலிருக்கே . . ? ”
கோகுல்நாத் சுற்றும்
முற்றும் பார்த்தபடி
சொன்னார் . விவேக்
குனிந்து கீழே எதையோ
பார்த்துக் கொண்டிருந்தான் .

“ என்ன விவேக்
பார்க்கறீங்க ? ”

“ ஃபுட் பிரிண்ட்ஸ் . . . ”

“ கட்டிட வேலை நடக்கிற


இடத்துல ஃபுட் பிரிண்ட்ஸ்
இருக்கிறது
ஆச்சர்யமில் லை யே
விவேக் . . . ”

“ நோ . . . கோகுல்நாத் . . .
ஜவுளிக்கடை ஓனர்
ஜனார்த்தனன் கொஞ்ச
நேரத்துக்கு முன்னாடி என்ன
சொன்னார்ன்னு
கவனிச்சிங்களா . . . ? ”

“ என்ன சொன்னார் . . . ? ”

“ ஒரு மாசமா கட்டிட


வேலையே நடக்கலைன்னு
சொன்னார் . ஆனா . . .
இங்கே யாரோ
வந்திருக்காங்க . . . ஷூ
பிரிண்ட்ஸ் ரொம்பவும்
க்ளீயரா இருக்கு கோகுல்
சார் . . . பாரன்ஸிக்
எமினென்ட்ஸை
வரவழைச்சுப்
பார்க்கணும் . . . ” -
சொல்லிக் கொண்டே
விவேக் அந்த பூட்ஸ்
தடத்தை அடியொற்றி
நடந்தான் . சிமெண்ட்
பூச்சில்லாத செங்கல்
படிகளின் மேல் நடந்து
கம்பிகள் நீட்டிக்
கொண்டிருந்த மாடிகளை
நெருங்கினான் . மாடிப்
படிகளில் பரவியிருந்த
சிமெண்ட் பரப்பில் அந்த
பூட்ஸ் தடயங்கள்
தெளிவாய்த் தெரிந்தன .
விவேக் தொடர்ந்தான் .

“ கோகுல்நாத் . . .இந்த
பூட்ஸ் தடம் கொஞ்ச
நேரத்துக்கு முன்னாடி தான்
பதிஞ்சிருக்கணும் . . . பூட்ஸ்
தடங்கள் மேல் நோக்கியும்
கீழ்நோக்கியும்
பதிஞ்சிருக்கறதனாலே -
இந்த கட்டிடத்துக்கு
வந்தவன் - வந்த காரியம்
முடிஞ்சதும் கீழே இறங்கிப்
போயிருக்கணும் . . . ”
வளைசலாய்ப் போன
சிமெண்ட் படிகளில் நடந்து
- மூங்கில் கம்புகள்
அடுக்கியிருந்த அந்த மேல்
பகுதிக்குப் போனார்கள் .
பூட்ஸ் தடம் அத்தோடு
நின்று போயிருந்தது . அந்த
இடத்திலிருந்து -
ஜவுளிக்கடை திறப்பு
விழாவுக்காகப்
போடப்பட்டிருந்த மேடை ,
டி . வி . திரையில் தெரிகிற
மாதிரி கண்ணில் பட -
விவேக் சொன்னான் .

“ வந்தவன் . . .பதினஞ்சு
நிமிஷமாவது இங்கே வந்து
காத்திருக்கணும் . ”

“ எப்படிச் சொல்றீங்க
விவேக் . . ? ”

“ கொட்டியிருக்கிற சிகரெட்
சாம்பல் சொல்லுது . . . ”

“ ஒருவிஷயம்
கவனிச்சீங்களா விவேக் ? ”

“ என்ன ? ”

“ என்னதான் கட்டிட்டிருக்கிற
கட்டிடமானாலும் ஒரு
வாட்ச்மேனாவது இருப்பான் .
இந்தக் கட்டிடத்துக்கு ஒரு
வாட்ச்மேன் கூட
இல் லை
 ...”

“ இந்தக் கால் தடங்களைப்


பிரசர்வ் பண்ணணும் . . .
கோகுல்நாத் . . . பாரன்ஸிக்
ஆட்கள்
வந்திருக்காங்களா . . . ? ”

“ இனிமேத்தான் தகவல்
அனுப்பணும் . . . ”

“ சீக்கிரம் அனுப்பி
ஆட்களை வரச்
சொல்லுங்க . . . ரெண்டு
காப்ஸை இந்தக்
கட்டிடத்துக்குக் காவல்
போடுங்க . . . ” விவேக் கீழே
இறங்கிவந்தான் .
ஜவுளிக்கடைக்கு முன்னால்
இப்போது கும்பல்
அதிகமாகியிருந்தது .
போலீஸார் விரட்டிக்
கொண்டிருந்தார்கள் .
கோகுல்நாத்
கான்ஸ்டபிள்களைக்
கூப்பிட்டு ஏதோ சொல்லிக்
கொண்டிருக்க - விவேக் ,
உட்கார்ந்திருந்த
நிலாதாசனிடம் போனான் .
மோவாயைத் தாங்கின
நிலாதாசன் நிமிர்ந்து
பார்த்துவிட்டு “ வாங்க
தம்பி . . ! ” என்றார் . விவேக்
எதிரேயிருந்த நாற்காலியில்
நிரம்பினான் .

“ என்ன தம்பி . . .
ஜவுளிக்கடைக்கு வந்து
துணிமணி எடுத்துட்டுப்
போற மாதிரி இவ்வளவு
சுலபமா ஒருத்தன் வந்து
கொலையைப் பண்ணிட்டுப்
போயிருக்கான் . . . போலீஸ்
துறை என்ன பண்ணப்
போகுது . . . ? ”

“ ஆளைப் பிடிச்சுடலாம்
ஸார் . . . ”

“ எப்போ . . ?
அந்தப் பேர்வழி
அரசாங்கத்துல இருக்கிற
எல்லா முக்கியமான
அதிகாரிகளையும் கொலை
செஞ்சப் பிறகா . . ? நான்
சொல்றேன்னு தப்பா
நினைச்சுக்காதீங்க தம்பி . . .
முன்னே மாதிரி போலீஸ்
இல் லை . . . நான் ஆளும்
கட்சியைச்
சேர்ந்தவன்தான் . . .
இருந்தாலும் சொல்றேன் .
அந்தப் பழைய திறமை
டிபார்ட்மெண்ட்ல இல் லை  ...
எவனோ ஒருத்தனுக்கு
இப்போ இருக்கிற
அரசாங்கத்து மேலே
சரியான கோபம்
போலிருக்கு . . .
மந்திரிகளையும் முக்கியமான
அதிகாரிகளையும்
வேட்டையாட
ஆரம்பிச்சுட்டான் . . . இதே
ரீதியில அவன்
கொலைகளைப் பண்ணிட்டுப்
போனா . . . சீக்கிரமா
அவனுக்கு ஒரு விழா
எடுத்துக் ‘ கொலை
வள்ளல் ’ என்கிற
பட்டத்தைத்தான் தரணும் . . . ”
விவேக் புன்னகையோடு
அவரிடம்
சொன்னான் : “ அவன் அந்தப்
பட்டத்தை வாங்க முடியாது
ஸார் . . . இதுதான் அவன்
பண்ற கடைசிக் கொலை . . .
மூணாவது கொலைக்குப்
போறதுக்கு முன்னாடியே -
அவனை மடக்கிடுவோம் . . . ”
விவேக் சொல்லிக்
கொண்டிருக்கும் போதே -
அந்த ஜவுளிக்கடை ஓனர்
வேக வேகமாய் அவனை
நோக்கி வந்தார் .

“ ஸார் . . . நீங்கதானே
மிஸ்டர் விவேக் ? ”

“ எஸ் . . . ”

“ உங்களுக்குப் போன் . . . ”

“ யார் பேசறாங்க . . . ? ”

“ தெரியலை ஸார் . . . ”

“ பேசறது . ஆணா ,
பெண்ணா ? ”

“ ஆண் . . . ”
விவேக் எழுந்து
கடையை நோக்கிப்
போனான் . ஆப்பிள் நிற
புது டெலிபோன்
பளபளப்பாய்க் காத்திருக்க
- ரிஸீவரை எடுத்தான் .

“ ஹலோ . . . ! ”

“ விவேக்கா ? ”

“ எஸ் . . . ”

“ எப்படிநம்ம ரெண்டாவது
திருப்பணி ? ”

“ யார் நீ . . . ? ”

“ என் பேரு . . . அடுத்த


மாச கவர்மெண்ட் கெஜட்ல
வரும் . . . பார்த்துக்கோ . . . ”

“ இந்தக்
கொலைகளினாலே
உனக்கென்ன லாபம் ? ”

“ ஆத்ம திருப்தி கிடைக்குதே


விவேக் . . . என்னாலான
ஒரு சமூகத் தொண்டு . . .
ரிஸீவரை வெச்சுடட்டுமா . . .
மாட்னி ஷோவுக்கு
நேரமாச்சு . . . ” ரிஸீவர்
‘ த்தட் ’ என்று வைக்கப்பட
- விவேக் கையிலிருந்த
ரிஸீவரைக் கோபமாய்ப்
பார்த்தான் . மனதுக்குள்
எரிச்சல் ; பிரளயம் .
11
காலிங்பெல் கதறும் சத்தம்
கேட்டு - கண் விழித்த
மதுக்குமார் , சட்டென்று
எழுந்து லுங்கியை
இறுக்கிக் கட்டிக்
கொண்டபடி கதவை
நோக்கிப் போனான் .
குமிழைத் திருப்பிக்
கதவைத் திறந்தான் .
வெளியே - தர்மா .
தோளில் தொங்கப் போட்ட
டம்பப் பையோடு
நின்றிருந்தாள் .

“ வா . . . தர்மா . . . ”
சிரித்தான் .

“ என்ன அய்யாவுக்கு
இவ்வளவு தூக்கம் . . ? மணி
எவ்வளவு தெரியுமா ? ”

“ ஒன்பது இருக்குமா ? ”

“ ஒன்பதுமணி . . . இனிமே
நாளைக்குத்தான் வரும் . . .
இப்ப மணி
பதினொன்று . . . அடிக்கிற
வெய்யிலை வெளியே வந்து
பாருங்க . . . ”

“ பதினொண்ணா ? ! ”

“ ம் . . .
ஆமா . . . ராத்திரி
எங்கே போயிருந்தீங்க . . ?
ரெண்டு கண்  ணை யும்
பார்த்தா . . . ராத்திரி
பூராவும் தூங்காம
முழிச்சிருப்பீங்க
போலிருக்கே . . ? ”

“ ஆழ்வார்பேட்டையில ஒரு
மேரேஜ் பங்க்ஷன் . . .
ஏதேதோ சடங்கு . . . ராத்திரி
பூராவும் வீடியோ கவரேஜ்
இருந்தது . . . காலையில
ஆறு மணிக்குத்தான்
மண்டபத்தை விட்டே
வெளியே வந்தேன் . . .
வீட்டுக்கு வந்து
படுத்ததுதான் தெரியும் . . .
இப்ப நீ வந்து
எழுப்பிட்டே . . . ”

“ நான் இப்பக் கூட


உங்களைப் பார்க்க
வந்திருக்கமாட்டேன் . . .
வெளியே ஒரு ஹாட்
நியூஸ் பரபரன்னு
இருக்கு . . . ”

“ ஹாட் ந்யூஸா . . . ? ” முகம்


மாறினான் மதுக்குமார் .
உள்ளே வந்தாள் தர்மா .

“ ஆமா . . . மந்திரி நரஹரி


மாதிரியே . . . பைனான்ஸ்
கார்ப்பரேஷன் டைரக்டர்
ஒருத்தர் இன்னிக்குப்
பலி . . . ”

“ எங்கே . . ? ”

“ ஒரு ஜவுளிக்கடைத் திறப்பு


விழாவில் . . . ”

“ அதே மாதிரின்னா . . .
எப்படி . . ? ”

“ விஷ ஊசியை யாரோ . . .


பிஸ்டல்ல வெச்சு இஞ்செக்ட்
பண்ணியிருக்காங்க .
நரஹரியோட கழுத்துல
பாய்ஞ்ச மாதிரியே . . .
இவர் கழுத்திலேயும்
பாய்ஞ்சிடுச்சு . . . ”

“ கொலையாளி
அகப்பட்டானா ? ”

“ஊ... ஹு . . . ம் . ”

“ எதுக்காக . . .
அவன்
முக்கியமான ஆட்களா
பார்த்துக் கொலை
பண்ணிட்டு வர்றான் . . ? ”

“ சமூகத் தொண்டுன்னு
சொல்றான் . . . ”

“ போலீஸ் என்ன
நடவடிக்கை
எடுத்திருக்காங்க . . . ? ”

“ அவங்களுக்கு எதுவுமே
பிடிபடலையாம் . . . க்ரைம்
பிராஞ்ச் விவேக் ரொம்பவும்
திணறிட்டிருக்கார் . . . ”
கட்டிலில் போய்
உட்கார்ந்தான் மதுக்குமார் .

“ இந்தக் கொலைகளைப்
பத்தி நீ என்ன
நினைக்கிறே தர்மா . . ? ”

“ அரசியல் . . . ”

“ அரசியலா . . ? ”

“ எங்க பத்திரிகையான
‘ தீப்பந்தம் ’ தன்னோட
தலையங்கத்துல
அப்படித்தான் சொல்லுது .
எதிர்க்கட்சி வரிசையில
இருக்கிற யாரோ . . . இப்படி
ஆக்ரோஷமா
செயல்படறாங்க . . . ”

“ நான் அப்படி நினைக்கலை


தர்மா . ”

“ பின்னே ? ”

“ நிலாதாசனை நான்
சந்தேகப்படறேன் . . . ”

“ அவர்க்கு . . . என்ன
மோட்டிவ் ? ”

“ பதவி கிடைக்காத
ஆத்திரம் . . . தேர்தல்ல
தோத்துப் போன ஆவேசம் .
ரெண்டும் ஒண்ணா சேர்ந்தா
ஒரு மனுஷனை என்ன
வேணும்ன்னாலும்
பண்ணுவான் . . . ”

“ யூ . . . ஆர் ராங் மது . . .


நான் நிலாதாசனை நிறைய
தடவை எங்க
பத்திரிகைக்காகப் பேட்டி
எடுத்திருக்கேன் . . . அவர்
எனக்குக் கொடுத்த பேட்டி
வாசகங்களிலிருந்து . . .
அவர் அப்படிப் பட்டவரா . . .
எனக்குத் தெரியலை . . .
அவர் இன்னிக்குப்
பதவியில் இல்லாவிட்டாலும்
- நிறைய
சம்பாதிச்சுட்டார் . . . முன்
அறிவிப்பு இல்லாமெ அவர்
எந்த மந்திரியையும் போய்ப்
பார்க்கக் கூடிய அதிகாரம்
இருக்கு . . . ஸோ . . .
நிச்சயமா அவர் இந்தக்
கொலைகளோட
பின்னணியில் இல்  லை ன்னு
தீர்மானமா சொல்லலாம் . . . ”

“ சரி . . . சரி . . . உனக்கும்


எனக்கும் அந்தக்
கவலையெல்லாம் எதுக்கு
தர்மா . . . ? உங்க அப்பா
அம்மாவுக்கு லெட்டர்
எழுதிப் போட்டியே . . . பதில்
வந்ததா . . . ? ”

“ நம்ப காதல்
விவகாரத்தைப்
பத்திதானே . . . ? ”

“ ஆமா . . . ”

“ இன்னும் பதில்
வரலை . . . ”

“ என்ன பதில் வரும்ன்னு


நீ நினைக்கிறே . . ? ”

“ அம்மா நெகடிவ் . . . அப்பா


பாஸிடிவ் . . . ”

“ அப்போ . . .நம்ம காதல்


பல்பு எரிஞ்சுடும் . . . ”
மதுக்குமார் சொல்ல தர்மா
சிரித்த அதே நேரம் -
டெலிபோன் பக்கத்து
அறையிலிருந்து கூப்பிட்டது .
அருகேயிருந்த தர்மா நடந்து
போய் - ரிஸீவரை
எடுத்தாள் . ‘ ஹலோ . . . ’
சொல்லி மறுமுனையின்
பேச்சை செவிமடுத்தவள் ,
ரிஸீவரை மதுக்குமாரிடம்
நீட்டினாள் .

“ மது . . .
யாரோ மேரேஜ்
பார்ட்டி போலிருக்கு .
உங்ககிட்டே பேசணுமாம் . . . ”
ரிஸீவரை வாங்கிக்
காதுக்குக் கொடுத்தான் .

“ ஹலோ . . . ! ”

“ வீடியோ காமிராமேன்
மதுக்குமாரா . . ? ”

“ ஆமா . . . ”

“ ஸார் . . . என்னோட பேர்


குமரவேல் . திண்டுக்கல்
என் . ஜி . ஓ .
காலனியிலிருந்து
பேசிட்டிருக்கேன் . . . அடுத்த
வாரம் மெட்ராஸ்ல
ஆபட்ஸ்பரியில என்னோட
ப்ரெண்ட் ஒருத்தனுக்கு
மேரேஜ் . வீடியோ கவரேஜ்
பண்றதுக்காக வேறொரு
இடத்துல
சொல்லியிருந்தோம் . . . அவர்
வீட்ல திடீர்ன்னு ஒரு துக்க
காரியம் ஆயிடுச்சு .
அவர்தான் உங்க அட்ரஸைக்
கொடுத்தார் . . . நீங்க
வீடியோ கவரேஜ்
பண்ணுவீங்களா . . ? ”

“ மேரேஜ் எப்போ ? ”

“ அடுத்த வாரம்
புதன்கிழமை . . . ”

“ ஃபங்க்ஷன்பூராவையும்
கவர் பண்ணணுமா . . ? ”

“ ஆமா . . .
என்ன சார்ஜ்
பண்ணுவீங்க . . ? ”

“ நீங்க நேர்ல வாங்க


பேசிக்குவோம் . . . ”

“ ரெண்டு நாள்ல அங்கே


வர்றேன் ஸார் . . .
கல்யாணம் பெரிய வீட்டுக்
கல்யாணம் . மந்திரிங்களும் ,
சினிமா நடிகர்
நடிகைங்களும்
வருவாங்க . . . கவரேஜ்
நல்லாயிருக்கணும் ஸார் . . . ”

“ பிரமாதமா
பண்ணிடலாம் . . . உங்க
பேர் என்ன சொன்னீங்க ? ”

“ குமரவேல் . ”

“ வாங்க ; நேர்ல
பேசுவோம் . . . ” ரிஸீவரைக்
கவிழ்த்துவிட்டுப்
புன்னகையோடு நிமிர்ந்தான்
மதுக்குமார் .

“ தர்மா நீ வந்த நேரம்


ஒரு பெரிய
பார்ட்டிகிட்டயிருந்து வீடியோ
கவரேஜ் அழைப்பு
வந்திருக்கு . . . ஐ மஸ்ட்
தேங்க் யூ . . . ” தர்மா
சிரித்தாள் .

“ மொதல்ல போய்க்
குளிச்சுட்டு வாங்க . . . ஒரு
நல்ல ஹோட்டலுக்குப் போய்
காபி சாப்பிடுவோம் . . . ”
டவலை எடுத்துத் தோளில்
போட்டபடி - பாத்ரூமுக்குள்
நுழைந்தான் மதுக்குமார் .
நிலாதாசனின்
12 பிரத்யேக
அறை .

“ இஸ்மாயில் . . . ”

“ ஸார் . . . ”
என்று பவ்யம்
காட்டிய இஸ்மாயிலுக்கு
முப்பது வயதிருக்கலாம் .
காப்பிப் பொடியும்
கரித்தூளும் கலந்து விட்ட
மாதிரியான நிறம் .
இருக்கிற கண்களில்
உறைந்த மாதிரியான
சிவப்பு . ரேஷர் உழுது பல
நாட்களான முகம் . புடைத்த
மாதிரியான மூக்கின் மேல்
ஒரு அசிங்கான மரு
அதிகப் பிரசங்கித் தனமாய்
உட்கார்ந்திருந்தது .

“ கதவு , மூடியிருக்கா . . ? ”

“ மூடியிருக்கு ஸார் . . . ”
நிலாதாசன் விஸ்கி ஏப்பம்
ஒன் 
றை விட்டு விட்டு -
மெல்லிய குரலில் கேட்டார் :
“ அன்னிக்கு அந்த
மதுக்குமார்கிட்டேயிருந்து -
நரஹரி ஃபங்ஷன் வீடியோ
கவரேஜ் கேஸட் தட்டிட்டு
வந்தியே . . . டெக்குல
போட்டுப் பார்த்தியா . . ? ”

“ ஏழெட்டு தடவை போட்டுப்


பார்த்துட்டேன் ஸார் . . . ”

“ கேஸட் என்ன
சொல்லுது . . ? நம்ம ஆள்
நாகராஜ் காமிராவுக்குள்
சிக்கி இருக்கானா ? ”

“ ரெண்டு இடத்துல
சிக்கியிருக்கான் ஸார் . . .
மேடை ஏறப் போறப்ப
யாரோ தடுத்து நிறுத்தற
சமயம் காமிரா அவனை
நல்லாவே காட்டியிருக்கு . . . ”
“ கேஸட்டை என்ன
பண்ணினே ? ”

“ அப்பவே நெருப்புக்குக்
குடுத்தாச்சு ஸார் . ”

“ அன்னிக்கு . . . அந்த
மதுக்குமாருக்கு உன் னை

அடையாளம்
தெரிஞ்சிருக்காதே . . ? ”

“ நிச்சயமா . . .
தெரிஞ்சிருக்காது ஸார் .
நான் போட்டிருந்த
ட்ரஸ்ஸும் , மூஞ்சிக்குக்
கட்டியிருந்த கர்சீப்பும்
என் 
னை க் கண்டிப்பா
அடையாளம்
காட்டியிருக்காது . . . ” ஐஸ்
க்யூப் நீச்சலடித்த விஸ்கி
டம்ளரை எடுத்து ஒரு வாய்
சப்பிய நிலாதாசன் -
இடது கையால் பின்னந்
தலையைத் தடவிக்
கொண்டே
கேட்டார் : “ ஆச்சரியமாயில் 
லை
இஸ்மாயில் ? ”

“ என்ன ஸார் ? ”

“ நரஹரியைத் தீர்த்துக்
கட்டறதுக்காக . . . நம்ம
ஆள் நாகராஜை அனுப்பி
வெச்சோம் . . . ஆனா ,
நாகராஜ் முடிக்க வேண்டிய
காரியத்தை வேற எவனோ
பண்ணியிருக்கான் . . அதே
மாதிரி சூர்யபிரகாஷையும்
தீர்த்திருக்கான் . யாரவன் ? ”

“ என்னோட சந்தேகம்
பூராவும் நரஹரியோட தம்பி
வேங்கடஹரி மேல் தான்
ஸார் . . . அண்ணனோட
சொத்துக்கு ஆசைப்பட்டு
அவர்தான் ஆளை விட்டுத்
தீர்த்திருக்கணும் . . . ”
நிலாதாசன் சிரித்தார் .

“ வேங்கடஹரியைப் பத்தி
எனக்குத் தெரியும் . . .
இஸ்மாயில் . . ! அவன் ஒரு
கோழை . கொலை பண்ற
அளவுக்கெல்லாம்
அவனுக்குத் தைரியம்
கிடையாது . வேற எவனோ
நம்ம கட்சிக்குள்ளே
இருந்துகிட்டே இந்த
வேலையைப்
பண்ணியிருக்கான் . . .
நரஹரியைத் தீர்த்து
கட்டினது நம்மைப்
பொறுத்தவரைக்கும் சரி . . .
சூர்யபிரகாஷ் என்ன தப்பு
பண்ணினார் . . ? அவரை
எதுக்காகக் கொன்னான் . . ?
கொலை செய்யறதை
சமூகத் தொண்டுன்னு
போலீஸ்ல சொல்றானாம் . . . ”

“ கொலைகாரனைப் போலீஸ்
அமுக்கிறவரைக்கும் நம்ம
நாகராஜை வெளியே
விடாமே பார்த்துக்கணும்
ஸார் . அந்த மதுக்குமார்
பார்த்துட்டான்னா
போலீஸுக்குத் தள்ளிட்டுப்
போயிடுவான் . . . ”

“ சமயம் கிடைக்கிறப்போ . . .
அந்த மதுக்குமாரை
இருட்டுல வெச்சு . . .
அடையாளம் தெரியாதபடிக்கு
நாலு தட்டுத் தட்டி
வையிடா இஸ்மாயில் . . . ”

“ தட்டிடறேன் ஸார் . . . ”

13
விவேக் குழப்பத்தில்
இருந்தான் . எதிரேயிருந்த
டி . வி . திரை - செய்தி
வாசிக்கும் பெண் ணை

ரோஸ்நிற புடவை - ரோஸ்
நிற பிளவுஸ் , ரோஸ் நிற
பாசிமணி , ரோஸ்நிற
ஸ்டிக்கர் பொட்டோடு காட்ட
- அவளை அவன்
அசுவாரஸ்யமாய்ப்
பார்த்தான் . ரூபலா டீ
கோப்பையோடு வந்தாள் .

“ இந்தாங்க . . . நீங்க கேட்ட


மசாலா டீ . . . ” விவேக்
ஏறிட்டான் .

“ ரூபி . . . ”

“ ம் . . . ”

“ அந்த டீயை அப்படி


வெச்சுட்டு உட்கார் . . . ”
உட்கார்ந்தாள் .

“ ஏதாவது அறுவை ஜோக்


அடிச்சா எழுந்து
போயிடுவேன் . . . ”

“ மாட்டேன் ; உட்கார் . . . ”

“ என்ன விஷயம்
சொல்லுங்க . . . ”

“ இந்த விஷஊசிக் கேஸைப்


பத்தி நீ என்ன
நினைக்கிறே ? ”

“ இந்த அரசாங்கத்தாலே
ஏமாற்றப்பட்ட ஒரு பேர்வழி
தன்னோட ஆத்திரத்தைத்
தணிச்சுக்கிறதுக்காக -
தனக்கு
வேண்டாதவங்களைத்
தீர்த்துட்டு வர்றான் . . . ”

“ எல்லாரும் சொல்றமாதிரியே
நீயும் சொல்றே . . . ரூபி ,
வித்தியாசமா நினைச்சுப்
பாரேன் . . . ”

“ வேற எப்படியும் எனக்கு


நினைக்கத் தோணலை . . .
கொலை பண்ணின
பேர்வழிதான் ஒவ்வொரு
கொலையைப் பண்ணின
பின்னாடியும் ஏன்
பண்ணினேன்னு
பொழிப்புரை தர்றானே . . . ”

“ அதை நம்பற மாதிரி


அவன் சொல்லலை . . .
அந்த டெலிபோன் குரல்ல
ஒரு போலித்தனம்
தெரியுது . . . வேணும்ன்னே
குரலை யாரோ அழுத்திப்
பேசற மாதிரி தெரியுது . . . ”

“ சரி டீ ஆறிப்போற மாதிரி


தெரியுது . . . மொதல்ல
குடிங்க . . . ” ரூபலா டீ
கப்பை எடுத்து நீட்டினாள் .
அதை வாங்கி உதட்டுக்குக்
கொடுத்த விவேக்கின்
பார்வை டி . வி . யின் மேல்
படிந்தது . செய்தி வாசித்துக்
கொண்டிருந்த பெண்
எந்திரத்தனமாய் -
முகத்தில்
உணர்ச்சியில்லாமல்
சொல்லிக்
கொண்டிருந்தாள் . ‘ டுனீஷியா
ஜனாதிபதி ப்ராட்மெனை
ஒரு புரட்சிக்காரன் சுட
முயன்றதில் குண்டு தவறிப்
பாய்ந்து அருகிலிருந்த
பாதுகாப்பு வீரர் மரணம் .
ஜனாதிபதி ப்ராட்மெனை
சுடமுயன்ற சம்பவம்
இரண்டாவது சம்பவமாகும் .
முதல் சம்பவம் போனமாதம்
ப்ராட்மென் ஏர்போர்ட்டில்
நடந்து வந்த போது -
பிரயாணி ஒருவர் மீது
குண்டு பாய்ந்து அவர்
காயமடைந்தார் . . . ’ பாதி
குடித்துக் கொண்டிருந்த டீ
கோப்பையை டக்கென்று
கீழே வைத்தான் விவேக் .
ரூபலாவை விருட்டென்று
திரும்பிப் பார்த்தான் .
ரூபலா ஆச்சர்யமானாள் .

“ என்னாச்சு உங்களுக்கு ? ”

“ ரூபி . . . அந்த ந்யூஸைக்


கேட்டியா . . ? ” பரபரத்தான்
விவேக் .

“ ம் . . .கேட்டேன் . . .
ஜனாதிபதி ப்ராட்மெனை
யாரோ சுட முயற்சி
பண்ணி ரெண்டு தடவை
தப்பிச்சுட்டாராம் . . . ”

“ தேர் யூ . . . ஆர் . . . ”

“ என்ன திடீர் சந்தோஷம் ? ”

“ ரூபி . . .
அந்த டுனீஷியா
ஜனாதிபதி நியூஸை -
நம்ம கேஸுக்குக் கொண்டு
வந்து அப்ளை பண்ணு . . . ”

“ எப்படி . . ? ”

“ நம்ம
கேஸ்ல மந்திரி
நரஹரி செத்திருக்கார் . . . ”

“ ஆமா . . . ”

“ ஆனா , கொலையாளியோட
குறி அவரில்  லை . . . வேற
யாருக்கோ வெச்ச குறி
எதிர்பாராத விதமா மந்திரி
நரஹரி மேலே
பாய்ஞ்சுடுச்சு . . . அதே
மாதிரிதான் ஜவுளிக்கடை
திறப்பு விழாவிலேயும்
யாருக்கோ வெச்ச குறி
சூர்ய பிரகாஷைப் பலி
வாங்கியிருக்கு . . . ”

“ குழப்பறீங்க . . . ”

“ நான்குழப்பலை ரூபி . . .
நல்லா யோசிச்சுப் பாரு . . . ”
“ வேற யாருக்கோ வெச்சக்
குறின்னு சொல்றீங்களே . . .
அவர் யாரு . . ? ”

“ என்னோட யூகப்படி
நிலாதாசன் . . . ” ரூபலா
நெற்றியில் வியந்தாள் .

“ நிலாதாசன் ? எப்படி
சொல்றீங்க . . ? ”

“ ரெண்டு விழாவிலேயும்
அவர் இருந்திருக்கார் .
மந்திரி நரஹரிக்குப்
பக்கத்துலதான் அவர்
உட்கார்ந்திருந்தார் . அதே
மாதிரி ஜவுளிக்கடை
திறப்புவிழாவிலும்
பைனான்ஸ் டைரக்டர் சூர்ய
பிரகாஷ û க்குப் பக்கத்துல
நிலாதாசன்
உட்கார்ந்திருந்தார் .
கொலையாளியோட நோக்கம்
சூர்யபிரகாஷாயிருந்திருந்தா .
.. அவர் மேடையில
தனியா
உட்கார்ந்திருக்கும்போதே
அவரைத்
தீர்த்திருக்கலாமே . . !
நிலாதாசன் மேடை ஏறுகிற
வரை காத்திருக்க
வேண்டாமே . . . அதே மாதிரி
மந்திரி நரஹரியைத்
தீர்த்துக்கட்ட ஏர்போர்ட்
மண்டப வாசலிலேயே . . .
முயற்சி
பண்ணியிருக்கலாம் . மேடை
வரைக்கும்
வரவேண்டாமே . . . ” ரூபலா
தலையாட்டினாள் .

“ அப்போ . . . நிலாதாசனுக்கு
வெச்ச குறி
தவறிப்போய் . . . பக்கத்திலே
இருந்த ஆட்கள் மேலே
பாய்ந்திருக்கு . . . ”

“ ஆமா . . . ”

“ மேடைக்குப் பின்புறமா
உங்களுக்குக் கிடைச்ச
அந்த இஞ்செக்ஷன்
பிஸ்டல் ? ”

“ வேணுமின்னே
கொலையாளி போட்டுட்டு
போயிருக்கணும் . . . ”

“ அந்த பிஸ்டல்ல இருந்த


ஒரு சீட்டு ? ”

“ நிலாதாசனுக்காக எழுதி
வெச்ச சீட்டாயிருக்கலாம் .
நரஹரி இறந்ததினாலே
அந்த சீட் அவருக்காகவே
எழுதி வெச்ச மாதிரி
ஆயிடுச்சு . அதே மாதிரி
ஜவுளிக்கடைத் திறப்பு
விழாவில் சூர்யபிரகாஷ்
இறந்ததும் - திடுக்கிட்டு
போன கொலையாளி -
நிலாதாசன்
ஜாக்கிரதையாயிடக்
கூடாதுங்கற காரணத்துக்காக
எனக்கு டெலிபோன்
பண்ணி - அவனுடைய
குறி சூர்யபிரகாஷ்தான்
என்கிற மாதிரி
காட்டியிருக்கான் . . . ” விவேக்
சொல்லச் சொல்ல - ரூபலா
முகம் மாறியிருந்தாள் .

“ நீங்க சொல்றதைப்
பார்த்தா . . . அடுத்து வர்ற
ஏதாவது ஒரு விழாவில்
நிலாதாசன் கலந்துக்கிட்டா
அவரைத் தீர்த்துக்கட்ட
முயற்சி நடக்கும் . . . ”

“ கண்டிப்பா . . . ”

“ இதை நிலாதாசனுக்கு
உடனடியா போன் பண்ணி
வார்ன் பண்ணிடலாமே . . . ”

“ கோகுல்நாத் போன்ல
கிடைக்கிறாரா பார்
ரூபி . . . ” ரூபலா போன்
அருகே போனாள் .
14
நிலாதாசன் தன் பொய்ப்பல்
வரிசை தெரியப்
பகபகவென்று சிரித்தார் .
சிரித்துவிட்டுக் கேட்டார் :
“ என்ன தம்பி
சொன்னீங்க . . ? அது
எனக்கு வெச்ச குறியா . . ? ”
விவேக் ‘ ஆமாம் ’ என்கிற
மாதிரி தலையசைக்க -
கோகுல்நாத் சொன்னார் :
“ கொலையாளியைப்
பிடிக்கிற வரைக்கும் . . .
நீங்க எந்த விழாவிலும்
கலந்துக்காமே இருக்கிறது
நல்லது ஸார் . உங்க
நன் 
மை க்காகத்தான்
சொல்றோம் . . . ”

“ எனக்காக வெச்ச
குறின்னு . . . எப்படி
அவ்வளவு தீர்க்கமா
சொல்றீங்க ? ” நிலாதாசன்
கேட்டுவிட்டு - டீபாயின்
மேலிருந்த வெள்ளிச்
சிமிழை எடுத்து - அதில்
இருந்த வாசனைப்
பாக்கைக் கொஞ்சம் போல்
எடுத்து வாய்க்குள் போட்டுக்
கொண்டார் .

“ ஒரு ஊகந்தான் ஸார் . . . ”

“ உங்க ஊகம் தப்பு


விவேக் ! தம்பி . . . என் 
னை
எதுக்காக ஒருத்தன்
கொல்லணும் . . . ? அப்படி
எண்ணம் இருக்கிறவன்
என்னோட வீட்டுக்கே
வரலாமே . . . ”

“ பொது இடத்துல ஒருத்தன்


முயற்சி பண்றது ரொம்பவும்
சுலபம் ஸார் . . . கும்பலுக்கு
மத்தியில எங்கேயாவது
ஒளிஞ்சு நின்னு சுட்டுட்டு
- கும்பலோடு கும்பலா
கலந்து தப்பிச்சுடலாம் . . . ”

“ என் 
னை ஒருத்தன்
கொல்றதுன்னா . . . இனிமே
பிறந்து தான் வரணும் . . . ”

“ உங்க தைரியம்
எங்களுக்குத் தெரியும்
ஸார் . . . இருந்தாலும் நீங்க
கொஞ்சம் ஜாக்ரதையா
இருக்கணும் . . . பொது
விழாக்களில்
கலந்துக்கிறதை
தவிர்க்கணும் . . . ”

“ மன்னிக்கணும்
இன்ஸ்பெக்டர் . . . நான்
சார்ந்திருக்கிற கட்சி
கோழைகளின் கட்சியில்  லை .
இந்தச் சமுதாயத்துக்கு
உழைக்கவே இந்த உடம்பு
இருக்கு . . . அப்படி
யாருக்காவது என் உயிர்
தேவைப்பட்டா
எடுத்துக்கிட்டுப்
போகட்டுமே . . . ”

“ ப்ளீஸ் . . .
ஒரு வாரம்
பத்து நாளைக்கு எந்த
விழாவிலும் கலந்துக்காமே
இருங்க . . . நாங்க
அதுக்குள்ளே ஆளை
அமுக்கிடறோம் . . . ”

“ நாளைக் கழிச்சு மறுநாள்


ஆபட்ஸ்பரியில ஒரு
கல்யாணம் . . . நான் அந்தக்
கல்யாணத்துல கண்டிப்பா
கலந்துகிட்டேயாகணும் . . .
மேடையில மணமக்களை
வாழ்த்திப் பேசியாகணும் . ”

“ யாரோட மேரேஜ் ? ”

“ ‘ ஆட்சிக்குரல் ’
பத்திரிகையாசிரியர்
புண்ணியகோடியின்
மகளுக்குக் கல்யாணம் .
மினிஸ்டர்ஸ் , சினிமா
நடிகர் நடிகைங்க எல்லாரும்
வருவாங்க . . . நான்
போகாமெ இருக்க
முடியுமா . . ? புண்ணியகோடி
எனக்கு நெருங்கின
சிநேகிதர் . . . ”

“ வாழ்த்துரை எத்தனை
மணிக்கு ? ”

“ காலையில எட்டு
மணிக்கு . ”

“ நீங்க
எத்தனை மணிக்குப்
போவீங்க ? ”

“ பத்துநிமிஷத்துக்கு
முன்னாடி . . . ”

“ போலீஸ் உங்களுக்குப்
பாதுகாப்பா வரும் . ”

“ நான் பயப்படலை . . . ”

“ இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு


வெளியே யார்க்கும்
தெரியாது . . . ரகசியமா
இருக்கும் . . . ”

“ அந்த பேர்வழி என் 


னை க்
கொலை செய்ய வருவான்னு
நீங்க நம்பறீங்களா
விவேக் . . ? ”

“ வரலாம் . . . எதுக்கும்
நாங்க
முன்னெச்சரிக்கையாய்
நடவடிக்கைகளை
எடுத்துடறது
நல்லதில் 
லை யா ? ”

நிலாதாசன் அலட்சியமாய்ச்
சிரித்தார் .

“ என்னமோ செய்யுங்க . . .
தமிழை சுவாசிச்சே வளர்ந்த
உடம்பு இது . தமிழ் மக்கள்
வளர்த்த உடம்பு .
என்னுடைய உயிர்மேல
ஒருத்தன் ஆசைபட்றான்னா
சந்தோஷமா நான் தரத்
தயார் . . . ” விவேக்கும்
கோகுல்நாத்தும்
எழுந்தார்கள் .

“ நாளைக்கழிச்சு மறுநாள்
உங்களைக் கல்யாண
மண்டபத்துல சந்திக்கிறோம்
ஸார் . . . ” சொல்லிவிட்டு
அவர்கள் நகர்ந்தார்கள் .
அவர்கள் போனதும்
- உள்ளறையைப் பார்த்துக்
குரல் கொடுத்தார்
நிலாதாசன் .

“ இஸ்மாயில் . ”

“ ஸார் . . . ” இஸ்மாயில்
-
உள்ளேயிருந்து வந்தான் .
அவனுடைய முகம்
மாறியிருந்தது . அவனை
ஏறிட்டார் நிலாதாசன் .

“ என்னசொல்லிட்டுப்
போனாங்கன்னு கேட்டியா ? ”

“ கேட்டேன் ஸார் . . . ”

“ அவ்வளவு தைரியசாலி
யாராயிருக்கும்
இஸ்மாயில் . . ? ”

“ கல்யாண வீட்ல நான்


கண்டு பிடிச்சுடறேன்
ஸார் . . . ”

“ நான் போலீஸ்கிட்டே
தைரியமா பேசி
அனுப்பிட்டேனே தவிர -
மனசுக்குள்ளே ஒரே
கலக்கமா இருக்கு . . .
கல்யாண வீட்ல எனக்குப்
பின்னாடியே வா . . .
எவனாவது சந்தேகப்படற
மாதிரி தெரிஞ்சா . . .
போலீஸ் கையில
சொல்லிடு . . . ”

“ சரி ஸார் . . . ”
15
புதன்கிழமை . ஆபட்ஸ்பரி
காலை ஏழு மணி .
மண்டபத்துக்கு வெளியே
கார்கள் ஏராளமாய்
மொய்த்திருக்க -
மண்டபத்துக்குள்ளே
நாதஸ்வரம் இழைந்து
கொண்டிருந்தது .
கோகுல்நாத் யூனிபார்மை
தவிர்த்துவிட்டு - வெள்  ளை
வேஷ்டி சர்ட்டில் - வாசல்
முகப்பில் நின்றிருந்தார் .
க்ரைம் பிராஞ்சைச் சேர்ந்த
நான் 
கை ந்து பேர் -
கல்யாண வீட்டுப்
பேர்வழிகளைப் போல்
மண்டபத்துக்குள்ளே
திணிந்து சந்தேகப்பட்ட
நபர்களைச் சோதித்துக்
கொண்டிருந்தார்கள் . டி . எஸ் .
பி . - கோகுல்நாத்தை
நெருங்கினார் .

“ மிஸ்டர் கோகுல்நாத் . ”

“ எஸ் ஸார் . . . ”

“ விவேக் எத்தனை மணிக்கு


வருவார் . . . ? ”

“ ஒரு பத்து நிமிஷத்துல


வந்துடுவார் ஸார் . . . ”

“ இந்தத் தடவை . . .
ஆசாமியை நாம தப்பவிட்டா
டிபார்ட்மெண்ட் கலகலத்துப்
போகும் . . . ”

“ ஆளைப் பிடிச்சுடலாம்
ஸார் . . . ” கோகுல்நாத்
சொல்லிக் கொண்டிருக்கும்
போதே - டி . எஸ் . பி .
நகர்ந்து போக - அந்த
ஆட்டோ படபடவென்ற
சத்தத்தோடு -
மண்டபத்தின் வாசலில்
வந்து நின்றது . காமிராவை
மார்போடு அணைத்தபடி
ஆட்டோவினின்றும் கீழே
இறங்கினான் மதுக்குமார் .
டிரைவர்க்குப் பணத்தைக்
கொடுத்துவிட்டு -
காமிராவோடு வாசலை
நோக்கி நடந்தான் .
மப்டியில் இருந்த
கோகுல்நாத்தை அடையாளம்
தெரிந்து கொண்டு
புன்னகைத்தான் .

“ குட்மார்னிங் ஸார் . . . ”

“ஓ... மதுக்குமார் ! இந்த


கல்யாண வீட்டுக்கு நீங்க
தான் வீடியோ
கவரேஜா . . . ? ”

“ ஆமா ஸார் . . . ”

“ துல்லியமா கவர்
பண்ணுங்க . . . இன்னிக்கும்
இங்கே ஏதாவது
அசம்பாவிதம் நடக்கலாம் . . .
நீங்க அன்னிக்குப் பார்த்த
ஆசாமி மண்டபத்துல
இருந்தா . . . இம்மீடியட்டா
எனக்குத் தகவல்
கொடுங்க . . . ”

“ எஸ் . . .
ஸார் . . . ”
மதுக்குமார் காமிராவோடு
உள்ளே போனான் .
16
ஹோண்டாவின் இடுப்பை
உதைத்தான் விவேக் . மணி
7 . 0 5 . ரூபலா வாசலில்
நின்று கையசைத்தாள் .
சொன்னாள் : “ வர்றப்போ
சிரிச்சுட்டே வாங்க . . . ”

“ ம் . . .
ம் . . . ” ஹோண்டா ,
வீட்டைக் கடந்து ரோட்டை
அடைந்தது . சென்  னை யின்
காலை நேர ரோடுகள்
கடற்காற்றின் உதவியோடு
ஜில்லிப்பாய் இருக்க -
ஆட்கள் இன்னமும்
வீடுகளில் போர்வைகளிலும் ,
குளியலறைகளிலும் , பல்
தேய்ப்புகளிலும்
இருந்தார்கள் . விவேக்கின்
மனசுக்குள் நிலாதாசன்
கவலையாய்
உட்கார்ந்திருந்தார் .
‘ என்னுடைய கணிப்பு
சரியாக இருந்தால் , அந்தப்
பேர்வழி நிலாதாசனுக்காகக்
கண்டிப்பாய்
வருவான் . ’ அந்த வளைவைத்
திரும்பி - மவுண்ட் ரோட்டின்
ஏகாந்தப் பரப்பில் -
ஆக்ஸிலேட்டரை
முறுக்கியபோது ஹோண்டா
சட்சட்டென்று நான்  கை ந்து
முறை உடம்பை
உதறியது . ‘ என்னாச்சு . . ? ’
யோசிப்பதற்குள் மூளை
சொன்னது . ‘ பெட்ரோல்
ரிசர்வில் விழுந்திருக்கும் .
ஹோண்டாவுக்குப் பெட்ரோல்
புகட்டி நான் 
கை ந்து நாட்கள்
ஆகியிருக்கும் . ’ குமிழைத்
திருப்பி ரிசர்வுக்குக்
கொண்டு வந்தவன் -
எதிரே இருந்த பெட்ரோல்
பங்கைப் பார்த்ததும் -
உள்ளே போனான் . நான்கு
ஸ்கூட்டர்களும் - இரண்டு
மொபட்களும்
பெட்ரோலுக்காகக் காத்துக்
கொண்டிருக்க - ஒரு
அம்பாசிடர் கார் லிட்டர்
கணக்கில் பெட்ரோலைக்
குடித்துக் கொண்டிருந்தது .
வண்டியை நிறுத்திவிட்டு -
ஹெல்மெட்டைக் கழற்றிய
விவேக்கின் பார்வைக்கு -
பெட்ரோல் பங்க் ஓரமாய்
இருந்த அந்தப்
பெட்டிக்கடையின் முகப்பில்
- காற்றில் படபடத்துக்
கொண்டிருந்த போஸ்டர்
பட்டது . கொட்டை
எழுத்துக்கள் கண்ணில்
அறைந்தன . யார் அந்தக்
கொலைவள்ளல் ? அடுத்த
பலி யார் ? அதிகாரிகள் -
மந்திரிகளிடையே பீதி !
போஸ்டரில் இருந்த
தலைப்பைப் பார்க்கப்
பார்க்க விவேக்கிற்குக்
கோபம் லேசாய்ப் புரண்டது .
‘ பத்திரிகைக்காரர்கள் ஏன்
இப்படி பீதி
கிளப்புகிறார்கள் ? ’ ‘ எந்தப்
பத்திரிகை அது ? ’ உற்றுப்
பார்த்தான் . ‘ தீப்பந்தம் ’ ‘ ஆபட்
ஸ்பரி மண்டபத்துக்குப்
போகிற வழியில்தானே
அந்தப் பத்திரிகை ஆபீஸ்
இருக்கிறது ? உள்ளே போய்
அந்த எடிட்டரைப் பார்த்து
ஒரு ஐந்து நிமிஷம்
பொரிய வேண்டும் . ’
தீர்மானித்துக் கொண்டான் .

“ எவ்வளவு ஸார்
போடணும் ? ” - பெட்ரோல்
பங்க் பையன் கேட்க ,
“ அஞ்சு ” என்றான் விவேக் .
கண்கள் அந்தப் போஸ்டரின்
வாசகங்களிலேயே
இருந்தன .
17
நிலாதாசனின் இருதயத்தில்
அந்தப் பயக் குளிர்
இறங்கியிருந்தது . உடம்பு
பூராவும் ஜுரம் வந்த
மாதிரியான உணர்ச்சியில்
கதகதப்பாய் இருந்தார் .
அடிக்கடி இஸ்மாயிலைக்
கூப்பிட்டு மணிகேட்டார் .
அந்த நிமிஷமும்
கூப்பிட்டார் .

“ இஸ்மாயில் . ”

“ ஸார் . . . ”

“ டைம் எவ்வளவு ? ”

“ ஏழே கால் ஸார் . . . ”

“ மண்டபத்துக்கு ஏழே
முக்காலுக்குப் புறப்பட்டா
போதுமா . . ? ”

“ போதும் ஸார் . . . ” அவன்


நகர முயன்ற போது
திரும்பவும்
கூப்பிட்டார் : “ இஸ்மாயில் . ”

“ ஸார் . . . ”

“ அந்தக்
கல்யாணத்துக்குப்
போகலாமா ? வேண்டாமா ? ”

“ போலாம் ஸார் . . .
உங்களுக்கு ஒண்ணும்
ஆகாதபடி பார்த்துக்க
நானிருக்கேன் . . . போலீஸும்
இருக்கு . ”

“ மனசுக்குள்ளே ஒரே
உதறலாயிருக்கு . . . ”

“ கொஞ்சம் ஸ்காட்ச்
தரட்டுமா ஸார் ? ”

“ குடு . . . ”
அவன் உள்ளே
திரும்பினான் .
இஸ்மாயில் . . . “ லார்ஜாவே
குடு . . . அப்பத்தான்
மனசுக்குள்ளே இருக்கிற
இந்தப் பயம் தொலையும்
போலிருக்கு . . . ”
18
ஆபட்ஸ்பரி அமர்க்களத்தில்
இருந்தது . சினிமா
நடிகைகள் ராத்திரி
முழுவதும் உழைத்த
களைப்பைப்
பொருட்படுத்தாமல் -
லேசான மேக்கப்போடு வர
ஆரம்பித்திருந்தார்கள் .
மந்திரிகள் போலீஸ்
வளையத்தால் சூழப்பட்டு
பத்திரமாய் - முன்
இருக்கைக்குப் போய்க்
கொண்டிருந்தார்கள் . ‘ அதோ
எஸ் . வி . சேகர் . . . ’ ‘
மோகனை நீ
பார்த்தியா ? ’ ‘ அமலா நல்ல
கலர் . ’ கல்யாணத்திற்கு
வந்திருந்தவர்கள் -
மணமேடையில் இருந்த
பெண்  ணை யும் -
மாப்பிள் ளை யையும்
மறந்துவிட்டு எக்கி எக்கி
முன் வரிசைகளைப்
பார்த்துக்
கொண்டிருந்தார்கள் .
கும்பலுக்குள்ளே
ஊடுருவியிருந்த க்ரைம்
பிராஞ்ச் ஆசாமிகள் -
உள்ளே வந்து
கொண்டிருந்த
ஒவ்வொருவரையும்
உன்னிப்பாய்த் தங்களுடைய
லேசர் கண்களால் கவனிக்க
- வாசலில் நின்றிருந்த
கோகுல்நாத் - தவிப்பில்
இருந்தார் . அடிக்கடி
மணிக்கட்டைப்
பார்த்தார் . ‘ விவேக்கை
எங்கே
காணோம் ? ’ வரப்போகும்
ஹோண்டாவுக்காக எட்டிப்
பார்த்துக் கொண்டிருந்த
நிமிஷம் - அவருக்குப்
பின்பக்கமாய் அந்தக் குரல்
கேட்டது . திரும்பினார் .
கல்யாண வீட்டு ஆசாமி
ஒருத்தர் நின்றிருந்தார் .
கேட்டார் : “ ஸார் . . . நீங்க
மிஸ்டர் கோகுல்நாத் ? ”

“ எஸ் . . . ”

“ உங்களுக்கு ஒரு போன்


கால் . ”

“ போன்ல யாரு ? ”

“ விவேக்னு . . .சொன்னார் . ”
அந்த ஆசாமியைத்
தொடர்ந்தார் கோகுல்நாத் .
மண்டபத்தில் இடது கைப்
பக்கமாய் இருந்த
கண்ணாடித் தடுப்பு
ஆபீஸுக்குள் கூட்டிப்
போனார் அவர் . டேபிளின்
மேல் ரிஸீவர்
மல்லாந்திருக்க - அதை
எடுத்துக் காதுக்குக்
கொடுத்தார் , கோகுல்நாத் .

“ குட்மார்னிங் விவேக் . ”

“ ஸாரி . . . மிஸ்டர்
கோகுல்நாத் . . . நான்
விவேக் இல்  லை . விவேக்னு
சொன்னாத்தான் நீங்க
டெலிபோனுக்கு சீக்கிரம்
சீக்கிரமா வருவீங்கன்னு
தெரியும் . . . ” -
சொல்லிவிட்டு அந்த ஆண்
குரல் சிரித்தது .

“ யார்ரா . . . நீ . . ? ”

“ கொலை வள்ளல் . ”

“ என்ன உளர்றே ? ”

“ இன்னிக்குக் காலையில
வந்த தீப்பந்தம்
பத்திரிகையைப்
பார்த்தீங்களா . . .
இன்ஸ்பெக்டர் . . ? அந்தப்
பத்திரிகைதான் எனக்கு
அந்தக் ‘ கொலைவள்ளல் ’
பட்டத்தைக்
கொடுத்திருக்கு . . . ”

“......” -கோகுல்நாத்
மௌனம் சாதிக்க , அவன்
சொன்னான் :
“ பிரயோஜனமில் லை
இன்ஸ்பெக்டர் ஸார் . . .
நீங்க என்னதான் பாதுகாப்பு
ஏற்பாடுகளைப்
பண்ணினாலும் என்னோட
பாய்சன் ஊசிக்கு
முக்கியமான புள்ளி
ஒருத்தர் பலியாகித்தான்
தீரணும் . ”

“ ராஸ்கல் . . . யார்ரா நீ ? ”

“ கல்யாண மண்டபத்துக்கு
வர்றேன் . . . கண்டுபிடியுங்க
பார்க்கலாம் . . . ”
19
‘ தீப்பந்தம் ’
ஆபீசுக்குள்
தன் ஹோண்டாவை
நுழைத்து - போர்டிகோவில்
மௌனமாக்கினான் விவேக் .
நியூஸ் பேப்பர் உருளைகள்
- வெட்ட வெளியில்
உருண்டு கிடக்க - அதில்
ஒரு உருளையை ரம்பத்தால்
அறுத்துக்
கொண்டிருந்தார்கள் இரண்டு
பேர் . உள்ளே பத்திரிகை
அலுவலகம் மௌனமாய்
இருந்தது . விவேக்
ஹோண்டாவை ஸ்டாண்ட்
இட்டு நிறுத்திவிட்டு -
உள்ளே நுழைந்தான் . நீல
நிற யூனிபார்ம் அணிந்த
ஒரு ஆசாமி எதிர்ப்பட ,
அவனை நிறுத்தினான் .

“ ஆசிரியர் இருக்காரா ? ”

“ அவர் எட்டு மணிக்கு


மேல்தான் வருவாரு . ”

“ சப் - எடிட்டர் . . . ”

“ அவர் கொஞ்ச நேரத்துல


வந்துருவார் . . . ”

“ இப்போ ஆபீஸ்ல யார்


இருக்காங்க . . . ? ”

“ ரிப்போர்ட்டர் அம்மா தர்மா


இருக்காங்க . . . அதான்
அவரோட ரூம் . . . நீங்க
அங்கே வெயிட்
பண்ணுங்க . . . உள்ளே
பிரிண்டிங் செக்ஷன்ல
இருக்கிற அவரைக்
கூட்டிட்டு வந்துடறேன் .
உங்க பேர் என்ன ஸார் ? ”

“ விவேக் . . . ”
அந்த ஆசாமி
பிரிண்டிங் செக்ஷனை
நோக்கிப் போக - விவேக் ,
கார்ட்போர்டால்
தடுக்கப்பட்டிருந்த தர்மாவின்
அறைக்குள் நுழைந்து -
காலியாய்க் கிடந்த
நாற்காலியில் உட்கார்ந்தான் .
அறை சின்னதாய்
இருந்தது . இங்க்
தெளிப்போடு ஒரு மேஜை .
ஸ்கெட்ச் பென் பாக்கெட் .
நீலத்திலும் சிவப்பிலும்
இங்க் புட்டிகள் .
நான் கை ந்து ஃபைல்கள் .
கண்ணுக்குத் தெரிந்த
முதல் ஃபைலின் மூலையில்
அந்த எழுத்துக்கள் தெரிய
- ஆச்சர்யமானான் விவேக் .
உற்றுப் பார்த்தான் .
நிலாதாசன் . ஒற்றை
விரலால் ஃபைலை மெல்லப்
புரட்டினான் . நிலாதாசனின்
புகைப்படம் காபினெட்
சைஸில் தெரிய - உள்ளே
நிறைய பேப்பர்கள் .
‘ நிலாதாசனின் வாழ்க்கை
வரலாறு ’ என்று
ஸ்கெட்ச்சில் எழுதப்பட்ட
தலைப்புக்குக் கீழ் பால்
பாயிண்ட் பேனா வரிகளைக்
கிறுக்கியிருந்தது .
தொடர்ந்து
முதல்மந்திரியோடு
நிலாதாசன் அமர்ந்திருக்கும்
காட்சி . சென்ற தடவை
தேர்தலில் வெற்றி
பெற்றபோது எடுத்த
போட்டோ . விமான
நிலையத்தில் நிலாதாசன் .
ஃபைலை புரட்டப் புரட்ட
- திடுக்கிட்டான்
விவேக் . ‘ எதற்காக இந்த
முன்னேற்பாடு
செய்திகள் . . ? ’ விவேக்கின்
மூளைக்குள் ஒரு சின்ன
ப்ளாஷ் ! ‘ இந்த தர்மா
சரியில் லை . . . தப்பு
இங்கேயிருந்துதான்
ஆரம்பமாகியிருக்கிறது . ’ -
அவன்
யோசித்துக்கொண்டிருக்கும்
போதே - அந்த நீலநிற
யூனிபார்ம் ஆசாமி
வந்தான் .

“ ஸார் . . . தர்மாம்மா
வெளியே
போயிட்டாங்களாம் . . . ”

“ எங்கே . . ? ”

“ ஆபட்ஸ்பரியில் யாருக்கோ
கல்யாணமாம் . ரெண்டு
நிமிஷத்துக்கு முன்னாடி
தான் வெளியே
போனாங்களாம் . . . அவங்க
போனதை நான் பார்க்கலை
ஸார் . . . அதான்
சொல்லிட்டேன் . ”

“ சரி . . . இங்கிருந்து நான்


போன் பண்ணிக்கிறேன் . . .
போன் எங்கேயிருக்கு ? ”

“ சப் - எடிட்டர் டேபிள்ல


இருக்கு ஸார் . . . ” -
அவன் கையைக் காட்ட
அந்தப் பக்கமாய்ப்
போனான் விவேக் .
கல்யாண மண்டபத்தின்
நம்பரை டைரக்டரியில்
பார்த்து டயலைச் சுழற்றி
இரண்டு நிமிஷ
அவகாசத்திற்குள்
கோகுல்நாத்தைப் பிடித்தான் .

“ கோகுல்நாத் . . .
விஷயம்
ரொம்பவும் சீக்ரெட் .
மண்டபத்துல தர்மா
இருக்காளா ? ”

“ தர்மாவா ? யாரது ? ”

“ அந்த வீடியோ
காமெராமேன் மதுக்குமாரோட
லவ்வர் . ‘ தீப்பந்தம் ’
பத்திரிகையோட
ரிப்போர்ட்டர் . . . நீங்க
அவளைப்
பார்த்திருக்கீங்க . . . ”

“ ஆமா . . . சொல்லுங்க . . . ”

“ அந்தப் பொண்  ணை
மண்டபத்துல
பார்த்தீங்களா ? ”

“ இல் 
லை யே . . . ”

“ இப்போ போய்ப்
பாருங்க . . . கும்பல்ல அவ
இருந்தா . . . அவளைத்
தனியறைக்குக் கூட்டிட்டுப்
போய் செக் பண்ணுங்க . . .
லேடி காப்ஸ்
இருக்காங்களா ? ”

“ இருக்காங்க . . . ”

“ தரோவா செக்
பண்ணிடுங்க . . .
கோகுல்நாத் . தப்பு
தர்மாகிட்டயிருந்துதான்
ஆரம்பமாகியிருக்கு . . . ”

“ என்ன சொல்றீங்க
விவேக் . . . ? ”

“ நிலாதாசனுக்கும்
தர்மாவுக்கும் மத்தியில
என்னமோ புகைச்சல்
இருக்கு . நான் நேர்ல
வந்து சொல்றேன் . . .
நிலாதாசன் அங்கே
வந்துட்டாரா ? ”

“ இன்னும் வரலை . . . ”

“ நான் அவர்
வீட்டுக்குப்போய் - அவரைப்
பார்த்துப் பேசிட்டு மண்டபம்
வர்றேன் . தர்மாவை
மாத்திரம் தரோவா செக்
பண்ணிடுங்க . . . ”

“ சரி . . . ”
விவேக் ரிஸீவரை
வைத்துவிட்டு வெளியே
பாய்ந்தான் . போர்டிகோவில்
நின்றிருந்த ஹோண்டாவில்
ஆரோகணித்து - அதை
உறும வைத்துப் பீறிட்டான் .
ஐந்தாவது நிமிஷம் !
நிலாதாசனின் வீட்டில்
இருந்தான் . வாசல் கேட்டில்
நின்றிருந்த நிலாதாசனின்
எடுபிடி ஆள் விவேக்கைப்
பார்த்ததும் பவ்யமாய்
சல்யூட் போட்டான் .

“ நிலாதாசன் வீட்ல
இருக்காரா . . ? ”

“ இப்பத்தான்
கல்யாணத்துக்குப்
புறப்பட்டுப் போறார் ஸார் . ”

“ எந்த வழியா போனார் ? ”


கையைக் காட்டினான்
அவன் . அந்த திசை
நோக்கி - ஹோண்டாவைத்
திருப்பினான் விவேக் .
ஹோண்டா அவனுடைய
அவசரத்தை உணர்ந்த
மாதிரி . . . சூப்பர்
ஸானிக்காய்ப் பறந்து
தார்ரோட்டில்
தீப்பொறிகளைப்
பறக்கவிட்டது . ‘ நிலாதாசனின்
கார் கண்ணில் படுகிறதா ? ’
பார்வையை - எட்டின
வரைக்கும் போட்டான்
விவேக் . ‘ ஊஹும் . . . ’
20
இஸ்மாயில் காரை ஓட்டிக்
கொண்டிருக்க - அருகே
நிலாதாசன்
உட்கார்ந்திருந்தார் .
இருதயம் ஏராளமான
துடிப்பில் இருந்தது . ‘ ஆபத்து
காத்திருக்கிறது என்று
தெரிந்தும் மண்டபம்
போகிறோமே ,
சரியா ? ’ ‘ அந்தக் கும்பலில்
எந்தத் திசையிலிருந்து
வேண்டுமானாலும் விஷ
ஊசி பறந்து வந்து என்
கழுத்தில்
பாயலாமே . . . ’ அவருடைய
மூளையின் செல்கள்
பயத்தோடு யோசித்துக்
கொண்டிருக்கும் போதே -
வேகமாய்ப் போய்க்
கொண்டிருந்த காரின்
வேகம் , படிப்படியாய்க்
குறைந்தது .

“ என்ன இஸ்மாயில் ? ”

“ ஸார் ! அந்த தர்மா


பொண்ணு பஸ் ஸ்டாப்பில்
நின்னுகிட்டு லிப்ட்
கேட்குது . . . காரை
நிறுத்தட்டுமா . . ? ”

“ பத்திரிகைக்கார பொண்ணு
தானே . . ? நிறுத்தி
ஏத்திக்க . . . ! ” கார் நின்றது .
பஸ் ஸ்டாப்பில் தனி
ஆளாய் - சல்வார்
கம்மீஸில் திணிந்திருந்த
தர்மா - தோளில் தொங்கப்
போட்ட டம்பப் பையோடு
நிலாதாசனுக்கு
‘ குட்மார்னிங் ’ சொன்னாள் .

“ என்னம்மா . . . நீயும்
கல்யாணத்துக்கா ? ”

“ ஆமா ஸார் . . . ! அரைமணி


நேரமா பஸ்ஸுக்காக
வெயிட் பண்ணிட்டிருக்கேன் .
பாழாப் போன பஸ்
வரவேயில் 
லை . . . ”

“ சரி . . . ஏறம்மா . . . ”
காரின் கதவைத் திறந்து
கொண்டு பின் சீட்டுக்குப்
போனாள் தர்மா . கார்
நகர்ந்தது . நிலாதாசன்
திரும்பிப் பார்த்துக்
கேட்டார் : “ உன் கூடவே
எப்பவும் சுத்திட்டிருப்பாரே
அந்த மதுக்குமார் . . . அவர்
வரலையா . . ? ”

“ அவர் முன்னாடியே
போயிட்டார் . அவர்தான்
வீடியோ கவரேஜ்
பண்றார் . . . ”

“ ரொம்பவும் பயந்த சுபாவ


பையன் . . . ” கார்
ஆபட்ஸ்பரி போகும்
பாதையில் திரும்ப
எத்தனித்த போது - தர்மா
மெல்லிய குரலில்
இஸ்மாயிலிடம்
சொன்னாள் : “ ஸார் . . . காரை
பக்கத்து ரோட்டு வழியா
திருப்பிக்கிட்டுப்
போலாமே . . .
அங்கேயிருக்கிற
பார்மஸியில் ஒரு மருந்து
வாங்கணும் . . . ” இஸ்மாயில்
எரிச்சலோடு காரை பக்கத்து
ரோட்டுக்கு விரட்டினான் .
அந்த ரோட்டில் திரும்பின
அதே நிமிஷம்
இஸ்மாயிலின் பின்னங்
கழுத்தில் என்னவோ
ஜில்லிப்பாய் ஊர்ந்தது .
சரக்கென்று -
திரும்பினான் . தர்மாவின்
கையிலிருந்த பிஸ்டல் -
தன் இரும்பு உதடுகளால்
இஸ்மாயிலின் பின்னங்
கழுத்தை முத்தமிட்டுக்
கொண்டிருந்தது .

“ஏ... ஏ... ஏய் . . .


என்ன . . . இது . . ? ”
இஸ்மாயிலின் முகம்
இருட்டுக்குப் போக -
நிலாதாசன் சுவாசிக்கத்
திணறினார் . தர்மா
புன்னகைத்து விட்டுச்
சொன்னாள் : “ இதுக்குப் பேரு
பிஸ்டல் . நீ
பார்த்ததில் 
லை யா
இஸ்மாயில் . . ? ” அவன்
நெருப்பு மாதிரி -
அவஸ்தையாய் எச்சில்
விழுங்கினான் . உறுமினாள்
தர்மா : “ இஸ்மாயில் ! நீ
காரை எங்கேயும்
நிறுத்தக்கூடாது . . . நிறுத்த
முயற்சி பண்ணினா . . .
அடுத்த நிமிஷமே இந்த
இஞ்செக்ஷன் பிஸ்டல்ல
இருக்கற விஷ ஊசி
உன்னோட கழுத்துல
பாய்ஞ்சுடும் . . . மிஸ்டர்
நிலாதாசன் ! உங்களுக்கும்
சேர்த்துதான் சொல்றேன் .
நீங்க தப்பிக்க முயற்சி
பண்ணி கொஞ்சம்
அசைஞ்சாலும் போதும் . . .
என்னோட பிஸ்டலுக்குத்
தெரிஞ்சுடும் . . . ” நிலாதாசன்
திரும்பிப் பார்த்தார் .

“ எதுக்கம்மா . . .
இப்படியெல்லாம் பண்றே ?
உனக்கு என்ன வேணும் ? ”

“ நான் கேக்கிறதை . . .
உங்களாலே தர முடியுமா
மிஸ்டர் நிலாதாசன் ? ”

“ சொல்லும்மா . ”

“ உங்க உயிர் எனக்கு


வேணும் . . . ” நிலாதாசனின்
கண்களில் பயம் உறைந்து
போயிற்று . தர்மா
தொடர்ந்தாள் : “ இன்னிக்குக்
கல்யாண மண்டபத்துலதான்
உங்க உயிரை
எடுக்கணும்னு
நினைச்சிட்டிருந்தேன் . . .
ஆனா , குறி
தவறிடுமோன்னு
மனசுக்குள்ளே ஒரு சின்ன
பயம் . உங்களுக்கு ஆயுசு
கொஞ்சம் கெட்டி . மிஸ்டர்
நிலாதாசன் . . . முதல்
தடவையா உங்களைப்
பார்த்துச் சுட்டப்போ . . . குறி
தவறி மந்திரி நரஹரி
மண் டை யைப் போட்டார் .
ஜவுளிக்கடை விழாவிலே
நான் சுடற நேரம் பார்த்து
- நாற்காலி மாறினதாலே
சூர்யபிரகாஷ் செத்தார் .
அந்த நிலைமை இனிமே
யாருக்கும்
வரக்கூடாதுங்கறதுக்குத்தான்
காரை மறிச்சு லிப்ட்
கேட்டேன் . . . ” நிலாதாசன்
குரல் திணறக்
கேட்டார் : “ என் 
னை க் கொல்ற
அளவுக்கு . . . என்மேலே
உனக்கு என்னம்மா
வெறுப்பு . . ? ”

“ சொல்றேன் ” என்றவள்
இஸ்மாயிலின் கழுத்தில்
பிஸ்டலை அழுத்திக்
கொண்டே சொன்னாள் :
“ இஸ்மாயில் ! மறுபடியும்
உன் னை வார்ன் பண்றேன் .
காரை எங்கேயும் நிறுத்தக்
கூடாது . . . போயிட்டே
இருக்கணும் . . . சிட்டியில
சுத்தாதே ! மெட்ராஸ் தாண்டி
அவுட்டர் போயிடு . . . ”
இஸ்மாயில் நடுங்கும்
கைகளோடு காரை
விரட்டினான் . தர்மா
நிலாதாசனிடம்
திரும்பினாள் .

“ என்ன கேட்டீங்க
நிலாதாசன் ? உங்க மேல
எனக்கு என்ன
வெறுப்புன்னா . . ?
சொல்றேன் . . . அதுக்கு
முன்னாடி ஒரு நிமிஷம்
இந்த போட்டோவைப்
பார்க்கறீங்களா ? ” இடது
கையால் டம்பப் பையைப்
பிரித்து பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ ஒன்  றை
நீட்டினாள் , தர்மா .
போட்டோவில் குண்டு
முகமாய் பெண்ணொருத்தி
சிரித்தாள் . போட்டோவைப்
பார்த்து நிலாதாசன்
செமத்தியாய் அதிர்ச்சி
வாங்கி . . .

“இ... இ... இ...


இது . . . விசாலினி . . !
இந்தப் போட்டோ உனக் . . .
உனக்கெப்படி கி . . . கி
கிடைச்சுது . . . ? ” என்றார் .
சிரித்தாள் தர்மா .

“ என்னோட அம்மா
போட்டோ . . . என்கிட்டே
இல்லாமே வேற யார்
கிட்டே இருக்கும்
நிலாதாசன் ? ” நிலாதாசன்
இன்னும் ஒரு தடவை
அதிர்ந்தார் .

“ வி . . .
விசாலினி . . . உ . . .
உன்னோட அம்மாவா ? ”

“ ம் . . .இருபது
வருஷங்களுக்கு முன்னாடி
இந்த அழகான விசாலினி
உங்களுக்குத் தாலி கட்டாத
மனைவி . . . ! வேறு எவளோ
வந்து சேர்ந்ததும் இந்த
விசாலினி கசந்துட்டா . ஏழு
மாச கர்ப்பிணியா இருந்த
அவளை அடிச்சு வெளியே
துரத்தினீங்க . . . தெரு
ஓரமா சோறு தண்ணி
இல்லாம மயக்கமா
கிடந்தவளை , இப்போ நான்
அம்மா - அப்பான்னு
சொல்லிட்டிருக்கிறவங்க
தன்னோட வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போய் . . .
வேலைக்காரி உத்யோகம்
குடுத்ததும் , மூணு
மாசத்துல அங்கே நான்
பிறந்ததும் . . . நான் பிறந்த
பத்தாவது நாள் அம்மா
ஜன்னி கண்டு செத்ததும்
ரொம்ப பழைய
சமாச்சாரங்கள் . ஒரு
வருஷத்துக்கு முன்னாடி -
என் 
னை வளர்த்தவங்க ஒரு
நாள் நான் தூங்கிட்டதா
நினைச்சு என்னோட
ஒரிஜனல் அம்மாவைப்
பத்திப் பேசும் போதுதான்
நான் உங்களைப் பத்தி
தெரிஞ்சுக்கிட்டேன் .
என்னோட அம்மா மாதிரியே
பல பெண்கள் உங்களை
நம்பி ஏமாந்த
கதைகளையும்
தெரிஞ்சுக்கிட்டேன் . இந்த
வயசிலும் நீங்க பெண்களை
நாசம் பண்ற
அயோக்கியத்தனத்தைக்
கேள்விப்பட்ட போதுதான் -
என்மனசே ஒரு எரிமலையா
மாறிடுச்சு . . . நீங்க
உயிரோடு இருந்தா . . . பல
பெண்கள் மானத்தோடு
இருக்க முடியாதுங்கிற
முடிவுக்கு வந்தேன் .
போலீஸ் கையிலும் மாட்டக்
கூடாது ; உங்க கதையையும்
முடிக்கணும் . எப்படீன்னு
யோசிச்சேன் . கடைசியில
இந்த இஞ்செக்ஷன் பிஸ்டல்
உதவிக்கு வந்தது .
என்னோட முதல் முயற்சியே
தோல்வி . . . உங்க
கழுத்துல பாய வேண்டிய
ஊசி மந்திரியோட கழுத்துல
பாய்ஞ்சிடுச்சு . . . கூட்ட
அமளியில மேடைக்குப் பின்
பக்கமா என் பிஸ்டலைப்
போட்டுட்டேன் . . . என்மேல
போலீஸுக்கும் , என்  னை க்
காதலிக்கிற மதுக்குமார்க்கும்
எக்காரணம் கொண்டும்
சந்தேகம் வந்துடக்
கூடாதேன்னு - போலீஸைத்
திசை திருப்புவதற்காக
வாய்ஸ் சின்தசைஸர்
மூலமா குரலை மாத்தி -
ஆண் குரல்ல இன்ஸ்பெக்டர்
கோகுல்நாத் கிட்டேயும் -
விவேக் கிட்டேயும்
டெலிபோன்ல பேசினேன் .
கொலையைச் செய்தது ஒரு
ஆண்தான்னு
நம்பவெக்கிறதுக்காக -
பெரிய சைஸ் ஷூவை ஒரு
பையில எடுத்துட்டுப் போயி
- ஜனார்த்தனா
ஜவுளிக்கடைக்குப் பக்கத்துல
இருக்கிற கட்டிடத்து
சிமெண்ட் பரப்புல பதிய
வெச்சேன் . . . ” தர்மா
பேச்சை நிறுத்தினாள் .
நிலாதாசனும் இஸ்மாயிலும்
வியர்த்துப்
போயிருந்தார்கள் .

“ ரெண்டு தடவை நீங்க


இந்த விஷ ஊசிக்கு
தப்பிச்சுட்டீங்க மிஸ்டர்
நிலாதாசன் . . . இந்தத்
தடவை நீங்க தப்ப
முடியாது ! ” தர்மா -
சொல்லிக் கொண்டே ,
காரின் ‘ பேக் ரியர் வ்யூ ’
கண்ணாடியைப் பார்த்தவள் ,
முகம் மாறினாள் .
கண்ணாடியில் - விவேக்
ஹோண்டாவில் ஒரு
சின்னப்புயல் மாதிரி வந்து
கொண்டிருந்தான் . ‘ எப்படி . . ?
எப்படி . . ? ’ கோபமாய்க்
கத்தினாள் தர்மா .

“ இஸ்மாயில் ! காருக்கு
வேகம் போதாது . . . பறக்க
வை . . . ” இஸ்மாயில்
ஆக்ஸிலேட்டரின் மேல்
காலை வைத்தான் . கார்
பீறிட்டது . மறுபடியும்
கண்ணாடியைப் பார்த்தாள்
தர்மா . விவேக் வேகம்
குறையாமல் பாய்ந்து வந்து
கொண்டிருந்தான் .
நிமிஷங்கள் கரைய -
கிலோ மீட்டர்கள் பறந்தன .
தர்மா பிஸ்டலை
அழுத்தினாள் .

“ இஸ்மாயில் ! இன்னும்
வேகம் . . . ” -
ஆனால்காரின் வேகம்
குறைந்தது .

“ என்ன இஸ்மாயில் ? ”

“ முன்னாடி பாருங்கம்மா . . . ”
பார்த்தாள் . ரயில்வே கேட்
மூடியிருந்தது . கார் , கேட்
அருகே போய் நின்றது .
காருக்குப் பக்கமாய் தன்
ஹோண்டாவை
நிறுத்திவிட்டுத்
தபதபவென்று ஓடிவந்தான்
விவேக் . காருக்குள்ளே
எட்டிப் பார்த்தான் .
இஸ்மாயில் வலது
பக்கமாகவும் - நிலாதாசன்
இடதுபக்கமாகவும்
தலைகளைச் சாய்த்திருக்க ,
இருவர் கழுத்திலும் நீலநிற
ஊசிகள் புதைந்து போய்த்
தெரிந்தன . தர்மா
காரினின்றும் கீழே
இறங்கிக் கொண்டே - ஒரு
புன்னகையோடு விவேக்கிடம்
சொன்னாள் .

“ ஸாரி . . . மிஸ்டர் விவேக் !


நீங்க பத்து செகண்ட்ஸ்
லேட் . . . ”

(முற்றும்)

You might also like