You are on page 1of 1

ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் இருக்க வேண்டியவர் காவல் அதிகாரி.

கருத்து மறுத்தல் (1).

ஊரறிந்த, ஏன்? தாங்களே நன்கு அறிந்த உண்மையை பொய்யாக்க பெரும்பாடு படுவதைக் கண்டு
என் நெஞ்சம் பதபதைக்கத் தான் செய்கிறது!

PANDEMIC என சிறு குழந்தையும் கூவிடும் இச்சொல்,உலகம் முழுக்க நோய் பரவுதல் என


பொருள்படுமாம். தீராத நோய் இது, நம்மை தீண்டிடாது தடுக்கவே அரசு பல சட்டத்திட்டங்களை
வரையறுத்துத் தந்துள்ளது. மாணவர்கள் வெறும் வாய்மொழியாக முகக்கவரியை அணி,நண்பனை
நெருங்காதே எனக் கூறும் பொழுது பற்றாத அச்சம்,காவல் அதிகாரி தண்டம் விதிப்பார் என மிரட்டல்
விடுக்கும் பொழுது சூழ்நது
் க் கொள்கிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறு இருக்க, ஒரு காவல்
அதிகாரி பள்ளிச் சுழலில் நடமாடுவது எத்துனை நன்மை. காவல் அதிகாரி வந்து விடுவார் என மிரட்டத்
தேவையே இல்லை. மாணவன் தானாகவே அடங்கி விடுவான். தொடதே , ஓடாதே , என ஆசிரியர்கள்
உமிழ் நீர் வற்றும் வரை குரல் எழுப்பத் தேவையில்லை. தோழியே, உயரே பறந்தாலும் ஊர்க் குருவி
பருந்தாகாது என்பது போலத்தான் உங்கள் வாதமும். என்னத்தான் காவல் அதிகாரி தேவையில்லை என
நீங்கள் கூப்பாடு போட்டாலும், அஃது உண்மையாகாது.

கருத்து மறித்தல் (2)

மருத்துவர் அவசியமில்லையா ?

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும், உயிரையும் விட மேலாகப் போற்றப்படுவது
ஒழுக்கம் தான் தோழி அவர்களே, அத்தகைய ஒழுக்கம் பேண காட்டாயம் தேவை காவல் அதிகாரியே
அன்றி வேறெவரும் அல்ல! என் கல்விக் கண்களைத் திறந்திட்ட ஆசான்கள்,பொற்றோர் போன்று
கருணையோடு எங்களை அரவணைத்து,குருதி சொட்டும் காயத்திற்கு மருந்து இடும் பொழுது,எதற்கு
மருத்துவர் எனக் கேட்கிறேன்? கனிவான முகம் ஒழுங்கற்ற மாணவனைக் கண்டிக்க அரக்கனாகுமா?
ஆனால், காவல் அதிகாரிக்கே உரிய கம்பீரமும் ,இடி முழக்கம் போன்ற கனீர் குரலும் எத்தகைய
மாணவனையும் அடக்கி விடும் வல்லமைக் கொண்டது. நடுவர் அவர்களே, இவ்வுண்மையை நன்கு
அறிந்தே,ஒவ்வொரு பள்ளியிலும் கட்டொழுங்கு ஆசிரியர்கள் நியமிக்கப் படுகிறார்கள். மார் தூக்கி போர்
செல்லும் கோமகன் போன்று, தன் கரங்களில் துப்பாக்கி ஏந்தி, நேர் கொண்ட பார்வையுடைய காவல்
அதிகாரி கட்டாயம் தேவை. கற்கும் சூழலில் சொற்களைத் தொகுக்க எழுதுகோல் எத்துனை
அவசியமோ, அதேப்போலத்தான், கட்டொழுங்கான மாணவர்களைச் செதுக்க காவல் அதிகாரி
ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் தேவை என மார் தூக்கி கூவுகிறேன். நன்றி

You might also like