You are on page 1of 4

கீதைகள் மொத்தம் எத்தனை?

– 60
1. *குரு கீதை* – சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்குமான உரையாடல். இது ஒரு ஆன்மீக
ஆசானின் (குரு) அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் மையப்படுத்தி அவரது மகத்துவத்தை
எடுத்துக்கூறுகின்றது. இது ஸ்கந்தபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
2. *அஷ்டவக்ர கீதை* – ஜனக ராஜன் மற்றும் ரிஷி அஷ்டவக்ரருக்குமான உரையாடல் இது. இது
அத்வைத வேதாந்தம், பற்று மற்றும் சுயம் உணர்தலைப் பற்றியது. இது மனித உடலின் பலவீனங்களுக்கு
அப்பால் உள்ளார்ந்த ஆத்மாவின் மேன்மையையும், அதற்கு அஷ்டவக்ரரை அடையாளப்படுத்த, அதன்
துன்பங்களையும் வலியுறுத்துகிறது. இது மஹாபாரதத்தின் வன பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
3. *அவதூத கீதை* – ரிஷி தத்தாத்ரேயருக்கும் ஸ்கந்தனுக்கும் (கார்த்திகேயன்) இடையிலான
உரையாடல். இது ஜீவன்முக்தா அல்லது முக்தியடைந்த ஆன்மாவின் மிக உயர்ந்த உணர்தல்களை
வலியுறுத்துகிறது.
4. *பகவத் கீதை* – மஹாபாரத போருக்கு முன்னதாக கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான
உரையாடல். வாழ்வின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கீதையின் மிகப்பிரபலமான
வடிவம் இது.
5. *அனு கீதை* – பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். அர்ஜுனன்
கிருஷ்ணரிடம் தான் பகவத் கீதையை மறந்துவிட்டதால் அதை மீண்டும் சொல்லும்படி கேட்கும்போது,
அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், அதை மறுபடியும் கூறுவது சாத்தியமில்லை என்று கூறி, கீதையின்
தொடர்ச்சியாக இந்த கீதையை விளக்குகிறார்.
6. *ப்ரம்ம கீதை* – வசிஷ்ட முனிவருக்கும் ஸ்ரீராமருக்கும் இடையிலான உரையாடல். இது யோக-
வசிஷ்டத்தின் நிர்வாண ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதையில், பிரம்மம், உலகம் மற்றும்
ஆன்மா ஆகியவற்றின் தன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
7. *ஜனக கீதை* – அரண்மனைக்கு அருகே சித்தர்கள் பாடிய பாடலைக் கேட்டபின் ஜனக மஹாராஜர்
எழுதிய தனிப்பாடல்.
8. *இராம கீதை – I* – ஸ்ரீராமருக்கும் அவரது சகோதரரான ஸ்ரீ லக்ஷ்மணருக்கும் இடையிலான
உரையாடல். இது அத்வைத வேதாந்தத்தில் இருக்கும் ஜீவா, அவித்யா, ஈஸ்வர, மாயா போன்ற பல்வேறு
கொள்கைகளையும், நித்திய ஜீவனான, ப்ரம்மத்தை உணர்ந்து கொள்ளும் வழிமுறையையும்
விளக்குகிறது. இது ஆதியாத்மா இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
9. *இராம கீதை – II* – ஸ்ரீராமருக்கும் ஹனுமனுக்கும் இடையிலான உரையாடல். இது உலகத்தை
துறப்பதை காட்டிலும் ஞானத்தை ஈட்டுவதை வலியுறுத்தும் அனுபத்வைதிகளின் வேதமாகும். இது
தத்வ சாரண்யத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
10. *ரிபு கீதை* – ரிபு முனிவர் அவரது சீடர் நிதாகருக்கு அறிவுத்தியவை. இது அத்வைத
வேதாந்தத்தை கையாளும் ஒரு பாராட்டுக்குரிய கீதை. மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு
தொடர்பான உபபுராணங்களில் ஒன்றா சிவரஹஸ்ய புராணத்தின் இதயத்தை இது உருவாக்குகிறது.
11. *சித்த கீதை* – ஜனக மஹாராஜனின் அரண்மனைக்கு அருகே பல சித்தர்கள் பாடிய பாடல். அதன்
சாராம்சம் என்னவென்றால் – முடிவெளிக்குள் சுயஉணர்வை விரிவாக்கும் வழி அக-புற பொருள்
வேறுபடுத்தலும் சுயகட்டுப்பாடும் தான் என்பது. இது யோக-வசிஷ்டத்தின் உபசாந்தி ப்ரகரணத்தில்
விவரிக்கப்பட்டுள்ளது.
12. *உத்தர கீதை* – பகவத் கீதையின் இணைப்பாக இது பிரம்மாண்ட புராணத்தில்
விவரிக்கப்பட்டுள்ளது. இது ஞானம், யோகாம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி
பேசுகிறது.
13. *வசிஷ்ட கீதை* – நித்ய சத்தியங்களை குறித்து ஸ்ரீராமருக்கு வசிஷ்ட முனிவர் அறிவுறுத்தியது.
இது யோக-வசிஷ்டத்தின் நிர்வாண ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
14. *பாகா கீதை* – இந்திரதேவருக்கும் பாகா முனிவருக்கும் இடையிலான உரையாடல். இதில் முனிவர்,
நீண்ட காலம் வாழும் ஒரு நபர் பார்க்க வேண்டிய உலகின் துக்ககரமான நிலையைப்பற்றிய விளக்கத்தை
அளிக்கிறார். இது மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
15. *பிக்ஷு கீதை* – பேராசை கொண்ட ப்ராமணரின் வடிவத்தில் கிருஷ்ணர், பின்னர் ஒரு முனிவராகி
உத்தவருக்கு ஒரு பாடலைப் பாடுகிறார். சுமையாக இருக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தும் முறையை
அதில் கூறுகின்றார். இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
16. *கோபி கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரிந்த கோபியரின் பாடல். இந்த கீதை ஆதிமூலத்திடம்
கொண்ட மிக உயர்ந்த பக்தியால் நிறைந்துள்ளது. இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது.
17. *ஹம்ஸ கீதை* – ஓர் அன்னபக்ஷியின் வடிவில் ஸ்ரீ விஷ்ணு பிரம்ம குமாரர்களுடன் உரையாடியது.
இந்த கீதை உலகை ஒரு மாயையாகவும், ஆத்மா மட்டுமே நிரந்தர யதார்த்தமாகவும் கருதுகிறது. இது
ஸ்ரீமத் பாகவதத்தில் காணப்படுகிறது. இதை உத்தவ கீதை என்றும் குறிப்பிடுகின்றனர்.
18. *ஜீவன்முக்தா கீதை* – ஜீவன்முக்தத்தின் (முக்தி அடைந்த ஜீவன்) இயல்பை ரிஷி தத்தாத்ரேயர்
விவரிப்பது.
19. *கபில கீதை* – தாய் தேவாஹுதிக்கு மகன், கபில மஹரிஷி போதிப்பது. இது ஸ்ரீமத் பாகவதத்தில்
விவரிக்கப்பட்டுள்ளது.
20. *நஹுஸ கீதை* – நஹுஸன் மற்று யுதிஷ்டிரருக்கு இடையிலான உரையாடல். மஹாபாரதத்தில்
விளக்கப்பட்டுள்ளது.
21. *நாரத கீதை* – ஸ்ரீ கிருஷ்ணருக்கும் நாரதருக்கும் இடையிலான உரையாடல். இது ஒரு ஆன்மீக
ஆர்வலரின் பொதுவான தேவைகளை கூறுகின்றது. இது குரு அல்லது ஆன்மீக போதகரின்
ஆதிபத்யத்தை வலியுறுத்துகிறது.
22. *பாண்டவ கீதை* – ஆதி நாராயணனின் வெவ்வேறு பக்தர்கள் வழங்கும் பல்வேறு
பிரார்த்தனைகளின் தொகுப்பு. இது ப்ரபண்ண கீதை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கீதை,
சரணடைதலின் பாடல் என்று குறிப்பிடப்படுகிறது. வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட அழகான
வசனங்களின் தொகுப்பு. இந்த கீதையில் விவரிக்கப்பட்டுள்ள பாடலை அனைத்து பாவங்களையும்
அழித்து விடுதலையை வழங்குவதற்காக பாண்டவர்கள் பாடியுள்ளனர்.
23. *ரிஷப கீதை* – உலக நன்மைக்காக நித்ய சத்தியங்கள் மற்றும் விடுதலைக்கான வழி குறித்து
ரிஷப முனிவர் தனது குழந்தைகளுக்கு அறிவுறுத்தியது. இது ஸ்ரீமத் பாகவதத்தில்
விவரிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் நோக்கத்தையும், மனதின் மாறுபாடுகளை அகற்றிவைத்து,
சுயத்தை பற்றுகளிலிருந்து விடுவித்து விடுதலையை அடைவது எப்படி என்பதை மனிதகுலத்திற்குக்
கற்பிக்கிறது.
24. *சௌனக கீதை* – பிரபஞ்ச உயிரினங்களின் பொது வாழ்வின் ரகசியங்கள் குறித்து யுதிஷ்டிரருக்கு
சௌனக முனிவர் அறிவுறுத்தியது. இது மஹாபாரதத்தின் ஆரண்ய பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
25. *ஸ்ருதி கீதை* – ஸ்ருதிகள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி செய்த ப்ராத்தனை. ஸ்ரீமத்
பாகவதத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.
26. *யூகல கீதை* – ஸ்ரீ கிருஷ்ணனின் மகத்துவத்தை கோபியர்கள் விளக்குவது. இது ஸ்ரீமத்
பாகவதத்தில் இடம்பெறுகிறது.
27. *வியாத கீதை* – கௌஷிக முனிவருக்கு வேடன் வியாதன் ஆற்றிய உரை இது. இது
மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
28. *யுதிஷ்டிர கீதை* – யுதிஷ்டிரருக்கும் ஒரு யக்ஷனுக்கும் இடையிலான உரையாடல். இது
மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதை நல்லொழுக்கம் மற்றும் தெய்வீக வாழ்க்கையின்
அடித்தளத்தை உருவாக்கும் அடிப்படை நெறிமுறைகளை எடுத்துரைக்கிறது.
29. *மோக்ஷ கீதை* – ஸ்வாமி சிவாநந்தா இயற்றிய மோக்ஷ பாடல்.
30. *ரமண கீதை* – பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் போதனைகளை கொண்டு முனிவர் ஸ்ரீ வசிஷ்ட
கணபதி அவர்கள் எழுதியது.
31. *ஈஸ்வர கீதை* – கூர்மபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள சிவபெருமானின் போதனைகள். ஈஸ்வர
கீதை என்பது சிவபெருமானை மையமாகக் கொண்ட ஒரு சைவ போதனை தத்துவமாகும். பகவத்
கீதையைப் போலவே அத்வைத வேதாந்தம், பக்தி, ஒருமுகப்படுதல் மற்றும் சிவபெருமானிடம்
சரணடைதல் ஆகியவை சம்ஸார கடலைக் கடந்து தெய்வீக பேரின்பத்தையும் விடுதலையும் அடையச்
செய்கிறது என்பதை விளக்குகிறது.
32. *கணேஷ கீதை* – அரசன் வாரேண்யனுக்கு ஸ்ரீ கணபதி உரையாற்றியது. கணேஷ புராணத்தின்
க்ரீட கண்டத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.
33. *தேவி கீதை* – தேவி பாகவதத்தில் ஒரு பாகமான இந்த கீதை, இமாவானின் வேண்டுகோளின்
பெயரில் தேவியே தன்னுடைய முக்கிய ரூபங்களைப் பற்றி அவருக்கு விளக்குவது.
34. *பராசர கீதை* – வியாஸரின் தந்தையான பராசர ரிஷிக்கும் மிதிலை அசரனான ஜனக
மஹாராஜனுக்கும் இடையிலான உரையாடல் இது. மஹாபாரத இதிகாசத்தில் சாந்தி பர்வத்தில் இது
விவரிக்கப்பட்டுள்ளது.
35. *பிங்கல கீதை* – மீண்டும் மஹாரதத்தின் சாந்தி பர்வத்தில் இடம் பெற்ற ஒன்று இது. பிங்கலை
எனும் ஆடல் பரத்தைக்கு கிட்டிய ஞானத்தையும் அறிவொளியையும் இக்கதை ீ கொண்டுள்ளது.
36. *போத்ய கீதை* – யயாதி மன்னனுக்கு ரிஷி போத்யருக்கும் இடையிலான உரையாடல்.
மஹாபாரத்ததில் சாந்தி பர்வத்தில் ஒரு பகுதியான மோக்ஷ பர்வத்திலிருந்து எடுக்கப்பட்டது.
37. *யம கீதை* – ஒரு விஷ்ணு பக்தனின் குணங்கள், சுயத்தின் தன்மை, பிரம்மத்தின் கருத்தாக்கம்,
பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து மோட்சம் அல்லது விடுதலையை அடைவதற்கான
முறை ஆகியவற்றை இது விரிவாக விளக்குகிறது. இதை விஷ்ணு புராணம், அக்னி புராணம் மற்றும்
நரசிம்ம புராணங்களில் விவகிர்ர்ரப்படுவதை காணலாம்.
38. *விசாக்க்ஷு/விசக்னு கீதை* – அஹிம்சை பற்றி மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் யுதிஷ்டிரருக்கு
பீஷம் ர் உரைத்த கதை. தியாகத்தின் வெளிப்புற அம்சங்களில் கவனம் செலுத்துவதையும் விலங்குகளை
பலி கொடுத்து பாவங்களைச் செய்வதற்கு மாறாக, மனிதனில் இருக்கும் அனைத்து வன்முறை அல்லது
விலங்கு குணங்களையும் தியாகம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
39. *மன்கி கீதை* – மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், மன்கி எனும் முனிவரின் கதையை பீஷம ் ர்
யுதிஷ்டிரருக்கு கூறுவது.
40. *வியாஸ கீதை* – பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ரிஷிகளுக்காக வியாஸ மஹரிஷியின்
சொற்பொழிவு. வியாஸ கீதை மிகவும் கருத்தியல் வாய்ந்தது. ஆகவே, யோகிகளுக்கும் மேம்பட்ட
தேடுதலில் ஈடுபடும் ஆர்வலருக்கும் ஏற்றவாறு அமைந்தது. இருப்பினும் பிரம்மத்தை அடைய
விரும்புவோருக்கும் சிரத்தையுடன் யோக அனுஷ்டானங்களை உறுதியாகவும் விடாமுயற்சியுடன்
செபவருக்கும், வேதங்களை விடாமுயற்சியுடன் கற்று பாகுபாடு அறிபவர்களுக்கும் இந்த கீதை
பொருந்துகிறது.
41. *வ்ரித கீதை* – அசுரகுரு சுக்ராச்சாரியருக்கும் வ்ரிதாசுரனுக்கும் இடையில் நடக்கும் இந்த
உரையாடல் மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் இடம்பெற்றுள்ளது.
42. *சிவ கீதை* – பத்ம புராணத்தில் இடம் பெற்றுள்ள, சிவபெருமான் ஸ்ரீராமசந்திரருக்கு
போதித்தவை.
43. *சம்பக கீதை* – ஒரு கற்றறிந்த பக்திமானான ப்ராமணன், சம்பகன் துறவறத்தினால் மட்டுமே
ஒருவர் நித்ய மகிழ்ச்சியை அடைய முடியும் என்ற செய்தியை அளிக்கிறார். இது மஹாபாரதத்தின்
சாந்தி பர்வத்தில் பீஷம ் ருக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில்
விவரிக்கப்படுகிறது.
44. *சூத கீதை* – ஸ்கந்தபுராணத்தின் யாக வைபவ கண்டத்தில் உள்ளது. இது ஒற்றுமையை
ஆதரித்து இரட்டை வாதத்தை மறுக்கிறது.
45. *சூர்ய கீதை* – இது பிரம்மனுக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் இடையிலான உரையாடல். இதில்
சூர்யன் தனது சாரதியான அருணனிடம் சொற்பொழிவு செய்த கதையைச் சொல்கிறார். இது குரு
ஞான வசிஷ்டத்தில் உள்ள தத்வ சாராயணத்தில் காணப்படுகிறது.
46. *ஹரித கீதை* – பீஷம ் ரின் கூற்றுப்படி, ஹரித முனிவர் கற்பித்ததாகக் கூறப்பட்ட போதனைகள்
சன்யாச தர்மம், ஒரு சாதகனின் உண்மையான பாதை, மோக்ஷம் அல்லது விடுதலையை அடைய இருக்க
வேண்டிய குணங்கள் பற்றியது. இது மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் பீஷம ் ருக்கும் யுதிஷ்டிரருக்கும்
இடையிலான உரையாடலின் வடிவத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
47. *விபீஷன கீதை* – இந்து இதிகாசமான இராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள
ஸ்ரீராமருக்கும் விபீஷணனுக்கும் இடையிலான உரையாடல் இது. விபீஷணனுக்கு இராமர் ஆன்மீக
ரீதியில் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மனதில் வைத்து வாழ்க்கையின் சோதனைகள் மற்றும்
துன்பங்களை கடந்து செல்ல, விபீஷண கீதை நமக்கு உதவுகிறது.
48. *ஹனுமத் கீதை* – இராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி திரும்பி, ஸ்ரீராமரும் தேவி சீதையும்
ஹனுமனுக்கு அளித்த உரை.
49. *அகஸ்திய கீதை* – அகஸ்திய முனிவர் மோக்ஷ தர்மத்தின் கருத்துகளையும், ஜீவத்மா பக்தி,
துறவறம் மற்றும் குருவின் அருளால் பரமாத்மாவை அடையக்கூடிய வழிகளையும் விளக்குகிறார். இது
வராஹ புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
50. *பாரத கீதை* – ஸ்ரீமத் பாகவத புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதை இறைவனின்
மகிமையை அழகாக வெளிப்படுத்துகிறது. மனம் கட்டுப்பாடற்றதாக இருந்தால் ஒரு ஆர்வலர்
எதிர்கொள்ளும் ஆபத்துக்களை விளக்குகிறது. அதேவேளை பாரதனின் மகத்துவத்தை நமக்குக்
காட்டுகிறது, பாரத வர்ஷா என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் நாட்டிற்கு வழங்கப்பட்ட
பொருத்தமாக பெயர்.
51. *பீஷம் கீதை* – மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதையில், மகேஸ்வரர், விஷ்ணு மற்றும்
நாராயணன் என பல்வேறு பெயர்களை உச்சரிக்கும் பீஷம ் ரின் பாடல்கள் உள்ளன. மேலும் இந்த
பாடல்களை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாடும் ஆர்வலருக்கு பேரின்பம், அமைதி மற்றும் வளம்
ஆகியவற்றை அளிப்பதாக கூறப்படுகிறது.
52. *ப்ராமண கீதை* – மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதை, மாயா மற்றும் மாயையின்
பிணைப்புகளிலிருந்து எவ்வாறு தப்பிப்பது அதோடு அனைத்து மனித இருப்புக்கும் இலக்காக இருக்கும்
மிக உயர்ந்த விடுதலையை அடைவது பற்றி ஒரு கற்றறிந்த பிராமணனுக்கும் அவரது மனைவிக்கும்
இடையிலான உரையாடலின் வடிவத்தில் உள்ளது.
53. *ருத்ர கீதை* – பாகவத புராணத்தில் முக்திக்காக விஷ்ணுவைப் புகழ்ந்து பாடிய பாடல்கள்
ருத்ரனால் விளக்கப்பட்டுள்ளது. வராஹ புராணத்தில் அது விஷ்ணு பற்றிய ஒரு பாடல் உட்பட ருத்திரனால்
வழங்கப்பட்ட பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் இவர்களின் அடையாளத்தை விவரிக்கிறது.
54. *சனத்சுஜாதா கீதை* – இது மஹாபாரதத்தின் உத்யோக பர்வத்தில் காணப்படுகிறது.
திருதிராஷ்டிரனுக்கும் ரிஷி சனத்சுஜாதாவுக்கு இடையிலான உரையாடலிலும் அதன் தன்மையிலும்
வெளிப்படுகிறது இக்கீதை. இது பிரம்மம், மனம், புத்தி மற்றும் பிரம்மத்தை அடைவதற்கான முறைகள்
ஆகியவற்றை விளக்குகிறது.
55. *யோகி கீதை* – இது சுவாமி நாராயணனின் நான்காவது ஆன்மீக வாரிசான ஸ்ரீ யோகிஜி
மஹாராஜரின் பிரார்த்தனை மற்றும் ஆன்மீக போதனைகளின் தொகுப்பாகும். ஆன்மீக உணர்வை
அடைவதற்கும், பிரம்மருவாக மாறுவதற்கும் அல்லது கடவுளை உணர்வதற்கும் ஒரு ஆர்வலருக்கு
தேவையான அனைத்து பண்புகளையும் இது விளக்குகிறது.
56. *வல்லப கீதை* – இது ஷோதசா கிரந்தங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஸ்ரீ
வல்லபாச்சார்யரின் பதினாறு படைப்புகளின் தொகுப்பாகும். இதில் அனைத்து வகையான
தலைப்புகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. மோக்ஷம் அல்லது விடுதலை என்ற வாழ்க்கையின்
உண்மையான இலக்கை நாட அவர் தனது சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
57. *விதுர கீதை* – பொதுவாக விதுர நீதி என்று இது குறிப்பிடப்படுகிறது. மஹாபாரத இதிகாசத்தில்,
விதுரருக்கும் மன்னன் திருதிராஷ்டிரனுக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் சரியான
நடத்தை, நியாயமான விளையாட்டு, ஆளும் கலை மற்றும் அரசியல் குறித்த தகவல்களை
உள்ளடக்கியது.
58. *வித்யா கீதை* – இதில் திரிபுர ரஹஸ்யமானது அடங்கியுள்ளது. அதோடு தத்தாத்ரேயர்
பரசுராமருக்கு விவரிக்கும் ஒரு கதையின் வடிவத்தில் இது உள்ளது. திரிபுரா அல்லது மூன்று
புரங்களுக்கும் தலைமை தாங்கும், மிக உயர்ந்த ஞானமுடையவளான ஆதி சக்தியை வித்யா என்றும்
அழைப்படுகிறாள். ஆகவே இந்த கீதையை, வித்யா கீதை என்றும் அழைப்பதுண்டு.
59. *ப்ராமர கீதை* – ஒரு இடைத்தரகராக ‘தேனீ’ (ப்ராமரா) மூலம் கோபியர்களுக்கும் உதவருக்கும்
இடையிலான உரையாடல். இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது.
60. *வேணு கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழல் (வேணு) சத்தம் கேட்டதும் கோபியர்களின்
ஆழ்நத ் உணர்ச்சி கொந்தளிப்பில் எழுந்த அந்தரங்கமான உரையாடல்கள் கொண்டது. இது ஸ்ரீமத்
பாகவதத்திலிருந்து வந்தது.
சற்று கவனித்தீர்களானால் நிறைய கீதைகள் பாகவத்தில்தான் அடங்கியுள்ளது, அடுத்து
மஹாபாரதத்தில். ஆதலால்தான் பாகவதம் சற்றே விசேஷமாக பார்க்கப்படுகின்றது. பாகவதத்தை
படிக்க முடியாவிடினும், மஹாபாரதத்தை தவறாமல் படியுங்கள்.

You might also like