You are on page 1of 1

பதிக எண் : 106 பாடல் : 4

கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்


றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய வற்புத மறியோமே
பொருள்

கறைகொள் கண்டத்தர் : நீலகண்டரும்

காய்கதிர் நிறத்தினர் : செம்மேனியரும்

அறத்திற முனிவர்க்கன் : அற நெறியில் நின்ற 4 முனிவர்களுக்காக

இறைவர் ஆலிடை நீழலில் இருந்துகன் இனிதருள் பெருமானார் :


இறைவர் ஆலி என்ற ஆலமரத்தின் நிழலில் இருந்து அருள் உபதேசம் செய்கிறார்.

மறைகள் ஓதுவர் : வேதங்களை ஓதுபவர் மற்றவர் கேட்டு இன்புறும்படி ஓதுவித்தல்.

வருபுனல் வலஞ்சுழி இடமாக : காவிரி நதி கோவிலை நெருங்கிவரும்போது வலமாக


சுழித்துப்போகுதல்.

மகிழ்ந்து தரும் கானத்து இறைகழல் : அரிய இசையாக வரும் காலில் அணியும் கழல்
ஓசை (சிவபெருமான்)

சிலம்பு பார்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே : சிலம்போசை கேட்கும் (சக்தி) படியாக


ஆடும் இப்படிப்பட்ட அற்புத காட்சியை அறியவில்லையே.

பொழிப்புரை:

நீலகண்டரும், செம்மேனியரும் அன்று ஆலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும்


வேதங்களை அருளிய வரும் ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு
ஆர்க்க நின்று ஆடும் அற்புதத்தை யாம் இன்னதென அறியேம்.

You might also like