You are on page 1of 6

இன்பறய இபளஞர்கள் நாபளய ைபலவர்கள் என்கிவறாம்.

ஆனால்,
இத்ைபகய மாணவபர உருவாக்க மூலாைாரமாக அபமவது
நற்பண்புகவள. ஒரு மாணவனிடம் அறிவுடன் நற்பண்புகளும்
நிபறந்திருந்ைால் வபரும் புகழும் அவனுக்குக் கிட்டுவது திண்ணம்.
நற்பண்புகள் பலவபகப்படும். அவற்றில் சில, வபரியவர்களுக்கு மரியாபை
அளித்ைல், வபாறுபமயுடன் நடந்துவகாள்வது, பிறருக்கு உைவுவது,
ைன்வமல் மதிப்பும் நம்பிக்பகயும் வரும்படி நடப்பது, பணிவுடன் இருப்பது
வபான்றபவ ஆகும். நற்பண்புகளில் ைபலயாயது ஒழுக்கவம ஆகும்.
ஒழுக்கம் விழுப்பம் ைரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். என்று
வான்புகழ் வள்ளுவர் இயம்பியுள்ளார். பண்புகள் உருவாக மூல வித்ைாய்
அபமவது ஒழுக்கவம. ஒருவரிடம் ஓழுக்கம் இல்லாவிட்டால் அவர்வமல்
பிறருக்கு மதிப்பும் மரியாபையும் வைான்றாது. ஒழுக்கம்
இருந்ைால்ைான் நாம் நம் வாழ்பவக் கட்டுப்பாட்டுடன் சீரிய முபறயில்
நடத்ை முடியும். அடுத்ைைாக ஒழுக்கத்துடன் பணிவும் இருப்பது
முக்கியமானது. மனதில் ஆணவம் குடிவகாண்டு ைற்வபருபமயுடன்
நடப்பவர்கபளப் பலரும் விரும்பமாட்டார்கள். ைற்புகழ்ச்சி என்றும்
கூடாது. அதுவும் நம்பமவிட வயதில் மூத்ைவர்களிடம் நாம் பணிவுடன்
நடந்துவகாள்ள வவண்டும். இபைவய வள்ளுவர்,

மாணவர்களிடம் இருக்க வேண்டிய மற்றொரு நற்பண்பு


காலந்தவறாமையாகும். நாம் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் நாம் சரியான
நேரத்திற்குச் செல்ல வேண்டும். தாமதமாகப் பள்ளிக்குச் சென்றால் நமக்குத்
தண்டனை விதிக்கப்படும். நமக்கு ஏன் வண்
ீ தண்டனை? நாம் காலந்தவறாமல்
சென்றால்ல் நமக்கு நன்மைதான் கிட்டும்.

மாணவர்களிடம் காணப்பட வேண்டிய மிகவும் முக்கியமான நற்பண்பு


மற்றவர்களுக்குச் சேவை செய்வதாகும். தானத்தில் பலவகை உண்டு. இரத்த
தானம், பண தானம், நேரத்தைச் செலவு செய்து உதவி நாடுபவர்களுக்குச் சேவை செய்வது
போன்ற பல தானங்கள் இருக்கின்றன. சிறுவர்கள் ஆகிய நாம் பண தானம்
செய்ய முடியாவிட்டாலும் நம் நேரத்தைச் செலவு செய்வது றெறவ பெய்வது
நம்மால் இயன் றெறவயாகும். சில றநரங்களில் நாம் நம் ெள்ளிகளில்
முதிறயார் இல்லங்கள், உடல் ஊனமுற்ற ார் இருக்கும் இல்லங்கள்
றொன் ெல இடங்களுக்குச் பென்று உதவி பெய்யலாம். இறவறய நல்ல
மாணவனிடம் காணப்பெறும் நற்ெண்புகள் என நான் கருதுகிற ன
பெரும் மதிப்பிற்குரிய பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே, பள்ளியின்
துணைத்தலைமை ஆசிரியர்களே, ஆசிரியர்களே, சிரமம் பாராமல் வருகை புரிந்திருக்கும்
பெற்ரோர்களே, மாணவ மணிகளே, உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொன்னான நேரத்தில் இம்மேடையில்
எனக்கு வாய்ப்பினை கொடுத்தமைக்கு என் இருகரம் கூப்பி நன்றியை
தேரிவித்துக்கொள்கிறேன். நான் என் உரை நான் துவங்கும் முன் இன்றைய கால
இளையோரிடையே தமிழ் மொழியின் பயன்ப்பாடு குறைந்தவாறே இருக்கிறது என்றால்
யார் யார் ஒப்புக்கொள்கிறிர்கள். ஒப்புக்கொண்டமைக்கு நன்றி. அதனை ஒட்டி தான் இன்று
நான் உரையாற்ற வந்துள்ளேன். இன்று நான் உங்கள் அனைவரின் முன் ஒரு உரையற்ற
விரும்பு தலைப்பு ‘தமிழ் மொழியின் பயன்ப்பாட்டை இளையோரிடம் ஊக்குவிப்போம்’
ஆகும்.

அன்பர்களே,

தொன்மை தமிழ், இலக்கிய வளமும் இலக்கண நுட்பமும் கொண்ட மொழியாக திகழ்ந்து


வருகிறது. தமிழின் தொண்மையை ஆராய்ந்து கண்டறிந்த மொழி ஆராய்ச்சியாளர்கல்
தமிழ்மொழி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையதாக அகல்வாராய்ச்சியின் வழி
நிருபித்துள்ளார்கள். முச்சங்கள் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ் மொழிக்கு
மட்டுமே உண்டு. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என பகுத்து தமிழை
வளர்த்திருக்கிறார்கள். அகத்தியம் எனும் நூல் முதற்சங்கத்தில் தோன்றிய முதல் நூலாக
கருதப்படுகிறது. தொல்காப்பியம் இடைச்சங்கத்தில் தோன்றிய நூலாக கருதப்படுகிறது.
திருக்குறள், குறுந்தொகை போன்ற நூல்கள் கடைச்சங்க நூல்களாக கொள்ளப்படுகின்றது.
செம்மொழியாம் நம் தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழி. நம் மொழி
என்றென்றும் வாழவதற்கு முதலில் பெற்றோர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை
இளையோர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பரவலாக பல நாடுகளில் ஆங்கிலம்
பேசப்படுவதால் நாம் வர்களுடன் தொடர்பு மற்றும் நட்பு வைத்துக் கொள்ள ஆங்கில
மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் தாய்மொழிகளில் பின்தங்கி
விடுகிறோம். முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை தாய்மொழியில் பேச ஊக்குவிக்க
வேண்டும்.

பெற்றோர்கள் இளையோர்கள் தமிழில் பேசுவது மிக அவசியம். முக்கியமாக வீடுகளில்


அவர்கள் தமிழில் பேச வேண்டும். சிறு வயது முதலே தமிழில் கேட்டு தமிழில் பதில்
சொல்லி வளரும் பிள்ளைகள் தமிழை நன்றாகவே பேசுகிறார்கள். இளையோர்கள் தமிழ்
மொழியைக் கற்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். பல
வழிகளில் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்கலாம். 1 வயது முதல் 2 வயது வரை
உள்ள இளையோர்களுக்கு எளிதில் சொல்லக் கூடிய அம்மா, அப்பா, உறவுமுறை,
வணக்கம், போன்ற சொற்களை சொல்லித் தரவேண்டும். சிறு வயதில் இளையோர்களின்
கற்கும் திறன் மிக அதிகமாக இருக்கும்.

மூன்று வயது முதல் இளையோர்களுக்கு படங்களைக் காட்டி அதன் பெயர்களைச்


சொல்லி விளக்க வேண்டும். உதாரணமாக சிங்கம் என்று சொன்னால் அது கர்ஜிக்கும்,
காட்டுக்கு ராஜா, ஆண் சிங்கத்திற்கு பிடறி இருக்கும் என சிங்கத்தைப் பற்றிய பல
தகவல்களையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். படங்களைப் பார்ப்பதன் மூலம்
இளையோர்கள்கள் மனதில் அக்காட்சி ஆழமாக பதிந்து விடும். எழுத்துக்களை எடுத்துக்
கொண்டால் எளிதில் எழுதும்படி உள்ள எழுத்துக்களில் எழுத ஆரம்பிக்க வேண்டும்.
சிறிய அட்டைகளில் எழுத்துக்களை எழுதி எழுத்துக்களைச் சொல்லி இளையோர்களை
எடுக்கச் சொல்லலாம். பின்னர் அவ்வெழுத்துக்கள் தொடர்பாக உள்ள சொற்களைக் கூறி
எழுத வைக்கலாம். பெற்றோரின் அக்கறையினாலும், பொறுமையினாலும் தான் இதை
நிறைவேற்ற முடியும்.

இளையோர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடல்கள் இன்றியமையாத பங்கை ஆற்றுகின்றன.


இளையோர்கள் எளிதில் புரிந்து கொண்டு பாடி விடுவார்கள். நாம் அப்பாடல்களைப் பாடி
நடித்தும் காட்ட வேண்டும். உதரணமாக ஒளவையார் அருளிச்செய்த மூதுரை பாடிக்
கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளும் நம்மைப் பார்த்து அதே போல் செய்வார்கள்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் என்றாலே குழந்தைகள் தூரம் ஓடி விடுகிறார்கள்.
அவர்களுக்கு பிடிக்கும் வகையில் சொல்லிக் கொடுப்பது பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. தமிழ் மொழியில் யோசித்து தமிழ் மொழியில்
எழுத அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் படிப்பதை இளையோர்கள் வழக்கப்படுத்திக்
கொள்வதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
சின்ன சின்ன கதைகள் மூலம் அறிவுரைகள் பல கூறலாம். சிறுவயது முதலே கதைகள்
மூலம் அறிவுரைகள் கூறும் போது அவர்கள் மனதில் அது பசுமரத்தாணி போல பதிந்து
விடும். பின்னர் அவர்களையே எழுத்துக்களைக் கூட்டி படிக்கச் சொல்ல வேண்டும். படிக்க
படிக்கத்தான் அவர்களின் தமிழறிவு வளரும். இளையோர்கள் அவர்கள் வயது
ஒத்தவர்களுடன் அல்லது நண்பர்களுடன் பூங்காவிலோ, கோயில்களிலோ மற்றும் வெளி
இடங்களிலோ சந்தித்தால் தமிழில் பேச ஊக்கப்படுத்த வேண்டும். பேச பேசத்தான் மொழி
ஆர்வம் அதிகரிக்கும். இளையோர்களின் தமிழ் கற்கும் திறன் ஒவ்வொரு பெற்றோரின்
கையில் தான் உள்ளது. ஆசிரியர் பள்ளியில் சொல்லிக் கொடுத்தாலும் வீட்டில் தினமும்
தமிழ் படிப்பது மிகவும் முக்கியம். இதை பெற்றோர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

பள்ளிகளில் தமிழ்மொழியில் பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி என்று


வருடத்திற்கு இரண்டு முறைகள் நடத்தி அதற்கு பரிசுகள் வழங்கி மாணவர்களை இன்னும்
நிறைய தமிழில் எழுத ஊக்குவிக்கலாம். தமிழ் வகுப்பில் தமிழில் மட்டுமே பேச
தமிழாசிரியை மாணவர்களை அனுமதிக்க வேண்டும். அப்படி ஆங்கிலம் கலக்காமல் பேசும்
மாணவர்களுக்கு பேனா, பென்சில் மற்றும் ஸ்கேல் போன்றவற்றை தினமும் பரிசாக
வழங்கலாம். ஆண்டு தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தேர்வு
செய்து பணப்பரிசு அளிக்கலாம். தமிழ் இலக்கியம் படித்த ஆசிரியருக்கும் ஆங்கிலம்,
கணிதம் படித்த ஆசிரியர்கள் போலவே சம்பளத்தொகையை நிர்ணயம் செய்யவேண்டும்.
அடுத்து தமிழை வளர்ப்பதில் அரசாங்கத்தின் பங்கு பெரும்பங்கு. மாவட்ட ஆட்சியர்கள்
அவரவர் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட மாவட்டங்களின் பள்ளிகளை ஆறு மாதத்திற்கு
ஒருமுறை மேற்பார்வையிட்டு நாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்ப பத்து தலைப்புகளை
மாணவர்களிடையே கொடுத்து தமிழில் கட்டுரை வரைய சொல்லலாம். சிறந்த
கட்டுரைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கையாலே பரிசு வழங்க சொல்லலாம். இது
இளையோர்களின் தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை தூண்டிவிடும்.

எனவே, “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என்று
பறைசாற்றும் வரிகளை போல தமிழ் என்றும் மங்காது அதன் பெருமைகள் என்றும்
குன்றாது. பிறநாட்டவராலும் வியந்து போற்றப்படும் பல பெருமைகளையும் தனித்துவமான
அடையாளங்களையும் தமிழ் தன்னகத்தே கொண்டிருக்கிறது.“யாமறிந்த மொழிகளிலே
தமிழ் போல இனிதாவது எங்கும் காணோம்” என்கிறார் பாரதியார். அது போல எமது
மொழியின் பெருமையை நாம் அறிந்து அதன் மேன்மைக்காக இளையோர் முதல்
முதியோர் வரை கற்ற வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் இருக்கிறது.

ஒரு மொழி சிதைந்துபோவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்ற போதிலும், அதனைப்


பேசுவோரால் உதாசீனம் செய்யப்படுவதே அவற்றுள் எல்லாம் தலையாய காரணமாகும்.
மக்கள் தமது மொழியை உதாசீனம் செய்வதற்குப் புலம்பெயர்தல், பொருளாதாரம்,
மேட்டுக்குடி மனோபாவம் போன்ற பல காரணிகளுள் ஊடகமும் முக்கியமான ஒன்றாகக்
கருதப்படுகின்றது. நாம் புலம்பெயர்ந்து வாழும் இந்த நாட்டில் தமிழை அழியவிடாமல்
காப்பாற்றி, அதனை வளர்ச்சியடையச் செய்வதற்கு ஊடகங்கள் எவ்வகையான
பங்களிப்பினை வழங்கலாம் என்பதைச் சுருக்கமாக நோக்குவதே இக்கட்டுரையின்
நோக்கமாகும்.

முதலாவதாக, தமிழைத் தக்கவைத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின், அது அடுத்த


தலைமுறையினரைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை ஊடகங்கள் செய்ய
முன்வரவேண்டும். மழலைகள், சிறுவர்கள், இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கென்றும்
படைப்புகளுக்கென்றும் அதிக நேரத்தையும் இடத்தையும் ஒதுக்க ஊடகங்கள் மனம்
துணியவேண்டும். ஊடகங்களில் முகம் ஒளிர்கின்றபோது, குரல் ஒலிக்கின்றபோது,
படைப்புக்கள் தெரிகின்றபோது வளர்ந்தவர்களே மனதில் பூரிப்பு அடைகின்றனர்.
இந்நிலையில் எமது இளம் தலைமுறையினரிடையே இவை ஏற்படுத்தக்கூடிய நல்ல
விளைவுகள் பற்றி விபரிக்க வேண்டியதில்லை.

இரண்டாவதாக, தமிழைப் பிழையறப் பயன்படுத்தும் பிரதான பணியினை எமது


ஊடகங்கள் மேற்கொள்வது மிக அவசியம். உதாரணமாக – ‘இன்று ஈராக்கின் பல்வேறு
பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் அமெரிக்கத் துருப்புக்களுக்கும் இடையே
மோதல்கள் இடம்பெற்றது.’ இங்கே ‘ மோதல்கள்’ பன்மையாகவும் ‘இடம்பெற்றது’
ஒருமையாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். சாதாரணமானவர்கள்கூட
விளங்கிக்கொள்ளக்கூடிய ஒருமை – பன்மை இலக்கண விதிமுறைகள் தெரியாத பலர்,
இன்று ஊடகங்களுக்கென செய்திகளையும் ஆக்கங்களையும் எழுதிக்கொண்டிருக்கும்
சோகத்தை எங்கு போய்ச் சொல்லி அழமுடியும்? இது போன்ற எளிய இலக்கணப்
பிழைகளையும் ழகர, ளகர, லகர பேத அறியாமையால் ஏற்படும் பிழைகளையும் ஏனைய
எழுத்துப் பிழைகளையும் தினம் தினம் சகல ஊடகங்களிலும் பார்க்க முடிகின்றது.
இவ்வாறான அடிப்படை இலக்கணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் இன்றி, அழகு
தமிழை இலகு தமிழாக எமது ஊடகங்கள் பயன்படுத்த ஆவன செய்தல் அவசியம்.

You might also like