You are on page 1of 2

திருமால் திருப்பல்லாண்டு

ஆரம்பப் பாடல்கள்

1. திருப்பல்லாண்டு மகிமை

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்


ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு
ஓம் என்னும் அதுபோல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த்
தான் மங்கலம் ஆதலால்.

--ஸ்ரீ மணவாள மாமுனிகள், உபதேச ரத்தின மாலை, 19.

2. திருப்பல்லாண்டு தனியன்கள்

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்


சொன்னார் கழற் கமலம் சூடினோம்--முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீ ழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து. 1

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று


ஈண்டிய சங்கம் எடுத்தூத--வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று. 2

--ஸ்ரீ பாண்டிய பட்டர்

1
3. திருமாலிடம் பிரார்த்தனை

துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது
அங்கு ஏதும் நானுனை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்தரவணைப் பள்ளியானே.

--ஸ்ரீ பெரியாழ்வார்

நிறைவுப் பாடல்

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி


தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி --ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.

--ஸ்ரீ மணவாள மாமுனிகள், உபதேச ரத்தின மாலை, 3.

***

You might also like