You are on page 1of 2

ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா விமர்ஶம்

ராஜராஜேஶ்வரியாகவும் ஶ்ரீவித்யா ஸ்வரூபிணியாகவும் விளங்கும் ஶ்ரீகமலாம்பா மஹாத்ரிபுரஸுந்தரியின்


த்யான கீர்தத
் னத்தின் பல்லவி வைபவத்தை சிந்தனை செய்தோம். சரணத்தின் கீர்த்தனையை ஶ்ரீலலிதா
பரமேஶ்வரியான ஶ்ரீகமலாம்பாளின் அனுக்ரஹத்துடன் சிந்தனை செய்வோம்

ஸகல லோக நாயிகே – ஸகல புவனங்களுக்கும் ஏக நாயகியாக விளங்குபவள் ஸாக்ஷாத்


ஶ்ரீராஜராஜேஶ்வரியான ஶ்ரீகமலாம்பாள். மூகபஞ்சசதியில் ஶ்ரீமூகாச்சார்யாள் "ஆப்ரஹ்ம ஸ்தம்ப ஶில்ப
கல்பனயா" என்பார். ஸகல ப்ரஹ்மாண்டங்களையும் உண்டாக்கி, ரக்ஷித்து, அழிக்கும் மஹாஶக்தியாக,
ஸமஸ்த புவனங்களுக்கும் நாயகியாக ஶ்ரீராஜராஜேஶ்வரியாக விளங்குபவள்.

ஸங்கீ3 த ரஸிகே – ஸங்கீத ஶாஸ்த்ரத்தில் நிரம்ப ப்ரியத்தை உடையவள். "ஸரிகமபதநி தாம் நிரதாம்"
என்பார் காளிதாஸர். அம்பிகையை வீணா கானத்தில் ப்ரியம் உடையவளாக அனேக புராண, தந்த்ரங்களில்
கூறியிருக்கின்றது. வீணாதாரியாக ராஜஶ்யாமளா ஸ்வரூபத்திலும், ஸாக்ஷாத் ஶ்ரீமஹாஶோடஸி
ஸ்வரூபத்தில் அம்பாள் விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஸங்கீத மும்மூர்த்திகள் (ஶ்யாமா ஸாஸ்த்ரிகள்,
முத்துஸ்வாமி தீக்ஷிதர், த்யாக ப்ரஹ்மம்) மூவருமே ஶ்ரீவித்யா உபாஸகர்கள் என்பதும், மூவரும்
ஸங்கீதத்திலேயே ஶ்ரீவித்யோபாஸனை செய்து ஶ்ரீபராஶக்தியின் தாதாத்ம்யத்தை அடைந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

ஸு-கவித்வ ப்ரதா3 யிகே – அழகிய கவிகள் இயற்றும்படியான வாக்விலாஸத்தை


அனுக்ரஹிக்கக்கூடியவளே. ஸௌந்தர்யலஹரியில் மூன்று ஸாரஸ்வத ப்ரயோகங்கள் விஷேஷமாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்படிக வர்ணமாக பராஶக்தியை உபாஸிக்கும் பக்தனுக்கு ஞானாம்ருத்ததை
பொழியும்படியான வாக்விலாஸமும், ஸிந்தூர வர்ணமுடையவளாக ஶ்ரீபரதேவதையை த்யானிக்கும்
பக்தனுக்கு காவ்யம் முதற்கொண்டவைகளை இயற்றி ஸகல ஜனங்களும் அந்த வாக்விலாஸத்தில்
கட்டுண்டு கிடக்கும்படியான ஒரு அனுக்ரஹமும் ஏற்படும். அம்பாளை உபாஸிப்போருக்கு இயல்பாகவே
வாக்விலாஸம் விஷேஷமாக இருக்கும் என்பதும் கண்கூடு.

ஸுந்த 3 ரி க 3 த மாயிகே – கருணை மிகுந்தவள் ஆதலால் ஶ்ரீகமலாம்பாள் ஸுந்தரி. ஸுந்தரியான இவள்


மாயைக்கு அப்பாற்பட்டவள். தேவி தந்த்ரங்கள் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ஸ்வரூபத்தை விஷேஷமாகக்
கூறுகின்றன.

நிஷ்களமாக விளங்கும் பூர்ண ப்ரஹ்மமே ஶ்ரீலலிதை. மாயைக்கு அப்பாற்பட்ட பூரண சைதன்யம். ஸாக்ஷாத்
ஶ்ரீகமலாம்பாளின் ஸ்வரூபம் இதுவே. இந்த ஸ்வரூபத்தையே பராஸம்வித், சித், ஸம்வித், பராத்ரிபுரா
என்றெல்லாம் தந்த்ர ஸாஸ்தர் ங்கள் கூறுகின்றது.

இந்த பூர்ண சைதன்யம், உலகை உண்டாக்க விரும்பி காமகலையானது. அதாவது ப்ரகாஶ விமர்ஶ
ஶக்திகளாகப் பிரிந்து, பின் காமகலையானது.

அந்த காமகலையிலிருந்து மாயா தத்வம் தோன்றியது. அந்த மாயா தத்வத்தில் காமகலை உலகை
உண்டாக்க வேண்டும் என்ற இச்சையுடன் ப்ரவேஶித்து ஶ்ரீபுவனேஶ்வரி எனும் வடிவம் தாங்கியது.

பராத்ரிபுரை உலகை உண்டாக்க இச்சித்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ள நினைத்து ஶ்ரீபுவனேஶ்வரி


எனும் வடிவைத் தாங்கினாள்.
பின்னர் ஶ்ரீபுவனஸுந்தரி லீலையாக ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் மூன்று குணங்களை உண்டாக்கினாள்.
இவளே ஸத்வ குணத்தில் ப்ரவேஶித்து "மஹாஸரஸ்வதி" எனும் வடிவைத் தாங்கினாள்.

இவளே ரஜோகுணத்தில் ப்ரவேஶித்து "மஹாலக்ஷ்மி" எனும் வடிவைத் தாங்கினாள்.

இவளே தமோகுணத்தில் ப்ரவேஶித்து "மஹாகாலி" எனும் வடிவைத் தாங்கினாள்.

மூன்றும் ஸமஷ்டியாகி ஒன்றாக விளங்கும் ஸ்வரூபமே ஸாக்ஷாத் ஶ்ரீசண்டிகா பரமேஶ்வரி.

இப்படி உலக வ்யவஹாரத்திற்காக லீலா மாத்ரமாக அம்பாள் அனேக வடிவங்களைத் தாங்கி விளங்கிய
போதும், அவள் ஸர்வத்திற்கும் ஆதியானவள். அதாவது மாயைத் தாண்டி விளங்கும் பூரண பேரறிவே
மயமானவள்.

இந்த பேரறிவு மயமான, பராஸம்வித் ரூபிணியன ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையை மனோ


வாக்குகளால் நெருங்க முடியாது.

ஆத்மஸ்வரூபிணியான அம்பாளை இடைவிடாத பாவனோபாஸனையினாலே தான் உணர முடியும். இதைத்


தான் "அந்தர்முக ஸமாராத்யா" என்று ஸஹஸ்ரநாமத்தில் வாக்தேவதைகள் ஸூசிப்பிக்கின்றனர்.

விகளேப 3 ர முக்தி தா3 ன நிபுணே – முக்தியை அருள்வதில் நிபுணையே. "ஶ்ரீஸுந்தரி ஸாதக


புங்கவானாம் போகஸ்ச மோக்ஷஸ்ச கரஸ்த ஏவ" என்பது தந்த்ர ஸாஸ்த்ர வசனம். ஶ்ரீலலிதேஶ்வரி எனும்
கமலாம்பாள் கைவல்ய ஸுகத்தை அளிக்கும் கருணாகரி. இந்த ஜன்மாவிலேயே தன்னுடைய ஆத்ம
ஸ்வரூபத்தை ஸாக்ஷாத் ஶ்ரீலலிதாம்பாள் என்று உணரக்கூடிய ஸௌபாக்யத்தை அளித்து, பின்னர் கைவல்ய
மோக்ஷத்தையும் அளிப்பதில் நிபுணையானவள். இதையே ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் "கைவல்யபத தாயினி"
என்றும் "அனர்க்ய கைவல்யபத தாயினி" என்றும் விஷேஷமாகக் கூறும்.

அக 4 ஹரணே – ஸகல பாபங்களையும் ஒழிக்கும் கருணாமூர்தத


் ி.

"க்ருத்யாகிலஸ்ய பாபஸ்ய ஞானதோ அஞ்ஞானதோபி வா


ப்ராயஸ்சித்தம் பதம் ப்ரோக்தம் பராஶக்தே: பதஸ்மரு
் தி"

தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாபங்கள் ஶ்ரீபராஶக்தியின் பாதத்தை ஸ்மரித்த மாத்ரத்திலேயே


அழிந்துபடும் என்கிறது புராணங்களும், தந்த்ரங்களும். அத்தகைய கருணாஸாகரி ஶ்ரீகமலாம்பாள்.
ஞானத்தை அளித்து பாபத்தை ஒழிப்பவள் ஶ்ரீபராஶக்தி.

தொடர்ந்து ஶ்ரீகமலாம்பா நவாவரண த்யான சரணத்தின் கீர்தத


் னா விமர்ஶத்தை சிந்திப்போம்

ஸர்வம் லலிதார்பப் ணம்

காமாக்ஷி சரணம்

You might also like